CHAPTER-24

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
ச‌ந்ரா அர்ஜுனிட‌ம் த‌ன்னை கொல்ல‌ பார்த்த‌வ‌ன் யார் என்று கேட்க‌, அத‌ற்கு அர்ஜுன், "அபிஷேக்." என்றான்.

அதை கேட்டு அதிர்ந்த‌வ‌ள், "என்ன‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் சோர்வுட‌ன், "நீ செத்து போயிட்டான்னு சொன்ன‌ அதே அபிதா." என்றான் அழுத்த‌மாக‌. அதை கேட்ட‌ ச‌ந்ரா மேலும் அதிர்ந்தாள்.

அர்ஜுன், "அவ‌ந்தா உன்ன‌ கொல்ல‌ முய‌ற்ச்சி ப‌ண்ணான்." என்றான்.

அத‌ற்கு ச‌ந்ரா கோப‌த்துட‌ன், "அபிய நீ கொன்னுட்ட அர்ஜுன். நா அபிய‌ வெறுக்க‌னுன்னு பொய் சொல்லாத. உண்மைய‌ சொல்லு." என்றாள்.

அர்ஜுன், "நாந்தா சொன்ன‌ல்ல‌? நீ ந‌ம்ப‌ மாட்ட‌ன்னு. ச‌த்திய‌மா அவ‌ந்தா உன்ன‌ கொல்ல‌ பாத்தான். நீ நெனைக்கிற‌ மாதிரி அவ‌ன் சாகவும் இல்ல, ந‌ல்ல‌வ‌னும் இல்ல‌. அவ‌ன் ஏதோ ஒரு பிளானோட‌தா சுத்திகிட்டிருக்கான்." என்று ச‌ந்தேக‌த்துட‌ன் கூற‌,

"போதும் அர்ஜுன். பொய் மேல‌ பொய்யா சொல்லாத‌." என்றாள் ச‌ந்ரா.

அத‌ற்கு அர்ஜுன் ப‌தில் கூற‌ வ‌ரும் முன், ச‌ந்ரா கால் செய்து அழைத்திருந்த‌ போலீஸார் வார்டுக்குள் நுழைந்த‌ன‌ர்.

அவ‌ர்க‌ளை பார்த்த‌தும் அர்ஜுன் அமைதியாகிவிட‌, அப்போது இன்ஸ்பெக்ட‌ர், "நீங்க‌தா ச‌ந்ராவா?" என்று ச‌ந்ராவை பார்த்து கேட்க‌,

ச‌ந்ரா, "ஆமா இன்ஸ்பெக்ட‌ர். நாந்தா உங்க‌ளுக்கு கால் ப‌ண்ணேன்." என்றாள்.

அதை கேட்டு அவ‌ரும் அர்ஜுனை பார்த்து, "மிஸ்ட‌ர் அர்ஜுன்! சொல்லுங்க‌. என்ன‌ ந‌ட‌ந்த‌து?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் சோர்ந்த‌ குர‌லில், "நானும் என் ஃபியான்ஸி ச‌ந்ராவும், கோவிலுக்கு போயிருந்த‌ப்போ, ஒருத்த‌ன் ம‌ற‌ஞ்சிருந்து எங்க‌ள‌ அட்டேக் ப‌ண்ணான்." என்று கூற‌, அவ‌ன் ஃபியான்ஸி என்று கூறிய‌து ச‌ந்ராவிற்குதான் உள்ளுக்குள் எரிச்ச‌லை ஏற்ப‌டுத்திய‌து. ஆனால் அதுதானே உண்மை என்று அமைதியாக‌ இருந்தாள்.

அத‌ற்கு இன்ஸ்பெக்ட‌ர், "ஒரு நிமிஷ‌ம். அந்த‌ நேர‌த்துல‌ கோவிலுக்கு எதுக்கு போனீங்க‌?" என்று கேட்க‌, அப்போதே ச‌ந்ராவிற்கு ப‌த‌ற்ற‌ம் சூழ்ந்த‌து. இவ‌ள்தானே அவ‌னை கொல்லும் நோக்கில் அவ‌னை அங்கு அழைத்து சென்றிருந்தாள். இவ்வாறெல்லாம் கேள்வி எழும் என்று அவ‌ள் அறிந்த‌துதான். ஆனால் அர்ஜுன் த‌ன்னை காட்டி கொடுக்க‌மாட்டான் என்று அவ‌ளுக்கு தெரியும். ஆனாலும் ஒருவித‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌ளுக்கு இருக்க‌தான் செய்த‌து.

இவ்வாறான‌ ப‌த‌ற்ற்த்தில் அவ‌ள் இருக்க‌, அதை க‌வ‌னித்த‌ அர்ஜுன், இன்ஸ்பெக்ட‌ரிட‌ம், "நேத்து எங்க‌ளுக்கு மெஹ‌ந்தி ஃப‌ங்ஷ‌ன் ந‌ட‌ந்த‌து. அத‌னால‌ அத‌ முடிச்சிட்டு கோவிலுக்கு போக‌ கொஞ்ச‌ம் லேட் ஆயிருச்சு." என்று கூற‌, அப்போதே மூச்சுவிட்டுக்கொண்டாள் ச‌ந்ரா.

அத‌ற்கு இன்ஸ்பெக்ட‌ர், "செரி. லேட் ஆயிருச்சின்னா, காலையில‌க்கூட‌ போயிருக்க‌லாமே." என்று அடுத்த‌ கேள்வியை எழுப்ப‌, அதை கேட்ட‌ ச‌ந்ராவோ மேலும் ப‌த‌ற்ற‌ம‌டைந்தாள்.

ஆனால் அர்ஜுனின் முக‌த்திலோ அந்த‌ ப‌த‌ற்ற‌ம் ச‌ற்றும் இல்லாம‌ல், "அது எங்க‌ ஃபேம‌லி ரிச்சுவ‌ல் சார். பொண்ணு கையில‌ மாப்பிளையோட‌ பேரு எழுத‌ன‌வொட‌னே, அத‌ மொத‌ல்ல‌ எங்க‌ குல‌ தெய்வ‌த்துகிட்ட‌தா காட்ட‌ணும்." என்று அடுத்த‌டுத்து பொய்க‌ளை அடுக்க‌, அதை கேட்ட‌ ச‌ந்ராவிற்கோ ச‌ற்று விய‌ப்பாக‌தான் இருந்த‌து.

அத‌ற்கு இன்ஸ்பெக்ட‌ர், "செரி ஓகே. உங்க‌ள‌ இப்பிடி ப‌ண்ண‌து யாரு? நீங்க‌ பாத்தீங்க‌ளா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன், ச‌ந்ராவைதான் பார்த்தான். ஆனால் ச‌ந்ராவோ அவ‌னை கேள்வியுட‌ன் பார்க்க‌, அதை பார்த்த‌ இன்ஸ்பெக்ட‌ர், "என்ன‌ யோசிக்கிறீங்க‌? சொல்லுங்க." என்று அவ‌னிட‌ம் கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன், "அது.... ரொம்ப‌ இருட்டா இருந்த‌தால‌ என‌க்கு செரியா தெரிய‌ல‌ சார்." என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா, ம‌ன‌திற்க்குள் "எங்கிட்ட‌ சொன்ன‌தையே அவ‌ருகிட்டையும் சொல்லுவான்னு பாத்தா, இவன் எதுக்காக இப்பிடி மாத்தி சொல்றான்?" என்று யோசித்தாள்.

அத‌ற்கு இன்ஸ்பெக்ட‌ர் "மிஸ்ட‌ர் அர்ஜுன் நீங்க‌ எதுக்கும் ப‌ய‌ப்ப‌ட‌ தேவையில்ல‌. அவ‌ன் யாரா இருந்தாலும் நாங்க‌ ஏக்ஷ‌ன் எடுப்போம். த‌ய‌ங்காம‌ சொல்லுங்க‌." என்று கூற‌,

அத‌ற்கு அவ‌ன், "இல்ல‌ சார். நா யாரையும் பாக்க‌ல‌. அம்பு என்மேல‌ பாஞ்ச‌தும், ச‌ந்ரா என்ன‌ சேஃபான‌ ப‌க்க‌த்துக்கு இழுட்துட்டு போயிட்டா. அந்த‌ ப‌த‌ட்ட‌துல‌ நா எதையும் க‌வ‌னிக்க‌ல‌." என்று மீண்டும் பொய்க‌ளை அடுக்கினான்.

அதை கேட்டு விய‌ந்த‌ ச‌ந்ராவோ, அவ‌ன் செய்ததை, தான் செய்த‌தாக‌ கூறிய‌தும் அல்லாம‌ல், த‌ன்னை ச‌மார்த்தியாக‌ காப்பாற்றிய‌தை எண்ணி விய‌ப்புட‌ன் அவ‌னை பார்த்துக்கொண்டிருக்க‌, அவ‌ன் கூறிய‌தை கேட்ட‌ இன்ஸ்பெக்ட‌ர், "செரி ஓகே மிஸ்ட‌ர் அர்ஜுன். நீங்க‌ தைரிய‌மா இருங்க‌. அன்டு ஒரு க‌ம்ப்ளைன்ட் ம‌ட்டும் குடுங்க‌ போதும். நாங்க‌ பாத்துகிறோம். நீங்க‌ ரெக்க‌வ‌ர் ஆன‌தும் உங்க‌ள‌ வ‌ந்து பாக்குறேன். இப்ப‌ நாங்க‌ கெள‌ம்புறோம்." என்று கூற‌,

அர்ஜுன், "ஓகே தேங்க் யூ சார்." என்றான்.

அத‌ற்கு த‌லைய‌சைத்த‌ அவ‌ரும் ச‌ந்ராவை பார்த்தும் த‌லைய‌சைத்துவிட்டு, அங்கிருந்து ந‌க‌ர‌, உட‌ன் வ‌ந்த‌ காவ‌ல‌ர் இருவ‌ரும் அவ‌ருட‌ன் வெளியில் சென்றுவிட்ட‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் சென்றதும் அர்ஜுனின் ப‌க்க‌ம் திரும்பிய‌ ச‌ந்ரா, "நீ என்னோட‌ பேர‌ சொல்ல‌ மாட்ட‌ன்னு தெரியும், ஆனா ஏ அபி பேர‌ சொல்ல‌ல‌? நீதான‌ அபிதா இப்பிடி ப‌ண்ணான்னு சொன்ன‌? அப்போ அவ‌ன் பேர‌ சொல்லிருக்க‌ணுமில்ல‌? அப்போ நீ எங்கிட்ட‌ சொன்ன‌து பொய்தான‌?" என்று கேட்க‌,

அர்ஜுன், "இல்ல‌. அது உண்ம‌தா." என்றான்.

ச‌ந்ரா, "அப்ற‌ம் ஏ இன்ஸ்பெக்ட‌ர்கிட்ட‌ சொல்ல‌ல‌?" என்று ச‌ந்தேக‌மாக‌வே கேட்க‌,

அத‌ற்கு அவ‌ன், "நீதான‌ சொன்ன‌? அபிய‌ நீ வெறுக்க‌னுங்கிற‌துக்காக‌ நா பொய் சொல்ற‌ன்னு. ப‌ட் நீ நெனைக்கிற மாதிரி அவன் சாகலன்னு, அவ‌ன் கெட்ட‌வ‌ன்னு, நா சொல்ற‌து உண்ம‌ன்னு உன‌க்கு ப்ரூஃப் ப‌ண்றேன். அதுவ‌ரைக்கும் நா யார்கிட்ட‌யும் எதுவும் சொல்ல‌மாட்டேன். அவ‌ன‌ உன் கையால‌யே போலீஸ்கிட்ட‌ ஹேன்டோவ‌ர் ப‌ண்ணுவேன்." என்று க‌டைசி வ‌ரியில் அழுத்த‌த்தை கூட்டி கூறினான்.

அவ‌ன் குர‌லில் இருந்த‌ சோர்வு அவ‌ன் வார்த்தையின் அழுத்த‌த்தில் இல்லாத‌தை உண‌ர்ந்த‌வ‌ள், அவ‌னை முறைத்த‌ப‌டி, "அது எப்ப‌வும் ந‌ட‌க்காது. ஏன்னா எது உண்ம‌ன்னு என‌க்கு ந‌ல்லாவே தெரியும்." என்றாள் அழுத்த‌மாக‌.

அத‌ற்கு அர்ஜுனும் ச‌வாலை ஏற்றுக்கொண்ட‌வ‌னாக‌ அவ‌ளை பார்க்க‌, அந்த‌ பார்வையில் தெரிந்த‌ அன‌லை ச‌ந்ரா பூர்வ‌ ஜென்ம‌த்தில்கூட‌ பார்த்த‌தில்லை. முன்பு த‌ன்னிட‌ம் த‌ய‌ங்கி த‌ய‌ங்கிய‌ பேசிய‌ அர்ஜுனுக்கும், அத‌ன் பிற‌கு த‌ன்னிட‌ம் சிறிது சிறிதாய் நெருங்கிய‌ அர்ஜுனுக்கும், இன்று த‌ன் முன்பு இருந்த‌ இந்த‌ அர்ஜுனுக்கும் ஆயிர‌ம் வித்தியாச‌ம் தெரிந்த‌து.

அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளிலேயே அர்ஜுனை டிஸ்ச்சார்ஜ் செய்து, வீட்டிற்கு அழைத்து வ‌ந்தாள் ச‌ந்ரா. அப்போது த‌டுமாறி த‌டுமாறி ந‌ட‌ந்த‌ அர்ஜுனை ம‌னிதாபிமான‌த்தோடு கைத்தாங்காலாக‌ தாங்கிய‌ப‌டி அவ‌னை அவ‌னுடைய‌ அறைக்கு அழைத்து சென்றாள்.

பிற‌கு அவ‌னை மெத்தையில் ப‌டுக்க‌ வைத்துவிட்டு, "டாக்ட‌ர் உன்ன‌ ஸ்ட்ரைன் ப‌ண்ணிக்க‌ கூடாதுன்னு சொல்லியிருக்காரு. ஒரு டென் டேஸ் நீ ந‌ல்லா ரெஸ்ட் எடுத்தாக‌ணும்." என்று கூறிய‌ப‌டியே போர்வையை அவ‌னுக்கு போர்த்திவிட, அவ‌ள் வார்த்தையில் இருந்த‌ அக்க‌றை சிறிதும் அவ‌ள் முக‌த்தில் இல்லை. அவ‌ள் க‌டுமையாக‌வே முக‌த்தை வைத்துக்கொண்டு செல்ல‌ முய‌ல‌, அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றினான் அர்ஜுன்.

அதில் அவ‌ள் அவ‌னை முறைத்த‌ப‌டி கேள்வியுட‌ன் பார்க்க‌, அத‌ற்கு அர்ஜுன், "எதுக்காக‌ இதெல்லாம் ப‌ண்ற‌? என்ன‌ கொல்ல‌தான‌ அங்க‌ கூட்டிட்டு போன‌? அப்ற‌ம் ஏ என்ன‌ காப்பாத்துன‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு த‌ன் கையை அவ‌னிட‌மிருந்து உருவிக்கொண்ட‌வ‌ள், "நீ என்ன‌ காப்பாத்துன‌துக்காக‌தா, நா உன்ன‌ காப்பாத்துனேன்." என்றாள் கோபமாக‌.

அத‌ற்கு அவ‌ன் புரியாம‌ல், "நா உன்ன‌ காத‌லிக்கிறேன், அதுனால காப்பாத்துனேன். நீதா என்ன‌ வெறுக்கிற‌யே. என்ன‌ அங்க‌யே அப்பிடியே விட்டுட்டு போயிருக்க‌லால்ல‌? அப்பிடியே நா செத்திருப்பேன்." என்றான் வேத‌னையுட‌ன்.


ச‌ந்ரா, "இல்ல‌.போன‌ ஜென்ம‌த்துல‌ ப‌ண்ண‌ அதே த‌ப்ப‌, நா திரும்ப‌ ப‌ண்ண‌ மாட்டேன். இப்ப‌ உன்ன‌ கொன்னாலும், நீ என‌க்காக‌ திரும்ப‌ வ‌ருவ‌. அத‌ நீ ப‌ண்ண‌த‌ நென‌ச்சு அணு அணுவா நீ வ‌ருந்த‌ணும். அதுக்கு அப்ற‌ந்தா உன்ன‌ கொல்லுவேன். ஆனா அதுக்கு முன்னாடி உன் ம‌ன‌சுல‌ இருக்குற‌ காத‌ல‌தா நா மொத‌ல்ல‌ கொல்லுவேன்." என்றாள் அழுத்த‌மும் ம‌ற்றும் கோப‌மாக‌.

அதை கேட்ட‌ அவ‌னுக்கோ வேத‌னையில் க‌ண்க‌ள் சிவ‌க்க‌, மேலும் ச‌ந்ரா, "அப்ப‌தா அடுத்த‌ ஜென்ம‌த்துலையும் நீ வாழ்க்கைக்குள்ள‌ வ‌ர‌ மாட்ட‌." என்றாள் அதே கோப‌மாக‌,

அதை கேட்டு மேலும் வேத‌னைய‌டைந்த‌ அவ‌னோ, "எதுக்காக‌ என்ன‌ இந்த‌ அள‌வு வெறுக்குற‌? அப்பிடி நா உன‌க்கு என்ன‌ ப‌ண்ணேன்?" என்று க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளுட‌ன் கேட்க‌,

"மிக‌ப்பெரிய‌ பாவ‌ம்." என்றாள் ச‌ந்ரா. அதில் கேள்வியுட‌ன் அவ‌ன் அவ‌ளை பார்க்க‌, அவ‌ன் க‌ண்க‌ளோ மேலும் க‌ல‌ங்க‌, "நீ என‌க்கு ப‌ண்ண‌து மிக‌ பெரிய‌ பாவ‌ம்." என்றாள் ச‌ந்ரா கோப‌த்துட‌ன்.

அதில் அவ‌ன் வேத‌னையும் குழ‌ப்ப‌மும் மேலும் அதிக‌ரிக்க‌, அவ‌ளின் க‌ண்க‌ளோ கோப‌த்தில் அக‌ல‌ விரிந்து சிவ‌ந்த‌ நிலையில், "நானும் என் அபியும் ஒருத்த‌ருக்கு ஒருத்த‌ர் சொந்த‌மாக‌ போற‌ ச‌ம‌ய‌த்துல‌, திடீர்னு வ‌ந்து என் வாழ்க்கைய‌ நாச‌மாக்குன‌வ‌ன் நீ. என் க‌ண்ணு முன்னாடியே என் காத‌ல‌ கொன்ன‌வ‌ன் நீ." என்று வேத‌னையும் குரோத‌முமாக‌ கூற‌, அவ‌னோ மேலும் அதிர்ந்துதான் அவ‌ளை பார்த்தான்.

ச‌ந்ரா, "நீ ரெண்டு தெட‌வ‌ என் காத‌ல‌ ப‌றிச்சிருக்க‌. என்னோட‌ அபிய‌ எங்கிட்ட‌ இருந்து.." என்று கூறும் முன், "போதும்." என்று க‌த்தினான் அர்ஜுன்.

அதில் திடுக்கிட்ட‌ அவ‌ள் அவ‌னை கோப‌ம் மாறாம‌ல் பார்க்க‌, அத‌ற்கு அவ‌னோ பெரும் கோப‌த்துட‌ன், "என‌க்கு எதையும் கேக்க‌ விருப்ப‌ம் இல்ல‌. நீ வெளிய‌ போ." என்று க‌ர்ஜித்தான்.

அதை கேட்ட‌ அவ‌ளோ முத‌ல் முறையாக‌ அர்ஜுனின் கோப‌த்தில் உத‌யாவை க‌ண்டாள். பிற‌கு இருவ‌ரும் ஒன்றுதானே என்று த‌ன‌க்குள் கூறிக்கொண்டு அவ‌னை முறைத்த‌வ‌ள், வேக‌மாக‌ வெளியில் சென்றுவிட்டாள்.

அவ‌ள் சென்றுவிட்ட‌தை பார்த்த‌ அர்ஜுன், கோப‌த்துட‌ன் முக‌த்தை திருப்பிக்கொண்டு ப‌டுத்துக்கொண்டான். ஆனால் அவ‌ன் ம‌ன‌திலோ, அவ‌ள் வேறு ஒருவ‌னை காத‌ல‌ன் என்று கூறிய‌தே ஓடிக்கொண்டிருக்க‌, அவ‌ள் ஏன் த‌ன்னை இந்த‌ள‌வு வெறுக்கிறாள் என்று அறிய‌ நினைத்த‌வ‌னுக்கு, அவ‌ளின் இந்த‌ வார்த்தைக‌ள், அவ‌ள் வேறு ஒருவ‌னை காத‌லிப்பதாக‌ கூறும் அந்த‌ க‌தையை தெரிந்துக்கொள்ளாம‌லே இருப்ப‌தே மேல் என்றுதான் முடிவெடுத்தான். அவ‌ள் திரும்ப‌ திரும்ப‌ என்னோட‌ அபி என்று கூறுவ‌து, அவ‌ன் வேத‌னையும் மீறி கோப‌த்தைதான் தூண்டிய‌து. ஏனோ அவ‌ள் வேறு ஒருவ‌னை த‌ன் காத‌ல் என்று கூறும்போது ம‌ட்டும், அர்ஜுனை மீறி உத‌யா வெளி வ‌ந்துவிடுகிறான்.

இர‌வு வ‌ந்த‌து...

ச‌ந்ரா த‌ன்னுடைய‌ அறையில் ந‌ன்றாக‌ உற‌ங்கிக்கொண்டிருக்க‌, அப்போது ச‌த்த‌மில்லாம‌ல் அவ‌ள் அறைக்குள் நுழைந்த‌ அர்ஜுன், சோர்வுட‌ன் சுவ‌ரை ஆந்த‌லாக‌ பிடித்த‌ப‌டியே ந‌க‌ர்ந்து வ‌ந்து, மெத்தையில் அமைதியாய் உற‌ங்கும் அவ‌ளை பார்த்து, மெல்ல‌ அவ‌ள் அருகில் அம‌ர்ந்தான்.

அப்போது த‌ன்னையும் ம‌ற‌ந்து சில‌ நிமிட‌ம் அவ‌ளை இர‌சித்து பார்த்த‌வ‌னுக்கு, இந்த‌ அமைதியான‌ முக‌த்திற்கு பின்னால் உள்ள‌ கோப‌மான‌ அவ‌ளின் முக‌மே க‌ண்முன் தோன்றிய‌து. அதை எண்ணி பார்த்த‌வ‌ன், "எதுக்காக‌ ச‌ந்ரா என்ன‌ இந்த‌ அள‌வு வெறுக்குற‌? இது எந்த‌ மாதிரியான‌ காத‌ல்னு என‌க்கே ஒன்னும் புரிய‌ல‌. ஏ எதுக்கு எப்ப‌ன்னே தெரியாம‌ என‌க்கு உன்மேல‌ காத‌ல் வ‌ந்திருச்சு. ஆனா அத‌ நா உண‌ரும்போது, நீ என்ன‌ ஒரு குற்ற‌வாளியா பாக்குற‌." என்று வேத‌னையுட‌ன் கூறிய‌வ‌ன், "நீ சொல்ற‌ மாதிரி அந்த‌ பூர்வ‌ ஜென்ம‌த்துல‌ என்ன‌ ந‌ட‌ந்த‌துன்னு என‌க்கு தெரிய‌ல‌. நீ யார‌ காத‌லிச்ச‌, எதுக்கு என்ன‌ வெறுக்குற‌, இப்பிடி எதுவும் என‌க்கு தேவையில்ல‌. இப்ப‌ இந்த‌ நிமிஷ‌ம், உன‌க்காக‌ நா சொம‌ந்துகிட்டிருக்குற‌ என்னோட‌ காத‌ல். அது ம‌ட்டும் உண்ம‌. அத‌ ம‌ட்டுந்தா நா ந‌ம்புறேன்." என்று கூறி அவ‌ள் முக‌த்தில் ப‌ட‌ர்ந்திருந்த‌ முடி க‌ற்றைக‌ளை வில‌க்கிய‌வ‌ன், அவ‌ள் முக‌ம் பார்த்து வேத‌னையுட‌ன், "உன்னோட‌ இந்த‌ வெறுப்ப‌க்கூட‌ நா தாங்கிப்பேன். ஆனா உன்னோட‌ எழ‌ப்ப‌ ம‌ட்டும்... ச‌த்திய‌மா முடியாது ச‌ந்ரா. " என்று வேத‌னையுட‌ன் கூறினான்.

பிற‌கு மீண்டும், "ந‌ம்ப‌ள‌ சுத்தி ந‌ட‌க்குற‌ எதுவுமே இப்ப‌ செரியில்ல‌. ஏற்க‌ன‌வே ந‌ம்ப‌ வாழ்க்கையில் வீசிகிட்டிருக்குற‌ புய‌ல் அட‌ங்குற‌துக்குள்ள‌, இப்ப‌ புதுசா ஒரு ஆப‌த்து மொள‌ச்சு வ‌ந்திருக்கு. அந்த‌ அபி க‌ண்டிப்பா ந‌ல்ல‌வ‌னா இருக்க‌ வாய்ப்பில்ல‌. அவ‌ன் ஏதோ ஒரு பிளானோட‌தா இதெல்லாம் ப‌ண்ணிகிட்டிருக்கான். அது எதுவா இருந்தாலும் செரி, அது எவ்ளோ பெரிய‌ ஆப‌த்தா இருந்தாலும், என்ன‌ தாண்டிதா உன்ன‌ நெருங்க‌ணும்." என்று கூறினான்.

அதே நேர‌ம் இங்கு அபியின் வீட்டில், கோப‌த்தின் உச்சியில் இருந்த‌ அபி, "ஒவ்வொரு தெட‌வையும் அந்த‌ அர்ஜுன் என் பிளான்ல‌ குறுக்க‌ வ‌ந்துகிட்டே இருக்கான்." என்று ப‌ல்லை க‌டித்த‌ப‌டி கூறிய‌வ‌ன், "உன்ன‌ சும்மா விட‌மாட்டேன் அர்ஜுன். உன்ன‌ சும்மாவே விட‌மாட்டேன்." என்று குரோத‌த்துட‌ன் கூறிக்கொண்டான்.

ஊண்மையில் இந்த‌ அபி யார்? இவ‌னுடைய‌ திட்டம்தான் என்ன‌? எத‌ற்காக‌ இற‌ந்த‌தைப்போல‌ ந‌டித்தான்? ச‌ந்ராவை ஏன் கொல்ல‌ நினைக்கின்றான்? அத‌னால் அவ‌னுக்கு கிடைக்க‌ போவ‌து என்ன‌?

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-24
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.