தொடர்ச்சி👉🏻

நங்கை குளித்து முடித்தவள் கீழே வர அங்கே காத்து கொண்டு இருந்தாள் கோகிலா.

கோகிலா அக்கா வாங்க வாங்க என்று சந்தோசத்தில் தாவி செல்லும் மான் குட்டி போலே ஓடி சென்று கட்டிக்கொண்டாள் நங்கை.

என்ன அக்கா என்ன அப்படியே விட்டுட்டு போய்டிங்கல்லா பேசாதீங்க என்று பொய்யாக கோவித்து கொண்டாள் நங்கை.

இல்லடா மா.உனக்கே நேத்து என்ன நடந்தது என்று தெரியும்.

என் சூழ்நிலை அப்படி ஆய்டுட்சி மா.

எனக்கும் மனசெல்லாம் இங்கே தான் இருந்துச்சு அதான் காலைல விடிஜதும் ஒடி வந்துட்டேன் .😊

மீண்டும் கட்டிக்கொண்டாள் நங்கை.சரி மாறன் தம்பி எங்க?

மேல இருக்காரு

ஒன்னும் பிரட்சனை இல்லையே நங்கை.

இங்க என்ன பிரட்சன இருக்க போகுது.என்றபடி அடக்களைக்குள் இருந்து வந்தார் சரண்யா


ஆமாம் ஆமாம் உன்ன விட வேற பிரட்சன இருக்க போகுதா என்ன
என்றார் கோகிலா,.

சரண்யாவிற்க்கும் கோகிலாவிருக்கும் எப்போதும் 7ம் பொருத்தம் தான்.சந்தித்த நாள் முதல் இன்றுவரை ஒத்து போவதே இல்லை.

ஐயோ நீங்க 2 பேரும் ஆரம்பிட்சிடிங்களா?

இருவரும் முறைத்துக்கொண்டனர்.

கையில் இருந்த பொதியில் வாங்கி வைத்திருந்த மல்லிகை சரத்தை எடுத்து நங்கையின் தலையில் சூட்டி விட்டாள் கோகிலா.

ஐயோ எதுக்கு கா இவளோ பூ ,🌼

நங்க நீ புது பொண்ணு
பூ தல நிறையா வட்சிகணும். புரியுதா

இங்க சிலருக்கு அதுகூட தெரிய மாட்டேங்குது. பூ கூட வச்சி விடல.

என்ன தான் இவங்களாம் பெரியவங்களோ ,
க்கும்....என்றபடி உதட்டை சுழித்து காட்டினாள் கோகிலா.

கொஞ்சம் நிறுத்துரிங்களா? இப்போ தான் நங்க குளிச்சிடே வந்து இருக்கா,நானும் இதோ உங்கள விட அதிகமாக வாங்கி வச்சி இருக்கேன்.
என்று சரண்யா தன் கையில் இருந்த மல்லிகை சரத்தை வைத்து விட.

நங்கை தான் பாவம் இருவருக்கும் மத்தியில் ஐயோ என்று நின்று இருந்தாள்.

நங்கையை அழைத்து கொண்டு பூஜை அறைக்குள் சென்ற சரண்யா,

நங்க விளக்கு ஏத்து🔥

நேத்து நடந்த கலேபரத்துல விளக்கை கூட ஏத்த சொல்ல முடியல மா,

என்றிட (சீதா ராமன் புகைப்படம்)முன்னே வைக்கப்பட்டிருந்த 🔥 விளக்கை கண்களை மூடி வணங்கி விட்டு தீபம் ஏற்றினால் நங்கை.
குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்து விட்ட கோகிலா

சரி நங்க உடம்ப பாத்துக்கோ

நான் போய்ட்டு வரேன்.பத்தரம்மா இரு சரியா. நா அடிக்கடி அவங்க யாருக்கும் தெரியாம வந்து பார்க்கறேன்.

என்றதும் காலில் விழுந்தாள் நங்கை

என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அக்கா

நல்லா இருமா,

மாறன் தம்பி உன்ன கல்யாணம் பண்ணி உன்ன அந்த நரகத்துல இருந்து காப்பாத்தி இருக்காரு,எப்பவும் அவர்கூட சந்தோசமா இருக்கணும் என்றார் கோகிலா.

சரி என்பதை போலே தலை ஆட்டிட

அதற்குள் கையில் ☕ டீ உடன் வந்தார் சரண்யா வீட்டுக்கு வந்துட்டு ஏதும் சாப்பிடாம கிளம்பினா எப்படி.

அப்பறம் என்ன கோர சொல்லவா.

என்றி ட வங்கிகொண்டவர் பருகதுவங்கினார்.

சுமாரா தான் இருக்கு டீ.ஒரு டீ கூட ஒழுங்காக போட தெரியல பேட்ச பாரு.

சரண்யா கோகிலாவைதான் முறைத்து கொண்டிருந்தாள்.

அடுத்த வாட்டி வா காஃபி ல விசத்த கலந்தரேன்.என்று முனங்கினாள்

சரி மா நங்க நான் வரேன்.

சரிங்க அக்கா

அப்பறம் உங்களுக்கும் தான் என்று சரண்யாவை பார்த்தாள் கோகிலா.

சரண்யா ம்ம் என்றபடி வலிப்பு காட்டிட

😡முறைத்து கொண்டே சென்றார் கோகிலா.
இதை கண்ட நங்கைக்கு சிரிப்பு தான் வந்தது.

மாடியில் இருந்து அவசரமாக இரங்கியபடியே மாறன்

நங்கை சீக்கிரம் வா.

எங்க?

எங்கனு சொன்னாத்தான் வருவிங்களோ.?

டிராகுலா...

என்ன

வரேன்னு சொன்னேன்.

ம்...

சரண்யா மா நாங்க வெளிய சாப்ட்டுகறோம்.என்றபடி நங்கையை இழுத்து சென்றான்.

காரினில் முன் இருக்கை கதவை திறந்தவன் உள்ளே அமரும்படி கண்ணைக் காட்ட வேகமாக ஏறி அமர்ந்து கொண்டாள்.

சீட் பெல்ட் போடு.. ம்..என்றாலே தவிற அவளுக்கு போடத்தான் தெரிய வில்லை.

கை எடு என்றவன் சீட் பெல்ட்டை போட்டு விட மல்லிகை வாசம் அவனை ஆட்கொண்டது.

என்ன இது இவளோ பூ எதுக்கு வச்சிருக்க இல்லே சரண்யா மா கோகிலா அக்காவும் தான்.... ன்

சரி சரி அந்த பூவை கழட்டி தூக்கி ஏறி.

ஏன் எனக்கு பிடிச்சு இருக்கு சார் 😦

எனக்கு பிடிக்கல சோ இனி நீ வச்சிருக்க கூடாது தூக்கி ஏறி.

இவருக்கு எல்லாம் மனசே இல்லையா.காட்டு மிராண்டி என்று மனதுக்குள் அவனை கரித்துக்கொண்டாள்.

பூவை தலையில் இருந்து அகற்றிய நங்கை கார் ஜன்னலின் வழியே தூக்கி எறிந்தாள்.
போதுமா?
இப்போ சந்தோசமா.

எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தான்.

நங்கை தான் போகும் வழி எல்லாம் அழுது கொண்டே சென்றாள்.

இப்போ எதுக்கு அழுகர,

ஏன் இந்த நாட்ல அழக்கூட எனக்கு உரிமை இல்லையா.

யார சொல்லி என்ன எல்லாம் என் விதி ஒரு பூவைக்க கூட எனக்கு கொடுத்து வைக்கல என்று புலம்பி தள்ள🤧

ஏன் டா பூவை எடுக்க சொன்னோம் என்றானது மாறனுக்கு.
ஹே அழாத டீ 😬 பல்லை கடித்த படி சொல்ல..

மேலும் அழுகத்தான் செய்தால்

இப்போ அழரத நிப்பாற்றியா இல்லே உன் வாய 💋கடிகட்டுமா.?

ஒற்றை சொல்லில் அமைதியானவள் அதன் பின் கொட்டாவி விட கூட வாய் திறக்கவில்லை.,😆

மாறன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

கார் ஒரு பெரிய ஜவுளி கடைக்கு முன் நின்றது.

இறங்கு

கையை பற்றிக்கொண்டு வா போகலாம்.

உள்ளே நுழைந்த மாறனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது.

வாங்க சார் வணக்கம்.

சார் எங்க கடை ஆட்கு நீங்க தான் மாடலிங் பண்ணிதரணும். நீங்க என்ன date fix பண்ணாலும் சரி சார்.

கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க.

சார் நான் இப்போ உங்க கடைக்கு காஸ்டமரா வந்து இருக்கேன்,சோ இப்போ பிஸ்னஸ் பத்தி பேச வேண்டாமே.

ஓகே ஓகே சார் பட் சான்ஸ் கடைக்கரப்ப அத தவறாம பயன் படுதிக்கணும்னு அது உங்களை வளர்ச்சியை நோக்கி கூட்டி செல்லும்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் மாறன் சொன்னது தான் இது.

அன்னைக்கு நீங்க கடைக்கு வந்திங்களாம் மேனேஜர் சொன்னாரு.
நான் அப்போ வெளிய போய் இருந்ததால அந்த சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன் பட் இப்போ மிஸ் பண்ண விரும்பல சோ அதான் சார்.

தன் தாடையில் ஒற்றை விரலும் உதட்டில் ஒற்றை விரலும் வைத்து சிறு புன்னகையோடு பார்த்து ஸ்மார்ட்

ஓகே நான் இத பத்தி யோசிக்கிறேன் சார். இப்போ என் ஒய்ஃப் கு பர்ச்சேஸ் பண்ண வந்து இருக்கோம் சோ...
மே ஐ

சூர்....சார்.


நங்கை வாயை பிளந்து கொண்டு பார்த்தாள்.இத்தனை பெரிய கடைக்கு சொந்த காரார் இப்படி கெஞ்ஜராரு

அவர் இல்லேனா வேற யாராவது நடிட்சி தர போறாங்க அதுக்கு போய்.

ம்ம் நடிச்சி தருவாங்க தான் ஆனா என்ன பண்றது மக்கள் நான் சொன்னா தான் வங்கராங்க.

அம்மாடி அதும் கேட்டுருட்சா.

😁 சிரித்து சமாளித்தாள்.

அங்கே உள்ள சேல்ஸ் கேர்ள் இடம் என் ஒய்ஃப்கு பொருத்தமான கலரா எடுத்து போடுங்க.

எண்ணற்ற புடவைகளை எடுத்து காட்டினார்கள். அதில் ஒரு பொண்

மேடம் அன்னைக்கு சார் வாங்கி வந்த சாரி உங்களுக்கு பிடித்து இருந்துச்சா.

பாவம் உங்களுக்காக பலமணி நேரம் தேடி தேடி ஒரு பொண்ணு கிட்ட சண்டை போட்டு வாங்கிட்டு வந்தாரு.
சார் உங்க மேல ரொம்ப அன்பு வச்சிருக்காரு மேடம்.

நங்கை ஏதும் பேசவில்லை.

மாறன் ஒவ்வொரு புடவையாக எடுத்து அவளுக்கு வைத்து பார்த்தான். அதில் வீட்டில் அணிய கூடிய சாப்ட் மெட்டீரியல் சாரிஸ் மற்றும் சில பட்டு புடவைகளையும் 10 செட் சுடிதாரையும் தேர்வு செய்தான்.

எஸ் க்கூஸ் மீ....

இத எல்லாம் பேக் பண்ணுங்க அண்ட் அவங்கள இன்னர்ஸ் வேர் செக்சன் கூட்டிட்டு போங்க.

போ போய் தேவையானதை வாங்கிக்கோ.

வாங்க மேடம்

ம்ம் என்று குனிந்து கொண்டு தலையாட்டியவள்

அவர்கள் முன் செல்ல பின்னே மாறனை பார்த்துக்கொண்டே நடந்தாள்.

எவ்ளோ நாகரிகமா நடந்துகராரு, கொஞ்சம் நல்லவர் தான் போலே அப்படி ஒரு மனது

இல்லே அப்படி நடிகராரோ? இப்படி ஒரு மனது

ஆனா அந்த சேல்ஸ் கேர்ள் சொன்ன பொண்ணு யாரா இருக்கும். ஒய்ஃப் அப்டின்னு சொல்றாங்க.

நம்மள நேத்து தானே கல்யாணம் பண்ணாரு.🤧 நாம இவருக்கு எத்தனாவதுனு தெரியலையே.

எதுக்கும் அவர்கிட்ட இருந்து கொஞ்சம் விலகியே இருப்போம்.நம்மள யூஸ் பண்ணிட்டு தூக்கி எறின்ஜிருவாரு .

என்று தனக்குள்ளே யோசித்துக்கொண்டே நடந்தவள்,

சேல்ஸ் கேர்ள் மேடம் மேடம் எல்லாம் ஓகேங்?கலா பேக் பண்ண சொல்லால்லங்களா!

ம்ம் என்று ஆர்வமே இல்லாமல் தலையை மட்டும் அசைத்தாள்.

அங்கே வந்த மாறன், என்ன நங்க எல்லாம் வங்கியாட்சா கிளம்பலாம என்றிட

ம்ம்....

என்ன ம்ம்...

வாய திறந்து பேச கத்துக்கோ மொதல்ல,

என்ன திட்ட சொன்னா மட்டும் அத்தன பேட்சி பேசற.

என்றதும் .

ஹான் ஹான் போகலாம் போகலாம் போதுமா!

கண்கள் விரிய பார்த்தவன்.

குட்டி பட்டாசு.என்ன சவுண்ட் காது கோயிங்குது.

அவனுக்கு முன்னே நடந்து சென்றவளை,வேக எட்டுகளை வைத்து பிடித்தான் மாறன்.




என்ன ட்டீ உரும்முற இப்போ தான் இந்த மாறனுக்கு ஏத்த மோகினியா மாறிருக்க லைக் இட் என்றவன்

ஆனா எப்போதும் நான் தான் உன் முன்னே இருப்பேன்,உன்ன என்னை விட்டு ஒரு எட்டு கூட போக விட மாட்
டேன்.

உனக்கு புரியுதா?

இவன் அரசனா அரக்கனா என்று நங்கையால் தான் புரிந்து கொள்ள முடிய வில்லை.

நம்மாலும் தான், அதை போக போக தெரிந்து கொள்வோம்.


தொடரும்
Shahiabi.writter ✍🏻
 

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.