CHAPTER-23

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
ச‌ந்ராவின் மீது பாய‌ வ‌ந்த‌ அம்பை த‌ன் நெஞ்சில் தாங்கிய‌ அர்ஜுன், அவ‌ளை ம‌றைவான‌ பாதுக்காப்ப‌ன‌ இட‌த்திற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு, அவளை காப்பாற்றிவிட்டோம் என்ற நிம்மதியுடன், நெஞ்சில் வலியுடனும் குருதியுடனும் கீழே சரிந்தான்.

உடனே அவன் அருகில் சென்ற சந்ரா, "எதுக்காக என்ன காப்பாத்துன? நா உன்ன கொல்ல பாத்தேன், ஆனா நீ இந்த நெலமையிலயும் என்ன காப்பத்துற. ஏ? எதுக்காக?" என்று கேட்டாள். இதே கேள்வியை அன்று உதயாவிடமும் கேட்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் தன் உயிர் காதலனின் பிரிவு அவளை வேறு எதுவும் யோசிக்க விடாமல் செய்துவிட்டது. எனவே இன்று அவள் மனதில் உள்ள குழப்பத்திற்கு பதில் வாங்கும் உறுதியோடு இருந்தாள்.

ஆனால் அர்ஜுனோ அவளுக்கு பதிலளிக்காமல் வலியில் துடித்துக்கொண்டிருக்க, "எனக்கு பதில் சொல்லு. நா உன்ன காயப்படுத்துனேன், கொல்ல ட்ரை பண்றேன். ஆனா நீ ஏ என்ன காப்பத்தணுன்னே நெனைக்கிற?" என்று கேட்டாள் சந்ரா. இந்த கேள்வி உதயாவிற்கும் சேர்த்துதான்.

அதற்கு அர்ஜுன் இறுகிய குரலில், "ஏன்னா நா உன்ன காதலிக்கிறேன் சந்ரா." என்றான். அதை கூறும்போது அவன் கண்களோ சிவந்த நிலையில் கலங்கியிருக்க, வலியோ இதயத்தின் உள்தான் அதிகம் இருந்தது. அது அவன் கண்களிலும் பிரதிபலித்தது. அதை கேட்ட அடுத்த நொடியே அதிர்ந்து நின்ற சந்ராவிற்கு, இதை உதயா கூறிதான் கேட்டிருக்கிறாளே தவிர அர்ஜுனின் வாயால் இதுதான் முதல் முறை. அப்படியென்றால் அர்ஜுன் தன்னை காதலிக்கிறானா என்ற அதிர்ச்சியே அவளுக்கு அதிகம் தோன்ற, அவள் அதிர்ச்சியை பார்த்த அர்ஜுன், "பதில் கெடச்சதா?" என்றான் வலி நிறைந்த கண்களுடன்.

அதை கேட்டு மேலும் குழ‌ம்பிய‌ ச‌ந்ரா, "ஆனா உன‌க்கு.." என்று கேட்கும் முன்னே, "எப்ப‌ எப்பிடினெல்லா கேக்காத‌. எங்கிட்ட‌ அதுக்கு ப‌தில் இல்ல‌. ஆனா எப்ப‌வோ உன்ன‌ காத‌லிக்க‌ ஆர‌ம்புச்சுட்டேன் அது ம‌ட்டும் உண்ம‌." என்றான் இறுகிய‌ குர‌லில்.

அதை கேட்ட‌ ச‌ந்ராவிற்கு ச‌ற்று அதிர்ச்சியாக‌தான் இருந்த‌து. இவ‌னுக்கு பூர்வ‌ ஜென்ம‌ம் நினைவில்லை என்று புரிந்தாலும், இவ‌னுடைய‌ காத‌லை பார்க்கும்போது உத‌யாவை பார்ப்ப‌துப்போல‌வே இருந்த‌து. ஏனோ உத‌யாவின் அந்த‌ ஆழ‌மான‌ காத‌லுக்கான‌ கார‌ண‌த்தை அறிந்துக்கொள்ள‌ எண்ணிய‌வ‌ள், அன்று அவனிடம் கேட்க நினைத்த கேள்வியை இவனிடமே எழுப்பினாள்.

ச‌ந்ரா, "உன‌கென்ன‌ பையித்திய‌மா? உன்ன‌ கொல்ல‌ வ‌ந்த‌ என்னையே ஏ காத‌லிக்கிற‌?" என்று கேட்க,

அத‌ற்கு அர்ஜுன் இறுகிய‌ குர‌லில், "என‌க்கு தெரிய‌ல‌. ஒருவேள‌ இதுதா ஆழ‌மான‌ காத‌லோ என்ன‌மோ." என்றான்.

அதை கேட்ட‌ அவ‌ளுக்கோ "என்னோட‌ காத‌ல் ஆழ‌மான‌து." என்ற உத‌யாவின் வார்த்தைக‌ளே நினைவிற்கு வ‌ந்த‌து. ஆனால் வார்த்தைதான் ஒன்றாக‌ இருக்கிற‌தே த‌விர‌, இரு சூழ்நிலைக‌ளும், அர்த்த‌ங்க‌ளும் வேறாக‌வே அவ‌ளுக்கு தோன்றிய‌து. அன்று வ‌லியை உண்டாகிய‌ இவ‌ன் வார்த்தைக‌ள், இன்று வ‌லியுட‌ன் வ‌ருவ‌து, ஏனோ அவ‌ளுள் ஒருவித‌ நெருட‌லை உருவாக்கிய‌து.

அந்த‌ நெருட‌லை உண‌ர்ந்த‌ ச‌ந்ரா ம‌ன‌திற்குள், "என‌க்கு என்ன‌ ஆச்சு? நா ஏ இவ‌னுக்காக‌ இவ்ளோ யோசிக்கிறேன்? அன்னிக்கு இதே உத‌யாவோட‌ காத‌ல‌தா நா அறுவ‌றுப்பா நென‌ச்சேன். ஆனா இப்போ இவ‌னோட‌ காத‌ல் ஏ என‌க்குள்ள‌ ஒருவித‌ நெருட‌ல‌ எற்ப‌டுத்துது?" என்று யோசித்துக்கொண்டிருக்க‌, அத‌ற்குள் அர்ஜுன் த‌ன் நெஞ்சு ப‌குதியை பிடித்த‌ப‌டி வ‌லியுட‌ன் ம‌ய‌ங்கிவிட்டான்.

அதை பார்த்த‌வ‌ள் த‌ன் எண்ண‌ங்க‌ள் அனைத்தையும் தூக்கி தூர‌ போட்டுவிட்டு, "இல்ல‌ இப்பொதைக்கு நா வேற‌ எத‌ ப‌த்தியும் யோசிக்க‌ கூடாது. இவ‌ன் ஒரு அர‌க்க‌ன். இவ‌ன் சாக‌ வேண்டிய‌வ‌ன்." என்று கூறிய‌ப‌டி அங்கிருந்த‌ ந‌க‌ர‌ போக‌, ஏதோ ஒரு நெருட‌லால் மீண்டும் பின் எட்டு வைத்த‌வ‌ள், திரும்பி அவ‌னை பார்க்க‌, ம‌ய‌ங்கிய‌ அவ‌ன் நெஞ்சில் பாய்ந்திருந்த‌ அந்த‌ அம்பை பார்த்த‌வ‌ளுக்கு, உட‌னே அவ‌ன் த‌ன்னை காப்பாற்றிய‌ காட்சியே க‌ண்முன் வ‌ர‌, அவ‌ள் ம‌ன‌மோ குற்ற‌ உண‌ர்வால் குத்திய‌து.

இம்முறை த‌ன் ம‌ன‌து கூறுவ‌தை கேட்காம‌ல் த‌ன் ம‌ன‌சாட்சி கூருவ‌தை கேட்டவ‌ள், உட‌னே த‌ன் மொபைலை எடுத்து ஆம்புல‌ன்ஸிற்கு கால் செய்தாள். சில‌ நிமிட‌ங்க‌ளில் ஆம்புல‌ன்ஸும் அங்கு வ‌ந்துவிட‌, ம‌ய‌ங்கிய‌ நிலையில் இருந்த‌ அர்ஜுனை ம‌ருத்துவ‌ம‌னைக்கு அழைத்து சென்றன‌ர்.

அங்கு தீவிர‌ சிகிச்சை பிரிவின் கீழ், அர்ஜுனுக்கு சிகிச்சை ந‌டைப்பெற்ற‌து. சிறிது நேர‌த்தில் ம‌ருத்துவ‌ர் வெளியே வ‌ர‌, அவ‌ரிட‌ம் சென்ற‌ ச‌ந்ரா, "டாக்ட‌ர் ! அர்ஜுன் எப்பிடி இருக்கான்?" என்று கேட்க‌, அவ‌ளுள் அவ‌னுக்கான‌ ப‌த‌ற்ற‌ம் உருவாகிய‌தை அவ‌ள் உண‌ர‌வில்லை.

அத‌ற்கு ம‌ருத்துவ‌ர், "கொஞ்ச‌ம் க்ரிட்டிக்க‌லாதா இருக்காரு. அவ‌ர் நெஞ்சுல‌ க‌த்தி குத்து ப‌ட்டிருக்கு, ஆனா ப‌ர‌வால்ல‌ நெஞ்சிக்கு கொஞ்ச‌ம் மேல‌தாப்ப‌ட்டிருக்கு. க‌த்தியால‌ எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்ல‌. ஆனா அம்புதா கொஞ்ச‌ம் ஆழ‌மா குத்தியிருக்கு. அத‌னால‌ உயிர் பொழைக்குறது கொஞ்ச‌ம் க‌ஷ்ட்ட‌ந்தா." என்றார்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா ம‌ன‌திற்க்குள், "நா ஏற்ப‌டுத்துன‌ காய‌த்த‌விட‌, என்னால‌ ஏற்ப‌ட்ட‌ காய‌ந்தா, இப்போ இவ‌னோட‌ இந்த‌ நெலமைக்கு கார‌ண‌ம்." என்று குற்ற‌ உண‌ர்வால் நொந்த‌வ‌ள், "இவ‌ன் ஏ இப்பிடி பண்ணான்?" என்று வ‌ருத்த‌மும் குழ‌ப்ப‌முமாக‌ சிக்கி த‌வித்தாள்.

அப்போது ம‌ருத்துவ‌ர், "ஆமா போலீஸ் க‌ம்ப்ளைன்ட் குடுத்தாச்சா?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "ஹா குடுத்தாச்சு டாக்ட‌ர்." என்றாள்.

ம‌ருத்துவ‌ர், "செரி ஓகே" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளில் அர்ஜுனுக்கு சிகிச்சை முடிந்து, அனைத்து ம‌ருத்துவ‌ரும் செவிலிய‌ரும் வெளியே வ‌ர‌, ச‌ந்ராவோ ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌ர்க‌ளிட‌ம் அர்ஜுனின் ந‌ல‌ன் ப‌ற்றி விசாரித்தாள்.

அத‌ற்கு ம‌ருத்துவ‌ர், "நோ வ‌ரீஸ். அவ‌ரு ஆப‌த்தான‌ க‌ட்ட‌த்த‌ தாண்டிட்டாரு." என்று கூறிய‌தும்தான் ச‌ந்ராவிற்கு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. அதோடு த‌ன்னை குத்திக்கொண்டிருந்த‌ குற்ற‌ உண‌ர்வும் குறைந்த‌து.

மேலும் ம‌ருத்துவ‌ர், "இப்ப‌ பேஷ‌ன்ட்ட‌ டிஸ்ட‌ர்ப் ப‌ண்ண‌ வேண்டா. அவ‌ர‌ ஜென்ட்ர‌ல் வார்டுக்கு மாத்துன‌தும் நீங்க‌ போய் பாக்க‌லாம்." என்று கூற‌,

ச‌ந்ரா, "ஓகே டாக்ட‌ர்." என்றாள்.

ம‌ருத்துவ‌ர், "அதோட‌ அவ‌ருக்கு நாளைக்கு காலையில‌தா கான்சிய‌ஸ் வ‌ரும். சோ டிஸ்ட‌ர்ப் ப‌ண்ணாம‌ பாத்துக்கோங்க‌." என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அவ‌ர் சென்ற‌துமே அந்த‌ ஐ.சி.யூவின் க‌த‌வு ஓட்டை வ‌ழியாக‌, உள்ளே ம‌ய‌க்க‌த்தில் இருந்த‌ அர்ஜுனை பார்த்த‌வ‌ளுக்கு, ஏனோ அவ‌ன் உத‌யா ஏன்ற‌ எண்ண‌மே ம‌ற‌ந்து, த‌ன்னை அன்று துப்பாக்கி சூட்டிலிருந்து காப்பாற்றி, உயிருக்கு போராடியே அதே அர்ஜுனாக‌வே தெரிந்தான். அவ‌னுக்காக‌ அன்று அவ‌ள் சிந்திய‌ அதே க‌ண்ணீர் இன்றும் க‌ண்க‌ளில் தேங்கி நின்ற‌து.

அன்று காப்பாற்ற‌ முடியாம‌ல் போன‌, அதே உயிரை இன்று காப்பாற்றிவிட்டோம் என்ற‌ நிம்ம‌தியும் அவ‌ள் ம‌ன‌தில் நிறைந்திருந்த‌து. ஆனால் அடுத்த‌ நொடியே ச‌ந்ராவை உள்ளே த‌ள்ளிவிட்டு அமிர்த்தாவாக‌ விழித்துக்கொண்ட‌வ‌ள், உட‌னே த‌ன் க‌ண்க‌ளை துடைத்துக்கொண்டு, "நா என்ன‌ ப‌ண்ணிகிட்டிருக்கேன்? நா எதுக்காக‌ அவ‌னுக்காக‌ அழ‌ணும்? அவ‌ன் என் அபிய‌ கொன்னிருக்கான். ரெண்டு முற‌ என் காத‌ல‌ என்கிட்ட‌ இருந்து ப‌றிச்சிருக்கான். ஆனாலும் நா ஏ இவ‌னுக்காக‌ ஃபீல் ப‌ண்றேன்." என்று த‌ன‌க்கு தானே கேட்டுக்கொண்ட‌வ‌ளின் வார்த்தைக‌ளின் அபியின் மீதான‌ சிறு வ‌ருத்த‌மும் வ‌ர‌வில்லை. ஆனால் அதை உண‌ராத‌ அவ‌ளோ வெறும் குழ‌ப்ப‌த்துட‌ன் அங்கு ம‌ய‌ங்கிய‌ நிலையில் ப‌டுத்திருந்த‌ அர்ஜுனைதான் பார்த்தாள். ஏனோ அவ‌ன்தான் த‌ன்னுடைய‌ அனைத்து கேள்விக‌ளுக்கான‌ ஒட்டு மொத்த‌ ப‌தில் என்று அவ‌ள் ம‌ன‌தில் ஆழ‌மாக‌ தோன்றிய‌து.

அடுத்த‌ நாள் காலை....

நார்ம‌ல் வார்டுக்கு மாற்ற‌ப்ப‌ட்ட‌ அர்ஜுன், ம‌ய‌க்க‌த்திலிருந்து மெல்ல‌ க‌ண்க‌ளை அசைத்த‌ப‌டி, க‌ண்க‌ளை திற‌வாம‌லே அவ‌ன் கூறிய‌ முத‌ல் வார்த்தை, "ச‌ந்ரா!" என்றான்.

அப்போது அவ‌னை ப‌ரிசோதித்த‌ப‌டி அருகில் நின்றுந்த‌ ம‌ருத்துவ‌ர், அவ‌ன் அசைவை பார்த்து, த‌ன‌க்கு அருகிலிருந்த‌ செவிலிய‌ரிட‌ம், "ந‌ர்ஸ்! அவ‌ருக்கு கான்சிய‌ஸ் வ‌ந்திருச்சு. நீங்க‌ போய் வெளிய‌ இருக்குற‌ அந்த‌ பொண்ண‌ கூட்டிட்டு வாங்க‌." என்றார்.

அதை கேட்டு த‌லைய‌சைத்த‌ செவிலிய‌ரும், உட‌னே வார்டுக்கு வெளியே வ‌ந்து, "மிஸ்ட‌ர் அர்ஜுனோட‌ அட்டென்ட‌ர் எங்க‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு எங்கிருந்தோ ஓடி வ‌ந்த‌ ச‌ந்ரா, "நாந்தா அர்ஜுனோட‌ அட்டென்ட‌ர்." என்றாள்.

ந‌ர்ஸ், "நீங்க‌தா ச‌ந்ராவா? அர்ஜுன் சுய‌ நினைவிக்கு வ‌ந்துட்டாரு. சீக்கிர‌மா அவ‌ர‌ போய் பாருங்க‌." என்றாள்.

அத‌ற்கு ச‌ந்ரா, "ஓகே தேங்க் யூ." என்று கூறி வேக‌மாக‌ உள்ளே சென்றாள். அப்பொழுதும் அவ‌ளுள் இருந்த‌ ப‌த‌ற்ற‌த்தை அவ‌ள் உண‌ர‌வில்லை.

பிற‌கு உள்ளே சென்ற ச‌ந்ரா, அர்ஜுனின் அருகில் செல்ல‌, அதை உண‌ராத‌ அவ‌னோ க‌ண்க‌ளை திற‌க்க‌ முய‌ற்சித்த‌ப‌டி, விழிக‌ளை மூடிய‌ப‌டியே அசைத்துக்கொண்டு, "ச‌ந்ரா! ச‌ந்ரா!" என்று மீண்டும் கூறிக்கொண்டே இருந்தான்.

அப்போது அவ‌ள் அருகில் நின்று அவ‌ன் க‌ர‌ம் ப‌ற்றிய‌வ‌ள், "அர்ஜுன்!" என்றாள்.

அவ‌ளின் தொடுகை உண‌ர்ந்த‌துமே மெல்ல‌ இமைக‌ளை பிரித்த‌வ‌ன், விழிக‌ளை சுழ‌ல‌விட்ட‌ப‌டி த‌ன் அருகில் நின்றிருந்த‌வ‌ளை பார்த்து, "ச‌ந்ரா!" என்றான்.

அத‌ற்கு அவ‌ளும், "சொல்லு அர்ஜுன்." என்றாள் ப‌த‌ட்ட‌மாக‌.

அத‌ற்கு அவ‌ன், "உன‌க்கு ஒன்னும் இல்ல‌ல்ல‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ளும், "என‌க்கு ஒன்னும் இல்ல‌." என்று கூறிவிட்டு ம‌ருத்துவ‌ரை த‌ய‌க்க‌த்துட‌ன் பார்க்க‌, அதை புரிந்துக்கொண்ட‌ ம‌ருத்துவ‌ரும், "ஓகே நர்ஸ்! கிவ் ச‌ம் ப்ரைவ‌சி." என்று கூறி செவிலிய‌ரையும் அழைத்துக்கொண்டு நாக‌ரீக‌மாக‌ வெளியில் சென்றுவிட்டார்.

அதை பார்த்துவிட்டு அர்ஜுனின் ப‌க்க‌ம் திரும்பிய‌ ச‌ந்ரா, "இப்ப‌ சொல்லு அர்ஜுன். யாரு என்ன கொல்ல பாத்தது? உன்ன‌ யாரு இப்பிடி ப‌ண்ண‌து? நீ அவ‌ங்க‌ள‌ பாத்தியா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன், "எதுக்காக‌ எங்கிட்ட‌ கேக்குற‌? என்ன‌தா நீ எப்ப‌வும் ந‌ம்ப‌ மாட்டியே." என்று சோர்வுட‌ன் கூற‌,

அதை கேட்டு க‌டுப்பான‌வ‌ள், "செரி இப்போ ந‌ம்புறேன். சொல்லு. யாரு இப்பிடி ப‌ண்ண‌து?" என்று கேட்க‌,

அர்ஜுன், "எதுக்காக‌ ந‌ம்புற‌? இப்ப‌ ம‌ட்டும் நா உண்மைய‌ சொல்லுவ‌ன்னு ந‌ம்பிக்க‌ வ‌ந்திருச்சா உன‌க்கு?" என்று அதே சோர்வுட‌ன் கேட்க‌,

அதை கேட்டு மேலும் க‌டுப்பான‌வ‌ள், "அர்ஜுன் நீ காய‌ப்ப‌ட்டிருக்க‌. உன்ன‌ இப்பிடி ப‌ண்ண‌வ‌ன் யாருன்னு இப்ப‌ உன‌க்கு ம‌ட்டுந்தா தெரியும். சோ ப்ளீஸ் சொல்லு. உன்ன‌ யாரு இப்பிடி ப‌ண்ண‌து? என்ன‌ கொல்ல‌ பாத்த‌வ‌ன் யாரு?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன், "அபிஷேக்." என்றான்.

அதை கேட்டு அதிர்ந்த‌வ‌ள், "என்ன‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் சோர்வுட‌ன், "நீ செத்து போயிட்டான்னு சொன்ன‌ அதே அபிதா." என்றான் அழுத்த‌மாக‌. அதை கேட்ட‌ ச‌ந்ரா மேலும் அதிர்ந்தாள்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.