தயாராகி கீழே வந்த அர்ஜுனை கண்டு கண் கலங்கியபடி நின்ற ஜானகி,
“உன்னை இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆகுதுப்பா அர்ஜுன்..
இப்ப தான் இந்த பேலஸ்க்கு மறுபடியும் அதோட அழகும் பிரம்மாண்டமும் திரும்பி வந்த மாதிரி இருக்கு.” என்றாள்.
தன் மகனை பெருமையாக பார்த்துக் கொண்டு இருந்த பிரதாப் அவன் அருகில் சென்று அவனை ஆறத் தழுவி,
“My King is back.” என்று சொல்ல,
“எப்பயும் இங்க நீங்க தான் கிங். நான் ஜஸ்ட் உங்கள ஃபாலோ பண்ற பிரின்ஸ் மட்டும் தான் டாடி.” என்றான் அர்ஜுன்.
“No my Son, இந்த சாம்ராஜ்யத்தை கிரியேட் பண்ணது வேணும்னா நம்ம பரம்பரையில வந்த தாத்தாவுக்கு தாத்தான்னு எல்லாருமா இருக்கலாம்.
நான் என்னால முடிஞ்ச வரைக்கும் இத கட்டிக் காப்பாத்தி கொண்டு வந்து உங்க கையில சேர்த்துட்டேன்.
ஆனா இத பிரம்மாண்டமா வளர்த்து பெருசாக்கினது நீதான்.
அதுக்கான எல்லா கிரெடிட்சும் உனக்கு மட்டும் தான் சேரனும் அர்ஜுன்.
So you're the King. The one ando only King.” என்று பிரதாப் சொல்லிக் கொண்டு இருக்க,
அவர்கள் அருகில் சென்ற பாட்டி,
“உனக்கு உடம்பு சரி இல்லாம போனதுல இருந்தே தாத்தாவுக்கும் உடம்பு சரியில்லப்பா அர்ஜுன்.
அவர் உன்ன பாக்கணும்னு ஆசைப்படறாரு. அவர போய் ஒரு தடவ பார்த்துட்டு வந்துரேன்..!!” என்றார்.
“சரி பாட்டி!” என்ற அர்ஜுன் தாத்தாவின் அறையை நோக்கி செல்ல,
ஆருத்ரா மற்றும் சித்தாத்துடன் விளையாடிக் கொண்டு இருந்த மகிழன் அப்படியே நின்று அர்ஜுனை குறுகுறுவென்று பார்த்தான்.
அவனை பார்த்த உடனேயே அடையாளம் கண்டு கொண்ட அர்ஜூன்,
“டேய் மகிழ்.. என்ன டா இப்படி பாக்குற?
உன் பெரியப்பாவ அடையாளம் தெரியலையா உனக்கு?
இந்த ரெண்டு வருஷத்துல நல்லா வளந்துட்ட போல..
இங்க வா..!!” என்று தன் இரு கை நீட்டி அவனை அழைத்தான்.
உடனே அவன் அருகில் ஓடிச் சென்றுவிட்டு பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் மகிழன் தயக்கத்துடன் ஆகாஷை பார்க்க,
“இவரு நம்ம அர்ஜுன் பெரியப்பா டா! தெரியலையா உனக்கு?
அவர் தானே உன்னை கூப்பிட்டாரு...
அவர் கிட்ட பேசாம இங்க வந்து எதுக்கு என்ன பாத்துட்டு இருக்க?” என்று ஆகாஷ் அவனைப் பார்த்து கேட்க,
தனது முட்டை கண்களை உருட்டி அர்ஜூனை பார்த்த மகிழன்,
“ஹாய் big டாடி..!!” என்றான்.
உடனே அவனை தூக்கி வைத்துக் கொண்ட அர்ஜுன்,
“இத்தனை நாளா நான் அசையாம அப்படியே கோமால தூங்கிட்டு இருந்தனே..
நீ என்ன மிஸ் பண்ணியா?” என்று கேட்க,
ஆமாம் என்று மேலும் கீழும் தலையாட்டிய மகிழன்,
“நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் big டாடி..
பட் என்னை விட big மம்மி தான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணாங்க..
நீங்க அமைதியா தூங்கிட்டே இருந்தீங்க இல்ல...
சோ அவங்க உங்கள எழுப்புறதுக்காக உங்க பக்கத்திலயே உட்கார்ந்து ரொம்ப நேரமா உங்க கிட்ட பேசிட்டே இருந்தாங்க.
அதனால தான் நீங்க இப்போ எந்திரிச்சிட்டீங்களா?” என்று அப்பாவியாக கேட்டான்.
அவன் தேன்மொழியை பற்றி பேசியவுடன் இப்போதே சென்று அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் எழும்ப,
“ம்ம்.. ஆமா.. உங்க big மம்மி தான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னை தூக்கத்துல இருந்து எழுப்புனாங்க.
பட் நான் இன்னும் அதுக்காக அவங்களுக்கு ப்ராப்பரா தேங்க்ஸ் கூட சொல்லல.
நீ இங்க விளையாடிட்டு இரு.
நான் போய் அவங்கள பாத்துட்டு வரேன்.” என்ற அர்ஜுன் மகிழனை கீழே இறக்கிவிட்டு விட்டு ஆகாஷை பார்த்தான்.
அந்த பார்வையின் அர்த்தம் “தேன்மொழி எங்க இருக்க?” என்று அவன் சொல்லாமலேயே புரிந்துக் கொண்ட ஆகாஷ்,
“அவங்க கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிற 3rd கெஸ்ட் ரூம்ல இருக்காங்க அண்ணா.
பட் இன்னும் அவங்க அப்படியே தான் இருக்காங்க.
இப்பவே போய் நீங்க அவங்கள பார்த்தாகணுமா?
முதல்ல தாத்தாவை பார்த்து அவர் கிட்ட பேசுங்களேன்..” என்று தயக்கத்துடன் கேட்க,
“எஸ், நான் முதல்ல அவள தான் பாக்கணும். எனக்கு இவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணவளுக்கு நான் தேங்க்ஸ் சொல்லாம எப்படி இருக்க முடியும்?
சோ இப்பவே நான் அவள பாக்கணும்.
அதான் எல்லாரும் சேர்ந்து நான் கோபால இருக்கிறத யூஸ் பண்ணி என் கிட்ட பர்மிஷன் கூட கேட்காம எனக்கு அவ கூட மேரேஜ் பண்ணி வச்சிட்டீங்களே..
Now she is my wife.
எங்களுக்குள்ள எந்த பிரச்சனை வந்தாலும் அத நாங்களே பேசி முடிச்சுகிறோம்.
இனிமே உங்களுக்கும் எங்களுக்குள்ள இருக்கிற இஸ்யூஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
நீங்க எல்லாரும் போய் உங்க வேலைய பாருங்க.
ஆகாஷ்.. நீ இங்கயே இரு, நான் அவ கிட்ட பேசிட்டு வந்துடறேன்.
நம்ம வெளிய போக வேண்டிய வேலை இருக்கு.
நான் தீர்க்க வேண்டிய எல்லா கணக்கையும் ஒவ்வொண்ணா இனிமே ஃபாஸ்ட்டா முடிக்க போறேன்.” என்ற அர்ஜுன் தேன் மொழியை அவர்கள் அடைத்து வைத்திருந்த அறைக்கு சென்றான்.
அவளுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் அதை செய்து கொடுப்பதற்காக அங்கே வெளியே இரண்டு பாடிகார்டுகள் நிற்க,
“நீங்க இங்க நிக்க தேவையில்லை.
என் வைஃப் இனிமே என் ரூம்ல தான் இருப்பாங்க.
டோரை ஓப்பன் பண்ணிட்டு கிளம்புங்க.” என்று தனது கணீர் குரலில் அவர்களை பார்த்து கட்டளையிட்டான் அர்ஜுன்.
உடனே அவர்களும் “Okay Chief!” என்று சொல்லிவிட்டு தேன்மொழி இருந்த அறையின் கதவை அவனுக்காக திறந்துவிட்டுவிட்டு சத்தம் இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்கள்.
இரண்டு நாட்களாக அந்த அறைக்குள் அடைந்து கிடந்த தேன்மொழி அழுது அழுது ஒரு கட்டத்திற்கு மேல் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தாள்.
அதனால் வழக்கம்போல் எழுந்து பாத்ரூமிற்க்கு சென்று குளித்துவிட்டு அவளுக்கான இன்றைய ஆடையை இன்னும் கிளாரா கொண்டு வந்து கொடுத்திருக்காதுதால் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள் தேன்மொழி.
எப்போதும் அவள் சும்மா இருந்தாலும் அவளது வாய் சும்மா இருக்காதே..
வழக்கம்போல் வரும்போது மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக,
“இந்த கிளாராவுக்கு அறிவே இல்ல..
என்னமோ பெரிய இவ மாதிரி எல்லாமே அவ கண்ட்ரோல்ல பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு பேசுவா..
டைமுக்கு சோறு மட்டும் கொடுத்துட்டா போதுமா?
நான் என்ன நாயா?
எனக்கு போட்டுக்கிறதுக்கு டிரஸ் எடுத்துட்டு வந்து கொடுக்கணும்னு கூடவா இவளுக்கு யாராவது சொல்லணும்?
வரட்டும் இன்னைக்கு அவளுக்கு இருக்கு..!!” என்று அவள் புலம்பிக் கொண்டே பாத்ரூமில் இருந்து வெளியே வர,
அவளுக்கு எதிரே மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் அர்ஜுன்.
அவள் கோமாவில் பார்த்த அர்ஜுனிற்கும் இப்போது அவள் முன்னே இருக்கும் அர்ஜுனிற்கும் உள்ள வித்தியாசங்களை அவளால் அப்பட்டமாக காண முடிந்தது.
என்ன தான் கொஞ்சம் டெரர் பீஸாக தெரிந்தாலும் அவன் கோமாவில் படுத்திருந்ததால் அவனது அச்சுறுத்தும் உருவத்தையும் தாண்டி அவன் அழகு தனியாக ஜொலித்தது.
ஆனால் இப்போது கம்பீரமாக அவள் முன்னே நிற்கும் அர்ஜுன் எந்த ஆங்கிலில் பார்த்தாலும் அவளுக்கு வில்லனைப் போலவே தெரிய,
தான் ஏதோ பேயை பார்த்ததை போல பயந்து போன தேன்மொழி,
“ஐயோ.. என்ன விட்டுருங்க..!!” என்று கத்திக் கொண்டு வேகமாக ஓடி மீண்டும் பாத்ரூமிற்குள் நுழைய முயன்றாள்.
அவளை பிடிப்பதற்காக அர்ஜூனும் வேகமாக அவளை பின் தொடர்ந்து செல்ல, அவன் அவளை பிடிப்பதற்குள் அவளது பாதங்களில் இருந்த ஈரத்தால் வேகமாக டைல்ஸ் தரையில் ஓடிய தேன்மொழி கால் வழுக்கி கீழே விழுந்தாள்.
அவளது உருவம் தரையில் சென்று விழுவதற்குள் எப்படியாவது அவளை பிடித்து விடலாம் என்று நினைத்த அர்ஜுன் அவளை நோக்கி பாய,
பாவம் அவனால் அவளது towelஐ தான் பிடிக்க முடிந்தது.
அதனால் வெற்றுடலுடன் தரையில் விழுந்தாள் தேன்மொழி.
அவளை பிடிக்கச் சென்ற வேகத்தில் அவனும் கால் ஸ்லிப் ஆகி அவள் மீது விழுந்தான்.
அந்த ஆறரை அடி ஆண் மகன் அவள் மீது பொத்தென்று விழுந்ததால்,
ஏற்கனவே கீழே விழுந்ததில் இடுப்பு வலியில் இருந்த தேன்மொழி தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு “அம்மாமாமா..!!” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தினாள்.
“ஏய் கத்தாத டி லூசு.. வாய மூடு..
இந்த ரூம்ல சவுண்ட் ப்ரூப் இல்ல..
நீ பாட்டுக்கு திடீர்னு இப்படி கத்துனா வெளிய இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க..??” என்று அர்ஜுன் அதட்டலாக கேட்க,
தன்னை தள்ளிவிட்டுவிட்டு இப்படி கேள்வி கேட்கிறானே என்று அவளுக்கு கோபம் வந்துவிட்டது.
அதனால் எதிரில் இருப்பவன் யார் என்னவென்றெல்லாம் யோசிக்காமல் இருந்த கடுப்பில்,
“இப்படி மலை மாடு மாதிரி யாராவது மேல வந்து விழுந்தா வலியில கத்தாம இருப்பாங்களா?
முதல்ல என் மேல இருந்து எந்திரிங்க..!!” என்றாள் அவள்.
கோபத்தில் அவளது மூக்கும் காது மடல்களும் சிவந்துவிட,
அவள் அப்படி தனது சின்ன இதழ்களை திறந்து பேசுவதை அத்தனை க்ளோசப்பில் இருந்து பார்க்கவே அவனுக்கு ஏதோ போல இருந்தது.
கோபப்படும் போது அவள் இத்தனை அழகாக இருப்பாள் என்று தெரிந்தால்,
யாருக்குத் தான் அவளை கோபப்படுத்தி பார்க்கலாம் என்று தோன்றாது?
தானும் அப்படியே நினைத்த அர்ஜுன் வேண்டுமென்றே அவளை இறுக்கி பிடித்துக் கொண்டு,
“என்ன பாத்தா உனக்கு மல மாடு மாதிரி இருக்கா?
நீ யார் கிட்ட பேசிட்டு இருக்கேன்னு தெரியுதா?
நான் நெனச்சா என்னால உன்னை என்ன வேணும்னாலும் பண்ண முடியும்.” என்று மிரட்டினான்.
ஆத்திரம் கண்களை மறைத்து விடும் என்பார்களே..
அதேபோல இப்போது அவளுக்கு வந்த கோபம் அவளுடைய ஆழ்மனம் வரை பரவி இருக்கும் அவன் மீதான பயத்தை ஒரு ஓரத்தில் தள்ளி வைத்து விட்டது போல..
அருந்ததி படத்தில் வரும் அனுஷ்கா வில்லன் பசுபதியிடம் சீறிக்கொண்டு சண்டைக்கு போவதைப் போல அவனை முறைத்து பார்த்த தேன்மொழி,
“நீங்க யாரா இருந்தா எனக்கு என்னங்க?
நான் யாருக்கும் அடிமை இல்ல.
இப்ப உங்களால என்னை என்ன பண்ண முடியும்..??
கொன்னு போட்டுருவீங்களா..??
பரவால்ல.. என்ன வேணாலும் பண்ணிக்கோங்க..
இப்படி இங்க கைதி மாதிரி வந்து இந்த ரூம்குள்ளயே கிடக்கிறதுக்கு, ஒரேடியா செத்தே போயிடலாம்.
எனக்கு என்ன நினைச்சு ஃபீல் பண்ணி ஃபீல் பண்ணி டயர்ட் ஆயிடுச்சு.
இதுக்கு மேல நான் யாரை பார்த்தும், எதை பார்த்தும் பயப்பட போறது இல்ல.
இனிமே என்ன நடந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.” என்று தைரியமாக திமிராகச் சொன்னாள்.
“ஓஹோ அப்படியா..?? அதையும் பாத்துரலாம்.” என்ற அர்ஜுன் லேசாக எழுந்து தனது ஒற்றை கையை அவளது வெற்றிடையில் வைத்து, மற்றொரு கையை அவளது கால்களுக்கு அடியில் விட்டு அலேக்காக மொத்தமாக அவளை தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்டு நேராக எழுந்து நின்றான்.
அவன் தன்னைத் தொட்டு தூக்கிய பிறகு தான் அவள் பாத்ரூமில் இருந்து வெளியே வரும்போது,
அவளது உடலில் ஒட்டிக் கொண்டு இருந்த ஒரே ஒரு துண்டும் எப்போதோ எங்கேயோ சென்று விழுந்திருப்பதை உணர்ந்த தேன்
மொழி மீண்டும் பயத்தில்,
“ஆஆஆஆ... என்ன விடுங்க ப்ளீஸ்..!!” என்று அவளது தொண்டை கிழியும் அளவிற்கு கத்தினாள்.
இன்று அவளை விடக் கூடாது அவளிடம் விளையாடி பார்க்க வேண்டும் என்று நினைத்த அர்ஜுன் என்ன என்ன செய்ய காத்திருக்கானோ...!!
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.