Chapter-22

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
தினேஷ் குளித்துவிட்டு வருவதற்குள் கிளம்பி தயாராக இருந்த சுவாதி வழக்கம்போல் தனது நீண்ட கூந்தலை தூக்கி போனிடேயிலில் போட்டாள். பின் தனது புருவங்களுக்கு இடையே சிறிதாக ஒரு கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி விட்டு தனது நெற்றி வகுட்டில் சிறிதாக குங்குமம் வைத்தாள். இறுதியாக அவள் தனது சுடிதாரின் துப்பட்டாவை தேடி எடுத்து அதை அழகாக அணிந்து தன் மார்பை மூடினாள். அனைத்தும் சரியாக இருக்கிறது என்று தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து உறுதி செய்து கொண்ட சுவாதி அவளது ஹேண்ட் பேக்கை தேடிக் கொண்டு இருந்தாள்.



அப்போது குளித்துவிட்டு ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்து மேலே துண்டை போர்த்திக்கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தான் தினேஷ். அவனுக்கு சுவாதியை அப்படி பார்க்க எரிச்சலாக இருந்தது. அதனால் அவர்களது அறை கதவை அடித்து சாத்திவிட்டு வேகமாக அவள் அருகில் சென்று அவள் கைகளைப் பிடித்து தன் பக்கம் இழுத்து “என்ன நீ இதெல்லாம் வேணுன்னே பண்றியா?” என்று கேட்க, அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்றே அவளுக்கு புரியவில்லை. அதனால் குழப்பமாக அவனைப் பார்த்த ஸ்வாதி “நீங்க இப்படி கோபப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணேன் தினேஷ்? இப்ப எதுக்கு என் கிட்ட கத்துறீங்க?” என்று கேட்க, அவளை இழுத்துக் கொண்டு போய் கண்ணாடியின் முன்னே நிற்க வைத்த தினேஷ் அவள் நெற்றியில் இருந்த குங்குமத்தையும் கழுத்தில் இருந்த தாலியையும் சுட்டிக்காட்டி அவள் உள்ளே போட்டிருந்த தாலியை வெளியில் இழுத்து போட்டு “ஏன் இப்ப உனக்கு மேரேஜ் ஆயிடுச்சின்னு ஐடென்டிடி கார்ட் மாதிரி நீ இந்த தாலியை போட்டுக்கிட்டு குங்குமம் எல்லாம் வச்சுக்கிட்டு இருந்தா தான் எல்லாரும் நம்புவாங்களா? முதல்ல உனக்கு மேரேஜ் ஆனது மத்தவங்களுக்கு எதுக்கு தெரியனும்?


நம்ம மேரேஜ் இன்விடேஷன நான் ஃபைனல் பண்ணி யாருக்கும் தெரியாம பிரிண்ட் போட்டு என் ஆபீஸ் பேக்ல வெச்சிருந்ததை அந்த மேனேஜர் பைத்தியக்காரன் பார்த்துட்டான். சோ வேற வழி இல்லாம நான் அவன் கிட்ட எனக்கு மேரேஜ் ஆகப்போகுதுன்னு சொன்னேன். மத்தபடி உனக்கும் எனக்கும் கல்யாணமானது யாருக்காவது தெரியுமா? நான் அதை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு இருக்கேன்னு தெரிஞ்சும், வேணும்னே இப்படி எல்லாம் பண்ணி என்னை மாட்டிவிட பாக்குறியா?” என்று கோபமாக கேட்டான்.



“நான் எதுக்குங்க உங்கள மாட்டி விட நினைக்க போறேன்? நீங்க மேனேஜர் கிட்ட உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சுன்னு சொன்னதுனால நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம்ன்னு சொல்லி இருப்பீங்கன்னு நான் நெனச்சேன். நீங்க இப்பதானே நமக்கு மேரேஜ் ஆனது யாருக்கும் தெரியாதுன்னு சொல்றீங்க! நீங்க என்கிட்ட நம்ம மேரேஜ் பத்தி யார் கிட்டயும் பேச கடாதுன்னு சொல்லும்போது கூட சர்ப்ரைஸா நீங்களே எல்லார் கிட்டயும் சொல்ல போறீங்கன்னு தான் நினைச்சேன். நீங்க என் கிட்ட தெளிவா பேசாம உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும் தினேஷ்?” என்று சுவாதி தன் பக்க நியாயத்தை கேட்க, “போதும் வாய மூடு சுவாதி. அப்படியே உனக்கு எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத. நீயும் அதே ஆபீஸ்ல தானே work பண்ற.. அங்க இருக்க rules and regulations என்னன்னு உனக்கு தெரியாதா?

According to the corporate rules, யார் யாரை வேணாலும் லவ் பண்ணலாம். அதுல ஆபீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் தலையிடாது. ஆனா ஆபீஸ்க்குள்ள ஏதாவது பிரச்சனை வந்தா கண்டிப்பா சம்பந்தப்பட்ட இரண்டு பேர் மேலையும் ஆக்சன் எடுப்பாங்க. அதுவும் ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்ற ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்க கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு. அப்படியே பண்ணிக்கிற மாதிரி இருந்தாலும், முன்னாடியே அதை மேனேஜ்மென்ட்க்கு இன்ஃபார்ம் பண்ணி அந்த ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் ஒன்னு வேலையை விட்டு நிற்கிறதாகவோ, இல்ல வாலண்டியரா வேற பிரான்ச்சுக்கு டிரான்ஸ்பர் கேட்டோ லெட்டர் போடணும். இது எதுவுமே உனக்கு தெரியாதுல?” என்று சற்றும் கோபம் குறையாமல் கணீர் குரலில் கேட்டான் தினேஷ்.



“நான் இதுக்கு முன்னாடி பத்து தடவயா கல்யாணம் பண்ணி இருக்கேன்? சத்தியமா எனக்கு இத பத்தி எல்லாம் தெரியாது தினேஷ். தெரிஞ்சிருந்தா நான் ஏன் இப்படி ஆஃபீஸ்க்கு போக போறேன்? எல்லாமே தெரிஞ்சும் நான் வேணும்ன்னே இப்படி பண்ற மாதிரி என்னை portray பண்ண try பண்ணாதீங்க.” என்று அவளும் கோபத்தில் சொல்ல, “ஆமா.. எனக்கு வேற வேலை இல்ல பாரு? ஆபீஸ்க்கு போற டைம்ல இது ஒரு விஷயம்னு உன் கிட்ட பேசி உன்ன எனக்கு எதிரா நீ தேவையில்லாத வேலை பாக்குறன்னு உன்னை portray பண்றது தான் என் வேலையா? இதெல்லாம் ரொம்ப basicக்கான விஷயம். டெய்லியும் ஆபீஸ்க்கு போய் வேலை பார்க்கிறதை விட பாதி நேரம் cafeteriaல உட்கார்ந்து கடலை போட்டுட்டு தானே இருக்கீங்க.. அந்த டைம்ல கூட ஆபீஸ்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க மாட்டியா?

சரி, அத கூட விடு. யாழினிக்கும் சங்கருக்கும் மேரேஜ் ஆகி 2 இயர்ஸ் ஆகுது. இன்னும் அவங்க கல்யாணம் ஆனதை வெளிய சொல்லாம தானே இருக்காங்க.. ஏன் உங்க டீம் லீடர் என் கிட்டயே.. உனக்கும் எனக்கும் மேரேஜ் ஆக பகுதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்.. நீயும் யாழினியும் ஃபிரண்ட்ஸ் என்றதால தானே அவங்க சொன்னாங்க..!! அப்ப கூட உனக்கு அவங்க ஏன் இத இத்தனை வருஷமா மறைச்சு வச்சிருக்காங்கன்னு தெரியாதா? இப்படி எல்லாம் கேவலமா நடிக்காத சுவாதி. அசிங்கமா இருக்கு.” என்று கத்தினான் தினேஷ்.



“Enough.. தினேஷ் stop it. நான் ஏன் உங்க மேரேஜ் பத்தி வெளிய யார் கிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்றீங்கன்னு கேட்கும் போது, யாழினி நான் ஏதோ இந்த சின்ன வயசுல எனக்கு சங்கர புடிச்சிருக்குன்னு லவ் பண்ணி marriage பண்ணிக்கிறேன். அதுக்காக அதை எல்லார் கிட்டயும் சொல்லி நான் என்னை ஒரு married womanஆ portray பண்றதுக்கு விரும்பல. அதுவும் இல்லாம கல்யாணம் ஆகிட்டாலே நம்மளை எல்லாரும் ஆண்டி மாதிரி தான் பார்ப்பாங்க. எனக்கு அதெல்லாம் பிடிக்காது. நான் இன்னும் கொஞ்ச நாள்தான் இங்கே ஒர்க் பண்ணுவேன். அப்புறம் பெங்களூர்ல நல்ல வேலை கிடைச்சா கிளம்பி போயிட்டே இருப்பேன்னு தான் அவ என் கிட்ட சொன்னா.

எனக்கு தெரிஞ்சு நம்ம ஆபீஸ்ல ஒர்க் பண்ணவங்க யாரும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டதே இல்லை. நீங்க டீம் லீடர். அதனால மேனேஜ்மென்ட் சம்பந்தமான மீட்டிங்க்கு எல்லாம் போயிருப்பீங்க. சோ உங்களுக்கு இதெல்லாம் தெரியுது. என் கிட்ட யாரும் இத பத்தி சொல்லலைன்னா எனக்கு எப்படி தெரியும்? நீங்களா ஏதாவது ஒன்ன புரிஞ்சுகிட்டு சும்மா என் மேல பழி போடாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்குது தினேஷ்.” என்று வந்த கோபத்தில் சுவாதி தனது அடி தொண்டையில் இருந்து கட்சி சொன்னாள்.



உண்மையாகவே அவள் மீது தவறு இல்லை என்றாலும் கூட அவள் அப்படி தன்னிடம் அவளது குரலை உயர்த்தி பேசியதால், அவனுக்கு அவளிடம் பணிந்து போகும் எண்ணமே வரவில்லை. அதனால் வந்த கோபத்தில் “உனக்கு இது தெரியுமா தெரியாதான்றது எல்லாம் எனக்கு தேவையில்லை. அதான் இப்ப சொல்லிட்டேன்ல.‌.. நான் சொல்றத நல்லா உன் மண்டையில ஏத்திக்கோ. ஆபீஸ்க்கு போய்ட்டா நான் உனக்கு டீம் லீடர். நீ என் டீம்ல வேலை செய்ற ஒரு பொண்ணு அவ்ளோ தான். அங்க நமக்குள்ள வெறும் professional relationship மட்டும் தான் இருக்கணும். இதுக்கு முன்னாடி நான் உன்னை எப்படி ட்ரீட் பண்ணனோ அப்படித்தான் இனிமேலும் ட்ரீட் பண்ணுவேன்.” என்று தனது வார்த்தைகளை கடித்து துப்பிய தினேஷ் அவளை தன் பக்கம் இழுத்து அவனாகவே அவள் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அருகிலுள்ள டேபிளில் வைத்துவிட்டு “என்ன ஆனாலும் நமக்கு மேரேஜ் ஆனது யாருக்கும் தெரியக்கூடாது. ஒழுங்கா போய் face wash பண்ணிட்டு வா. இன்னொரு தடவை நான் உன்னை இப்படி பார்த்தன்னா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு அவள் கண்கள் கலங்க நின்று தன்னை பார்ப்பதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஆபீஸுக்கு சீக்கிரமாக செல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அவசர அவசரமாக தனது ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு அவனது கார் சாவியுடன் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான்.



சுவாதி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால், மற்ற சராசரி பெண்களைப் போல அவளது தாலியின் மீது அவளுக்கு எக்கச்சக்க சென்டிமென்ட்ஸ் இருந்தது. தினேஷ் அவள் கழுத்தில் அந்த தாலியைக் கட்டி முழுவதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை. இன்னும் அதை பிரித்து கூட கோர்க்கவில்லை. அப்படி அதை பிரித்து கோர்க்கும் போது கூட, கழுத்தில் இருந்து தாலியை எடுக்கும்போது பல சுமங்கலிகள் சேர்ந்து எத்தனை சடங்குகள் செய்வார்கள்.. ஆனால் இவன் அதை எல்லாம் ஒரு விஷயமாகவே மதிக்காமல் அவன் கட்டிய தாலியை அவனே கழட்டி கீழே போட்டுவிட்டு “ஆபீஸ்க்கு போய்ட்டா, நமக்கு கல்யாணம் ஆகலைன்னு நினைச்சுக்கோ.” என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.