இசையும், பிரியாவும் தங்களை மறந்து ஆக்சிடென்ட்டலாக இணைந்து ஒருவரை ஒருவர் ஆழமாக தங்களை மீறி உணர்ச்சி வசப்பட்டு முத்தமிட்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது மழை வருவதன் அறிகுறியாக டமால் என்று பலத்த சத்தத்துடன் ஒரு இடி இடிக்க,
அதில் பயந்து போய் திடுக்கிட்ட இசை அவளை விட்டு சட்டென பிரிந்தான்.
குளுமையான காற்று அந்த இடம் முழுவதும் வீசிக் கொண்டிருந்தாலும்,
சூடாக இருந்த அவனது உடல் இப்போது பயத்திலும் பதட்டத்திலும் அதிகமாக வியர்க்க தொடங்கியிருந்தது.
சில நொடிகளுக்கு முன் என்ன நடந்தது என்று அவர்கள் இருவருக்கும் ஞாபகம் வர,
அவனது காந்த கண்களை பார்க்க முடியாமல் பிரியா தன் தலையை திருப்பிக் கொள்ள,
அவள் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று நினைத்த இசை சட்டென அவளை விட்டு பிரிந்து எழுந்து நின்று இரண்டடி பின்னே சென்று விட்டான்.
உடனே தயக்கத்துடன் எழுந்து நின்ற பிரியா அவனை கேள்வியாக பார்க்க,
அவளிடம் பேச தன் வாயைத் திறந்த இசை பலமாக வீசிய காற்றில் அழகாக பறந்து கொண்டிருந்த அவளது கூந்தலின் அழகை கண்டு மெய் மறந்து,
தன்னை துலைக்கும் அவளது கூர்மையான பார்வையால் ஸ்தம்பித்து போய் அப்படியே பேச்சின்றி நின்று விட்டான்.
அதற்கு மேல் அங்கே நின்று அவனைப் பார்க்க திராணியில்லாமல் பிரியா அவனிடம் எதுவும் பேசாமல் வேகமாக படிகளில் ஏறி தனது வீட்டிற்கு சென்று படார் என்று டோரை லாக் செய்தாள்.
பின் அவள் அதன் மீது சாய்ந்து கொள்ள, அவளுக்கு மூச்சு வாங்கியது.
அவள் மேலே கதவை அடித்து சாத்திய சத்தம் இசைக்கு நன்றாக கேட்டிருந்தது.
அதனால் அவன் “போச்சு.. இதுவரைக்கும் அவ என் மேல வச்சிருந்த மரியாதை, கொஞ்சநஞ்சம் அக்கறை எல்லாம் இதோட போயிடுச்சு!
ஐயோ அவசரப்பட்டுட்டியே டா இசை..
இனிமே அவ மூஞ்சில எப்படி போய் முழிக்கிறது?
என்ன பார்த்தாலே ஒரு கேவலமானவனா அவளுக்கு தோணாதா?
ச்சே.. எனக்கு ஏன் தான் இப்படி எல்லாம் முத்திப்போகுதோ தெரியல!
இதுக்கு முன்னாடி அத்தனை வருஷம் நான் யாழினிய லவ் பண்ணும் போது கூட,
இப்படி எல்லாம் ஒரு நாள் கூட அவசரப்பட்டு எதுவும் பண்ணதில்லை.
ஆனா இந்த பிரியா என என்ன என்னமோ பண்ணிட்டே இருக்கா..
அதான் என்னையும் மீறி கண்ட்ரோல் இல்லாம இப்படி பண்ணி தொலஞ்சுட்டேன்!
ஐயோ பிரியா.. என்ன கொல்லுறியேடி!
என் மேல கோபப்பட்டு நீ ஏதாவது பேசி திட்டிட்டு போயிருந்தாலோ,
இல்ல அடிக்க வந்திருந்தாலோ கூட பரவால்ல. நானும் பரவால்ல என் மேல தப்பு இருக்கு அடிச்சுக்கோமான்னு விட்டுருப்பேன்.
ஆனா நீ இப்படி எதுவும் பேசாம அமைதியா போனா நான் என்னடி நினைக்கிறது?
அடுத்த ராத்திரியில இப்படி என்ன அநியாயத்துக்கு புலம்ப விட்டுட்டு போயிட்டியே டி!
இப்ப உன்ன கிஸ் அடிச்சதை நினைச்சு என்னால சந்தோஷப்படவும் முடியல.
இப்படி ஒரு சூப்பர் சீன் நடந்ததை நினைக்கும் போது அப்படியே சோகமாவும் இருக்க முடியல.
சப்பா.. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கே.. கடவுளே!” என்று தனக்குள் புலம்பி கொண்டிருந்த இசை தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்தான்.
அதில் டெம்ப்ரவரியாக சென்று இருந்த அவனது கால் வலி மீண்டும் வந்துவிட,
வேண்டா வெறுப்பாக சென்று கட்டிலில் விழுந்தான். ஆனால் அப்போதும் கூட அவனுக்கு தூக்கம் வரவில்லை.
மறுநாள் காலை எப்படியும் பிரியா சரியாக 5:00 மணிக்கு எழுந்து கீழே வந்து விடுவாள் என்பதால்,
விடிய விடிய தூங்காமல் இருந்த இசை எழுந்து ரெப்ரெஷ் ஆகிவிட்டு அவளைக் காண கீழே சென்று காத்திருந்தான்.
வழக்கம்போல அப்போது பிரியாவும் ட்ராக் சூட் அணிந்து கீழே வர,
அவளது தலையை கண்டவுடன் உடனே எழுந்து அவள் அருகில் சென்ற இசை எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றான்.
“அதுக்குள்ள தூங்கி எந்திரிச்சிட்டியா?” என்று அவள் சாதாரணமாக கேட்க,
அது இன்னும் அவனுக்கு உறுதலாக இருந்தது.
அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் உடனே சட்டென தலையில் அமர்ந்து அவள் கால்களை பிடித்துக் கொண்ட இசை,
“ஐ அம் சாரி பிரியா. நேத்து நைட்டு தெரியாம அப்படி பண்ணிட்டேன்.
அந்த ஒரு இன்சிடெண்டை வச்சு நான் காஜி புடிச்சவன்னு என்ன தப்பா நினைச்சுராத.
சத்தியமா நான் அந்த மாதிரியான ஆள் இல்லை.
உன்ன பாத்தா மட்டும் தான் எனக்கே தெரியாம என்னென்னமோ ஆகுது.
நான் ஏன் அப்ப அப்படி பண்ணேன்னு எனக்கே தெரியல.
நெஜமா அப்படி தெரியாம தான் பண்ணேன்.
ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. இனிமே அப்படி நடக்காம பாத்துக்குறேன்.
அதுக்காக என் மேல கோபப்பட்டு பேசாம இருந்திராத.
முக்கியமா என்ன வெறுத்து ஒதுக்கிடாத. அதையெல்லாம் என்னால தாங்கவே முடியாது.” என்று துக்கம் தொண்டையை அடைக்க கலங்கிய கண்களுடன் சொன்னான்.
அவன் அப்படியெல்லாம் பேசுவான் என்று எதிர்பார்த்து இருக்காத பிரியா சட்டென அவன் அருகில் தரையில் அமர்ந்து,
“ஏய் என்னடா பண்ற லூசு! அதுக்காக இப்படி எல்லாம் வந்து கால்ல விழுவியா?
நான்தான் உன்னை எதுவுமே சொல்லலையே அப்புறம் என்ன?
எதுக்கு இப்படி சின்ன குழந்தைங்க மாதிரி கால்ல விழுந்து சாரி கேட்டு அழுகிற?” என்று கேட்க,
அவள் கைகள் இரண்டையும் பிடித்து தன் நெஞ்சில் வைத்து இறுக்கமாக பிடித்துக் கொண்ட இசை,
“சத்தியமா நான் அப்படி ஏதோ ஆக்ஸிடென்டலா தெரியாம தான் பண்ணிட்டேன் பிரியா.
தயவுசெஞ்சு என்ன தப்பா நினைச்சுக்காத ப்ளீஸ்!
நீ கோபப்பட்டு ஏதாவது என்னை திட்டிட்டு போயிருந்தா கூட எனக்கு மனசு ஆறியிருக்கும்.
நீ எதுவுமே சொல்லாம போனதுனால உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சு.
ஐ அம் சாரி ப்ரியா! இனிமே எப்பவுமே இந்த மாதிரி நடக்காது.” என்று கண்கள் குளமாக அவளிடம் கெஞ்சினான்.
இதுவரை எத்தனையோ போலியான மனிதர்களை பார்த்து சலித்து போன பிரியாவிற்கு இவனுடைய கல்லம் கபடமற்ற அன்பை பார்க்கும்போது உடல் சிலிர்த்தது.
அவன் எத்தனை வருத்தப்படுகிறான் என்று அவனது தூங்காத விழிகளை பார்க்கும்போது அவளுக்கு நன்றாக புரிந்தது.
அதனால் உடனே அவனை தயக்கம் இன்றி அணைத்துக் கொண்ட பிரியா,
“எனக்கு புரியுது ரிலாக்ஸ்! நேத்து என்ன நடந்துச்சுன்னு எனக்கும் புரியல.
பட் கண்டிப்பா அதுல என்னால உன் மேல மட்டும் தப்பு சொல்ல முடியாது.
பிகாஸ் அந்த சிச்சுவேஷன்ல நானுமே என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே இருந்துட்டேன்.
சோ நடந்ததுல நம்ம ரெண்டு பேரும் மேலயும் தப்பு இருக்கு.
நீ சொன்ன மாதிரி இது ஜஸ்ட் ஒரு ஆக்சிடென்ட்.
நம்ம அப்படி நினைச்சு இத சாதாரணமா விடுறது தான் நல்லது.
இத பத்தி யோசிச்சு இனிமே ஃபீல் பண்ணாத.
உன் மூஞ்சிய பாத்தாலே நீ தூங்கலைன்னு நல்லா தெரியுது.
முதல்ல போய் தூங்கு போ!” என்று அன்புடன் சொன்னாள்.
அவள் தன் மீது கோபப்படாமல் அன்புடன் தன்னை அணைத்துக் கொண்டதால், தானும் அவளை அதீத காதலுடன் அனைத்து கொண்ட இசை,
“தேங்க்யூ சோ மச் ப்ரியா! நீ என்ன தப்பா புரிஞ்சுக்கவியோன்னு நெனச்சு நான் ரொம்ப பயந்துட்டேன்.
பட் வழக்கம்போல இந்த விஷயத்தையும் நீ ரொம்ப மெச்சூர்டா ஹேண்டில் பண்ணிட்ட.
இப்பதான் எனக்கு போன உசுரு திரும்ப வந்த மாதிரி இருக்கு.
மறுபடியும் உன் முகத்தை பார்த்து இந்த மாதிரி பேச முடியாதோன்னு நினைச்சு ரொம்ப பயந்துட்டேன்.” என்றான்.
உடனே அவன் முகத்தை பார்த்து லேசாக புன்னகைத்த பிரியா
“ஓகே நீ போய் தூங்கு. நான் சார்ஜிங் போயிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு எழுந்தள்.
“எங்க ராகுல் உன்கூட வரலையா?” என்று அவன் கேட்க,
“நேத்து ரொம்ப நேரம் அவனும் நம்ம கூட சேர்ந்து வர்க் பண்ணிட்டு இருந்தான்ல!
அதான் அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு தூங்கிட்டு இருக்கான்.
நானும் அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன்.” என்றாள் அவள்.
“அப்ப நீ மட்டும் தனியா போக வேண்டாம்.
உன் கூட சேர்ந்து ஜாகிங் போகலாம்னு தான் நான் ரெடியாகி வந்தேன்.
எனக்கு இதுக்கு மேல போய் படுத்தாலும் தூக்கம் வராது.
நானும் உன் கூட வரேன்." என்று இசை சொல்ல, சரி என்ற பிரியா அவனுடன் ஜாகிங் சென்றாள்.
அவர்கள் இருவரும் ஒன்றாக அவ்வப்போது ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்தபடி அமைதியாக இருந்த சாலையில் ஜாகிங் சென்றார்கள்.
ஆனால் அவர்கள் கண்களும், மனதும், தங்களுக்குள் சத்தம் இன்றி பல்லாயிரம் உணர்ச்சிகளை பரிபாலிக் கொண்டது.
சில மணி நேரங்களுக்கு பிறகு..
சமைத்து வைத்திருந்த மதிய உணவுகள் அனைத்தும் ஓரளவிற்கு தீர்ந்து விட்டதால் ஆன்லைன் ஆர்டர்களை ஆப் செய்து வைத்த பிரியா,
மீதம் உள்ள உணவுகள் காலியானவுடன் கொஞ்ச நேரத்திற்கு ரெஸ்டாரண்டை மூடி வைத்துவிட்டு பிறகு ஆறு மணிக்கு மேல் திறக்கலாம் என்று இசையிடம் சொன்னாள்.
சரி என்ற இசை அதே போலவே செய்தான். மீதம் இருந்த உணவுகளை சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்கள் ரெஸ்டாரண்டை க்ளோஸ் செய்துவிட்டு வந்து அமர்ந்தார்கள்.
“நீ சொன்ன மாதிரி ஒரு மாசம் கூட டைம் எடுத்துக்காம அதுக்குள்ள இந்த ரெஸ்டாரண்டை எங்கேயோ கொண்டு போயிட்டியே மா!
இதே ஸ்பீடுல நம்ம ஒரு வருஷம் ஒர்க் பண்ணினால் கூட போதும்.
பக்கத்திலேயே புதுசு புதுசா ரெண்டு மூணு பிரான்ச் ஸ்டார்ட் பண்ணிடலாம்.
நம்ம ரெஸ்டாரன்ட் முன்னாடி மாதிரி நல்லா போக ஆரம்பிச்ச உடனே அந்த பணக்கார ரெஸ்டாரன்ட் ஓனர் கடுப்பாயிருப்பான்ல!
அந்த சூழல் மண்டையன் மேனேஜர் கூட இந்த பக்கம் போகும்போதெல்லாம் நம்ம கடையை முறைச்சு பார்த்துக்கிட்டே போறான்.
எனக்கு அவனுங்களை எல்லாம் பார்த்தா சிரிப்பு தான் வருது.” என்று ஜீவா சொல்ல,
சிரித்த முகமாக அவனைப் பார்த்த ப்ரியா “இதுக்கு எல்லாம் நான் மட்டும்தான் ரீசன்னு எல்லா creditsஐயும் குடுக்காதீங்க அண்ணா.
Infact என்னைவிட அதிகமா நீங்க ரெண்டு பேரும் தான் இங்க நிறைய வொர்க் பண்றீங்க.
நம்ம மேனேஜரா இருந்து என்ன வேணாலும் ஓனர் கிட்ட அட்வைஸ் குடுக்கலாம்.
ஆனா அத அவங்க புரிஞ்சுக்கிட்டு கரெக்டா இம்ப்ளிமென்ட் பண்ண மட்டும்தான் ப்ராப்பர் ரிசல்ட் கிடைக்கும்.
நான் என்ன சொன்னாலும், செஞ்சாலும், அது கரெக்டா இருக்கும்னு இசை என் மேல நம்பிக்கை வச்சதுனால தான் இப்ப இது எல்லாமே பாசிபிளாகி இருக்கு.
அவன் என் மேல வெச்ச நம்பிக்கையை கெடுக்காம இருக்கணுமேன்னு நான் கொஞ்சம் ஒர்க் பண்ணேன் அவ்ளோ தான்.” என்று தன்னடக்கத்துடன் சொன்னாள்.
“நம்ம இதோட நிக்க கூடாது பிரியா! தமிழ்நாடு முழுக்க நம்ம ரெஸ்டாரன்ட் வைக்கணும்.
அப்புறம் இந்தியா முழுக்க வைக்கணும். அப்புறம் ஒவ்வொரு கண்ட்ரிக்கா பறந்து போய்கிட்டே இருக்கணும்.” என்று இசை என்ன கனவுகளை கண்களில் தேக்கி வைத்து ஆர்வமாக சொல்ல,
“ம்ம்.. நம்ம கஷ்டப்பட்டு அதுக்கான efforts எல்லாத்தையும் போட்டு இந்த ரெஸ்டாரன்ட் ஃபேமஸ் ஆச்சுன்னா,
நீ சொன்ன மாதிரி இந்த உலகத்துல இருக்க ஒவ்வொரு மூலைக்கும் நம்ப இந்த ரெஸ்டாரன்ட்டை கொண்டு போக முடியும்.
நீயும் செஃப் தாமு மாதிரி, மாதம்பட்டி ரங்கராஜ் மாதிரி நல்ல ஃபேமஸ் ஆயிடுவ." என்று சொன்ன பிரியாவிற்கு அப்போதுதான் இன்னும் அவர்கள் கேட்டரிங் ஆர்டர் பிடிப்பதை பற்றி எல்லாம் இன்னும் யோசிக்கவே இல்லை என்று தோன்றியது.
அதனால் அவள் அதைப்பற்றி அவர்களிடம் சொல்ல,
“ம்ம்.. அதெல்லாம் பண்ணிடலாம் மா.
நம்ம இசையோட அப்பாவுக்கே ரெண்டு மூணு கல்யாண மண்டபம் இருக்கு.
அங்க வர்ற ஆர்டர்ஸ் எல்லாத்தையும் அவங்க நமக்கு தான் தருவாங்க.
அத வச்சு தான் ரெஸ்டாரன்ட் சரியா ஓடலைன்னாலும் நாங்க நாலஞ்சு மாசமா ஒப்பேத்திட்டு இருந்தோம்.” என்றான் ஜீவா.
“அதுக்குன்னு எப்பயுமே நம்ம நம்ம சைடுல இருந்து வர்ற ஆர்டர்ஸ் மட்டுமே எடுத்து பண்ணிட்டு இருந்தா எப்படி பெரிய ஆளாக முடியும்?
பிரியா சொன்ன மாதிரி நம்மள எல்லாரும் திரும்பி பாக்குற மாதிரி பெருசா ஏதாவது பண்ணனும்.
அப்பதான் நமக்கு வெளியே இருந்து கேட்டரிங் காண்ட்ராக்ட் கிடைக்கும்.” என்று இசை சொல்ல,
“எஸ், நம்ம புதுசா எதுவும் யோசிக்கக்கூட தேவையில்லை.
இன்னும் கரெக்டா ஒன் வீக்ல valentine's day வருது.
அன்னைக்கு நம்ம ஸ்பெஷலா கப்பிள்ஸ்காக எதாவது அரேஞ்ச் பண்ணலாம்.
கிரவுண்ட் ஃபுளோர்ல இருக்கிறத விட டெரஸ்ல ஸ்பேஸ் நிறைய இருக்கு.
அத utilize பண்ணி pre-booking பண்ற exclusive customersக்கு ஒரு ரொமான்டிக் moon facing candle light dinner night timeல arrange பண்ணி கொடுக்கலாம்.
சிம்பிளா டெ
க்கரேட் பண்ணா கூட கேண்டில் லைட் டின்னர் நல்லா இருக்கும்.” என்றாள் பிரியா.
அவளது ஐடியா மற்ற இருவருக்கும் பிடித்து போக, அவர்கள் அனைவரும் இந்த காதலர் தினத்தை வைத்து எப்படி பிசினஸ் செய்யலாம் என்று யோசிக்க தொடங்கினார்கள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.