ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்தவுடன் காரில் ஏறிய நடேசன் பிரியாவையும், இசையையும் மீண்டும் அழைத்து சென்று ரெஸ்டாரண்டில் டிராப் செய்தார்.
நடேசனை பார்த்தவுடன் வேகமாக அவர் அருகில் சென்ற ராமசாமி “ஒரு நிமிஷம் இங்க இரு வரேன்னு சொல்லிட்டு எங்க தலைவரே போனீங்க?
உங்கள காணோம்னு நான் பதறி போய்ட்டேன் தெரியுமா?" என்று பதட்டத்துடன் கேட்க,
“நான் என் பையன் கூட தானே போனேன்.. அப்புறம் எதுக்கு இப்படி பதர்ற?
நீ போய் காருல உக்காரு, நான் வரேன்.” என்று சொல்லி ராமசாமியை அனுப்பிய நடேசன் பிரியாவை பார்த்து,
“நீ இனிமே இங்க வேலை பார்க்கும்போது ஜாக்கிரதையா இருக்கணும் மா.
உன்ன இதுவரைக்கும் நான் பார்த்தது இல்லை. அதனால எனக்கு நீ யாருன்னு தெரியல.
உங்க ஊர்ல இருந்து நீ ரொம்ப தூரம் வந்துட்டதனால இங்க உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாதுன்னு அர்த்தம் இல்ல.
உனக்கு தெரிஞ்சவங்க யாராவது வந்து உன்ன பாத்துட்டு போய், உன் மாமன்காரன் கிட்ட சொல்லிட்டா பிரச்சனை ஆயிடும்.
அதனால வேலை பாக்கும்போது கவனமா இரு.
முதல்ல நீ இங்க வேலை பார்க்க வேண்டிய அவசியமே இல்ல.
வேலைக்கு வேற ஆள் கூட வச்சுக்கலாம். நீ வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பா இருன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற.
அப்புறம் வேற என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியல மா.” என்றார்.
“ஐயோ.. இட்ஸ் ஓகே சார்.. நீங்க ஆல்ரெடி எனக்கு நிறைய செஞ்சுட்டீங்க. அதுவே போதும்.
வேற வழி இல்லாம தான் நான் எங்க ஊரை விட்டு ஓடி வந்தேனே தவிர,
அவங்கள பாத்து பயந்து நடுங்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.
எதுவாயிருந்தாலும் பாத்துக்கலாம்ன்ற முடிவுக்கு நான் எப்பயோ வந்துட்டேன்.” என்று பிரியா தைரியமாக சொல்ல,
“பொண்ணுன்னா இப்படித்தான் மா இருக்கணும்.
நீ ஒன்னும் கவலைப்படாத. உனக்கு நான் இருக்கேன்." என்ற நடேசன் பிரியா தன் வேலையை பார்க்க சென்றவுடன் இசையை தனியாக அழைத்து சென்று,
“இங்க பாருடா மவனே... நான் இங்க வரும்போது நீ என்ன சொன்ன?
இந்த பொண்ண உனக்கு புடிச்சிருக்கு.. நீ இவளத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தானே சொன்ன!
இனிமே அதுல இருந்து நீ பேச்சு மாறவேக்கூடாது.
நீ என்ன நினைக்கிறியோ அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை.
நான் முடிவு பண்ணிட்டேன்... பிரியா தான் என் மருமக.
நான் அவளை இங்க உன்ன நம்பி உன் பொறுப்புல விட்டுட்டு போறேன்.
ஏதாவது பிரச்சனை வந்தா சமாளிக்கிறதுக்கு என் ஆளுகளையும் இங்க வேலைக்கு சேர்த்து விடுறேன்.
அவங்க உங்க பாதுகாப்புக்கு இங்கயே இருப்பாங்க.
அந்த பொண்ணுக்கு இருக்கிற எல்லா பிரச்சனையையும் சரி பண்ணி அவ மனசுல இடம் புடிச்சு அவளை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வர்றது இனிமே உன் பொறுப்பு.
இந்த ரெஸ்டாரன்ட்டை நீ முன்னுக்கு கொண்டு வரியோ இல்லையோ..
அந்த பொண்ண உன்ன லவ் பண்ண வைக்கணும். அதான் இனிமே உன்னோட முழு நேர வேலையே...!! புரிஞ்சுதா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார்.
ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் தன் அப்பாவை பார்த்த இசை,
“என்னப்பா பெத்த பையன் கிட்டயே நீங்க அரசியல்வாதியின்னு ப்ரூவ் பண்றீங்களா?
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அவள இங்க இருந்து என்னை அனுப்பி வைக்க சொல்லிட்டு இருந்தீங்க..
இப்ப அப்படியே மாத்தி பேசுறீங்க? அதுக்குள்ள உங்க கண்ணுக்கு பிரியா நல்லவளா தெரியுறாளா?” என்று நக்கலாக கேட்க,
“நான் அவளை யாழினின்னு தப்பா நினைச்சுகிட்டேன்.
அதான் அப்படி சொன்னேன். என்னதான் பாக்குறதுக்கு இவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தாலும், நம்ம பிரியா வேற, யாழினி வேற.
இப்ப எனக்கு அது நல்லா புரிஞ்சிருச்சு. யாழினி மாதிரி ஆளுங்க காசு பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க.
அவங்களையெல்லாம் நம்பறது சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிற மாதிரி.
ஆனா பிரியா மாதிரி பொண்ணுங்க பொறக்கும் போதே மகாராணியா பொறந்து தங்க தட்டுல சாப்பிட்டு வளர்ந்தவங்க டா.
அதனால அவங்களுக்கு பணத்து மேல எல்லாம் பெருசா ஆசை இருக்காது.
அதுவும் இவங்க குடும்பம் ரொம்ப பாரம்பரியமான கௌரவமான குடும்பம்.
அவங்க வீட்ல பொண்ணு எடுக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சா நல்லா இருக்கும்னு நானே கூட நிறைய தடவ யோசிக்கிறேன்.
குயின் குரூப்ஸ் பத்தி நீ எங்க கேள்விப்பட்டிருக்க போற?
அவங்களுக்கு உலகம் முழுக்க கம்பெனி இருக்கு. அவங்களுக்கு இருக்கிற சொத்து மதிப்புக்கு முன்னாடி நம்ம குடும்பம் எல்லாம் ஒண்ணுமே இல்ல.
அந்த குடும்பத்தோட அடுத்த வாரிசு பிரியா தான். அப்படி ஒரு பொண்ணு நம்மகிட்ட இருக்கும்போது,
அவள நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறது ஒன்னும் தப்பில்லையே!
எனக்கு உன்ன பத்தியும் நல்லா தெரியும். நீ அந்த பொண்ண கண்டிப்பா கண் கலங்காம பார்த்துக்கவல்ல டா மகனே..
அப்புறம் என்ன? அவளை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ற வழிய பாரு.
நான் கிளம்புறேன், எனக்கு லேட் ஆகுது.” என்ற நடேசன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
“அடப்பாவி சொட்ட... நீ சரியான ஆளுன்னு எனக்கு நல்லா தெரியும்யா.
இருந்தாலும் பிரியாவை நீ புடிச்சிருக்குன்னு சொன்ன உடனே, அவங்க பாட்டிக்காக தான் சொல்றேன்னு ஒரு நிமிஷம் நானே நம்பிட்டேன்.
ஆனா அதுக்குள்ளேயும் ஒரு உள்குத்து வெச்சிருக்க பாத்தியா!
அங்க நிக்கிறயா நீ!
எது எப்படி இருந்தா என்ன? இனிமே நான் பிரியாவ கல்யாணம் பண்ணிக்கிறதுல
எந்த பிரச்சினையும் வராது.” என்று நினைத்து மகிழ்ந்த இசை தன் வேலையை பார்ப்பதற்காக சென்றுவிட்டான்.
மாலை 6:00 மணியளவில் தன் தோழிகளுடன் ஒரு அழகான இளம் பெண் அந்த ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தாள்.
அங்கே உட்கார்ந்து சாப்பிட இடமில்லாமல் ஏராளமானவர்கள் கையேந்தி பவனில் சாப்பிடுவதைப் போல உணவை தட்டில் வாங்கி வந்து பார்க்கிங் ஏரியாவில் கும்பல் கும்பலாக நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இசையின் அப்பா ஏராளமான ஆட்களை பிரியாவின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்திருந்ததால்,
அங்கே வந்த பெருங்கூட்டத்தையும் அவர்களால் சமாளிக்க முடிந்தது.
“நான் சொன்னேன்ல.. இப்ப இந்த ரெஸ்டாரண்ட்ல நிறைய கூட்டம் வருதுன்னு..
நீதான் நம்பவே இல்ல.. முன்ன இருந்ததைவிட இங்க இருக்கிற டிஷ் எல்லாமே சாப்பிடுறதுக்கு கூட செம டேஸ்டா இருக்கு sandy.
அதான் உன்ன இங்க நான் கூட்டிட்டு வந்தேன்.
ஆனா இங்க இவ்ளோ கூட்டமா இருக்கும்போது நம்ம எப்படி உட்கார்ந்து சாப்பிடுறதுன்னு தான் தெரியல.” என்று வர்ஷினி சொல்ல,
அவளால் அன்புடன் sandy என்று அழைக்கப்படும் சந்தியா அந்த இடத்தை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு,
“எவ்ளோ கூட்டமா இருந்தா என்ன? நம்ம சாப்பிட வரும்போது நமக்கே இடம் இல்லைன்னு சொல்லிடுவாங்களா இவங்க?
அதையும் பார்க்கலாம் வா.” என்று சொல்லி தன் தோழிகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் நினைத்ததை விடவே உள்ளே இன்னும் கூட்டமாக இருந்தது.
தன் கண்களை சுழல விட்டபடி இருந்த சந்தியா கிச்சனுக்கு சென்று கொண்டிருந்த ஜீவாவை பார்த்துவிட்டு,
“ஜீவா அண்ணா!” என்று குரல் கொடுக்க,
அவன் இவளை திரும்பிப் பார்த்து அவளுக்கு பதில் சொல்வதற்குள் கல்லாவின் அருகே நின்று கொண்டிருந்த ராகுல் அவள் அருகில் சென்று,
“சாரி மேடம், இப்போ எங்க ரெஸ்டாரன்ட் ஃபுல்லா இருக்கு.
வெளிய நிறைய பேர் பசங்களா இருக்காங்க. நீங்க அங்க நின்னு சாப்பிட்டாலும் நல்லா இருக்காது.
If you don't mind, நீங்க பார்சல் வாங்கிட்டு போறீங்களா? எல்லாமே ரெடியா தான் இருக்கு.” என்று தனது இனிமையான குரலில் பொறுமையாக சொன்னான்.
அவன் குரலில் மயங்கிய சந்தியா தன் முன்னே இருந்த ஜீவாவை கவனிக்காமல் ராகுலை திரும்பி பார்த்தாள்.
அவன் கிட்டத்தட்ட ஆறடி இருப்பான். இந்த சுண்டினால் ரத்தம் வரும் நிறம் என்பார்களே..
அப்படி ஒரு கலரில், புதிதாக முளைத்த குறுந்தாடியோடு டீன் ஏஜ் பசங்களுக்கே உரித்தான அப்பாவி முகத்துடன் handsomeஆக சினிமா ஆக்டரை போல இருந்தான்.
அப்படி ஒரு அழகனை இதற்கு முன் அவள் எப்போதும் பார்த்ததில்லை.
அதனால் சந்தியா ஒரு பக்கம் அவனை இமைக்க மறந்து பார்த்தபடி இருக்க,
அவள் கையைப் பிடித்துக் கொண்டு அவளது காதோரம் “நான் நேத்து என் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிட வரும்போது இங்க செம handsomeஆ ஒரு பையன் இருக்கான்னு சொன்னேன்ல..
அது இவன் தாண்டி. இந்த பையனும் இங்க வேலை பாக்குறானாம். நேத்து நான் வரும்போது ஜீவா அண்ணா சொன்னாரு.” என்று கிசுகிசுத்தாள் வர்ஷினி.
வீட்டில் வெட்டியாக இருக்க வேண்டாமே என்று நினைத்து வர்ஷினியும், சந்தியாவும் தனது மற்ற சில தோழிகளோடு சேர்ந்து makeup artistry classற்க்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
நேற்று இரவு ராகுலை பார்த்துவிட்டு காலையில் அவர்கள் கிளாஸுற்க்கு சென்றவுடன் ராகுலை பற்றி பேசத் தொடங்கிய வர்ஷினி,
மாலை அங்கே இருந்து வெளியில் வரும் வரைக்கும் “அவன் எப்படி இருந்தான் தெரியுமா? அவன் கண்ணுக் கூட குட்டி அழகா இருந்துச்சு டி.
அவன் ஜிம் போவான்னு நினைக்கிறேன். அவன் ஆர்ம்ஸ் கூட வேற லெவல்ல இருந்துச்சுன்னா பாரேன்..”
என்று அவனைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள்.
அதைக் கேட்டு சலித்து போன சந்தியாவிற்கு ஒரு கட்டத்தில் அவன் அப்படி என்ன பேரழகனா?
அவனை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தால் தான் என்ன? என்று தோன்றிவிட,
உடனே வேண்டுமென்றே தனக்கு மிகவும் பசி எடுப்பதாக சொல்லி தனது தோழிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிட்டாள் சந்தியா.
இப்போது ராகுலை நேரில் பார்த்தவுடன் வர்ஷினி வர்ணித்ததை விட அவன் ஒரு படி மேலே அழகாக இருப்பதாக நினைத்த சந்தியா,
அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு “நீங்க இங்க ஒர்க் பண்றீங்களா? உங்க நேம் என்ன?” என்று அவனிடம் கேள்வி கேட்க தொடங்கினாள்.
அவள் தன்னை அழைத்ததால் அவள் குரல் கேட்டு அங்கே வந்த ஜீவாவிற்கு அவள் ராகுலிடம் பேசியதும் நன்றாக கேட்டு விட,
“இவன் பேரு ராகுல் மா. இவனுக்கும் உன் வயசு தான் இருக்கும்.
காலேஜ் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி இங்க பார்ட் டைமா அசிஸ்டன்ட் மேனேஜரா ஒர்க் பண்றான்.
பார்க்க தான் சின்ன பையன்.. ஆனா ஆளு ரொம்ப டேலண்டானவன்.
இவங்க அக்கா மாதிரியே இவனும் ஆள்ரவுண்டர். எதுவாயிருந்தாலும் ஒரு தடவை சொன்னா போதும்..
அத அப்படியே கேட்டு கத்துக்கிட்டு எல்லாத்தையும் கரெக்டா செய்றான்.” என்று அவனை பெருமையாக பேசினான் ஜீவா.
அதை கேட்டு ராகுலின் மீது இன்னும் சந்தியாவிற்கு ஆர்வம் கூடியது.
அதனால் அவனை உற்றுப் பார்த்தபடி,
“அப்ப உங்ககிட்ட இருந்து நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு நினைக்கிறேன்.
நானும் இனிமேதான் காலேஜ் ஜாயின் பண்ண போறேன்.
உங்களுக்கு ஓகேன்னா, நீங்களும் என் கூட சேர்ந்து பிசினஸ் மேனேஜ்மென்ட் படிங்களேன்..
ஆல்ரெடி உங்களுக்கு இங்க மேனேஜ்மென்ட் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனால உங்களுக்கு அது ஈசியா இருக்கும்.
அண்ட் நீங்களும் எனக்கு நிறைய சொல்லித் தரலாம்.” என்றாள்.
அவள் யார் என்று தெரியாததால் பேச கூச்சப்பட்டு கொண்டு அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ராகுல் ஜீவாவை பார்க்க,
“என்னடா அப்படி பாக்குற? இவளும் நம்ம பொண்ணுதான்.
உன் மாமாவோட குட்டி குரங்கு. அவனுக்கு இருக்கிற ஒரே ஒரு தங்கச்சி.
இவ பேரு சந்தியா. இப்பதான் 12த் முடிச்சிருக்கா.
சரியான வாயாடி. அது இவளை பார்த்த உடனே உனக்கே தெரிஞ்சிருக்கும்.
இருந்தாலும் ஒரு அண்ணனா உனக்கு ஒரு வார்னிங் குடுக்கிறது என் கடமை..
அதான் ஃப்ரீ அட்வைஸ் குடுக்கிறேன்.
உனக்கு புரிஞ்சுதுனா தப்பிச்சுக்கோ!” என்று சொல்லிவிட்டு சிரித்தான் ஜீவா.
அதனால் உடனே கடுப்பாகி அவன் காலை நறுக்கென்று மிதித்த சந்தியா,
“அந்த பையன் முன்னாடி என்ன டேமேஜ் பண்றது தான் நீங்க அவனுக்கு குடுக்கிற வார்னிங்கா?
நான் ஒன்னும் இசை மாதிரி softஆ எல்லாம் இருக்க மாட்டேன்.
நான் எங்க அப்பா மாதிரி கொஞ்சம் டெரரான ஆளு பார்த்து இருந்துக்கோங்க!” என்று சொல்லி தன் கண்களை உருட்டி அவனை மிரட்டினாள்.
“அய்யய்யோ என்ன விட்டுரு தாயே! காலையில தான் உங்க அப்பா வந்துட்டு போனாரு.
இப்ப உன் பங்குக்கு நீ வந்து என்னை மிரட்டுறியா?
நீ என்னமோ பண்ணு.
உங்க அண்ணன் மார்க்கெட்ல இருந்து ஏதோ லோடு வர லேட் ஆகுதுன்னு பிரியாவை கூட்டிக்கிட்டு அங்க போயிருக்கான்.
அவன் வந்த உடனே உனக்கு என்ன வேணுமோ அவங்கிட்டயே கேளு. எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்.” என்ற ஜீவா அங்கிருந்து சென்றுவிட,
“ஆமா, நீ சரியான சொர்ணாக்கா தான்.
ஆனா என்ன.. கொஞ்சம் குட்டியா க்யூட்டா இருக்க.” என்று மெல்லிய குரலில் சொன்ன ராகுல் அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்தான்.
அவன் சிரிக்கும்போது அவன் கன்னத்தில் அழகாக குழி விழ,
அந்த குழிக்குள் உடனே பொத்தன்று விழுந்த சந்தியா, அவன் தன்னை கலாய்த்ததை எல்லாம் மறந்துவிட்டு லாஸ்டாக அவன் சொன்ன இரண்டு வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு,
“நெஜமாவே நான் க்யூட்டா இருக்கனா?” என்று வெட்கத்துடன் கேட்டாள்.
உடனே அதற்கு அவன் “ஆமா உனக்கு என்ன? நீ க்யூட்டா அழகாதான் இருக்க.” என்று அவளுக்கு காம்ப்ளிமென்ட் கொடுக்க,
இறக்கை இன்றி வானில் பறந்து கொண்டிருந்த சந்தியாவை “அட லூசு! அப்ப இதுக்கு முன்னாடி அவன் உன்னை சொர்ணாக்கான்னு சொன்னதை மட்டும் கவனிக்கலையா நீ?
சிம்பாலிக்கா அவன் உன்ன குட்டி லேடி டான்னு சொல்லிருக்காண்டி." என்று சொல்லி மொக்கை கொடுத்து அவசரமாக அவளை தரையிறங்க வைத்தாள்.
அப்போதும் கூட சிரித்த முகமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தியா,
“பரவால்ல பரவால்ல எனக்கு அதெல்லாம் பெருமைதான்.
எங்க அப்பா பொலிட்டீசியன். எங்க அண்ணனுங்க ரெண்டு பேருக்குமே பாலிடிக்ஸ் சுத்தமா பிடிக்காது.
அப்படி பார்த்தா அவரோட அடுத்த அரசியல் வாரிசு நான் தான்.
நடேசன் இளஞ்செழியனோட மக அப்படி சொர்ணாக்கா மாதிரி திமிரா இருந்தா தான் கெத்தா இருக்கும்.
இல்லைனா என்னை யாரும் எங்க அப்பாவோட இடத்துல வச்சு பார்க்க மாட்டாங்க.” என்று பெருமையாக சொல்ல,
“வாவ்.. what a brave girl! இவளை மாதிரி ஒரு பொண்ண நான் பாத்ததே இல்ல.
இவளுக்கும் எனக்கும் சேம் ஏஜ் தான் இருக்கும். ஆனா இந்த வயசுலயே இவ என்ன விட செம தைரியமா இருக்கா.
இவ கூட பேசி பழகுனா என்கிட்ட இருந்து இவ ஏதாவது கத்துக்கிறாளோ இல்லையோ,
இவகிட்ட இருந்து நான் கத்துக்குறதுக்கு இன்ட்ரஸ்டிங்கா நிறைய இருக்கும் போல.” என்று நினைத்த ராகுல்,
“திமிரா இருக்கிறதும் ஒரு அழகு தான். உங்களுக்கு இது சூட் ஆகுது.
பட் எதுவா இருந்தாலும் ஒரு லிமிட்டோட இருக்கிற வரைக்கும் நான் நல்லது.
அத மட்டும் பாத்துக்கோங்க. கண்டிப்பா நீங்க ஆசைப்படுற மாதிரி நல்ல politicianஆ வருவீங்க.
உங்க அப்பாவ பத்தி எனக்கு எதுவும் தெரியாது. பட் நீங்க பவர்ல இருந்தீங்கன்னா, உங்களால முடிஞ்ச வரைக்கும் மக்களுக்கு நல்லது செய்யுங்க." என்று பெரிய மனுஷன் போல சொன்னான்.
இவ்வளவு நேரமாக அவள் தான் அவனை விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர,
அவன் மரியாதையுடனும் தெளிவாகவும் தன்னிடம் வலியாமல் அதேசமயம் இனிமையாக பேசுவதை பார்த்து பெரிதளவில் இம்ப்ரஸ் ஆன சந்தியாவிற்கு முதல் சந்திப்பிலேயே ராகுலை மிகவும் பிடித்து விட்டது.
அதனால் “கண்டிப்பா நான் என்னால முடிஞ்சதை விட அதிகமா மக்களுக்கு நல்லது செய்யணும்னு ஆசைப்படுறேன்.
அண்ட் நான் காலேஜ் ஜாயின் பண்ண போறதை பத்தி உங்ககிட்ட சொன்னனே அதை மறந்துடாதீங்க.
நான் உங்களுக்கு என் நம்பர் குடுக்குறேன். நான் காலேஜ் ஜாயின் பண்ண போகும்போது உங்க கிட்ட சொல்றேன்.
உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா நீங்களும் உங்க அக்காவ கூட்டிக்கிட்டு என் கூட வாங்க." என்ற சந்தியா வாலண்டியராக அங்கே இருந்த நோட் பேட் ஒன்றை எடுத்து அதில் அவள் நம்மரை எழுதி அவனிடம் கொடுத்தாள்.
தயக்கத்துடன் அதை வாங்கிய ராகுல் “கண்டிப்பா சொல்றேன். பட் என்கிட்ட ஃபோன் இல்லையே.. அப்புறம் நான் எப்படி உங்களை காண்டாக்ட் பண்றது?” என்று கேட்க,
“ஓ அப்படியா சரி.. பரவால்ல விடுங்க.
நெக்ஸ்ட் டைம் நான் உங்களை மீட் பண்ண இங்க வரும்போது நானே உங்களுக்கு ஒரு ஃபோன் வாங்கி தரேன்.
அதுவரைக்கும் இங்க ரெஸ்டாரண்ட்ல இருக்கிற லேண்ட்லைன் நம்பர்ல இருந்து எனக்கு ஃப்ரீயா இருக்கும்போது கால் பண்ணுங்க.
நம்ம பேசுறதுக்கு நிறைய இருக்கு. அடிக்கடி பேசி ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சுக்குவோம்.” என்று வெட்கத்துடன் சொன்னாள் சந்தியா.
- தொடரும்..

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-20
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.