சரவணன் மற்றும் விக்ரம் வீட்டிற்கு சென்று உணவருந்தி கொண்டிருக்க, “சனா எங்கப்பா?? பசங்க எல்லாரும் போயிட்டு இருப்பாங்களே?? அவளுக்கு ஃபோன் கூட பண்ணி பார்த்தேன் எடுக்கலையே?” என்று வள்ளி கேட்க, “சனா கீழ சைன் பண்ண போயிருக்கா…. அங்க இருந்து நடந்து வரணும்ல… எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும்…. நாங்க வந்து இருபது நிமிஷம் ஆயிருச்சுல… அவளும் வந்துருவா இன்னும் கொஞ்ச நேரத்துல” என்று சரவணன் கூறினான்.
சிறிது நேரத்தில் ஸ்ரீனிவாசன் மற்றும் சனந்தா குரல் கேட்க, வள்ளி வாசலுக்கு சென்று, “நீங்க எப்படி ஒண்ணா வரீங்க?” என்று வள்ளி கேட்க, “கீழ ஆஃபீஸ்க்கு சைன் போட வந்தா… அப்படியே நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு நடந்து வந்துடோமா” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
“அப்படியா சரி சரி…. சனா வா சாப்பிடலாம்” என்று வள்ளி அழைக்க, சனந்தாவும் சரி என்று ஒரு அடி எடுத்து வைக்கவும் அங்கே விக்ரம் மற்றும் சரவணன் இருவரின் ஷு இருப்பதை பார்த்ததும், “சாரி ஆன்ட்டி…. ரொம்ப டயர்டா இருக்கு…. நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் அதுக்கப்புறம் நான் சாப்பிட வரேன் தப்பா எடுத்துக்காதீங்க…. ப்ளீஸ் ஆன்ட்டி” என்று சனந்தா கூறவும், “என்னடா உடம்பு ஏதும் சரியில்லையா சனா?” என்று வள்ளி அக்கறையாக கேட்க, “இல்ல ஆன்ட்டி நடந்து வந்தது கொஞ்சம் டயர்டா இருக்கு அதனால தான் வேற ஒன்னும் இல்ல” என்று சனந்தா சமாளித்தாள்.
“சரி நீ ரெஸ்ட் எடுத்துக்கோ… அப்புறமா வந்து சாப்பிடு…. நம்ம சாயந்தரமா ஆத்து கிட்ட போலாம்” என்று கூறி வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் உள்ளே சென்றனர்.
“என்னங்க ஆச்சு??? முதல்ல சரின்ட்டு வந்தா அதுக்கு அப்புறம் திடீர்னு இல்ல டயர்டா இருக்குன்னு சொல்றா??” என்று வள்ளி ஸ்ரீனிவாசனிடம் கேட்க, “இல்ல வள்ளி உண்மையிலேயே டயர்டா தான் இருந்தா…. கையில வேற அடி பட்டு இருக்கு அவளுக்கு… ஏறி வந்ததும் ரொம்ப டயர்டா இருக்கு போல…… சரி எனக்கு சாப்பாடு போடு” என்று ஸ்ரீனிவாசன் பேசிக் கொண்டே வந்து அமர்ந்து கொண்டார்.
“அப்படியா நான் பார்க்கவே இல்லையே கையில அடி பட்டு இருக்குறத… என்ன ஆச்சு” என்று வள்ளி கேட்க, “மர பட்டை உள்ள போயிருச்சாம் இப்ப பரவாயில்லன்னு சொன்னா” என்றார் ஸ்ரீனிவாசன். “ம்ம்… அப்புறமா பார்க்குறேன் அவள” என்று வள்ளி கூறி உணவை பரிமாறினார்.
விக்ரம், தான் வீட்டில் இருப்பதை உணர்ந்து தான் அவள் வரவில்லை என்பது புரியவும் சற்று சங்கடமாகி போனது அவனுக்கு.
“என்னப்பா அந்த ஆத்து கிட்ட வேலை முடிஞ்சுதா?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “இல்லப்பா இன்னைக்கு முடிஞ்சிடும்… ஆளுங்க ஒரு மூணு மணி போல வரேன்னு சொல்லி இருக்காங்க அதான் அங்க போகணும்… இன்னைக்கு கண்டிப்பா முடிஞ்சுரும்” என்று விக்ரம் கூறினான்.
அனைவரும் உணவு அருந்திவிட்டு, ஸ்ரீனிவாசன் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்வதாக கூறி அவர் உறங்க சென்றார். “சரிம்மா நாங்களும் கிளம்புறோம் இப்ப போனா தான் எங்களுக்கு சாயந்திரத்துக்குள்ள வேலை முடியும்” என்று சரவணன் கூறி, விக்ரம் மற்றும் சரவணன் புறப்பட்டனர்.
விக்ரம் சென்று வண்டியை எடுக்கவும், சரவணன், “மச்சான் ஒரு நிமிஷம் இரு இதோ வரேன்” என்று கூறி, “ஏய் சனா!!! என்ன பண்ற??? துணி எப்படி துவைப்ப கையில கட்டு கட்டி இருக்கல” என்று சரவணன் கேட்க, “இதெல்லாம் காலையிலேயே நான் துவைச்சுட்டேன் காயப்போடனும்… அத தான் இப்ப போடுறேன்” என்று சனந்தா கூறினாள்.
“குடு நான் வேணா ஹெல்ப் பண்றேன் உனக்கு” என்று சரவணன் கூற, “ஐயோ!! இல்ல இல்ல வேண்டாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க” என்று சனந்தா கூறினாள். “சரி… சாப்டியா நீ முதல்ல??” என்று சரவணன் கேட்க, “இல்ல… வந்து கொஞ்ச நேரம் பசங்க சிலபஸ் எல்லாம் எழுதி முடிச்சேன்… அதுக்கு அப்புறம் துவைச்ச துணி இருக்கு காய போடலாம்னு வந்தேன்… இனிமே தான் போய் சாப்பிடணும்” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்…. எல்லாத்தையும் முடிச்சிட்டு போய் சாப்பிடு மருந்து மாத்திரை எல்லாம் போடணும்ல போ” என்று சரவணன் கூற, “ம்ம்… ஓகே!!” என்று சனந்தா கூறினாள். சரவணன் மற்றும் விக்ரம் புறப்பட, “என்னால தான் அவ வீட்டுக்குள்ள வரல போல டா” என்று விக்ரம் குற்றயுணர்ச்சியுடன் கூற, “இதுல சந்தேகம் வேறயா உனக்கு…. வெளியில ஷூ பார்த்திருப்பா நீ இருக்கேன்னு தெரிஞ்சிருக்கும் அதனால வந்திருக்க மாட்டா” என்று சரவணன் கூறினான்.
“ப்ச்…. சரி… ம்ம்… அவ கை எப்படி இருக்கு?” என்று விக்ரம் தயக்கத்துடன் கேட்க, “உனக்கு அக்கறை இருந்தா நீயே கேட்டுக்கோ எதுக்கு என்கிட்ட கேக்குற?” என்று சரவணன் கேலியாக கூற, “கேக்கணும் தான்….. ஆனா, மூஞ்ச பார்த்து பதில் சொல்வாளான்னு கூட தெரியலையே” என்றான் விக்ரம்.
“வாய் மச்சான் வாய் அந்த வாய் கொஞ்சமாவது கண்ட்ரோல்ல இருக்கணும்…. இஷ்டத்துக்கு பேசுனா” என்று சரவணன் கூற, “ஆமாண்டா பேசிட்டேன் தான்… என்ன பண்றது… போய் அவகிட்ட மன்னிப்பு தான் கேக்கணும்” என்று விக்ரம் கூறினான்.
“அதையாவது நீ கேட்பியா, இல்ல அப்பவும் ஏதாவது இஷ்டத்துக்கு பேசுவியா” என்று சரவணன் கேட்க, “என்னை நல்லா ஓட்டுற டா நீ…. என் நிலைமை உனக்கு வந்தா தெரியும்” என்று விக்ரம் கூறினான். “எனக்கு தான் அப்படி ஒன்னு வராதே” என்று சரவணன் கூற, “அதுவும் சரி தான்… ஆனா, உனக்கும் ஒருத்தவங்கள புடிச்சு அதை சொல்ல முடியாம நீயும் அவஸ்த படுவடா இது என் சாபம்” என்று விக்ரம் கூறினான்.
சரவணன் விக்ரமின் தலையை தட்டி, “மூடிட்டு போ வேலைய முடிப்போம்… அதுக்கு அப்புறமா இதெல்லாம் பேசலாம்” என்று சரவணன் கூற, இருவரும் ஆத்திற்கு சென்று, வேலையாட்களை வைத்து வேலையை தொடங்கினர்.
“ஆன்ட்டி இந்தாங்க டீ!!” என்று சனந்தா கோப்பையை கொடுக்க, “என்ன சனா சாப்பிடவே வரல… கையில வேற அடி பட்டு இருக்குன்னு சொன்னாரு” என்று வள்ளி முறையிடவும், “நான் வந்தேன் ஆன்ட்டி…. கதவு மூடி இருந்துது மெதுவா திறந்து பார்த்தா நீங்க தூங்கிட்டு இருந்தீங்க…. சரி டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு, நான் எடுத்துட்டு போன சப்பாத்தி ரோல்ஸ் சாப்பிட்டேன்…. ம்ம் அப்புறம் கையில ஒன்னும் இல்ல ஆன்ட்டி ஏதோ மரப்பட்டை உள்ள போயிடுச்சு… இப்ப பரவால்ல அன்ட்டி” என்று சனந்தா கூறினாள்.
“ஒன்னும் இல்லாம தான் கையில கட்டு போட்டு இருக்கியா” என்று வள்ளி கேட்க, “ப்ச்… அத விடுங்க ஆன்ட்டி சரி ஆகிடும்…. ம்ம்… நீங்க எப்படியும் இந்த டைம்ல டீ குடிப்பீங்கல அதான் உங்களுக்கும் சேர்த்து டீ போட்டுக் கொண்டு வந்தேன்… எப்படி இருக்குன்னு சொல்லுங்க… அப்படியே அங்கிளுக்கும் ஒரு கப் கொடுத்துருங்க” என்று சனந்தா கூறினாள்.
“அவர் இன்னும் தூங்கிட்டு இருக்கார் போலயே….” என்று வள்ளி கூறவும், ஸ்ரீனிவாசன் அறையிலிருந்து வெளியே வந்தார். “இப்ப தான் நீங்க தூங்கிட்டு இருப்பீங்களோன்னு சொல்லிட்டு இருக்கேன் அதுக்குள்ள நீங்க வரிங்க…. சனா டீ போட்டுக் கொண்டு வந்து இருக்கா இந்தாங்க” என்று வள்ளி ஒரு கோப்பையை நீட்ட, புன்னகையுடன் ஸ்ரீனிவாசன் வாங்கிக் கொண்டு, “தேங்க்ஸ்!!!” என்று கூறினார்.
“ஆமா, சனா எப்படி சமைக்கிற?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “எனக்கு புகை பெருசா ஒத்துக்காது.... அதனால என்னால அந்த ஸ்டவ்ல சமைக்க முடியாது…. அதான் நான் கேம்பிங் ஸ்டவ் தான் யூஸ் பண்றேன்…. வெளியில எங்கேயாவது போனும்னா கூட அதை வெச்சு நாங்க நிறைய சமைச்சிருக்கோம்…. அதனால எனக்கு அது கொஞ்சம் தெரியும்” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்…. டீ நல்லா இருக்குடா!!” என்று வள்ளி கூற, “ஆன்ட்டி உண்மையா சொல்றீங்களா??? இல்ல எனக்காக சொல்றீங்களா??” என்று சனந்தா கேட்க, “நிஜமாவே நல்லா இருக்கு… நீ காலைல கொடுத்த சாலடும் எனக்கு பிடிச்சிருந்தது… ரொம்ப சிம்பிளா இருந்தது… ஆனா, டேஸ்டா இருந்தது” என்று வள்ளி கூறினார்.
“அப்போ நான் இன்னொரு வாட்டி செய்யும் போது திருப்பி உங்களுக்கு இன்னும் நிறைய கொண்டு வந்து கொடுக்கிறேன்” என்றாள் சனந்தா.
“சரிமா ரெடி ஆயிட்டு வாங்க மெதுவா நடந்து போவோம் ஆத்து கிட்ட… இப்ப போனா தான் கொஞ்ச நேரம் இருந்துட்டு இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வர முடியும்” என்று ஸ்ரீனிவாசன் கூறவும், அனைவரும் தயாராகி வந்து புறப்பட்டனர்.
மூவரும் பேசிக் கொண்டே நடந்து சொல்ல கவிதா எதிரில் வரவும், “எங்க கிளம்பிட்டீங்க அத்தை நீங்க” என்று கேட்க, “சும்மா ஆத்து கிட்ட போலாம்னு தான்” என்றார் வள்ளி. “நீங்களும் எங்க கூட வாங்களேன்” என்று சனந்தா அழைக்கவும், கவிதா உடனே சரி என்று ஒத்துக் கொண்டு அவர்களுடன் சென்றாள். “உங்களுக்கு இந்த க்ளிப் அழகா இருக்கு” என்று சனா கூற, “தேங்க்ஸ்” என்று கூறி புன்னகைத்தாள் கவிதா.
“அப்புறம் சனா, சமையல் எல்லாம் எப்படி கத்துக்கிட்ட??” என்று வள்ளி கேட்க, “நான் படிச்சதும் ஃபுட் இன்டஸ்டரி தான் ஆன்ட்டி… அது போக என்னோட ரீசர்ச் எல்லாமே நியூட்ரிஷன் சார்ந்து தான்… அதனால, நானும் அந்த உணவை சமைச்சு பார்த்து தான் ஆகணும்… அதனால அப்படியே கத்துக்கிட்டது தான்…. அதுவும் இல்லாம அம்மா ரொம்ப நல்ல சமைப்பாங்க…. கொஞ்ச நாள் வீட்ல இருந்ததுல அம்மா கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன்” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்… உன்னோட சமையல் ஈசியாவும் சிம்பிளாவும் இருக்கு” என்று வள்ளி கூற, “ஆமா அன்ட்டி…வெளிய எல்லாம் போனா கூட, இருக்குறத வெச்சு கொஞ்ச நேரத்துல எப்படி சமையில முடிக்கனும்னு கத்துக்கிட்டோம் வேலைக்காக” என்றாள் சனந்தா.
“அத்தை நான் எப்படி சமைக்குறேன்” என்று கவிதா கேட்க, “உனக்கு என்னடா நீ சூப்பரா சமைப்ப…. உனக்கு யார் கத்துக் குடுத்தா நான் தானே” என்று வள்ளி கூறவும், “ஆமா, உங்க கிட்ட இருந்து தான் நிறைய கத்துக்கிட்டேன்” என்று கவிதா கூறினாள்.
இப்படி அனைவரும் பேசிக் கொண்டே ஆத்துக்கு வந்தடையவும், ஸ்ரீனிவாசன் ஊரை பற்றி சில விவரங்களை சனந்தாவிடம் பேசிக் கொண்டே வந்தார். “இப்ப இந்த ஆத்து கிட்ட பாலம் கட்டுறதுக்கான முக்கியமான காரணமே, மழை காலத்துல காட்டுக்குள்ள போக முடியாது, அந்த நேரத்துல கொஞ்சம் நம்ம காட்டுகுள்ள போனோம்னா நிறைய மூலிகைகள் எல்லாம் கிடைக்கும் நமக்கு… அதுல இருந்து நிறைய பொருட்களை தயாரிக்கலாம் அப்படி தயாரிச்சாங்கன்னா இங்க இருக்கிற மக்களுக்கு இன்னும் நிறைய வியாபாரம் பண்றதுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் அதுக்காக தான் முக்கியமா இந்த பாலத்தை கட்டுறோம்….. இத கட்டுறதுக்காக எத்தனை வருஷம் போராடி இப்ப தான் கட்டி முடிக்கிற நிலைமைக்கு வந்திருக்கோம்” என்று பெருமிதத்துடன் கூறினார் ஸ்ரீனிவாசன்.
“எப்படி அங்கிள் உங்களுக்கு ஒரு ஊருக்கு, எல்லாம் பண்ணனும்னு தோணுச்சு??” என்று சனந்தா கேட்க, “நாங்க இங்க பொறந்து வளரும் போது ஒண்ணுமே இல்ல…. ஒரு அஞ்சு குடும்பம் மட்டும் தான் இருந்திருப்போம்… மெதுவா எல்லாமே வளர ஆரம்பிச்சுது… ஆனா, எங்களோட பொருளாதாரம் எங்களுடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய யாருமே இல்ல… நான் வளர வளர தான் தெரிஞ்சுகிட்டேன் அரசாங்கம்னு ஒன்னு இருக்கு…. அவங்க எங்களுக்காக வந்து எல்லாமே உதவி பண்ணுவாங்கன்னு… ஆனா, அதுக்கு நம்மளும் கொஞ்சம் முயற்சி எடுக்கணும்னு தெரிஞ்சுகிட்டு தான் எல்லா முயற்சியும் எடுத்தேன்…. எல்லா உதவியும் எங்களுக்கு அரசாங்கம் பண்ணுச்சு” ன்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 20
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.