CHAPTER-20

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
அடுத்த‌ நாள் காலை...

ச‌ந்ராவின் அறையில் ச‌ந்ரா ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில் இருக்க‌, அவ‌ள் அறைக்குள் நுழைந்த‌ அர்ஜுன், அவ‌ள் அருகில் வ‌ந்து மெல்ல‌ அவ‌ளை த‌ட்டி எழுப்ப‌, அதில் சிணுங்கிய‌ அவ‌ளும் புர‌ண்டு புர‌ண்டு ப‌டுத்தாளே த‌விர‌ எழ‌வில்லை.

அதை பார்த்து அழ‌காய் புன்ன‌கைத்த‌வ‌ன், சில‌ நிமிட‌ம் அவ‌ள் தூங்கும் அழ‌கில் த‌ன்னை தொலைத்து அவ‌ளை இர‌சித்துக்கொண்டிருக்க‌, ம‌று நிமிட‌மே த‌ன்னிலைய‌டைந்த‌வ‌ன், "ச‌ந்ரா!" என்று மென்மையாய் அழைத்த‌ப‌டி அவ‌ள் க‌ன்ன‌ம் த‌ட்ட‌, அவ‌ளோ மெல்ல‌ உற‌க்க‌ம் க‌லைந்து சோம்ப‌ல் முறித்த‌ப‌டி எழுந்தாள்.

அதை பார்த்த‌ அர்ஜுன், "குட் மார்னிங். எந்திரி எந்திரி டைம் ஆயிரிச்சு." என்று கூற‌,

அப்போதே க‌ண் திற‌ந்து அவ‌னை பார்த்த‌வ‌ள், அவ‌னை மேலும் கீழுமாக‌ பார்த்துவிட்டு, "இன்னிக்கு ஃப‌ங்ஷ‌ன் இருக்குன்னு சொன்ன‌ல்ல‌? ஆனா நீ எங்க‌ கெளம்பிட்ட‌?" என்று கேட்க‌,

அர்ஜுன், "உன‌க்காக‌ நா சிட்டியில‌யே பெஸ்ட் மெஹ‌ந்தி டிசைன‌ர‌ வ‌ர‌ சொல்லியிருக்கேன். ப‌ட் இது கொஞ்ச‌ம் காட்டு ப‌குதிங்குற‌தால‌, அவ‌ங்க‌ளால‌ ந‌ம்ப‌ லொக்கேஷ‌ன் ட்ரேஸ் ப‌ண்ண‌ முடிய‌ல‌. நா போய் அவ‌ங்க‌ள‌ பிக் ப‌ண்ணிட்டு வ‌ந்த‌ர்றேன். நீ அதுக்குள்ள‌ ரெடியாகு." என்றான்.

அதை கேட்ட‌ அவ‌ளும், "ம்ம் செரி." என்று கூற‌,

அர்ஜுன், "செரி நா போயிட்டு சீக்கிர‌ம் வ‌ந்த‌ர்றேன். நீ ப‌த்த‌ர‌மா இரு." என்றான்.

சந்ரா, "ம்ம்." என்று கூறிய‌வ‌ள், ம‌ன‌திற்குள் ம‌கிழ்ச்சிக்கொண்டாள்.

பிற‌கு அர்ஜுன் அங்கிருந்து சென்றுவிட‌, அவ‌ன் சென்ற‌தும் உட‌னே த‌ன் மொபைலை எடுத்து அபிக்கு கால் செய்தாள்.

இங்கு அவ‌ள் காலை அட்ட‌ன் செய்த‌ அபி, "சொல்லு ச‌ந்ரா." என்று கூற‌,

ச‌ந்ரா, "நீ எங்க‌ இருக்க‌?" என்று கேட்க‌,

அபி, "நா ஆன் த‌ வேல‌தா இருக்கேன். வ‌ந்திருவேன்." என்றான் காரை ஓட்டிய‌ப‌டி.

ச‌ந்ரா, "செரி ஓகே அர்ஜுனும் எங்க‌யோ போயிட்டான். நீ சீக்கிர‌மா வா." என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டு குளிக்க‌ சென்றுவிட்டாள்.

இங்கு அபி ச‌ந்ராவின் வீட்டிற்கு வ‌ந்துக்கொண்டிருக்கும் வ‌ழியில் திடீரென‌ வ‌ளைவில் ஒரு காரின் மீது மோதிவிட்டான். அதை உண‌ர்ந்த‌ அபி, "ஷிட்! எவ‌ன்டா அவ‌ன்?" என்று கூறிய‌ப‌டி உட‌னே காரைவிட்டு இற‌ங்கி, "உன‌க்கு க‌ண்ணு தெறிய‌ல‌யா? இப்பிடியா வ‌ந்து மோதுவ‌?" என்று க‌த்த‌,

அந்த‌ காரிலிருந்து இற‌ங்கிய‌. அர்ஜுன், "நீ வ‌ந்து மோதிட்டு என்ன‌ சொல்றியா?" என்று க‌த்த‌,

அபி, "நீதான்டா வ‌ளையும்போது பாக்காம‌ வ‌ந்திருக்க‌." என்றான்.

அர்ஜுன், "ஏ? நீ பாத்து வ‌ர்ற‌து? பாக்க‌ற‌துக்கு அப்பிடியே தொட‌ப்ப‌ குச்சி மாதிறி இருக்க‌, நீயெல்லா வ‌ண்டி ஓட்டுற‌யா?" என்று கூற‌,

அதை கேட்டு கோப‌ம‌டைந்த‌ அபி, "டேய் தொட‌ப்ப‌ குச்சி அது இதுன்னு சொன்ன‌, அவ்ளோதா பாத்துக்கோ." என்றான்.

அதை கேட்ட‌ அர்ஜுன் ச‌த்த‌மாக‌ சிரித்த‌ப‌டி, "இங்க‌ பார்ரா தொட‌ப்ப‌ குச்சிக்கு கோவ‌மெல்லா வ‌ருது." என்று கூற‌, அவ‌னோ ப‌ல்லை க‌டித்த‌ப‌டி "உன்ன‌.." என்று கூற‌ வ‌ர‌,

"நீ என்ன‌ க‌ண்ண‌ க‌ல‌ட்டி வெச்சிட்டு வ‌ண்டி ஓட்டிறியா?" என்றான் அர்ஜுன்.

அத‌ற்கு அபி கோப‌த்துட‌ன் ப‌ல்லை க‌டித்து த‌ன் கோப‌த்தை அட‌க்கி, "உன்கூட‌ பேசி பேசி என‌க்குதா லேட் ஆகுது, பேசாம‌ வ‌ழிய‌விடு." என்று கூற‌,

அர்ஜுன், "ஆமா, உன்கூட‌ பேச‌ற‌துக்கு என‌க்கு ம‌ட்டும் என்ன‌ ஆசையா? கெளம்பு மொத‌ல்ல‌." என்று கூற‌, அதை கேட்ட‌ அபியும் எரிச்ச‌லுட‌ன் த‌ன் காரை எடுத்துக்கொண்டு வ‌ளைந்து அவ‌னை க‌ட‌ந்து சென்றுவிட்டான்.

அதை பார்த்த‌ அர்ஜுன், "இவ‌ன‌ பாத்தாலே என‌க்கு கோவ‌ம் வ‌ருது, ஏன்னே தெரிய‌ல‌." என்று த‌ன‌க்குள் கூறிக்கொண்டான்.

பிற‌கு அர்ஜுனும் த‌ன் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அடுத்த‌ அரை ம‌ணி நேர‌ம் க‌ழித்து, இங்கு அர்ஜுனுடைய‌ வீட்டில் அக்க‌ம் ப‌க்க‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ளுடைய‌ குடும்ப‌மும், வீட்டில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ளின் குடும்ப‌ம் என்று நிறைய‌ பேர் இந்த‌ விழாவிற்கு அர்ஜுனின் அழைப்பை ஏற்று வ‌ந்திருக்க‌, வீடே நிர‌ம்பி வ‌ழிந்திருந்த‌ நேர‌ம், ச‌ந்ராவும் அபியும் ஒளிந்து நின்று இர‌க‌சிய‌மாக‌ பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ச‌ந்ரா, "நா கேட்ட‌த‌ வாங்கிட்டு வ‌ந்துட்டியா?" என்று கேட்க‌,

அபி, "ஹா வாங்கிட்டு வ‌ந்துட்டேன். இந்தா அந்த ஆசிட்." என்று ஒரு க‌ண்ணாடி குப்பியை அவ‌ளிட‌ம் கொடுத்தான்.

அதை கையில் வாங்கிய‌ ச‌ந்ரா, "செரி இத‌ எதுல‌ க‌ல‌க்க‌ற‌து?" என்று கேட்க‌,

அபி, "இந்த‌ மெக‌ந்தில‌ க‌ல‌ந்த‌ர‌லாம்." என்று ஒரு க‌ண்ணாடி கிண்ண‌த்தில் த‌யாராக‌ அறைத்து வைத்திருந்த‌ ம‌ருதாணியை அவ‌ளிட‌ம் காட்டினான்.

அதை புரியாம‌ல் பார்த்த‌ ச‌ந்ரா, "மெக‌ந்தில‌ க‌ல‌ந்தா அத‌ எப்பிடி அர்ஜுன் போடுவான்?" என்று கேட்க‌,

அத‌ற்கு அபி, "நீ நென‌ச்சா முடியும். நீதா அவ‌ன‌ போட‌ வெக்க‌ணும்." என்றான்.

ச‌ந்ரா, "என்ன‌ சொல்ற‌?" என்று புரியாம‌ல் கேட்க‌,

அபி, "நா சொல்ற‌ மாதிரி செய்." என்று கூறி, அவ‌ள் செய்ய‌வேண்டும் என்று அவ‌ளிட‌ம் தெளிவாக‌ விள‌க்கி கூறினான்.

அதை கேட்டு புரிந்துக்கொண்ட‌ ச‌ந்ரா, "ஓகே ட‌ன். நா பாத்துக்கிறேன்." என்று கூறி செல்ல‌ தயாராகிய‌வ‌ள் குரோத‌ புன்ன‌கையுட‌ன், "அர்ஜுன‌ இப்பிடி கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா சித்த‌ர‌வ‌த‌ப்ப‌டுத்தி, ந‌மக்கு செஞ்ச‌ அநியாய‌த்துக்கு மொத்த‌மா ப‌ழி தீக்க‌ணும்." என்றாள்.

அதை கேட்ட‌ அபி, "இத போட்ட‌தும், அவ‌னுக்கு ப‌ய‌ங்க‌ர‌மா கை எரியும். அதோட‌ அவ‌ன் ஒட‌னே கைய‌ க‌ழுவுவான். ஆனா த‌ண்ணி ப‌ட்ட‌தும்தான் இந்த‌ ஆசிட் ப‌த்து ம‌ட‌ங்கு அதிக‌மா வ‌லிய‌ குடுக்கும்." என்று குரோத‌மாக‌ புன்ன‌கைத்தான்.

அதை கேட்ட‌ சந்ரா மேலும் ம‌கிழ்ந்த‌ப‌டி, "அத‌ பாத்து பாத்து நாம‌ ச‌ந்தோஷ‌ப்ப‌டலாம்." என்று கூறி வில்ல‌த்த‌ன‌மாக‌ புன்ன‌கைத்தாள்.

அப்போது அர்ஜுனும் வீட்டிற்கு வ‌ந்துவிட‌, அதை பார்த்த‌ அபி உட‌னே ஒளிந்துகொண்டான். அப்போது ச‌ந்ர‌வை பார்த்து க‌ண் காட்ட‌, அதை புரிந்துக்கொண்ட‌ ச‌ந்ராவும் அர்ஜுன் அருகில் சென்று, "அர்ஜுன்!" என்று அழைக்க‌,

அதை கேட்ட‌ திரும்பிய‌வ‌ன், "ஹேய் ச‌ந்ரா. இங்க‌ பாரு இவ‌ங்க‌தா நா சொன்ன‌ மெஹ‌ந்தி டிசைன‌ர்." என்று அவ‌ரை அறிமுக‌ப்ப‌டுத்தினான்.
அத‌ற்கு அந்த‌ பெண்ணும் ச‌ந்ராவிட‌ம் கை குலுக்கிவிட்டு, "செரி நா போய் மெஹ‌ந்தி போட‌ எல்லாம் ரெடி ப‌ண்ணி வெக்கிறேன். அற‌ச்ச‌ ம‌ருதாணி எங்க‌ இருக்கு?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் அது இருக்கும் இட‌த்தை காண்பித்தான். அதை பார்த்த‌ அவ‌ளும் அங்கு சென்றுவிட‌, அப்போது ச‌ந்ரா, "அர்ஜுன்! உன‌க்காக‌ ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்ன‌ல்ல‌? அது இதுதா." என்று த‌ன் கையிலுள்ள‌ ம‌ருதாணி கிண்ண‌த்தை காண்பித்தாள்.

அதை புரியாம‌ல் பார்த்த‌ அர்ஜுன், "என்ன‌ இது?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "மெக‌ந்தி. உன‌க்காக‌ நானே அற‌ச்சு ரெடி ப‌ண்ணேன்." என்றாள்.

அதை கேட்ட அர்ஜுன் சிரித்த‌ப‌டி, "என்ன‌ இது ச‌ந்ரா? நா எப்பிடி பொண்ணுங்க‌ மாதிரி மெக‌ந்தி போட்டுக்க‌ முடியும்?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "யார் சொன்னா பொண்ணுங்க‌தா இத‌ போட‌னுன்னு? ப‌ச‌ங்க‌ பேர‌ பொண்ணுங்க‌ நாங்க‌ எங்க‌ கையில‌ எழுத‌ற‌ மாதிரி, இப்பெல்லாம் பொண்ணுங்க‌ பேர‌ையும் ப‌ச‌ங்க‌ கையில‌ எழுதிக்கிறாங்க‌. உன‌க்குதா தெரியல‌." என்றாள்.

அர்ஜுன், "சோ?" என்று கேட‌க‌,

ச‌ந்ரா, "நீயும் மெஹ‌ந்தியில‌ என் பேர‌ கையில‌ எழுதிக்கோ." என்றாள்.

அதை கேட்ட‌ அர்ஜுன், "என்ன‌ வெளையாடுறியா? என்னால‌ முடியாது." என்று கூற‌,

ச‌ந்ரா, "ப்ளீஸ் அர்ஜுன். ப்ளீஸ் ப்ளீஸ்." என்று க‌ண்க‌ளை குறுக்கி கெஞ்ச‌,

அவ‌னோ, "முடிய‌வே முடியாது. எல்லாரும் என்ன‌ கிண்ட‌ல் ப‌ண்ணுவாங்க‌ ச‌ந்ரா." என்று சிணுங்கிய‌ப‌டி கூற‌, அத‌ற்குள் அங்கிருந்த‌ வெய்ட்டர் த‌வ‌றுத‌லாக‌ ச‌ந்ரா கையில் இருந்த‌ ம‌ருதாணி கிண்ணத்தை த‌ள்ளிவிட்டுவிட்டான். அது கீழே விழுந்து உடைந்த‌து.

அதை பார்த்து அதிர்ந்த‌ வெய்ட்டர், "சாரி மேடம். நா உங்க‌ளுக்காக‌ வேற‌ மெஹ‌ந்தி எடுத்திட்டு வ‌ர்றேன்." என்று கூற‌,

அர்ஜுன், "இட்ஸ் ஓகே. நீ போ." என்றான்.

அதை கேட்ட‌ அவ‌னும் ச‌ரியென்று சென்றுவிட‌, அப்போதே ச‌ந்ராவின் ப‌க்க‌ம் திரும்பினான் அர்ஜுன். அவ‌ளோ கீழே விழுந்து சித‌றிய‌ அந்த‌ மெக‌ந்தியை பார்த்த‌ப‌டியே அதே அதிர்ச்சியில் நின்றுக்கொண்டிருந்தாள். அர்ஜுன் மீது இருக்கும் அத்த‌னை கோப‌த்தையும் ஒன்று திர‌ட்டி, அபி கொடுத்த‌ மொத்த‌ ஆசிடையும் இந்த‌ ஒரே கிண்ண‌த்தில் க‌ல‌ந்திருந்தாள். இப்போது அதுவும் கீழே விழுந்து வீணாகியிருக்க‌, மொத்த‌ திட்ட‌மும் வீணாகிவிட்ட‌து என்று அதிர்ச்சியில் நின்றாள் ச‌ந்ரா.

அதை பார்த்த‌ அர்ஜுன், "ஹேய் ச‌ந்ரா!" என்று அழைக்க‌, அப்போதே த‌ன்னிலைய‌டைந்து அவ‌னை பார்க்க‌, அப்போது அர்ஜுன், "என்ன‌ ஆச்சு? ஏ இப்பிடி நிக்கிற‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா வாடிய‌ முக‌த்துட‌ன், "இத‌ நா உன‌க்காக‌ க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டு ரெடி ப‌ண்ணேன். ஆனா இது இப்பிடி ஆயிரிச்சு." என்று மீண்டும் சித‌றி கிட‌ந்த‌ அதே ம‌ருதாணியை பார்க்க‌, அதை பார்த்த‌ அர்ஜுன், "செரி ப‌ர‌வால்ல‌ விடு. அதுக்கு என்ன‌ ப‌ண்ற‌து?" என்று கூற‌,

அதை கேட்டு மேலும் முக‌ம் வாடிய‌ ச‌ந்ரா ம‌ன‌திற்குள், "இவ‌னுக்காக‌ போட்ட‌ மொத‌ல் பிளேனே ப‌ய‌ங்க‌ர‌ பெருசா ப‌ண்ணேன். ஆனா என்னால‌ அத‌க்கூட‌ ஒழுங்கா ப‌ண்ண‌ முடிய‌ல‌. எல்லாமே இவ‌னுக்கு சாத‌க‌மாவே ந‌ட‌க்குது ச்செ." என்று நொந்துக்கொண்டாள்.

அப்போது அவ‌ளின் முக‌ வாட்ட‌த்தை பார்த்த‌ அர்ஜுன், "ஹேய் என்ன‌ ஆச்சு? நீ எதுக்கு இவ்ளோ ஃபீல் ப‌ண்ற‌? இது வெறும் ஒரு மெக‌ந்திதான‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா, "செரி விடு அர்ஜுன்." என்று உடைந்து போன‌ மெக‌ந்தி கிண்ணத்தையே பார்த்த‌ப‌டி நின்றுக்கொண்டிருந்தாள். ஏனோ கொஞ்ச‌ம் ஆசிடையாவ‌து மிச்ச‌ம் வைத்திருக்க‌லாம் என்று இப்போது தோன்றிய‌து.

அப்போதும் அவ‌ள் யோச‌னையிலேயே இருப்ப‌தை பார்த்த‌ அர்ஜுன், "என்ன‌ ச‌ந்ரா. இதுக்காக‌ நீ இவ்ளோ ஃபீல் ப‌ண்ண என்ன‌ இருக்குன்னு என‌க்கு சுத்த‌மா புரிய‌ல். செரி விடு. உன்னோட‌ ஆசைய‌ நா நெற‌வேத்துறேன். நீ ப்ளீஸ் இப்பிடி ஃபீல் ப‌ண்ணாத‌." என்று கூற‌,

ச‌ந்ரா, "அது எப்பிடி முடியும் அதா எல்ல‌மே வேஸ்ட் ஆயிரிச்சே?" என்று அதையே பார்த்த‌ப‌டி நொந்து கூற‌,

அர்ஜுன், "முழு அன்போட‌ ப‌ண்ணா எதுவும் வேஸ்ட் ஆகாது ச‌ந்ரா." என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா, "இல்ல‌ அர்ஜுன். வேற‌ மெக‌ந்தி எல்லாம் வேண்டா விடு. நா இத‌தா உன‌க்காக‌ க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டு ரெடி ப‌ண்ணேன். ப‌ட் இட்ஸ் ஓகே." என்று கூற‌, அவ‌ள் வாயில் விர‌ல் வைத்த‌வ‌ன், "ஷ்ஷ்ஷ்ஷ்...." என்றான் அவ‌ளின் விழிக‌ளை பார்த்து.

அதில் அவ‌ள் அவ‌னை கேள்வியுட‌ன் பார்க்க‌, அப்போது அர்ஜுன் அவ‌ளை பார்த்த‌ப‌டியே மெல்ல‌ குனிந்து, கீழே கொட்டி கிட‌ந்த‌ அந்த‌ ம‌ருதாணியில் த‌ன் கையை அழுத்த‌மாக‌ ப‌தித்து எடுத்தான். அப்போது அந்த‌ ம‌ருதாணி அவ‌ன் கை முழுவ‌தும் அப்பிக்கொண்ட‌து. அதை பார்த்த‌ ச‌ந்ரா அதிர்ந்து நிற்க‌, அவ‌ளோ த‌ன் பெய‌ரை பெரிதாக‌ அவ‌ன் கையில் எழுதிவிட‌ வேண்டும் என்றுதான் நினைத்தாள். அதுவே உயிர் போகும் வ‌லியை கொடுக்கும். ஆனால் இப்போது இவ‌னே த‌ன் கை முழுவ‌தும் அந்த‌ ஆசிடை அப்பிக்கொண்ட‌து, அவ‌ளுக்கு ச‌ற்று அதிர்ச்சியைதான் கொடுத்த‌து

அப்போது அர்ஜுன், "நீ என‌க்காக‌ ப‌ண்ண‌ இந்த‌ மெக‌ந்திய‌வே நா வெச்சுகிட்டேன் போதுமா?" என்று கூற‌,

அப்போதும் ச‌ந்ரா அதிர்ச்சி மாறாம‌ல் அவ‌னை பார்த்த‌ப‌டி
ம‌ன‌திற்குள், "என்ன இது? நா கொஞ்சம் வ‌ருத்த‌ப்ப‌ட்ட‌துக்கே, இவ்வ‌ளோ நேர‌ம் வெக்க‌மாட்ட‌ன்னு சொன்ன‌ மெக‌ந்திய‌ வெச்சிட்டான்? என்னோட‌ சின்ன‌ வாட‌ல‌க்கூட‌ பாக்க‌ கூடாதுன்னு நெனைக்கிற‌ இவ‌ன், ஒரு அர‌க்க‌னா? இல்ல‌ நாந்தா த‌ப்பா நென‌ச்சுகிட்டிருக்க‌னா? உண்மையிலையே அர்ஜுன் ந‌ல்ல‌வ‌ந்தானா?" என்று யோசித்த‌வ‌ளுக்கு இப்போது அவ‌ன் கை முழுக்க‌ அப்பியிருக்கும் அந்த‌ ஆசிட் என்ன‌ செய்ய‌ போகிற‌தோ என்ப‌தில்தான் எண்ண‌ம் இருந்த‌து.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-20
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.