இதுக்கு பின்னாடி ஏதும் வலுவான காரணம் இருக்குமோ.
என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டான் மாறன்.
எல்லா கேள்விகளுக்கும் விடை போக போக மாறன் கண்டுக்கொள்வான்.அதுவரை நாமும் காத்திருந்து தான் ஆக வேண்டும்.
கார் வீட்டுவாசலை தொட அவசரமாக காரை விட்டு இறங்கியவன், நங்கயை
தர தர வென இழுத்து செல்ல சரண்யாவும் சத்யாவும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆன்ட்டி என்று கலக்கத்தோடு சத்யா வினவ
நீ ஏதும் கவல படாத மா
மாறன் தம்பி பாத்துப்பாரு
இப்படி தமிழ் சார் ஹாஸ் ஷா பிகேவ் பண்றாரே ஆன்ட்டி. அக்கா எப்படி சமாளிப்பாங்க.
அக்கா ரொம்ப பாவம் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க .
இனிமேயாச்சும் அக்கா சந்தோஷமா இருக்கணும்.
கொஞ்சம் பார்த்துக்கோங்க ஆன்ட்டி..
அதெல்லாம் ஒன்னும் இல்லே மா தம்பி கொஞ்சம் கோபமாக இருக்காரு அதான். மாறன் தம்பி ரொம்ப தங்கமான டைப். நீ கவலைப்படாதே மா.
எல்லாம் சரி ஆய்டும்.
சரிங்க ஆன்டி நான் கிளம்பறேன் அங்க அம்மா ஏற்கனவே கோபத்துல இருக்காங்க இப்போ இங்க வந்த விஷயம் தெரிஞ்சா அப்பறம் அவ்ளோ தான் என்றாள் சத்யா.
சரிம்மா பாத்து போய்ட்டு வா
ம்ம், வரேன் ஆன்ட்டி,
சரண்யா விடம் சொல்லி விட்டு சத்யாவும் கிலம்பிட்டாள்.
நங்கையை தன் அறைக்கு இழுத்துச் சென்ற மாறன் , அவன் படுக்கையில் தள்ளி,
விழுந்தவளை எழ விடாமல் அவள் மீது பாய்ந்தான் .கண்களை இறுக்கி மூடிக் கொண்ட நங்கைக்கு அப்பொழுது தான் புரிந்தது.
மாறனின் உடல் அவள் உடலில் படவே இல்லை.மெதுவாக கண்களை திறந்தாள் நங்கை.
இருக் கைகளை இரு புறத்தில் இருந்து ஊன்றி தன் உடலை தாங்கியபடி அவள் மீது தன்னை கிடத்திக்கொண்டான்.
இப்போ புரியுதா டி நான் யாருனு.
என்ன டி நெனச்ச நீ
நீ உன் இஷ்டத்துக்கு பேசுவ நான் பாத்துட்டு சும்மா இருப்பேன்
அப்படினா?
கண்கள் படபடத்தது நங்கைக்கு.பயத்தின் விளிம்பில் இருந்தவளை மேலும் பயம் கூட்டினான்.
நங்கையின் கைகளை பற்றிய மாறன் படுக்கையோடு சேர்த்து அழுத்திகொண்டான்.
அழுகை தான் வந்தது நங்கைக்கு.
தன் கண்களில் கண்ணீரை தவிர வேறெந்த வார்த்தையும் கூறவில்லை அவள்.அவள் கைகளை அசைத்து பார்க்க,பலனில்லை.
இப்போ பேசுடி.
என்ன சொன்ன டி நீ ,
நான் காட்டு மெராண்டியா ,
கேவளமானவன்னா
ஆமாம் டி ,
நான் கேவலமானவன் தான்.
இப்போ காட்டுமிராண்டி கேவளமானவன் என்ன செய்வானு காட்டபோறேன்.
என்று மேலும் அவள் கைகளை அழுத்தினான்.அவள் மார்பில் தொங்கி கொண்டிருந்த தாலியை கைகளில் எந்தியவன்.
இதோ இது தாண்டி என் லைசன்ஸ்
இப்போ உன் கிட்ட எப்டி வேணாலும் நடந்துக்க எனக்கு உரிமை இருக்கு. அத கேக்க தான் யாருக்கும் உரிமை இல்லே.என்றவன் அவள் கழுத்துக் குழியில் இதமாக இதழ் பதிதான்
நங்கைக்கு தேகம் சிலிர்த்தது.
கண்களை இறுக மூடிக்கொண்டாள்.அவன் கன்னத்தில் அரும்பாக சேவ் செய்யாததால் வளர்ந்து இருந்த குட்டி குட்டி தாடி குத்த ஸ்ஸ்ஸ் சிணுங்கினாள் நங்கை.
இதழை மெல்ல கழுத்தில் இருந்து விலக்கியவன் தன்னவளை பார்க்க அவள் தும்பை பூ மேனி தாபத்தாலும், பயத்தாலும் சிவந்திருந்தது.
மாறனுக்கோ அவளின் தேக நெருக்கமும் பெண்ணவளின் வாசனையும் மதி மயக்க உடல் தனலாய் கொதித்தது.
அவள் நெருக்கம் அவனை பாடாய் படுத்த குப்பென்று வியர்த்தது வியர்வை துளிகளாக மாறன் முகத்தில் தோன்ற...அந்த நேரத்திலும் அதை ரசிக்க மறக்க வில்லை நங்கை.
அதில் ஒற்றை துளி மட்டும் , அவன் நெற்றியில் வழிந்தோடி அவன் கூறிய மூக்கை கடந்து அவள் மார்புக்கும் சற்றே மேலே ரோஜா மேனியில் முத்தைப்போல விழுந்தது.
இத்தனை நெருக்கம் ஆனபோதும் அவள் மேனிதனில் படவில்லை மாறனின் கரங்கள்.உடல்கள் உரசிக் கொள்ளவும் இல்லை.கோபத்திலும் ,தாபத்திலும் சற்று நிதானத்தோடு நடந்து கொண்டான் மாறன்.
இதற்கு மேலும் இது நீடித்தால் தன்னையும் மீறி அவன் மனதில் எழும் மோகத்தால் ஏதும் தவறாக நடந்து விட கூடும் ஏற்கனவே தன்னை காட்டுமிராண்டி என்கிறாள் என்று எண்ணிகொள்ள பட்டென்று அவளை விட்டு எழுந்தான்.
சூழ்நிலையை மாற்ற நங்கையிடம் என் கிட்ட கொஞ்சம் விலகியே இரு நான் அவ்ளோ நல்லவன் இல்லே.
அப்பறம் என் காட்டுமிராண்டி தனத்த உன் கிட்ட காட்டவேண்யது வரும் என்று கனத்த குரல்லில் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான் .
என்னங்க இப்போ என்ன பண்றது.டோட்டலா பிளான் எல்லாம் ஸ்பாயில் ஆயிடுச்சு. இப்போ என்ன பண்றது தெரியலையே.
எனக்கும் அதுதான் மாது ரொம்ப குழப்பமா இருக்கு. கல்யாணத்தை விடு மாறன் இல்லன்னா இன்னொருத்தன் ஆன இப்போ பெரிய பிரச்சனையில வந்து மாட்டிகிட்டு நிக்கிறோம்.
இந்த நங்கையை எப்படி மாறனுக்கு தெரியும் ஒரு நாள்ல இதெல்லாம் எப்படி சாத்தியம் எனக்கு தெரியல. என்றாள் மாதங்கி.
இதுக்குதான் அவளை 18 வருஷமா வெளியே போக விடாம, வெளி உலகம்னா என்னன்னு தெரியாம வீட்டுக்குள்ளேயே ஒரு கூண்டுக்கிளி மாதிரி வச்சிருந்தேன் அதையும் மீறி எப்படி இப்படி நடந்தது.
இப்போ இந்த பிரச்சனைல இருந்து எல்லாத்தையும் எப்படி சரி பண்றது அத பத்தி யோசிப்போம் என்றார் அன்பு.
மாதங்கி நம்ம குடும்ப வக்கீல் ஆதித்யாவை வர சொல்லி இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம். அவரு ஏதாவது ஒரு வழிய சொல்லுவாரு.
அங்கே கோபத்தோடு வந்த வித்யா அம்மா எப்ப பாத்தாலும் காசு பணத்தை பத்தி தான் யோசிக்கிறீங்க நீங்க என்னோட வாழ்க்கையை பத்தி யோசிக்க உங்களுக்கு நேரம் இல்லையா.
நிச்சயதார்த்தம் நின்னது உங்க சொந்த பொண்ணு எனக்கு ஆனா அதை பத்தி ஒரு கவலையும் படாம நீங்க என்னன்னா சொத்து பணத்தை பத்தி யோசிச்சிகிட்டு இருக்கீங்க. நீங்க எல்லாம் என்ன பேரன்ஸ்னு எனக்கே தெரியல நான் இப்படி ஆகறதுக்கு நீங்களும் ஒரு காரணம் அதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.
தன் மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டி தீர்த்தாள் வித்யா.
எங்கள என்ன செய்ய சொல்ற நாங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணினோம் ஆனா நீ அந்த கேடுகெட்ட பிரதாப் போட ரிலேஷன்ஷிப் வச்சு இருந்ததை பற்றி எங்களிடம் சொல்லி இருந்திருக்கணும் அது முன்கூட்டியே எங்களுக்கு தெரிந்திருந்தால் அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் பார்த்திருப்போம்.
ஆனா நீ இந்த விஷயத்தை கடைசி நேரத்தில் பிரதாப் உன்ன பிளாக்மெயில் பண்னதும் சொல்ற. உன் மேல எல்லா தப்பையும் வச்சுக்கிட்டு எங்கள பிளேம் பண்ணாத, உனக்காகத்தான் உங்க அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை அசோக் மூலமா கான்ட்ராக்ட் ற பெயருல நடத்தலாம்முனு பிளான் போட்டோம்.
அசோக்கிற்கு பிசினஸ் தான் முக்கியம் அதனாலே தான் இந்த பிளானும் சரிவர நடந்துட்டு இருந்துச்சு ஆனா நீ எல்லாத்தையும் மொத்தமா கெடுத்துட்டே இப்ப எங்க மேல பழி போடுற.
இந்த பிரச்சனை எல்லாம் பத்தாதுன்னு இப்போ நங்க புது பிரச்சனையை கொண்டு வந்துட்டா இப்ப இந்த சொத்தை காப்பாத்தணும்னா அந்த நங்க இங்க வந்தாகணும்.
அதுக்கு முதல்ல இந்த மாறன தீர்த்து கட்டணும். அவன் தான் எல்லாத்துக்குமே காரணம். அவன் இருக்கிற வரைக்கும் கண்டிப்பா நங்கைய விட்டுக் கொடுக்க மாட்டான்.
என்றார் மாதங்கி.
நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்க என்னவோ பண்ணுங்க என்றபடி தலையில் அடித்துக் கொண்டு வித்யா தன் அறைக்கு சென்றாள்.
அப்போது எதேர்ச்சியாக திரும்ப சத்தியா அங்கே
நின்று இதை அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
இதை கண்ட மாதங்கிக்கும் அன்பரசுக்கும் தூக்கி வாரி போட்டது.

Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -20
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.