Chapter-2

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
அத்தியாயம் 2: இது Action time




சோனியா அவன் முகத்தில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டிவிட்டு மெல்ல அவனது ஆடைகளை கழட்டி அவனது காயங்களை பார்த்துக் கொண்டு இருக்க, எங்கேயோ வெறித்து பார்த்தபடி அமைதியாக சிலை போல அமர்ந்திருந்தான் BB. “ப்ரோ நம்ம பாஸ சுட்டவன உயிரோடவே போக விடக் கூடாது. ஏதாவது பண்ணியே ஆகணும்.” என்று துருவ் அஜய்யிடம் சொல்ல,

“நானும் அத பத்தி தான் டா யோசிச்சிட்டு இருக்கேன். நீ இங்க இருந்து என்ன நடக்குதுன்னு வேடிக்கை மட்டும் பாரு குட்டி பையா..!!” என்ற அஜய் அவன் தோள்களில் தட்டிவிட்டு முன்னே டிரைவர் இருந்த இடத்திற்கு சென்று ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்து “மச்சான் நான் 1, 2, 3ன்னு சொல்லும்போது நீ ஹேப்பி தீபாவளின்னு சத்தமா கத்துடா..
மத்தவங்களையும் கத்த சொல்லு.‌” என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்று கையில் ஒரு சிறிய பெட்டியுடன் வந்தவன் அதில் இருந்த ஏதோ ஒன்றை எடுத்து தங்களது வண்டியை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த போலீஸ்காரர்களின் ஜிப்பை பார்த்து ஒரு flying kiss கொடுத்துவிட்டு “1.. 2.. 3..!!” என்ற அஜய் அவன் கையில் இருந்ததை தூக்கி போலீசாரின் வாகனத்தின் மீது எறிந்தான்.



அவர்களை ஃபாலோ செய்து வேகமாக வந்து கொண்டிருந்த போலீஸ் ஜீப்புகளின் மீது அவன் எரிந்த குண்டுகள் ஒவ்வொன்றாக சென்று விழ, அங்கே டமால்.. என்ற பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது அந்த ஜீப். அப்போது அஜய் சொன்னதைப் போல அவனது ஆட்கள் அனைவரும் கோரசாக “ஹாப்பி தீபாவளி..!!” என்று தங்களது ‌ அடி தொண்டையில் இருந்து கத்தினார்கள். அவர்கள் தங்கள் மீது குண்டுகளை வீசி ‌ தாக்குதல் நடத்துவதை கண்டு ஒரு நொடி பயந்து போன ராகவன் “இல்ல ராகவா.. நீ இப்படி இருக்க கூடாது. பயப்படுறவன் போலீஸ்காரனா இருக்கவே முடியாது. இதுக்கெல்லாம் பயந்து ஓடிப்போய் ஒளிஞ்சிகிறதுக்கு இந்த bomb blastலயே சாகலாம்.” என்று நினைத்தவன் அவனது டிரைவரிடம், “கொஞ்சம் பார்த்து போங்க. இவனுங்களுக்கு பயந்துகிட்டு ஜிப்போட வேகத்தை குறைக்க வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்துல special force team இங்க வந்துருவாங்க. அவங்க வந்துட்டா இவனுங்களால ஒன்னும் புடுங்க முடியாது.” என்று தைரியமாக சொன்னான்.



‌“சார்.. முன்னாடி போன மூணு ஜீப் எப்படி வெடிச்சு சிதறுச்சுன்னு பாத்தீங்கல்ல.. அப்புறம் எந்த தைரியத்துல என்னையும் வேகமா போக சொல்றீங்க? பயமா இருக்கு சார். எனக்கு கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க.” என்று அந்த ஜிப்பின் டிரைவர் பயந்த குரலில் சொல்ல, “உங்களுக்கு அவ்ளோ பயமா இருந்தா அப்படியே கீழே இறங்கி குதிச்சு தப்பிச்சு ஓடிடுங்க. எனக்கு ஜீப் ஓட்ட தெரியும். நான் பாத்துக்குறேன். ஆனா நாளைக்கு முதல் வேலையா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து உங்க ரெசிக்னேஷன் லெட்டர குடுத்துடுங்க. இப்படி ஃபேமிலிய நினைச்சு பயந்து சாகுறவங்களுக்கு எல்லாம் போலீஸா இருக்கிறதுக்கு தகுதியே இல்ல.” என்றான் ராகவன்.



அதனால் அவனுடன் வந்த மற்ற போலீஸ்காரர்கள் அனைவரும் தங்கள் வாயை மூடிக்‌ கொண்டு அந்த பேட் பாய்ஸ் திருடர்கள் கும்பலை எப்படி பிடிப்பது என்று ‌ மும்மரமாக யோசித்துக் கொண்டு இருந்தார்கள். மீண்டும் தன் தலையை ஜன்னல் வழியாக வெளியே விட்டு எட்டிப் பார்த்த அஜய் “இந்த போலீஸ் மாம்சுக்கு தில்லு ஜாஸ்தி தாண்டா..‌ இவ்ளோ பெரிய bomb blast ஐ பார்த்தும் பயப்படாம நம்மள ஃபாலோ பண்ணிட்டு வர்றான் பாரு..!! இந்த நாள இவன் என்னைக்கும் மறுக்கக் கூடாது.” என்று சொல்லிவிட்டு விலத்தனமாக சிரித்தவன், தன் தோள்களில் மாட்டி‌ இருந்த பெரிய துப்பாக்கியை எடுத்து சரியாக குறி பார்த்து ராகவன் வந்த ஜிப்பின் டயரில் இரண்டு முறை சுட்டான். அதனால் அந்த ஜீப் வெடித்து காற்றில் பறக்க, அந்த குண்டு தங்களை நோக்கி வரும்போதே சுதாரித்துக் கொண்ட ராகவன் தனது ஆட்களைப் பார்த்து “Jumppp..!!” என்று கத்தினான்.


அதனால் அவன் உட்பட அதில் வந்த அனைத்து போலீஸ்காரர்களும் வெளியே குதித்து பலத்த காயங்களுடன் உயிர்த்தபினார்கள். அதனால் “இது தாண்டா பக்கா தீபாவளி வெடி.. நாளைக்கு இந்த நியூஸ் தான் இந்தியா ஃபுல்லா பத்திகிட்டு எரிய போகுது..!!” என்று சத்தமாக சொல்லிவிட்டு கலகலவென சிரித்த அஜய் அவனது ஆருயிர் நண்பனான பிக் பாஸுன் அருகே சென்று “நம்மள போடணும்னு நினைச்சு கும்பலா வந்தவங்க எல்லாரையும் ஒரே ஷாட்ல போட்டு தள்ளிட்டேன் டா.” என்று பெருமையாக சொன்னான். அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்த BB “இந்த Game இன்னும் முடியல அஜய். நாம தூக்கிட்டு வந்ததுல இருந்து ஒரு ரூபா கூட மிஸ் ஆகாம இங்க இருந்து நம்ம safe houseக்கு எப்ப நம்ம கொண்டு போறோமோ.. அப்ப தான் இந்த கேம் officialஆ முடியும்.” என்றான்.



“இங்க bomb blast நடந்திருக்கு. ஏற்கனவே அந்த போலீஸ்காரன் கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணி எல்லாரையும் அலர்ட் பண்ணி இருப்பான். இந்த மாதிரி ஒரு சுச்சுவேஷன்ல கீழ விழுந்த பணத்தை போய் கண்டுபிடிச்சு எடுக்க போறீங்களா பாஸ்? It's highly impossible. அதுவும் உங்களுக்கு அடிபட்டு இருக்கும்போது எதுக்கு தேவை இல்லாம ரிஸ்க் எடுக்கணும்...??” என்று சஞ்சய் கேட்க, அவனை முறைத்து பார்த்த BB “உன் பொண்டாட்டிய வேற எவனாவது கடத்திட்டு போய் உன் கண்ணு முன்னாடியே தடவிட்டு இருக்கிறத பார்த்துட்டு.. அவன எதிர்த்து சண்டை போட்டா உன் உயிரு போயிரும்னு நீ பயந்து ஓடி வந்துடுவியா டா..??” என்று கேட்டான்.


“அது எப்படி பாஸ் பயந்து ஓடி வர முடியும்? என்ன இருந்தாலும் அவ என் பொண்டாட்டில.. உசுரை விட அவ தான் முக்கியம். என்ன ஆனாலும் அவளை எப்படி காப்பாத்துறதுன்னு தான் யோசிப்பேன்.” என்று சஞ்சய் வேகமாக சொல்ல, தன் அருகில் பல பணக்கட்டுகள் அடங்கி இருந்த பையைத் திறந்து அதில் இருந்த ஒரு பணக்கட்டை எடுத்து நுகர்ந்து பார்த்த BB “அப்ப எனக்கு இவ தான் பொண்டாட்டி.

என் கைக்கு வந்ததுக்கு அப்புறம், இவ எனக்கு மட்டும் தான் சொந்தம். இவ மேல எந்த #### பையனும் கைய வைக்கிறதுக்கு நான் அலோ பண்ண மாட்டேன்.” என்று திமிராக சொன்னான்.


“போதும் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் அண்ணா. நானே எந்த anaesthesia medicinesம் இல்லாம எப்படி உங்க கையிலயும் கால்லையும் இருக்கிற bullets ஐ வெளியே எடுக்கிறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்... இதுல நிக்காம ப்ளட் வேற வந்துட்டே இருக்கு. உங்களை நினைச்சு நாங்க தான் பயப்படுறோம்.

ஆனா எங்கள பத்தி கொஞ்சம் கூட நீங்க யோசிக்க மாட்டீங்களா..?? இதுக்கு மேல நான் சொல்ற வரைக்கும் நீங்க எங்கயும் போகக் கூடாது. உங்களுக்கு வேணா உங்க இந்த பொண்டாட்டி ரொம்ப முக்கியமா இருக்கலாம். ஆனா எங்களுக்கு நீங்க மட்டும் தான் இம்பார்டன்ட்.” என்று கலங்கிய கண்களுடன் சொன்ன மோனிஷா அவனது கைகளில் இருந்த பணக்கட்டை பிடுங்கி தூரமாக வீசி எறிந்தாள்.


மற்றவர்கள் அனைவரும் அவன் மோனிஷாவை ஏதாவது சொல்லி திட்டி விடுவானோ என்று நினைத்து பயத்துடன் பார்க்க, நம் BB அவளை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் “மோனிக்கு மட்டும் தான் bro நம்ப பாஸ் கொஞ்சம் அடங்கி போறாரு. என் ஆளு அவருக்கு எவ்வளவு ஸ்பெஷல் பாத்தீங்களா..??” என்று பெருமையாக துருவ் அஜய்யிடம் சொல்ல, அவன் தோள்களில் கை போட்ட அஜய் “அவன் தம்பியே இவன் இப்படி இருக்கிறது பிடிக்காம அவன விட்டு ஒதுங்கிப் போனதுக்கு அப்புறமும், அவன் தங்கச்சி என்ன ஆனாலும் நான் அண்ணன் கூட தான் இருப்பேன்னு சின்ன வயசிலேயே அவன் கூட வந்து நின்னவ டா... அப்புறம் மோனி எப்படி அவனுக்கு ஸ்பெஷலா இல்லாம இருப்பா..??” என்று கேட்டான்.



அதற்கு லேசாக சிரித்த துருவ் “ஆமாமா.. அவருக்கு மட்டும் இல்ல என் மோனி எனக்கும் ரொம்ப ஸ்பெஷல் தான்.” என்று சொல்லிவிட்டு அவளை காதலுடன் பார்த்தவன் “ஏன் ப்ரோ.. after all money.. அது மேலேயே இவர் இப்படி பைத்தியமா இருக்காரே.. இவருக்கு ஏதாவது ஒரு பொண்ணு மேல லவ் வந்தா என்ன ஆகுறது..?? அப்படி ஒரு சம்பவம் நடந்தா, மோனியும் அந்த பொண்ணும் சண்டை போட்டுக்கிட்டா நம்ம தலையோட நிலைமைய நினைச்சு பாருங்க..!! வாவ்.. அதெல்லாம் நெனச்சு பாக்கவே சூப்பரா இருக்கு.. அந்த சம்பவம் எப்ப நடக்குமோ தெரியல..!!” என்று சொல்ல, தன் நண்பனை ஒரு பார்வை பார்த்த அஜய் “அதெல்லாம் சீக்கிரமா நடக்கும்னு தான் நினைக்கிறேன். ஆனா அது நடக்கும்போது, சண்டை மோனிக்கும் அந்த பொண்ணுக்கும் நடுவுல வருமா, இல்ல உங்க அண்ணனுக்கும் அந்த பொண்ணுக்கும் நடுவுல வருமான்னு அந்த கடவுளுக்கு தான் டா தெரியும்.” என்றான்.



அப்போது குறுக்கு பாதை வழியாக தங்களது ஜிப்பில் வந்த சில போலீஸ்காரர்கள் அவர்களை ‌ சுற்றி வளைத்து தங்களது துப்பாக்கியால் அவர்களது வண்டியை சரமாரியாக சுடத் தொடங்கி இருக்க, “சீக்கிரம் சீக்கிரம் எல்லாரும் உங்க Guns ஐ எடுத்துகிட்டு பொசிஷன்ல போய் நில்லுங்க. நிறைய பேர் வந்தாங்கன்னா மறுபடியும் அவங்க மேல bombs ஐ‌ தூக்கி போட்டுட்டு அவங்க சுதாரிக்கிறதுக்குள்ள எஸ்கேப் ஆயிடனும்.” என்ற அஜய் அனைவரையும் அவசர படுத்தினான்.

பின் தானும் தனது ‌ துப்பாக்கியோடு சென்று அந்த கண்டெய்னர் வேனின் கதவைத் திறந்து அவனுக்கு எதிரில் வந்தவர்கள் அனைவரையும் இரக்கமின்றி சுட்டுக் கொன்றான். பதிலுக்கு போலீசார்களும் அவர்களை சுட முயற்சி செய்ய, அந்த இடம் முழுவதும் டபால் டுமில் என்று குண்டு வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்க, அவர்களை சுற்றி குண்டு மழை பொழிந்தது.



ஒரு கத்தியை கொண்டு வந்து தனது அண்ணனின் தோள்பட்டையில் வைத்த மோனிஷா அதை வைத்து அவனது குண்டை எடுக்க மனம் வராமல் “நான் எப்படி உங்களை கத்தியால குத்துவேன்? அதுவும் மயக்கம் மருந்து கூட இல்ல.. ஏன் அண்ணா இவ்ளோ careless ஆ இருக்கீங்க?” என்று கேட்க, அவளைப் போலவே சோனியாவும் நமது பிக்பாஸை பார்த்து அழுதபடி நின்றாள். சோனியாவின் கண்கள் அவனை
த் தவிர வேறு யாருக்காகவும் இதுவரை கலங்கியதே இல்லை.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-2
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.