Chapter-2

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
அத்தியாயம் 2: நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா...???



தங்கள் சொந்த ஊரில் இருந்து கரூருக்கு வந்த பிரியா, தன்னுடைய அம்மாவை டாக்டர் சுவாமிநாதன் சித்த வைத்திய சாலையின் அட்மிட் செய்துவிட்டு, வெளியே வந்து தன் தம்பியோடு பேசி கொண்டிருந்தாள்.

அப்போது ராகுல் “அம்மாவ ஹாஸ்பிடலில்ல அட்மிட் பண்ணியாச்சு. நெக்ஸ்ட் என்ன செய்ய போறோம்..?? எங்க போக போறோம்..??" என்று பிரியாவிடம் கேட்க..

சலிப்புடன் சென்று அந்த மருத்துவமனைக்கு அருகில் பூட்டி இருந்த ஒரு வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்த பிரியா, ராகுலை தன் அருகில் வந்து உட்காருமாறு சைகை செய்து அழைத்தாள்.

ராகுல் அவள் அருகே சென்று அமர்ந்ததும் அவனுடைய தோளில் ஆதரவுக்காக சாய்ந்த பிரியா, “நோ ஐடியா ராகுல். பட் வி‌ ஹவ் டு டூ சம்திங்" என்றாள். அவள் சொன்னதை கேட்டதும் அவசரமான குரலில், “சாரி பிரியா" என்றான் ராகுல்.

அவனுடைய தோளில் சாய்ந்திருந்த பிரியா நேராக அமர்ந்து அவனுடைய முகத்தை பார்த்து, “இப்ப எதுக்கு டா தேவை இல்லாம சாரி கேக்குற..??" என்று கேட்டாள் குழப்பமாக.

“நான் ஒருத்தன் உன் கூட இருக்கேன்னு தான் பேரு; ஆனா நான் உனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ணல. சிங்கிள் லேடியா இருந்து எல்லாத்தையும் நீதான் ஹான்டில் பண்ணிட்டு இருக்க...!! நான் யூஸ்லெஸ் ஃபெல்லோ ஆ இருக்கேன்." வருத்தத்துடன் சொல்லிவிட்டு தன் தலையை கீழே குனிந்து கொண்டான் ராகுல்.

ராகுலின் தாடையை பிடித்து அவன் தலையை தன் ஒற்றை கையால் உயர்த்திய பிரியா, “நீ இப்டி தான் உன்ன பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கியா ராகுல்..?? எனக்கு புரியுது, நம்மளோட சிச்சுவேஷன் சரி இல்ல தான். பட் நம்ம இப்படியே இருந்துட்டு இருக்க மாட்டோம்.

எல்லாமே தானா சரி ஆயிடும்னு நம்ம எல்லாத்தையும் பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது.

நமக்காக நம்ம தான் ஏதாவது பண்ணனும். நீ இப்படி உன்ன பத்தியே நெகட்டிவா யோசிக்கிற அளவுக்கு மெண்டலி வீக் ஆய்டியா என்ன...?? நம்ம அப்பா, அம்மா நம்மள எப்டி வளர்த்தாங்கன்னு மறந்துருச்சா உனக்கு...??

நீ என் கூட இருக்கிறதே வேஸ்ட்ன்னு நினைக்கிற. ஆனா இந்த சிடுவேசன புரிஞ்சுகிட்டு என் தம்பி என் கூட சப்போர்ட்டிவ் ஆ இருக்கான்னு நான் நினைக்கிறேன். எல்லாமே கரெக்டா இருக்கும்போது நம்ம கரெக்டா இருக்கிறது பெருசில்ல டா. எல்லாமே அவுட் ஆப் கண்ட்ரோல்ல போகும்போதும் கரெக்டா யோசிக்கணும்.

நம்மளோட வீக் ஏமோஷன்ஸ் கிட்ட நம்மளே இன்புளுயன்ச் ஆகிர கூடாது. அடுத்து என்னான்னு அத பத்தி தான் யோசிக்கணும். புரிஞ்சுதா..??" என்றாள்.

”எஸ் அக்கா." என்றான் ராகுல்.

அவன் இப்போது பேசும் விதம் அவளுக்கு புதிதாக இருந்தது.

அதனால், “என்ன டா அதிசயமா அக்கானுலாம் கூப்பிடுற..??" என்று ஆச்சரியமாக கேட்டாள் பிரியா.

“உன்ன இப்ப பாக்குறப்ப அம்மாவ பாக்குற மாதிரியே இருக்கு பிரியா அதான்." என்றான் ராகுல் உணர்ச்சிவசப்பட்டு.

“ஓகே..!!! ஓகே...!!! எல்லாமே ஒரு நாள் சரியாயிடும்னு நம்புவோம்", என்று உறுதியாக சொல்லிவிட்டு அவனை பார்த்து, “இப்ப சொல்லு ராகுல்...!!! நம்ம என்ன பண்ண போறோம்...??? என்று கேட்டாள் பிரியா.

“நல்ல ரெஸ்டாரன்ட் ஆ பார்த்து போய் சாப்பிட்டு வந்துதுராலம் பிரியா. ரொம்ப பசிக்குது." என்றான் ராகுல்.

“அப்போ நான் பஸ் ஸ்டாண்ட்ல வாங்கி குடுத்த ஸ்னாக்ஸ நீ சாப்பிடலையா..???" என்று கேட்டாள் அவள்.

இல்லை என்று தலையாட்டிய ராகுல், “நான் தண்ணி மட்டும்தான் குடிச்சேன்." என்று தன்னுடைய முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு சொன்னான்.

“சரி வா. எனக்கும் பசிக்குது. பக்கத்துல எதாவது ரெஸ்டாரன்ட் இருக்கான்னு பார்க்கலாம்." என்று சொல்லி கொண்டே, அந்த திண்ணையில் இருந்து எழுந்தவள், ராகுலின் கையோடு தன்னுடைய கையை கோர்த்து கொண்டு நடக்க தொடங்கினாள் பிரியா.

சிறிது தூரம் பிரியாவின் கையை பிடித்து கொண்டு நடந்து சென்று கொண்டு இருந்த ராகுல், “ஹே. பிரியா..!! அங்க பாரு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு." என்றான்.

ராகுல் காட்டிய திசையில் திரும்பி பார்த்தாள்‌‌ அவள். அங்கே ஒரு நடுத்தர உணவகம் இருந்தது.

அந்த உணவகத்திற்கு மேலே மாட்டப்பட்டு இருந்த போர்டை பார்த்த பிரியா, “ இசை வெஜ் அண்ட் நான்வெஜ் ரெஸ்டாரண்ட்" என்று எழுத பட்டு இருந்த அந்த உணவகத்தின் பெயரை படித்தாள்.

பின், “சரி வா..!! இங்கயே போய் சாப்பிடலாம்,. பாக்குறதுக்கும் இந்த ரெஸ்டாரன்ட் டீசண்டா தான் இருக்கு. பிரைஸும் ஆப்பார்டேபில் ஆ தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்." என்று சொல்லி கொண்டே ராகுலையும் கூட்டி கொண்டு அந்த ரெஸ்டாரன்டை நோக்கி நடந்தாள் பிரியா.

இவர்கள் அந்த ரெஸ்டாரண்டை நோக்கி நடந்து கொண்டு இருக்க...

அந்த ரெஸ்டாரன்ட்டின் மேல் மாடியில்...

கிரீன் டீ சர்ட் மற்றும் ஐஸ் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்த இளைஞன் கீழே ரோட்டை பார்த்த படி, பால்கனியில் நின்று கொண்டு அதன் கைப்பிடி சுவற்றில் தன் இரு கைகளையும் ஊன்றியபடி நின்று கொண்டு இருந்தான்.

அவன் தன் காதில் இயர்போன் அணிந்து, தனது மொபைல் ஃபோனில்..

“என்னோடு நீ இருந்தால்..‌

உயிரோடு நான் இருப்பேன்.” என்ற பாடலை ப்ளே செய்துவிட்டு அதை கேட்டு கொண்டு‌ தானும் தன் கண்களை மூடி அந்த பாடலுள் தொலைந்து போனவனாய்... அந்தப் பாடலுடன் சேர்ந்து அவனும் பாடிக் கொண்டு இருந்தான்.

அந்த பாடலின் வரிகளில் இருந்த வலி, அவனுடைய மனதிலும் இருந்ததால், அவன் குரலிலேயே வெளிப்படையாக அவனது சோகம் தெரிய, அவன் அந்த பாடலோடு ஒன்றி இருந்தான்.



என்னை நான்...

யாரென்று சொன்னாலும்..

புரியாதே என் காதல் நீ என்று.

யாருக்கும் தெரியாதே....

நீ கேட்டால் உலகத்தை நான்

வாங்கி தருவேனே...

நீ இல்லா உலகத்தில்...

நான் வாழ மாட்டேனே...

என்னோடு நீ இருந்தால்...



இந்த வரிகளை தன் காதுகளில் இயர்போன் மூலம் கேட்டு கொண்டே கண்ணீர் நிறைந்த கண்களோடு பாடி கொண்டு இருந்தவன், தன் கண்களை திறக்க... அவனுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்... அவனது கன்னத்தை நினைத்து கீழே சரிந்தது.



அப்போது சரியாக அந்த நேரத்தில் அந்த உணவகத்திற்குள் நுழையவிருந்த பிரியாவின் முகத்தில் அவனின் அந்த கண்ணீர் துளி விழுந்தது.

அதனால் “என்ன மழையா பேயுது..?? என்பதை போல பிரியா அண்ணாந்து வானத்தை பார்க்க; தனது உணவகத்திற்குள் சென்று கொண்டு இருந்த பிரியாவை பார்த்த அந்த இளைஞனின் இதயம் ஒரு நிமிடம் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் நின்று துடித்தது.



“பிரியா... மேல பாத்துட்டே போய் கீழே விழுந்துராத." என்ற ராகுலின் குரல் கேட்டு, அவனை பார்த்து திரும்பிய பிரியா மேலே இருந்து அவளை பார்த்து கொண்டு இருந்தவனை கவனிக்கவில்லை.

ஆனால் அவனோ, ஏற்கனவே பிரியாவை பார்த்து அதிர்ந்து போய் இருந்தவன், ராகுலின் குரல் கேட்டு அவள் அருகில் அவனும் நிற்பதை பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்குகே போய் விட்டான்.

பதட்டத்தில் அவனுடைய மொபைல் ஃபோனை கீழே தவறவிட இருந்தவன், நிதானத்துக்கு வந்து அவனது மொபைல் ஃபோனை கீழே விழாமல் பிடித்து காப்பாற்றினான்.

அவன் நிதானத்திற்கு வந்து திரும்பி கீழே எட்டி பார்ப்பதற்குள்; பிரியாவும், ராகுலும் அந்த உனவகதின் உள்ளே சென்று இருந்தனர்.

ரெஸ்டாரன்ட்டுக்கு உள்ளே வந்த ராகுலையும், பிரியாவையும், அங்கே இருந்த நடுத்தர வயது பெண்மணி உள்ளே வரவேற்று அங்கே இருந்த டைனிங் டேபிளுக்கு அருகே இருந்த நாற்காலியை இழுத்து போட்டு, இருவரையும் அமர செய்தாள்.

அந்த பெண்மணி வந்தவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பதற்குள்; மேல் மாடியில் இருந்த இசை பிரியன் “ஜீவா...!!! ஜீவா... !!!" என்று கத்தி கொண்டே தலைதெறிக்க கீழே ஓடி வந்தான்.

ராகுலிடமும், பிரியாவிடமும் பேசி கொண்டு இருந்த கவிதா, பதட்டத்துடன் வேர்த்து விறுவிறுத்து ஓடி வந்து கொண்டிருந்த இசை பிரியனை பார்த்து அதிர்ச்சியுடன், “என்னாச்சு தம்பி..?? ஏன் இவ்ளோ அவசரமா போடி வர்றீங்க..!!” என்று கேட்டு முடிப்பதற்குள்; அந்த உணவகத்தின் சமையல் அறையில் சமைத்து கொண்டு இருந்த இசை பிரியனின் நண்பன் ஜீவா, “எதுக்கு டா இப்போ என் பேர இப்டி கத்தி ஏலம் விட்டுட்டு இருக்க...??" என்று கேட்டு கொண்டே அங்கே வந்தான்.

அவனும் பிரியாவை பார்த்து இசை பிரியனை போல் அதிர்ச்சி அடைந்தான். இங்கே என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல்; கவிதாவும், பிரியாவும், ராகுலும் அமைதியாக நின்று கொண்டு இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு இருந்தனர்.

இசை எதுவும் பேசாமல் பிரியாவையே பார்த்து கொண்டு இருந்தான்.

இசை பிரியனின் அருகே சென்ற ஜீவா, “டேய் இசை...!! இந்த பொண்ணு...!!! இந்த பொண்ணு... !! யாழினி தானே. .??" என்று ராகுலின் அருகில் நின்றிருந்த பிரியாவை கை காட்டி கேட்க; குழப்பத்துடன் பிரியாவும், ராகுலும் அவர்கள் இருவரையும் மாறி.. மாறி பார்த்து வைத்தனர்.

பிரியா ராணி நான் யாழினி இல்லை என்று சொல்ல வருவதற்குள்; முந்திக் கொண்ட ராகுல், “இவ பேரு யாழினி இல்ல. அண்ட் எங்களுக்கு யாழினின்னு யாரையும் தெரியாது; இவ என் அக்கா பிரியா." என்றான்.

இப்போது குழம்புவது ஜீவாவின் முறையாகிவிட்டது. என்னங்க டா நடக்குது இங்க..?? என்பதை போல், அவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான் ஜீவா.

அதே குழப்பத்துடன் இசையை திரும்பி பார்த்த ஜீவா, “அப்ப இந்த பொண்ணு நம்ம யாழினி இல்லையா டா..??" என்று ஷாக் ஆகி கேட்டான்.

“இல்ல டா." என்று மெதுவான குரலில் அவனிடம் சொன்ன இசை, பின் சிறிதும் யோசிக்காமல், “ஹாய் பிரியா..!! ஐ அம் இசை பிரியன். வில் யூ மேரி மீ..??" என்
று உடனே பிரியாவை பார்த்து கேட்டான்.

இதை கேட்ட பிரியா, வாயடைத்து போய் விட்டாள்‌.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-2
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.