யாழினி சங்கர், சுவாதி தினேஷ் என அனைவரும் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். வழக்கம்போல இப்போதும் சங்கர் தன் காதல் மனைவி யாழினியை குழந்தை போல தாங்க, ஒரு பக்கம் தினேஷ் தன்னுடன் ஒருத்தி அந்த வீட்டில் தனது மனைவியாக தங்க வந்திருக்கிறாள் என்ற எண்ணமே இல்லாமல் அவன் பாட்டிற்கு இவளை கண்டுகொள்ளாமல் தனது வேலையில் மூழ்கி இருந்தான். சாப்பிட்டு முடித்துவிட்டு அவன் தனது தட்டில் கை கழுவி விட்டு அதை கீழே வைத்துவிட்டு அவனது ரூமிற்கு சென்றுவிட, அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த சுவாதி “இவனுக்கு என்ன அவ்ளோ திமிரு? எல்லாரும் தானே வேலை செஞ்சோம்! அப்ப எல்லாருக்கும் தான் டயர்டா இருக்கும். சங்கர் நாங்க இன்னைக்கு இங்க வந்து ஃபர்ஸ்ட் டே என்றதுனால ஏதோ எங்களை கெஸ்ட் மாதிரி ட்ரீட் பண்ணிட்டு இருக்காரு.
அவர் ரொம்ப எதார்த்தமான ஆளு. இப்படி தினேஷ் மாதிரி எனக்கு என்னனு இல்லாம இது நம்ம வீட்டு வேலை. இங்க இருக்கிறவங்க எல்லாரும் நம்ம ஆளுங்க தானேன்னு நினைச்சு இதுவரைக்கும் யாழினிக்கு வேலை செஞ்ச மாதிரி, எனக்கும் தினேஷுக்கும் கூட செய்வாரு. ஆனா நமக்கு மனசாட்சி வேணும்ல? அந்தத் தட்டை கழுவலைனா கூட பரவால்ல. கொண்டு போய் கிச்சன் சிங்கிலயாவது போடலாம்ல? இவர் பாட்டுக்கு வருவாரு.. சாப்பிடுவாரு.. போவாரு. இவர் பின்னாடியே வேலைக்காரங்க மாதிரி சுத்திட்டு இருந்து மத்தவங்க இவருக்கு வேலை செய்யணுமா?” என்று நினைத்து சலித்துக் கொண்டவள், அவள் சாப்பிட்ட தட்டையும் தினேஷ் வைத்துவிட்டு சென்ற தட்டையும் எடுத்துக் கொண்டு கிச்சனுக்கு சென்றாள்.
அதற்குள் ஷங்கரும் யாழினியும் சாப்பிட்டு முடித்து விட, காலியாக இருந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் கிச்சன் சிங்கில் போட்டு கழுவ தொடங்கினாள் சுவாதி. தினேஷை போலவே தானும் தனது தட்டில் அப்படியே கை கழுவி விட்டு அவளது ரூமிற்கு சென்ற யாழினி இருந்த களைப்பில் அப்படியே கட்டிலில் விழுந்து ஒரு நொடியும் தாமதிக்காமல் கண்களை மூடி உறங்கி விட்டாள். தங்கள் இருவரின் தட்டுகளையும் எடுத்துக்கொண்டு நேராக கிச்சனுக்கு சென்ற ஷங்கர் அங்கே வியர்த்து வடிய சுவாதி பாத்திரம் கழுவிக் கொண்டு இருப்பதை பார்த்தான். அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு வந்து முழுதாக ஒரு நாள் கூட ஆகாததால் அதற்குள் சுவாதி இந்த மாதிரி வேலைகள் எல்லாம் செய்வது அவனுக்கு ஏதோ கொஞ்சம் கஷ்டமாக இருக்க, “நீ ஏன் மா பாத்திரம் கழுவிட்டு இருக்க? எப்பயும் தூங்குறதுக்கு முன்னாடி நானே எல்லா பாத்திரத்தையும் கழுவிடுவேன். இந்த கிச்சன்ல ஒரு பொண்ணு நின்னு எனக்கு பதிலா வேலை செய்றதை பார்க்க ரொம்ப புதுசா இருக்கு. நீ போய் தூங்கு போ, நான் பாத்துக்குறேன்.” என்றான் சங்கர்.
“இல்ல சங்கர் நாங்க இங்க கெஸ்ட்டா வரல. இது நம்ம வீடு. நம்ம வீட்டு வேலையை நம்மதான் செய்யணும். நான் தான் இங்க வர்றதுக்கு முன்னாடியே சொன்னனே.. எல்லாத்தையும் நம்ம ஷேர் பண்ணிக்கலாம்னு! வீட்டு வேலையும் அப்ப அப்படித் தானே.. இத்தனை நாளா நீங்க தானே இந்த வேலையை எல்லாம் பாத்துட்டு இருந்தீங்க.. இப்ப நான் வந்துட்டேன்ல.. இனிமே எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.” என்ற ஸ்வாதி ஏற்கனவே அவள் தேய்த்து வைத்திருந்த பாத்திரங்களை கழுவி அருகிலுள்ள கிச்சன் slapல் வைத்தாள். அதனால் அவள் கையை பிடித்து அந்த இடத்தை விட்டு நகர்த்திய சங்கர் “நீ சொல்றது எல்லாம் சரிதான் மா, நான் இல்லைன்னு சொல்லல. இது உங்க வீடு தான். பட் நீங்க இன்னிக்கு தானே இங்க வந்திருக்கீங்க.. அதுக்குள்ள ஏன் இதெல்லாம் பண்ற? நேத்துதான் உங்களுக்கு மேரேஜ் ஆகிருக்கு. இன்னைக்கு காலையில இருந்து டிராவல்லயே போயிடுச்சு.
இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். நீ இப்ப போய் தினேஷை பாரு. உனக்காக அவர் அவர் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு. இன்னும் கொஞ்சம் தானே இருக்கு.. அதை நான் வாஷ் பண்ணிக்கிறேன். நீ கிளம்பு.” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டான்.
சங்கர் அப்படி சொன்னதால் “நேத்து பாதியில ஸ்டாப் ஆனது இன்னைக்கு கண்டினியூ ஆகுமா?” என்று நினைத்து ஆசையுடன் தனது ரூமிற்கு சென்றாள் சுவாதி. அங்கே தினேஷ் ஒரு shortsஐ மட்டும் அணிந்து கொண்டு தலையணையை கட்டி பிடித்தவாறு நன்றாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அதை பார்த்தவுடன் அவளுக்கு வழக்கம்போல சப்பென்று ஆகிவிட, “ஆமா.. இவன் அப்படியே எனக்காக வெயிட் பண்ணி கிழிச்சுருவான். என்ன பண்ணி தொலையறது? மத்தவங்க எல்லாம் என்னால முடியல. எனக்கு வேண்டாம்னு புலம்புறாங்க. அவங்களுக்கு unlimitedஆ கிடைக்குது.
எனக்கு மட்டும் எல்லாமே நடந்தாலும், ஒண்ணுமே நடக்காத மாதிரியே இருக்கே.. நான் இங்க இன்னும் கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா கொஞ்சம் பெட்டரா இருந்தா பரவாயில்லையேன்னு நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். பட் எனக்கு வந்து வாய்ச்சது இப்படி இருக்கு. எல்லாம் என் நேரம். வேற என்ன சொல்றது?” என்று நினைத்த சுவாதி டோரை லாக் செய்துவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
தினேஷ் அவளது தலையணையை விடாமல் இறுக்கிப்பிடித்துக் கொண்டு இருக்க, அவளுக்கு கடுப்பாக இருந்தது. அதனால் “போடா பைத்தியக்காரா.. கட்டுன பொண்டாட்டி பக்கத்துல இருக்கும்போது அவளை கட்டி பிடிச்சு எதுவும் பண்றதுக்கு துப்பில்லை.. தலவாணியை போய் கட்டிப்பிடிச்சு தூங்கிட்டு இருக்கான். ஐயோ.. ஐயோ.. இந்த கொடுமைய எல்லாம் நான் எங்க போய் சொல்றது..??” என்று நினைத்து தன் தலையில் அடைத்துக் கொண்டு அவனிடம் இருந்த தலையணையை வெடுக்கென பிடுங்கி தன் தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்தாள். அப்போதும் கூட அசையாமல் தினேஷ் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
அங்கே யாழினி குழந்தை போல தனது கால்களை குறுக்கிக்கொண்டு அழகாக படுத்து தூங்குவதை கண்டு ரசித்த சங்கர் “சாரி யாழு.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு எனக்கே தெரியும். நான் என்ன பண்றது...?? உன்ன பார்த்தாலே என்னை என்னால கண்ட்ரோல் பண்ண முடிய மாட்டேங்குது டி. அதான் என்னை மீறி நான் ஏதாவது பண்ணிடுறன். பட் அது உன்னை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்துதுன்னு நான் யோசிக்காம விட்டுட்டேன். But இனிமே நான் அப்படி இருக்க மாட்டேன். உன்ன எப்பவுமே ஹாப்பியா வச்சுக்கணும்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணிட்டு, நானே இப்படி பண்ணி உன்னை ஹர்ட் பண்றதுல எனக்கு விருப்பமில்லை. இனிமே இந்த விஷயத்துல நீ சொல்றது தான் எல்லாமே. உனக்காக நான் என்ன மாத்திக்கிறேன்.” என்று நினைத்து அவள் அருகில் சென்று அவளை அனைத்தவாறு படுத்துக் கொண்டான்.
இத்தனை வருடங்களாக அவனுடன் பழகிய யாழினிக்கு அவன் தன்னைத் தொடும்போது அதில் என்ன உணர்வு இருக்கிறது என்று கூடவா புரியாது? அதனால் அவன் சொல்லாமலே அவன் மன மாற்றம் அவளுக்கும் புரிந்து விட்டது போல.. அந்த தூக்கத்திலும் அவனது அணைப்பால் அவன் பக்கம் திரும்பி தானும் அவனை அணைத்துக் கொண்டு படைத்தாள். அதனால் மகிழ்ந்த சங்கர் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து “லவ் யூ யாழு!” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு தன் கண்களை மூடினான்.
மறுநாள் காலை..
புது இடம் என்பதால் சரியாக தூக்கம் வராமல் இரவு முழுவதும் புரண்டு படுத்திக் கொண்டு இருந்த சுவாதி விடியற்காலையில் தான் தூங்கினாள். இருப்பினும் கொஞ்ச நேரத்திலேயே அவளுக்கு முழிப்பு வந்துவிட, எழுந்து அவள் நேரத்தை பார்க்கும்போது சரியாக 5:46 மணி ஆகியிருந்தது. அதனால் “இதுக்கு மேல தூங்கி என்ன பண்றது? ஆபீஸ்க்கு போகணும். சமைக்கணும். எவ்ளோ வேலை இருக்கு! இந்த தினேஷ் வேற.. நிறைய டிரஸ் துவைக்காம வச்சிருக்கான். அதையெல்லாம் துவச்சு நான் குளிச்சு கிளம்பி டிபன் செஞ்சு சாப்பிட்டு அப்புறம் லஞ்ச் வேற செஞ்சு எடுத்துட்டு போகணும். சப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே..!!” என்று நினைத்து அவசர அவசரமாக ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு அனைத்து துணிகளையும் எடுத்துக் கொண்டு அவளது அறையில் தனியாக பாத்ரூம் இல்லை என்பதால் “யாழினி ரூம்ல போய் தான் துவைக்க முடியுமா? ச்சே.. அவங்க ரூம்ல இருக்கிற மாதிரி எங்க ரூம்ல அட்டாச்ட் பாத்ரூம் இல்லையே.. இத பத்தி நான் யோசிக்காம விட்டுட்டேன். அவங்க கிட்டையும் எதுவுமே முன்னாடியே கேட்காம விட்டுட்டு இப்ப என்ன பண்றது?” என்று யோசித்து தயங்கி நின்ற சுவாதிக்கு அப்போதுதான் நேற்று இரவு பால்கனி பக்கம் இன்னொரு பாத்ரூம் இருப்பதாக சொல்லி அதை அவர்களை பயன்படுத்திக்கொள்ள சொல்லி சங்கர் சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது.
அதனால் கையில் துணி மூட்டையுடன் அங்கே சென்றாள் ஸ்வாதி. அவன் சொன்னதைப் போலவே அங்கே ஒரு பாத்ரூமும் அதன் அருகில் ஒரு வாஷிங்மெஷினும் இருந்தது. அதை பார்த்த உடனேயே அவளுக்கு அப்படி ஒரு நிம்மதி. “நல்லவேளை வாஷிங் மெஷின் இருக்கு. இதுல டிரஸ போட்டுட்டு இது துவச்சு அலசி கொடுக்குறதுக்குள்ள நம்ம போய் குளிச்சிட்டு வந்துடலாம்.” என்று நினைத்து சந்தோஷப்பட்டு துணிகளை அதில் போட்டுவிட்டு தனது அடுத்தடுத்த வேலைகளை பார்க்க சென்றாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com

Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-19
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.