CHAPTER-19

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
அந்த‌ அட‌ர்ந்த‌ காட்டிற்கு ந‌டுவில் உள்ள‌ சிவ‌ன் கோவிலுக்கு சென்ற‌ ச‌ந்ரா, அங்கு சிவ‌ப்பெருமானிட‌ம் த‌ன் ம‌ன‌தில் உள்ள‌ அனைத்து கேள்விக‌ளையும் கேட்டுக்கொண்டிருக்க‌, மேலும் அவ‌ரிடமிருந்து ப‌தில் வ‌ராத‌தால், "என்னோட‌ காத‌லுக்காக‌தான‌ நா ம‌றுஜென்ம‌ம் வேணுன்னு கேட்டேன். நீங்க‌ எதுக்காக‌ என் காத‌லோட‌ எதிரியையும் சேத்தே பொற‌க்க‌ வெச்சிருக்கீங்க‌? இப்ப‌ வ‌ரைக்கும் நா அவ‌ங்கூட‌வே இருக்குற‌ சூழ்நிலைய‌ எதுக்காக‌ உருவாக்கியிருக்கீங்க‌? போன‌ ஜென்ம‌த்துல‌ நீங்க‌ மாறும்னு சொன்ன‌ அந்த‌ க‌த‌தா என்ன‌? அது எதுக்காக‌ மாற‌ணும்? என‌க்கு ப‌தில் வேணும் ஈஷ்வ‌ரா." என்று ஆத‌ங்க‌மாக‌ க‌த்த‌,

"அமிர்த்தா!" என்ற‌ ஒரு குர‌ல் ஒலித்த‌து.

அது அமைதியான‌ அந்த‌ கோவிலின் அனைத்து மூலைக‌ளிலும் ஒலிக்க‌, அதை கேட்டு அதிர்ந்து திரும்பினாள் ச‌ந்ரா. திரும்பிய‌ அடுத்த‌ நொடியே அவ‌ள் அதிர்ந்து நிற்க‌,

"நீ கேக்குற‌ எல்லா கேள்விக்கும் என‌க்கு ப‌தில் தெரியும்." என்று கூறியப‌டி அவ‌ளை நோக்கி வ‌ந்தான் அபி.

அவ‌னை பார்த்து அதிர்ந்து நின்ற‌ ச‌ந்ரா, "அபி! நீ..நீங்க‌ என்ன‌ அமிர்த்தான்னா கூப்புடீங்க‌?" என்று கேட்க‌,

அபி, "நா இந்த‌ ஜென்ம‌த்துலதா அபி. ஆனா எப்ப‌வுமே உன்னோட‌ ஆதிதா அமிர்த்தா." என்று அவ‌ள் தோள்க‌ளை ப‌ற்றி கூற‌, உட‌னே அவ‌னை அணைத்துக்கொண்டு க‌ண்ணீர்விட்ட‌ ச‌ந்ரா, "ஆதி! நா உன்ன‌ ரொம்ப‌ மிஸ் ப‌ண்ணேன். உன்ன‌ பாக்குற‌துக்காக‌ ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டேன். ஆனா உன‌க்கு எல்லா ஞாப‌க‌ம் வ‌ந்திருச்சா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌னும் அவ‌ளை அணைத்த‌ப‌டி, "உன‌க்கு முன்னாடியே என‌க்கு எல்லாமே ஞாப‌க‌ம் வ‌ந்திரிச்சு." என்றான்.

அதை கேட்டு கேள்வியுட‌ன் அவ‌னைவிட்டு வில‌கிய‌ ச‌ந்ரா, "என்ன‌ சொல்ற‌ ஆதி? என‌க்கு முன்னாடியேவா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அபி அவ‌ளைவிட்டு திரும்பி ச‌ற்று ந‌ட‌ந்த‌ப‌டியே அந்த‌ உண்மையை கூற‌ ஆர‌ம்பித்தான். "நா ஒரு முக்கிய‌மான‌ வேலையா, இந்த‌ காட்டுக்குள்ள‌ இருக்குற‌ சிவ‌ன் கோவில க‌ட‌ந்து, இதே ரோட்டுல‌ காருல‌ போய்கிட்டிருக்கும்போது, இந்த‌ கோவில் ம‌ணி ச‌த்த‌ம் என்ன‌ என்ன‌மோ ப‌ண்ணுச்சு. அது என்ன‌ க‌ட்டி இழுக்குற‌ மாதிரி இருந்த‌து. அத‌னால‌தா நா அந்த‌ கோவிலுக்குள்ள‌ போனேன். அங்க‌ போன‌துக்கு அப்றோ, என‌க்கு என்னென்ன‌மோ விஷிய‌ங்க‌ள் தெறிய‌ அர‌ம்பிச்ச‌து. அதுக்க‌ப்றோ, என்னோட‌ த‌ல‌ ப‌ய‌ங்க‌ர‌மா வ‌லிச்ச‌து. த‌ல‌ வ‌லியில‌ நா அங்க‌ இருந்து த‌டிக்‌கி விழுந்து, என்னோட‌ த‌லையில‌ ப‌ய‌ங்க‌ர‌மா அடிப்ப‌ட்டு நா ம‌ய‌ங்கிட்டேன். நா ம‌ய‌க‌த்துல‌ இருக்கும்போதுதா, என்னோட‌ பூர்வ‌ ஜென்ம‌த்த‌ நா முழுசா பாக்க‌ ஆர‌ம்பிச்சேன். அதுக்க‌ப்ற‌ந்தா என‌க்கு எல்லாமே ஞாப‌க‌ம் வ‌ந்துச்சு. அன்னியிலிருந்துதா நா உன்ன‌ தேட‌ ஆர‌ம்பிச்சேன். அதுக்க‌ப்ற‌ம் நேத்து உன்ன‌ கோவில்ல‌ பாத்த‌தும் நீதா, என்னோட‌ அமிர்த்தான்னு என‌க்கு புரிஞ்ச‌து." என்று அனைத்தையும் ஐந்து நிமிட‌த்தில் கூறிவிட‌, இவ்வ‌ள‌வு பெரிய‌ விஷ‌ய‌த்தை இவ‌ன் இவ்வ‌ள‌வு எளிதில் சொல்லிவிட்ட‌தை எண்ணி இவ‌ளுக்கு ச‌ற்று வியப்பாக‌வே இருந்த‌து.

ஆனாலும் அவ‌ற்றை எண்ணி ம‌கிழ்ந்த‌ ச‌ந்ரா, "என‌க்கு ரொம்ப‌. ச‌ந்தோஷமா இருக்கு ஆதி. இவ்ளோ சீக்கிர‌ம் என‌க்கும் உன‌க்கும் எல்லாமே நியாப‌க‌ம் வ‌ந்த‌துக்கு அந்த‌ சிவ‌பெருமானுக்குதா நாம‌ ந‌ன்றி சொல்ல‌ணும். அவ‌ருதா இந்த‌ அதிச‌ய‌ங்க‌ளுக்கெல்லா கார‌ண‌ம்." என்று ம‌கிழ்ச்சியுட‌ன் கூறி மீண்டும் சிவ‌னை வ‌ண‌ங்கிய‌வ‌ள், மீண்டும் குழ‌ப்ப‌த்தில் எதையோ யோசித்த‌ப‌டி, "ஆனா என‌க்குள்ள‌ ஒரு கேள்வி இருக்கு." என்றாள்.

அபி, "உன்னோட‌ கேள்வி இதுதான‌? க‌த‌ மாற‌ப்போகுது, ஆனா எப்பிடி? எத‌னால‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ராவும், "ஆமா." என்றாள் குழ‌ப்ப‌த்துட‌ன்.

அத‌ற்கு அபி, "போன‌ ஜென்ம‌த்துல‌ ந‌ம்ப‌ சேர‌ முடியாம‌ எற‌ந்து போயிருக்க‌லாம். ஆனா இந்த‌ ஜென்ம‌த்துல‌ நாம‌ அந்த‌ உதையாவ‌ கொன்னுட்டு, க‌ண்டிப்பா சேருவோம். இதுதா அந்த மாற்றம்." என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ராவிற்கோ அது ச‌ரியான‌ கார‌ண‌மாக‌ தோன்ற‌வில்லை. என‌வே மன‌திற்குள் மேலும் குழ‌ம்பிய‌வ‌ள், "இல்ல‌ ஆதி. நீ சொல்ற‌து த‌ப்பு மாதிரி தெரியுது. அவ‌ரு எங்கிட்ட‌ க‌தையே மாறப்போகுதின்னு சொன்னாரு. ஆனா நீ சொல்ற‌து எப்பிடி இருக்குன்னா, க‌தைல‌ ஒரு ப‌குதி மட்டும் மாற‌ப்போகுதின்னு. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு. சோ இன்னும் என்னோட‌ கேள்விக்கான‌ ச‌ரியான‌ ப‌தில் கெடைக்க‌ல‌." என்று ம‌ன‌திற்குள் கூறிக்கொண்டாள்.

அவ‌ள் யோச‌னையை க‌வ‌னித்த‌ அபி, "ச‌ந்ரா! என்ன‌ யோசிக்கிற?" என்று கேட்க‌,

அதில் திடுக்கிட்ட‌ ச‌ந்ரா, "ஆ..ங். ஒன்னு இல்ல‌ ஆதி. நீ சொல்ற‌து செரிதா. இந்த‌ ஜென்ம‌த்துலையும் அந்த‌ உதையாவ‌ நாந்தா கொல்லுவேன்." என்றாள்.

அபி, "இந்த ஜென்ம‌த்துல‌, ந‌ம‌க்கு எந்த‌ எழ‌ப்பும் இருக்க‌ கூடாது. அந்த‌ உத‌யாவுக்கு மிக‌ பெரிய‌ எழ‌ப்பா இருக்க‌னும். அதுதா ந‌ம்ப‌ளோட‌ மிக‌ப்பெரிய‌ வெற்றி." என்றான்.

சந்ரா, "நீ சொல்ற‌து செரிதா ஆதி. இந்த‌ ஜென்ம‌த்துல‌ நா எல்லாத்தையும் எழ‌ந்துட்டேன். என‌க்குன்னு சொல்லிக்க‌ எதுவுமே இல்ல‌ன்னு நென‌ச்ச‌துக்கு ப‌ரிசாதா, இப்ப‌ நீ என‌க்கு கெட‌ச்சிருக்க‌. உன‌க்கு குடுத்த‌ வாக்க‌ நா க‌ண்டிப்பா நெற‌வேத்துவேன். போன‌ ஜென்ம‌த்துல‌ ந‌ம்ப‌கிட்ட‌ இருந்து எல்லாத்தையும் ப‌றிச்ச‌துக்கு அவ‌ன‌ நா க‌ண்டிப்பா ப‌ழி வாங்குவேன்." என்று கூறி குரோத‌மாக‌ புன்ன‌கைத்தாள்.

அதை கேட்ட‌ அபி, "என்ன‌ சொல்ற‌ ச‌ந்ரா? இந்த‌ ஜென்ம‌த்துல‌ எல்லாத்தையும் எழ‌ந்துட்ட‌ன்னா என்ன‌ அர்த்த‌ம்? நீ எத‌ மீன் ப‌ண்ற‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு ச‌ந்ரா விர‌க்தி புன்ன‌கையுட‌ன் த‌ன் வாழ்வில் நிக‌ழ்ந்த‌ அனைத்து க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌ங்க‌ளையும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் அவ‌னிட‌ம் ம‌ன‌ம் திற‌ந்து கூறினாள்.

அதை கேட்டு வ‌ருந்திய‌ அபியும், ஆறுதாலாக‌ அவ‌ள் தோளை ப‌ற்றி, "அப்பிடியே என்ன‌ மாதிரி." என்று கூற‌,

அதை கேட்டு அவ‌னை கேள்வியுட‌ன் பார்த்தாள் ச‌ந்ரா. அத‌ற்கு அவ‌னும் விர‌க்தி புன்ன‌கையுட‌ன், "நானும் உன்ன‌ மாதிரிதா ச‌ந்ரா. என‌க்குன்னு சொல்லிக்க‌ இப்ப‌ உன்ன‌ த‌வ‌ர‌ யாரும் இல்ல‌. சின்ன‌ வ‌ய‌சுல‌யே என்னோட குடும்பம் என்ன தூக்கி எறிஞ்சுட்டாங்க. இன்னிக்கு வ‌ரைக்கும் அவ‌ங்க‌ என்ன‌ தேட‌வும் இல்ல‌, நானும் அவ‌ங்கள‌ பாக்க‌ல‌. ஏன்னா அவ‌ங்க‌ளுக்கு நா தேவையே இல்ல‌." என்று கூறி க‌ண்க‌ளை துடைத்துக்கொண்ட‌வ‌ன், பிற‌கு அவ‌ளை பார்த்து, "செரி அதெல்லாம் விடு. நா கேள்விப்ப‌ட்ட‌து உண்மையா?" என்று கேட்க‌,

அவ‌ன் கூறிய‌தை கேட்டு ஆழ்ந்த‌ வ‌ருத்த‌த்தில் இருந்த‌ ச‌ந்ரா, அவ‌ன் கேள்வியில் திடுக்கிட்டு, "ஹா என்ன‌?" என்று கேட்க‌,

அபி, "உன‌க்கும் அந்த‌ அர்ஜுனுக்கும் க‌ல்யாண‌ம் ஆக‌ போகுதாமே." என்று கூற‌,

அத‌ற்கு ச‌ந்ரா எரிச்ச‌லுட‌ன், "ஆமா. அது உண்ம‌தா. ஆனா அவ‌ன‌ க‌ல்யாண‌த்துக்கு முன்னாடியே நா கொல்லுவேன்." என்றாள் ப‌ல்லை க‌டித்த‌ப‌டி கோப‌த்துட‌ன்.

அத‌ற்கு அபி, "ஓ அப்போ அவ‌ந்தா..." என்று கூறும் முன், "உத‌யா" என்றாள் ச‌ந்ரா.

அபி, "என்ன‌? அப்போ இந்த‌ க‌ல்யாண‌ம்?" என்று கேட்க‌, அத‌ற்கு ச‌ந்ரா த‌ன் த‌ந்தையின் ச‌த்திய‌த்தை ப‌ற்றியும் தான் அவ‌னை ஆதி என்று நினைத்துவிட்ட‌ உண்மையையும் கூறி முடித்தாள்.

அதை கேட்ட‌ அபி, "போதும். நீ த‌னியா க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌தெல்லாம் போதும் ச‌ந்ரா. இனி நானும் உன‌க்கு தொணையா இருக்கேன். நாம‌ ரெண்டு பேரும் சேந்து அந்த‌ அர‌க்க‌ன‌ அழிக்க‌லாம்." என்று கூற‌, அத‌ற்கு அவ‌ளும் ச‌ரி என்று புன்ன‌கைத்தாள்.

இங்கு வீட்டின் வாச‌லிலிலேயே ப‌த‌ற்ற‌த்துட‌ன் காத்துக்கொண்டிருந்த‌ அர்ஜுன், திரும்ப‌ திரும்ப‌ ச‌ந்ராவிற்கு கால் செய்துக்கொண்டே இருந்தான். ஆனால் அவ‌ளுடைய‌ மொபைலோ ஸ்விட்ச்டு ஆப் என்றே வ‌ந்த‌து. அத‌னால் மேலும் ப‌த‌றிய‌வ‌ன் வாச‌லை பார்த்த‌ப‌டியே குறுக்கும் நெடுக்குமாக‌ ந‌ட‌ந்துக்கொண்டிருந்தான்.

அப்போதே ச‌ந்ரா வீட்டிற்குள் நுழைய‌, அவ‌ளை பார்த்த‌வுட‌ன்தான் நிம்ம‌திய‌டைந்த‌வ‌ன், உட‌னே வேக‌மாக‌ சென்று அவ‌ளை க‌ட்டிக்கொண்டான். அதில் எரிச்ச‌ல‌டைந்த‌ ச‌ந்ரா க‌டுப்பாகி நிற்க‌, அவ‌னோ ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌ளைவிட்டு வில‌கி, "ச‌ந்ரா நீ எங்க‌ போயிட்ட‌? எங்க‌யாவ‌து போக‌னுன்னா எங்கிட்ட‌ சொல்லியிருந்தா நா கூட்டிட்டு போயிருப்ப‌ல்ல‌? இல்ல‌ன்னா எங்கிட்ட‌ ஒரு வார்த்தையாவ‌து சொல்லீட்டு போயிருக்க‌லால்ல‌? ஏ எதுவும் சொல்லாம‌ போயிட்ட‌? நா இங்க‌ உன்ன‌ காணோன்ன‌தும் எவ்ளோ ப‌த‌றி போய்ட்டே தெரியுமா?" என்று கூறும்போதே அவ‌ன் முக‌த்தில் ப‌த‌ட்ட‌ம் அப்ப‌ட்ட‌மாய் தெரிந்த‌து.

அத‌ற்கு ச‌ந்ரா, "ஒன்னு இல்ல‌ அர்ஜுன், என‌க்கு ம‌ன‌சுக்கு ஒரு மாதிரியா இருந்த‌து. அதா கோவிலுக்கு போயிட்டு வ‌ந்தேன்." என்றாள்.

அத‌ற்கு அர்ஜுன், "ச‌ந்ரா ப்ளீஸ். எவ்ளோ அவ‌ச‌ர‌மா இருந்தாலும் எங்கிட்ட‌ ஒரு கால் ப‌ண்ணியாவ‌து சொல்லு. இல்ல‌ன்னா என‌க்கு ரொம்ப பயமா இருக்கும்." என்று ப‌ற்ற‌த்துட‌ன் கூறி மீண்டும் அவ‌ளை இறுக‌ அணைத்துக்கொண்டான்.

அதில் எரிச்ச‌லுட‌ன் அவ‌னை த‌ன்னிலிருந்து வில‌க்கிய‌ ச‌ந்ரா, "செரி இப்பிடியே பேசிட்டிருக்க‌ போறியா? இல்ல‌ என்ன‌ உள்ள‌ போக‌விட‌ போறியா?" என்று கேட்க‌,

அர்ஜுன், "ஓ சாரி. வா உள்ள‌ போலாம்." என்று கூற‌,

இருவ‌ரும் உள்ளே சென்ற‌ன‌ர். ச‌ந்ரா நேராக‌ அவ‌ளுடைய‌ அறைக்கு சென்றுவிட‌, அவ‌ள் பின்னே அர்ஜுனும் அங்கு வ‌ந்து, "ச‌ந்ரா! இன்னிக்கு சாப்புட்டு சீக்கிர‌மாவே தூங்கிரு. பிக்காஸ் நாளைக்கு உன‌க்கு மெக‌ந்தி ஃப‌ங்ஷ‌ன் ஏற்பாடு ப‌ண்ணியிருக்கேன்." என்றான்.

அதை கேட்டு அதிர்ந்த‌ ச‌ந்ரா, "நாளைக்கா?" என்று கேட்க‌,

அர்ஜுன், "ம்ம் ஆமா. க‌ல்யாண‌த்துக்கு இன்னும் ரெண்டு நாள்தான‌ இருக்கு?" என்று கூற‌,

அதை கேட்ட ச‌ந்ரா, "உன் ம‌ர‌ண‌த்துக்கும் ரெண்டு நாள்தா இருக்கு அர்ஜுன்." என்று ம‌ன‌திற்குள் எண்ணிய‌வ‌ள், "ம்ம் செரி." என்று அவ‌னிட‌ம் புன்ன‌கைத்தாள்.

அப்போது அவ‌ள் அருகில் நெருங்கிய‌ அர்ஜுன், "ந‌ம்ப‌ க‌ல்யாண‌ம் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா ந‌ட‌க்குற‌தால‌, ரொம்ப‌ சிம்பிளா ந‌ட‌க்குதுன்னு ம‌ட்டும் வ‌ருத்த‌ப்ப‌டாத‌ ச‌ந்ரா. க‌ண்டிப்பா உன் அப்பா இருந்தா எப்பிடி ந‌ட‌த்தியிருப்பாரோ, அவ்ளோ கிரேண்டா நானும் ஏற்பா‌டு ப‌ண்றேன். உன‌க்கு அதுல‌ சின்ன‌ கொற‌க்கூட‌ இருக்காது." என்று கூற‌, அத‌ற்கும் ச‌ந்ரா க‌டுப்பை ம‌றைத்து புன்ன‌கைத்த‌ப‌டி நின்றாள்.

அப்போது அவ‌ள் க‌ர‌த்தை ப‌ற்றிய‌ அர்ஜுன், "க‌ல்யாண‌த்துல‌ ம‌ட்டும் இல்ல‌. அதுக்க‌ப்ற‌மும் உன்ன‌ நா ச‌ந்தோஷ‌மா பாத்துக்குவேன். உன்னோட‌ எல்லா வ‌லிக‌ளுக்கும் ந‌ம்ப‌ உற‌வு ஒரு ம‌ருந்தா இருக்கும். ஐ பிராமிஸ்." என்று கூற‌,

ச‌ந்ரா, "வ‌லிய‌ உருவாக்குன‌தே நீத‌ன‌டா. நீ இதுக்கு ம‌ருந்துன்னு சொன்னா, அதுக்கு ப‌திலா நா அந்த‌ வ‌லிய‌வே தாங்குவேன்." என்று ம‌ன‌திற்குள் கூறிக்கொண்ட‌வ‌ள், பிற‌கு போலியான‌ புன்ன‌கையுட‌ன் அவ‌னை பார்த்து, "நாளைக்கு உன‌க்கு ஒரு ச‌ர்ப்ரைஸ் இருக்கு அர்ஜுன்." என்றாள்.

அதை கேட்டு கேள்வியுட‌ன் அவ‌ளை பார்த்த‌ அர்ஜுன், "சர்ப்ரைஸ்? என்ன‌ அது?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "நாளைக்கு தெரியும். அது வ‌ரைக்கும் கொஞ்ச‌ம் பொறுமையா இரு." என்று கூற‌,

அதை கேட்ட‌ அவ‌னும் யோசித்த‌ப‌டியே சரியென்று புன்ன‌கைத்தான்.

அப்போது ச‌ந்ரா, "பாத்துகிட்டே இரு அர்ஜுன். இனிமேதா உன்னோட‌ கெட்ட‌ நேர‌ம் ஆரம்பம் ஆக‌ப்போகுது." என்று த‌ன‌க்குள் கூறிக்கொண்டாள்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-19
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.