பிரியா ராகுளுடன் வருவதை பார்த்துவிட்டு இசையின் அப்பா நடேசன் அவனையும் ஜீவாவையும் முறைத்து பார்த்தார்.
அதனால் உடனே அலர்ட்டான ஜீவா “டேய் மச்சான் உங்க அப்பா செம கோவத்துல இருக்காருன்னு நினைக்கிறேன்.
கண்டிப்பா அவர் பிரியாவை யாழின்னு நினைக்கப் போறாரு.
இத்தனை நாளா அவர் பார்த்த பொண்ணு எல்லாம் நீ வேண்டாம்னு சொன்னதுக்கு பிரியா தான் ரீசன்னு நினைச்சு வர்ற கோபத்துல அவகிட்ட சண்டை போட்டு ஏதாவது சொல்லிட போறாரு டா!
அவர் சொல்றதை கேட்டுட்டு அவளும் சும்மா இருக்க மாட்டா..
அப்புறம் பிரச்சனை பெருசாயிடும்.
சீக்கிரம் போடா அவங்க ரெண்டு பேரும் பேசிக்குறதுக்குள்ள போய் ஏதாவது பண்ணு..!!” என்று இசையை பிடித்து தள்ளினான்.
அதனால் “அஅஅப்ப்பாபா..!!” என்று கத்தியபடி இசை நடேசனை நோக்கி செல்ல,
அதற்குள் கோபத்தில் எழுந்து நின்றிருந்த நடேசன் பிரியாவை பார்த்து
“மறுபடியும் எவ்வளவு தைரியம் இருந்தால் நீ இங்கே வருவ?" என்று கோபமாக கேட்டார்.
அவர் முக்கியமான அரசியல் பிரமுகர் என்பதால் பிரியாவை பார்த்து அவர் சண்டை போடுவதைப் போல அப்படி பேசியவுடன்,
அங்கே சாப்பிட வந்திருந்த அனைவரின் கவனமும் இப்போது அவர்களின் மீது திரும்பியது.
அதை கவனித்த இசை குழப்பத்துடன் தங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரியாவை பார்த்து,
“பிரியா உனக்கு இவர் யாருன்னு தெரியாதுல..
இவர்தான் எங்க அப்பா மிஸ்டர் நடேசன்.
சும்மா அவரு என்ன பாக்க தான் இங்க வந்திருக்காரு.
அண்ட் அப்பா உங்களுக்கு இவங்க யாருன்னு தெரியாது இல்ல..
இந்த பொண்ணு பேரு பிரியா.
நம்ம ரெஸ்டாரண்டுக்கு புதுசா மேனேஜரா வேலைக்கு சேர்ந்திருக்காங்க.
இந்த பையன் பேரு ராகுல். பிரியாவோட தம்பி.
பிரியாவுக்கு அசிஸ்டன்ட்டா அவனும் இங்க வேலைக்கு சேர்ந்திருக்கான்.
அவங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு அப்புறம் தான் நம்ம ரெஸ்டாரன்ட் நல்லபடியா போய்ட்டு இருக்கு.
நீங்களே பாருங்க இன்னைக்கு எவ்ளோ கஸ்டமர்ஸ் வந்திருக்காங்கன்னு..
அதான் இவங்க நம்ம கூடவே இருந்தா நல்லா இருக்கும்னு மேல் வீட்ல அவங்கள தங்க வச்சிருக்கேன்."
என்றவன் தன் அப்பாவின் இதழ்கள் பிரியாவிடம் பேசத் துடிப்பதை கவனித்து விட்டு,
“இங்க கூட்டமா இருக்கனால நம்ம ஃப்ரீயா பேச முடியாது.
நீங்க வாங்க நம்ம மேல போய் பேசிக்கலாம்.” என்றவன் வலுக்கட்டாயமாக நடேசன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு மேலே சென்றான்.
பிரியா அவர்களையே குறுகுறுவென்று பார்த்தபடி இருக்க,
“இவர் எதுக்கு உன்ன பாத்து அப்படி கேக்குறாரு?” என்று புரியாமல் ராகுல் கேட்க,
“அதான் எனக்கும் தெரியல." என்றாள் பிரியா.
அவர்கள் பேசியதை கவனித்தபடி அங்கே வந்த ஜீவா “நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்காதம்மா.
ஏன்னே தெரியல முன்னாடில இருந்தே இசையோட அப்பாவுக்கு யாழினியை கண்டாலே பிடிக்காது.
அவ செத்துப் போனதுக்கப்புறம் இசைக்கு எப்படியாவது வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடனும்னு,
அவரும் ரெண்டு வருஷமா எவ்வளவு ட்ரை பண்ணி பார்த்தாரு.
ஆனா அவன் கேட்கவே இல்ல. அதான் இப்ப உன்னை இங்கே பார்த்தவுடனே,
நீ யாழினி மாதிரி இருக்கிறதுனால மறுபடியும் யாழினி எங்க இருந்து வந்தான்னு யோசிச்சு கன்ப்யூஸ் ஆகி அவர் உன்கிட்ட அப்படி பேசிட்டு போறாரு.
நீ இதையெல்லாம் பெருசா எடுத்துக்காத.
அவர் பேசுனதுக்கு நான் உன்கிட்ட சாரி கேட்டுக்குறேன்.” என்று சொல்லி சமாளிக்க பார்க்க,
“இட்ஸ் ஓகே, எனக்கு புரியுது. வயசானவர் கோவத்துல ஏதோ பேசுறாரு பேசிட்டு போறாரு.
இது இசையோட ஃபேமிலி மேட்டர்.
அத பத்தி அவனே அவங்க அப்பா கிட்ட பேசி டீல் பண்ணிக்கிட்டும்.
அவர் மறுபடியும் என்கிட்ட வந்து எதுவும் கேட்காத வரைக்கும் எனக்கு பிரச்சனை இல்லை.”
என்ற பிரியா தன் வேலையை பார்ப்பதற்காக சென்று விட்டாள்.
இருக்கிய முகத்துடன் தன் கையை பிடித்திருந்த இசையின் கையை தட்டிவிட்ட நடேசன்,
“என்னடா நெனச்சிட்டு இருக்க நீ?
அந்த யாழினி தான் செத்துப் போயிட்டால..
மறுபடியும் எப்படி அவ உயிரோட வந்தா?
இதுல வேணும்னே புதுசா என் முன்னாடி அவளை பிரியான்னு கூப்பிட்டு இவ அவ இல்லைன்னு சொல்லி நம்ப வச்சு என்னை ஏமாற்ற பார்க்கிறாயா?
நீ என்ன சொன்னாலும் அதைக் கேட்டு உடனே நம்புறதுக்கு என்னை கூறுகெட்ட முட்டாப் பையன்னு நினைச்சியா?”
என்று ஆத்திரத்தில் ரத்தம் கொதிக்க கேட்க,
“ஐயோ அப்பா நான் வாய் திறந்து பேசுறதுக்கு முன்னாடியே நான் சொல்ல போறது எல்லாமே பொய்ன்னு நீங்க முடிவு பண்ணி அப்புறம் உண்மைய சொல்லுன்னு என்கிட்ட கேட்டா,
நான் என்ன சொல்றது? நீங்களே சொல்லுங்க..
நீங்க நம்பினாலும், நம்மளைன்னாளும், யாழினி செத்துப் போனது எந்த அளவுக்கு உண்மையோ;
அதே அளவுக்கு இங்கே இருக்கிறது யாழினி இல்ல பிரியான்றதும் உண்மை.
உங்கள மாதிரி தான் அவ இந்த ரெஸ்டாரண்டுக்கு அவ தம்பியோட சாப்பிட வரும்போது நானும் அவங்கள பார்த்து ஷாக் ஆயிட்டேன்.
ஒரு செகண்ட் நானும் அவளை யாழினின்னு தான் நினைச்சேன்.
ஆனா அவகிட்ட பேசி பார்க்கும்போது தான், அவ யாழினி இல்லை பிரியான்னு எனக்கு தெரிஞ்சது.
ஆனாலும் அந்த பொண்ணு யாழினி மாதிரி இருக்கிறதுனால மட்டும் நான் அவளை வேலைக்கு வச்சுக்கல.
அவ MBA gold medalist அப்பா ரொம்ப திறமையான பொண்ணு.
நீங்களே பாருங்க அவ இங்க வந்து 3 நாள்ல நம்ம ரெஸ்டாரன்ட் ஓட தலையெழுத்தையே ஏமாத்திட்டா!
உங்களுக்கு யாழினியை ஏன் பிடிக்கலைன்னு எனக்கு தெரியல.
பட் பிரியா மாதிரி ஒரு பொண்ண யாராலயும் புடிக்கலைன்னு சொல்லவே முடியாது.
நெஜமாவே அவ ரொம்ப நல்ல பொண்ணு அப்பா.
நீங்க அவகிட்ட பேசி பாத்தீங்கன்னா உங்களுக்கே அவளை பிடிக்கும்.” என்று அவளுக்காக பேசினான் இசை.
தன் மகனைப் பற்றி அவருக்கு தெரியாதா?
என்ன ஆனாலும் இசை பொய் சொல்ல மாட்டான் என்று நினைத்த நடேசன்,
“நீ வேணா யார் என்ன சொல்லி ஏமாத்தினாலும் உடனே அதை நம்புற முட்டாளா இருக்கலாம்.
ஆனா என்னால அப்படி இருக்க முடியாதுடா.
அந்த பொண்ணு யாழினி தான். அவ மறுபடியும் வேற ஏதோ பேர்ல உன் வாழ்க்கைக்குள்ள வந்து உன்னை ஏமாற்ற பார்க்கிற.
அது தெரியாம லூசுத்தனமா அவள பத்தி என்கிட்ட வந்து பெருமை பீத்தீட்டு இருக்க?
இவளை மாதிரி பொண்ணுங்கள எல்லாம் நம்பவே கூடாது.
அவ உன்னை ஏமாத்திட்டு இருக்கா டா சொன்னா புரிஞ்சுக்கோ!”
என்று என்னவோ அனைத்து தவறும் பிரியாவின் மீதுதான் இருப்பதாகவும்,
யாழினி தான் மீண்டும் பிரியா என்ற பெயரில் இசையின் வாழ்வில் வந்திருப்பதாக நினைத்து ஏமாளியான தன் மகனை காப்பாற்றும் நோக்கில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
“போதும் அப்பா நிறுத்துங்க. இதுக்கு மேல நீங்க அவள பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசினாலும் எனக்கு கோபம் வந்துரும் பாத்துக்கோங்க..
உங்களுக்கு பிரியாவை பற்றி என்ன தெரியும்?
இல்ல யாழினிய பத்தி தான் என்ன தெரியும்?
நீங்க சொல்ற மாதிரி நான் முட்டாளாவே இருந்துட்டு போறேன்.
ஆனா நான் லவ் பண்ண பொண்ணு யாருன்னு கூட தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல.
நான் யாழினி கூட மூணு வருஷம் பழகிருக்கேன்.
அவ கூடயே இருந்த எனக்கு அவளை தெரியாதா
ஒருத்தரை மாதிரி எத்தனை பேர் வேணாலும் இருக்கலாம்.
அதுக்காக யாழினி மாதிரி இருக்கிறவங்க எல்லாம் அவளாயிட மாட்டாங்க.
பிரியா யாழினிய விட 1000 times பெட்டர்.
இவகிட்ட இருக்கிற அறிவு, திறமை, எதுவா இருந்தாலும் சரியா யோசிச்சு எல்லாத்தையும் செய்ற கெப்பாசிட்டி எல்லாம் என்னைக்கும் யாழினிக்கு இருந்ததில்லை.
இன்னும் கூட கிளியரா என்னால யாழினிக்கும் பிரியாவுக்கும் இருக்கிற பர்சனல் அண்ட் பிசிகல் டிஃபரென்ஸ பத்தி சொல்ல முடியும்.
ஆனா நீங்க எனக்கு அப்பாவா போயிட்டீங்க.. அதை உங்ககிட்ட என்னால வெளிப்படையா சொல்ல முடியல.
ப்ளீஸ்.. தயவு செஞ்சு ஏதாவது பிரச்சனை பண்ணி நிம்மதியை கெடுத்துறாதீங்க..
அம்மா செத்து போனப்பையே நான் பாதி செத்துட்டேன்.
அப்புறம் யாழினி என்ன விட்டுட்டு போய் முழுசா எனக்கு கொன்னுட்டா.
இப்ப பிரியா வந்ததுக்கு அப்புறம் தான் எனக்குள்ள மறுபடியும் வாழனும்ன்ற ஆசையே வந்திருக்கு.
அத நீங்களே கெடுத்து என்னை மறுபடியும் செத்த பணம் ஆக்கிடாதீங்கப்பா!”
என்று கண்கள் கலங்க சொன்ன இசை அவரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.
அதனால் திடுக்கிட்ட நடேசன் அவன் கையைப் பிடித்து, “ஏய் என்ன டா என்கிட்ட இப்படி எல்லாம் பேசுற?
நீ நல்லா இருக்க கூடாதுன்னு நான் நினைப்பேனா?
அந்த யாழினி மாதிரி பொண்ணுங்க எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டாங்க டா!
நான் தலையால அடிச்சுக்கிட்டு சொன்னாலும் உனக்கு அது ஏன்தான் புரிய மாட்டேங்குதுன்னு எனக்கு தெரியல.
நீ இப்படி அவ மேல பைத்தியம் புடிச்சு திரிகிற அளவுக்கு அவ உன்னை என்னமோ பண்ணி மயக்கி வச்சிருக்கா.
நீயும் அவ பேச்சைக் கேட்டுகிட்டு பெத்த அப்பனையே மதிக்காம ஆடுற!
இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாவே இல்லடா இசை.
அப்பா உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன்..
ஒழுங்கா நான் சொல்றதை கேளு..
அவ எவளா இருந்தாலும் எனக்கு அவளை பத்தி எல்லாம் கவலை இல்லை.
அவள முதல்ல இங்கிருந்து போக சொல்லு.
இப்படி பசங்க தங்கி இருக்கிற இடத்துல ஒரு பொண்ணு வந்து தங்கியிருந்தா பார்க்கிறவங்க உன்னை என்ன சொல்லுவாங்க சொல்லு?
நம்ம குடும்பத்துக்குனு ஒரு மதிப்பு மரியாதை இருக்கு டா..
அத பத்தி கூட யோசிச்சு பாக்க மாட்டியா நீ?” என்று மென்மையான குரலில் கேட்டார்.
“இந்த விஷயத்துல நீங்க நான் சொல்றத கேளுங்கப்பா.
உங்க பையன் உயிரோட இருக்கணும்னு நினைச்சீங்கன்னா,
இனிமே ப்ரியாவை இங்கிருந்து அனுப்புறத பத்தி என்கிட்ட வந்து பேசாதீங்க.
எங்கள பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு எல்லாம் கவலை இல்ல.
நான் பிரியாவை தான் லவ் பண்றேன்.
இப்பதான் அவ இங்க வந்து இருக்கா.. சோ அதுக்குள்ள அவளுக்கும் என் மேல லவ் வரும்னு நான் எதிர்பார்க்க முடியாது.
ஆனா என்னைக்காவது ஒரு நாள் நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை பிரியா கூட வாழ்வேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
அதை கெடுத்துடாதீங்க ப்ளீஸ்!
இந்த ஒரு விஷயத்தை தவிர நீங்க வேற என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.
உங்க கால்ல கூட விழுகிறேன்.
இங்க இருந்து எந்த பிரச்சினையும் பண்ணாம கிளம்பி போய்டுங்க அப்பா!”
என்று உடைந்த குரலில் சொன்னான் இசை.
இதற்கு மேல் இவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று அவருக்கு நன்றாக புரிந்து விட்டது.
அதனால் தானே நேரடியாக களத்தில் இறங்கி பிரியாவிடம் பேசி பார்த்து உண்மையில் அவள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்த நடேசன்,
“சரி டா, உன் பேச்சுக்கே நான் வரேன்.
இப்ப என்ன உனக்கு.. அந்த பொண்ணு யாழினி இல்ல.. பிரியான்னு நான் நம்பனும் அவ்ளோ தானே...
அந்த பொண்ண என்கிட்ட வந்து பேச சொல்லு.
உனக்கு வேணா எதிர்ல இருக்குறவங்க உண்மை பேசுறாங்களா பொய் பேசுகிறார்களான்னு தெரியாமல் இருக்கலாம்.
ஆனா யார் எப்படின்னு ஒருத்தவங்கள பார்த்த உடனே நான் கண்டுபிடிச்சிடுவேன்.
அவ மட்டும் நீ சொல்ற மாதிரி யாழினியா இல்லாம வேற ஏதோ ஒரு பொண்ணா இருந்தா,
அவ யாரா இருந்தாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை.
அந்த பொண்ணுக்கு உன்ன புடிச்சிருந்தா நீ அவளை கல்யாணம் பண்ணிக்கோ.
நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன்.
நான் இப்பயும் சொல்றேன், எனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம்.
நீ போய் அந்த பொண்ண கூட்டிட்டு வா, நான் அவ கிட்ட பேசணும்.” என்றார்.
-மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-17
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.