Chapter-15

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
அதை கவனித்த சுவாதி “சரியான டம்மி பீஸ் இவன். நான் என்ன சொல்றேன்னு கூட புரியல. இவன் எல்லாம் மேனேஜராக போறானாம்.” என்று தினேஷை பார்த்து தன் மனதிற்குள் அவனை திட்டிவிட்டு மானசிகமாக தனது தலையில் அடித்துக் கொண்டு கிச்சனுக்குள் சென்றாள். திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக தினேஷை பார்த்த யாழினி “சென்னையில நீங்களும் சுவாதியும் ஸ்டே பண்ணுறதுக்கு வீடு பார்க்கணும்னு சுவாதி சொல்லிட்டு இருந்தா. வீடு கிடைச்சிருச்சா? திங்ஸ் எல்லாம் அங்க ஷிஃப்ட் பண்ணிட்டீங்களா?” என்று அக்கறையுடன் விசாரிக்க, “இல்லம்மா நாங்களும் ரெண்டு மாசமா வீடு பாத்துகிட்டே தான் இருக்கோம். நாங்க எதிர்பார்க்கிற மாதிரி வீடு கிடைக்கல. நல்ல வீடா இருந்தா, நம்ம ஆபீஸ் லொகேஷனுக்கு ரொம்ப தூரமா இருக்கு.

இல்லைனா ஏரியா சரி இல்லாம இருக்கு. ஃபேமிலியா அவ கூட சேர்ந்து வாழும் போது, ஏரியா நல்லா இருக்கணும் இல்ல? அதான் நானும் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன். என் ‍ friend ஒரு ஹவுஸ் புரோக்கருடைய நம்பர் குடுத்து இருக்கான். சண்டே தான் ப்ரோக்கர் கூட போய் வீடு கிடைக்குதான்னு பாக்கணும்.” என்றான் தினேஷ்.



“வீடு தேடி கண்டுபிடிக்கிறது எல்லாம் அவ்வளவு ஈஸி இல்ல ப்ரோ. சண்டே கிடைக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?” என்று ஷங்கர் கேட்க, “என்ன பண்றது? வீடு கிடைக்கிற வரைக்கும் நான் ஏற்கனவே ஸ்டே பண்ணி இருக்கிற‌ பாய்ஸ் ஹாஸ்டல்லையும், அவ same PGலயும் தங்கி இருக்க வேண்டியது தான். வேற வழி இல்ல! ஏற்கனவே ரெண்டு மாசமாயிடுச்சு. நீங்க சொல்ற மாதிரி நான் எதிர்பார்க்கிற வீடு கிடைக்க இன்னும் எத்தனை மாசம் ஆகுமோ தெரியல.” என்றான் தினேஷ். அவர்கள் பேசுவதை கேட்டபடி அங்கே வந்த சுவாதி “அப்ப அதுவரைக்கும் நீங்களும் நானும் பிரிஞ்சு தான் இருக்கணுமா?” என்று சோகமாக கேட்டாள்.



அங்கே ஓரமாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்த தினேஷின் அப்பா “கல்யாணம் ஆன உடனே பொண்ணையும் பையனையும் பிரிச்சு வைக்கிறது நல்லா இருக்காது என்று தான் நாங்களும் உங்க கல்யாணத்துக்கு முன்னாடியில இருந்தே‌ வீடு தேடிட்டு இருக்கோம் மா. ஆனா கிடைக்க மாட்டேங்குதே! என்ன பண்றது? உனக்கு தெரிஞ்ச பக்கம் ஏதாவது வீடு காலியா இருக்கான்னு கூட விசாரிச்சு பாரு. எவ்ளோ வாடகையா இருந்தாலும் குடுத்திடலாம்.” என்று சொல்ல, குரலில் சுரத்தையே இல்லாமல் “சரிங்க மாமா.” என்றாள் சுவாதி.



அப்போது சாப்பிட்டு முடித்துவிட்டு வேகமாக எழுந்து நின்ற யாழினி “ஹே சுவாதி.. எனக்கு இப்பதான் ஞாபகம் வருது. இப்ப நாங்க ஸ்டே பண்ணி இருக்கிற flat 2BHK தான்‌.

எங்களுக்கு மத்தவங்க கூட அட்ஜஸ்ட் பண்ணி stay பண்றது பெருசா செட் ஆகாது. அதனால தான் நாங்க வாடகை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லைன்னு தனி வீடு பார்த்தோம். But monthly rent, maintenanceக்கே 15k மேல ஆகிடுது. நாங்க இஎம்ஐ போட்டு வீடு வாங்குற ஐடியால இருக்கோம். இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் செலவு பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி வீடு வாங்குறது? சோ எங்களுக்கு செட் ஆகுற மாதிரி யாராவது tenant கிடைச்சா அவங்கள இன்னொரு ரூம்ல தங்க வச்சிக்கிட்டு ரெண்டை ஷேர் பண்ணிக்கலாம்னு இப்ப தான் போன வாரம் நானும் சங்கரும் பேசிட்டு இருந்தோம்.

‌ அப்ப கூட எனக்கு நீங்க வீடு தேடுறதா சொன்னது ஞாபகமே வரல. உங்களுக்கு ஓகேன்னா, நீங்க எங்க கூட ஸ்டே பண்ணிக்கோங்க. வீட்டுக்கு கம்ப்ளிட்டா ஆகுற எக்ஸ்பென்சஸ் எவ்வளவுன்னு கால்குலேட் பண்ணி நம்ம ஷேர் பண்ணிக்கலாம். கல்யாணம் ஆனதுக்கப்புறம் எப்படி நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிருப்பீங்க? அதுவும் இது அரேஞ்ச் மேரேஜ். இப்பவே நீங்க பிரிஞ்சிருந்தா, உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் புரிஞ்சுக்க chanceஏ கிடைக்காம போயிடும். உங்களுக்கு ஓகேன்னா, நாளைக்கே கூட நீங்க அங்க வந்து தங்கிக்கலாம்.” என்றாள்.



“என்னது.. நாங்க நாலு பேரும் ஒரே வீட்லையா? இப்படி ஒன்னை இதுக்கு முன்னாடி நான் யோசிச்சு கூட பாக்கலையே! ஆனா நினைச்சு பார்த்தா, இதுவும் நல்லா தான் இருக்கும்ன்னு தோணுது. இப்ப கூட அம்மா யாழினிய பார்த்து என்ன கத்துக்க சொன்னாங்களே! அதுக்கு எனக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி கிடைக்குற மாதிரி இருக்கு. அதே மாதிரி, சங்கரைப் பார்த்து தினேஷ் கூட கத்துக்க நிறைய இருக்கு. இதுவும் நல்லது தான். தினேஷும் சங்கரும் அடிக்கடி பேசி பழகுனாலாவது இவர் கிட்ட changes வருதான்னு பார்க்கலாம்.” என்று நினைத்த சுவாதி “எனக்கு ஓகே தான் யாழினி. பட் தினேஷும், ஷங்கரும் என்ன டிசைட் பண்றாங்கன்னு தெரியலல்ல!” என்றாள்‌. இப்போது ஸ்வாதி தினேஷையும், யாழினி சங்கரையும் பார்த்தாள்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-15
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.