விக்ரம் சிறிது நேரம் அபிலாஷிடம் பேசி அவனோட வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வரவும், சனந்தா, கவிதா மற்றும் சரவணன் காத்துக் கொண்டிருந்தனர்.
“என்னடா…. எவ்வளவு நேரம் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்…. நீ வண்டில ஏறு…. லக்கேஜ் எல்லாம் முடிஞ்ச அளவுக்கு வெச்சுட்டு மீதிய நாங்க கொண்டு வந்துடுறோம்… கவிதாவும் பின்னால உட்கார்ந்து இதெல்லாம் பிடிச்சுக்குவா” என்று சரவணன் கூற, விக்ரம் என்ன நினைத்தனா என்னவோ சரவணனிடம் சாவியை கொடுத்து, “நீ ஏறு நான் இதெல்லாம் எடுத்து வெக்குறேன்” என்று விக்ரம் கூறினான்.
சரவணன் குறும்பாக விக்ரமை பார்த்து சிரிக்க, விக்ரம் சரவணனின் தலையில் தட்டி, “நீ போ நான் வரேன்” என்று மெல்லிய குரலில் கூறினான். “ஹய்யோ நான் இவர் கூட நடந்து போகனுமா!!! என்று அதிர்ச்சியில் சனந்தா இருக்க, “என்னது இது…. விக்ரம் கூட போலாம்னு நினைச்சா சரவணன் அண்ணா கூட போகனுமா இப்ப நானு” என்று கவிதா ஒரு பக்கம் குழம்பிக் கொண்டிருந்தாள்.
“இன்னைக்கு உனக்கு நேரமே சரியில்லையே சனா” என்று சனந்தா அவளுக்குள் புலம்பி கொண்டிருக்க, சரவணன் வண்டியில் ஏறவும் விக்ரம் அனைத்து பைகளையும் கொடுத்து கவிதா ஏறிய பின் மீதி இருக்கிற பைகளையும் கொடுத்து அனுப்பினர். “நம்ம போலாமா?” என்று விக்ரம் சனந்தாவை பார்த்து கேட்க, தலையை மட்டும் அசைத்து அவனுடன் அமைதியாக நடந்து சென்றாள் சனந்தா.
இருவரும் பாதி தூரம் வரைக்கும் அமைதியாகவே நடந்து செல்ல அமைதியை கலைக்கும் விதமாக விக்ரம் தனது பாக்கெட்டில் இருந்து சனந்தா வாங்கி கொடுத்த பிரேஸ்லெட்டை எடுத்து, “ரொம்ப தேங்க்ஸ்” என்று கூறினான். சனந்தா, ம்ம்!!! மட்டும் கூறி தலை அசைத்தாள்.
“எனக்கு இந்த ஊரு தான் எல்லாமே…. இந்த ஊரோட பேரும் என் பேரும் சேர்ந்து இந்த பிரேஸ்லெட்டுல இருக்குறத பார்க்கும் போது ஒரு சின்ன சந்தோஷத்தை கொடுக்குது” என்று விக்ரம் கூற, சனந்தா எதுவும் கூறாமல் புன்னகைத்தாள்.
“நான் ரொம்ப கோபமா பேசுறதனால அவ எதுவுமே பேசாம அமைதியா வராளோ” என்று விக்ரம் அவனையே கடிந்து கொண்டான். “இந்த பிரேஸ்லெட் அங்க மார்க்கெட்ல கிடைக்குதா?” என்று விக்ரம் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக பேசவும், “இல்ல அங்க வெறும் இந்த மாதிரி மரக்கட்டையில மட்டும் தான் செஞ்சிருந்தாங்க…. பேர் எழுதினது சிம்பல் வரைஞ்சது நான் தான்” என்று சனந்தா கூறினாள்.
விக்ரம் அவளை ஆச்சரியமாக பார்த்து, “அப்படியா!!! இதெல்லாம் தெரியுமா?” என்று விக்ரம் கேட்க, “எனக்கு இந்த மாதிரி மைக்ரோ ஆர்கட்ல இன்ட்ரஸ்ட் இருக்கு…. சோ, ஸ்கூல் முடிச்சுட்டு கத்துக்கிட்டேன்… அதனால அங்க வெறும் இந்த பிரேஸ்லெட் மட்டும் தான் இருந்துது…. அதுல என் கிட்ட இருந்த எக்யூப்மெண்ட்ஸ் வெச்சு நானே எழுதி வரைஞ்சது” என்று சனந்தா கூறினாள்.
விக்ரமுக்கு ஏனோ அந்த பிரேஸ்லெட்டில் அவளே எழுதியது என்று தெரிந்தவுடன் சனந்தா அவனுக்கு மிகவும் நெருக்கமானவள் போல் உணர்ந்தான். “ஆங்…. சார் நாளைக்கு காலையில பசங்களை எல்லாரையும் வர சொன்னீங்கன்னா ஒரு வார்ம் அப் மாறி எடுத்துட்டு, அதுக்கு அப்புறமா ரெகுலரா என்ன சொல்லிக் கொடுக்கலாம்னு நான் சிலபஸ் போட்டுடுவேன்” என்று சனந்தா கூற, “சரி ஓகே நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்… மொத்தமா ஒரு பத்து பசங்க தான் இருப்பாங்க… ஆனா, பெரும்பாலும் யாருக்கும் பெருசா படிக்க விருப்பம் இல்ல ரெண்டு மூணு பேரை தவிர…. அதனால கொஞ்சம் துருதுருனு தான் இருப்பாங்க…. அதெல்லாம் பார்த்துக்குற மாதிரி இருக்கும்” என்று விக்ரம் கூறவும், “அதை நான் பார்த்துக்கிறேன் சார்” என்று சனந்தா கூறினாள்.
“விக்ரம்னே கூப்பிடலாமே…. சார்ன்னு எல்லாம் எதுக்கு” என்று விக்ரம் கேட்க, என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் சனந்தா. அவளை அதற்கு மேல் வற்புறுத்தாமல் அமைதியாக வீட்டுக்கு வந்தடைந்தனர்.
“வா சனா, எப்படி இருந்துது இங்க மார்க்கெட் எல்லாம்?” என்று வள்ளி கேட்க, “ரொம்ப நல்லா இருந்துது ஆன்ட்டி” என்று சனந்தா கூறினாள். “நீ வண்டில வந்துட்டு இருக்குறது தானே…. கவிதா இங்கேயே இருக்கிற பொண்ணு…. அவளுக்கு ஏறி வர பழகுனது தான்” என்று ஸ்ரீனிவாசன் கூற, “பரவால்ல அங்கிள், அவங்க லக்கேஜ் எல்லாம் வெச்சிருந்தாங்க எல்லாத்தையும் புடிச்சுட்டு வந்துட்டாங்க…. இங்க எல்லாம் பார்த்திட்டே நடந்து வரர்து நல்லா தான் இருக்கு” என்று சனந்தா கூறினாள்.
“ஆமா, கவிதா இல்லையா ஆன்ட்டி?” என்று சனந்தா கேட்க, “இல்லம்மா அவ கிளம்பிட்டா” என்று கூறினார் வள்ளி. “ம்ம்… ஆன்ட்டி உங்களுக்கு இந்தப் பூ வாங்கிட்டு வந்தேன்… அப்புறம் கிச்சன் சிங்க் கிட்ட தண்ணி தேங்கிட்டே இருக்குல அதை கிளீன் பண்ணவே முடியலன்னு சொன்னீங்கல இந்தாங்க இந்த பிரஷ் வெச்சு கிளீன் பண்ணீங்கன்னா உங்களுக்கு ஈஸியா இருக்கும்” என்று சனந்தா கொடுக்க, வள்ளி ஆச்சரியத்துடன் அவளை பார்த்தார்.
“என்ன ஆன்ட்டி இந்த பிரஷ் செட் ஆகாதா?” என்று சனந்தா கேட்க, “அப்படி இல்ல இவ்வளவு கவனிச்சு வாங்கிட்டு வந்து இருக்கியே அது தான் மா” என்று வள்ளி கூறினார். “இல்ல ஆன்ட்டி நேத்து இந்த பூ வெச்சுட்டு நீங்க அழகா இருந்தீங்க… அதான் பார்த்தேன் பிரெஷ்ஷா இருந்துச்சு அதனால தான் வாங்கிட்டு வந்தேன்… அப்புறம் காலைல நான் உட்காரும் போது கூட நீங்க அதை தள்ளவே முடியாம கைல தள்ளி துணி எல்லாம் போட்டு தள்ளி ரொம்ப கஷ்டப்பட்டீங்க… இந்த பிரஷ் கொஞ்சம் உங்களுக்கு நல்ல வைப்பர் மாதிரி வேலை செய்யும் அதனால தான் ஆன்ட்டி” என்று சனந்தா கூற, வள்ளி அதை வாங்கிக் கொண்டு சனந்தாவை அர்த்தமாக பார்த்து புன்னகைத்து வாங்கிக் கொண்டார்.
“அங்கிள் இந்தாங்க உங்களுக்கு ஹெட்ஃபோன்ஸ்…. உங்களுடைய பாக்கெட் ரேடியோவோட ஹெட்ஃபோன்ஸ் உடைஞ்சு இருந்துதுல இதை யூஸ் பண்ணிக்கோங்க, உங்களுக்காக வாங்கினேன்” என்று சனந்தா கொடுக்க ஸ்ரீனிவாசன் அவளை ஒரு நொடி பார்த்து புன்னகைத்து வாங்கிக் கொண்டார். இவை அனைத்தும் விக்ரம் ஒரு ஓரமாக ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“சனா நீ ரெஸ்ட் எடுத்துக்கோ…. நாங்க வேலையை முடிச்சிட்டு சாயந்திரம் வரோம்” என்று கூறி சரவணன் மற்றும் விக்ரம் வேலையை காண சென்றனர். சனா அவளுடைய அறைக்கு சென்று அவள் வாங்கி வந்த பொருட்களான பேட்டரி நைட் லேம்ப், ட்ரெக்கிங் ஸ்டவ் அதற்கு தகுந்தாற் போல் பாத்திரங்கள் என அனைத்தும் எடுத்து வைத்து விட்டு சிறிது நேரம் உறங்கினாள்.
“இந்த பொண்ணு எவ்ளோ கவனிச்சு வாங்கிட்டு வந்திருக்கா பாருங்க” என்று வள்ளி கூற, “ஆமா வள்ளி… அந்த ஹெட்ஃபோன்ஸ் பத்தி நான் உங்க கிட்ட சொல்லல விக்ரம் கிட்டயும் சொல்லல… ஆனா, அவளா பார்த்து வாங்கிட்டு வந்து இருக்கா…. அதே மாதிரி கவிதாக்கு கூட பாரேன் கிளிப் வாங்கிட்டு வந்து கொடுத்து இருக்கா” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
“சனாவ எனக்கு பார்த்ததுமே புடிச்சிருச்சு…. அவ கிட்ட பேசினதும் ரொம்ப புடிச்சிருச்சு….. இப்ப அவ நடந்துக்குறது எல்லாம் பார்க்கும் போது எனக்கு இன்னும் அவளை ரொம்ப புடிச்சிருச்சு…. விக்ரம்கும் அவளை புடிச்சு இவளுக்கும் விக்ரம புடிச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்ங்க…. எனக்கு என்னமோ அவ்ளோ புடிச்சிருக்கு சனந்தாவ” என்று வள்ளி கூறவும், “இது நம்ம கையில இல்லம்மா ஆனா, உன் ஆசைய தப்புன்னு சொல்ல மாட்டேன்… எனக்கும் சனந்தாவ புடிச்சிருக்கு…. ரொம்ப பொறுமையான பொண்ணா இருக்கா… பொறுப்பா நடந்துக்குறா இப்படி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கும் ஊருக்கும் வந்தா எனக்கும் சந்தோஷம் தான்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.
சனந்தா மாலை ஐந்து மணி போல் எழுந்து பிரஷ் அப் ஆகி மொட்டை மாடிக்கு சென்று அமைதியாக இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள். “சனா நல்ல தூங்குனியா?” என்று சரவணன் கையில் டீ கோப்பையுடன் வந்து அவளிடம் கொடுக்க, “ஆமா நைட்டு எல்லாம் தூங்கல… இப்ப நல்ல தூக்கம் வந்ததுது தூங்கிட்டேன்” என்று சனந்தா கூறி, டீ கோப்பையை வாங்கிக் கொண்டு, தேங்க்யூ!! என்றாள்.
விக்ரம் சிறிது நேரத்தில் வரவும் மூவரும் கட்டிலில் அமர்ந்து கொண்டு டீயை பருகி முடித்தனர். “இப்ப சொல்லு என்ன ஆச்சு உனக்கு மார்க்கெட்ல?” என்று சரவணன் கேட்க, “எனக்கும் தெரியல… அந்த கடை அக்கா ஒருத்தரை காட்டி இவர் தான் காளி… இந்த மார்க்கெட் ஓனர் அப்படின்னு ஏதோ சொல்லிட்டே உள்ள வந்து ஒளிஞ்சிக்கோன்னு சொன்னதும் நானும் அங்க ஒளிஞ்சிக்கிட்டேன்… ஆனா, எதுக்கும் அவரை பார்த்து ஞாபகம் வெச்சுக்கலாம்னு தான் பார்த்தேன்…. அவரை பார்த்ததும் நான் அபர்ணாவ பார்த்தப்போ எனக்கு ஏதேதோ யோசனை வந்து ரொம்ப தலை வலிச்சிதுல அதே மாதிரி தான் இவர பார்த்ததும் எனக்கு தலை வலிக்க ஆரம்பிச்சது” என்று சனந்தா கூறி முடித்தாள்.
“சரி நான் ஒன்னு சொல்றேன் இந்த மாதிரி எப்போ வந்தாலும் முடிஞ்ச அளவுக்கு ஒரு இடத்தில உட்கார்ந்திரு… இல்ல உடனே எங்களுக்கு ஃபோன் பண்ணிரு ஒரு வேளை நாங்க உன் பக்கத்துல இல்லனா…. அதே மாதிரி இதை நினைச்சு ரொம்ப குழப்பிக்காத… உனக்கும் ஆக்சிடென்ட் ஆகி கொஞ்ச நாள் தானே ஆகுது… அதனால எல்லாம் சரியாகும் நீ அதெல்லாம் விட்டுட்டு இங்க என்ன வேலைக்கு வந்தோமோ அத மட்டும் பாரு… மீதி எல்லாம் பார்த்துக்கலாம்” என்று சரவணன் கூறினான்.
“ம்ம்… சரி…. ஆனா, யாரு அவரு?” என்று சனந்தா கேட்க, “அவர் ஊட்டிலேயே பெரிய ஆளு…. அவரு மார்க்கெட் பிசினஸ் மட்டுமில்லாம இல்லீகல் பிசினஸ் எல்லாமே ஹேண்டில் பண்றாரு… அவர் நம்ம கிட்ட இங்க இருக்கிற மக்கள் எல்லாரும் தயாரிக்கிற பொருள் எல்லாமே அவர் கிட்ட கொடுத்து வியாபாரம் பண்ணனும்னு சொல்லி வந்து கேட்டாரு… ஏன்னா நம்ம தயாரிக்கிற தைலம் டீ பொடி இது எல்லாமே ரொம்ப யுனிக் ஃப்ளேவர், அதுக்காக அவர் வந்து கேட்டப்போ அவர் நிறைய லாபத்துக்காக கேட்டாரு… ஆனா, அதுல எங்களுக்கு யாருக்குமே உடன்பாடு இல்லாததுனால முடியாதுன்னு சொன்னோம்…. அதனால தான் அவரோட மார்க்கெட்ல நம்ம பொருள் எதுவுமே வைக்க முடியாது…. பெரும்பாலும் டூரிஸ்ட் ஸ்பாட்ல இருக்குற கடைகளுக்கு தான் நம்ம சப்ளை பண்றது…. அது போக ரொம்ப பீக் டைம்ல இங்க இருக்குற மக்களே நேரா கூட போயி வித்துட்டு வருவாங்க…. ஆனா, அவர் மார்க்கெட்டுக்கு மட்டும் தான் நம்ம சப்ளை பண்றது கிடையாது” என்று சரவணன் கூறி முடித்தான்.
“ஓஓஓ!!! அதானா அந்த அக்கா நம்ம கிராமத்துக்கும் அவருக்கு செட் ஆகாதுன்னு சொன்னாங்க?” என்று சனந்தா கேட்க, “ஆமா அதுவுமில்லாம இங்க கிடைக்கிற ஒரு சில தாவரங்களை வெளியில கொண்டு போய் வைக்கவும் ட்ரை பண்ணாரு அது சரியா வளரல… இங்க ஒரு இடத்தை வாங்கி தாவரங்கள்ல நிறைய விளைவிக்கணும்னு பார்த்தாரு…. ஆனா அதுக்கு இங்க யாரும் இடம் கொடுக்கல… அந்த கோபமும் இருக்கு அவருக்கு” என்று விக்ரம் கூறினான்.
“ஏய் நீ உண்மைய சொல்லு ஊட்டில அந்த ஸ்கூல் பிரச்சினையினால தானே நீ அந்த கிராமத்துக்கே போய் இருக்க… அங்க இருந்து உன் வேலையை பார்த்துக்கலாம்னு தானே போன உண்மைய சொல்லு” என்று விகாஷ் வீடியோ காலில் கேட்க, அங்கே விக்ரம் அவளை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 15
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.