CHAPTER-15

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
இங்கு அமிர்த்தா ஏற்ப‌டுத்திய‌ க‌த்தி குத்தால், உத‌யாவின் இர‌த்த‌ போக்கு அதிக‌மாகிக்கொண்டே போக‌, அதை க‌ண்டு கொந்த‌ளித்த‌ அவ‌னின் கூட்டாளி உட‌னே க‌த்தியுட‌ன் சென்று அமிர்த்தாவை குத்த‌ செல்ல‌, அதை பார்த்த‌ ஆதியோ அதிர்ச்சியுட‌ன், "அமிர்த்தா!" என்று அதிர்ந்து கூற‌, அதை கேட்ட அமிர்த்தா உட‌னே பின்னால் திரும்புவ‌த‌ற்குள் க‌த்தியை உட‌லில் சொருகியிருந்தான் அவ‌ன்.

அப்போது அமிர்த்தாவின் முக‌த்திலேயே இர‌த்த‌ம் தெறிக்க‌, அவ‌ளோ அதிர்ச்சில் உறைந்தாள். குத்திய‌வ‌னும் அதிர்ச்சியுட‌ன் உறைந்து நிற்க‌, ஆதிக்கோ அதைவிட‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ஏனென்றால் அந்த‌ க‌த்தி இற‌ங்கிய‌தோ குறுக்கே வ‌ந்த‌ உத‌யாவின் வ‌யிற்றில்தான். அப்போதும்க்கூட‌ உத‌யாவின் க‌ண்க‌ளில் வ‌லியைவிட‌ த‌ன்ன‌வ‌ளை காப்பாற்றிய‌ திருப்த்திதான் அதிக‌ம் இருந்த‌து. அதை பார்த்த‌ அமிர்த்தாவோ அதே அதிர்ச்சியுட‌ன் த‌ன் முக‌த்தில் தெறித்த‌ அவ‌ன் இர‌த்தத்தை கைக‌ளால் தொட்டு எடுத்து மெல்ல‌ பார்க்க‌, அவ‌ள் கைக‌ள் தானாய் ந‌டுங்கிய‌து. "காத‌ல‌ நேர‌த்தால‌ இல்ல‌, அதோட‌ ஆழ‌த்தால‌தா அள‌விட‌ணும். என்னோட‌ காத‌ல் ஆழ‌மான‌து." என்று அவ‌ன் கூறிய‌ வார்த்தைக‌ளே இப்போது அவ‌ள் நினைவ‌டுக்கில் வ‌ந்து நின்ற‌து. அப்போதே அவ‌ன் காத‌ல் ஆழ‌மான‌து என்று அமிர்த்தாவும் புரிந்துக்கொண்டாள்.

ஆனால் அவ‌னின் இந்த‌ ஆழ‌மான‌ காத‌ல் இப்போதும் அவ‌ளுக்கு எரிச்ச‌லையும் அறுவ‌றுப்பியுமே த‌ந்த‌து. என‌வே அவ‌னை விட்டுவிட்டு ஆதியின் ப‌க்க‌ம் திரும்பிய‌வ‌ள்,அவ‌ன் வ‌யிற்றில் உள்ள‌ காய‌த்தில் கை வைத்து க‌த‌றி அழுதுக்கொண்டிருக்க‌, உத‌யாவோ அங்கேயே ச‌ரிந்து விழ‌, அதை அவ‌னோ மீண்டும் க‌த்தியை அமிர்த்தாவை நோக்கி ஓங்க, அப்போது அவ‌ன் காலை அழுந்த‌ ப‌ற்றிய‌ உத‌யா, அப்பொழுதும் அவ‌னை நோக்கி வேண்டாம் என்று க‌ண்காட்டி த‌டுத்தான். அதை கேட்ட‌ அவ‌னாலும் முன்னேற‌ முடியாம‌ல் க‌த்தியை கீழே போட்டுவிட்டான்.

பிற‌கு அவ‌ன் த‌ன்னுடைய‌ கூட்டாளிக‌ளை பார்த்து, "வாங்க‌டா த‌லைவ‌ர‌ வைத்திய‌ருகிட்ட‌ கூட்டிட்டு போக‌ணும்." என்று கூறி அவ‌னை தூக்க‌ போக‌, அவ‌னோ த‌ன்னுடைய‌ க‌டைசி நிமிட‌ங்க‌ளை உண‌ர்ந்து, அவ‌ள் அருகிலேயே சாக‌ எண்ணி, அமிர்த்தாவின் புட‌வை முந்தாணையை ப‌ற்றிக்கொண்டான்.

அதை பார்த்த‌ கொள்ளிக்கார‌ர்க‌ள், "வாங்க‌டா வையித்திய‌ரையே இங்க‌ கூட்டிட்டு வ‌ந்த‌ர‌லாம். சீக்கிர‌ம் வாங்க‌." என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்ட‌ன‌ர்.

அப்போது வ‌லியுட‌ன் த‌ரையில் அமிர்த்தாவின் அருகில் கிட‌ந்த‌வ‌னின் க‌ண்க‌ளில் வ‌லி தெரிந்தாலும், அவ‌ன் இத‌ழ்க‌ள் த‌ன்ன‌வ‌ளின் கையாலே நேரும் இந்த‌ சுக‌ வேத‌னையை எண்ணி புன்ன‌கைக்க‌, "நீ என‌க்கு குடுக்குற‌ இந்த‌ முத‌ல் ப‌ரிச‌ நா ம‌றுக்காம‌ ஏத்துக்குறேன்." என்று முன‌ங்கினான்.

அப்போதே அமிர்த்தாவின் ம‌டியிலிருந்த‌ ஆதியும் அரை ம‌ய‌க்க‌த்தில் ஏதோ முன‌ங்கிய‌ப‌டியே உயிரை விட்டுவிட்டான்.

அடுத்த‌ நொடி "ஆதி....!" என்று கோவில் அதிர‌ க‌த்திய‌வ‌ள், கொலைவெறியுட‌ன் திரும்பி உத‌யாவை பார்க்க‌, அவ‌னோ அதே புன்ன‌கையுட‌ன் த‌ன் காய‌த்தை ப‌ற்றிய‌ப‌டி, "நீ குடுத்தா அந்த‌ ம‌ர‌ண‌த்தையும் நா காத‌லிப்பேன்." என்றான்.

அதை கேட்டு கொந்த‌ளித்த‌வ‌ளோ, தான் குத்திய‌ அதே க‌த்தியை மீண்டும் அவ‌ன் வ‌யிற்றில் இற‌க்கினாள். அதில் அவ‌ன் மேலும் துடித்தெழ‌, "அப்போ அந்த‌ ம‌ர‌ண‌த்தையே காத‌லி." என்று மீண்டும் அவ‌ன் வ‌யிற்றில் கத்தியை இற‌க்கினாள். அதில் அவ‌ன் மேலும் வ‌லியில் துடித்த‌ப‌டி, இர‌த்த‌ வெள்ள‌த்தில் கிட‌க்க‌, தான் சாகும் க‌டைசி நிமிட‌த்திலும் அமிர்த்தாவை பார்த்து புன்ன‌கைத்தபடி, "எத்த‌ன‌ ஜென்ம‌ம் எடுத்தாலும் நீதா என்னோட‌ காத‌ல்." என்றான்.

அதை கேட்ட‌வ‌ள் அதே கோப‌த்துட‌ன், "அப்பிடின்னா, எல்லா ஜென்ம‌த்துலையும் நாந்தா உன்னோட‌ ம‌ர‌ண‌ம்." என்றாள் சிவ‌ந்த‌ க‌ண்க‌ளுட‌ன்.

அதை கூறும்போது அவ‌ள் க‌ண்க‌ளில் கோப‌மும் கொலைவெறியும் ம‌ட்டுமே இருந்த‌து. ஆனால் உதயாவின் கண்களிலோ காதல் மட்டுமே நிறைந்திருந்த‌து. இப்ப‌டி அவ‌ளின் வெறுப்பை ம‌ட்டும் ச‌ம்பாரித்த‌ நிலையில், க‌டைசியாக‌ அவ‌ன் க‌ண்க‌ளில் ப‌திந்த‌ த‌ன்ன‌வ‌ளின் முக‌த்தோடு அவன் க‌ண்க‌ள் மெல்ல‌ மூடிய‌து.

அவ‌ன் ம‌ர‌ண‌த்தை பார்த்த‌துமே கோப‌த்தை சிறிது த‌னித்த‌வ‌ள், பிற‌கு வேத‌னையுட‌ன் ஆதியின் அருகில் சென்று, அதே க‌த்தியை உய‌ர்த்தி த‌ன்னை தானே குத்திக்கொண்டாள்.

அப்போது அமிர்த்தா வ‌லியில் துடித்த‌ப‌டி கீழே ச‌ரிய‌, உயிர்போகும் நிலைமையிலும் அங்கு சிலையாய் நின்ற‌ சிவ‌ப்பெருமானை நோக்கி, "ஈஷ்வ‌ரா! வ‌ம்ச‌ வ‌ம்ச‌மா எங்க‌ குடும்ப‌ந்தா இந்த‌ கோவிலோட‌ பொக்கிஷ‌த்த‌ பாதுகாத்துகிட்டு இருக்கோம். அப்பிடிப்ப‌ட்ட‌ எங்க‌ ப்ரிகு வ‌ம்ச‌த்துக்கே த‌வ‌ வ‌லிமையால‌ எதையும் அடையும் ச‌க்தி குடுதிருக்கீங்க‌. இப்பிடி கேக்காம‌லே இத்த‌னையும் கொடுத்த‌ நீங்க‌, என் காத‌ல‌ எதுக்காக‌ எங்கிட்ட‌ இருந்து பிரிச்சீங்க‌?" என்று வ‌லியிலும் ஆத‌ங்க‌மாக க‌த்தி கேட்க‌,

"நா சாக‌ போற‌ க‌டைசி த‌ருண‌த்துல‌ உங்க‌கிட்ட‌ கேக்குற‌ முத‌ல் வ‌ர‌ம் இதுதா. பூர்த்தியாகாத‌ எங்க‌ளோட‌ காத‌ல் க‌ண்டிப்பா அடுத்த‌ ஜென்ம‌த்துல‌ தொட‌ர‌ணும். நாங்க‌ ம‌றுப‌டியும் பொற‌க்க‌ணும். ம‌றுப‌டியும் காத‌லிக்க‌ணும். என்னோட‌ இந்த‌ முத‌ல் வ‌ர‌த்த‌ நெறவேத்துங்க‌ ஈஷ்வ‌ரா!" என்று வ‌லியுட‌ன் த‌ன் முத‌ல் வ‌ர‌த்தை அவ‌ரிட‌ம் வேண்டிக்கேட்டாள்.

அப்போது யாருமே இல்லாத‌ வெறுமையான‌ அந்த‌ பெரும் கோவிலின் ம‌ணிக‌ள் அனைத்தும் ஒன்றுட‌ன் ஒன்று மோதி ஒலி எழுப்ப‌ ஆர‌ம்பிக்க‌, அமிர்த்தாவோ உயிர் பிரியும் நிலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தாள்.

அந்த‌ ஒலியை வைத்தே அந்த‌ ஈச‌னின் மொழியை புரிந்துக்கொண்ட‌ அந்த‌ கோவிலின் பாதுகாவ‌ரான அந்த பெரியவர், வேக‌மாக‌ சிவ‌னின் சிலை முன்பு வ‌ந்து நின்று அவ‌ரை கைக‌ளை உய‌ர்த்தி வ‌ணங்கி, பிற‌கு திரும்பி அமிர்த்தாவை பார்த்து, "அமிர்த்தா! அந்த‌ ஈச‌ன் உன‌க்கு ப‌தில‌ளித்துவிட்டார்." என்று கூற‌, அதை கேட்ட‌ அவ‌ளோ க‌ண்க‌ள் சொருக‌ அவ‌ரை ப‌ர்த்துக்கொண்டிருக்க‌,

மேலும் அவ‌ர், "வ‌ம்ச‌ வ‌ம்ச‌மாக‌ நீங்க‌ள் செய்த‌ சேவையின் பொருட்டு, உன்னுடைய‌ இந்த‌ முத‌ல் வ‌ர‌ம் நிச்ச‌ய‌ம் நிறைவேற்ற‌ப்ப‌டும். இன்றிலிருந்து ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌கு, நீ மீண்டும் பிற‌ப்பெடுப்பாய்." என்று கூற‌, அவ‌ளோ த‌ன் கைக‌ளை கோர்த்து ஈச‌னை கும்பிட‌, அவ‌ள் க‌ண்க‌ளோ க‌ல‌ங்கிய‌து.

மேலும் அவ‌ர், "உன்னோடு நீ காத‌லித்த‌ ஆதியும், உன்னை காத‌லித்த‌ உதையாவும் சேர்ந்தே பிற‌ப்பார்க‌ள். உன்னுடைய‌ இதே வ‌ம்ச‌த்திலேயே நீ மீண்டும் பிற‌ப்பாய். அதோடு இன்று ந‌ட‌ந்த‌ அனைத்தும் ந‌ன்மையே என்று அடுத்த‌ ஜென்ம‌த்தில் நீ புரிந்துக்கொள்ள‌ போகிறாய். காத‌ல‌னும் கொலைகார‌னும் உன்னுட‌ன் மீண்டும் பிற‌க்க‌போகிறார்க‌ள். அதில் ஆத்மா ஒன்றுதான் ஆனால் வ‌டிவ‌ம் மாறும். அதோடு க‌தையும் மாறும். அடுத்த‌ ஜென்ம‌த்தில் உன் காத‌ல் நிச்ச‌ய‌ம் நிறைவேறும். ஆனால், க‌தை மாறும். இது அந்த‌ ப‌ர‌ம‌சிவ‌னின் வாக்கு." என்றார்.

அதை கேட்டு ஈச‌னை க‌ல‌ங்கிய‌ க‌ண்க‌ளுட‌ன் வ‌ண‌ங்கிய‌வ‌ளின் கையில், ஈச‌னின் சிலையில் மாலையாக‌ இருந்த‌ பூ ஒன்று வ‌ந்து விழ‌, அதையே ஈச‌னின் வாக்காக‌ ஏற்று க‌ண்க‌ளில் ஒற்றிக்கொண்டாள் அமிர்த்தா. அதே நிம்ம‌தியுட‌ன் திரும்பி ஆதியை பார்த்து, த‌ன்னுடைய‌ க‌டைசி நிமிட‌த்தில்,
"நானும் உன‌க்கு ஒரு வாக்கு குடுக்குறேன் ஆதி. இந்த‌ ஜென்ம‌த்துல‌ உன‌க்கு ந‌ட‌ந்த‌ அந்நியாய‌த்துக்கு நா நிச்ச‌ய‌ம் ப‌ழி வாங்குவேன். இது ந‌ம்ப‌ காத‌ல் மேல‌ ச‌த்திய‌ம்." என்று என்று கூறிய‌ப‌டியே அவ‌ன் அருகிலேயே க‌ண்க‌ளை மூடினாள்.

அங்கு அமிர்த்தாவின் க‌ண்க‌ள் மூடிய‌ அதே நேர‌ம் இங்கு ம‌ய‌க்க‌த்திலிருந்த‌ ச‌ந்ரா மெல்ல‌ க‌ண்க‌ளை திற‌ந்தாள். அப்போது அவ‌ள் முன்பு சிவ‌னின் பாத‌ங்க‌ளே முத‌லில் தெரிய‌, அவ‌ற்றை க‌ண்ணீருட‌ன் வ‌ண‌ங்கிய‌ப‌டி எழுந்து நின்ற‌வ‌ள், த‌ன் த‌லையில் உள்ள‌ காய‌த்தை பிடித்துக்கொண்டு த‌டுமாறி நின்று, அவ‌ரை பார்த்து க‌ண்ணீருட‌ன் கையெடுத்து கும்பிட்ட‌வ‌ள், "என‌க்கு எல்லாமே நியாப‌க‌ம் வ‌ந்திருச்சு ஈஷ்வ‌ரா. நீங்க‌ வாக்கு குடுத்த‌ மாதிரியே என்ன‌ ம‌றுப‌டியும் பிற‌க்க‌ வெச்சுட்டீங்க‌ ஈஷ்வ‌ரா. என்னோட‌ முத‌ல் வ‌ர‌த்த‌ நீங்க‌ நெற‌வேத்திட்டீங்க‌." என்று ம‌கிழ்ச்சியில் நிறைந்த‌ ம‌ன‌துட‌ன், க‌ண்ணீர் ம‌ல்க‌ அவ‌ரை வ‌ண‌ங்கிய‌வ‌ள், "உன்னுட‌ன் நீ காத‌லித்த‌ ஆதியும், உன்னை காத‌லித்த‌ உத‌யாவும் மீண்டும் பிறப்பார்க‌ள்" என்ற‌ வார்த்தைக‌ள் நினைவிற்கு வ‌ர‌, அப்போதே சிவ‌னை கேள்வியுட‌ன் பார்த்த‌வ‌ள், "அப்போ நா பிற‌ந்திருக்க‌ன்னா, க‌ண்டிப்பா என்னோட‌ ஆதியும் பொற‌ந்திருக்கான்ல‌ ஈஷ்வ‌ரா?" என்று கேட்க‌,

"உன‌க்கான‌ உயிர் இன்னும் இந்த‌ பூமியில இருக்கு." என்று அந்த‌ சாமிஜியின் வ‌ரிக‌ள் அவ‌ள் நினைவிற்கு வ‌ர‌, "ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பும் நீ பிற‌ந்திருக்கிறாய். அதோடு அர்ஜுனும் பிற‌ந்திருக்கிறான். பூர்வ‌ ஜென்ம‌த்தில் பூர்த்தியாகாத உங்க‌ளின் காத‌ல், இந்த‌ ஜென்ம‌த்திலும் தொட‌ர்கிற‌து." என்ற‌ வ‌ரிக‌ளும் நினைவிற்கு வ‌ர‌, அதை நினைவுக்கூர்ந்ததும் அனைத்தும் புரிந்துக்கொண்ட‌வ‌ள், "அப்பிடின்னா. அப்பிடின்னா அர்ஜுன்தா என்னோட‌ ஆதியா?" என்று விய‌ப்புட‌ன் சிவ‌னை நோக்கிய‌வ‌ள், "அப்போ என்னோட‌ ஆதி இப்ப‌வும் எங்கூட‌தா இருக்கான்." என்று விய‌ப்புட‌ன் புன்ன‌கைத்த‌வ‌ள், மீண்டும் சிவ‌னை நோக்கி, "என‌க்கு எதுவும் நினைவில்லாத‌ப்ப‌க்கூட‌ எங்க‌ள‌ ஒன்னா சேத்து வெச்ச‌துக்கு ரொம்ப‌ ந‌ன்றி ஈஷ்வ‌ரா. நா இத‌ என்னிக்குமே ம‌ற‌க்க‌மாட்டேன். இந்த‌ ஜென்ம‌த்துலையும் நா உங்க‌ளுக்காக‌ சேவ‌ செய்ய‌ த‌யாரா இருக்கேன். என்னோட‌ ஆயுசு முழுக்க‌ நா உங்க‌ளுக்கு சேவ‌கியா இருப்பேன் ஈஷ்வ‌ரா." என்று கூறி ஆன‌ந்த‌ க‌ண்ணீருட‌ன் அவ‌ரை வ‌ண‌ங்கிய‌வ‌ள், பிற‌கு மீண்டும் நிமிர்ந்து, "என‌க்கு எல்லாத்தையும் நியாப‌க‌ப்ப‌டுத்துன‌துக்காக ந‌ன்றி ஈஷ்வ‌ரா. நானும் ஆதியும் மாலையும் க‌ழுத்துமா உங்க‌கிட்ட‌ ஆசீர்வாத‌ம் வாங்க‌ வ‌ர்றோம். சீக்கிர‌மே வ‌ர்றோம்." என்று கூறி மீண்டும் ஒரு முறை அவ‌ரை வ‌ண‌ங்கிவிட்டு, க‌ண்க‌ளில் நிறைய‌ க‌ன‌வுக‌ளுட‌ன் அங்கிருந்து புற‌ப்ப‌ட்டாள்.

- ஜென்மம் தொடரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-15
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.