Chapter-13

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
165
0
16
www.amazon.com
“இனிமே அடுத்த மாசம் தான். என் பக்கத்துல வந்த... உன்ன கொன்னுடுவேன்.” என்று இருந்த கோபத்தில் ஷங்கரை மிரட்டிய யாழினி தனது ஆடைகளை கூட அணிந்து கொள்ள ஸ்ட்ரென்த் இல்லாததால், அப்படியே நிர்வாணமாக சென்று கட்டிலில் விழுந்து போர்த்திக் கொண்டு படித்தாள். பாவமாக அவளை பார்த்த சங்கர் “இந்த தடவை கொஞ்சம் ஓவரா தான் போயிட்டமோ? பரவால்ல, நம்ம பொண்டாட்டி தானே! என்ன ஆகுதுன்னு அப்புறம் பாத்துக்கலாம்.” என்று நினைத்து அவனும் களைப்பாக இருந்ததால் சென்று அவள் அருகில் படித்துக் கொண்டான்.



மறுநாள் காலை 7 மணி அளவில் கண் விழித்த சுவாதி இன்னும் தன்னை அணைத்தவாறு உறங்கிக் கொண்டு இருந்த தினேஷை பார்த்துவிட்டு “ஆமா அப்படியே நைட்டு சரியா பெர்பார்மன்ஸ் பண்ணி இவர் களச்சு போயிட்டாரு! இன்னும் தூங்கிட்டு இருக்காரு!” என்று நினைத்து சலித்துக் கொண்டு குளிப்பதற்காக ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு அவளது அறையில் தனியாக பாத்ரூம் இல்லை என்பதால் லேசாக கதவை திறந்து முதலில் வெளியே யாராவது இருக்கிறார்களா என்று எட்டிப் பார்த்தாள். அப்போதுதான் மற்றவர்களும் தூங்கி எழுந்திருந்தார்கள்.



சம்மந்தி வீட்டாரும், மாப்பிள்ளையும் தங்களது வீட்டில் இருப்பதால் சுவாதியின் வீட்டில் இருப்பவர்கள் பம்பரமாக அங்கும் இங்கும் சுழன்று பிசியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதனால் யாரும் இவளை கவனிக்கவில்லை. அதனால் பெருமூச்சு விட்ட சுவாதி “நல்லவேளை இங்க யாரும் இல்ல. நம்மளை யாராவது கவனிக்கறதுக்குள்ள போய் குளிச்சிட்டு வந்துடனும்.” என்று நினைத்து தனக்கான ஆடைகளை எடுத்துக்கொண்டு வேகமாக பாத்ரூமை நோக்கி ஓடினாள்.‌ பின் குளித்துவிட்டு வந்த சுவாதி புதிய புடவை ஒன்றை கட்டிக் கொண்டு தனது ஈர கூந்தலை ஹேர் டிரையரில் உலர்த்திக்கொண்டு இருந்தாள்.



அப்போதுதான் தூக்கத்தில் இருந்து கண் விழித்த தினேஷ் தனது நீண்ட கூந்தலை முன்னே எடுத்து போட்டு கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தவாறு ஹேர் டிரையரில் தலை காய வைத்துக் கொண்டு இருந்த சுவாதியை பார்த்தான். அவளது இடுப்பின் ஓரம் அவன் அவளுக்கு நேற்று கிப்டாக கொடுத்த தங்க ஹிப் செயின் அழகாக மின்னிக் கொண்டிருந்தது. காலையிலேயே அதுவும் அவளது பளிங்கு போன்ற முதுகும் அவன் கண்களுக்கு விருந்தாக, “வாவ்.. இதுக்கு தாண்டா கல்யாணம் பண்ணனும். இத்தனை நாளா காலையில தூங்கி எந்திரிக்கும்போது.. ஏன் டா விடிஞ்சதுன்னு இருக்கும். இனிமே எப்ப விடியும்ன்னு இருக்கும் போல! இந்த குட்டி பொண்ணு நம்ம லைஃப்ல நிறைய சேஞ்சஸ் கொண்டு வருவான்னு தோணுது. இதுவும் இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்கு.” என்று நினைத்த தினேஷ் ஓரமாக கீழே கிடந்த தனது வேட்டியை எடுத்து கட்டிக் கொண்டு ரெப்ரெஷ் ஆவதற்காக கண்ணாடியை பார்த்து தனது தலை முடியை சரி செய்து விட்டு வெளியே சென்றான்.



அவன் கண் விழித்ததில் இருந்து நடந்த அனைத்தையும் கண்ணாடி வழியாக பார்த்துக் கொண்டு இருந்த ஸ்வாதி “என்ன இவர் என்ன கண்டுக்கவே மாட்டேங்குறாரு? காலையில எந்திரிச்ச உடனே ஒரு குட் மார்னிங் கூட சொல்ல வேண்டாம். நான் இப்படி freshஆ குளிச்சிட்டு வந்து அவர் முன்னாடி நிற்கிறேன். அட்லீஸ்ட் ஒரு ஹக் பண்ணலாம் இல்ல! இதுவே சங்கரா இருந்தா, யாழினி இப்படி அவர் முன்னாடி புடவை எல்லாம் கட்டிக்கிட்டு நிக்கும்போது, ஒரு மணி நேரம் ஆனாலும் அவளை விடவே மாட்டாரு. நான் கேள்விப்பட்ட வரைக்கும் எனக்கு தெரிஞ்ச என் வயசு பொண்ணுங்களோட ஹஸ்பண்ட் எல்லாரும் அப்படித்தான் இருக்காங்க.

ஆனா இவர் மட்டும் ஏன் வித்தியாசமா இருக்காரு? எனக்கு என்ன டவுட்டுனா, நமக்கு வாய்ச்ச தினேஷ் மட்டும் தான் இப்படி இருக்காரா? இல்ல மத்தவளுங்க எல்லாம் சும்மா பில்டப் பண்றதுக்காக நம்ம கிட்ட பொய் சொல்றாளுங்களா? அப்படியே இருந்தாலும், மத்த பொண்ணுங்க கூட பொய் சொல்றாங்கன்னு வச்சுக்கலாம். யாழினிய பக்கத்திலயே இருந்து டெய்லியும் நான் பார்க்கிறேன். அவ bodyயில ஏகப்பட்ட மார்க்ஸ் இருக்குமே! அது பொய் இல்லையே! அப்ப சங்கர் தீயா இருக்காரு. எல்லாருமே அவர மாதிரியே இருப்பாங்கன்னு நினைச்சா நடக்குமா? நமக்கு வாய்ச்சது இவ்வளவுதான்னு நினைச்சு மனசை தேத்திக்க வேண்டியது தான்.” என்று நினைத்து அழகாக தயாராகி வெளியில் சென்று தன் அம்மாவுடன் சேர்ந்து அவளது புகுந்த வீட்டுக்காரர்களுக்கு காலை உணவை சமைக்க தொடங்கினாள்‌.



9 மணி அளவில் அனைவரும் சாப்பிடுவதற்காக ஹாலில் அமர, சுவாதியின் தங்கை திவ்யா லைனாக தரையில் வாழை இலையை போட்டுக் கொண்டே செல்ல, இட்லி தோசை பூரி என்று இதுவரை அவர்கள் சமைத்து வைத்த அனைத்தையும் தனது உறவுக்கார பெண்களுடன் சேர்ந்து அவர்களுக்கு பரிமாறினாள். அப்போது அவளுக்கு ஷங்கர் மற்றும் யாழினியின் ஞாபகம் வர, “நீங்க சாப்பிட்டுட்டு இருங்க. நான் போய் யாழினியையும் ஷங்கரையும் சாப்பிடக் கூடியிட்டு வரேன்.” என்ற சுவாதி அவர்களது அறையை நோக்கி நடந்தாள்.



அந்த அறை உள்ளே இருந்து தாளிடப்பட்டு இருக்க, லேசாக கதவைத் தட்டிய சுவாதி “யாழினி.. சங்கர்.. கதவை திறங்க. சாப்பிட வாங்க. உங்களைத் தவிர மத்தவங்க எல்லாரும் சாப்பிட்டுடாங்க.” என்று குரல் கொடுத்தாள். அதனால் உடனே கண் விழித்த சங்கர் நேரத்தை பார்த்துவிட்டு “அச்சோ.. மணி 9 ஆயிடுச்சா? வெளிய கேட்கிறது ஸ்வாதியோட வாய்ஸ் தானே! நேத்து அவங்களுக்கு தான் ஃபர்ஸ்ட் நைட். இந்த மாதிரி நானும் யாழினியும் லேட்டா போய் அவங்கள எழுப்பி இருக்கணும்.

இந்த பொண்ணு எங்களுக்கு முன்னாடி தூங்கி எந்திரிச்சு இப்ப எங்க ரெண்டு பேரையும் வந்து சாப்பிடுவதற்கு கூப்பிட்டுட்டு இருக்கு! ஐயோ கடவுளே.. எனக்கு சிரிப்புதான் வருது.” என்று நினைத்தவன், யாழினியின் வெற்றுடலின் மீது நன்றாக போர்வையை போட்டு மூடி விட்டு அவனது ஷார்ட்ஸை தேடி கண்டுபிடித்து எடுத்து அணிந்து கொண்டு வேகமாக சென்று கதவை திறந்தான்.



நேற்று இரவு முழுக்க டியூட்டி பார்த்த களைப்பு அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவனை மேல் சட்டை இல்லாமல் முதன் முறையாக பார்த்த சுவாதி அவனது விரிந்த மார்பு, அவன் ரெகுலராக ஜிம் செல்வதால் முறுக்கேறி இருந்த அவனது புஜங்கள், நெஞ்சில் கருப்பு நிற புற்களை போல ஆங்காங்கே அடர்த்தியாக வளர்ந்து கிடந்த ரோமங்கள், முகத்தில் கம்பீரமாக மீசை, ஒரு வாரமாக சரியாக சவரம் செய்யாததால் புதிதாக முளைத்து இருந்த அவனது குறுந்தாடி, இவை அனைத்திற்கும் மேலாக அவனது மாநிற உடல் அத்தனை ஆண்மையுடன் இருந்ததால் “ஆம்பள பசங்கள வர்ணிக்கும் போது கட்டிளம் காளைன்னு சொல்லுவாங்களே.. அது இதுதானா? விஜய் சேதுபதிய 96 படத்துல உத்துப் பாத்துட்டு நீ ஒரு ஆம்பளை நாட்டுக்கட்டை டான்னு திரிஷா சொல்லுவாங்களே.. அந்த மாதிரி சும்மா கின்னுன்னு bodyய maintain பண்ணி வெச்சிருக்கிறாரே இவரு! ஆம்பளைனா இவர் தான். இப்படித் தான் இருக்கணும். இது‌ தான் நல்லா இருக்கு.” என்று நினைத்த சுவாதி தன்னை மறந்து அவனை கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.



அதை கவனிக்காத சங்கர் “நேத்து நைட் தூங்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அதான் டைம் போறது தெரியாம தூங்கிட்டோம். நீ போமா. நான் அவளை கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தி எழுப்பி ரெடியாக்கி கூட்டிட்டு வர்றதுக்கு டைம் ஆகும். எங்களுக்காக வெயிட் பண்ண வேண்டாம். நீங்க சாப்பிடுங்க. எதுவும் இல்லைனா கூட பரவால்ல. நாங்க வெளியில சாப்பிடுக்கிறோம்.” என்று சொல்ல, அவன் குரலால் நிதானம் பெற்ற சுவாதி “இல்ல இல்ல, நம்ம வீட்டுக்கு வந்துட்டு நீங்க எப்படி வெளிய போய் சாப்பிடுவீங்க? எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை. நீங்க ரெண்டு பேரும் ரெடி ஆகிட்டு பொறுமையா வாங்க.” என்று சொல்லிவிட்டு ஹாலிற்கு சென்றாள்.



அவள் மட்டும் தனியாக வருவதை கவனித்த தினேஷ் “எங்க யாழினியும் சங்கரும் வரலையா?” என்று கேட்க, “அவங்க இன்னும் தூங்கிட்டு தான் இருந்திருக்காங்க. இப்ப தான் போய் எழுப்பி சாப்பிட சொல்லிட்டு வந்தேன். அவங்க வரும்போது வரட்டும். எனக்கு பசிக்குது நான் சாப்பிடுறேன்.” என்ற ஸ்வாதி தனக்கான உணவை தட்டில் போட்டுக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்த தினேஷின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள். அப்போது அவளது பாட்டி அவர்கள் இருவரையும் பார்த்து “உங்க ரெண்டு பேரையும் இப்படி ஜோடியா பாக்குறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு!” என்று சொல்ல, “இன்னைக்கு தான் இந்த கிழவி வாயில இருந்து நல்லதா 4 வார்த்தை வந்திருக்கு. இப்பயும் என்னை கடுப்பேத்துள மாதிரி ஏதாவது பேசுச்சுன்னா, நம்மளும் பதிலுக்கு பேசி விட்டுடலாம்னு நினைச்சேன். பரவாயில்லை, இந்த தடவை கிழவி தப்பிச்சிருச்சு.” என்று நினைத்து சிரித்துக் கொண்ட சுவாதி அமைதியாக சாப்பிட தொடங்கினாள்.

தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.