பிரியா எங்கே சென்றாள் என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்த ராகுலும், இசையும், அவள் குரலைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
இசையிடமிருந்து அவனது மொபைல் ஃபோனை பிடுங்கிய ஜீவா,
“நானும் இசையும் நல்லா தூங்கிட்டு தான் மா இருந்தோம்.
ராகுல் தான் நீ திடீர்னு அவன் கிட்ட சொல்லாம எங்கேயோ காணாம போயிட்டானு நினைச்சு பயந்து போயிட்டான்.
அவன் இங்க வந்து எங்களை எழுப்பி உன்னை காணோம்னு சொன்னதுனால நாங்களும் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டோம்.
எங்க இருக்க நீ?
இந்த நேரத்துல உனக்கு தெரியாத ஊர்ல.. யார் கிட்டயும் சொல்லாம ஏன் மா தனியா போற?” என்று கேட்க,
“நான் ஹாஸ்பிடலுக்கு போய் அம்மாவ பாத்துட்டு அப்படியே ஜாகிங் போயிட்டு வரலாம்னு நினைச்சேன்.
அதுக்குள்ள ராகுல் என்னை தூங்கி எந்திரிச்சு தேடுவான்னு நான் எதிர்பார்க்கல.
நீங்க அவன் கிட்ட ஃபோன குடுங்க. நான் பேசுறேன்.” என்றாள் பிரியா.
உடனே ஜீவா ராகுலிடம் ஃபோனை கொடுக்க,
பதட்டமான குரலில் “எங்கேயாவது வெளியே போனா என்கிட்ட சொல்லிட்டு போக மாட்டியா நீ?
ஏன் பிரியா இப்படி எல்லாம் பண்ணி என்ன பயமுறுத்துற?” என்று கேட்டான் அவன்.
“சாரி டா, நீ இந்த டைம்ல தூங்கி எந்திரிச்சு என்னை தேடுவன்னு எனக்கு எப்படி தெரியும்?
நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன்.
இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துருவேன்.
நீ போய் தூங்கு. நான் வைக்கிறேன் பாய்.” என்று சொல்லிவிட்டு பிரியா அந்த அழைப்பை துண்டித்து விட,
ராகுல் இசையிடம் அவனது மொபைல் ஃபோனை திருப்பிக் கொடுத்தான்.
ஜீவாவின் முகத்தை ஆர்வமாக பார்த்த இசை,
“டேய்.. அவ உன் கிட்ட என்ன டா சொன்னா?
இவ்ளோ சீக்கிரமா தூங்கி எந்திரிச்சு அவ எங்க போனாளாம்?” என்று கேட்க,
பிரியா ரேணுகாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றதைப் பற்றி இசையிடம் சொன்ன ஜீவா,
“அதான் அவ வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டால..
எப்படியும் இதுக்கு மேல போய் படுத்தா தூக்கம் வராது.
நான் போய் பால் வாங்கிட்டு வரேன்.
டீ போட்டு எல்லாரும் குடிக்கலாம்.
ஆடி அசைஞாசு கவிதா அக்கா வர்றதுக்கு கொஞ்ச நேரம் ஆகும்.
அதுக்குள்ள நீ சமைக்கிறதுக்கு தேவையானதை எல்லாம் ஓரளவுக்கு ரெடி பண்ணி வை.
பிரியாவும், ராகுலும் இங்க வந்திருக்கிறதை செலிப்ரேட் பண்றதுக்காக நம்ம இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷல் டிஷ் செய்யலாம்.”
என்று இசையிடம் சொல்லிவிட்டு சென்று ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்தவன்,
பால் வாங்குவதற்காக தன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
ஆனால் எப்போது பிரியா வருவாள்? என்று வாசலை பார்த்தபடி ஒரு சேரை எடுத்து போட்டு அமர்ந்த இசை,
“எதுக்கு இவ தனியா கிளம்பி போறா?
வெளிய போகணும்னு என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா,
நானே இவளை கூட்டிட்டு போய் இருப்பேன்ல!”
என்று நினைத்துக் கொண்டு இருக்க,
தானும் அவன் அருகில் ஒரு சேரை எடுத்து போட்டு அமர்ந்த ராகுல்,
“ஜீவா அண்ணா உங்கள குக்கிங் பண்றதுக்கு தேவையானது எல்லாத்தையும் ரெடி பண்ண சொன்னாரே.. பண்ணலையா..??” என்று கேட்க,
“பிரியா வரட்டும். அவ முகத்தை பார்க்கிற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது.” என்றான் இசை.
உடனே அவனை குறு குறுவென்று உற்றுப் பார்த்த ராகுல்,
“எங்க அக்கா மேல உங்களுக்கு அவ்ளோ அக்கறையா என்ன?” என்று கேட்க,
“ஆமா, அக்கரைன்னு சொல்றத விட நான் அவ கூட எப்பயும் இருந்து அவளை நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கிறேன்னு சொல்லலாம் மச்சான்.”
என்று ஃபீல் செய்து சொன்னான் இசை.
இப்போது அவன் தன்னை மச்சான் என்று அழைத்ததை எல்லாம் பெரிது படுத்தாமல் எதையோ அவனிடம் இருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்வதை போல,
அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்த ராகுல்,
“இந்த ஃபீலிங்ஸ் எல்லாமே உங்களுக்கு உங்க லவ்வர் யாழினி மேல இருக்கிறது தானே..
இப்ப சொன்னீங்களே.. பிரியா முகத்தை பார்த்தா தான் நிம்மதியா இருக்கும்னு..
அந்த முகத்துக்காக தானே நீங்க இவ்வளவு பண்றிங்க?
ஒருவேளை பிரியா யாழினி மாதிரி இல்லாம இருந்திருந்தா,
அப்ப கூட நீங்க அவ மேல இவ்ளோ கேர் அண்ட் அஃபெக்ஷனோட இருந்திருப்பீங்களா?
இல்ல எங்களுக்கு தான் இவ்வளவு ஹெல்ப் பண்ணிருப்பிங்களா?
அதுக்கெல்லாம் சான்சே இல்லல்ல..
அத நெனச்சா தான் எனக்கு கவலையா இருக்கு.
நீங்க எங்க அக்காவ பிரியாவா பாக்க மாட்டேங்கறீங்களோன்னு எனக்கு தோணுது.
எங்களுக்கு இப்ப இங்க இருக்கிறத தவிர வேற வழியில்லை.
இல்லைனா நான் அவளை உங்க கூட பேசி பழகவே விட மாட்டேன்.
ஆல்ரெடி அவ இந்த லவ்னால நிறைய ஹர்ட்டாகி இருக்கா.
ஒருவேளை அவளுக்கு உங்களை பிடிச்சாலும், நீங்க அவளோட face யாழினி மாதிரி இருக்கின்றதுக்காக மட்டும்
தான் அவளை கேர் பண்றீங்க.
மத்தபடி உங்களுக்கு அவ மேல எந்த ஃபீலிங்ஸும் இல்லைன்னு தெரிஞ்சா அவ ரொம்ப வருத்தப்படுவா.
என் அக்காவை அப்படி பாக்குறதுக்கு நான் ரெடியா இல்ல.”
என்று ஏதோ பெரிய மனுஷன் போல அவனிடம் தன் அக்காவிற்காக பேசினான்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த இசைக்கு அவன் சொன்னது நியாயமாக தான் தெரிந்தது.
ஆனால் தன் மனதில் இருப்பதையும் சொல்லி அவனுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்த இசை,
“நீ சொல்றது கரெக்ட் தான்.
இப்ப நான் இருக்கிற சிச்சுவேஷன்ல ஒருவேளை உங்க அக்கா பிரியா பாக்குறதுக்கு என் யாழினி மாதிரி இல்லைனா,
நான் அவளை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன்.
நீங்களும் எங்க ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட வந்த சாதாரண கஸ்டமர்ஸ் மாதிரி சாப்பிட்டு எப்பயோ கிளம்பி போயிருப்பீங்க.
பட் அங்க தான் விதி என்னையும் உங்க அக்காவையும் சேர்த்து வைக்கிறதுன்னு நான் நம்புறேன்.
நமக்கு பிடிச்ச ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் இருக்கறதுக்காக எல்லாம் அவங்க மேல நமக்கு முழுசா ஃபீலிங்ஸ் வந்துராது ராகுல்.
உண்மைய சொல்லனூம்னா பிரியாவை பார்க்கும் போது எனக்குள்ள ஒரு ஃபீல் வருதுல்ல,
அந்த ஃபீல் எனக்கு யாழினி கூட இருக்கும்போது கூட வந்ததில்லை.
அதை உனக்கு எப்படி எக்ஸ்பிளைன் பண்ணி சொன்னா புரியும்ன்னு எனக்கு தெரியல.
பிரியாவும் யாழினியும் பாக்குறதுக்கு ஒரே மாதிரி இருந்தாலும்,
அவங்க ரெண்டு பேரும் வேற வேற ஆள், அவங்களோட கேரக்டர் வேற, பிஹேவியர் வேறன்னு என் மனசுக்கும், மூளைக்கும் நல்லா தெரியும்.
இதுக்கு முன்னாடி, என்னால என் யாழினி கூட இருந்து அவளை நல்லபடியா பார்த்துக்க முடியாம போனதுனால, அவளை நான் இழந்துட்டேன்.
சோ இப்ப பிரியா கூடவே இருந்து அவளை நல்லா பாத்துக்கணும்னு நினைக்கிறேன்.
பிரியாவை பார்க்கும்போது வேற எதுவும் எனக்கு அப்ப தோணல.
அதான் யோசிக்காம அவ கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கூட கேட்டேன்.
அது உனக்கு தப்பா தெரியலாம், ஆனா என் மனசுல அவ மேல எந்த தப்பான இன்டென்ஷனும் இல்ல மச்சான்.
Infact, நான் உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ணி முழுசா ஒரு நாள் தான் ஆகியிருக்கு.
அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப இம்போர்ட்டண்ட்ன்னு எனக்கு தோணுது.
பிரியா மாதிரி ஒரு பொண்ண யாருக்கு தான் பிடிக்காது சொல்லு?
அவ கூட நான் ஸ்பென்ட் பண்ற ஒவ்வொரு செகண்டும் மேக்னெட் மாதிரி என்ன அவ பக்கம் இழுத்துட்டு இருக்கா..
இதுக்கப்புறம் என் லைஃப்ல எதுவுமே இல்லைன்னு நான் நெனச்சிட்டு இருக்கும்போது,
அவ என் லைஃப்ல வந்திருக்கா.
இனிமே அவ தான் என் லைஃப்னு என் மனசு சொல்லுது மச்சான்.”
என்று உணர்ச்சிகள் பொங்க சொன்னான்.
சரி என்று தலையாட்டிய ராகுல்,
“உங்க விஷயத்துல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல.
பட் நீங்க மட்டும் இல்ல, வேற யார் எங்க அக்காவ கஷ்டப்படுத்தணும்னு நெனச்சாலும் நான் விட மாட்டேன்.
அவ ஹாப்பியா இருக்கிற வரைக்கும் எனக்கு ஓகே தான்.
அவ லைஃப்ல என்ன பண்ணனும்னு அவளே டிசைட் பண்ணட்டும்.”
என்று சொல்லிவிட, பிரியா தன் விஷயத்தில் என்ன முடிவெடுப்பாள்? என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான் இசை.
அப்போது அங்கே பிரியா கையில் சில விதவிதமான கீரைகளையும், மூலிகைகளையும் வாங்கிக் கொண்டு கேட்டை திறந்து உள்ளே வந்தாள்.
அவள் கையில் ஒரு பெரிய பையுடன் அதை தூக்க முடியாமல் உள்ளே வருவதை கவனித்த இசை,
வேகமாக ஓடிச் சென்று அவள் கையில் இருந்த பைகளை வாங்கிக் கொண்டு,
“இனிமே என் கிட்ட சொல்லாம எங்கேயும் போகாத சரியா?
உனக்கு எங்க போகணும்னாலும் என் கிட்ட சொல்லு.
நானும் உன் கூட வரேன். எதுக்கு தனியா இத்தனை ஐட்டம்சையும் வாங்கி தூக்கிட்டு வந்து கஷ்டப்படுற?” என்று அன்புடன் கேட்டான்.
உடனே அவன் கண்களை ஒரு நொடி உற்றுப் பார்த்த ப்ரியா,
“எல்லா நேரமும் நம்ம கூட யாராவது ஒருத்தர் இருந்து நம்மள ப்ரொடெக்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது இசை.
அத செருப்பால அடிச்சு இந்த லைஃப் எனக்கு நிறைய தடவை சொல்லிக் குடுத்திருச்சு.
நான் சும்மா தான் ஹாஸ்பிடலுக்கு அம்மாவ பாக்க போயிட்டு வந்தேன்.
அங்க ஒருத்தங்க பக்கத்துல மார்க்கெட் இருக்குன்னு சொன்னாங்க.
அங்க போய் பார்த்தேன். இதெல்லாம் ஃபிரஷா இருந்துச்சு. அதான் வாங்கிட்டு வந்தேன்.”
என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.
நேற்று இரவு வரை அனைத்தையும் இருவரும் சேர்ந்து நல்லபடியாக செய்து முடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்த பிரியா,
இப்போது ஒரே நொடியில் தன்னை தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி அவனை ஒரு அடி தள்ளி நிற்க வைப்பதை நினைத்து வருத்தப்பட்டான் இசை.
பின் “ஒருவேளை ராகுல் சொன்ன மாதிரி பிரியாவும் அவ யாழினி மாதிரி இருக்கிறதுனால மட்டும் தான் நான் அவ கூட பேசி பழகுறேன்னு நினைச்சி இருக்கலாம்.
அதனால தான் அவ என்கிட்ட இப்படி பிஹேவ் பண்றா போல..
அது அப்படி இல்லைன்னு அவளுக்கு புரிய வைக்கணும்.
அத புரிஞ்சுகிட்டா இவ என்ன நம்பி என்னை ஏத்துக்கறதுக்கும், லவ் பண்றதுக்கும் ஒரு சான்ஸ் இருக்கும்.
என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..!!” என்று நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு,
அவள் வாங்கி வந்த பொருட்களை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான் இசை.
அப்போது அங்கே ஜீவா பால் வாங்கிக் கொண்டு வர,
கிச்சனுக்கு சென்று அவன் ஒரு பக்கம் டீ வைக்க தொடங்கிவிட,
தான் வாங்கி வந்த கீரைகள் மற்றும் மூலிகைகள் என அனைத்தையும் எடுத்து இசை மற்றும் ஜீவாவிடம் காட்டிய பிரியா,
“நம்ம சேல் பண்ற ஐட்டம்ஸ் குவாலிட்டியா இருக்கிறது எவ்வளவு முக்கியமோ,
ஹெல்தியா இருக்கிறது அதைவிட ரொம்ப முக்கியம்..
அதான் இத பார்த்த உடனே நான் சாம்பிளுக்கு வாங்கிட்டு வந்துட்டேன்.
எங்க வீட்ல இந்த மாதிரி கீரை மூலிகைகள் எல்லாத்தையும் பயன்படுத்தி நாங்க சாதம், ரசம், கூட்டு, பொரியல், துவையல், சூப்ன்னு நிறைய செய்வோம்.
அதை நான் உங்களுக்கு ஒவ்வொன்னா செஞ்சு காட்டுறேன்.
இங்க வந்து 500 to 1000 வரைக்கும் ஸ்பெண்ட் பண்ணி சாப்பிடுற கஸ்டமர்ஸ்க்கு நம்ம இத காம்ப்ளிமென்ட்ரியா கொடுக்கலாம்.
அந்த பிரீமியம் கஸ்டமர்ஸை தான் நம்ம ஃபர்ஸ்ட் டார்கெட்.
அப்படியே வர்றவங்க எல்லாரும் இங்க இந்த ஐட்டம்ஸ் கூட கிடைக்குதான்னு நோட் பண்ண ஆரம்பிப்பாங்க.
கஸ்டமர் கிட்ட இந்த மாதிரியான ஹெல்தி ஃபுட் ஐட்டம்ஸ் ரீச் ஆச்சுன்னா,
அங்க வெளிய இதுக்குன்னு தனியா ஒரு குட்டி ஸ்டால் போட்டு அங்க ஒரு ஆளை வச்சு இதுவே ஃபோக்கஸ் பண்ணி நம்ம நிறைய சேல் பண்ணா நம்ம ரெஸ்டாரன்ட் ஃபேமஸ் ஆயிடும்.
இதுக்கான டார்கெட் கஸ்டமர்ஸ் யாருன்னு நம்ம கண்டுபிடிக்கணும்.
இந்த ஏரியால அப்படி யாரும் இல்லைனா கூட, இதுல நிறைய ஹெல்த் benefits இருக்குன்னு நிறைய பில்டப் பண்ணி சொல்லி நம்ம அவங்களையெல்லாம் attract பண்றதுக்கு ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்.”
என்ற பிரியா அந்த ரெஸ்டாரன்ட்டை டெவலப் செய்வதற்காக தன் மைண்டில் உள்ள ஒவ்வொரு ஐடியாவையும் அவர்களிடம் விளக்கி சொல்லிக் கொண்டு இருந்தாள்.
அரை தூக்கத்தில் எழுந்து கீழே வந்திருந்த ராகுல்,
பிரியாவை நேரில் கண்டவுடன் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்து,
நிம்மதி அடைந்து பாதியில் அவன் விட்டுவிட்டு வந்த தூக்கத்தை கண்டினியூ செய்வதற்காக மீண்டும் மேலே சென்று விட்டான்.
-மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.