“சனா இங்க தான் மார்க்கெட்…. இங்கே இறங்கிக்கோ உனக்கு என்ன வேணுமோ எல்லாம் வாங்கிட்டு, எதிர்க்க அங்க ஒரு டீ கடை இருக்கு பார்த்தியா அங்க வந்து வெயிட் பண்ணு நாங்க அதுக்குள்ள எங்க வேலையை முடிச்சிட்டு வந்துடுறோம்…. ஒரு வேல உனக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டதுன்னா எனக்கு ஃபோன் பண்ணு…. ஐயோ ஃபோன் பண்ணலாமா வேணாமான்னு எல்லாம் யோசிக்காத ஏதாவது ஹெல்ப்ன்னா எனக்கு ஃபோன் பண்ணு சரியா… நாங்களும் கிட்ட தான் போறோம் சீக்கிரம் வந்திடுவோம்” என்று சரவணன் அறிவுரைகளை கூறினான்.
சனந்தா மெல்லிய புன்னகையுடன், “ரொம்ப தேங்க்ஸ் சரவணன்…. ஏதாவதுன்னா உங்களுக்கு ஃபோன் பண்றேன்… அதே மாதிரி நீங்க வரர்துக்கு ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி ஃபோன் பண்ணுங்க…. நான் ரெடியா அந்த கடை கிட்ட வந்து நின்னுக்குறேன்” என்று சனா கூற, “ம்ம்… ஓகே ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி நான் ஃபோன் பண்றேன்” என்று சரவணன் கூற, இருவரும் சென்றனர்.
“ஏன் டா அறிவே இல்லையா டா உனக்கு…. ஏதாவது ஒன்னு பேசிட்டே இருப்பியா….. காலையில நடந்து போக சொல்லுன்ற கரெக்டா சனா வந்தா…. இப்ப திருப்பி என்னடான்னா ஆக்சிடென்ட் பண்ண போறியா நம்ம உயிரோட இருக்குறது பிடிக்கலையான்னு சொல்லி பேசுற… அவ என்ன நினைப்பா கொஞ்சம் யோசிச்சு பாரேன்…. அவளுக்கே நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லை….. இதுல நீ வேற ஏன்டா இன்னும் கஷ்டப்படுத்திட்டே இருக்க… அவ பாவம் டா” என்று சரவணன் கூற, விக்ரம் எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தான்.
“நான் ஒன்னு சொல்றேன் நீ கோபப்பட்டாலும் பரவால்ல…. இந்த இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா இந்நேரத்துக்கு நீ அந்த பொண்ண மன்னிச்சு விட்டுட்டு இருப்ப விக்கி….. சனா தான் நீ தேடிட்டு இருந்த பொண்ணு…. ரொம்ப பிடிச்சு அலைஞ்சு தேடிட்டு இருந்த பொண்ணு இவ…. இவ இப்படி ஒரு தப்பு பண்ணிட்டாளா அப்படின்ற கோபம் தான் உனக்கு இருக்கு…. கொஞ்சம் உன் மனசுல இருக்குற அந்த உணர்வு எல்லாமே நீயே நல்ல அலசி பாரு உனக்கு உண்மை தெரியும்” என்று சரவணன் கூற, விக்ரம் இன்னுமும் மௌனம் காத்தான்.
“உன்கிட்ட பதில் இல்ல விக்கி… அமைதி மட்டும் தான் பதிலா இருக்கு அதனால தான் சொல்றேன் திரும்பத் திரும்ப பேசி சனாவ கஷ்டப்படுத்தாதே” என்று சரவணன் கூறினான். “சரி நீ என்ன ரொம்ப பண்ற அந்த பொண்ணுக்காக…. ரெண்டு நாள்ல சனான்னு கூப்பிடுற அவளும் உன்னை சரவணான்னு கூப்பிடுறா” என்று விக்ரம் கேட்க, “ஏன் உனக்கு பொறாமையா இருக்கா??” என்று சரவணன் கேலியாக கேட்க, “அது… அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்று விக்ரம் தட்டு தடுமாறி கூற, சரவணன் சிரித்து விட்டான்.
“ஏன் டா சிரிக்கிற??” என்று விக்ரம் கேட்க, “ஒன்னும் இல்ல நீ கேட்ட கேள்விக்கான பதில் உனக்கே தெரியும்…. நான் இப்படி தான் இருப்பேன்…. யாரா இருந்தாலும் நான் இப்படித் தான் நடந்துக்குவேன்…. என்னை ஏமாத்திட்டே போனவங்களா இருந்தாலும் நான் இப்படி தான்டா இருப்பேன்... அது உனக்கு நல்லாவே தெரியும்” என்று சரவணன் கூற, “அது தான் தெரியுமே இருந்தாலும் என்னமோ தெரியல எனக்கு அவ மேல கோபம் இருக்கு அதனால தான் அப்படி பேசி உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்… சாரி மச்சான்” என்று விக்ரம் மனதார கூறினான்.
“ம்ம்…. பரவால்ல நீ கோபத்துல பேசுறேன்னு புரியுது… ஆனா, ஒன்னு எனக்கு ரொம்ப உறுதியாக தோணுது… சனா மேல எந்த தப்பும் இருக்க வாய்ப்பு இல்லன்னு நினைக்குறேன்…. நான் அவ கூட பேசிட்டு வந்ததுல இருந்து சொல்றேன்….. அதுவும் இல்லாம அவ செய்யுற வேலை…. அவ என்கிட்ட பேசுறது உங்க அம்மா அப்பா கிட்ட நடந்துக்குறது இது எல்லாத்தையும் வெச்சு தான் சொல்றேன்… இத்தனைக்கும் நான் சிசிடிவி ஃபுட்டேஜ் கூட பார்த்தேன் சனா அப்புவ கூட்டிட்டு போனது…. இருந்தாலும் எனக்கு என்னமோ வேற எங்கேயோ தான் தப்பு நடந்து இருக்கும்னு தோணுது” என்று சரவணன் கூறினான்.
“எனக்கும் அந்த ஆசை இருக்கு இவ மேல தப்பு இருக்க கூடாதுன்னு…. ஆனா, இருந்திருமோன்ற பயத்துல தான் ரொம்ப கோபம் வருது மச்சான்” என்று விக்ரம் கூறினான். “புரியுது டா… கொஞ்ச நாள் வெயிட் பண்ணு… அவளுக்கே கூட எல்லாம் ஞாபகத்துக்கு வரலாம்… அப்ப உண்மை என்னன்னு தெரியும்… பிரகாஷ் சார் கூட விசாரிக்க சொல்லி இருக்காருல அப்படியும் உண்மை தெரிய வரலாம்” என்று சரவணன் கூறினான்.
“ம்ம்…. இப்ப உன்கிட்ட பேசுறப்ப தான் எனக்கே ஒரு தெளிவு கிடைச்சுது… என்னோட கோபத்துக்கு காரணம் தெரியாம ரொம்ப அவள காயப்படுத்திட்டேனோ” என்று விக்ரம் கேட்க, “உனக்கு இதுல சந்தேகம் வேறயா கண்டிப்பா காய தான் படுத்தி இருக்க….. ஆனா, நீ பேசுறத ஏன்னு தெரில சனாவும் பெருசா எடுத்துக்கல… ஒரு வேல நீ இப்படி தான்னு நினைச்சிட்டா போல” என்று சரவணன் விக்ரமை வம்புக்கு இழுத்தான்.
விக்ரம் சரவணனை முறைக்க, “சரி சரி சீக்கிரம் நம்ம வேலய முடிச்சிட்டு போலாம் சனாவுக்கு ஹெல்ப் பண்ண” என்று சரவணன் கூறி இருவரும் அவர்களின் வேலையை காண சென்றனர்.
சனந்தா ஊட்டியில் பெரிய மார்கெட்டான முனிசிபல் மார்கெட் உள்ளே சென்று அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொண்டாள். சமைக்க தேவையான பொருட்கள், பாத்திரங்கள், அங்கே மாணவர்களுக்கு தேவையான பொருட்கள் என முடிந்த அளவிற்கு அனைத்தையும் வாங்கிக் கொண்டாள்.
அப்படி ஒரு கடையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருக்க, “உன்னை இங்க நான் பார்த்ததே இல்லையே புதுசா வந்திருக்கியாமா?” என்று கடையில் இருப்பவர் கேட்க, “ஆமா அக்கா, இங்க வண்ணம் கிராமத்துக்கு வந்து இருக்குற வாலண்டியர் டீச்சர்” என்று சனந்தா கூறினாள்.
“ஓ!! அப்படியா அதான் இதுக்கு முன்னாடி உன்னை பார்த்ததே இல்லையேன்னு நினைச்சேன்” என்று கடைகார அக்கா பேசுகையில், அந்த மார்க்கெட் முழுவதும் சலசலப்பாக்கி விட்டது.
“என்ன ஆச்சு திடீர்னு?” என்று சனந்தா கேட்க, “அதோ அங்க வராரு பார்த்தியா அவர் பெயர் தான் காளி… இங்க இருக்கிற எல்லா மார்க்கெட்டும் அவர் கண்ட்ரோல்ல தான் இருக்கும்… நீ எதுக்கும் உள்ள வந்து ஒளிஞ்சுக்கோ… ஏன்னா உங்க கிராமத்துக்கும் இவருக்கும் ஒத்து வராது… நீ வேற புதுசா வந்திருக்கேன்னு சொல்ற…. அப்புறம் உன்னை ஏதாவது பண்ணிட்டாங்கன்னா உள்ள வா” என்று கடை அக்கா கூறவும் சனந்தாவும் அதன் படி கேட்டு உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள்.
“அந்த கிராமத்துக்கும் இவருக்கும் என்ன பிரச்சனையா இருக்கும்…. அதுவும் இல்லாம நான் அந்த கிராமத்துக்கு வந்து இருக்கேன்னு இவருக்கு எப்படி தெரியும்… நானே புதுசு… சரி எதுக்கும் முகத்தையாவது பார்த்து வெச்சிக்கலாம் எப்ப வேணாலும் யூஸ் ஆகும்” என்று சனந்தா அவளுக்குள் பேசிக் கொண்டு மெதுவாக எழுந்து யார் காளி என்று பார்த்தாள்.
அவரைப் பார்த்ததும் அபர்ணாவின் ஃபோட்டோவை பார்த்த போது என்னென்ன நினைவுகள் வந்ததோ அனைத்தும் அலை மோதியது…. பின் தலை வலிக்க ஆரம்பிக்கவும் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள், சனந்தா. அவளது கைபேசி ஒலித்தது கூட அவளுக்கு தெரியாமல் இருக்க, கடை அக்கா அவளது கைபேசியை எடுத்து ஹலோ!! என்று பேசினார்.
“எங்க இருக்க??? நாங்க உள்ள வந்துட்டோம் சனா… மார்க்கெட் உள்ளே தான் இருக்கோம்” என்று சரவணன் மறுபுறம் பேசவும், “தம்பி இருபத்தி நாளாவது கடையில இருக்காங்கப்பா…. என்னன்னு தெரியல திடீர்னு தலையை பிடிச்சுட்டு உக்காந்துட்டு இருக்கு பா இந்த பொண்ணு” என்று கடை அக்கா கூறவும் சரவணன் மற்றும் விக்ரம் விரைந்து ஓடி வந்தனர்.
விக்ரம் முதலில் வந்து சனாவை தன் தோளுடன் அணைத்து கொண்டு, “என்ன ஆச்சு?” என்று கேட்டான். சனா இன்னும் அதே நினைவுகளில் இருந்தாள்.
“சரவணன் தம்பி நானே உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க அந்த பொண்ணுக்கு ஃபோன் பண்ணிட்டீங்க…. நல்லா தான் நின்னுட்டு என்கிட்ட பேசிட்டு இருந்துது…. காளி அண்ணா போனாரு அவரு பார்த்து உங்க ஊரு ஆளுன்னு தெரிஞ்சதுன்னா ஏதாவது வம்பு பண்ணுவாருன்னு நான் தான் உள்ள வந்து ஒளிஞ்சிக்க சொன்னேன்… அந்த புள்ளையும் உள்ள வந்து உக்காந்துகிட்டா… ஆனா, அதுக்கப்புறம் என்னன்னு தெரியல தலைய புடிச்சிட்டு உக்காந்துருச்சு” என்று கடை அக்கா பதற்றத்துடன் கூறினார்.
“ரொம்ப தேங்க்ஸ் அக்கா….. ரொம்ப நல்லதா போச்சு உங்க கடையான்ட வந்ததுனால தான் தெரிஞ்சது…. இவங்க எங்க கிராமத்தோட புது வாலன்டியர் டீச்சர்…. புது இடம் வேற அதனால கூட அப்படி ஆயிருக்க போல நாங்க பார்த்துக்குறோம்….. ரொம்ப நன்றி அக்கா” என்று சரவணன் கூறி “மச்சான் அவளை எழுப்பு நம்ம முதல்ல இங்கிருந்து போலாம் அதுக்கு அப்புறம் பேசிக்கலாம்” என்று சரவணன் கூறினான்.
“சனா இங்க பாரு எந்திரி நம்ம வீட்டுக்கு போலாம் அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு பேசலாம் எந்திரி” என்று சரவணன் கூற, சனா மெதுவாக விக்ரமின் கரங்களின் உதவியால் எழுந்து அவர்களுடன் சென்றாள்.
சனந்தா வாங்கிய அனைத்து பொருட்களையும் ஜீப்பில் பின் வைத்துவிட்டு சரவணன் தான் வண்டியை ஓட்டுவதாக கூறினான். இன்னுமும் சனந்தா விக்ரமின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டிருந்தாள்…. அவளது கை இன்னும் நடுக்கத்தில் இருந்ததால் அவளை பின் சீட்டில் அமருமாறு கூறி அவளுடன் விக்ரமும் அவளின் கையைப் பிடித்துக் கொண்டே அமர்ந்து கொண்டான்.
“டேய்!! அவனுங்க வண்ணம் கிராமம் பசங்க தானே??” என்று காளி கேட்க, “ஆமா அண்ணா அவங்க தான்” என்றனர் கூட இருந்த அடியாட்கள். “யார் அந்த புதுசா இருக்கிற பொண்ணு?” என்று காளி கேட்க, “தெரியல அண்ணா…. வாலன்டியர் டீச்சர் யாராவது இருப்பாங்க போல நான் விசாரிச்சுட்டு சொல்றேன் அண்ணா” என்று அவரின் அடியாள் ஒருவன் கூறினான்.
“ஆமா அந்த ஊரு பொண்ணு பேரு என்ன??” என்று காளி கேட்க, அபர்ணா!! என்று அடியாட்களில் ஒருவன் கூறினான். “அந்த பொண்ணு கூட இன்னொரு பொண்ணு கார ஓட்டிட்டு போனாளே அவளைப் பத்தி விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு??” என்று காளி கேட்க, “அது தான் விசாரிச்சிட்டு இருக்கோம் அண்ணா…. அவங்க சைடு கொஞ்சம் பெரிய ஆளுங்களா இருக்கறதுனால எதுவும் பெருசா கண்டுபிடிக்க முடியல… அந்த பொண்ணு உயிர் பிழைச்சதுமட்டும் தான் இப்போதைக்கு வந்திருக்க தகவல்…. அதுக்கு மேல வேற எதுவும் கண்டுபிடிக்க முடியல…. நான் கேட்டு இருக்கேன் கொஞ்ச நாள் ஆகும்… ஆனா, எப்படியும் எல்லாம் விவரமும் வந்துரும் அண்ணா” என்று அடியாள் கூற, “அத கொஞ்சம் சீக்கிரமா என்ன ஏதுன்னு விசாரி” என்று காளி கூறினார்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 13
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.