அத்தியாயம்: 11
சிம்ரனின் உடலுக்குள் இருந்த விக்ரமுடன் மீராவின் வீட்டிற்கு ஸ்கூட்டியில் அவளுடன் சென்றாள் ரதி. இன்னும் விக்ரம் ராதியின் தோள்களில் தான் அசையாமல் அமர்ந்திருந்தான். அதனால் அவளது இதயம் படபடவென துடித்துக் கொண்டிருக்க, மீராவின் அறைக்கு வந்தவுடன் மெதுவாக திரும்பி அந்தக் கிளியை பார்த்து “அதான் வீட்டுக்கு வந்துட்டமே.. இப்ப கூட என் மேல இருந்து இறங்கக் கூடாதா?" என்று பாவமாக கேட்டாள் ரதி.
அதனால் அவளிடம் இருந்து பறந்து சென்று ஒரு மேஜையின் மீது அமர்ந்தான் விக்ரம். இத்தனை வருடங்களாக தாங்கள் ஆசையாக வளர்த்த கிளியயே இப்போது பயத்துடன் பார்த்த ரதி, “இப்பயாவது சொல்லு சிம்ரன். உனக்கு என்ன ஆச்சு? நீ என் திடீர்னு இப்படி male Voiceல பேசி எங்கள பயமுறுத்துட்டு இருக்க?" என்று கேட்க, “நான் சிம்ரன் இல்லை ரதி, விக்ரம். உனக்கு புரியிற மாதிரி சொல்லணும்னா விக்ரம் குருமூர்த்தி." என்று கிளியின் உடலுக்குள் இருந்த விக்ரம் தன் சொந்த குரலில் சொன்னான்.
“என்னது... விக்ரம் குருமூர்த்தியா..!!! அப்ப நிஜமாவே அவன் செத்துப் போய் தான் பேயா சுத்திட்டு இருக்கானா? இவ்வளவு நேரம் நம்ம போய் கூட தான் பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருந்தோமா..!!" என்று நினைத்த ரதி மெதுவாக நகர்ந்து மீராவின் அருகே சென்று அவளது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவளது காதில் “ஏய்... பயமா இருக்குடி." என்று கிசுகிசுக்க, “ஆமா பின்ன எனக்கு மட்டும் ஜாலியா இருக்கா? எதுக்குடி பேயே உங்க வீட்டு கிளிக்குள்ள வச்சு பார்சல் பண்ணி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்த? இத எப்படி நம்ப இங்க இருந்து துரத்துறது?" என்று கேட்டாள் மீரா.
“ஆமா சிம்ரன் கீ... கீன்னு கத்திக்கிட்டு இருக்கிறது எனக்கு பிடிக்காம அவ இப்படி ஏதாவது பையன் வாய்ஸ்ல பேசினா நல்லா இருக்கும். ஜாலியா அது கேட்டுட்டு இருக்கலாம்ன்னு நினைத்து நான் தான் அவன் ஆவிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கிளிக்குள்ள வச்சு வளர்க்கிறேன். ஏண்டி நீ வேற.. எரிச்சல் மயிற கிளப்பிக்கிட்டு." என்று ரதி சொல்ல, பதிலுக்கு அவளிடம் ஏதோ சொல்ல தன் வாயை திறந்தாள் மீரா. அப்போது அவர்களை பார்த்து விக்ரம் “போதும் நிறுத்துங்க...!!! நான் என்ன சொல்ல வரேன்னு கேட்கிறத விட்டுட்டு எதுக்கு தேவையில்லாம நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க இப்போ?" என்று கோபமாக கேட்டான். அதனால் பயந்து போன ரதியும் மீராவும் ஒருவரை ஒருவர் இருக்கமாக பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரின் உடலும் நடுங்கி கொண்டிருந்தது.
“ஐயோ... சார்... கோச்சுக்காதீங்க. நாங்க உங்கள டிஸ்டர்ப் பண்ணல. நீங்க பேசுங்க சார்." என்று திக்கி திணறி மீரா சொல்ல, “ம்ம்.." என்ற விக்ரம் பறந்து அவர்கள் அருகில் செல்ல, அவர்கள் இருவரும் பயத்தில் மெல்ல மெல்ல பின்னே சென்று கொண்டே இருந்தார்கள். அதனால் மீண்டும் சோகமான விக்ரம், தரையில் அமர்ந்து அவர்களை பாவமாக பார்த்தான். அவனை அப்படி பார்க்க ரதிக்கு கஷ்டமாக இருந்தது.
அதனால் தானும் தரையில் மண்டியிட்டு அமர்ந்த ரதி “யார் நீங்க? உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் என்ன follow பண்ணிட்டு இருக்கீங்க...!!!" என்று கேட்க, “அதான் ஆல்ரெடி சொன்னேனே... என் பெயர் விக்ரம் குருமூர்த்தி. குரு இண்டஸ்ட்ரீஸ் ஓட சி.இ.ஓ. எங்க அப்பா தான் குருமூர்த்தி. நான் சின்ன பையனா இருக்கும்போதே எங்க அம்மா இறந்துட்டாங்க. அவங்க இறந்த சோகத்துல எங்க அப்பாவுக்கும் உடம்பு சரி இல்லாம போயிடுச்சு. So நான் ஸ்கூல் முடிச்ச உடனே ஆபீஸ் ஒர்க் எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு இரண்டு தம்பி இருக்காங்க. இப்ப எங்க அப்பாவோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்கு. எப்ப வேணாலும் அவர் இறந்து போயிடுவாரு.
அவருக்கு அப்புறம் குரு இண்டஸ்ட்ரீஸ்-ஐ நான் டேக் ஓவர் பண்ணனும்னு அவர் ஆசைப்பட்டாரு. எனக்கு நான் தான் சேர்மன் ஆகவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்ல. ஆனா என்னோட தம்பிங்க ரெண்டு பேருக்கும் பிசினஸ்-ஜ மெயின்டைன் பண்ற அளவுக்கு இன்னும் நாலெட்ஜ் வரலன்னு எனக்கு தோணுச்சு. அதான் அவர் சொன்னதுக்கு நான் ஓகே சொன்னேன். ஆனா அது என் தம்பிகளுக்கு என் மேல பொறாமையையும் வெறுப்பையும் வரவச்சிருச்சு. நான் எப்பவும் வேலை வேலை இருந்ததுனாலையோ என்னவோ தெரியல, அவனுங்களுக்கு என் கூட பெருசா எந்த bondingம் இல்லாம போயிடுச்சு. நான் அடுத்த சேர்மன் ஆக கூடாதுன்னு பிளான் பண்ணி என்ன கொன்னுட்டாங்க. அவங்க இப்படி பண்ணதுக்கு அவங்களுக்கு இதுல இஷ்டம் இல்லன்னு என்கிட்ட சொல்லி இருந்தா, நானே விலகி போயிருப்பேன்." என்று உடைந்த குரலில் சொன்னான் விக்ரம்.
அவன் சொன்னதைக் கேட்டு கண்ணீர்விட்ட ரதி “நான் எப்படியாவது உங்களை காப்பாத்திடலாம்னு நினைச்சேன். நீங்க இப்ப உயிரோட இல்லைன்னு என்னால நம்பவே முடியல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு விக்ரம்." என்று சொல்ல, பறந்து சென்று அவளது தோள்களில் அமர்ந்த விக்ரம் “அழாதடி. அப்போ நான் உயிருக்கு போராடிட்டு இருந்தபோ இப்படித்தான் நீ எனக்காக அழுதுட்டு இருந்த. அப்டி உன்ன பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? எனக்காக எங்க அம்மாவுக்கு அப்புறம் கண்ணீர் சிந்தன ஒரே ஒரு பொண்ணு நீ மட்டும் தான். உன்ன பார்த்ததுக்கு அப்புறம் உன்னை தவிர வேற எதைப் பத்தியும் என்னால யோசிக்க முடியல. ஆகாஷ் என்ன தூக்கிட்டு போனதுக்கு அப்புறமா எனக்கு என்ன ஆச்சுன்னு கூட நான் போய் பாக்கல. அந்த அளவுக்கு உன்னோட அன்பால நீ என்னை கட்டிப்போட்டுட்டடி. எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு. In fact இவ்ளோ சீக்கிரம் இப்படி எல்லாம் என் லைஃப்ல எனக்கு நடக்கும்னு நான் நினைச்சு கூட பாத்ததில்ல. எனக்கே தெரியாம நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் ரதி. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு." என்றவனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
தன் வாழ்நாளில் முதன் முதலில் ரதி தன்னை ஒருவன் காதலிப்பதாக சொல்லி கேட்கிறாள். அதுவும் அவன் மிகவும் அழகான அவளால் தொட முடியாத உச்சத்தில் பெண்களின் கனவு நாயகனாக இருப்பவன். ஆனால் இதனால் இப்போது என்ன பயன்? அவன் தான் இறந்து விட்டானே...!!! அதனால் தனது இந்த பாலா போன விதியை நினைத்து நொந்து கொண்ட ரதி என்னவோ பல நாட்களாக அவள் காதலித்தவனோ இல்லை அவளுக்கு தாலி கட்டிய கணவனோ இப்போது இறந்து விட்டதை போல தன் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதாள்.
அவள் அழுவதை காண முடியாமல் விக்ரம் பறந்து வெளியில் செல்ல, “ஒரு நிமிஷம்.... எனக்கு உங்கள பாக்கணும். நீங்க செத்துப் போய் இருந்தா கூட பரவால்ல. அட்லீஸ்ட் உங்க டேட் பாடிய ஆவது ஒரு தடவை நான் பார்க்கணும். என் வாழ்க்கையில முதல் முறையா என்ன லவ் பண்றேனு சொன்னது நீங்க தான். ஒரு மனுஷன் கண்டிப்பா செத்து போனதுக்கு அப்புறம் இப்படி வந்து பொய் சொல்ல மாட்டான். எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு எனக்கு தெரியும். ஆனா பரவால்ல. என்னையும் ஒருத்தன் trueஆ லவ் பண்ணான்னு நான் நினைச்சு சந்தோஷப்பட்டுக்குறேன். உங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்க. எனக்கு கடைசியா உங்களை ஒரு தடவை பார்த்தா மட்டும் போதும்." என்று தன் கண்ணீரை துடைத்து விட்டு உடைந்த குரலில் சொன்னாள்.
அதனால் சரி என்று தலையாட்டிய விக்ரம் “என் கூட வாங்க." என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி பறந்து சென்றான். ஒரு பெருமூச்சு விட்டு தன்னை சற்று நிதானப்படுத்திய ரதி “நான் போய் அவர பாத்துட்டு வரேன்." என்று மீராவிடம் சொல்ல, “நானும் வரேன் ரதி. என்னால உன்னை எங்கேயும் தனியா அனுப்ப முடியாது." என்ற மீரா அவளது கையை பிடித்து அவளுடன் தன் வீட்டை விட்டு வெளியே வந்தாள். ரதி தனது ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்ய, மீரா அவளுக்கு பின்னே அமர்ந்து கொண்டாள்.
விக்ரம் ரதியின் தோள்களில் அமர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு வீட்டிற்கு செல்ல ரதிக்கு வழி சொன்னான். அவன் சொன்ன பாதையில் அழுது கொண்டே தனது ஸ்கூட்டியில் சென்றாள் ரதி. கிளி உருவத்தில் இருந்த விக்ரம் தனது இறக்கையை வைத்து அவளது கண்ணீரை துடைத்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்திற்கு பின் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். “இப்படி ஒரு இடத்துலயா பணக்காரங்க எல்லாம் வீடு கட்டி குடியிருப்பாங்க?" என்று நினைத்த மீரா “சார் உங்க வீடு இங்கயா இருக்கு?" என்று கேட்க, “இல்ல நம்ம எங்க வீட்டுக்கு போகல. இங்க எங்களோட சீக்ரெட் hiding spot இருக்கு. என் ஃபேமிலில இருக்கிறவங்கனால என் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு என் மேனேஜர் ஆகாஷுக்கு தெரியும். நான் செத்துப் போய் இருந்தாலும் என் பாடிய அவங்க கிட்ட அவன் கொடுத்திருக்க மாட்டான். So அவனும் என் டெட் பாடியும் இங்க தான் இருக்கணும். இன்னும் கொஞ்ச தூரம் காட்டுக்குள்ள போகணும். ஆனா அங்க நடந்து தான் போக முடியும்." என்றான் விக்ரம்.
அதனால் தனது ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திய ரதி அதிலிருந்து இறங்கியவள், மீராவுடன் விக்ரம் சொல்லும் வழியில் காட்டிற்குள் சென்றாள். அங்கே ஒரு புதர் போன்ற அமைப்பு இருக்க, அதற்குள் ஒரு ஒத்தையடி பாதை சென்றது. அவர்கள் இருவரும் அதற்குள் நடக்க, விக்ரம் சொன்னதைப் போல அங்கே ஒரு சிறிய வீடு இருந்தது. அதனால் வேகமாக அந்த வீட்டின் அருகே ஓடி சென்ற ரதி, அந்த வீட்டின் கதவைத் தட்டி “உள்ளே யாராவது இருக்கீங்களா?" என்று தன் அடி தொண்டையில் இருந்து கத்தி கேட்டாள்.
ஆனால் உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. யாரும் வந்து கதவையும் திறக்கவில்லை. அதனால் சிறு விசும்பல்களுடன் மீண்டும் அழ தயாரான ரதி விக்ரமைப் பார்த்து “இங்க யாரும் இல்லை போல...!!!" என்று சோகமாக சொல்ல, “அங்க ஒரு லெட்டர் பாக்ஸ் இருக்குல்ல... அத தலைகீழா திருப்பு. அதுக்குள்ள ஒரு காலிங் பெல் இருக்கும். அத அடிச்சா உள்ளுக்குள்ள யாராவது இருந்தா வந்து கதவை திறப்பாங்க." என்றான் விக்ரம்.
ரதி அவன் சொன்னதைப் போலவே செய்ய, “இந்த இடம் யாருக்கும் தெரியாதே... இந்த நேரத்துல இங்கே யார் வந்திருக்கிறது?" என்று நினைத்து பதட்டப்பட்ட ஆகாஷ் வந்து கதவை திறந்தான். அவன் முன்னே இரண்டு பெண்களும் ஒரு கிளியும் இருப்பது இன்னும் அவனுக்கு அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்க, “நீ லாஸ்ட்டா விக்ரம் சார் கூட இருந்த பொண்ணு தானே...!! நீ எப்படி இங்க வந்த? உனக்கு இந்த இடத்தை பத்தி யார் சொன்னது?" என்று கோபமாக ஆகாஷ் ரதியை பார்த்து கேட்டான்.
அதற்கு “நான் தான்டா சொன்னேன். அவளுக்கு என்ன பார்க்கணுமாம். அவள உள்ள விடு." என்றான் விக்ரம். கிளி தன் பாஸ் இன் குரலில் பேசுவதை நம்ப முடியாமல் தன் வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். அதனால் கடுப்பான விக்ரம் “டேய் என்னடா பாக்குற? இது நிஜமாவே நான் தான். நீங்க என்ன தூக்கிட்டு கார்ல ஏறும்போதே என்னோட ஆத்மா என் Bodyல இருந்து வெளிய வந்திருச்சு." என்றான் விக்ரம். அவன் சொல்லும் தோரணையை வைத்தும், இந்த இடம் கண்டிப்பாக தன்னையும் விக்ரமையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதாலும், கிளியின் உருவத்தில் இருந்த விக்ரம் சொன்னதை நம்பினான் ஆகாஷ்.
அதனால் அவன் அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று ஒரு அறையின் கதவை திறந்து “உள்ள போய் பாருங்க." என்றான். அங்கே மருத்துவமனை செட்டப்பில் கட்டியலில் படுத்திருந்தான் விக்ரம். அவனது முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு இருந்தது. அவனது கைகளில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. அவன் அருகில் இருந்த ஈசிஜி மானிட்டரில் அவனது ஹார்ட் பீட் ரேட் ஓடிக்கொண்டிருந்தது. அவன் அருகில் ஒரு மருத்துவரும், இரண்டு செவிலியர்களும் நின்று அவனை ஒவ்வொரு நொடியும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த காட்சியை பார்த்த ரதி, விக்ரம், மீரா மூவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதனால் “நாங்க கஷ்டப்பட்டு விக்ரம் சார் உயிரை காப்பாத்திட்டோம். ஆனா அவருக்கு தலையில பலமா அடிபட்டு இருந்ததுனால அவர் கோமாவுக்கு போயிட்டாரு. நாங்க எப்போ அவர் கோமாவுல இருந்து வெளிய வருவாருன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கிற நேரத்துல, அவர் உங்க ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு இப்படி வருவார் என்று நாங்க நினைச்சு கூட பாக்கல." என்றான் ஆகாஷ்.
ஒரு நாளில் எத்தனை அதிர்ச்சிகளை தான் அவள் தங்குவது? விக்ரம் தன்னை காதலிப்பதாக சொன்னது ரதிக்கு முதல் அதிர்ச்சி. சரி அவன் தான் இறந்து விட்டான், இறுதியாக அவனை ஒரு முறையாவது பார்க்கலாமே என்று நினைத்து இங்கே அவள் வந்திருந்தாள். இங்கே வந்து பார்த்தால் அவன் உயிரோடு இருக்கிறான். ஆனால் என்ன பயன்? வெறுமனே அவன் கோமாவில் இருக்கிறான் என்று தெரிந்திருந்தால் கூட, ஆகாஷை போல அவளும் எப்போதாவது அவன் கண்விழிப்பான் என்று நினைத்து அந்த நம்பிக்கையில் வாழ்ந்திருப்பாள். ஆனால் விக்ரமின் ஆத்மா தான் அவனது உடலைவிட்டு பிரிந்து விட்டதே...!! இனி அவன் மீண்டும் உயிர் பிழைப்பது எப்படி சாத்தியமாகும்?
என்றெல்லாம் யோசித்து தன் முகத்தை அவளது இரு கைகளாலும் மூடிக்கொண்டு தரையில் மண்டியிட்டு அமர்ந்து கதறி அழுத ரதி “ஆ...ஆ.... ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?" என்று சத்தமாக கத்தினாள். அவள் அருகில் சென்று அமர்ந்த மீரா அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்தாள். மீரா பேசுவதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் கண்ணீரை துடைத்துவிட்டு இப்படி ஒரு சூழ்நிலையில் சுயநினைவின்றி கிடக்கும் போதும் கூட கம்பீரமாக ஒரு அரசன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லும் அளவிற்கு தனது கட்டு மஸ்தான தேகத்தை காட்டிக்கொண்டு படுத்திருந்த விக்ரமை பார்த்தாள் ரதி.
அவள் சிரமப்பட்டு தரையில் இருந்து எழுந்து விக்ரமின் அருகே சென்று அவனது முகத்தின் மீது தன் ஒரு கையை வைத்தவள் “என்ன நீங்க இப்படி தனியா விட்டுட்டு போறதுக்காக தான் என் லைஃப்ல வந்தீங்களா? என்னையெல்லாம் யாருக்காவது பிடிக்குமான்னு நினைச்சேன். ஆனா உங்கள மாதிரி ஒருத்தன் என்னை உண்மையா லவ் பண்ணியும்... எனக்கு உங்க கூட வாழ கொடுத்து வைக்கல பாருங்க..!! இந்த விதியை நான் என்ன சொல்றது? ஒருவேளை என்னோட துரதிஷ்டம்த்துனால தான் உங்களுக்கு இப்படி எல்லாம் ஆயிடுச்சா? ப்ளீஸ் விக்ரம்... என்ன விட்டுட்டு போயிடாதீங்க." என்ற ரதி அவனுக்காக கண்ணீர் சிந்தினாள்.
அவளது கண்ணீர் துளி அவனது முகத்தில் பட்டவுடன், விக்ரமின் முகத்தில் சில அசைவுகள் தெரிந்தது. அதனால் ரதி பதட்டத்துடன் அவனைப் பார்க்க சட்டென தன் கண்களை திறந்த விக்ரம் தன் முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்கை கழட்டி விட்டு “நான் உன்னை விட்டு எப்பயும் போக மாட்டேன்டி." என்று காதலுடன் சொன்னான். உண்மையில் அவன் தான் தன்னிடம் பேசுகிறானா? இல்லை இது தன்னுடைய கற்பனையா? என்று நினைத்து நம்ப முடியாமல் ரதி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது பறந்து வந்து அவளது தோள்களில் அமர்ந்த சிம்ரன் கிளி அவனை பார்த்து கீ... கீ... என்று வழக்கம்போல கத்த, விக்ரம் உயிர்பிழைத்து விட்ட சந்தோஷத்தில் அவனை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டாள் ரதி. அவர்கள் இருவரையும் பார்த்து கலங்கிய கண்களுடன் புன்னகைத்தாள் மீரா. அவள் அருகில் நின்று கொண்டிருந்த ஆகாஷ் “உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா மேடம்?" என்று கேட்க “இன்னும் இல்ல. ரதிக்கு அவளை உண்மையா லவ் பண்ற விக்ரம் சார் கிடைச்ச மாதிரி எனக்கும் யாராவது கிடைச்சா கண்டிப்பா அவன நாளைக்கே கூட கல்யாணம் பண்ணிப்பேன்." என்றாள் மீரா. அதனால் கள்ளத்தனமாக அவளைப் பார்த்து புன்னகைத்த ஆகாஷ் “அப்போ ஓகே...!!" என்று சொல்ல, அவனைப் பார்த்து லேசாக சிரித்தாள் மீரா.
சில நாட்களுக்கு பின்...
விக்ரமின் உடல்நிலை சீராகும் வரை அவனுடனே இருந்து அவனை நன்றாக கவனித்துக் கொண்டாள் ரதி. அதனால் விரைவிலேயே நார்மலான விக்ரம், தனது அப்பா இறந்துவிட்ட செய்தியை கேள்விப்பட்டு இதுவரை அவன் பதுங்கி இருந்த இடத்தை விட்டு ரதியுடன் தன் வீட்டிற்கு சென்றான். என்ன தான் அவனது தம்பிகள் அவனை கொலை செய்ய முயற்சி செய்திருந்தாலும், அவன் அவர்கள் திருந்த அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பினான்.
ஆனால் அப்போதும் அந்த திருந்தாத ஜென்மங்கள் மீண்டும் விக்ரமையும், ரதியையும் கொலை செய்ய திட்டம் போடத் தொடங்கினார்கள். அது தெரிந்ததால் கடுப்பான விக்ரம் தன் தம்பிகள் இருவரையும் போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டான். பின் சில நாட்களிலேயே அன்னலட்சுமியின் சம்மதத்தோடு ரதியை காதலித்து திருமணம் செய்து கொண்டான் விக்ரம்.
விக்ரமைக் கண்ட நாள் முதலே அவனுக்கு தான் பொருத்தமான ஆள் இல்லை என்று நினைத்து குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தாள் ரதி. அதனால் விக்ரமின் பேச்சைக் கேட்காமல் டயட், எக்சர்சைஸ் என்று எதையெதையோ செய்து அவனுக்காக விரும்பி தன் உடல் எடையை பாதியாக குறைத்து விட்டாள். ஒரு வருடத்தில் அவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தனது வெள்ளை நிற மாளிகையில் மனைவி, மகள், அவளது குடும்பத்தில் உள்ளவர்கள் என அனைவரிடமும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான் விக்ரம்.
தன் வாழ்க்கையில் சந்தோஷம் என்ற ஒன்று எப்போதும் வரப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த ரதி, அவளை பொக்கிஷம் போல நினைத்து பாதுகாக்கும் விக்ரமை போன்ற கணவன் கிடைத்ததால் உண்மையாகவே சிண்டரெல்லாவை போல விக்ரம் அவளது வாழ்வில் வந்த பின் எல்லா நலமும் வளமும் பெற்று ஒரு மகாராணியை போல வாழ்ந்தாள். ரதியால் விக்ரமிற்கு உயிர் வாழ இரண்டாவது வாய்ப்பும், உண்
மையான சொந்தங்களும் கிடைத்தது. விக்ரமால் ரதிக்கு அவளது வாழ்க்கையே கிடைத்தது.
சுபம்.
amazon-ல் படிக்க..

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-11
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.