CHAPTER-10

Oviya Blessy

Member
Jan 4, 2025
46
0
6
சாய‌ங்கால‌ வேளை வான‌மே மேக‌த்தால் மூட‌ப்ப‌ட்டு, எங்கும் நீல‌ நிற‌ம் தெரியாத‌வாறு வெண்மை மூடியிருக்க‌, சுற்றி ப‌ச்சை நிற‌ புள்வெளிக்கு ம‌த்தியில், அமைதி நில‌விய‌ அவ்விட‌த்தில் பேர‌மைதியாய் அர்ஜுனும் ச‌ந்ராவும் அம‌ர்ந்திருக்க‌, அவ‌ர்க‌ள் முன் லிங்ஜேஷ்வ‌ர‌ன் என்று பெய‌ர் பொறிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு க‌ல்ல‌றை இருந்த‌து. அதையே ஆழ்ந்து பார்த்த‌படி இருவ‌ரும் மௌன‌மாக‌ அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.

அப்போது மெல்ல‌ த‌ன் அருகில் அம‌ர்ந்திருந்த‌ அர்ஜுனின் ப‌க்க‌ம் திரும்பிய‌ ச‌ந்ரா, "இங்க‌ வெச்சு என்ன‌மோ சொல்ற‌ன்னு சொன்ன‌ அர்ஜுன்?" என்று கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்ப, அவ‌ளும் அவ‌னை கேள்வியுட‌ன் பார்க்க‌, அப்போது அர்ஜுன், "உன‌க்கு என்ன‌ புடிச்சிருக்கா ச‌ந்ரா?" என்று கேட்டான்.

அதை கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்த‌வள், "ஆங்.. என்ன‌?" என்று கேட்க‌,

அர்ஜுன், "உன‌க்கு என்ன‌ புடிச்சிருக்கான்னு கேட்டேன்." என்றான்.

அத‌ற்கு த‌டுமாறிய‌ப‌டி, "எ..எதுக்காக‌ இப்பிடி கேக்குற‌?" என்றாள் ச‌ந்ரா.

அத‌ற்கு அர்ஜுன், "ஹாஸ்பிட்ட‌ல்ல‌ என் உயிர் போற‌ ச‌ம‌ய‌த்துல‌, நா உங்கிட்ட‌ ஒன்னு சொன்ன‌னே, நியாப‌க‌ம் இருக்கா?" என்று கேட்க‌,

அதை நினைவுக்கூர்ந்த‌ ச‌ந்ரா, அன்று ம‌ர‌ண‌ ப‌டுக்கையில் இருந்த‌ அர்ஜுன் "ஐ..ஐ.." என்று ஏதோ சொல்ல‌ வ‌ந்த‌தை நினைவுக்கூர்ந்து, "ம்ம் இருக்கு. என்ன‌ சொல்ல‌ வ‌ந்த‌?" என்று ஒருவித‌ ப‌த‌ற்ற‌த்துட‌ன் கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுன் அவ‌ளின் விழியை பார்த்தப‌டி மௌன‌மாக இருக்க‌, அவ‌னின் விழிக‌ளிலேயே அத‌ற்கான‌ ப‌திலை தேட‌ முய‌ன்றாள் ச‌ந்ரா. ஆனால் அத‌ற்குள் அர்ஜுன், "ஐய‌ம் சாரி." என்றான்.

அதை கேட்டு எதையோ எதிர்ப்பார்த்திருந்த‌ அவ‌ளின் ம‌ன‌மோ ஏமாற்ற‌ம‌டைந்துவிட‌, "எ..எதுக்கு?" என்று கேட்க‌,

அர்ஜுன், "என்னால‌ என் ச‌த்திய‌த்த‌ காப்பாத்த‌ முடிய‌ல‌ன்னு நென‌ச்சுதா உன‌க்கு அன்னிக்கு சாரி சொல்ல‌ வ‌ந்தேன்." என்றான்.

ச‌ந்ரா, "எந்த‌ ச‌த்திய‌ம்?" என்று புரியாம‌ல் கேட்க‌,

அர்ஜுன், "உன் அப்பாவுக்கு நா ப‌ண்ணி குடுத்த‌ ச‌த்திய‌ம்" என்று கூற‌, அவ்ளோ மேலும் கேள்வியுட‌ன் அவ‌னை பார்த்தாள்.

அப்போது திரும்பி அந்த‌ க‌ல்ல‌றையில் பார்வையை ப‌த்தித்த‌வ‌ன், அன்று அறைக்குள் அழைத்து சென்று லிங்கேஷ்வ‌ர‌ன் த‌ன்னிட‌ம் வாங்கிய‌ ச‌த்திய‌த்தை ப‌ற்றி அவ‌ளிட‌ம் முழுதாக‌ கூறினான். அதை கேட்ட‌ ச‌ந்ராவின் க‌ண்க‌ள் க‌ல‌ங்கி நின்ற‌து. எல்லா த‌ந்தையும் த‌ன் ம‌க‌ளுக்கு செய்வ‌தைதான் லிங்கேஷ்வ‌ர‌னும் செய்திருக்கிறார். ஆனால் இவ‌ளை பொறுத்த‌வ‌ரையில் இவ்வுல‌கில் த‌ன்னைவிட‌ அதிஷ்ட‌சாலி வேறு யாரும் இல்லை என்று இந்த‌ நிமிட‌ம் உண‌ர்ந்தாள். லிங்கேஷ்வ‌ர‌ன் திடீரென‌ ம‌ர‌ணித்திருந்தாலும், ஒரு த‌ந்தையாக‌ தான் செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மைக‌ளை முழுதாக‌ முடித்துவிட்டுதான் சென்றிருக்கிறார் என்ப‌தில் பெருமித‌ம்கொண்டாள்.

அப்போது அர்ஜுன் அவ‌ள் ப‌க்க‌ம் திரும்பாம‌லே, "பாஸோட‌ க‌டைசி ஆச‌ இதுதா. நாம‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌ணும்." என்று கூறிய‌ப‌டி அவ‌ள் ப‌க்க‌ம் திரும்ப‌, அவ‌ள் க‌ண்க‌ள் க‌ல‌ங்கியிருப்ப‌தை பார்த்து ப‌த‌றி, "ஹேய் என்ன‌ ஆச்சு? உன‌க்கு விருப்ப‌ம் இல்ல‌ன்னா நா க‌ம்ப‌ல் ப‌ண்ண‌ மாட்டேன். நாம‌ ஃபிர‌ண்ட்ஸாக்கூட‌ இருந்துக்க‌லாம்." என்று கூற‌,

அத‌ற்கு உட‌னே த‌ன் க‌ண்ணீரை துடைத்துக்கொண்டு புன்ன‌கைத்த‌வ‌ள், "இல்ல‌ அப்பிடியெல்லா இல்ல‌. அப்பா எங்கிட்டையும் ஒரு ச‌த்திய‌ம் வாங்குனாரு." என்றாள்.

அதை கேட்டு ச‌ற்று அதிர்ந்த‌வ‌ன், "உன்கிட்டையுமா? என்ன‌ ச‌த்திய‌ம்?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "அன்னிக்கு ஏக்சிட‌ன்ட் ஆன‌ அன்னிக்கு, அவ‌ரு சாகுற‌துக்கு முன்னாடி என்கிட்ட‌ கடைசியா பேசுனாரு." என்றாள்.

அர்ஜுன், "அப்பிடியா? ஏ நீ மொத‌ல்லையே சொல்ல‌ல‌?என்ன‌ பேசுனாரு?" என்று ஆர்வ‌மாக‌ கேட்க‌,

அதை கூற வ‌ரும் முன்னே அவ‌ள் க‌ண்க‌ள் க‌ல‌ங்க‌, அவ‌ற்றை துடைத்த‌ப‌டி, "அவ‌ருக்கு உங்கிட்ட‌ பேசுன‌ மாதிரி எங்கிட்டையும் நெறைய‌ பேசுற‌ அள‌வுக்கெல்லா டைம் இல்ல‌. அவ‌ரோட‌ க‌டைசி நிமிஷ‌த்துல‌, என் கைய‌ புடிச்சு, இனி உன‌க்கு எல்லாமே அர்ஜுன்தா, என் எட‌த்துல‌ அவ‌ன்தா உன்ன‌ தாங்க‌ போறான்னு சொன்னாரு. அதோட‌ நா போன‌துக்கு அப்ற‌ம் அவ‌ன‌விட்டு என்னிக்குமே பிரிய‌ மாட்ட‌ன்னு ச‌த்திய‌ம் ப‌ண்ண‌ சொன்னாரு." என்று கூற‌, அர்ஜுனின் க‌ண்க‌ளும் க‌ல‌ங்கி அவ‌ளை கேள்வியுட‌ன் ப‌ர்க்க‌, மேலும் ச‌ந்ரா க‌ண்ணீருட‌ன், "என‌க்கு அந்த‌ நிமிஷ‌ம் ஒன்னுமே புரிய‌ல‌. என்ன‌ ப‌ண்ற‌துன்னும் புரிய‌ல‌. ஆனா என் அப்பா என‌க்கு ந‌ல்ல‌துதா செய்வாருன்னு ம‌ட்டும் ந‌ம்புனேன். ஆனா நா ச‌த்திய‌ம் ப‌ண்ற‌துக்குள்ள‌ அவ‌ரு என்ன‌விட்டு.." என்று வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துக்கொள்ள‌, அர்ஜுனின் க‌ண்ணீரையும் அவ‌ன் துடைத்துக்கொண்டான்.

பிற‌கு ச‌ந்ரா, "ப‌ட் உங்கிட்டையும் இத‌ ப‌த்தி பேசிருப்ப‌ருன்னு நா நெனைக்க‌ல‌. அத‌னால‌தா இத‌ ப‌த்தி நா உங்கிட்ட‌ எதுவும் சொல்லாம‌ இருந்துட்டேன்." என்றாள்.

அதை கேட்ட‌வ‌ன் போலியான‌ புன்ன‌கையுட‌ன் அவ‌ளை பார்த்து, "செரி எப்பிடியும் பாஸ் ஒரு முடிவோட‌தா போயிருக்காரு. சோ நாம‌ ந‌ம்ப‌ உற‌வு ந‌ட்புல‌ இருந்து ஆர‌ம்பிக்க‌லாம். அதுக்க‌ப்ற‌ம் ந‌ம‌க்குள்ள‌ ஒரு பான்டிங் வ‌ந்த‌துக்கு அப்ற‌மா க‌ல்யாண‌மும் ப‌ண்ணிக்க‌லாம்." என்று கூற, அதை கேட்ட‌ அவ‌ளோ ஏமாற்ற‌த்துட‌ன் அவ‌னை பார்த்தாள். பிற‌கு அவ‌ன் எழுந்து செல்ல‌ முய‌ற்சிக்க‌, அவ‌னின் க‌ர‌ம் ப‌ற்றி த‌டுத்தாள் ச‌ந்ரா.

அப்போது திரும்பி அவ‌ளை பார்த்த‌வ‌ன், கேள்வியுட‌ன் அவ‌ளை நோக்க‌, அவ‌ளோ "ஏ உன‌க்கு என்ன‌ புடிக்க‌லையா அர்ஜுன்?" என்று கேட்க‌,

அதை கேட்டு மீண்டும் அவ‌ள் அருகில் அம‌ர்ந்த‌வ‌ன், "இல்ல‌ இல்ல‌ நா அப்பிடி சொல்ல‌ வ‌ர‌ல‌. என‌க்கு உன்ன‌ புடிக்கும். ப‌ட் சேந்து வாழ‌ அது ம‌ட்டும் போதாது. நாம‌ ஒருத்த‌ர‌ ஒருத்த‌ர் ந‌ல்லா புரிஞ்சுக்க‌ணும். உன்ன‌ ப‌த்தி நா ந‌ல்லா தெரிஞ்சுக்க‌ணும், என்ன‌ ப‌த்தி நீ ந‌ல்லா தெரிஞ்சுக்க‌ணும். அப்ப‌தா அந்த‌ உற‌வு ஸ்ட்ராங்கா இருக்கும். அதுக்கு ந‌ம‌க்கு இன்னும் டைம் தேவ‌. ரைட்?" என்று கேட்க‌,

அத‌ற்கு ஏமாற்ற‌த்துட‌ன் "ம்ம்" என்றாள் ச‌ந்ரா.

அர்ஜுன், "செரி கொஞ்ச‌ நாள் நாம‌ இங்க‌ இருக்க‌ வேண்டா. பாஸோட‌ பிஸ்ன‌ஸ‌ அவ‌ரோட‌ பார்ட்ன‌ர்ஸே ர‌ன் ப‌ண்ண‌ட்டும். நாம‌ கொஞ்ச‌ நாள் வெளிய‌ இருக்க‌லாம்." என்று கூற‌,

ச‌ந்ரா, "ம்ம் செரி." என்றாள்.

அர்ஜுன், "ப‌ட் என் ஃபிர‌ண்ட்ஸ்கிட்ட‌ ம‌ட்டும் த‌க‌வ‌ல‌ சொல்லிட்டு நாம‌ இங்க‌ இருந்து கெள‌ம்ப‌லாம். ந‌ம்ப‌ள‌ காணோன்னு ஏற்க‌ன‌வே ப‌த‌றி போய் இருப்பாங்க‌." என்று கூற‌, அத‌ற்கும் "ம்ம்" என்று ப‌தில‌ளித்தாள் ச‌ந்ரா.

பிற‌கு த‌ன் மொபைலை எடுத்து த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளில் ஒருவ‌னுக்கு கால் செய்ய‌, காலை அவ‌னின் அம்மாதான் அட்ட‌ன் செய்தார். அதை உண‌ர்ந்த‌ அர்ஜுன், "ஹ‌லோ அம்மா! நா விஷ்வாவோட‌ ஃபிர‌ண்ட் பேசுறேன். விஸ்வா வீட்டுல‌ இல்லையா?" என்று கேட்க‌, அதை கேட்ட‌ அவ‌ரின் அம்மாவோ க‌த‌றி அழ‌ ஆர‌ம்பித்துவிட்டார்.

அதை உண‌ர்ந்து ப‌த‌றிய‌வ‌ன், "அம்மா என்ன‌ ஆச்சு? ஏ அழ‌றீங்க‌?" என்று கேட்க‌, அவ‌ரோ அழுகையை நிறுத்துவ‌தாக‌ தெரிய‌வில்லை.

பிற‌கு அர்ஜுன் மீண்டும், "அழாம‌ சொல்லுங்க‌. என்ன‌ ஆச்சு?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ர், "ஒரு வார‌த்துக்கு முன்னாடிதாம்பா விஷ்வாவும் அவ‌ன் ஃபிர‌ண்ட்ஸும் அவ‌ங்க ஃபிர‌ண்டு அர்ஜுனையும், அவ‌ங்க‌ மொத‌லாளியோட‌ பொண்ணு ச‌ந்ராவையும் காணோன்னு தேடிகிட்டிருந்தாங்க‌. அப்போ அவ‌ங்க‌ள‌ க‌ட‌த்தி வெச்சிருக்குற‌தா அவ‌ங்க‌ளுக்கு கால் வ‌ந்த‌து. அத‌ கேட்ட‌தும் எல்லாரும் சேந்து அவ‌ங்க‌ள‌ தேடி அங்க‌ போனாங்க‌. ப‌ட் போண‌வ‌ங்க‌ளோட‌ பொண‌ந்தாம்பா திரும்ப‌ வ‌ந்துச்சு." என்று கூறி க‌த‌றி அழுதார்.

அதை கேட்டு அதிர்ந்து நின்ற‌வ‌ன், அருகில் இருக்கும் ச‌ந்ராவை பார்க்க‌, ச‌ந்ராவோ அவ‌ன் அதிர்ச்சிக்கான‌ கார‌ண‌ம் புரியாம‌ல் அவ‌னிட‌ம் என்ன‌வென்று கேட்க‌, அவ‌னோ ஃபோனில், "போலீஸ் க‌ம்பிளைன்ட் குடுத்தீங்க‌ளா?" என்று கேட்க‌,

"ம்ம் குடுத்தாச்சுப்பா. யாரோ வேணுமின்னேதா அவ‌ங்க‌ள‌ பிளான் ப‌ண்ணி வ‌ர‌ வெச்ச‌தா சொல்றாங்க‌. ஆனா அது யாருன்னு இன்னும் க‌ண்டுபுடிக்க‌ல‌." என்றார்.

அர்ஜுன், "செரிம்மா எதாவ‌து ஹெல்ப்புனா த‌ய‌ங்காம‌ என‌க்கு கால் ப‌ண்ணுங்க‌. என்ன‌ன்னாலும் நா ப‌ண்றேன்." என்று கூற‌,

அத‌ற்கு அவ‌ரும், "ம்ம் செரிப்பா." என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

அப்போது ச‌ந்ரா, "என்ன‌ ஆச்சு அர்ஜுன்?" என்று கேட்க‌,

அப்போது த‌ன் க‌ட்டை விர‌லை நெற்றியில் வைத்து யோசித்த‌வ‌ன், "இது நாம‌ நெனைக்கிற‌த‌விட‌ சீரிய‌ஸ் ஆன‌ விஷ‌ய‌மா இருக்கு. அதுல‌ ஒன்னுமே தெரியாத‌ என் ஃபிர‌ண்ட்ஸ்.." என்று வ‌ந்த‌ அழுகையை க‌ட்டுப்ப‌டுத்திய‌வ‌ன், த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளை இழ‌ந்த‌ வ‌ருத்த‌த்துட‌ன் கூற‌, அவ‌ளோ எதுவும் புரியாம‌ல் அவ‌னை கேள்வியுட‌ன் பார்த்தாள்.

அப்போது திடீரென்று அவ‌ள் முக‌ம் பார்த்த‌ அர்ஜுன், "இதுக்குமேல‌ ஒரு நிமிஷ‌ங்கூட‌ நாம‌ இங்க‌ இருக்க கூடாது. வா நாம‌ ஒட‌னே கெள‌ம்ப‌லாம்." என்று அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றி அழைக்க‌, அவ‌ளோ கேள்வியுட‌ன் அவ‌னை த‌டுத்து, "என்ன‌ ஆச்சு அர்ஜுன்? மொத‌ல்ல‌ என்ன‌ ஆச்சுன்னு சொல்லு." என்று கூற‌,

அத‌ற்கு அவ‌னோ ப‌த‌ற்ற‌த்துட‌ன், "உன் அப்பாவ‌ யாரோ பிளான் ப‌ண்ணி கொன்னிருகாங்க‌." என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் கூறினான்.

அதை கேட்டு அதிர்ந்த‌ ச‌ந்ரா, "என்ன‌ சொல்ற‌ அர்ஜுன்? அப்பிடின்னா அப்பா ஏக்சிட‌ன்ட்.." என்று கூறும் முன், "அது கொல‌." என்றான் அர்ஜுன்.

அதை கேட்டு மேலும் அதிர்ந்த‌வ‌ள், "எப்பிடி சொல்ற‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ள் விழியை உறுதியாக‌ பார்த்த‌வ‌ன், "மொத‌ல்ல‌ உன் அப்பாவ‌ டார்கெட் ப‌ண்ணியிருக்காங்க‌. அப்ற‌ம் உன்ன‌ கொல்ல‌ ட்ரை ப‌ண்ணாங்க‌. அன்டு இப்போ ந‌ம்ப‌ள‌ கிட்னாப் ப‌ண்ணிட்ட‌தா சொல்லி என் ஃபிர‌ண்ட்ஸ‌ வ‌ர‌ வெச்சு பிளான் ப‌ண்ணி ம‌ர்ட‌ர் ப‌ண்ணியிருக்காங்க‌." என்று கூறி முடிக்கும் முன் த‌ன் வாயில் கை வைத்து அதிர்ச்சிய‌டைந்தாள் ச‌ந்ரா.

அதே அதிர்ச்சியுட‌ன் மெல்ல‌ த‌ன் பார்வையை உய‌ர்த்தி அவ‌னை பார்த்து, "அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ ஆச்சு?" என்று கேட்க‌,

அத‌ற்கு ப‌தில் கூறாம‌ல் ப‌த‌ற்ற‌த்துட‌ன் அவ‌ள் தோள்க‌ளை ப‌ற்றிய‌வ‌ன், "அவ‌ன் யாரு, என்ன‌ மோட்டிவ்னு என‌க்கு தெரிய‌ல‌. ஆனா எதோ ஒரு பெரிய‌ பிளான்ல‌ இருக்கான்னு ம‌ட்டும் புரியுது. நாம‌ உயிரோட‌ இருக்குற‌து ம‌ட்டும் அவ‌னுக்கு தெரிஞ்சா க‌ண்டிப்பா ந‌ம்ப‌ள‌ தேடி அவ‌ன் வ‌ருவான்." என்று ஏதோ ஒன்றை க‌ண்டுபிடித்த‌வ‌ன் போல‌ உண‌ர்ந்த‌வ‌ன், மீண்டும் அவ‌ளை பார்த்து, "பாஸ் ஏ அவ‌ரு சாகுற‌துக்கு முன்னாடி உன்ன‌ என் கையில‌ புடிச்சு குடுத்தாருன்னு இப்ப‌தா என‌க்கு முழுசா புரியுது. அவ‌ருக்கு இதெல்லா ந‌ட‌க்க‌ போகுதுன்னு முன்னாடியே தெரிஞ்சிருக்கு" என்று கூற‌,

அதை கேட்டு மேலும் அதிர்ச்சிய‌டைந்த‌வ‌ள், "என்ன‌ சொல்ற‌ அர்ஜுன்? அப்பிடின்னா அது யாருன்னு அப்பாவுக்கு.." என்று கூறும் முன், "தெரிஞ்சிருக்கு." என்றான் அர்ஜுன். அதை கேட்டு மேலும் அதிர்ந்த‌ப‌டி அவ‌ள் அவ‌னை பார்க்க‌, மேலும் அர்ஜுன், "ஆனா பாஸ் ஏ அத‌ ப‌த்தி எங்கிட்ட‌ எதுவுமே சொல்ல‌ல‌?" என்று யோசித்தான். பிற‌கு மீண்டும் அவ‌ளை பார்த்து, "ஆனா ஒன்னு ம‌ட்டும் உறுதியா சொல்றேன். உன் உயிருக்கு ஆப‌த்துன்னு தெரிஞ்சுதா, உன்ன‌ பாத்துக்குற‌ பொறுப்ப‌ பாஸ் எங்கிட்ட‌ ஒப்ப‌ட‌ச்சிருக்காரு. அந்த‌ ச‌த்திய‌த்தையும் வாங்கியிருக்காரு" என்றான்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா அதே அதிர்ச்சியுட‌ன் அவ‌னை பார்க்க‌, மேலும் அர்ஜுன், "பாஸ் என்மேல‌ முழு ந‌ம்பிக்க‌ வெச்சு இந்த‌ பொறுப்ப‌ எங்கிட்ட‌ ஒப்ப‌ட‌ச்சிருக்காரு. நா என் உயிர‌ குடுத்தாவ‌து அத‌ நெற‌வேத்துவேன். உன்ன‌ எப்பிடியாவ‌து இதுல‌ இருந்து காப்பாத்துவேன்." என்று ப‌த‌ற்ற‌த்துட‌ன் கூறினான்.

அதை கேட்டு மேலும் அதிர்ச்சிய‌டைந்த‌வ‌ள், "அப்பிடின்னா இங்க‌ ந‌ட‌ந்த‌ அத்த‌ன‌ ம‌ர‌ண‌ங்க‌ளும் ஒன்னோட‌ ஒன்னு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கா? அது எல்லாத்துக்கும் கார‌ண‌மான‌வ‌ன் ஒருத்த‌ன் தானா? ஆனா அது யாரு?" என்று ம‌ன‌திற்குள் தீவிர‌மாக‌ யோசிக்க‌ ஆர‌ம்பித்த‌வ‌ள், "அது யாரா இருந்தாலும் அவ‌ன‌ நா சும்மாவிட‌மாட்டேன்." என்று ம‌ன‌திற்குள் ச‌ப‌த‌ம் எடுத்தாள்.

அப்போது அவ‌ளின் தோள்க‌ளை உலிக்கிய‌வ‌ன், "ச‌ந்ரா!" என்று கூறிய‌ நொடியே த‌ன்னிலைய‌டைந்து, "ஹா?" என்று அவ‌னை பார்க்க‌,

அர்ஜுன், "என்ன‌ ஆச்சு? என்ன‌ யோசிக்கிற‌?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "ஒன்னும் இல்ல‌. நாம‌ போலாம்." என்றாள்.

அர்ஜுன், "செரி நாம‌ இங்கிருந்து ரொம்ப‌ தூர‌த்துக்கு போயிர‌லாம். அங்க‌ எந்த‌ ஒரு ஆப‌த்தும் உன்ன‌ நெருங்க‌வே முடியாது." என்று கூறி அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்றி அழைத்து செல்ல‌, அவ‌ளோ அவ‌னை த‌டுத்து, "இல்ல‌ அர்ஜுன். நா வ‌ர‌மாட்டேன்." என்றாள்.

அதில் அவ‌ன் அவ‌ளை கேள்வியுட‌ன் பார்த்து, "வ‌ர‌ மாட்டன்னா என்ன‌ அர்த்த‌ம்?" என்று கேட்க‌,

ச‌ந்ரா, "என்னால‌ இப்பிடி பய‌ந்தெல்லாம் ஓட‌ முடியாது. எங்கிட்ட‌ இருந்து என் அப்பாவ‌ பிரிச்ச‌வ‌ன‌, நா க‌ண்டுபுடிச்சு அழிச்சாக‌ணும்." என்றாள்.

அதை கேட்டு அதிர்ந்த‌வ‌ன், "என்ன‌ சொல்ற‌ ச‌ந்ரா. என் ஃபிர‌ண்ட்ஸோட‌ பேர‌ண்ட்ஸ் ஆல்ரெடி போலீஸ் க‌ம்பிளைன்ட் குடுத்திருக்காங்க‌. எப்பிடியும் அவ‌ன‌ க‌ண்டுபுடிச்ச‌ர‌லாம். ஆனா அது வ‌ரைக்கும் நீ சேஃபா இருக்க‌ணும். அதுதா முக்கியம். சோ ப்ளீஸ் என்கூட‌ வா" என்று மீண்டும் அவ‌ள் க‌ர‌ம் ப‌ற்ற‌,

அவ‌ளோ மீண்டும் த‌டுத்து, "நா எங்கையும் வ‌ர‌ல‌ அர்ஜுன். அதோட‌ என‌க்கு ஒன்னும் ஆகாது நீ ப‌ய‌ப்ப‌டாத‌." என்றாள்.

அத‌ற்கு அவ‌ளை புரியாம‌ல் பார்த்த‌வ‌ன், "உன‌க்கு என்ன‌ பைத்திய‌மா? இங்க‌ ஆப‌த்து இருக்குன்னு தெரிஞ்சும். இங்க‌யே இருக்க‌ன்னு சொல்ற‌? இப்ப‌ உன்னோட‌ வீடுக்கூட‌ உன‌க்கு சேஃப் கெடையாது." என்றான்.

ச‌ந்ரா, "நாம‌ ஓடி ஒளிய‌ கூடாதுன்னு ம‌ட்டுந்தா சொன்னேன். ஆனா என் வீட்டுக்கு போக‌ணுன்னு சொல்ல‌ல‌." என்று கூற‌, அவ‌னோ மேலும் குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌ளை பார்த்து, "அப்பிடின்னா?" என்று கேட்க‌,

மேலும் ச‌ந்ரா, "இப்ப‌ நாம‌ எங்க‌ போக‌ணுன்னு நா சொல்றேன். என்கூட‌ வா. இந்த‌ பிர‌ச்ச‌னைய‌ அங்க‌ இருந்துதா நாம‌ ச‌மாளிக்க‌ணும்." என்று அவ‌ன் க‌ர‌ம் ப‌ற்றி அழைத்து செல்ல‌, அவ‌னும் குழ‌ப்ப‌மும் கேள்வியுமாக‌ அவ‌ளுட‌ன் சென்றான்.

- ஜென்ம‌ம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.