“சனா!!!! சனா!!!! கண் முழிச்சிட்டியா!!! ஹப்பாடா…. நீ என்ன ஆவன்னு யோசிச்சிட்டே இருந்தேன் டா….. எத்தனை நாள் ஆச்சு நீ கண் முழிச்சு பார்த்து” என்று கண்ணீருடன் லக்ஷ்மி சனாவின் கையை பிடித்து கொண்டு பேசினார்.
“சனா!!! எப்படிடா இருக்கு இப்போ…. நீ எத்தனை நாள் கோமால இருந்த தெரியுமா??? எங்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையுமே இல்லாம இருந்தோம் நீ கண் முழிக்குற வரைக்கும்” என்று சந்திரசேகர் கண்ணீருடன் பேசவும், சனா இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.
“நீங்க போய் முதல்ல டாக்டரை கூட்டிட்டு வாங்க… சனா கண்ணு முழிச்சுட்டான்னு சொல்லி கூட்டிட்டு வாங்க போங்க” என்று லக்ஷ்மி கூறவும் சரி என்று சந்திரசேகர் மருத்துவரை அழைக்க சென்றார்.
லக்ஷ்மி சனாவின் தலையை கோதி கொண்டே, “ரொம்ப பயந்துட்டோம் டா எங்க நீ கண் முழிக்கவே மாட்டியோன்னு” என்று லக்ஷ்மி கூற, சனாவின் கண்கள் குளமாகின.
“என்னடா இதெல்லாம்…. அழாதடா… எல்லாம் தாண்டி வந்துட்டோம்…. இதுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிடும் எந்த வருத்தமும் படாத… பயப்படாத” என்று தைரியம் கூறினார் லக்ஷ்மி .
மருத்துவர் வந்து சனாவை பரிசோதித்து பின், “அப்சர்வேஷன்காக கொஞ்ச நாள் ஹாஸ்பிடல்ல இருக்குற மாதிரி தான் இருக்கும்…. ஏன்னா திருப்பி ஸ்கேன் எல்லாமே எடுக்க வேண்டி இருக்கும், இப்ப தானே கோமாலிருந்து வெளியில வந்து இருக்காங்க…. அதுவும் இல்லாம ஃபிராக்ச்சர் ஆயிருக்கு சோ இது எல்லாம் ஹீல் ஆக கொஞ்ச நாள் ஹாஸ்பிடல்ல இருக்கிற மாதிரி இருக்கும்…. எக்ஸ்ரே, பிளட் டெஸ்ட், ஸ்கேன் எல்லாம் எடுத்துட்டு அதுக்கப்புறம் என்ன ஏதுன்னு பார்ர்து எப்ப டிஸ்சார்ஜ்னு பார்க்கலாம்” என்று மருத்துவர் கூறவும் இருவரும் அமோதித்தனர்.
சந்திரசேகர் கோயம்புத்தூரில் எஸ்.ஏ.என் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸின் ஓனர் ஆவார். அவரின் மனைவி லக்ஷ்மி ஹோம் மேக்கர். இவர்களின் மகள் சனா என்று அழைக்கப்படும் சனந்தா. அவள் ஃபுட் அண்ட் சயின்ஸ் என்ற துறையை தேர்ந்தெடுத்து அதில் நன்றாக படித்து யூனிவர்சிட்டியில் முதலிடத்தில் தேர்ச்சியும் பெற்று பின் நியூயார்க்கில் இன்டெக்ரேடட் ஃபுட் ஹெல்த் அண்ட் சயின்ஸ் கோர்ஸ் முடித்து அதில் ஆராய்ச்சிகளையும் நடத்தி வருகிறாள். பின் அவளின் சீனியர்ஸுடன் சேர்ந்து சேவையும் செய்து கொண்டு வருகிறாள். இவர்களின் மகன், சனந்தாவின் தம்பி, விகாஷ் வெளிநாட்டில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வருகிறான்.
#########
“விக்ரம்!!!! என்ன ஆச்சுப்பா??? அப்பு எப்படிப்பா இருக்கா??? டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க?? ஏதாவது சொல்லுப்பா” என்று ஸ்ரீனிவாசனும் வள்ளியும் விக்ரமின் சட்டையை பிடித்துக் கொண்டு கதறினர். விக்ரமிடம் பதில் எதுவும் இல்லாமல் கண்ணீர் மட்டுமே பதிலாக இருக்கவும் இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டிருந்தனர்.
சரவணன், விக்ரமின் நண்பன், வந்து ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி அவர்களை அழைத்து பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர வைத்து பின் விக்ரமை பார்த்து, “டேய் இப்படியே நின்னுட்டு இருந்தா இவங்களுக்கு என்னடா பதில் சொல்லுவ??” என்று சரவணன் விக்ரமை பார்த்து கேட்க, விக்ரம் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு வந்து ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி அவர்களிடம் மண்டியிட்டு, “அம்மா, அப்பா என்னை மன்னிச்சிடுங்க… என்னால நம்ம.. அப்.. அப்பு… அபர்ணாவ காப்பாத்த முடியல” என்று கூறவும் இருவரும் கதறி அழுதனர்.
அதைப் பார்த்ததும் விக்ரம் என்ன செய்வது என்று புரியாமல் அவன் இருவரையும் அணைத்து கொண்டு அவனும் அழுதான் இதை பார்க்க சரவணனுக்கும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
அபிலாஷ், விக்ரம் மற்றும் சரவணனின் நண்பன், மருத்துவர். அவன் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்ததும் முதலில் வள்ளி அவனிடம் சென்று, “அபி…. நீயாவது சொல்லு பா… அபர்ணா நம்ம கூட தானே இருக்கா??” என்று அழுதுக் கொண்டே கேட்க, அவனிடமும் கண்ணீரை தவிர வேற எந்த பதிலும் இல்லாமல் போக, வள்ளியை தன்னுடன் அணைத்துக் கொண்டு, “ரொம்ப சாரிமா” என்று மட்டும் கூறினான்.
ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி அவர்கள் ஊட்டி மலையில், வண்ணம் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமம், அங்கே வசித்து வருகின்றனர். அங்கே ஏறக்குறைய முப்பது குடும்பங்கள் மட்டுமே உள்ளது…. அவர்களுக்கு தொழில் அங்கு இருக்கும் மூலிகைகளை கொண்டு மருந்து தைலம் எண்ணெய் என தயார் செய்து அவை ஊட்டியில் உள்ள கடைகளுக்கு போடுவது, டூரிஸ்ட் ஸ்பாட்களில் நேரடியாக வந்து விற்பனை செய்வது தான் அம்மக்களின் பிரதான தொழிலாகும்.
ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி அவர்களுக்கு விக்ரம் மற்றும் அபர்ணா என்று இரண்டு குழந்தைகள். அதில் விக்ரம் மூத்தவன் அவன் நன்றாக படித்து இப்பொழுது அவர்களின் பகுதிக்கு ஃபாரஸ்ட் ரேஞ்சர் இன்ஸ்பெக்டராக வேலை செய்து கொண்டு வருகிறான். அபர்ணா ஊட்டியில் பள்ளி படிப்பை முடித்து கோயம்புத்தூரில் நர்ஸிங் படித்து முடித்து, மேற்படிப்புக்காக கோயம்புத்தூரில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறாள்.
விக்ரம் உடைய மிகவும் நெருக்கமான நண்பன் சரவணன், அவன் ஊட்டியில் பிறந்து வளர்ந்தான். சிறு வயதிலிருந்தே இருவரும் ஒன்றாக பள்ளிக்கு செல்வது அதன் மூலம் வண்ணம் கிராமத்தை பற்றி விக்ரமிடம் அறிந்து கொண்டான். பின் கல்லூரி என அனைத்தும் ஒன்றாக முடித்து அவர்களின் பகுதிக்கே இருவரும் ஃபாரஸ்ட் இன்ஸ்பெக்டர் ஆகினர். மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதியில் வாலன்டியர் டாக்டராக அபிலாஷ் வரவும் அவனும் இவர்களின் நண்பர்கள் கூட்டத்தில் இணைந்து கொண்டான்.
“அப்பா நம்ம…” என்று விக்ரம் ஆரம்பிக்கவும், “இல்லப்பா நம்ம ஊருக்கு போயிரலாம் பா…. உன் தங்கச்சியோட உசுரே அந்த ஊரு தான் பா…. அங்க போயிடலாம் பா….. இங்க கோயம்புத்தூரில் எதுவுமே செய்ய வேண்டாம்…. அவ இங்க படிச்சு இங்கேயே அவ உசுரையும் இழந்துட்டா…. வேண்டாம் நம்ம ஊருக்கே போயிடலாம் பா” என்று ஸ்ரீனிவாசன் கூற, வேற எதுவும் பேசாமல் ஆமோதித்து அவரின் ஆசைக்கு இணங்கி அதன்படி அனைத்தும் ஏற்பாடு செய்தான் விக்ரம்.
மொத்த கிராமமுமே சூழ்ந்து கொண்டு காத்துக் கொண்டிருந்தது அபர்ணாவின் வருகைக்காக. அபர்ணா அனைவரின் வீட்டில் செல்ல குழந்தையாவாள். என்ன தான் முதலில் விக்ரம் படிப்பு முடித்து அனைத்தும் செய்தாலும் அவன் அந்த கிராமத்தின் வளத்திற்கும் அம்மக்களின் முன்னேற்றத்திற்கும் தான் நிறைய பாடுபட்டான். ஆனால், அபர்ணாவோ அங்கிருக்கும் மக்களுடன் இணைந்து அவர்களின் அன்றாட தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வாள். அங்கு இருக்கும் குழந்தைகளுக்கும் பாடம் கற்று தருவது அங்கிருக்கும் பெரியவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது என அனைத்தும் அறிந்து உதவி செய்வாள்.
அங்கு இருக்கும் பல குழந்தைகளின் வீட்டில் அனுமதி வாங்கி அவர்களை ஊட்டியில் இருக்கும் பள்ளியில் படிக்கவும் வைத்தாள். இவை அனைத்திற்கும் விக்ரம் உறுதுணையாக நிற்பான். இப்படி அண்ணன் தங்கை இருவரும் அவர்களின் வண்ணம் கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டனர்.
அவள் இறந்த செய்தியை அறிந்ததும் மொத்த கிராமமுமே சோகத்தில் மூழ்கியது அனைவரும் தங்கள் வீட்டின் குழந்தையை இழந்தது போல் அழுது அபர்ணாவின் வருகைக்காக காத்துக் கொண்டு இருக்க, ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்.
மொத்த கிராமமும் அவளுக்கு செய்ய வேண்டிய சடங்கை எடுத்து செய்தது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் வந்து அவளின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.
நாட்கள் ஓடின, பதினாறாவது நாள் காரியமும் முடிந்தது. இருப்பினும், கிராமத்தின் சோகம் குறையவே இல்லை. அபர்ணாவிற்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளும் சிறப்பாக செய்து முடித்தனர் மனதில் கடும் பாரத்துடன். விக்ரம் கோவிலில் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க அவனின் அருகில் வந்து அமர்ந்தாள் கவிதா.
“நீ ஒண்ணுமே சாப்பிடல…. இத்தனை நாளா எதுவுமே சரியாக சாப்பிடல….. அதான் நான் உனக்கு சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன் சாப்பிடுறியா?” என்ற கவிதா கேட்க, விக்ரம் மறுப்பாக தலையை அசைத்து, “எனக்கு எதுவும் வேண்டாம்” என்றான் விக்ரம்.
“நீயும் இப்படியே இருந்தா அம்மா அப்பாவ யார் பார்த்துக்குறது…. அவங்களையும் பார்த்துக்கணும்ல நீ” என்று கவிதா கூற, விக்ரம் அமைதியாக இருந்தான். “உன் கிட்ட நான் விளையாட்டா நிறைய வாட்டி உன்ன பிடிக்கும்னு எல்லாம் சொல்லி இருக்கேன்…. அதுக்கு நீ என்னை அப்படி பார்க்கலைன்னு பதில் சொல்லுவ…. ஆனா, நான் திரும்பவும் இப்போ சொல்றேன் உனக்காக நான் இருக்கேன்… அதுவும் இந்த நிலைமையில… என்னால உன்ன இப்படி பார்க்கவே முடியல… எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட் அப்பு எனக்கு இப்போ அவளும் இல்ல… நீயும் இப்படி சோகமா இருக்க… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்று கண்ணீருடன் கவிதா பேசவும், விக்ரம் தன் இரு கைகளில் அவன் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதான்.
சற்று அவனை சமன்படுத்திக் கொண்டு, “ரொம்ப இருட்டிட போகுது… நடந்து போற வழியில லைட் இருக்காது… நேரமாகுது வீட்டுக்கு போ உங்க அப்பா தேடுவாரு” என்று விக்ரம் கூற, “சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன் அதையாவது சாப்பிடு” என்று கவிதா கூறவும் தலையை அசைத்து வெச்சிட்டு போ… என்றான் விக்ரம்
கவிதா வண்ணம் கிராமத்தில் வசித்து வரும் பெண், அவளுக்கு அப்பா மட்டுமே அம்மா இல்லை. சிறுவயதில் இருந்து அபர்ணா மற்றும் விக்ரம் அவர்களுடன் சேர்ந்து வளர்ந்தவள். அம்மாவும் இல்லை அப்பா மட்டுமே வளர்த்த காரணத்தினால் அவருடைய பயத்தால் அவளை வேறு எங்கும் படிக்க அனுப்பாமல் அவர் உடனே வைத்துக் கொண்டார். கவிதாவிற்கு அபர்ணா தான் நெருங்கிய தோழி, அபர்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு வீட்டிலேயே வயர் பை அள்ளுவது சிறிய நூல் பொம்மைகள் செய்வது என பல விஷயம் செய்து அவள் தந்தையிடம் கொடுக்க அவர் ஊட்டியின் முக்கியமான பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வார்.
அவளுக்கு விக்ரம் என்றால் மதிப்பும் மரியாதையும் அதிகம். அவளுடைய தந்தைக்கு அவளை விக்ரமுக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை, ஏன்னென்றால் அப்போது தான் கவிதா அதே ஊரிலே இருப்பாள், மேலும் விக்ரமின் குடும்பம் அவளை நன்கு பார்த்து கொள்வார்கள் அதனால் தான் இல்லாத காலத்திலும் அவள் பாதுகாப்பான இடத்தில் இருப்பாள் என்பதே அவரின் ஆசை. இதனால் கவிதாவிற்கும் அதையே சொல்லி சொல்லி வளர்த்ததனால் அவளும் விக்ரமை விரும்புகிறாள் என்பதை நம்பி கொண்டிருந்தாள்.
அதை ஒரு நாள் விக்ரமிடம் கூறவும் அவன், “நம்ம ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்ந்தோம் ஒண்ணா விளையாடுறோம் அதனால வந்த ஈர்ப்பு தான் இது.. வேற எதுவும் இருக்காது” என்று கூறி அவளை சமாதானமும் செய்தான்.
கிராமத்தில் அனைவரும் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து அவரவர்களின் வேலைகளையாவது செய்ய வேண்டும் என்று செய்ய ஆரம்பித்தனர். இருப்பினும் கிராமம் கலை இழந்து தான் காணப்பட்டது.
“விக்கி!! இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்குடா அதை முடிச்சுட்டு ரிட்டயர்டு ஆஃபீஸ்ர் பிரகாஷ் சார், அவரு உன்னை பார்க்கணும்னு சொன்னாரு” என்று சரவணன் வந்து கூறவும், “ம்ம்… எல்லாத்தையும் முடிச்சிட்டு வரேன்” என்று கூறி கோயம்புத்தூருக்கு புறப்பட்டான் விக்ரம்.
“மச்சான் இரு நானும் வரேன்…. இங்க இருக்கிற மெடிக்கல் திங்ஸ் எல்லாம் தீர்ந்துடுச்சு… கொஞ்சம் தான் இருக்கு, சப்ளை வாங்கணும் நானும் உன் கூட வரேன்” என்று அபிலாஷ் கூறவும், “அதுக்கு தான் ஆள் இருக்கு இல்லடா அவங்கள அனுப்பு… எதுக்கு நீ வந்துட்டு இருக்க?? நீ இல்லனா இங்கே யார் இருப்பா??” என்று விக்ரம் கேட்க, “அதில்ல விக்கி… சர்ஜிகல் திங்ஸ் எல்லாம் டாக்டர், நான் வந்து அதெல்லாம் எழுதி சைன் போட்டு குடுத்தா தான் கொடுப்பாங்க அதுக்காக தான்… கொஞ்சம் நேரம் தானே இங்க ஒரு நர்ஸ் இருக்காங்க, ஒரு இன்டர்ன் பையன் வந்து இருக்கான்ல அவனும் இருக்கான் அதனால அவங்க பார்த்துப்பாங்க…. என்ன ஒரு அரை நாள் தானே போயிட்டு வந்துடுவோம்” என்று அபிலாஷ் கூறவும் சரி என்று இருவரும் புறப்பட்டனர்.
முதலில் அபிலாஷ் ஓர் இடத்தில் இறங்கி கொண்டு, “நான் இங்க எல்லாம் வாங்கிட்டு இந்த ஹோட்டல் கிட்ட வெயிட் பண்றேன் நீயும் இங்க வந்துரு மச்சான்” என்று அபிலாஷ் கூறவும் சரி என்று விக்ரம் மீட்டிங்கு சென்று அவனுடைய மீட்டிங்கை முடித்துவிட்டு ரிடயர்டு ஆஃபீஸ்ர் பிரகாஷ் அவர்களை காண சென்றான்.
“வாப்பா விக்ரம்… உட்காரு… எப்படி இருக்கீங்க?? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?? கிராமத்துல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று பிரகாஷ் கேட்க, விக்ரம் தலையை அசைத்து பரவால்ல சார்!! என்றான் பட்டும் படாமலும். “என்னால அங்க உன்கிட்ட சரியா பேச முடியுமான்னு தெரியல…. அதனால தான் நானும் உங்க ஊருக்கு வந்தப்போ பேசாம வந்துட்டேன்… அதான் தனியா கூப்பிட்டு பேசலாம்னு வர சொன்னேன் பா” என்ற பிரகாஷ் கூற, சொல்லுங்க சார்.. என்று விக்ரம் கூறினான்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் சந்திரசேகர் வரவும், “இவர் உன்கிட்ட பேசணும்னு சொன்னாரு” என்று பிரகாஷ் சந்திரசேகரை, “இவன் என்னோட ஃப்ரண்ட்” என்று அறிமுகம் செய்து வைத்தார்.
சந்திரசேகர் முதலில் கையை எடுத்து கும்பிட்டு, “ரொம்ப நன்றி தம்பி நீங்க செஞ்ச இந்த உதவி…. இது உதவியா என்னன்னு கூட எனக்கு தெரியல, நீங்க இந்த உதவியை செய்யலைன்னா என் பொண்ணு இன்னிக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டா” என்று கண்ணீருடன் கூறினார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்.. அது என் தங்கச்சியோட முடிவு தான் அதனால தான் நாங்களும் ஒத்துக்கிட்டோம்… அவ தான் ஆர்கன் டொனேட் பண்ண முதல்லயே அதுக்கு ரெஜிஸ்டர் பண்ணி வெச்சா அப்படி தான் சார் அமைஞ்சது” என்று விக்ரம் கூறவும், “என்ன சொன்னாலும் அதுவும் அந்த நேரத்துல நீங்க செஞ்ச அந்த உதவியை வாழ்நாள் முழுக்க நான் மறக்கவே மாட்டேன்… உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க நான் கண்டிப்பா செய்யறேன்” என்று சந்திரசேகர் கூறவும், “எனக்கு ஒரு உதவி இருக்கு சார் செய்வீங்களா?” என்று விக்ரம் கேட்டான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

Author: Bhavani Varun
Article Title: Chapter 1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.