அத்தியாயம் 36
“நீயும் ஏஞ்சலா மாறிட்டியா ரிஷி?” என அவள் ஆர்வமுடன் கேட்க, “அப்படி இருந்தா நல்லா தான் இருக்கும்.” என அவளைப் போல தானும் சிறு குழந்தையாகவே மாறி யோசித்த ரிஷி சிரித்த முகமாக “ஆமா ஏஞ்சல், நீ என் கிட்ட வந்ததுனால எனக்கும் நிறைய சூப்பர் பவர்ஸ் கிடைச்சிடுச்சு. இப்ப நானும் உன்ன மாதிரியே ஏஞ்சலா மாறிட்டேன். நான் நெனச்சா இந்த ரூம்குள்ள மழை கூட வர வைப்பேன் தெரியுமா?” என்று கேட்டான்.
“அப்படியா?” என ஆர்வம் தாங்காமல் கேட்ட நித்திலா “நம்ம சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் நீ இந்த ரூம்குள்ள மழை வர வைக்கிறியா? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நனையலாம் ஜாலியா இருக்கும்.” என்று கேட்க, “அப்படித் தான் நல்லா கேளு.. நீ கேட்டா உனக்காக எங்க ரிஷி சார் வானத்தையே இந்த ரூம்குள்ள கொண்டு வந்தாலும் கொண்டு வந்துருவாரு.” என நினைத்து சிரித்தாள் நிரஞ்சனா.
“அட.. இவ கிட்ட சும்மா ஒரு பேச்சுக்கு எதுவும் சொல்ல முடியலையே.. உடனே அதை பிடிச்சுக்கிட்டு எனக்கு அது வேணும்கிறாளே.. சென்னையில வெயில் கொளுத்திகிட்டு இருக்கிற இந்த டைம்ல நான் ரூம்குள்ள எப்படி மழை வரவைப்பேன்?” என யோசித்து பெருமூச்சு விட்ட ரிஷி “நம்ம நினைக்கும்போது எல்லாம் மழை வராது. அதுக்கு எப்ப தோணுதோ அப்ப தான் வரும்.” என சொல்லி சமாளிக்க பார்த்தான்.
“அதுக்கு எப்ப தோணும்?” என அவளும் பதிலுக்கு அப்பாவியாக கேட்க, “ம்ம்.. எனக்கு எப்ப தோணுதோ அதுக்கும் அப்ப தான் தோணும். இவ ஒருத்தி.. நான் ஐடியா திங்க் பண்ண டைம் வேணாமா?” என நினைத்த ரிஷி “நீ எப்ப குட் கேர்ள்லா இருக்கியோ அப்ப தான் இந்த ரூம்குள்ள மழை வரும். ரெயின் God-க்கு என்னை மாதிரி Good-ஆ இருக்கிறவங்களை மட்டும் தான் பிடிக்கும்.
நீ சும்மா அதை பண்ண மாட்டேன் இதை பண்ண மாட்டேன்னு உன் நல்லதுக்கு யாரும் என்ன சொன்னாலும் நீ கேக்க மாட்டேங்குற. அப்படியெல்லாம் பண்ணா ரெயின் God-க்கு கோபம் வந்துரும். இந்த ரூமுக்குள்ள மட்டும் இல்ல, நம்ம ஊர்ல எங்கயுமே மழை வராத மாதிரி பண்ணிடுவாரு.” என்று சொல்லி அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை மிரட்டினான்.
அவன் சொன்னதை அப்படியே நம்பிய நித்திலா உடனே தன் கைகளை கட்டிக் கொண்டு சிறு வயதில் அவளுக்கு தன் அம்மாவிடம் இப்படி எல்லாம் பேசியது திடீரென்று அவள் மண்டைக்குள் பலிச்சிட்டதால், “அம்முவை யாரும் திட்டாதீங்க. அம்மு ரொம்ப குட் கேர்ள். இனிமே அட பிடிக்காம அம்மு யார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பா.” என அன்று தன் அம்மாவிடம் சொன்னதை அப்படியே இப்போது ரிஷியிடம் சொன்னாள்.
“ஆஹான்.. இவ்வளவு பெரிய சமத்துக் குழந்தைய நான் எங்கயுமே பார்த்ததில்லை. I like you very much கீர்த்து.” என்று ரிஷி சொல்ல, “கீர்த்துவா? அது யாரு ரிஷி? அவங்க உன் ஃபிரண்டா?” என எதுவும் புரியாமல் கேட்டாள் நித்திலா.
உடனே சுதாரித்துக் கொண்ட ரிஷி யாரோ ஒரு நித்திலாவின் பெயரை சொல்லி அவளை கூப்பிட பிடிக்காமல் “ஆமா ஆமா.. எனக்கு கீர்த்தனான்னு ஒரு ஃபிரிண்ட் இருக்கா. உன் பேரை சொல்றதுக்கு பதிலா தெரியாம நான் மாத்தி அவ பெயரை சொல்லிட்டேன் அம்மு. இனிமே நான் உன்னை அம்முன்னு கூப்பிடுறேன் ஓகேவா?” என ரிஷி கேட்க, “ம்ம்.. ஓகே.. இனிமே நான் தான் ரிஷியோட அம்மு.” என்ன உச்சகமான குரலில் சொன்ன நித்திலா மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.
அவள் என்னவோ ஆசையாக தனது டெடி பியர் பொம்மையை கட்டிப்பிடித்து கொஞ்சுவதைப் போல அவ்வப்போது ரிஷியை கட்டிப்பிடித்து தொட்டு பேசி அவனிடம் விளையாடி அவனை கொஞ்சி என அவள் இஷ்டத்திற்கு ஏதேதோ செய்து கொண்டிருக்க, அவளது ஒவ்வொரு தொடுகைக்கும் அவனது ஆறடி தேகத்தில் பல ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு தனது ஹார்மோன்கள் செய்யும் வேலையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த ரிஷி நொடிக்கு நொடி சூடாக்கி கொண்டிருக்கும் தன் உடலை சமன்படுத்த தெரியாமல் உள்ளுக்குள் போராடிக் கொண்டிருந்தான்.
நல்லவேளைக்காக ரிஷி ஆர்டர் செய்திருந்த உணவு வந்து அவளிடம் இருந்து அவனை காப்பாற்றியது. வெளியில் சுற்றிக் கொண்டு இருந்ததால் இவ்வளவு நேரமாக பிஸியாகவே இருந்த திலீப் தானும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம் என நினைத்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். நித்திலாவை தன் அருகில் உள்ள சேரில் நர்சின் உதவியோடு அமர வைத்த ரிஷி எப்போதும் ஸ்பூனில் சாப்பிடுபவன் இன்று அவளுக்காக கையில் சாப்பிட்டபடி அவளுக்கும் ஊட்டி விட்டான்.
நித்திலா இட்டிலி சாப்பிட வேண்டும் என்பதால் அன்றைய மதிய உணவு அவர்கள் அனைவருக்கும் இட்லியாக மாறிவிட, ரிஷி இடம் வேலைக்கு வந்து சேர்ந்ததில் இருந்து விதவிதமாக நாக்கிற்கு ருசியாக சாப்பிட்டு பழகி இருந்த திலீப் “அந்த பொண்ணுக்காக நீங்களும் இட்லி சாப்பிடுகிறேன்னு இறங்கிட்டீங்க. நீங்களே பதிய சாப்பாடு மாதிரி இப்படி மட்ட மத்தியானத்தில் இட்லி சாப்பிடும்போது, உங்க முன்னாடி நான் என்ன நாட்டுக்கோழி பிரியாணியா சாப்பிட முடியும்?
இந்த பொண்ணுக்கு எப்ப சரியாகிறது.. நாங்க எல்லாரும் எப்ப நல்ல சோறு சாப்பிடுறதுன்னு தெரியவில்லையே.. தனு மேடம் ரொம்ப வருஷமா ரிஷி சார் லவ் பண்ணிட்டு இருந்தாரு. பட் அவங்க கூட இருந்ததை விட சும்மா ரெண்டு நாள் பழக்கமா இருந்தாலும், பாஸ் இந்த பொண்ணு கூட ரொம்ப க்ளோசா இருக்காரு. அதே சமயம் ஹாப்பியாவும் இருக்காரு. இப்படி எல்லாம் நான் இவர பாத்தே ரொம்ப நாளாச்சு. அதை நினைச்சு பார்த்து சந்தோஷப்பட்டு தலை எழுத்தேனு இந்த இட்லியை சாப்பிட வேண்டியது தான்.” என்று நினைத்து பெருமூச்சு விட்டவன் தனக்கு எதிரில் அமர்ந்து இட்லியையே சாம்பார் ஊற்றி நன்றாக குழப்பி பிசைந்துஅடித்துக் கொண்டிருந்த நிரஞ்சனாவை பார்த்து அதிர்ந்தான்.
“என்ன இவ சாதாரண இட்லியே இந்த வெட்டு வெட்டுறா.. அந்த அளவுக்கு இது டேஸ்டா இருக்கா என்ன?” என நினைத்த திலீப் அவனும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட தொடங்கினான். அந்த சூழல் இனிமையாக இருந்ததாலோ என்னவோ அந்த சாதாரண இட்லி மிகவும் சுவையாக இருப்பதாக திலீப்பிற்கு தோன்ற, வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டான் அவன்.
அவர்களது சந்தோஷத்தை கெடுக்கும்படியாக ரிசியின் மொபைல் ஃபோனிற்க்கு ஏதோ ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது. ஸ்கிரீனில் தெரிந்த பெயரை பார்த்தவுடன் ரிஷியின் முகம் இறுகியது.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

Author: thenaruvitamilnovels
Article Title: வரம் 16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.