மஞ்சம்-98

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அர்ஜுன், தேன்மொழி இருவரும் டான்ஸ் கிளாசிற்க்குள் நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே செல்ல ஒரு அழகான கிளாசிக் பாடல் அவர்களின் காதுகளில் கேட்டது. அவர்கள் உள்ளே செல்லும்போது தேன்மொழியின் வயதுடைய ஒரு அழகான இளம் பெண் “தை தை.. தித்தித்தை.. ததாங்கு தக்கசிமி!” என்று சொன்னபடி டான்ஸ் ஆடி தன் முன்னே இருந்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

என்னை அறிந்தால் படத்தில் வரும் த்ரிஷாவை போல இருந்த அந்த பெண் தேன்மொழி உள்ளே சென்றவுடன் அவளை “அனிதா” என்று அழைத்தவுடன் சட்டென்று திரும்பி பார்த்தாள். அவளது கண்கள் தேன்மொழியை தாண்டி அவள் அருகில் நின்று கொண்டிருந்த அர்ஜுன் மீதுதான் நிலை கோட்டில் நின்றது. அவனை அவள் தேன்மொழி சம்பந்தப்பட்ட டிவி நியூஸில் பார்த்திருக்கிறாள்.

அப்போதே அர்ஜுன் மிகவும் அழகாக இருப்பதாக நினைத்த அனைத்து இப்போது அவனை நேரில் பார்த்தவுடன் “இவர் தான் தேன்மொழி ஹஸ்பென்டா? செம handsome-ஆ இருக்காரே..!! எல்லாரும் சொல்ற மாதிரி தேன்மொழி நெஜமாவே ரொம்ப லக்கி தான். இவர மாதிரி ஒரு பணக்கார அண்டு ஹேண்ட்ஸம் ஆன ஹஸ்பண்ட் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.” என்று நினைத்து அவனையே தன் வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதை கவனிக்காமல் நட்புடன் தனது தோழியை நோக்கி வேகமாக சென்ற தேன்மொழி அங்கே மற்ற மாணவர்களோடு சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டு இருந்த ஆருத்ராவை பார்த்தபடி “எப்படி டான்ஸ் ஆடுறா என் பொண்ணு? நானும் டெய்லியும் இவளை இங்க இருந்து கூட்டிட்டு போகும்போது உன் கிட்ட இவளை பத்தி கேட்கலாம்னு நினைக்கிறேன். பட் கிளம்புற அவசரத்துல அப்படியே வாசல்ல நின்னு அவளை கூட்டிட்டு போக வேண்டியது ஆயிடுது.” என்று சொல்ல அர்ஜுனை பார்த்தபடியே “இவளுக்கு என்ன? சூப்பரா டான்ஸ் ஆடுறா! டான்ஸ்ல இன்ட்ரஸ்ட் உள்ள குழந்தைங்க என்ன சொல்லிக் கொடுத்தாலும் சீக்கிரம் கத்துப்பாங்க. இவளுக்கு அவ டாடி மாதிரியே ஷார்ப் பிரைன் இருக்கு. என்ன சொல்லி கொடுத்தாலும் உடனே கத்துக்குறா!” என்றாள் அனிதா.

“ஆமா இவ அப்படியே அர்ஜுன் மாதிரி தான். எங்க சித்தார்த் கூட கொஞ்சம் சைலன்டா இருப்பான். ஆனா இவ நல்லா துருதுருனு இருப்பா.” என்று தேன்மொழி சொல்லிவிட்டு சிரிக்க, அனிதா தன்னையே குறுகுறுவென்று ஏதோ விழுங்கி விடுவதைப் போல பார்ப்பதை நன்றாக கவனித்த அர்ஜுன் “இந்த பொண்ணு பார்வையே சரியில்ல. அப்புறம் என் பொண்டாட்டி அவளுக்கு மேல.. அவ புருஷனை இப்படி ஒருத்தி திங்கிற மாதிரி பார்த்துட்டு இருக்கா.. கொஞ்சம் கூட அதை கவனிக்காம இவ பாட்டுக்கு ஜாலியா அவ கிட்ட சிரிச்சு பேசிட்டு இருக்கா! என்னை திட்டுறதுனா மட்டும் தான் இவ நல்லா full form-ல இருப்பா. மத்தவங்க கிட்ட எல்லாம் சரியான டம்மி பீஸ்.” என்று நினைத்துக் கொண்டான்.

அர்ஜுனின் அருகில் சென்று அவனை அணைத்துக் கொண்ட ஆருத்ரா “டாடி நீங்க நான் டான்ஸ் ஆடினதை பார்த்தீங்களா! வர வர எனக்கு ஸ்டெப்ஸ் எல்லாம் சூப்பரா வருது. எங்க டான்ஸ் மேம் கூட என்னை நல்லா பண்றேன்னு appreciate பண்ணாங்க.” என்று உற்சாகமான குரலில் சொல்ல, உடனே அவளை தூக்கிக் கொண்ட அர்ஜுன் “என்னோட லிட்டில் பிரின்சஸ் என்ன பண்ணாலும் சூப்பரா பண்ணுவான்னு எனக்கு தெரியும். Love you baby!” என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். உடனே “love you too daddy!” என்ற ஆருத்ராவும் பதிலுக்கு அவன் கன்னங்களில் முத்தம் கொடுத்தாள்.

அதை பார்த்துக் கொண்டு இருந்த அனிதாவிற்கு ‌“இவர் நல்ல ஹஸ்பண்ட் மட்டும் இல்ல நல்ல father-ஆவும் இருக்காரு. எனக்குன்னு ஒருத்தன் வந்திருக்கானே.. எல்லாம் என் தலையெழுத்து. அவன் எனக்கு நல்ல ஹஸ்பண்டாவும் இல்ல. என் பொண்ணுக்கு நல்ல அப்பாவாவும் இல்ல. ஆருத்ராவை விட என் பொண்ணு சின்னவ தானே.. அவளுக்கும் அவ அப்பா இப்படி எல்லாம் அவளை ஆசையா தூக்கி கொஞ்ச நா நல்லா இருக்கும் இல்ல.. ஆனா அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வர மாட்டான். சரியான சைக்கோ.. அவனுக்கு எங்களை டார்ச்சர் பண்ண மட்டும் தான் தெரியும்.” என்று நினைத்தவளுக்கு அர்ஜுன் தேன்மொழி இருவரையும் பார்க்க பொறாமையாக இருந்தது.

ஒரு சாதாரண பள்ளிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த தேன்மொழிக்கு திடீரென வெளிநாட்டு பணக்காரன் கணவன் ஆவான் என்று அவள் கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்கவில்லை. அவளும் ஒரு பணக்காரனை தான் திருமணம் செய்து கொண்டாள். ஆனால் தேன்மொழியின் வாழ்க்கைக்கும் அவளுடைய வாழ்க்கைக்கும் எண்ணற்ற வித்தியாசங்கள் இருந்தன. ‌

அர்ஜுனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த அனிதா “இவர் உன் ஹஸ்பண்ட் அர்ஜுன் தானே! நான் நியூஸ்ல இவரை பார்த்து இருக்கேன். இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் உங்க ரெண்டு பேரையும் ஒன்னா நேர்ல பார்க்கிறேன். உன் ஹஸ்பண்டை எனக்கு இண்டர்வியூஸ் பண்ணி வைக்க மாட்டியா?" என்று கேட்க, “சாரி சாரி மறந்துட்டேன். இவரைப் பத்தி புதுசா நான் சொல்றதுக்கு எல்லாம் ஒண்ணுமே இல்ல அனிதா. என்னை விட அதிகமா எல்லாரும் இவரைப் பத்தி கூகுள்ல எல்லாம் சர்ச் பண்ணிட்டு வந்து என் கிட்ட கொஸ்டினா கேக்குறாங்க. அதான் மோஸ்ட்லி இவரை பத்தி நான் யார் கிட்டயும் பேசுறது இல்லை.” என்றாள் தேன்மொழி.

அதற்கு சரி என்பதைப் போல தலை ஆட்டிய அனிதா அவனைப் பார்த்து “ஹலோ மிஸ்டர் அர்ஜுன்! Nice to meet you.” என்று சொல்லிவிட்டு அவனுடன் கை குலுகுவதற்காக தன் கையை முன்னே நீட்ட,‌ ஆருத்ராவை தன் கையில் தூக்கி வைத்திருந்த அர்ஜுனுக்கு அவளுடன் என்னவோ ஃபார்மாலிட்டிக்காக கூட கை குலுக்க பிடிக்கவில்லை. அதனால் வெறுமனே அவளைப் பார்த்து லேசாக புன்னகைத்த “nice to meet you sister.” என்றான்.

அவன் தன்னை சிஸ்டர் என்று அழைத்ததால் அனிதாவின் முகம் அஷ்ட கோணலாக மாறியது. இதற்கு மேல் இங்கே நின்று இவள் முகத்தை ஏன் பார்க்க வேண்டும்? என்று நினைத்த அர்ஜுன் “அத்தை நமக்காக எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சுட்டு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. வா, ஹனி பேபி கிளம்பலாம். லஞ்சுக்கு நீ உன் ஃபிரண்ட்டை வேற இன்வைட் பண்ணி இருக்கல! அவர் வர்றதுக்குள்ள நம்ம வீட்டுக்கு போனா தான் நல்லா இருக்கும்.” என்று சொன்னதால் “ஓகே அனிதா, இன்னைக்கு எங்களுக்கு ஒர்க் நிறைய இருக்கு. நாங்க வீடு வேற ஷிப்ட் பண்ண போறோம். சோ நான் இப்ப ஆருத்ராவை கூட்டிட்டு கிளம்புறேன். இன்னொரு நாள் நம்ம ஃப்ரீயா பேசலாம்.” என்ற தேன்மொழி தனது குடும்பத்துடன் அங்கே இருந்து கிளம்பினாள்.

அவள் வீடு மாற்ற போவதாக சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்ட அனிதா அவள் செல்வதற்கு முன் இப்போது அவர்கள் எங்கே குடியேற போகிறார்கள் என விசாரித்து தெரிந்து கொண்டாள். அர்ஜுன் தனக்காக ஒரு வில்லாவை வாங்கி கொடுத்திருக்கும் தகவலை அவனிடம் சொன்ன தேன்மொழி, “இனிமே இந்தியாவுல இருக்க வரைக்கும் நாங்க எல்லாரும் அங்க தான் இருக்க போறோம்.” என்று அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

ஏற்கனவே பொறாமையில் பொங்கிக் கொண்டு இருந்த அனிதா தேன்மொழிக்காக திருமணம் ஆன வெகு சில நாட்களிலேயே அர்ஜுன் இவ்வளவும் செய்கிறானோ? என்று நினைத்து தான் ஏன் தேன்மொழியின் இடத்தில் இருக்கவில்லை? என தனக்குள் கேட்டுக் கொண்டு உள்ளுக்குள் குமர தொடங்கினாள்.

தங்கள் வீட்டிற்கு அவர்கள் செல்லும்போது அப்போது சரியாக பைக்கில் வந்து இறங்கினான் உதயா. அவன் இப்போது ஒரு சாதாரண வெள்ளை சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தான். ஆனால் பியூட்டி பார்லருக்கு எல்லாம் சென்று தன்னுடைய அழகை மெருகேற்றி வந்திருந்தான். வாசலிலேயே அவனைக் கண்டு ஆச்சரியப்பட்ட தேன்மொழி “என்ன உதயா.. இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்ன நாங்க கோவில்ல பார்த்தோம்.. இப்ப அதுக்குள்ள ஆளே மேலிட்டியே.. ஹீரோ மாதிரி ரெடியாகி வந்திருக்க! என்ன எங்க வீட்ல லஞ்ச் முடிச்சுட்டு அப்படியே எங்கேயாவது ஏதோ ஒரு பொண்ணு கூட அவுட்டிங் போறியா? எனக்கே தெரியாம சத்தம் இல்லாம ஒரு கேர்ள் ஃபிரண்டை புடிச்சிட்ட போல இருக்கு!” என்று கிண்டலாக கேட்டாள்.

உதயாவை மேலும் கீழும் பார்த்த அர்ஜுன் “எனக்கு என்னமோ இவன் உன்னை கரெக்ட் பண்றதுக்கு தான் இந்த கெட்டப்ல வந்திருக்கான்னு தோணுது. ஆனா நீ தான் சரியான லூசாச்சே.. உன் மரமண்டைக்கு எதுவும் புரியாது. நானா ஏதாவது சொன்னா கூட கேட்டு கோவப்படுவ. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது போ.” என்று நினைத்தவன், “வீட்டுக்கு வந்தவரை எதுக்கு வாசல்ல நிக்க வச்சு பேசிட்டு இருக்க? வாங்க எல்லாரும் உள்ள போலாம்.” என்று சொல்லிவிட்டு ஆருத்ராவின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றான். அவனை பின் தொடர்ந்து தேன்மொழியும் உதயா உடன் சென்றாள்.

“என்ன நீ டக்குனு எனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கான்னு கேட்கிற? என்னை பார்த்தா யாருக்கும் தெரியாம ஒரு பொண்ணை உஷார் பண்ணி அவ கூட சுத்திக்கிட்டு இருக்கிற ஆள் மாதிரியா இருக்கு? இந்த ஜென்மத்துல எனக்கு இன்னொரு பொண்ணு மேல லவ் வராது தேன்மொழி." என்று உதயா சொல்ல, “என்னது இன்னொரு பொண்ணா? அப்பா ஆல்ரெடி வேற ஏதாவது ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருக்கியா?” என்று ஆச்சரியமாக கேட்டாள். “ஐயையோ அவசரப்பட்டு உளறிட்டோமே.. என நினைத்து மனசகமாக தன் தலையில் அடித்துக் கொண்ட உதயா “எனக்கு எந்த பொண்ணு மேலயும் லவ் வராதுன்னு சொல்ல வந்தேன். பேசும்போது tongue slip ஆயிடுச்சு.” என்றான்.

“ஓகே ஓகே, முதல்ல வா சாப்பிடலாம் எனக்கு செமையா பசிக்குது.” என்ற தேன்மொழி அவனுடன் உள்ளே சென்றாள். உதயாவும் சாப்பிட வருவதாக தேன்மொழி சொல்லி இருந்ததால் அனைவருக்கும் சேர்த்து எக்கச்சக்கமாக சமைத்து வைத்திருந்த விஜயா அதை அனைவருக்கும் பரிமாறினாள். குறிப்பாக தன் வீட்டிற்கு முதல் முறையாக வந்திருக்கும் மாப்பிள்ளையை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று நினைத்த விஜயா மாப்பிளை மாப்பிள்ளை என்று சொல்லி அர்ஜுனுக்கு என்ன வேண்டும் என கேட்டு கேட்டு பரிமாறினாள்.

அதற்காக அவள் உதயாவை கண்டு கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. இருப்பினும் அர்ஜுனுக்கு கிடைக்கும் சிறப்பு கவனிப்பும், மாப்பிள்ளை என்ற மரியாதையும் தனக்கு கிடைத்திருக்க வேண்டியது. இடையில் வந்து இவன் அனைத்தையும் தட்டி பறித்துக் கொண்டான் என்று நினைத்த உதயாவிற்கு எரிச்சலாக இருந்தது. அர்ஜுனை பார்த்தாலே அவனுக்கு பாய்ந்து சென்று அவனை அடித்து கொன்றுவிடலாம் என்று யோசிக்கும் அளவிற்கு வெறுப்பாக இருந்தது.

-மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலி
ப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-98
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi