மஞ்சம்-95

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அர்ஜுன் தேன்மொழியை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிற்குள் நுழைந்தான். அந்த அறையை சுற்றி பார்த்த தேன்மொழி அப்படியே வாயடைத்துப் போய் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுடன் உள்ளே சென்று தன் காலால் லேசாக தட்டி டோரை லாக் செய்த அர்ஜூன் “இந்த ரூம் உனக்கு புடிச்சிருக்கா? இது தான் நம்ம மாஸ்டர் பெட்ரூம். நம்ம இங்க வரும்போது எல்லாம் இங்க தான் ஸ்டே பண்ண போறோம்.” என்றபடி அவளை அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தான்.

அந்த பிரம்மாண்ட குயின் சைஸ் கட்டிலுக்கு மேலே அர்ஜுன் தேன்மொழியின் திருமண புகைப்படம் இருந்தது. அதில் சிரித்த முகமாக தேன்மொழி அர்ஜுனை திரும்பி பார்க்க, அவள் கழுத்தில் தாலி கட்டினான் அர்ஜுன். அந்த அழகான தருணத்தை அப்படியே freeze செய்து அந்த ஃபோட்டோவில் தத்ரூபமாக பிரேம் போட்டு வைத்திருந்தார்கள். சுவர் அளவிற்கு பெரியதாக தங்களுடைய பெட்டிற்கு மேலே இருந்த அந்த புகைப்படத்தை கண்களில் காதல் மின்ன பார்த்த தேன்மொழி “இது என்னோட ஃபேவரைட் ஃபோட்டோ. என் ஃபோன் வால்பேப்பர்ல கூட இதுதான் வச்சிருக்கேன். நீயா இதை இங்க ஃப்பிரேம் போட்டு மாட்ட சொன்ன?” என்று ஆச்சரியமாக கேட்டாள்‌.

“என்ன தவிர வேற யார் சொல்ல போறாங்க?” என்று கேட்ட அர்ஜுன் அவள் அருகில் சென்று அமர, அவனது தோள்களில் சாய்ந்து கொண்ட தேன்மொழி “எனக்கு இந்த போட்டோவ அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு அர்ஜூன். என் லைஃப்ல பெஸ்ட் மொமெண்ட் அது தான். நம்மளோட மேரேஜ் ஆல்பம் எப்ப கிடைக்கும்? ஜனனி கிட்ட அது ரெடி ஆனதுக்கு அப்புறமா எனக்கு ஃபோட்டோ எடுத்து அனுப்புங்கன்னு கேட்டிருக்கேன். அவங்க எனக்கு இன்னும் சென்ட் பண்ணல. அட்லீஸ்ட் நம்ம கல்யாண வீடியோ கிடைச்சா கூட நல்லா இருக்கும்.” என்று ஆசையுடன் சொன்னாள்.

“அவளுக்கு அவளோட குழந்தைங்கள சமாளிக்கிறதே பெரிய வேலையா இருக்கும். நீ சொன்னதை எல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டு அவ என்ன செய்யப் போறா? நம்ம ரஷ்யா போனதுக்கு அப்புறம் எனக்கு ஞாபகப்படுத்து. நான் அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறேன்.” என்று அர்ஜுன் செல்ல, “ம்ம்.. அங்க ரஷ்யால இருக்கிற நம்ம வீட்லயும் இதே மாதிரி நம்ப ரூம்ல ஒரு ஃபோட்டோ மாட்டணும். பட் அந்த ஃபோட்டோல நீ, நான், சித்தார்த், ஆருத்ரா எல்லாரும் இருக்கிற மாதிரி இருக்கணும். அப்ப தான் நல்லா இருக்கும்.” என்றாள்.

“அவ்ளோ தானே மாட்டிட்டா போச்சு.. நீ உனக்கு புடிச்ச ஃபோட்டோவ ச்சூஸ் பண்ணி சொல்லு. அதவே பிக்ஸ் பண்ணிக்கலாம்.” என்று அர்ஜுன், அழகாக இதய வடிவிலான லைட்டுகளைக் கொண்டு ரொமான்டிக்காக டெக்கரேட் செய்யப்பட்டு இருந்த அந்த அறை முழுவதும் தங்களுடைய சின்ன சின்ன ஞாபகங்கள் ஃபோட்டோக்களாக நிறைந்து இருப்பதை பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி அவன் பேசுவதைக் கூட காதில் வாங்காமல் அவன் தோள்களில் சாய்ந்தபடி அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

வாஞ்சையுடன் அவள் கூந்தலை வருடிய அர்ஜுன் “உனக்கு இந்த ரூம் புடிச்சிருக்கா? நம்ம இங்கயே ஷிப்ட் ஆகிடலாமா?” என்று தனது இனிமையான குரலில் கேட்க, “ம்ம்.. இந்த வில்லி நல்லாதான் இருக்கு. அண்ட் பர்டிகுலர்லி எனக்கு இந்த ரூம் ரொம்ப புடிச்சிருக்கு. பட் இன்னொரு அப்பார்ட்மெண்ட் வீடு இருக்குன்னு சொன்னில.. நம்ம அங்கேயும் போய் பாத்துட்டு அதுக்கு அப்புறமா டிசைட் பண்ணிக்கலாம். பிரிட்டோ, கிளாரா மேரேஜ் க்கு நிறைய பேர் வருவாங்களா? 100 பேர் 200 பேர் தங்கர மாதிரி இருந்தா அப்பார்ட்மெண்ட் தான் நல்லா இருக்கும்.

வேணா நம்ம ஃபேமிலி மெம்பர்ஸ் பிரைவேட்டா இங்க தங்கிக்கிற மாதிரி அரேஞ்ச்மெண்ட்ஸ் பண்ணிக்கலாம். எனக்கு இதுதான் கரெக்டா இருக்கும்னு தோணுது. நீ என்ன சொல்ற?” என்று கேட்ட தேன்மொழி அவன் முகத்தை பார்த்தாள்.

“ம்ம்.. நானும் அதத்தான் நினைச்சேன். பட் அந்த அப்பார்ட்மெண்ட்டோட 18th ஃப்ளோர்ல இருந்து பார்த்தா சூப்பரான வியூ கிடைக்கும்‌. சோ வர கெஸ்ட் எல்லாரையும் கீழ தங்க வச்சுட்டு நம்ம டாப் ப்ளோர்ல கூட தங்கிக்கலாம். வர்றவங்க தனித்தனியா ஒரு பிளாட்ல இருக்கணும்னு ஆசைப்பட்டா, எல்லாருக்கும் பிரைவசி கிடைக்கும்.” என்று அர்ஜுன் சாதாரணமாக சொல்ல, முதலில் ஆமாம் என்பதைப் போல தலையாட்டிய தேன்மொழி சட்டென எழுந்து அமர்ந்து ஆச்சரியமான முகத்துடன் அவனை பார்த்து “ஒரு நிமிஷம் இரு.. இப்ப நீ என்ன சொன்ன 18-வது மாடியா? அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்னு என் பேரு வாங்கிருக்கேன்னு தானே சொன்ன.. அப்ப 18 மாடி இருக்கிற மொத்த அப்பார்ட்மெண்டையும் என் பேர்ல வாங்கி வச்சிருக்கியா? அதுவும் சென்னைக்குள்ள வாங்கணும்னா கோடிக்கணக்கில செலவாகுமே..!!” என்று கேட்டபடி ஆச்சரியத்தில் தன் வாயை பிறந்தாள்.

“பின்ன நீ என்ன நினைச்ச? இந்த அர்ஜுன் அவன் வைஃப்க்காக சும்மா அபார்ட்மெண்ட்ல ஒரு பிளாட் மட்டும் வாங்குவானு யோசிச்சுயா? இன்னும் நான் உனக்காக என்னன்னமோ பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். நீ என்ன ஆப்டர் ஆல் ஒரு அப்பார்ட்மெண்டுக்கு இவ்ளோ ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்க!” என்று அவன் கேட்க, “என்னது கிட்டத்தட்ட 30, 40 வீடு இருக்கிற அப்பார்ட்மெண்ட் சென்னைக்குள்ள வாங்குறது உனக்கு ரொம்ப சாதாரணமா தெரியுதா? அது சரி, இதுதான் பணக்காரங்க புத்தி போல. ஓடி ஓடி சாப்பிடாம தூங்காம தேவைக்கு அதிகமா காசு பணத்தை சம்பாதித்து வச்சிக்கிட்டு கடைசில அதை எப்படி செலவு பண்றதுன்னு தெரியாம இப்படி இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு இருக்கிறது! எனக்கு இது எல்லாம் சுத்தமா பிடிக்காது போ.

நீ எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சின்னா உன்னால முடிஞ்ச அளவுக்கு என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணு. நான் உன் கூட இருக்கும்போது எனக்கு ஏதாவது வேணும்னு தோணுச்சுன்னா, நான் கேட்கும் போது அதை எனக்காக பண்ணு. எனக்கு அது போதும். இப்படி சும்மா காஸ்ட்லியா ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்காத.” என்றாள் தேன்மொழி.

“இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன்.” என்று அவன் சொல்லிவிட்டு சிரிக்க, “என்னட்ட அப்படி ஃபர்ஸ்ட் டைம் பாக்குற.. இப்படி சிரிக்கிற அளவுக்கு?” என்று தன் புருவங்களை உயர்த்தியபடி கேட்டாள் தேன்மொழி. “புருஷன் கிட்ட அத வாங்கித்தா.. இத வாங்கி தானே கேட்கிற ஒய்ஃப் பத்தி தான் நான் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா எதுக்கு எனக்கு இதையெல்லாம் வாங்கி கொடுத்து காசு இருக்குன்னு செலவு பண்றேன்னு கேக்குற பொண்ண நான் இப்பதான் பார்க்கிறேன்.” என்றுவிட்டு அர்ஜுன் புன்னகைக்க, “ஏன் சியா இப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்களா? எனக்கு தெரிஞ்சு என் ஃபிரெண்ட்ஸ் எல்லாருமே இந்த மாதிரி தான். நாங்க எல்லாருமே வெறும் 10,000 20,000 சம்பளத்துக்கு கஷ்டப்பட்டு வேலை செஞ்சவங்க. அதனால ஒரு ரூபாயோட மதிப்பு கூட எங்களுக்கு நல்லா தெரியும். நமக்கு இருக்க வீடு வாசல் இல்லைன்னா வாங்கலாம் தப்பில்ல.

அதுக்காக போற பக்கம் வரப்பக்கம் எல்லாம் சொந்த நமக்கு வீடு இருக்கணும்னு இவ்ளோ காஸ்ட்லியா ப்ராப்பர்ட்டீஸ் வாங்கி போடணும்னு என்ன இருக்கு சொல்லு?” என்று அவனிடம் கேட்டாள் தேன்மொழி.

“சியாவும் உன்ன மாதிரி மிடில் கிளாஸ் பேக்ரவுண்ட்ல இருந்து வந்தவ தான்‌. ஆனா அவளுக்கு millionaire ஆகணும், பெருசா சாதிக்கணும், சொந்தக்கால்ல நிக்கணும்னு நிறைய ஆசை இருந்துச்சு. ஒரு காலத்துல எது எல்லாமே நமக்கு கிடைக்காம இருந்துச்சோ அது எல்லாத்தையும் அனுபவிக்கிற அளவுக்கு தகுதியை வளர்த்துக்கிட்டு சந்தோஷமா அதை அனுபவிக்கனும்னு சிலர் நினைப்பாங்க இல்ல.. அந்த மாதிரி தான் சியா.

பட் நீ அவளை விட கொஞ்சம் டிஃபரண்ட் தான். இருந்தாலும் எதுக்கு இதெல்லாம் தேவையான்னு நீ யோசிக்கிற. பட் அவ ஏன் இதெல்லாம் இருக்கக் கூடாதுன்னு நினைப்பா. அவளுக்குள்ள எப்பவுமே அவளால எது எல்லாம் முடியாம இருந்ததோ அது எல்லாத்தையும் செஞ்சு காட்டணும்னு ஒரு fighting spirit இருக்கும். ஒரே இடத்துல அவளை கொஞ்ச நேரம் கூட நான் பார்த்ததில்லை. எப்பயும் பிசினஸ் விஷயமா ஏதாவது யோசிச்சு பண்ணிக்கிட்டே இருப்பா.

அவ இறந்ததுக்கு அப்புறமா அவளோட ஷேர்ஸ், ப்ராப்பர்ட்டீஸ் எல்லாத்தையும் மேனேஜ் பண்ற பொறுப்ப அவ ஃபேமிலி கிட்டையே கொடுத்துட்டேன். பட் அவ அவளோட எல்லா லீகல் அக்ரீமெண்ட்லயும் நாமினியா என்ன தான் போட்டு வச்சிருக்கா. என் கிட்ட எதுவும் இல்லைன்றதுக்காக அவ அப்படி செய்யல. அவ அதை எனக்கு கொடுக்கனும்னு ஆசைப்பட்டா. அதுதான் என் சியா.” என்று பெருமையாக சொன்னான் அர்ஜுன்.

ஒரு சாதாரண பெண்ணாக இருந்து வெளிநாட்டிற்கு சென்று தானே சம்பாதித்து அதை வைத்து பிசினஸ் செய்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறாள் என்றால் கண்டிப்பாக அவள் இந்த பெருமைக்கு தகுதியானவள் தான் என்று நினைத்த தேன்மொழி, “பட் நான் அப்படியெல்லாம் இல்லையே.. புருஷன் நிறைய சம்பாரிச்சு வச்சிருக்காங்க ஜாலியா வீட்ல உக்காந்து சாப்பிட்டு டைம் பாஸ் பண்ணிட்டு இருக்கேன். சியா எவ்ளோ டேலண்டட்டா இருந்திருக்காங்க.. அவங்களுக்கு இருக்கிற guts-ல பாதி கூட எனக்கு இல்ல.

அவங்க இப்படி ஒரு brave lady-ஆ entrepreneur-ஆ இருந்ததுனால தான் அர்ஜுனுக்கு அவங்கள புடிச்சிருக்கு. ஒருவேளை நான் மட்டும் சியா மாதிரி இல்லாம இருந்திருந்தா அவன் என்ன மாதிரி ஒரு பொண்ணை எல்லாம் திரும்பி கூட பார்த்திருக்க மாட்டான்.” என்று நினைத்தவள், அதை நேரடியாகவே அவனிடம் கேட்டு வைத்தாள்.

‌“ஒருவேளை நான் சியா மாதிரி இல்லனா, உனக்கு என்ன புடிச்சி இருக்குமா அர்ஜூன்? நான் ஜஸ்ட் தேன்மொழி அவ்வளவு தான். எனக்கும் ஷியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னா கூட, உன்னையும் என்னையும் இந்த விதி ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல மீட் பண்ண வச்சிருந்தா, அப்ப கூட நீ என்ன சூஸ் பண்ணி இருப்பியா? இதே மாதிரி லவ் பண்ணி இருப்பியா?” என்று தேன்மொழி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு நொடி அப்படியே வாயடைத்து போய் அமர்ந்து விட்டான் அர்ஜுன்.

அவள் கேட்கும்போது உண்மையில் அந்த கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. பதில் அவனுக்கு தெரியவில்லை. அவன் கோமாவில் இருக்கும் போதே தேன்மொழி தான் சியாவை போல இருப்பதால் தான் தனக்கும் அவனுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்று சொல்லி அவனிடம் புலம்பிக் கொண்டு இருந்தது எல்லாம் அவன் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. அதனால் முதலில் இருந்தே தேன்மொழி சியாவை போலவே இருக்கிறாள் என்ற எண்ணம் அவன் இதயத்தில் ஆழமாக பதிந்திருந்தது.

சியா மீண்டும் இன்னொரு ரூபத்தில் தன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறாள் என்ற எண்ணத்திலேயே அவளைப் பார்த்து பழகி இருந்த அர்ஜுனுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல தடுமாற்றமாக இருந்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் “அப்ப இந்த தேன்மொழிக்கு உன் லைஃப்ல எந்த வேல்யூவும் இல்லை அப்படித் தானே.. இதே கேள்விய நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லும்போது கூட நான் கேட்டேன். அதுக்கு என்னையும் அவங்களையும் கம்பேர் பண்ணி நிறைய விஷயத்துல உனக்கு என்ன புடிச்சிருக்கா சொன்ன.

பட் அது எல்லாமே என்ன பார்த்து பழகி என்ன புரிஞ்சுகிட்டு அதுக்கப்புறம் நீ என்னை லவ் பண்ண தான் சொன்ன விஷயங்கள். இப்ப என்னோட கொஸ்டின் என்னன்னா, இந்த தேன்மொழி சியா மாதிரி இல்லாம இருந்திருந்தா கூட, நீ என்ன கல்யாணம் பண்ணி இருந்திருப்பியா மாட்டியா?” என்று கண்கள் கலங்க தனது வார்த்தைகளை அழுத்தி அழுத்தி கேட்டாள்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல்
பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-95
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi