மஞ்சம்-93

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
உதயா தொடர்ந்து திருமணமான பிறகு தேன்மொழி தன்னை கண்டு கொள்ளவில்லை, முக்கியமாக இன்று தன்னுடைய பிறந்தநாள் என்று கூட அவள் மறந்து விட்டால் என தொடர்ந்து அவளை குறை சொல்லிக் கொண்டே இருந்தான். எமோஷனலாக பேசி அனைத்தையும் நேராக அவளிடம் கொட்டி உதயா எய்த அம்பு நேரடியாக தேன்மொழியின் இதயத்தை சென்று தாக்கியது.

குற்ற உணர்ச்சியில் தவித்த தேன்மொழி உடனே எழுந்து நின்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு “ஐ அம் சாரி உதயா. இதுவரைக்கும் ஒரு தடவ கூட நீ என் பர்த்டேவ மறந்தது இல்ல. கொஞ்சம் கூட சுயநலம் இல்லாம எனக்காக நீ எவ்வளவோ செஞ்சிருக்க. ஆனா நான் ஏன் இப்படி உன் கிட்ட மட்டும் மோசமா நடந்துக்கிறேன்னு எனக்கே தெரியல. உன் பர்த்டே மறக்க கூடாதுன்னு ‌ என்னோட பழைய ஃபோன்ல நான் ரிமைண்டர் எல்லாம் போட்டு வச்சிருந்தேன் காலண்டர்ல.

இப்ப இருக்கிற நியூ ஃபோன்ல எதையுமே இன்னும் ப்ராப்பரா செட் பண்ணல. அதான் எனக்கு தெரியாம போயிடுச்சு. கண்டிப்பா உனக்கு புடிச்ச மாதிரி நான் இன்னைக்கு ஏதாவது உனக்கு ஒரு பர்த்டே கிஃப்ட் வாங்கி தரேன். அண்ட் அர்ஜுன் சொன்ன மாதிரி கண்டிப்பா நீ நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரணும். ஆபீஸ்ல இன்னைக்கு ஃபுல்லா லீவ் கேளு எனக்காக ப்ளீஸ்!” ‌ என்று சொல்ல,

அவருடன் சேர்ந்து தான் வாழ முடியவில்லை. குறைந்தபட்சம் இந்த ஒரு நாளையாவது அவளுடன் அவள் வீட்டில் செலவிடலாம் என்று உள்ளுக்குள் உதயாவிற்கு ஆசையாக தான் இருந்தது. ஆனால் அங்கே தேன்மொழியுடன் அர்ஜுனும் இருப்பான். அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக ஜோடியாக சுற்றுவதை தன் கண்களால் பார்க்க வேண்டியது எல்லாம் இருக்கும் என்று நினைத்து வருந்தியவன் அவள் கையை எடுத்துவிட்டு, “இல்ல தேன்மொழி, எனக்கு புரியுது. மேரேஜ் ஆகிட்டாலே எல்லாரும் இப்படித் தான் சேஞ்ச் ஆயிடுவாங்க.‌ ஒரு டைம்க்கு மேல ஃப்பிரெண்ட்ஸ் அவங்களுக்கு தேவைப்படாம போயிருவாங்க இல்ல அதான்.

நீ என்னோட பர்த்டேவை ஞாபகம் வச்சிக்கிறதுக்கு உனக்கு உன் காலண்டர்ல இருக்க நோட்டிபிகேஷன் செட்டிங்ஸ் தேவைப்படுது. பட் நா அப்படி கிடையாது. உன்னை நான் ஃபர்ஸ்ட் டைம் காலேஜ்ல மீட் பண்ண டேட், நீ என் கிட்ட பேசின டேட், உன்னோட பர்த் டே, உன் தம்பியோட பர்த்டே, உன் பழைய ஃபோன் நம்பர், ஏன் நீ இப்ப வைத்திருக்கிற‌ ஃபோன் நம்பர் கூட எனக்கு தெரியும். அது தான் உனக்கும் எனக்கும் இருக்கிற வித்தியாசம்.

புதுசா வந்த எதையும் பார்த்து இம்ப்ரஸ் ஆகி பழசா மறக்குற ஆள் நான் இல்லை தேன்மொழி.” என்று ஓர கண்ணால் அர்ஜுனை பார்த்தபடி அவன் இதுவரை சொன்ன அனைத்து டேட்டையும் அவளிடம் சொல்லிக் காட்டி “எங்க நீ இப்ப வைத்திருக்கிற ஃபோன் நம்பர் என்னன்னு ஃபோன பாக்காம உன் ஹஸ்பண்ட சொல்ல சொல்லு பாக்கலாம்!” என்று இதில் அர்ஜுனை வேறு கோர்த்து விட்டான்.

உடனே தேன்மொழி அர்ஜுனனை திரும்பிப் பார்க்க, “இப்படியே பேசி பேசி இவ கூட சண்டை போட்டுட்டு இவன் இங்க இருந்து ஒரேடியா போய் தொலைஞ்சிடுவான்னு பாத்தா, என்ன இவன் வண்டியை நம்ப பக்கம் திருப்பி விடுறான்?” என்று நினைத்த அர்ஜுன் எப்படி யோசித்துப் பார்த்தாலும் தேன்மொழியின் மொபைல் ஃபோன் போன் நம்பர் என்னவென்று அவனுக்கு ஞாபகம் வராததால் திருதிருவென முளித்தான்.

“அப்ப ஃபோன் இல்லனா உங்களுக்கு என் நம்பர் தெரியாது தானே! ஏதாவது எமர்ஜென்சின்னா, கிடைக்கிற ஃபோனை வச்சு தான் காண்டாக்ட் பண்ணனும்னா எப்படி என்ன நீங்க காண்டாக்ட் பண்ணுவீங்க?” என்று உடனே தேன்மொழி அர்ஜுனை பார்த்து கேட்க, “அடப்பாவி! இங்க வந்ததுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பா செஞ்சுட்ட டா!” என்று நினைத்து உதயாவை பார்த்து முறைத்த அர்ஜுன் “எனக்கு உன் நம்பர் தெரியாம இருக்கலாம். பட் நீ எப்ப எங்க இருக்க என்ன பண்ணிட்டு இருக்கன்னு பார்த்து உன்ன சுத்தி எந்த பிரச்சனையும் வராமல் உன்னை பார்த்துக்கிறதுக்கு நான் பாடிகார்ட்ஸ் அரேஞ்ச் பண்ணி இருக்கேன். அதே மாதிரி எனக்கும் எந்த பிராபளமும் வராம இருக்க என்னென்ன பண்ணனுமோ எல்லாத்தையும் நான் ஆல்ரெடி அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கேன். அண்ட் இப்ப நீ வச்சிருக்கறது நியூ நம்பர். அதுவும் டாடி உனக்கு வாங்கி கொடுத்தது. அதான் எனக்கு தெரியல. இன்னைக்குள்ள அத மெமரி பண்ணி உனக்கு நைட்டு நான் சொல்றேன்.” என்றான்.

அவன் அப்படி சொன்ன பிறகு தேன்மொழிக்கு அவனிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. அதனால் உதயவை பார்த்தவள், அவனோட கைக் குலுக்கி “once again many more happy returns of the day Udaya!‌ இப்ப மணி பத்து தான் ஆகுது. அவர் வெளிய போகணும்னு சொல்லிட்டு இருந்தாரு. சோ நாங்க கிளம்புறோம். வீட்டுக்கு போய் சாப்பிட்டு கெளம்பினா டைம் கரெக்டா இருக்கும். நீ மறக்காம லஞ்சுக்கு நம்ம வீட்டுக்கு வந்துரு.” என்று சொன்னாள். உடனே அவனும் வருவதாக சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினான்.

அனைவரும் வீட்டிற்கு சென்று முதல் வேலையாக காலை உணவை உண்டு முடித்தார்கள். கிளாராவை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு பிரிட்டோவிடம் தன்னுடைய இரண்டு ஆட்களை அனுப்பி அவர்களுடன் அவனை அவனுடைய திருமண ஏற்பாடுகளை பார்க்கச் சொல்லி உத்தரவிட்ட அர்ஜுன் தேன்மொழியை ‌ தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு ‌ தனியாக புறப்பட்டான்.

“ஆருத்ராவை டான்ஸ் கிளாஸில் போய் லஞ்சுக்கு பிக்கப் பண்ணிட்டு வந்துடலாம்னு இருக்கேன். அதுக்குள்ள வந்துடலாமா? இப்ப நம்ம எங்க போயிட்டு இருக்கோம்?” என்று தேன்மொழி கேட்க, “அதான் நேத்து நைட்டு சொன்னேனே.. அதுக்குள்ள மறந்துட்டியா நீ? அப்பார்ட்மெண்ட் அண்ட் நம்ம பீச் ஹவுஸை போய் பார்க்கலாம்னு இதோட உன் கிட்ட நான் நாலு தடவை சொல்லிட்டேன்.!” என்றான் அர்ஜுன்.

“அட ஆமா.. நான் பிரிட்டோ அண்ட் கிளாரா மேரேஜ் ரிசப்ஷனை எங்க வைக்கிறதுன்னு யோசிச்சிட்டு‌ இருந்தேன். எங்கயாவது ஹோட்டல்ல வச்சுக்கலாமா? ஆல்ரெடி நீ ஏதாவது பிளேஸ் ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கியான்னு உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அதுல நீ சொன்னது எனக்கு மறந்துடுச்சு.” என்று தேன்மொழி சொல்ல, தனக்கானவர்கள் மீது இவள் இவ்வளவு அக்கறை காட்டி அனைவரையும் தன்னுடைய சொந்த குடும்பமாக நினைக்கிறாளே என்று நினைத்து சந்தோஷப்பட்ட அர்ஜுன், “பிரிட்டோ கிட்ட லொகேஷன் பாத்துட்டு வர சொல்லி இருக்கேன். இன்னைக்குள்ள எல்லாமே ஃபிக்ஸ் பண்ணிக்கலாம் டோன்ட் வரி. அண்ட் நான் அவங்க மேரேஜ் கிஃப்ட் ஆல்சோ என் அசிஸ்டன்ட் கிட்ட சொல்லி பிரிட்டோக்கு தெரியாம ரெடி பண்ணிட்டேன். இன்னும் ஏதாவது பண்ண வேண்டியது இருந்தா சொல்லு. அதையும் இன்னைக்குள்ள பண்ணிரலாம்.

ஈவினிங் எல்லாரும் இங்க கிளம்பி வந்துடுவாங்க. இன்னும் 2 டேஸ்ல மேரேஜ் இருக்குல்ல.. அதுக்குள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டா தான் லாஸ்ட் மினிட்ல எதுவும் மிஸ் ஆகாம பாத்துக்க முடியும்.” என்றான்.

அவர்களது திருமண பரிசாக அர்ஜுன் எதைக் கொடுக்கப் போகிறான்? என்று யோசித்து ஆர்வமான தேன்மொழி “பார்றா.. என் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம அங்கேயே இருந்து எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் பண்ணிட்டியா நீ? நம்ம அவங்களுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கப் போறோம்?” என்று கேட்க, “அது சர்ப்ரைஸ். நான் யார் கிட்டயும் இத பத்தி சொல்லல. ஆகாஷ் கூட சீக்கிரமா எனக்கு தெரியாம என்னமோ ரெடி பண்றான். பார்க்கலாம் மேரேஜ் அன்னைக்கு தெரிஞ்சிரும்.” என்றான் அர்ஜுன்.

“இப்படி கடைசில சீக்ரெட் பண்றதுக்கு இந்த கிஃப்ட் மேட்டரை பத்தி என் கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம்ல? அவங்க மேரேஜ் நடக்கிற வரைக்கும் அது என்னன்னு தெரிஞ்சுக்கிற இன்ட்ரஸ்ட்ல நான் அதை பத்தியை யோசிச்சிட்டு இருக்க போறேன் போ!” என்றாள் தேன்மொழி. அவளைப் பார்த்து கிண்டலாக சிரித்தான் அர்ஜுன்.‌

அப்போது திடீரென்று தேன்மொழிக்கு உதயாவிற்கு அவள் கிஃப்ட் வாங்கி வைப்பதாக சொன்னது ஞாபகம் வர, “ம்ம்.. நான் பாரு உன்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண உடனே மெமரி லாஸ் பேஷன்ட் ஆன மாதிரி வர வர எல்லாத்தையும் மறக்கிறேன். உதயாவுக்கு பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு சொன்னனே.. பட் இப்ப வரைக்கும் நான் எதுவுமே வாங்கல.

ஈவினிங் அவன் வீட்டுக்கு பர்த்டே பார்ட்டிக்கு கண்டிப்பா போகணும். இல்லைனா ஆல்ரெடி நான் அவன கண்டுக்கவே இல்லைன்னு சொல்லிட்டு இருக்குற உதயா அப்புறம் என் கிட்ட பேசவே மாட்டான். என் ஃப்பிரண்ட்ஸ் மத்த எல்லாரையும் விட, உதயா ரொம்ப எமோஷனல். சின்னதா எதாவது நடந்தா கூட அதை ஏன் நினைச்சு அவன் ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருப்பான்.” என்று சோகமாக சொன்னாள் தேன்மொழி.

“ஓஹோ.. இந்த உதயா எப்படின்னு எனக்கு தெரியல. பட் உனக்கு அப்படி ஒன்னும் நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலையே.. எனக்கு தெரிஞ்சு நீ ஃப்ரெண்ட்ன்னு அவன் கிட்ட மட்டும் தான் பேசிட்டு இருக்க. ஏன் பொண்ணுங்க கூட எல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்க மாட்டியா நீ?” என்று கிண்டலாக கேட்க, திரும்பி அவனை முறைத்து பார்த்த தேன்மொழி “அதெல்லாம் என் கூட படிச்சவங்க, வேலை செஞ்சவங்க, எங்க ஏரியால இருக்கவங்கன்னு எனக்கு நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. திடீர்னு நான் காணாம போயிட்டு திரும்பி வந்ததில இருந்து எல்லாரும் நான் வாய தொறந்து யார் கிட்டயாவது பேசினாலே உன்னையும் என்னையும் பத்தி தான் கேக்குறாங்க.

அதான் அதிகமா நான் யார் கிட்டயுமே பேசுறதில்லை. எனக்கு பொய் சொல்றதே சுத்தமா பிடிக்காது. இப்ப நான் போய் எல்லார் கிட்டயும் நார்மலா பேசிட்டு இருந்தா, அன்லிமிட்டடா பொய் சொல்ல வேண்டியது இருக்கும். நான் பொய் சொல்லி பொய் சொல்லி டயர்ட் ஆகிட்டேன்பா. அதான் கொஞ்ச நாள் போகட்டும் இந்த கொஸ்டின் எல்லாம் ஓஞ்சதுக்கு அப்புறமா என்னோட நியூ நம்பரை ‌ எல்லாருக்கும் கொடுத்து பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.” என்றாள்.

“அப்ப உதயா மட்டும் உன் கிட்ட எதுவும் கேட்கலையா?” என்று தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவளிடம் கேட்க, “மத்தவங்களே இவ்ளோ கேட்கும்போது அவன் எப்படி எதுவும் கேட்காம இருப்பான்? என் ஃபேமிலில இருக்கிறவங்க கூட சேர்ந்து அவனும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுத்து என்னை தேடுவதற்கு எவ்வளவோ பண்ணி இருக்கான்.

நான் திரும்பி வந்த உடனே என்னாச்சு என்னாச்சுன்னு அவனும் கேட்டுக்கிட்டே தான் இருந்தான். என்னால அவன் கிட்ட முழுசா பொய் சொல்ல முடியல. நான் யாரையுமே லவ் பண்ணலேன்னு அவனுக்கு நல்லா தெரியும். சோ நான் பொய் சொன்னாலும் அவன் நம்பி இருக்க மாட்டான். அதனால பாதி உண்மையை சொல்லி மீதிய மரச்சிட்டேன்.” என்றாள்.

அவள் இந்த அளவிற்கு உதயாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது உள்ளுக்குள் அர்ஜுனனுக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும், ஒரு நண்பனாக அவளுக்காக உதயா நிறைய செய்திருக்கிறான் என்பதை அவனால் மறுக்க முடியவில்லை. அதனால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த அர்ஜுன் நேராக அவன் அவள் பெயரில் வாங்கிய பீச் ஹவுஸுற்க்கு சென்றான்.

அது வீடு என்று சொல்வதைவிட மாளிகை என்று சொல்லலாம். அதன் பிரம்மாண்ட கேட்டுக்கு மேலே ஒரு வளைவு இருக்க அதில் “Honey Palace” என்று எழுதி இருந்தது. காருக்கு வெளியே தன் தலையை நீட்டி அதை எட்டிப் பார்த்து சிரித்த தேன்மொழி “என்னது ஹனி பேலஸா? பாக்கவே காமெடியா இருக்கு அர்ஜூன். இதை நீ எனக்காக வாங்கி இருக்கேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சே ஆகனுமா? எதுவா இருந்தாலும் பப்ளிசிட்டி பண்ணி உனக்கு பழகி போயிருச்சில்ல!” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்கா
மல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-93
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi