எப்படியோ ஒவ்வொரு வழியாக தேன்மொழியை தான் வாங்கிய ப்ராப்பரிட்டீல் தங்க வைக்க சமாதானப்படுத்திய அர்ஜுன் “உன் மனசுக்குள்ள இன்னும் வேற எந்த விஷயத்துலயாவது என் மேல கோபம் இருந்துச்சுன்னா அதையும் டைரக்டா இன்னைக்கே கேட்டிரு. இன்னையோட எல்லா ப்ராப்ளமையும் நம்ம சால்வ் பண்ணிடலாம். நீ திடீர் திடீர்னு யோசிச்சு அன்னைக்கு ஏன் அப்படி நடந்துச்சு, உங்க வீட்ல இருக்குறவங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணாங்கன்னு உனக்கு ஞாபகம் வரும்போது எல்லாம் ஏதாவது சொல்லி சண்டை போடுறதுக்கு பதிலா உன் மனசுல இருக்குறது எல்லாத்தையும் மொத்தமா நீ கொட்டிடேனா, நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாத்தையும் கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்.” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டவன் சென்று கட்டிலில் அமர்ந்து ஏசியை ஆன் செய்தான்.
லேசான புன்னகையுடன் அவன் அருகில் சென்று அமர்ந்த தேன்மொழி அவனது மடியில் படுத்துக் கொண்டு “இப்படி கேட்டா எனக்கு எந்தெந்த விஷயத்துல உங்க மேல எல்லாம் கோபம் இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்? திடீர்னு ஏதாவது ஒன்னு நடக்கும்போது தான் உள்ளுக்குள்ள இருக்கிறது எல்லாம் வெளிய வரும்.” என்று சொல்ல, “சோ எல்லாத்தையும் இன்னைக்கே பேசி சால்வ் பண்ணனும்னு நானே ட்ரை பண்ணாலும் நீ அதுக்கு ரெடியா இல்லை போலையே.. பிரச்சனையை பெண்டிங்ல வச்சு அப்பப்ப என் கூட சண்டை போட்டு மேடம் என்ஜாய் பண்ற மாதிரி தெரியுது!” என்று கிண்டலாக சொல்லிவிட்டு புன்னகைத்தான்.
உடனே திரும்பி அவன் வயிற்றில் முகம் புதைத்து அப்படியே அவனை அணைத்துக் கொண்ட தேன்மொழி “நீதான் ரொம்ப பிஸி மேன் ஆச்சே.. ஒருவேளை நான் ஏதாவது கேட்டு சண்டை மட்டும் போடலைன்னா, சாருக்கு என்ன பத்தி யோசிக்கக் கூட டைம் இருக்காது. நமக்கு மேரேஜ் ஆகி எத்தனை நாள் ஆகுது.. சண்டை போடறதுக்கு தவிர வேற எதுக்காவது நம்ம ரெண்டு பேரும் free-யா ரிலாக்ஸ்டா உக்காந்து கொஞ்ச நேரம் பேசி இருக்கோமா சொல்லு?
நீ சண்டை போட்டாலும் சரி, கொஞ்சி பேசினாலும் சரி எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு நீ என் கூட ஏதாவது பேசணும். உன் வாய்ஸை நான் கேட்கணும். இப்படி அப்பப்ப உன்ன கட்டி புடிச்சுக்கணும். நீ என் பக்கத்திலேயே இருக்கணும். அவ்ளோ தான் எனக்கு வேற என்ன வேணும்? அதுக்காகவே நீ சும்மா இருந்தாலும், நானே ஏதாவது ரீசன் கண்டுபிடிச்சு உன் கூட சண்டை போடுவேன். அப்புறம் லைஃப் போர் அடிக்கும்ல!” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.
“ஓஹோ மேடம்க்கு போர் அடிக்குதா? அதனால என்ன வச்சி இப்படி எல்லாம் என்டேர்டைன் பண்றீங்க.. ஆனாலும் நீ யோசிக்கிறது எல்லாம் வில்லங்கத்தனமா தாண்டி வ இருக்கு. நானே ஒரு டிஃபரண்ட் கிரியேச்சர். நீ என்ன விட சில விஷயத்தில எல்லாம் டிஃபரண்டா இருக்க. But interesting!” என்ற அர்ஜுன் அவளுடைய கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் பிடித்துக் கொண்டு விளையாட்டாக கிள்ள, அவனைப் பார்த்து அழகாக சிரித்த தேன்மொழி “எனக்கு தூக்கம் வருது அர்ஜுன். தூங்கலாமா?” என்று குழந்தை போல அவன் டீ-சர்ட்டை பிடித்து இழுத்தபடி கேட்டாள்.
அர்ஜுனிற்க்கும் டிராவல் செய்து வந்ததில் மிகவும் சோர்வாக இருந்தது. அதனால் உடனே அவள் கேட்ட உடன் தூங்க சம்மதித்தவன், அவளை அணைத்துக் கொண்டு அப்படியே படுத்து உறங்க தொடங்கினான். காலையில் அவர்களை நேரமாக எழுப்பிவிட்ட விஜயா அவர்களுடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றாள். குடும்பமாக முதல்முறையாக தனது திருமணத்திற்கு பிறகு கோயிலுக்கு செல்வதால் மகிழ்ச்சியுடன் இருந்த தேன்மொழி புடவை கட்டி அழகாக தயாராகி இருந்தாள்.
அவளுக்கு மேட்சிங் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுன் கூட வேட்டி சட்டை அணிந்து கொண்டான். தங்களது திருமணத்திற்கு முன்பு எல்லா கடவுளின் ஆசிர்வாதமும் தங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த கிளாராவும், பிரிட்டோவும் கூட பக்தியுடன் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
அவர்களும் அர்ஜுன் தேன்மொழியை போல ட்ரெடிஷனலாக கோவிலுக்கு வந்திருந்ததால் அவர்கள் மீது கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்களின் கவனம் திரும்பியது. அர்ஜுனை இதுவரையிலும் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காததால் இப்போது அவன் தனது குடும்பத்தினருடன் வெளியில் வந்திருப்பதை மோப்பம் பிடித்து உடனே மீடியா ஆட்களும் அங்கே கையில் மைக்கை பிடித்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தார்கள்.
சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் காரில் ஏறுவதற்குள் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்ட மீடியா ஆட்கள் தேன்மொழி இடம் கேட்டதைப் போலவே இப்போது அர்ஜுனிடம் அவனுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி கேட்க தொடங்கினார்கள். ஏற்கனவே தேன்மொழி மீடியாவில் சொல்லி இருந்ததை எல்லாம் வீடியோக்களாக பார்த்திருந்த அர்ஜுன் அவளை போலவே தானும் பொய்களாக அடுக்கினான்.
நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த விஜயா “புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் எதுல ஒற்றுமை இருக்குதோ இல்லையோ பொய் சொல்றதுல நல்லா இருக்கு. எப்படித் தான் நடக்காதது எல்லாத்தையும் நடந்த மாதிரியே சொல்றாங்களோ தெரியல.. இந்த மாதிரி எல்லாம் நமக்கு நடிக்க தெரியாது. நல்ல வேலை நம்ம கிட்ட யாரும் எதுவும் கேட்கல. எனக்கு மட்டும் உண்மை என்னன்னு தெரியலன்னா, இவங்க பண்றத எல்லாம் பார்த்த எனக்கே தெரியாம என் புள்ள எவனையோ லவ் பண்ணி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிச்சேனு நானே நம்பி வேதனைப்பட்டுட்டு இருந்து இருப்பேன்.” என்று நினைத்துக் கொண்டவள், கால் வலி காரணமாக வெளியில் நிற்க முடியாமல் சென்று காரில் அமர்ந்து கொண்டாள்.
அர்ஜுன், தேன்மொழி இருவரையும் காருக்குள் ஏறவிடாமல் பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டதால், “ பாஸ் நம்ம ஆளுங்களை வச்சு நாங்க இங்க இருக்கிற crowd-ஐ கொஞ்சம் கிளியர் பண்ணிட்டு வரோம்.. அதுவரைக்கும் மேடம் கூட நீங்க கோயில்லையே இருங்க.” என்று சொல்லி கிளாராவையும் அர்ஜுன் தேன்மொழியுடன் உள்ளே அனுப்பி வைத்து விட்டான் பிரிட்டோ.
அதனால் உள்ளே சென்ற அவர்கள் வெளிப்பிரகாரத்தில் உள்ள கல் மண்டபத்தின் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தேன்மொழியின் இடுப்பில் கை வைத்து அவளை இன்னும் தன் பக்கம் இழுத்து அமர வைத்த அர்ஜுன் “எப்பயும் இருக்கிறதை விட இன்னைக்கு நீ செமையா இருக்கு தெரியுமா? நானும் நம்ம கிளம்புனதுல இருந்து உன் கூட சேர்ந்து ஒரு ஃபோட்டோ எடுக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கேன்.. எடுக்க முடியாமயே போயிடுச்சு. வா இப்பயாவது எடுக்கலாம்.” என்று சொல்லிவிட்டு தனது மொபைல் ஃபோனில் அவளுடன் செல்ஃபி எடுக்கத் தொடங்கினான்.
அவர்கள் இருவரும் இரண்டு மூன்று ஃபோட்டோக்கள் எடுத்த பிறகு “நீங்களும் வாங்க கிளாரா. நம்ம மூணு பேரும் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக்கலாம்.” என்ற தேன்மொழி அவள் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் அமர வைத்து அர்ஜுனுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள். அதன் பிறகு எழுந்து நின்று கொண்ட கிளாரா “chief உங்க ரெண்டு பேரோட காஸ்டியூம்க்கு இந்த லொகேஷன் சூப்பரா இருக்கு. நீங்க ரெண்டு பேரும் அந்த தூண் கிட்ட நில்லுங்க. என் கிட்ட ப்ரொபஷனல் கேமரா இருக்கு. அதுல நான் உங்க ரெண்டு பேரையும் ஃபோட்டோ எடுத்து கொடுக்கிறேன்.” என்றாள்.
உடனே சரி என்று சொல்லிவிட்டு அர்ஜுனும் தேன் மொழியும் அங்கே நின்று வித விதமாக ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்க தொடங்கிவிட, அவர்களது அழகிய உருவத்தை சிரித்த முகமாக தனது கேமராவில் படம் பிடித்தாள் கிளாரா. அப்போது நேரம் காலை 10 மணி தான் ஆகி இருந்தது. இருப்பினும் அந்த சென்னை மாநகரத்தில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்ததால், அங்கே நின்று கொண்டிருந்த கிளாராவிற்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது.
இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மெல்ல நடந்து தேன்மொழியின் அருகில் சென்று தன் அருகில் இருந்த கேமராவை தரையில் வைத்த கிளாரா தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்று உணர்ந்து அர்ஜுனை திரும்பி பார்த்து ”chief” என்று ஏதோ சொல்ல வாய் எடுத்தாள். அதற்குள் அவளுடைய தலைசுற்றல் அதிகமாகி அவளுக்கு மயக்கம் வந்து விட, அதை கண்டு அதிர்ந்த அர்ஜுன் “கிளாரா” என்று சத்தமாக சொன்னபடி அவள் அருகில் சென்று தரையில் அவள் விழுவதற்குள் அவளை அப்படியே தன் கைகளில் ஏந்தினான்.
அப்படியே அவளை தூக்கிக் கொண்டு அந்த கல் மண்டபத்தின் மீது ஏரி அங்கே அவளை படுக்க வைத்த அர்ஜூன் அவளது முகத்தில் தட்டி “கிளாரா.. கிலாரா.. what happened? Wake up?” என்று பதட்டமான முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். கிளாராவின் அருகில் சென்று அவளுடைய நாடித்துடிப்பை பிடித்துப் பார்த்த தேன்மொழி “இவங்களோட பல்ஸ் கரெக்டா தான் இருக்கு. சென்னை வெயில் தாங்காம மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். நீ இவங்கள பாத்துக்கோ. நான் போய் தண்ணி கொண்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
நடக்கும் அனைத்தையும் கோவிலில் உள்ள கருவறையில் இருந்த அம்மனை தரிசித்து விட்டு வெளிப் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு இருந்த உதயா தூரத்தில் இருந்து பார்த்தான். தேன்மொழியுடன் அர்ஜுனை பார்த்தவுடன் அவர்கள் இருவரும் பொருத்தமான ஜோடியாக இருக்கிறார்கள் என்று அவனுக்கும் தோன்றியது. அதே சமயம் அந்த எண்ணம் பொறாமைத் தீயை அவனுக்குள் பற்றி எரிய வைத்தது. அந்த தீ அணைவதற்குள் மயக்கம் போட்டு கீழே விழுந்த கிளாராவை கொஞ்சம் கூட யோசிக்காமல் அர்ஜுன் தாங்கிப் பிடித்தது, அவளைத் தொட்டு தூக்கி இப்படி சோகத்தின் சாயல் முகத்தில் பொங்க, அவளிடம் அக்கறை காட்டுவது என்று அனைத்தையும் கவனித்த உதயாவின் மனதிற்குள் அர்ஜுன் என்னவோ ஒரு கெட்டவனாகவே தெரிந்தான்.
“வைஃப் கூடவே இருக்கும் போது யாராவது இன்னொரு பொண்ணு கிட்ட இப்படி எல்லாம் பிஹேவ் பண்ணுவாங்களா? இந்த தேன்மொழி இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு எங்க போனா? இவளுக்கு எல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்ல. அவ கண்ணு முன்னாடியே அந்த பொண்ணை அவர் உரிமையா அசால்டா தூக்குறாரு. இது எல்லாத்தையும் பார்க்கும்போது ஃபர்ஸ்ட் டைம் நடக்கிற மாதிரியா இருக்கு?
இவங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன இவ்ளோ க்ளோஸ் ஆன ரிலேஷன்ஷிப்? வீட்ல வேலை செய்ற பொண்ணுக்கு இவ்ளோ அட்டென்ஷனை ஒரு பாஸ் கொடுக்கணும்னு அவசியம் இல்லையே! இது எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தா கூட தேன்மொழிக்கு கொஞ்சம் கூட அறிவே வராது போல இருக்கு! அவ அப்பாவியா இருக்குறதுனால கூடவே இருந்து இவங்க எல்லாரும் அவளை நல்லா ஏமாத்துறாங்க.” என்று நினைத்த உதயா எப்படியும் தேன்மொழி தண்ணீர் எடுக்கத் தான் எங்கையாவது சென்று இருப்பாள் என நினைத்து அவளை தேடிக் கொண்டு சென்றான்.
-மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபா
லோ செய்யுங்கள் நன்றி

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-91
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.