நள்ளிரவு நேரத்தில் தேன்மொழி தனக்கு சமைத்து வைத்த உணவுகள் எல்லாம் இங்கே வந்து சேர்வதற்காக காத்திருந்த அர்ஜுன் “எப்படி யோசிச்சு பாத்தாலும் இன்னும் அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துறதுன்னு எனக்கு ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குது. அவ சொன்னதை நான் கேட்கலைன்னா மறுபடியும் அவ பிரச்சனை பண்ண தான் போறா.. அதுக்காக எத்தனை நாள் அவ அங்கேயும், நான் எங்கேயும் இருக்க முடியும்?” என்று யோசித்துக் கொண்டு இருக்க, இரவு தூங்குவதற்கு முன்பாக அன்றைய நாளில் நடந்த அனைத்தையும் ஒரு அப்டேட்டாக அர்ஜுனிடம் சொல்லும் வழக்கத்தை வைத்திருந்த பிரிட்டோ ஒரு ஷார்ட் மெசேஜை அவனுக்கு அனுப்பி இருந்தான்.
அதில் அவன் தேன்மொழியின் குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்றதும், அங்கே உதயா வந்து இருந்ததையும் அவன் மென்ஷன் செய்திருந்தான். அதை பார்த்தவுடன் அர்ஜுனின் முகம் இன்னும் இருக்கமானது. “அவன் என்ன வேணும்னே என் ஹனி பேபி பின்னாடி சுத்திட்டு இருக்கானா?” என்று கேட்டு உடனே அர்ஜுன் மெசேஜ் அனுப்ப, “இல்லை இல்லை சீஃப் அப்படியெல்லாம் எதுவும் தெரியல.. ஆக்சுவலி லாஸ்ட்டா அந்த பையனுக்கும் நம்ம தேன்மொழி மேடம் ஏதோ ப்ராப்ளம்னு நினைக்கிறேன். அந்த பையன் வீட்டுக்கு வந்துட்டு போனதுக்கு அப்புறமா அவங்க ரெண்டு பேருமே சரியா பேசிக்கிட்ட மாதிரியே தெரியல.
அவனும் மறுநாள் காலையில யார் கிட்டயும் சொல்லாம கிளம்பி போயிட்டான். நாங்க தியேட்டர் போகும் போது கூட அவன் அவனுடைய ஃபிரெண்ட்ஸ் கூட தான் வந்திருந்தான். மேடமை பார்க்கணும்னு அவன் பிளான் பண்ணி எல்லாம் வரல.” என்று உடனே அவனுக்கு ரிப்ளை அனுப்பினான் பிரிட்டோ.
அதை பார்த்தவுடன் பெருமூச்சு விட்ட அர்ஜூன் “என் பொண்டாட்டி கூட நான் சேர்ந்து வாழறது தான் பிரச்சனையா இருக்குன்னு பார்த்தா, இவன மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து எல்லாம் அவளை காப்பாற்றுவது அதைவிட பெரிய பிரச்சனையா இருக்கும் போல!!” என்று நினைத்து விட்டு “உனக்கு அவனோட பிகேவியர்ல ஏதாவது இஷ்யூஸ் இருக்குற மாதிரி தெரிஞ்சதுன்னா, உடனே அவனை தனியா கூப்பிட்டு தேன்மொழிக்கு தெரியாம இனிமே அவன் தேன்மொழி கிட்ட பேச கூடாதுன்னு சொல்லிரு. முக்கியமா நான் சொன்னதா சொல்லி அவன நல்லா மிரட்டி விட்டுரு.” என்று பிரிட்டோவிற்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தான்.
இவர்கள் இப்படி யோசிக்கும் அளவிற்கு எல்லாம் உதயா வர்த்து இல்லை என்று தான் பிரிட்டோவிற்கு தோன்றியது. இருப்பினும் அர்ஜுன் சொல்லும்போது அவனை மறுத்து பேச முடியாது என்பதற்காக, “ஓகே சீஃப்! மேடமை சுத்தி என்ன நடக்குது, யார் யார் என்னென்ன பண்றாங்கன்னு நாங்க எப்பவுமே நோட் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். எதுவும் பிராப்ளம் வந்தா கண்டிப்பா நான் ஸ்டெப் எடுப்பேன்.” என்று அவனுக்கு ரிப்ளை அனுப்பினான்.
பிரிட்டோ மும்மரமாக இப்படி அர்ஜூன் உடன் சேட் செய்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டு இருந்த கிளாரா “இந்த டைம்ல கூட யார் கிட்டயாவது பேசிக்கிட்டே தான் இருப்பியா நீ? உன் பக்கத்துல நான் இருந்தாலும், வர வர நீ என்ன பெருசா கண்டுக்கவே மாட்டேங்குற பிரிட்டோ.. மிஸ்ஸஸ் அர்ஜுன் சொன்னது கரெக்ட் தான். இந்த பாய்ஸ் எல்லாருமே அவங்க விரும்புற பொண்ணு கிடைக்கற வரைக்கும் ஒரு மாதிரி இருப்பாங்க. அந்த டைம்ல எல்லாம் இந்த வேர்ல்டிலேயே அவங்களுக்கு அந்த பொண்ணு தான் இம்பார்டன்ட் அப்படின்ற மாதிரி ஃபீல் பண்ண வைப்பாங்க. அதே பொண்ணு கிடைச்சுட்டா, அப்படி ஒருத்தி இருக்கிறதையே மறந்துட்டு மத்த பொண்ணுங்க கூட பேசுறது, flirt பண்றதுன்னு நம்மளை எல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க!” என்றபடி அவனது மடியில் படுத்தாள்.
உடனே அவள் முகத்தின் அருகில் தனது மொபைல் ஃபோனின் ஸ்கிரீனை காட்டிய பிரிட்டோ “இங்க பாரு.. சீஃப் கிட்ட தான் எப்பயும் போல இங்க என்ன நடக்குதுன்னு அப்டேட் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குள்ள நான் ஏதோ பொண்ணுங்க கிட்ட கடலை போடுற மாதிரி என்னென்னமோ பேசுற! நானும் சரி, நம்ம சீஃப்ம் சரி அப்படியெல்லாம் நமக்குன்னு ஒருத்தி இருக்கும்போது மத்த பொண்ணுங்க கிட்ட வழியுற ஆள் இல்ல ஓகேவா?” என்று அவளிடம் கேட்க,
விளையாட்டாக அவனது குறுந்தாடியை பிடித்து இழுத்து அவன் கன்னத்தை கிள்ளிய கிளாரா “எனக்கு தெரியும்.. இந்த மூஞ்சியை எல்லாம் என்ன விட்டா வேற யார் பாக்க போறாங்க? இருந்தாலும் சும்மா அப்படி எல்லாம் பொண்ணுங்க நாங்க சொல்லும்போது, உடனே பசங்க அப்படியெல்லாம் இல்லைன்னு ப்ரூவ் பண்றதுக்காக நாங்க உங்களுக்கு எவ்ளோ இம்பார்டன்ட், நாங்க எவ்ளோ அழகா இருக்கோம் அப்படி இப்படின்னு சொல்றத எல்லாம் கேக்குறதுக்கு நல்லா இருக்கும்ல அதான்!” என்றாள் குறும்பாக.
உடனே தனது மொபைல் ஃபோனை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ஏசி ரிமோட்டை தேடி கண்டுபிடித்து கூலிங்கை குறைத்த பிரிட்டோ தன் மடியில் படுத்திருந்த கிளாராவை பிடித்து இழுத்து அமர வைத்து, பின் அவளை தன் பக்கம் நெருக்கமாக இழுத்து அவளுடைய இடையை பற்றி கொண்டான். “ஓய் பிரிட்டோ என்ன பண்ணிட்டு இருக்க? ஆல்ரெடி விஜயா மேடம்க்கு நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல ஸ்டே பண்றது சுத்தமா பிடிக்கல. சோ நம்ம இங்க இருக்கிற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு ஆல்ரெடி பேசி டிசைட் பண்ணி இருக்கோம்ல! அப்புறம் என்ன அதெல்லாம் மறந்துட்டு அப்படியே பாயுற?” என்று கேட்டபடி கிளாரா பின்னோக்கி சென்றாள்.
அவளை அப்படியே தலையணை பக்கம் திருப்பி அவளை அதில் படுக்க வைத்துவிட்டு, அவள் மீது ஏறி படுத்துக் கொண்ட பிரிட்டோ “உனக்கு என் கூட அப்படி பேசி விளையாட பிடிச்சிருக்கு இல்ல.. அந்த மாதிரி எனக்கு உன் கூட இப்படி விளையாட பிடிச்சிருக்கு. இந்நேரம் டேப்லெட் போட்டுட்டு அவங்க தேன்மொழி மேடம் ரூம்ல நல்லா தூங்கிட்டு இருப்பாங்க. இங்க நம்ம என்ன வேணா பண்ணலாம். அவங்களுக்கு என்ன தெரியப்போகுது?” என்று மெல்லிய குரலில் கேட்டுவிட்டு தனது ஒற்றை கையை அவளுடைய ஷாட்டிற்குள் செலுத்தினான்.
மற்ற இடத்தில் எல்லாம் கன் போல விரைவாக இருக்கும் கிளாரா, பிரிட்டோவின் கைபட்டால் அப்படியே ஒரே நொடியில் மெழுகாக உருகி விடுவாள். இப்போதும் அப்படித் தான் நடந்தது. தேன்மொழியுடன் இந்த சிறிய வீட்டில் தங்கி இருக்கும் போது இப்படி எல்லாம் செய்தே வேண்டுமா? கொஞ்சம் சத்தம் அதிகமாக வந்தால் கூட வெளியில் கேட்க்குமே.. என்று நினைத்த கிளாரா அவனிடம் ஏதோ சொல்ல வர, தன் இதழ்களை அவளுடைய இதழ்களின் மீது வைத்து மூடி அவளை பேச விடாமல் செய்தான் பிரிட்டோ.
அடுத்த இரண்டாவது நொடியில் அவர்கள் இருவரும் பாம்பைப் போல ஒருவரை ஒருவர் பின்னி கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டு இருந்தார்கள். இப்போது பேசுவதற்கு எந்த தேவையும் இல்லாமல் தங்களின் செயல்களில் வேகத்தை கூட்டி பிசி ஆனார்கள்.
கிட்டத்தட்ட விடியற்காலை நேரத்தில் தான் தேன்மொழி இங்கே இருந்து அனுப்பிய உணவுகளை சுமந்து கொண்டு அர்ஜுன் குடும்பத்தின் ஜெட் விமானம் ரஷ்யா சென்று சேர்ந்தது. அதில் இருந்த உணவுகள் நேரடியாக அவனிடம் பதப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. அதை தங்கள் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்யச் சொன்ன அர்ஜுன் சர்வன்டிடம் அதில் என்னென்ன உணவுகள் இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு, தனக்கு மிகவும் பிடித்த மட்டன் கபாப், பிரியாணி போன்ற உணவுகளை எல்லாம் சூடு பண்ணி கொண்டு வந்து தன்னிடம் கொடுக்க சொன்னான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனுடைய ரூமில் உள்ள மினி டைமிங் டேபிளில் அவனுடைய உணவுகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டது. அதில் இருந்து கமகமவென்று வந்த வாசனை அந்த அறை முழுவதையும் நிரப்ப, “ஆஹா.. ஸ்மெல்லே செமையா இருக்கே.. அப்ப ஃபுட் இன்னும் எவ்ளோ டேஸ்டா இருக்கும்! ஆனாலும் என் பொண்டாட்டிக்கு சாப்பிடுற விஷயத்துல செம டேஸ்ட். எதையெல்லாம் ஸ்டோர் பண்ணி சாப்பிட்டாலும் அதோட டேஸ்ட் நல்லா இருக்குமோ அந்த மாதிரி இருக்கிற ஃபுட்டை மட்டும் சூஸ் பண்ணி குக் பண்ணி இருக்கா. அதுவும் எல்லாம் எனக்கு புடிச்ச ஐட்டம். என் மேல கோவமா இருந்தாலும், எனக்காக ஏதாவது செய்றதா இருந்தா பார்த்து பார்த்து செய்ற அளவுக்கு இந்த குட்டச்சி பாசக்காரியா தான் இருக்கா. ஆனா என்ன பண்றது அதே அளவுக்கு கோவக்காரியாவும் இருக்காளே! அதான் இப்ப பிரச்சனையா இருக்கு.” என்று நினைத்து சலித்துக் கொண்டு சாப்பிடுவதற்காக சென்று அமர்ந்தான்.
முதல் வாய் எழுத்து வைத்த உடனேயே தேன்மொழியின் சமையலுக்கு அர்ஜுன் அடிமையாகி விட்டான். இதுவரை அவன் எத்தனையோ பிரம்மாண்ட ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் எல்லாம் தலைசிறந்த சமையல்காரர்களின் கையில் சமைத்து வாங்கி சாப்பிட்டு இருக்கிறான். நேரடியாக அவனுக்கு என்று பிரத்தியோகமாக வேலை பார்ப்பதற்கே அந்த வீட்டில் எல்லா வகையான உணவுகளையும் சமைப்பதற்கு அந்தந்த துறையில் தனித்துவம் பெற்ற செஃப் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரின் சமையலிலும் இல்லாத ஏதோ ஒன்று அவனுக்கு தேன்மொழி சமைத்துக் கொடுத்ததில் இருப்பதாக தோன்றியது. ஒருவேளை வீட்டில் உள்ளவர்கள் நமக்காக சமைக்கும்போது அந்த உணவில் அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நேசமும் அக்கறையும் இணைவதால் அதன் சுவை கூடுகிறது என்று பொதுவாக சொல்வார்களே.. அப்படி கூட இருக்கலாம் என்று நினைத்த அர்ஜுன் சாப்பிடும்போது உணவுகளையும், அந்த உணவுகளோடு தன்னையும் சேர்ந்து செல்ஃபியும் எடுத்து அவளுக்கு அனுப்பி வைத்தான்.
தேன்மொழி நெட்டை ஆஃப் செய்யாமல் இருந்ததால் அர்ஜுன் அவளுக்கு அனுப்பிய ஃபோட்டோவின் நோட்டிபிகேஷன் சவுண்ட் அவளுடைய தூக்கத்தை தொந்தரவு செய். சட்டென தன் கண்களை திறந்து பார்த்த தேன்மொழி “அர்ஜுன் ஏதாவது மெசேஜ் பண்ணி இருப்பானா?” என்ற யோசித்தவாறு தனது மொபைல் ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
அவள் எதிர்பார்த்த இருந்ததைப் போலவே அவளுக்கு அர்ஜுனிடம் இருந்து மெசேஜ் வந்திருந்ததால் இருந்த தூக்க கலக்கத்திலும் கூட அவளுடைய முகம் சட்டென்று பிரகாசமானது. தான் ஆசை ஆசையாக சமைத்த உணவு அவனுக்கு பிடித்திருக்கிறது என்று நினைக்கவே உள்ளுக்குள் அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அர்ஜுன் அனுப்பிய செல்ஃபி ஃபோட்டோவில் அவன் வெறும் டவுசர் மட்டுமே அணிந்திருந்ததால் அவனுடைய கவர்ச்சியான சிக்ஸ்பேக்ஸ் உடலை அவளால் தெளிவாக பார்க்க முடிந்தது.
இதற்கு முன் இருந்ததைவிட அவனுடைய உடல் நன்றாக இறுகி போய் இருப்பதை போல இருந்தது. அவன் முகம் கூட சோர்வாக கவலையுடன் இருப்பதைப்போல அவளுக்கு தோன்ற, “உடம்பு சரி இல்லாத இருக்கும் போது கூட என் ஹஸ்பண்ட் அழகா இருக்காரு. பட் face தான் ரொம்ப dull-லா இருக்கு. எல்லாம் நான் இல்லாம அவன் ஃபீல் பண்றதுனால தான். என் மேல இவ்ளோ லவ் இருக்கு இல்ல.. அப்புறம் நான் சொல்றத கேட்டா தான் என்னவாம் இவனுக்கு? திமிரு புடிச்சவன்!” என்று அவன் போட்டோவை பார்த்து தனக்குள் பேசியபடி மீண்டும் அப்படியே படுத்தாள்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-79
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.