காலையில் தேன்மொழிக்கு முன்பாகவே தூங்கி எழுந்த ஆருத்ரா அவர்களது ரூமை விட்டு வெளியேறி ஹாலிற்கு சென்று கொண்டு இருந்தாள். அப்போது பல நாட்களுக்கு பிறகு தனது ஸ்போர்ட்ஸ் ட்ரைனிங் coach இடம் பேசி இருந்த ஆதி அவர் தன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்லி அழைத்து இருந்ததால், அப்படியே ஜாகிங் செல்லலாம் என நினைத்து ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து பழக்க தோஷத்தில் ஹாலில் நின்று தனது டிஷர்ட் போட்டுக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்தபடி அவன் அருகில் சென்ற ஆருத்ரா “நீங்களும் எங்க டாடி மாதிரியே சிக்ஸ் பாக்ஸ் வச்சிருக்கீங்களா மாமா?” என்று ஆசையுடன் கேட்டுவிட்டு அவன் வயிற்றில் கை வைத்து அழுத்தி விளையாடினாள். அவள் சிறிய பெண்ணாக இருந்தாலும் சட்டென்று தன் மீது கை வைத்தவுடன் அவனுக்கு கூச்சமாக இருக்க, உடனே நெளிந்த ஆதி அவளைப் பார்த்து தனது அனைத்து பற்களும் தெரியும் அளவிற்கு புன்னகைத்து விட்டு “உங்க அப்பா அளவுக்கு எல்லாம் நான் பெரிய பாடி பில்டர் இல்ல. ஏதோ ஸ்போர்ட்ஸ் பிளேயரா இருக்குறதுனால பாடிய fitஆ வச்சிருக்கேன்.” என்றான்.
உடனே அவனை மேலும் கீழும் பார்த்த ஆருத்ரா “நீங்க இப்படியே handsomeஆ தான் இருக்கீங்க மாமா.” என்று சொல்ல, அவளைப் பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்த ஆதி “இதுவரைக்கும் எந்த பொண்ணும் என்ன பத்தி இப்படி எல்லாம் சொன்னதே இல்ல. யாராவது என் வீட்ல இருக்குற பொண்ணுங்க இப்படி சொல்லி இருந்தா இதை கேட்கும் போது எப்படி இருந்திருக்கும்.. இந்த குட்டி பாப்பா சொல்லி என்னாக போகுது! அட்லீஸ்ட் இவளாவது நம்மள பாராட்டுறாளேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்கலாம்.” என்று நினைத்தான்.
பின் அவன் “ஆமா வீட்ல இருக்குற எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க.. நீ என்ன அதுக்குள்ள தூங்கு எந்திரிச்சு வந்துட்ட? உனக்கு இங்க தூக்கம் வரலையா?” என்று ஆதி கேட்க, “இல்ல மாமா.. நான் எப்பவுமே மார்னிங் சீக்கிரமா எழுந்திருவேன். டாடி டெய்லியும் இந்த டைம்ல என்ன வாக்கிங் இல்லைன்னா ஜாகிங் போகணும்னு சொல்லி இருக்காரு. வீக்லி த்ரீ டேஸ் என்னையும் சித்தார்த் அண்ணாவையும் ட்ரெயின் பண்றதுக்கு ஸ்பெஷல் ட்ரெயினர்ஸ் வருவாங்க. சோ டெய்லியும் சீக்கிரமா எழுந்திருச்சு எங்களுக்கு பழகிருச்சு. எப்படியும் பிரிட்டோ அங்கிலும், கிளாரா ஆண்டியும் கூட இந்நேரம் தூங்கி எந்திரிச்சிருப்பாங்களே! நீங்க அவங்க ரெண்டு பேரையும் பாக்கலையா?” என்று அவனிடம் கேட்டாள் ஆருத்ரா.
அப்போது ஜாகிங் சென்று விட்டு அந்த வீட்டிற்குள் நுழைந்த பிரிட்டோவும், கிளாராவும் “நீங்க ரெண்டு பேரும் எங்கள தான் தேடிட்டு இருக்கீங்களா?” என்று கோரசாக கேட்டார்கள். உடனே ஆமாம் என்று தலையாட்டிய ஆருத்ரா “ஆதி மாமாவும் வெளிய போறாரு. நான் மட்டும் வீட்டுக்குள்ளேயே இருந்து என்ன பண்றது? என்னையும் உங்க கூட வெளிய கூட்டிட்டு போங்க.” என்று கிளாராவின் கையை பிடித்துக் கொண்டு ஆங்கிலத்தில் கேட்டாள்.
தேன்மொழி இங்கே இருந்தால் அவளிடம் பர்மிஷன் கேட்கலாம். ஆனால் தூங்கிக் கொண்டு இருக்கும் அவளை தொந்தரவு செய்ய முடியாது என்பதால் உடனே ஜானகிக்கு கால் செய்த கிளாரா ஆருத்ராவை அழைத்துக் கொண்டு வெளியில் செல்வதற்கு பர்மிஷன் வாங்கினாள். அவர்களுடனே ஆதியும் வெளியில் கிளம்ப, வீட்டிற்கு வெளியே பாதுகாப்பிற்காக இருவரையும் நிறுத்தி வைத்து விட்டு தங்களுடன் இரண்டு பாடி காடுகளை அழைத்துக் கொண்டு கிளாராவும் பிரிட்டோவும் கிளம்பினார்கள்.
சில நிமிடங்களுக்கு பிறகு தூங்கி எழுந்த தேன்மொழி தன் அருகில் ஆருத்ரா இல்லாததால் பதட்டத்துடன் வெளியில் வந்து அவளை தேடினாள். பாதுகாப்பிற்காக வெளியில் நின்ற ஆட்கள் அவள் சத்தத்தை கேட்டுவிட்டு உள்ளே சென்று அவளிடம் ஆருத்ரா சென்றிருப்பதை சொல்ல, உடனே கிளாராவிற்கு கால் செய்து பேசிய தேன்மொழி “எல்லாரும் இப்ப எங்க இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“பதட்டப் படாதீங்க மிஸ்ஸஸ் அர்ஜுன். நான் ஜானகி மேடம் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு தான் ஆருத்ராவை கூட்டிட்டு வெளியே வந்தேன். நாங்க இப்ப பீச்ல இருக்கோம். கொஞ்ச நேரத்துல கிளம்பி வந்துடுவோம்.” என்று கிளாரா சொல்ல, சரி என்ற தேன்மொழி அந்த அழைப்பை துணித்து விட்டு ரெப்ரெஷ் ஆவதற்காக சென்று விட்டாள்.
அதற்குள் தூங்கி எழுந்த விஜயா கிச்சன் பக்கம் சென்று தனது வேலைகளை பார்க்கத் தொடங்கி விட, தன் அம்மாவை கிச்சனை விட்டு வெளியில் அனுப்பிய தேன்மொழி “நான் கல்யாணம் ஆகி ரஷ்யா போனதில இருந்து ஒரு வேலையுமே செய்யறது இல்ல. ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் நம்ம வீட்டுக்கு நம்ம வந்திருக்கோம். அதனால இன்னைக்கு உங்க எல்லாருக்கும் நான் தான் சமைக்க போறேன்.” என்று சொல்லிவிட்டு சமைக்க தொடங்கினாள்.
அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த பாடிகார்டு ஒருவன் கிச்சன் பக்கம் வந்து “மேடம் அர்ஜுன் சார் இத உங்க கிட்ட குடுக்க சொன்னாரு.” என்று சொல்லி அவளிடம் 99 ரோஜாக்கள் அடங்கிய ஒரு அழகிய ஃப்ளவர் பொக்கேவை கொடுத்தான். அதில் குட் மார்னிங் மை டியர் வைஃப் என்று எழுதி இருந்தது.
“எங்கேயோ இருந்துகிட்டு இவர் எனக்காக இதெல்லாம் ரேஞ்ச் பண்றாரா?” என்று யோசித்த தேன்மொழிக்கு முதலில் அதை பார்க்கும்போது அப்படியே கண்களில் காதல் பொங்கிது. இருப்பினும் அவள் இத்தனை தூரம் அவனை பிரிந்து சிரமப்பட்டு வந்து தவிப்பது எல்லாம் அவனை திருத்துவதற்காக தானே.. இந்த சாதாரண ஃபிளவர் பொக்கே இவை எல்லாம் பார்த்து அவள் மனம் மாறிவிட்டால் அவன் எப்போதும் திருந்த மாட்டான் என்று நினைத்த தேன்மொழி,
தன்னிடம் வந்து அதை கொடுத்தவனை மீண்டும் அழைத்து “உங்க பாஸ் கிட்ட காசு நிறைய இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும். அவருக்கு செலவு பண்ணனும்னு ஆசையா இருந்துச்சுன்னா ஏதாவது டிரஸ்டுக்கு டொனேஷன் பண்ண சொல்லுங்க. இப்படி எனக்காக வேஸ்ட்டா அதையும் இதையும் பண்ணி என்னை இரிடேட் பண்ண வேண்டாம்.” என்று கடுகடுவென சொல்லி அவன் கையில் அந்த பொக்கேவை கொடுத்துவிட்டு மீண்டும் கிச்சனுக்கு சென்றாள்.
நேரடியாக அவனுக்கு கால் செய்த அர்ஜுன் “என் வைஃப் ரியாக்சன் அதை பாக்கும்போது எப்படி டா இருந்துச்சு?” என்று ஆர்வமான குரலில் கேட்க, “மேடம் சொன்னதை சொன்னா ஒருவேளை சார் திட்டுவாரோ? இதுக்காக நம்ம மேல கோச்சுக்கிட்டு நம்மளை வேலையை விட்டு துரத்திட்டா என்ன பண்றது?” என்றெல்லாம் யோசித்த அந்த பாடிகார்ட் “அது வந்து சார்!” என்று இழுத்தான்.
“என்ன அது வந்து இது வந்துன்னு இழுக்கிற? என் பொண்டாட்டிய பத்தி எனக்கு தெரியாதா? இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு சொல்லி திருப்பி தான் கொடுத்திருப்பா.. என்ன நான் சொல்றது கரெக்டா?” என்று அர்ஜுன் சரியாக கேட்க, “எஸ் சார்.” என்ற அந்த பாடிகார்ட் தேன்மொழி அவனிடம் சொன்ன அனைத்தையும் அர்ஜுனிடம் சொன்னான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அர்ஜுன் “ஓஹோ அவளுக்கு நான் செலவு பண்ண ஆசைப்படுற அமௌன்ட்டை நான் எதுவும் ட்ரஸ்டுக்கு செலவு பண்ணனுமா? இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு. அப்படியே பண்ணிடலாம். ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
பின் பிரிட்டோவிற்கு கால் செய்து ஒரு சில இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்துவிட்டு நிம்மதியாக ஆபீஸ் செல்ல புறப்பட்டான் அர்ஜுன்.
வெளியில் சென்றவர்கள் எல்லாம் வீடு திரும்பியவுடன் தான் சமைத்த உணவுகளை ஆசை ஆசையாக அவர்களுக்கு பரிமாறினாள் தேன்மொழி. அவர்களது வீட்டில் டைனிங் டேபிள் எல்லாம் இல்லை. அதனால் அனைவரும் ஒன்றாக தரையில் அமர, அருகிலுள்ள மார்க்கெட்டிற்கு சென்று ஒரு கட்டு தலைவாழை இலையை வாங்கி வந்த தேன்மொழி அனைவருக்கும் இலையில் உணவுகளை பரிமாறினாள்.
இங்கே என்ன நடந்தாலும் அதை அர்ஜுன் தனக்கு அப்டேட் செய்ய சொல்லி இருந்ததால், தனது இலையை ஃபோட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்த பிரிட்டோ “பாஸ் தேன்மொழி மேடமே சமச்சு எங்க எல்லாருக்கும் இன்னிக்கி டிஃபரண்டா ஒரு ஸ்பெஷல் பிரேக்ஃபாஸ்ட் ட்ரீட் கொடுத்து இருக்காங்க. எனக்கு இப்படி சாப்பிடுவது புடிச்சிருக்கு. நல்லா இருந்துச்சு. சிம்பிளா இருந்தாலும் மேடம் எல்லாத்தையும் டெஸ்ட்டா சமைச்சு இருக்காங்க.” என்று மெசேஜ் அனுப்பினான்.
காலையில் வீட்டில் சாப்பிடாமல் கூட ஆபீஸ் செல்லும் அவசரத்தில் கிளம்பி வந்திருந்த அர்ஜுன் அதைப் பார்த்து கடுப்பானவன். “இதுவரைக்கும் என் பொண்டாட்டி எனக்கு ஒரு காபி கூட போட்டு கொடுத்தது இல்ல. என்னைத் தவிர மத்த எல்லாருக்கும் விருந்து வச்சு செலிப்ரேட் பண்ற.. வேணும்னே என்னை வெறுப்பேத்துறதுக்கு இதெல்லாம் பண்ணுவா போல இருக்கு.. ஹனி பேபி.. இதெல்லாம் டூ மச் டி. அது எப்படி நீ சமைக்கிறதை என்ன தவிர மத்த எல்லாரும் சாப்பிடலாம்? முதல்ல அதை நான் தானே சாப்பிட்டு இருக்கணும்.. இரு உன்னை வச்சிக்கிறேன்.” என்று நினைத்து தேன்மொழிக்கு உடனே கால் செய்தான்.
மற்றவர்களுக்கு பிசியாக உணவு பரிமாறிக் கொண்டிருந்த தேன்மொழி அவனது அழைப்பை ஏற்கவில்லை. அவளது மொபைல் ஃபோன் ரூமில் இருந்ததால் கால் வந்ததை கூட அவள் கவனிக்கவில்லை. “நான் உனக்கு கால் பண்றது கூட தெரியாம அங்க இருக்கிறவங்க கூட ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்கியா நீ? அப்படி எல்லாம் என்னால வருஷத்துக்கு உன்ன விட முடியாது ஹனி. நான் எங்க இருந்தாலும் உன்ன பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.. அதே மாதிரியே நீயும் என்ன பத்தியே யோசிச்சிட்டு இருக்கணும். அப்ப தான் நான் இல்லாம இந்தியா கிளம்பி திரும்பவும் நீ இங்க வருவ.” என்று நினைத்து தன் மனதிற்குள் உடனடியாக ஒரு திட்டத்தை போட்டான்.
யாரை வைத்து அந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று சில நொடிகள் யோசித்த அர்ஜுன் “கரெக்ட்.. இந்த வேலைக்கு மம்மி தான் கரெக்டான ஆளு. அவங்க தான் நம்ம எமோஷனலா என்ன சொன்னாலும் உடனே ட்ரிகர் ஆவாங்க. உடனே எனக்காக அவ கிட்ட பேசுவாங்க.” என்று நினைத்தவன், மதியம் வரை அமைதியாக காத்திருந்தான்.
அவன் ஆபீஸ் வந்து காலையில் இருந்து இப்போது வரை எதுவுமே சாப்பிடவில்லை. அது தன்னுடன் இருக்கும் சர்வன்டிற்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே வாலண்டியராக அவனை தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அழைத்து “அது என்னமோ தெரியல என் வைஃப் ஊருக்கு போனதில இருந்து எனக்கு சாப்பிட கூட பிடிக்க மாட்டேங்குது.” என்று அடிக்கடி சொல்லி அவன் மந்தையில் அவன் சாப்பிடவில்லை என்பதை ஏற்றுக் கொண்டே இருந்தான்.
அதனால் இரண்டு மூன்று முறை சர்பன்ட் அவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க, “இல்ல நான் இப்ப என் வைஃப் சமைச்ச foodஐ தான் சாப்பிடணும்னு இருக்கேன். வேற எதையும் நான் என்ன ஆனாலும் சாப்பிட மாட்டேன்.” என்று சின்ன குழந்தை அடம் பிடிப்பது போல அவனிடம் சொல்லி சாப்பிடாமலே பட்டினி கிடந்தான்.
அர்ஜுன் சாப்பிடாமல் இருப்பது எல்லாம் அடிக்கடி நடப்பது தான் என்பதால் அப்போதும் அவனை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதனால் அவனே வாலண்டியராக கால் செய்து “என் ஹனி பேபி இல்லாம எனக்கு சாப்பிட கூட பிடிக்க மாட்டேங்குது மம்மி.” என்று புலம்பினான்.
- மீண்டும் வருவாள் 💕

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-72
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.