தனக்கு தெரிந்த லோக்கல் ரவுடிகளுக்கு கால் செய்து ஏதேதோ விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவனது பைக்கை எடுத்துக் கொண்டு மெரினா பீச் பக்கம் சென்றான்.
அங்கே ஏராளமான சரக்கு கப்பல்கள் நின்று கொண்டு இருக்க, அங்கே சென்ற சதீஷ் வயதான நபர் ஒருவரை சந்தித்தான்.
அவர் இவனைப் பார்த்தவுடன் உடனே “வணக்கம் சார்! உங்களுக்கு வேண்டிய பொண்ணை யாரோ தூக்கிட்டாங்கன்னு நீங்க சொன்னதா சங்கிலி வந்து சொன்னான்.
எனக்கு தெரிஞ்சு அப்படி எந்த பொண்ணையும் சமீபமா யாரும் கடத்தலை சார்.
நீங்க நான் சொல்றத நம்பலைனாலும் எப்படியும் உங்களுக்கு தெரிஞ்சவங்க இங்க நிறைய பேர் இருப்பாங்க.
நீங்க அவங்க கிட்ட விசாரிச்சு பாருங்க.” என்று அவர் சொல்ல,
“சும்மா நடிக்காதீங்க பாய். உங்க பொண்ணு இதே மாதிரி 1 வருஷத்துக்கு முன்னாடி கானாம போகும்போது நான் தான் அவளை காப்பாத்தி உங்க கிட்ட கொண்டு வந்து விட்டேன்.
மனசாட்சியே இல்லாம அதையெல்லாம் அதுக்குள்ள மறந்துட்டீங்க போல!” என்று கேட்ட சதீஷ்குமார் திமிராக அந்த வயதானவரை பார்த்தான்.
பார்ப்பதற்கு மீனவன் போல இருந்த அந்த வயதானவர்,
“என்ன சார் டக்குனு இப்படி சொல்லிட்டீங்க.. நீங்க எங்க பொண்ணை கண்டுபிடிச்சு கொடுத்த சாமி.
நீங்க கேட்டு நான் பொய் சொல்லுவனா? எனக்கு தெரிஞ்சு எந்த பொண்ணையும் யாரும் கடத்திட்டு வரல.” என்றார் அவர்.
“அப்படியா? அப்புறம் ஏன் உங்க பையன் முகமத் என் கிட்ட எவனோ நார்த் இந்தியன் இங்க இருந்து 40 பொண்ணுங்கள கடத்திட்டு போக பிளான் போட்டதா என் கிட்ட சொன்னான்?
இப்ப உங்க ரெண்டு பேர்ல யார் சொல்றது பொய்?
அத கண்டுபிடிக்கிறதுக்கு பேசாம உங்க ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு போய் அடிச்சு வெளுத்து பாத்துடலாமா?
இப்ப தானே நீங்க என்ன கடவுள் மாதிரின்னு வேற சொன்னீங்க பாய்..
காணாம போன பொண்ணு தேன்மொழி நான் கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணு.
உங்க பொண்ணு உங்களுக்கு முக்கியம்.
ஆனா அதே வேற வீட்டு பொண்ணா இருந்தா எவன் கடத்திட்டு போனா எனக்கு என்னனு இருந்திடுவீங்க அப்படித் தானே!
அன்னைக்கு உங்க பொண்ண இங்க கொண்டு வந்து விடும்போதே உங்க பேக்ரவுண்ட் எல்லாத்தையும் நான் விசாரிச்சுட்டேன்.
நீங்க இதுக்கு மேல இந்த மாதிரி தப்பு எல்லாம் நான் செய்ய மாட்டேன்.
இனிமே மீன் பிடிக்கிறத தவிர வேற எந்த தொழிலுக்கும் போக மாட்டேன்னு உங்க சாமி மேல ஆனையின்னு உங்க பொண்ணு தலை மேல அடிச்சு சத்தியம் பண்ணீங்க.
அப்ப நான் உங்களை நம்பி உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கணும்னு விட்டுட்டு போனதுக்கு என் வீட்டுக்கு வாழ வர வேண்டிய பொண்ணையே நீங்க ப்ளான் போட்டு கடத்திடுவீங்க!
இப்ப நீங்களே சொல்லுங்க..
நான் உங்கள எனக்கு வர்ற கோபத்துக்கு என்ன பண்றது?” என்று கேட்ட சதீஷ் அவன் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதை என்னவோ புதிதாக பார்ப்பவனை போல சுற்றி சுற்றி பார்த்தான்.
தேன்மொழி அவனது வருங்கால மனைவியாக வர இருந்தவள் என்பதால் அவள் மீது இருக்கும் பாசத்தில் இவன் தன்னை கொன்றுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து பயந்த பாய் உடனே சதீஷின் கால்களில் விழுந்து,
“என்ன மன்னிச்சிடுங்க சார். அந்த பொண்ணு உங்களுக்கு வேண்டிய பொண்ணுன்னு மட்டும் தான் நீங்க சொன்னீங்க.
நீங்க கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு எனக்கு தெரியாது.
உங்க கிட்ட சொன்ன மாதிரி அந்த அல்லாஹ் மேல சத்தியமா இந்த மாதிரி தப்பான வேலை எல்லாம் செய்யக் கூடாதுன்னு முடிவு பண்ணி எங்க குடும்பமே அந்த கடல் அம்மா போட்ட பிச்சையில மீன் பிடித்து சாப்பிட்டு தான் வாழ்றோம்.
போன வாரம் ஞாயிற்றுக் கிழமை என் பையன கூட்டிட்டு போய் ரஞ்சித் சில பொண்ணுங்கள கடத்தி மும்பைக்கு கொண்டு போய் அங்க கொஞ்ச நாள் வெச்சிட்டு அப்படியே வேற ஏதோ பிளான் பண்ணி அங்க இருந்து வெளிநாட்டுக்கு கடத்தனும்னு சொன்னதா என் பையன் வீட்டுக்கு வந்து சொன்னான்.
அப்பவே இந்த மாதிரி வேலைக்கெல்லாம் போகக்கூடாதுன்னு என் பையன் கிட்ட சொல்லி நான் அவனை கொஞ்ச நாளைக்கு இந்த இடத்திலயே இருக்காதன்னு வெளியூர்ல இருக்கிற என் தங்கச்சி வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டேன்.
இப்ப நீங்க வந்து கேட்டவுடனே, நான் அத பத்தி சொன்னா விசாரணைல மறுபடியும் என் பையனை இங்க வர வச்சு அவன் பிரச்சனையில மாட்டிக்குவான்னு நினைச்சு பயத்துல தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு பொய் சொன்னேன்.
மத்தபடி அந்த பொண்ணு காணாம போனதுக்கும், எனக்கும், என் குடும்பத்தில இருக்கிற யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார்.
அந்த ரஞ்சித் பிளான் போட்ட மாதிரி பொண்ணுங்கள கடத்திட்டானா, அதுல நீங்க சொல்ற பொண்ணு இருக்கா இல்லையான்னு கூட எங்களுக்கு தெரியாது.
எப்ப நான் பெத்த பொண்ணு காணாம போய், அவளை பெத்தவனா அந்த ஒரு ராத்திரி அவளைக் காணோம்னு பரிதவிச்சனோ..
கடவுள் என்னை செருப்பால அடிச்சு நான் பண்ண தப்பை எனக்கு புரிய வச்ச மாதிரி இருந்துச்சு.
அப்பவே அல்லா என் மனச மாத்திட்டாரு.
இனிமே செத்தாலும் யாருக்கும் எந்த பாவத்தை நான் திரும்ப செய்ய மாட்டேன் சார்.
நாங்க மூணு வேளை நல்லா சாப்பிட்டு நல்லா தான் இருக்கோம். எங்களுக்கு அது போதும்.
இந்த விஷயத்துல தயவு செஞ்சு எங்களை சந்தேகப்படாதீங்க சார்!” என்று சொல்லிவிட்டு கையெடுத்து கும்பிட்டார்.
அவர் பேச்சில் அவனுக்கு போய் தெரியவில்லை.
அதனால் உடனே அவர் தோள்களில் கை வைத்து அவரை எழுப்பி நிற்க வைத்த சதீஷ்,
“அந்த ரஞ்சித் யாரு? அவன பத்தின எல்லா டீடைல்ஸும் எனக்கு இப்பவே தெரியணும்.
நீங்க எனக்கு அதை மட்டும் அரேஞ்ச் பண்ணி குடுங்க.
மத்தபடி வேற எதுக்கும் நான் உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
இந்த கேஸ்லையும் உங்க பையன் பேரு வராம பாத்துக்குறேன்.” என்று சொல்ல,
“அவனுங்க ரொம்ப மோசமானவங்க சார்.
ரஞ்சித் சும்மா லோக்கல் ஏஜென்ட் தான்.
அவனுக்கு மேல தாஸ்ன்னு ஒருத்தன் இருக்கான்.
அவனுக்கு மேல இன்னொருத்தன் இருப்பான். இவனுங்க எல்லாம் பெரிய நெட்வொர்க் சார்.
நம்ம ஒருத்தன துரத்திட்டு போனா, அடுத்து அவனுக்கு மேல இருக்கிற இன்னொருத்தனை கண்டுபிடிக்கிறதுக்கே எத்தனை நாள் ஆகுமோ தெரியாது.
இத சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு. ஆனா நீங்க அந்த பொண்ண கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம் தான் சார்.
எனக்கு தெரிஞ்சு அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல சார். நீங்க அந்த பொண்ணை மறந்துடுறது தான் நல்லது.” என்றார் அவர்.
“அது எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் நான் அத பாத்துக்குறேன்.
நீங்க நான் கேட்ட ரஞ்சித்த பத்தி மட்டும் சொல்லுங்க.” என்று சதீஷ்குமார் அழுத்தி கேட்டதால்,
“எங்க பேர் மட்டும் வெளிய வராம பாத்துக்கோங்க சார்.
என்ன ஆனாலும் நாங்க இந்த இடத்துல தான் வாழ்ந்தாகணும்.
அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க.” என்ற அந்த வயதானவர் ரஞ்சித் பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி பின் அவனது போட்டோ ஒன்றையும் அவனிடம் காட்டினார்.
அதை உற்றுப் பார்த்த சதீஷ் அந்த போட்டோவை தனது மொபைல் ஃபோனுக்கு அவரை அனுப்பச் சொல்லி வாங்கிக் கொண்டு, ரஞ்சித்தை தேடி புறப்பட்டான்.
ஒன்றரை மாதத்திற்கு பிறகு...
ஹாலில் பாட்டியுடன் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த ஜானகி “இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம அர்ஜுனுக்கு பர்த்டே வரப்போகுது.
எப்படியாவது அவன் நார்மல் ஆகிட்டான்னா பரவால்ல அத்தை.
நானும் தூங்குற நேரம் தவிர தேன்மொழியை அர்ஜுன் கிட்ட பேசிக்கிட்டே இருன்னு சொல்லி நானும் அவ பக்கத்துல இருந்து,
அவளால அவன் கிட்ட ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதான்னு ஒரு வாரமா ட்ரை பண்ணி பாத்துட்டேன்.
நம்ம நெனச்ச மாதிரி எதுவும் நடக்க மாட்டேங்குது.
பாவம் அந்த பொண்ணு தினமும் தொடர்ந்து என்ன பேசுறதுன்னு தெரியாம ஏதேதோ அவன் கிட்ட பேசி பேசி இப்ப அவளுக்கு தொண்டை கட்டிக்கிச்சு.
அவளை இப்படி பாக்குறதுக்கும் கஷ்டமா தான் இருக்கு.
ஆனா இப்படியே நாள் போகப் போக அர்ஜுன் சரியாகம இருக்கிறதா பார்க்கும்போது, என் பையன் கடைசி வரைக்கும் இப்படியே கோமாவிலேயே இருந்திடுவானா,
இல்ல அந்த ஜோசியர் சொன்ன மாதிரி அவனோட பர்த்டே வர்றதுக்குள்ள அவனுக்கு ஏதாவது ஆயிடுமோனு நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு.” என்று கண் கலங்கச் சொன்னாள்.
ஏற்கனவே அர்ஜுனையும், உடல்நிலை குன்றிய நிலையில் இருக்கும் தன் கணவனை பற்றியும் நினைத்து ஆழ்ந்த மன வேதனையில் இருந்த பாட்டி இப்போது ஜானகி சொன்னதை கேட்டு இன்னும் அவனை நினைத்து கவலைப்பட்டு, பிளட் பிரஷர் ரைஸ் ஆகி மயங்கி ஜானகியின் தோள்களில் விழுந்தார்.
அதனால் பதறிப்போன ஜானகி உடனே எழுந்து “அத்தை.. அத்தை.. உங்களுக்கு என்ன ஆச்சு..??
கண்ணைத் திறந்து என்னை பாருங்க... யாராவது இருந்தா வாங்க.
ஹெல்ப்.. ஹெல்ப்...!!” என்று சத்தம் எழுப்ப, அவளது குரலைக் கேட்டு அங்கே ஓடி வந்த சில பாடிகார்டுகள் அங்கே பாட்டியை அவருடைய அறைக்கு தூக்கி சென்றார்கள்.
அர்ஜுனுக்காக ஏற்கனவே அங்கே ஏராளமான டாக்டர்கள் குழுவாக தங்கி இருப்பதால், உடனே அவர்களை வரவழைத்து பாட்டிக்கு என்ன ஆனது என்று பார்க்கச் சொன்னார்கள்.
பாட்டியை செக் செய்த டாக்டர்கள் ஹாய் பிபியினால் தான் பாட்டிக்கு மயக்கம் வந்ததாக சொல்லிவிட்டு ட்ரீட்மென்ட் கொடுத்துவிட்டு சென்றார்கள்.
ஏற்கனவே தன் மகனை நினைத்து சோகமாக இருந்த ஜானகி, ஒரு பக்கம் மாமனார் நிலமை மோசமாக இருக்கும்போது இப்படி மாமியாருக்கும் உடல்நிலை சீராக இல்லாததால் “எனக்கு என்னமோ அடுத்தடுத்து எல்லாமே தப்பு தப்பா நடக்கிறத பாத்தா,
இந்த குடும்பத்தில எல்லாருக்குமே நேரம் சரியில்லை என்று தோணுது.
ஐயோ கடவுளே.. எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் நான் பண்ணிட்டனே.. இன்னும் நான் என்ன பண்ணா நீ எங்க எல்லாரையும் நல்லபடியா வைத்திருப்ப?” என்று நினைத்து அப்படியே பாட்டியின் அருகே கண்ணீருடன் அமர்ந்து விட்டாள்.
அப்போது நேரம் கிட்டத்தட்ட இரவு எட்டு மணி இருக்கும்.
சாப்பிட்டு முடித்துவிட்டு அர்ஜுனின் அறைக்கு வந்த நான்சி வழக்கம்போல அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்துவிட்டு அவனது அறைக்குள் இருந்த சிறிய அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.
கடந்த ஒரு வாரமாகவே எப்போதும் ஜானகி தேன்மொழியின் அருகிலேயே இருந்து அவளிடம் அர்ஜுனிடம் பேசிக் கொண்டே இரு,
அவன் அருகில் படுத்து உறங்கு என்றெல்லாம் சொல்லி தன் மகனை எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவளை போட்டு மெண்டல் டார்ச்சர் செய்துக் கொண்டு இருந்தாள்.
இங்கே வந்த இத்தனை நாட்களில் அவள் அதற்கெல்லாம் பழகி இருந்தாலும் கூட, தொடர்ந்து ஒரு வாரமாக அதையே வேலையாக செய்து ஓவர் டைம் பார்த்ததால் சோர்வாக உணர்ந்த தேன்மொழி,
“நல்லவேளை அந்த அம்மா எனக்கு வேலை சொல்லி டயர்ட் ஆகி அவங்களே ரெஸ்ட் எடுக்க போய்ட்டாங்க.
எப்படியும் இந்நேரம் நைட்டாகி இருக்கும். அதான் மிச்சத்தை நாளைக்கு பாத்துக்கலாம்னு நெனச்சு என்ன ஃப்ரியா விட்டுட்டாங்க போல.” என்று நினைத்து நிம்மதி அடைந்தாள்.
ஏதோ ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்பவளை போல தொடர்ந்து பேசி பேசி அவளுக்கு இப்போது தொண்டை வலியே வந்திருக்க,
ஒரு கட்டத்திற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் அதற்கு வேறு தனியாக மூளையை போட்டு கசக்கி யோசித்ததால், மூளை சூடாகி நிறைய எனர்ஜி வேஸ்ட் ஆகி அவளுக்கு டயர்டாக இருந்தது.
அதனால் எழுந்து கொள்ளக் கூட முடியாமல் அப்படியே அர்ஜுனின் அருகில் பிடுத்திருந்தாள்.
அப்போது அவள் கண்கள் அவளையும் மீறி அர்ஜுனை பார்க்க,
“இவர் கிட்ட எந்த சேஞ்சஸும் தெரியலைன்னு அந்த அம்மா ஃபீல் பண்ணிட்டே இருக்காங்க.
ஆனா எனக்கு என்னமோ நான் வந்தப்ப இருந்ததை விட இப்ப இவர் கொஞ்சம் பெட்டரா இருக்கிற மாதிரி தான் தெரியுது.
கண்ணம் கூட லைட்டா புசுபுசுன்னு ஆனா மாதிரி இருக்கு.” என்று நினைத்து அவன் கன்னத்தில் கை வைத்து அழுத்தி பார்த்தாள்.
பெண்களை விட, குழந்தைகளுக்கு இருக்கும் மென்மையான சருமத்தை விட அவனது கன்னங்கள் அத்தனை softஆக இருந்தது.
அதைத் தொட்டுப் பார்த்து விளையாடிக் கொண்டு இருந்த தேன்மொழி “உங்க கிட்ட பேசி பேசி ஒரு கட்டத்துக்கு மேல எனக்கே பேச்சு வராம போயிடும் போல.
உங்க வீட்ல இருக்கிறவங்க டார்ச்சர என்னால தாங்க முடியலங்க.
ப்ளீஸ் தயவு செஞ்சு உங்கள கெஞ்சி கேட்கிறேன்..
எனக்காகவாவது நீங்க சீக்கிரம் நார்மல் ஆயிடுங்க. சும்மா வந்து என் கிட்ட பேசு பேசுனா நான் என்னத்த பேசுறது?
நான் படிச்சது, எனக்கு தெரிஞ்சது, என் லைஃப்ல சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நடந்ததுன்னு நான் எல்லாத்தையும் நான் உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இதுக்கு மேலயும் நான் பேசணும்னா, டெய்லியும் இனிமே 1,2,3 தான் சொல்லணும்.
இப்படியே நான் தினமும் உங்க கிட்ட பேசிக்கிட்டே கவுன்ட் பண்ணிக்கிட்டே இருந்தா, அப்படியே 10, 100, 1000, 10000 லாக்ஸ் க்ரோர்ஸ்ன்னு எண்ணி எண்ணியே எனக்கு வயசாயிடும் போல.
நிஜமாவே என்னால முடியலங்க.. நீங்களாவது என் மேல கருணை காட்டி எந்திரிச்சு வாங்க சார் ப்ளீஸ்.” என்று தனது வலித்துக் கொண்டு இருந்த தொண்டையை வைத்து பேச முடியாமல் இரும்பி இரும்பி சொன்னாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளுக்கு அப்படி அவனிடம் புலம்ப கூட தெம்பு இல்லாமல் போய்விட, தன் கண்களை மூடி அவனது தோள்களில் சாய்ந்து கொண்டு அப்படியே உறங்கி விட்டாள் தேன்மொழி.
- மீண்டும் வருவாள்..

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-18
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.