மஞ்சம் 129

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 129

ஜனனியின் குழந்தைகள் இருவரும் தூங்கும் வரையிலும் அவளுடனே இருந்த தேன்மொழி பின் அர்ஜூனை பற்றிய ஞாபகம் வந்ததால் “ஓகே ஜனனி. நீங்க பாருங்க. எனக்கு பசிக்குது. டாக்டர் சாப்பிட்டு டைம் டேப்லெட் பண்ணனும்னு சொல்லிருக்காங்க. சோ நான் கிளம்புறேன் பை, குட் நைட்.” என்று சொல்லிவிட்டு எழுந்து நிற்க, “குட் நைட் அண்ணி! இந்த டைம்ல ஹெல்த் ரொம்ப முக்கியம். டைமுக்கு சாப்பிட்டு தூங்குங்க.” என்றாள் ஜனனி.

வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிட்ட பிறகு தான் தனது அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்த மகேஷ் இப்போது அவனுக்கு செய்ய வேறு எந்த வேலையும் இல்லாததால் நேராக மொட்டை மாடிக்கு சென்று அங்கே நின்று காத்து வாங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு மகாலட்சுமியிடம் இருந்து கால் வர, இரண்டு நொடி யோசனைக்கு பிறகு அதை அட்டென்ட் செய்து ஃபோனை காதில் வைத்த மகேஷ் “சொல்லுங்க!” என்றான்.

“நீங்க தூங்க போய்ட்டீங்களா? நான் ஒன்னும் கால் பண்ணி உங்கள டிஸ்டர்ப் பண்ணிடலையே!” என்று மகா கொஞ்சம் வருத்தத்துடன் கேட்க, “சேச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான் இன்னும் சாப்பிடவே இல்ல. சும்மா டெரஸ்ல நின்னுட்டு இருக்கேன்.” என்றான் அவன்.

“அப்படியா? ஓகே ஓகேங்க. நான் உங்களுக்கு மத்தியானமே கால் பண்ணேன். ஆனா நீங்க என் கிட்ட சரியாவே பேசல. நமக்கும் அத்தை கல்யாண பேசி முடிச்சு இவ்வளவு நாள் ஆகுது. நானே தான் உங்க கிட்ட பேசணும்னு ஆசைப்பட்டு அத்தை கிட்ட நம்பர் வாங்கி அப்பப்ப ஃபோன் பண்ணி பேசிட்டு இருக்கேன்.

நானா வந்து பேசினாலும் நீங்க என்கிட்ட சரியா பேச மாட்டேங்கறீங்க. நீங்களாவும் என் கிட்ட பேச ட்ரை பண்ண மாட்டேங்கறீங்க. இதுக்கு முன்னாடி நீங்க எங்கேயோ நான் எங்கேயோ இருந்தேன். பெரியவங்களா பேசி எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டாங்க. எங்க அப்பா உங்கள பத்தி சொன்னத கேட்ட உடனே எனக்கு அப்பவே உங்கள புடிச்சிருச்சு. ஆனா உங்களுக்கு என்ன பிடிக்கலையா மாமா? அதான் என்ன அவாய்ட் பண்ண ட்ரை பண்றீங்களா?

நீங்க வெளிநாட்டில எல்லாம் இருந்திருக்கீங்க. எத்தனையோ அழகான பொண்ண பாத்திருப்பீங்க. அதான் உங்களுக்கு என்ன பிடிக்கலையோ என்னமோ! எதுவா இருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க. விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரைக்கும் கஷ்டப்படுற வாழ்க்கை எனக்கு வேண்டாம். நீங்க கஷ்டப்படறதையும் நான் பார்க்க விரும்பல.” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள் மகாலட்சுமி.

“நான் உங்களை பிடிக்கலைன்னு உங்க கிட்ட சொல்லவே இல்லையே! நீங்க ரொம்ப ஓவர் திங்கிங் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன். அதான் நீங்களா இப்படித்தான் இருக்கும்னு யோசிச்சு குழப்பிக்கிறீங்க. நீங்களே சொல்றீங்க இதுவரைக்கும் நம்ம பார்த்ததில்லை பேசி பழகுனது இல்லைன்னு..

அப்புறம் வீட்ல சொல்றாங்கன்னு எப்படிங்க உடனே ஒரு பொண்ண பொண்டாட்டியா பார்க்க முடியும்! எனக்கு இப்பயுமே உங்க கிட்ட பேச தயக்கமா தான் இருக்கு. சரி கல்யாணம் முடியட்டும்ன்னு பாத்துக்கலாம்னு இருந்துட்டேன். அதுக்குள்ள நீங்க இந்த அளவுக்கு யோசிப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல.” என்று மகேஷ் சொல்ல,

ஏதோ ஒரு தைரியத்தில் இவ்வளவு நேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்த மகாலட்சுமி “கடவுளே! மாமா என்ன புடிக்கலைன்னு மட்டும் சொல்லிடவே கூடாது.” என இவ்வளவு நேரமாக அனைத்து கடவுள்களிடமும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். இப்போது மகேஷ் நெகட்டிவ்வாக இருந்தும் சொல்லாததால் அவளுக்கு நிம்மதியாக இருக்க, “சப்பா.. இப்ப தான் எனக்கு போன உசுரு திரும்ப வந்த மாதிரி இருக்கு மாமா. இருந்தாலும் என்ன மாதிரி நீங்களும் என் மேல விருப்பப்பட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் ஆசைப்படுறேன். நாளைக்கு சாயங்காலம் நான் பர்மிஷன் கேட்டுட்டு வேலையை விட்டு சீக்கிரம் வந்துடறேன். நீங்க மெரினா பீச்சுக்கு வந்தரீங்களா? நீங்க எனக்காக வந்தீங்கன்னா, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு. நிஜமாவே இந்த கல்யாணத்துல உங்களுக்கும் விருப்பம் இருக்குன்னு என் மனசும் முழுசா நம்மள மாதிரியும் ஆச்சு. ப்ளீஸ்.. வர முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க.” என்றாள்.

அவளை நேரில் சென்று பார்க்க வேண்டுமா? என்று யோசித்தாலே மகேஷின் மனதிற்குள் ஆயிரம் என்ன ஓட்டங்கள். இன்னும் அவன் இந்த பெண்ணை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், இந்த விதி தன்னையும் அவளையும் இணைக்க முயற்சி செய்யும்போது தன்னால் என்ன செய்ய முடியும்? என்று நினைத்த மகேஷ் “ஓகேங்க, கண்டிப்பா நான் வர ட்ரை பண்றேன். இங்க எனக்கு பெருசா எந்த வேலையும் இருக்காதுன்னு தான் நினைக்கிறேன். இருந்தாலும் முன்னாடியே ஜானகி மேடம் கிட்ட பர்மிஷன் கேட்டுக்குறேன்.” என்றான்.

அதைக் கேட்டு சந்தோஷப்பட்ட மகாலட்சுமி “தேங்க்ஸ் மாமா!” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து அவனிடம் ஆசையாக பேசிக் கொண்டிருக்க, பதிலுக்கு தன் மனதில் பட்டதை அவளிடம் தானும் பேசினான் மகேஷ்.

தேன்மொழி தனது ரூமிற்கு சென்று டோரை திறக்க, உள்ளே இருட்டாக இருந்தது. “இந்த அர்ஜுன் உள்ள தானே இருந்தான்! அதுக்குள்ள எங்க போனான்? நான் கொஞ்சம் நார்மலா பேசின உடனே என் கிட்ட சொல்லாம கொள்ளாம மறுபடியும் கிளம்பி வெளிய போயிட்டானா? அப்படி மட்டும் இருக்கட்டும், இன்னைக்கு இருக்கு அவனுக்கு. அவன் என் கால்ல விழுந்து கெஞ்சுனா கூட இதுக்கப்புறம் நான் அவன் கிட்ட பேசவே மாட்டேன்.” என்று முணுமுணுத்த தேன்மொழி உள்ளே சென்று லைட்டை போடுவதற்குள், யாரோ ஒருவர் பலமாக கைத்தட்டும் சத்தம் அவளுக்கு கேட்டது.

உடனே அந்த அறை சிகப்பு நிற இதய வடிவிலான சிறிய சிறிய லைட்டுக்களாலும், ஆங்காங்கே இருந்த செயற்கை மெழுகுவர்த்திகளாலும் ஒரே நொடியில் ஒளிமயமானது. சில நிமிடங்களுக்கு முன்பாக அர்ஜுன் அவளுக்கு கிஃப்ட் ஆக கொடுத்த ஃபோட்டோ ஃபிரேம் இப்போது சுவரில் மாற்றப்பட்டிருந்தது. அதை சுற்றியும் இதய வடிவில் லைட்டுகள் எரிந்து கொண்டிருக்க, அனைத்தையும் ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி சிரித்த முகமாக, “எங்க இருக்க அர்ஜூன்? உனக்கு இப்படியெல்லாம் கூட ரொமான்டிக்கா ரூமை டெகரேட் பண்ண தெரியும்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியுது.

நீ பண்ணது எல்லாமே எனக்கு புடிச்சிருக்கு. நான் நிஜமாவே இம்ப்ரஸ் ஆயிட்டேன்பா. வெளிய வா! இப்ப நான் உன்னை பாக்கணுமே! எங்க இருக்க நீ?” என்று கேட்டபடி தன் கைகளை பின்னே கட்டிக் கொண்டு அந்த அறை முழுவதும் “அர்ஜுன்.. அர்ஜுன்! அட எங்க டா இருக்க?” என்று கேட்டபடி அவனை தேடி கொண்டு இருந்தாள் தேன்மொழி.

அப்போது திடீரென்று சேஞ்சிங் ரூமிற்குள் இருந்து வெளியில் வந்த அர்ஜுன் மெல்ல அவள் பூனை போல நடந்து சென்று அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவளை அப்படியே பின்னே இருந்து தூக்கி சுற்றினான். ஒரு நொடி பயந்து போன தேன்மொழி “இடியட்.. நெஜமாவே நான் பயந்துட்டேன் தெரியுமா? கீழ என்ன இறக்கி விடுடா!” என்று பதட்டத்துடன் தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சொன்னாள்.

“அடியே என் தேன்மொழியே!!
உன் அழகால் என்னை கொல்லுறியே!

உன் குட்டி கண்ணை வச்சு உருட்டி உருட்டி பார்த்து என்னை மிரட்டுறியே..!!” என்று அர்ஜுன் கைகளில் அவளை ஏந்திக் கொண்டு தனது ஆண்மை பொருந்திய இனிமையான குரலில் அவளை பார்த்து பாட, அதில் அதிர்ந்த தேன்மொழி “வாவ்.. உனக்கு பாட்டு எல்லாம் பாட தெரியுமா?” என்று ஆச்சரியம் நிறைந்த கண்கள் உடன் கேட்டாள்.

“என் உசுரில் உன் உசுரும் கலந்தத டி என் கண்ணம்மா.

நாம் நினைச்சதெல்லாம் நினைச்சபடி நடந்துருச்சே என் செல்லம்மா..

நான் பெற்ற பெரும் செல்வம் என்றென்றும் நீதானே..

நெஞ்சோடு உன்னை அள்ளி பொத்தி பாதுகாத்து வைப்பேனே என் மானே..!!” என்று அர்ஜுன் ஹை பிட்ச்சில் பாட, அவனது பாடலில் தேன்மொழியின் இதயம் ஐஸ்கிரீம் போல அப்படியே அவனுக்காக உருகியது.

‌“என் சர்க்கரை கட்டி நீதாண்டி..

சிறு எறும்பை போல உன்ன சுத்தி சுத்தி நான் வருவேனடி

என் பொண்டாட்டி..!!

என் ராசாத்தி.. அழகு சீமாட்டி..

அட என் உசுரே நீதானை டி.” என்று அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டு பாடிக் கொண்டிருக்க, தனக்காக இவன் இதையெல்லாம் கூட செய்வானா? அந்த அளவிற்கு இவனுக்கு தன் மீது காதல் இருக்கிறதா? என்று நினைத்து தேன்மொழியின் கண்கள் கலங்கியது. அவள் அப்படியே அவனை அணைத்துக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

கிலாராவிற்காக அவளுக்கு பிடித்த மலர்களை வாங்கி தானே ஒரு பூங்கொத்தை தயார் செய்து “Hey Baby... I'm here!” என்றபடி தங்களது அறையின் கதவை திறந்து உள்ளே சென்றான் பிரிட்டோ. அவனுக்காக தானே சில உணவுகளை தயார் செய்து வைத்துவிட்டு அவனுக்காக காத்திருந்த கிளாரா சிரித்த முகமாக அவன் குரலைக் கேட்டவுடன் திரும்பி அவனை பார்த்தாள்.

அவள் கண்களில் மின்னிக் கொண்டு இருந்த காதலை பார்த்தவுடன் எப்போதும் போல இப்போதும் பிரிட்டோவின் இதயம் அவளுக்காக உருகியது. ❤️ கருப்பு நிற பென்சில் ஸ்கர்ட் அணிந்திருந்த கிளாரா அதற்கு மேல் ஒரு வெள்ளை நிற சர்ட் அணிந்திருக்க, அவளுடைய பிரவுன் நிற சிறிய கூந்தல் ஃபேன் ஓடியதால் காற்றில் பறந்து கொண்டிருந்தது.

டோரை கூட லாக் செய்யாமல் தன்னை மறந்து அவளை நோக்கி நடந்து சென்ற பிரிட்டோ தன் கையில் இருந்த பூங்கொத்தை தரையில் மண்டியிட்டு அவளிடம் கொடுத்து “you are looking so pretty today! I don't care about the other girls in this world, because you never let me think of anyone else. Clara, your love keeps pulling me closer to you. I always want you to be in front of my eyes. If I get the blessing of seeing you forever and after, I'll be happy for life. Instead of saying you're the only happiness for me in this world, I see you as my whole world. I love you, my pretty lady love.” என்று கண்கள் கலங்க சொன்னான்.

அவர்கள் இருவருக்குமே ரஷ்யன், தமிழ், ஆங்கிலம் மூன்றும் நன்றாக தெரியும். பிரிட்டோ அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்ததால் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவன். அந்நேரத்தில் அவன் எமோஷனல் ஆனதாலோ என்னவோ அவனுக்கு ஆங்கிலம் தான் சரளமாக வந்தது.

அவனது வார்த்தைகளிலும், தன் மீது அவனுக்கு இருக்கும் அளவு கடந்த காதலிலும் உறைந்து அங்கே நின்று கொண்டிருந்த கிளாரா தானும் அவன் கையைப் பிடித்துக் கொண்டு தரையில் மண்டியிட்டு அமர்ந்து, “என் லைஃப்ல உன்ன தவிர நான் ஆசைப்பட்ட வேற எதுவுமே எனக்கு கிடைச்சதில்லை. இந்த வாழ்க்கை நிலையானது இல்லை நீ எனக்கு தெரியும்‌. இருந்தாலும் நான் ஒவ்வொரு செகண்ட் உன் கூட வாழும் போதும், உன்ன மாதிரி என்னை லவ் பண்ண ஒருத்தன் கிடைச்சதனால நான் எழுத எல்லாத்துக்கும் சேர்த்து கடவுள் உன்னை பிளசிங்கா கொடுத்திருக்கிறாருன்னு எனக்கு தோணும். நிஜமாவே நான் உன்னோட ஒய்ஃப்பா இருக்கிறதுக்கு ரொம்ப பெருமைப்படுகிறேன் பிரிட்டோ. நீ நிறைய பொண்ணுங்களோட ட்ரீம் ஹஸ்பண்ட். அது உனக்கு தெரியாது. Thanks for everything!” என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டாள்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 129
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.