அத்தியாயம் 127
ஜனனி அழைத்ததால் அவளுடன் தனது ரூமிற்கு வந்த தேன்மொழி யாரோ டோரை லாக் செய்வதைப்போல இருந்ததால் ஷாக் ஆகி திரும்பி பார்த்தாள். அவள் கண்கள் சாசர் போல அதிர்ச்சியில் பெரியதாக விரிய, அவளுக்கு எதிரில் நேற்று போட வேண்டிய கண்ணன் கெட்டப்பில் இன்று வந்திருந்த அர்ஜுன் கையில் ஒரு புல்லாங்குழலை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.
அவனது நெற்றியில் ஒளிரும் தங்க நிறக் கிரீடம், அதில் செருகப்பட்டிருந்த மயில் இறகு, அவனது கருங்கூந்தல் அலையெனப் புரண்டு அவன் தோளில் விழுந்திருந்தது. காதில் மின்னிய மகர குண்டலங்கள், கழுத்தில் ஆரம், மார்பில் தவழும் முத்துமாலைகள் என அவன் ஒவ்வொரு ஆபரணத்திலும் அழகு மின்னியது. புல்லாங்குழலைத் தன் உதடுகளுக்கு அருகில் வைத்திருந்த அவன், மெல்லிய புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"அ... அர்ஜுன்..." எனத் தேன்மொழி வார்த்தைகள் வராமல் தடுமாறினாள். சப்ரைஸ் ஆக அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் அர்ஜுன் இந்த கெட்டப்பில் தனக்காக இங்கே வருவான் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை.
அவனது கண்கள் அவளது பார்வையைப் பருக, தேன்மொழியின் மனம் அவனின் வசீகர அழகில் மயங்கியது. அர்ஜுன், தேன்மொழியின் அருகில் சென்று, "என்ன டி உன் கிருஷ்ணன் ஹாட்ட இருக்கானா? அப்படியே முழுங்கற மாதிரி பாக்குற! இது கடவுள் கெட்டப் டி. ஞாபகம் இருக்குதா இல்லையா?" என்று கிண்டலாக கேட்டான்.
உடனே தன் உதட்டை சுளித்த தேன்மொழி “நீ கிருஷ்ணனா இருந்தா, உன்னோட ராதா ருக்மணி எல்லாமே நான் தான். உங்களை திங்கிற மாதிரி மட்டும் இல்ல.. நெஜமாவே அப்படியே கிடைச்சு திங்கிறதுக்கு கூட எனக்கு ரைட்ஸ் இருக்கு மிஸ்டர் அர்ஜுன்.” என்று சொல்லிவிட்டு விளையாட்டாக அவனது கன்னத்தில் லேசாக கடித்தாள்.
“ஏய் லூசு வலிக்குது டி. ரைட்ஸ் இருக்குனு நெஜமாவே கடிச்சு காமிப்பியா?” என்று அர்ஜுன் தன் கன்னத்தை தேய்த்தபடி கேட்க, “அதெல்லாம் அப்படித் தான். சும்மா சும்மா என்னை கொஸ்டின் பண்றதை விட்டுட்டு ஸ்பெஷலா ஏதாவது என்ன இம்ப்ரஸ் பண்ற மாதிரி பண்ணி காட்டு. அப்ப தான் போனால் போகுதுன்னு நான் உன்னை மன்னிப்பேன்.” என்று கரராகச் சொன்னாள் தேன்மொழி.
இவள் வழக்கம்போல முகத்தை திருப்பி கொண்டு போவதற்கு பதிலாக தன்னிடம் இப்படி சகஜமாக விளையாட்டுத் தனமாக பேசுவதை வைத்தே அவளுக்கு தன் மீது இருக்கும் கோபம் குறைந்துவிட்டது என்று அவனுக்கு புரிந்தது. இருப்பினும் அவளுக்காக இந்த ஸ்பெஷலாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அர்ஜுன் “இந்த கெட்டப்ல ஸ்பெஷலா பண்றதுக்கு என்ன டி இருக்கு?” என்று அவளிடமே கேட்க,
தன் ஒற்றை புருவத்தை தூக்கி அவனைப் பார்த்த தேன்மொழி “என்னை சமாதானப்படுத்தறதுக்கு தானே இதெல்லாம் பண்ணிட்டு இருக்க நீ! அப்புறம் அதையும் எப்படி ஸ்பெஷலா பண்றதுன்னு என் கிட்டயா கேட்கிற? பிசினஸ் பண்ணி கோடி கோடியா சம்பாதிக்கத் தெரியுது. பொண்டாட்டிய சமாதானப்படுத்த தெரியாதா உனக்கு?” என்று கேட்டாள்.
“அது தெரிஞ்சா நான் ஏன் டி இப்படி உன் முன்னாடி நின்னு கெஞ்சிகிட்டு இருக்க போறேன்? உன் புருஷன் தானே கேட்கிறேன்! அதுவும் உன்ன கரெக்ட் பண்ண தானே கேட்கிறேன்.. கொஞ்சம் சொன்னா தான் என்னவாம்!” என்று அர்ஜுன் தன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்க, “பின்ன வேற யாரை கரெக்ட் பண்ணுவியாம்?” என்று கேட்ட தேன்மொழி தனது இடுப்பில் கைவைத்துக் கொண்டு அவனைப் பார்த்து முரைத்தாள்.
“அடிப்பாவி! இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா? எனக்கு உன்னையே கரெக்ட் பண்ண துப்பில்லை. இந்த வயசுல நான் போய் வேற எவள டி கரெக்ட் பண்ண போறேன்?” என்று அர்ஜுன் காலிலேயே விழுந்து விட்டான் ஐயா என்பதைப் போல அவளிடம் மான ரோஷம் எல்லாத்தையும் காற்றில் பறக்கவிட்டு பேசிக் கொண்டிருக்க, அதில் மனம் இறங்கிய தேன்மொழி “இதுவும் வேலிடான பாயிண்ட் தான். அதான் கையில புல்லாங்குழல் வச்சிருக்கியே.. இது ஒரிஜினல் தானே!
சும்மா எதாவது வாசிச்சு காட்டு கேட்போம். அது எவ்ளோ கொடூரமா இருந்தாலும் ஏதோ கடவுள் எனக்கு கொடுத்த லோ பட்ஜெட் கிருஷ்ணர் இந்த அளவுக்கு தான் வாசிப்பாருன்னு நினைச்சு அதையும் நான் சந்தோஷமா கேட்டுக்குறேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
“வாவ்.. இது கூட நல்லா ஐடியா தான்! இப்ப பாரு உன் கிருஷ்ணரோட பவர் என்னன்னு.” என்று சொல்லிவிட்டு ஒரிஜினல் கிருஷ்ணரை போலவே தனது கால்களை வளைத்து ஒரு பொசிஷனில் நின்ற அர்ஜூன் அவன் கையில் இருந்த புல்லாங்குழலை சரியாக பிடித்து கண்களை மூடி மெய் மறந்து வாசிக்க தொடங்கினான். மூடப்பட்டு இருந்த அவர்களுடைய சவுண்டு புரூப் ரூமில் அந்த இனிமையான புல்லாங்குழலின் ஓசை எங்கும் எதிரொலித்தது. 🪈
அந்த இசை, தேன்மொழியின் இதயத்தில் அலைகளை உருவாக்க, அவள் அவனது கண்ணன் கெட்டப்பின் அழகிலும், அவன் வாசித்த இசையிலும் கரைந்து போனாள். பின் சுதாரித்துக் கொண்டு இந்த அழகிய தருணத்தை மிஸ் செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த தருணத்தை அப்படியே தனது மொபைல் கேமராவில் வீடியோவாக எடுத்தாள்.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் வரை மூச்சுப்பிடித்து அந்த புல்லாங்குழலில் ஒரு இனிமையான கானத்தை வாசித்து முடித்த அர்ஜுன் வாயில் இருந்து புல்லாங்குழலை எடுத்துவிட்டு அவள் முன்னே வணக்கம் சொல்வதைப்போல போஸ் கொடுத்தான். அத்துடன் ரெக்கார்டிங்கை ஆஃப் செய்துவிட்டு ஃபோனை கீழே வைத்த தேன்மொழி குழந்தை போல உற்சாகமாக தொடர்ந்து கை தட்டியபடி “சூப்பர்.. செமையா இருந்துச்சு. எனக்காக நீ வாசித்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ இந்த அளவுக்கு சூப்பரா flute 🪈 வாசிப்பண்ணு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
“பாராட்டுறது எல்லாம் ஓகே தான். ஆனா நான் என்ன சின்ன குழந்தையா? என்னமோ ஸ்கூல்ல சித்தார்த் ஆனிவல் டே பர்பாமென்ஸ் பண்ண மாதிரி கிளாப் பண்ணி நல்லா இருக்குன்னு சிம்பிளா சொல்ற! நான் உன் புருஷன் டி.
என்னை அப்ரிசியேட் பண்ணும் போது அப்படியே நான் அந்த அப்ளிகேஷன்ல மெய் மறந்து போற மாதிரி கட்டிப்புடிச்சு, உம்மா எல்லாம் கொடுத்து சும்மா எதுவும் ரொமான்டிக்கா பண்ண வேணாமா?” என்று கேட்ட அர்ஜுன் ஆர்வமுடன் அவள் அருகில் செல்ல,
ஒரு கல்ல சிரிப்புடன் மெல்ல நடந்து பின்னே சென்ற தேன்மொழி “ஓய் அங்கயே நில்லு. டேய்... சொன்னா கேக்க மாட்டியா? கிட்ட வராத அர்ஜூன். நான் பிரக்னண்டா இருக்கேன் டா. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? குழந்தை பிறக்கிற வரைக்கும் நோ ரொமான்ஸ்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
அவள் பேசியதில் பாதி அவளுக்கே கேட்டிருக்காது. அந்த அளவிற்கு கூச்சத்தில் தான் பிரக்னன்ட் ஆன பிறகு முதன்முறையாக அவனை பார்ப்பதால் அவள் அனைத்தையும் மெதுவாகச் சொன்னாள்.
“உனக்கு தான் மா இதெல்லாம் புதுசு. எனக்கு ஆல்ரெடி டூ டைம்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. பிரக்னண்டா இருக்கிற பொண்டாட்டிய எப்படி பாத்துக்கணும், அவளையும் ஹாப்பியா வச்சுக்கிட்டு நம்மளும் ஹாப்பியா இருக்குறதுக்கு அப்பப்ப எப்படி ரொமான்ஸ் பண்ணனும்னு எல்லாம் எனக்கு தெரியும். உன் டாக்டர் அட்வைஸ் எல்லாம் எனக்கு தேவையில்லை.” என்ற அர்ஜுன் இரண்டே எட்டில் அவள் அருகில் சென்று தன் கையில் இருந்த புல்லாங்குழலை அப்படியே அவளுக்கு பின்னே கொண்டு சென்று அதை பயன்படுத்தி அவளை லாக் செய்து தன் பக்கம் இழுத்தான்.
அவன் நெஞ்சில் மோதி நின்ற தேன்மொழி “டேய்!” என்று இழுக்க, “என்ன டி.. மரியாதை தேயுது!” என்று கேட்டுவிட்டு அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தான் அர்ஜுன். அவளை அந்த கிருஷ்ணர் கெட்டப்பில் அவ்வளவு குளோசபில் பார்க்கும்போது, “இதே மாதிரி எனக்கு ஒரு குட்டி கிருஷ்ணர் பிறந்தா நல்லா இருக்கும்.” என்று அவளுக்கு தோன்றியதால் தன்னையும் மீறி அவனது கன்னங்கள் இரண்டையும் பிடித்து கில்லிய தேன்மொழி “சோ க்யூட்!” என்றாள்.
“அவ்ளோ தானா!” என்பதைப் போல அவளை பாவமாக பார்த்த அர்ஜுன் முத்தமிடுவதற்காக அவளுடைய செந்தாமரை இதழ்களை நோக்கி குனிந்தான். அதை கவனித்து சுதாரித்துக் கொண்ட தேன்மொழி சட்டென்று தன் தலையை பின்னே எடுத்துக் கொள்ள, அவன் மீண்டும் அவளை நோக்கி சென்றான். அவள் அவனிடம் சிக்காமல் அவன் கையணைப்பிற்குள் இருந்தாலும் கூட தன் தலையை அங்கும் இங்கும் ஆட்டி அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.
இவளிடம் இப்படி கெஞ்சிக் கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த அர்ஜுன் அவன் கையில் இருந்த புல்லாங்குழலை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு அவள் இடுப்பில் தன் ஒற்றை கையை வைத்து மற்றொரு கையால் அவளது பின் தலையை பற்றி தன் பக்கம் இழுத்து அவனது இதழ்களுடன் தனது இதழ்களை இணைத்தான்.
ஒரு சிறிய பிரிவு மற்றும் சண்டைக்கு பிறகு அந்த ஆழமான இதழ் முத்தம் அவர்கள் இருவருக்குமே அத்தியாவசியமாக இருந்தது. அதனால் இம்முறை அவனிடம் வழக்கம்போல் போக்கு காட்டாமல் தானும் அவனது அடர்த்தியான கேசத்தை தனது ஒற்றை கையால் கொத்தாக பிடித்துக் கொண்டு அவன் முகத்தை தன்னுடைய சிறிய முகத்துடன் சேர்த்து வைத்து அழுத்திய தேன்மொழி அவன் விரும்பி பருகும் தனது இதழ் தேனை அவனுக்கு தயக்கம் இன்றி என்ற தடையும் இன்றி அளவு கடந்து அள்ளி கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்படியே மூன்று நிமிடங்கள் கடக்க, அவள் மூச்சு விட சிரமப்படுவதை கவனித்த அர்ஜுன் அவளை விட்டு விலகினான். அப்போதும் முழுவதாக விலக மனம் வராமல் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். பதிலுக்கு தானும் அவனை இறுக்கமாக அணைத்து கொண்ட தேன்மொழி “நிஜமாவே இப்படி உன்ன பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அர்ஜூன். ராதே கிருஷ்ணர் படத்துல வர்றதை பார்க்கும்போது எல்லாம் நமக்கு இதே மாதிரி ஒரு கிருஷ்ணர் கிடைச்சா நல்லா இருக்கும்னு நான் நினைத்திருக்கிறேன்.
இப்ப என்னோட அந்த ஆசை நிறைவேறுன இந்த மாதிரி இருக்கு.” என்று சொல்லிவிட்டு அண்ணாந்து அவன் முகத்தை ஆசையுடன் பார்த்தாள். அவளது நெற்றியில் தனது இதழ்களை பதித்த அர்ஜுன் “எனக்கு தெரியும் நேத்து நீ என்னை எவ்வளவு மிஸ் பண்ணி இருப்பேன்னு... பிராமிசா அதைவிட அதிகமாகவே நானும் உன்னை மிஸ் பண்ணேன் டி. அதான் உன் கூட ஒரு பெஸ்ட் வொமண்டைக்கு கிரியேட் பண்ணனும்னு இருந்த அவசரங்களையும் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை புடிச்சு ஆபீஸ்லயே மேக்கப் போட்டுட்டு அங்கயும் யார் கண்ணுலயும் பட கூடாதுன்னு லிஃப்ட் கூட யூஸ் பண்ணாம ஸ்டெப்ஸ்ல மறஞ்சு மறஞ்சு வந்தேன் தெரியுமா?
இங்க வீட்டுக்கு வந்தா அதுக்கு மேல.. யாரைப் பார்த்தாலும் ரூம்ல இருக்காம எல்லாரும் லிவிங் ஏரியால தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க கிட்ட இருந்து எல்லாம் தப்பிச்சு இங்க ரூமுக்கு வந்து செட்டில் ஆகுறதுக்குள்ள ஏதோ பெரிய சாதனை பண்ண மாதிரி இருந்துச்சு.” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டான்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 127
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.