மஞ்சம் 126

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
தான் இப்போது அனுப்பிய மெசேஜ் இருக்கு தேன்மொழி அதை பார்த்தும் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதால் வழக்கம்போல் கடுப்பான அர்ஜுன் “என்னை தாண்டி எல்லாரும் மனசாட்சி இல்லாத சைக்கோன்னு எல்லாம் சொல்லுவாங்க. பட் என்னை விட நீ பெரிய சைக்கோ நீதான்டி. நானாவது ஃபேமில இருக்கிறவங்க ஏதாவது சொன்னா கேட்பேன். அவங்க எமோஷனலா பேசினா உடனே ரியாக்ட் பண்ணுவேன்.

நீ எனக்கு மேல இருக்க. சரியான கல்நெஞ்சகாரி டி நீ. இந்த வயசான காலத்துல உன்னை எல்லாம் வெச்சுகிட்டு நான் என்ன பண்ண போறேன்னு தெரியல.” என்று சில நிமிடங்களுக்கு பிறகு அவளுக்கு மெசேஜ் அனுப்பினான். தயாராகி அர்ஜுன் வருவதற்காக தனது ரூமில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்த தேன்மொழி அவனது மெசேஜை பார்த்துவிட்டு சிரித்தவள்,

“யாரு நான் கல்லஞ்சகரியா? நீதாண்டா கல் நெஞ்சக்காரன். நான் எத்தனை தடவை எதையாவது கெஞ்சி கேட்டா கூட, உன் வாயில இருந்து ஒரு வார்த்தைய வாங்க முடியாது. நீ என்னை கல்நெஞ்சகாரின்னு சொல்றியா? நான் என் தான் உன் கிட்ட பேச கூடாதுன்னு கோவமா இருந்தாலும் ஈசியா உனக்காக இறங்கி வந்துடறேன்.

நான் உன் கிட்ட இவ்ளோ ஸ்வீட்டா இருக்கும்போதே நீ என்ன இப்படி எல்லாம் சொல்றல்ல.. இரு, இனிமே நீ சொல்ற மாதிரி என் ஹார்ட்டை கொஞ்ச நாள் ஆஃப் பண்ணி வைக்கிறேன் உனக்காக. உன்னை நெஜமாவே நான் கதறவிட்டா தான் நான் யாருன்னு உனக்கு தெரியும்.” என்று நினைத்த தேன்மொழி அவனுடைய அந்த மெசேஜ்க்கும் ரிப்ளை செய்யவில்லை.

அப்படியே நேரம் கடந்து செல்ல, இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி என்பதை போல தனக்காக அவ்வளவு பேசிவிட்டு எப்படியும் அர்ஜுன் சீக்கிரம் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் தனது ரூமிற்குள் அடைகாக்கும் கோழி போல சுற்றிக் கொண்டு இருந்த தேன்மொழி கடுப்பாகி “இவனை எல்லாம் திருத்தவே முடியாது. அவன் எப்ப வருவானோ வரட்டும். இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே ஒக்காந்து இருக்கிறது? ஆருத்ரா அப்பவே போர் அடிக்குது வாங்க மம்மி விளையாடலாம்னு கூப்பிட்டா. நான் தான் இவனுக்காக வர மாட்டேன்னு சொன்னேன். இங்க சும்மா உக்காந்துட்டு இருக்குறதுக்கு பேசாம போய் குழந்தைங்க கிடையாது ஜாலியா விளையாடிட்டு இருக்கலாம்.” என்று நினைத்து குழந்தைகளுக்கான ப்ளே ஏரியாவிற்கு சென்று அவர்களுடன் விளையாடத் தொடங்கினாள்.

அதை கவனித்த ஜானகி அவர்களுடன் தானும் சென்று அமர்ந்து கொண்டு குழந்தைகள் தேன்மொழியுடன் சேர்ந்து சிரித்து பேசி ஓடி விளையாடிக் கொண்டு இருந்ததால், “பாத்து பசங்களா! இப்படி உங்க மம்மி கூட அவங்க மேல போய் விழுகிற மாதிரி எல்லாம் விளையாடக்கூடாது. அப்புறம் அவங்களுக்கு ஏதாவது அடிபட்றும்.” என்று சொல்ல, “மம்மிக்கு அடிபடற மாதிரி நாங்க எதுவுமே பண்ணலையே பாட்டி!” என்றான் சித்தார்த்.

“ஆமா நாங்க எப்பவும் போல சும்மா பால் தான் தூக்கி போட்டு விளையாடிட்டு இருந்தோம். அதுவும் நாங்க மம்மியை அடிக்கிற மாதிரி எல்லாம் போடவே இல்லையே!” என்று தன் பங்கிற்கு ஆருத்ராவும் செல்ல, இவர்களிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தேன்மொழி பாவமாக தன் அத்தையை பார்த்தாள்.

“அப்படித் தான் விளையாடக் கூடாதுன்னு உங்க கிட்ட இப்ப சொல்லிட்டு இருக்கேன். முன்னாடி உங்க மம்மி நார்மலா இருந்தாங்க. சோ நீங்க அவங்க கூட எப்படி வேணாலும் ஜாலியா விளையாடலாம். ஆனா இப்ப அப்படி இல்லையே! நேத்து உங்க மம்மி மயங்கி விழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?

ஹாஸ்பிடல்ல நம்ம அவங்களை அட்மிட் பண்ணி இருக்கும்போது டாக்டர் இனிமே அவங்கள கேர்ஃபுல்லா பாத்துக்கணும்னு உங்க முன்னாடி தானே சொன்னாங்க! நீங்க இப்படித் தான் உங்க மம்மியை பார்த்துக்குவீங்களா?” என்று ஜானகி கேட்டவுடன் குழந்தைகள் இருவரின் முகமும் சோகத்தில் வாடிவிட்டது.

ஆருத்ரா ஜானகியின் அருகில் சென்று “அப்போ மம்மிக்கு இன்னும் சரியாகலையா? அவங்களுக்கு என்னாச்சு பாட்டி? ஏன் அவங்க அன்னைக்கு மயங்கி விழுந்தாங்க? மம்மிக்கு மறுபடியும் இப்ப உடம்பு சரி இல்லாம போயிடுச்சா?” என்று வாடிய முகத்துடன் அவர்கள் இருவரும் வருத்தத்துடன் கேட்க, ஜானகியே அவர்களிடம் பக்குவமாக விஷயத்தை சொல்லட்டும் என்று நினைத்த தேன்மொழி அமைதியாக அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சித்தார்த்தையும் தன் அருகில் அழைத்து நிற்க வைத்துக் கொண்ட ஜானகி அவனையும் ஆருத்ராவையும் அன்புடன் பார்த்து, “இந்த வீட்ல இன்னொரு குட்டி பாப்பா இருந்தா நல்லா இருக்கும்னு நம்ம எல்லாரும் முன்னாடி அடிக்கடி பேசிட்டு இருப்போம் தானே! சித்தார்த் நீ கூட உனக்கு தம்பி பாப்பா இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லுவியே! உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா?” என்று கேட்க, அவர்கள் இருவரும் கோரசாக “இருக்கு பாட்டி!” என்றார்கள்.

“அப்போ நான் சொல்ல போறத கேட்டு நீங்க ரெண்டு பேரும் தான் எல்லாரையும் விட அதிகமா சந்தோஷப்பட போறீங்க. உங்க மம்மி இப்ப பிரக்னண்டா இருக்காங்க. இன்னும் ஆறு ஏழு மாசத்துல நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போகுது.

பாப்பா இப்ப மம்மியோட ஸ்டொமக்ல தான இருக்கு.‌ நீங்க மம்மி கூட விளையாடும் போது தெரியாம ஸ்டொமக்ல அடிபடற மாதிரி ஏதாவது பண்ணிட்டீங்கன்னா, அது பாப்பாவுக்கு சேஃப் இல்ல. அதான் நான் உங்கள உங்க மம்மி கூட இருக்கும்போது கேர்புல்லா இருக்கணும்னு சொல்றேன்‌‌. நான் ஏன் அப்படி சொல்றேன்னு இப்போ உங்களுக்கு புரியுதா?” என்று ஜானகி சென்னாள்,

தனது வாயை பிளந்து கொண்டு ஆச்சரியமாக ஜானகியையும் தேன்மொழியையும் மாறி மாறி பார்த்த ஆருத்ரா ‌“என்ன பாட்டி சொல்றீங்க! நெஜமாவே நம்ம வீட்டுக்கு இன்னொரு குட்டி பாப்பா வரப்போகுதா? நானும் சித்து அண்ணாவும் அந்த பாப்பா கூட சேர்ந்து விளையாடலாமா?” என்று கேட்க, தேன்மொழியின் அருகில் ஓடிச் சென்று அவளது வயிற்றில் கை வைத்து பார்த்த சித்தார்த் “மம்மி உங்க வயித்துக்குள்ள இருக்கிறது பையன் பாப்பாவா இல்ல பொண்ணு பாப்பாவா? எனக்கு மகிழன் மாதிரி இன்னொரு தம்பி தான் வேணும். ஆருத்ரா மாதிரி இன்னொரு பாப்பா வந்தா என்னால சமாளிக்கவே முடியாது.” என்று ஒரு மாதிரி தன் முகத்தை வைத்துக் கொண்டு ஆருத்ராவை திரும்பி பார்த்துவிட்டு சொன்னான்.

அதை கேட்டுவிட்டு தேன்மொழியின் அருகில் ஓடிச் சென்ற ஆருத்ரா ‌ சித்தார்த்தின் தலையில் கொட்டிவிட்டு “உன்ன மாதிரி இன்னொரு லூசு பையன் எல்லாம் வேண்டாம் சித்தார்த். எனக்கு என்ன மாதிரி க்யூட்டா அழகான தங்கச்சி பாப்பா தான் வேணும். மம்மி நான் இப்பவே உங்க கிட்ட சொல்லிட்டேன். உங்களுக்கு தங்கச்சி பாப்பா தான் பொறக்கணும். எனக்கு தம்பி வேணாம்.” என்றாள்.

“போச்சு டா! நீங்க இப்படி சண்டை போட்டுட்டு இருந்தா பொறுக்கப்போற குழந்தை உங்கள பாத்து இதெல்லாம் கத்துக்காத சொல்லுங்க?

இப்போ உங்க ரெண்டு பேருக்கும் ரெஸ்பான்சிபிலிட்டி அதிகமாயிடுச்சு. நீங்க பிக் பிரதர் அண்ட் பிக் சிஸ்டர் ஆக போறீங்க. உங்களுக்கு அடுத்து பொறக்க போற குழந்தை உங்க தங்கச்சியா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நீங்க தான் அவங்கள நல்லா பாத்துக்கணும். அதை விட்டுட்டு இப்படி உங்களுக்குள்ளயே சண்டை போடலாமா? பொறக்கபோற குழந்தை எப்படி இருக்கனும்னு கடவுள் தான் டிசைட் பண்ண போறாரு. சோ இனிமே இப்படி தங்கச்சி வேணும் தம்பி வேணும்னு எல்லாம் நீங்க சண்டை போடவே கூடாது.” என்று தேன்மொழி சொல்ல,

தங்கள் அம்மா என்ன சொன்னாலும் அது சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்த அந்த குழந்தைகள் இருவரும் உடனே அதற்கு தலையாட்டி “okay mummy, we are waiting to meet our new sibling!” என்று கோரசாக சொல்லிவிட்டு அவளை அணைத்துக் கொண்டார்கள்.

“மம்மி இனிமே நம்ம முன்னாடி மாதிரியெல்லாம் விளையாட வேண்டாம். உங்களுக்கு போர் அடிச்சதுனா சொல்லுங்க நான் உங்க கூட வந்து செஸ் விளையாடுறேன்.” என்று சித்தார்த் செல்ல, “இல்ல மம்மி நீங்க ஃப்ரீயா இருந்தா என்கிட்ட சொல்லுங்க. நீங்களும் நானும் சேர்ந்து டிவில கார்ட்டூன் சேனல் போட்டு பாக்கலாம். என்ன மாதிரியே உங்களுக்கும் சின்-சான் பிடிக்கும் தானே!” என்று போட்டி போட்டு சொன்னாள் ஆருத்ரா. ச்ச்.. என்று விட்டு அவர்களைப் பார்த்து முறைத்த தேன்மொழி “இப்ப தானே நீங்க ரெண்டு பேரும் சண்டையே கொடுக்க கூடாதுன்னு சொன்னேன்! அதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா நீங்க? உங்க ரெண்டு பேரையும் சமாளிக்கிறதே எனக்கு பெரிய வேலையா இருந்தா, இந்த குட்டி பாப்பாவா நான் எப்படி பாத்துக்குறது சொல்லுங்க?” என்று கேட்டாள்.

உடனே “சாரி மம்மி!” என்று சொல்லிவிட்டு குழந்தைகள் இருவரும் சோகமாக தங்கள் தலையை குனிந்து கொள்ள, “ஓகே ஓகே, ஃபீல் பண்ணாதீங்க. இப்ப நம்ம டிவி பார்க்கலாம். நாளைக்கு நான் சித்தார்த் கூட சேர்ந்து செஸ் விளையாடுறேன். ஓகேவா?” என்று கேட்டாள் தேன்மொழி. அவள் தங்கள் இருவரின் கோரிக்கைகளையும் நிராகரிக்காததால் இரண்டு குழந்தைகளும் “டபுள் ஓகே மம்மி!” என்று கோரசாக சொல்லிவிட்டு சந்தோஷத்தில் குதித்தார்கள்.


அப்போது தேன்மொழியை தேடிக் கொண்டு அங்கே வந்த ஜனனி “அண்ணி உங்களோட ரெட் கலர் டிசைனர் சாரி ஒன்னு எனக்கு புடிச்சிருக்குன்னு நான் சொன்னேன்ல்ல.. நீங்க கூட அதை என்னையே வச்சுக்க சொன்னிங்களே.. கொஞ்சம் உங்க ரூமுக்கு வந்து எனக்கு அதை எடுத்து கொடுக்கிறீர்களா? டுமாரோ மார்னிங் நான் சந்தோஷ் கூட ‌ அவுட்டிங் போலாம்னு இருக்கேன். சோ அந்த saree எனக்கு இப்பவே வேணும்.” என்று கேட்க, “ஓஓ.. அந்த saree-யா? அது நேத்து ரிசெப்ஷன் முடிஞ்சு வரும்போது எடுத்துட்டு வந்த அதே ட்ராலியில் தான் அது இன்னும் இருக்கு. நீங்க வாங்க நான் உங்களுக்கு எடுத்து கொடுக்கிறேன்.” என்ற தேன்மொழி ஜனனியுடன் தனது ரூமிற்கு சென்றாள்.

தேன்மொழி கதவைத் திறந்து தனது ரூமில் உள்ள லைட்டை போட, அந்த டோரை லாக் செய்துவிட்டு அங்கே இருந்து வந்துவிட்டாள் ஜனனி. டோர் லாக் ஆகும் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த தேன்மொழியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 126
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi