மஞ்சம் 124

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
தான் ஹாஸ்பிடல் பக்கம் சென்றாலே ஜூலி தன்னை தனியே ஒரு நொடி கூட விடாமல் எப்போதும் அவளுடனே பிடித்து வைத்துக் கொள்வதால், ஆபீஸ் வேலைகளை பார்க்க வேண்டும் என நினைத்த அர்ஜுன் லின்டாவிற்கு கால் செய்து அவளை ஹாஸ்பிடலுக்கு வர சொல்லிவிட்டு அவள் வந்தவுடன் அவன் கிளம்பி ஆபீசுக்கு சென்று விட்டான்.

ரஷ்யாவில் தொடர்ந்து வரும் போர் காரணமாகவும், இயற்கை சீற்றங்கள் காரணமாகவும் அங்கே இருக்கும் தங்களுடைய நிறுவனங்களை சமாளிப்பதில் அர்ஜுன் பெரும் சிக்கலை எதிர்க் கொண்டான். ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் படி ஆர்டர் கொடுத்த அர்ஜுன், தங்களது மேனுஃபாக்சரிங் யூனிட்டுகளில் மட்டும் குறைவான ஆட்களை வைத்து புரொடக்ஷன் தடை ஆகாமல் இருக்க சில திட்டங்களை போட்டு வேலைகளை கவனிக்க தொடங்கினான்.

இதற்கிடையில் அவன் அவ்வப்போது தேன்மொழிக்கு கால் செய்து பார்க்க, அவள் அதை கண்டும் காணாமல் இருந்து விட்டாள். மாலை நாலு மணி அளவில் சரியாக தூங்காததால் தன் தலை வலிப்பதைப் போல உணர்ந்த அர்ஜுன் சர்வண்டுக்கு கால் செய்து தனது ரூமிற்கு டீ கொண்டு வரச் சொன்னான். அந்த கேப்பில் அவன் தனது மொபைல் ஃபோனை எடுத்து பார்க்க, தேன்மொழியிடம் இருந்து இதுவரையிலும் அவனுக்கு ஒரு காலோ மெசேஜோ வரவில்லை.

“என்ன இவ வேணும்னே நம்ம கிட்ட பேச மாட்டீங்கிறாளா? நான் மார்னிங்ல இருந்து கால் பண்ணிட்டு இருக்கேன். ஒன்னு என் கால அட்டென்ட் பண்ண மாட்டேங்குறா. இல்லைனா ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சுடறா! இப்ப இவளுக்கு என்ன பிரச்சனை?” என்று யோசித்த அர்ஜுனிற்க்கு இறுதியாக அவனுக்கும் அவளுக்கும் நடந்த பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது.

“போச்சு டா! அதுக்காக அவ இன்னுமா என் மேல கோவமா இருக்கா? இப்ப அவ பிரக்னண்டா இருக்கிறதுனால அந்த சந்தோஷத்துல நடந்தது எல்லாத்தையும் மறந்திருப்பான்னு நினைச்சேன். பட் இப்ப நான் ஜூலி கூட ஹாஸ்பிடல்ல இருந்துகிட்டு வீட்டுக்கு போகாததனால மறுபடியும் அவளுக்கு என் மேல இருந்த கோபம் அதிகம் ஆயிடுச்சு போல இருக்கு. அதான் வேணும்னே என அவாய்ட் பண்றதுக்காக என் கிட்ட பேச மாட்டேங்கறா!” என்று நினைத்த அர்ஜுன், “இப்ப அவள எப்படி சமாளிக்கிறது? இவ வேற நம்ம என்ன சொன்னாலும் லாஜிக்கா பேசி நம்மள மடக்கிறாளே!” என்று யோசித்தவன் அவளை சமாதானப்படுத்த ஒரு பிளான் போட்டான்.

அந்த பிளானை எப்படி சரியாக எக்ஸிகியூட் செய்வது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனுக்கு லிண்டாவிடம் இருந்து கால் வந்தது. அதை அட்டென்ட் செய்த அர்ஜூன் “சொல்லு மா! எனிதிங் சீரியஸ்?” என்று கேட்க, “இல்ல ப்ரோ, ஜூலி நார்மலா தான் இருக்காங்க. டாக்டர் கூட இப்ப தான் அவங்கள செக் பண்ணிட்டு எல்லாம் ஓகே தான்னு சொல்லிட்டு போனாங்க. பட் இந்த ஜூலி தான் சும்மா இருக்க மாட்டேங்கறாங்க.” என்று சலிப்புடன் சொன்னாள் லிண்டா.

“இப்ப என்னவாம் அவளுக்கு? அதான் அவ கூட இருந்து பார்த்துக்கிறதுக்காக நீ இருக்கல.. வேற என்ன வேணும் அவளுக்கு?” என்று அர்ஜுனும் எரிச்சலுடன் கேட்க, “அவங்களுக்கு நீங்க தான் வேணும் ப்ரோ. சும்மா நீங்க எப்ப போனீங்க, எங்க போனீங்க, எதுக்கு போனீங்க, திரும்ப எப்ப வருவீங்கன்னு உங்கள பத்தியே என் கிட்ட கேட்டு டார்ச்சர் பண்றாங்க. நானும் நீங்க ஆபீஸ்ல பிசியா இருக்கீங்க ன்னு சொல்லி பாத்துட்டேன்.

ஆனா அவங்களுக்கு தனியா இருக்க பயமா இருக்காம். அகைன் அண்ட் அகைன் சும்மா கண்ணை மூடினாலே அந்த இன்சிடென்ட் தான் ஞாபகம் வருதுன்னு சொல்லி புலம்பிக்கிட்டே இருக்கிறார்கள். ஐ திங்க் அவங்க இப்படி எல்லாம் பண்ணா தான், நீங்க அவங்க கூடயே இருப்பீங்கன்னு தான் அவங்க இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க.” என்றால் லிண்டா.

“ச்ச்.. என்ன நெனச்சிட்டு இருக்க அவ? அதை எனக்கு பண்ணது பெரிய ஹெல்ப் தான். அதுக்காக நான் அவளுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கேன். அதுக்குன்னு நான் வேற எங்கேயும் போகாம அவ கூடை எப்பயும் இருக்கனும்னா எப்படி?

அங்க என் வைஃப் ஃபிரக்னண்டா இருக்கா.. அவளோட கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம ஹாஸ்பிடலுக்கும் ஆபீசுக்கும் நான் சுத்திட்டு இருக்கேன். இந்த இன்சிடெண்டை யூஸ் பண்ணி மறுபடியும் வந்து என்கிட்ட ஒட்டிக்கணும்னு அவ நினைக்கிறா லிண்டா. எத்தனை தடவை கேட்டாலும் பரவால்ல. நான் பிஸியா இருக்கேன்னு சொல்லிடு. அப்பயும் அவ உங்க டார்ச்சர் பண்ணிக்கிட்டே இருந்தா, அவளுக்கு என்ன ப்ரைவேட் நர்ஸ் அரேஞ்ச் பண்ணி குடுத்துட்டு நீ அங்க இருந்து கிளம்பி வீட்டுக்கு போயிடு. அவ சரியான டார்ச்சர். அவ கூட எல்லாம் யாராலையும் இருக்க முடியாது.” என்று அர்ஜுன் சொல்ல,

“ஓகே ப்ரோ, நானும் அதான் நினைச்சேன். உங்க கிட்ட ஒரு தடவை டிஸ்கஸ் பண்ணிக்கலாம்னு தான் கால் பண்ணேன். இனிமே ஜூலியை நான் பார்த்துக்கிறேன். தேன்மொழி உங்கள ரொம்ப மிஸ் பண்றாங்க.

நேத்து ஃபங்ஷன் நடுக்கும் போது கூட நீங்க வருவீங்கன்னு அவங்க ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. நீங்க இப்ப அவங்களை பத்தி மட்டும் யோசிங்க. இந்த ஜூலி மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஓவர் இடம் கொடுக்கக் கூடாது.” என்று சொல்லிவிட்டு தன் அழைப்பை துண்டித்தாள் லிண்டா.

வீட்டில் தனியாக இருந்த தேன்மொழி அவளுக்கு போரிங்காக இருந்ததால் டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது லிவிங் ஏரியாவில் சலசலப்பாக இருக்க, டிவியை நியூட்டில் போட்டுவிட்டு வெளியில் வந்து பார்த்தாள் அவள்.

அங்கே மகேஷ் தனது அம்மா சாரதாவுடன் ஜானகியின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்தவுடன் சந்தோஷப்பட்ட தேன்மொழி “சாரதா ஆன்ட்டி.‌.. எப்ப வந்தீங்க? வாங்க மகேஷ்! நீங்க ரெண்டு பேரும் பிரிட்டோ அண்ணா மேரேஜ்க்கே வருவீங்கன்னு நினைச்சேன். இப்ப தான் வரிங்க!” என்று உற்சாகமான குரலில் சொன்னபடி அவர்கள் அறிவியல் சென்றாள்.

முன்பு இருந்ததை விட தேன்மொழி இப்போது பார்ப்பதற்கு கொஞ்சம் பூசியதை போல இருப்பதாகவும், அவள் அழகு கூறிவிட்டதாகவும் நினைத்து அவளை வெகு நாட்களுக்கு பிறகு பார்ப்பதால் ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் “ஹாய் மேடம்! எப்படி இருக்கீங்க?” என்று கேட்க, சாரதாவும் தேன்மொழியின் அருகில் சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு “நல்லா இருக்கீங்களா சின்னம்மா?” என அன்புடன் கேட்டாள்.

“ம்ம்.. நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி. எல்லாரும் இங்க கிளம்பி வந்ததுக்கு அப்புறமா, நீங்களும் இந்தியா வந்திருக்க வேண்டியது தானே? நீங்க ரெண்டு பேர் மட்டும் அங்க தனியா இருந்து என்ன பண்ணிட்டு இருந்தீங்க? உங்களுக்கு போர் அடிக்கலையா?” என்று தேன்மொழி கேட்க, “யாருமே வீட்ல இல்லைனாலும் வீட்டை அப்படியே போட்டு வைக்க முடியாது இல்லம்மா.. அதான் நாங்க அங்க இருந்து வீட்டை பார்த்துட்டு இருந்தோம்.

நம்ம மகேஷுக்கு இங்க எங்க சொந்தக்கார பொண்ணு ஒன்னு பார்த்திருக்கோம். எல்லாரும் இங்க இந்தியாவிலேயே இருக்கும்போது கையோட இவனுக்கும் கல்யாணத்தை முடிச்சுப்புட்டா நிம்மதியா போயிடுமேனு தான் நானும் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். நேத்து ஜானகி அம்மா நீங்க உண்டாயிருக்கிற விஷயத்தை சொல்லி உங்க கூடவே இருந்து பாத்துக்கணும்னு எங்கள உடனே இந்தியா கிளம்பி வர சொல்லிட்டாங்க.” என்று சாரதா சொல்ல,

“ஆமாமா எனக்கு ஞாபகம் இருக்கு. மகேஷுக்கு அந்த பொண்ண பார்த்து பேசி முடிச்சிட்டிங்களா? எப்ப மேரேஜ்?” என்று ஆர்வமாக கேட்டாள் தேன்மொழி. “அதெல்லாம் அங்க ஊர்ல இருக்கும்போதே எல்லாத்தையும் பேசி முடிச்சாச்சு மா. இவன் தான் கொஞ்ச நாள் போகட்டும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இத்தனை நாளா பெனாத்திட்டு இருந்தான். என்னமோ தெரியல நேத்து நான் இந்தியா போனதும் உனக்கும் மகாலட்சுமிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்ன உடனே எதுவும் சொல்லாமல் சரின்னுட்டான்.

அதான் இவன் மனசு மார்றத்துக்குள்ள சீக்கிரம் இவனுக்கும் மகாவுக்கும் எப்படியாவது கல்யாணம் பண்ணி வச்சிரணும்னு பார்க்கிறேன். நீங்க எல்லாரும் முன்னாடி நின்னு தான் இந்த கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும்.” என்று சாரதா சொல்ல,

“அதெல்லாம் சிறப்பா பண்ணிடலாம் ஆன்ட்டி. இவங்களுக்கும் சீக்கிரம் மேரேஜ் பண்ணிட்டா பிரிட்டோ அண்ணாவும், கிலாராவும் ஹனிமூன் போகும்போது இவங்களையும் கூட பேக் பண்ணி அனுப்பிடலாம். எல்லாரும் ஜாலியா போய் என்ஜாய் பண்ணிட்டு வரட்டும்.” என்று பெருந்தன்மையுடன் சொன்னாள் தேன்மொழி.

அவள் பேசுவதை எல்லாம் பெருமிதத்துடன் கேட்டுக் கொண்டு இருந்த ஜானகி “என் முடிவு தப்பு இல்லைன்னு தேன்மொழி அடுத்தடுத்து ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கா. சியாவும் நல்ல பொண்ணு தான். ஆனா அவ குடும்பத்தை விட எப்பயும் வேலை வேலைன்னு தான் இருப்பா.

கிட்டத்தட்ட அர்ஜுனும் சியாவும் ஒரே மாதிரி தான். ஒரு வீட்ல புருஷன் பொண்டாட்டி இரண்டு பெரும் ஒரே மாதிரியே இருந்தா என்ன ஆகிறது? தேன்மொழி இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு ஒரு புது நம்பிக்கையே வந்து இருக்கு. எனக்கு அப்புறம் வீட்டு பொறுப்பு எல்லாத்தையும் எடுத்துட்டு இவ நல்லபடியா கண்டிப்பா செய்வா.” என நினைத்து சந்தோஷப்பட்டாள்.

தேன்மொழி கர்ப்பமாக இருப்பதை கொண்டாடும் விதமாக வீட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் சில சிறப்பு பரிசுகளை கொடுத்திருந்த ஜானகி இப்போது வந்திருக்கும் மகேஷ் மற்றும் சாரதாவிற்கும் மற்றவர்களை விட கொஞ்சம் சிறப்பாக பரிசு பொருட்களை ஏற்பாடு செய்தாள். அதை தனது இடத்தில் இருந்து தேன்மொழியே கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவளை அழைத்து அவர்களிடம் கொடுக்க வைத்தாள்.

அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த விஜயாவிற்கு “என் பொண்ணு திடீர்னு இப்படி இவ்ளோ பெரிய குடும்பத்துக்கு கல்யாணம் பண்ணி வந்துட்டாளே.. இவங்க தேவைக்காக அவளை கல்யாணம் பண்ணி வச்சிட்டு அப்புறம் என் பொண்ணை மதிக்காம போய்ட்டா என்ன பண்றதுன்னு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்துகிட்டே இருந்துச்சு.

இப்ப இந்த வீட்டுக்கு வந்து சம்மந்தி அம்மாவோட, அவங்க குடும்பத்துல இருக்கிறவங்க கூட பழகி பார்க்கும்போது தான், என் பொண்ணை இவங்க எல்லாரும் எந்த இடத்துல வச்சிருக்காங்கன்னு தெரியுது. மாப்ள அளவுக்கு எல்லாரும் என் பொண்ணுக்கும் மரியாதை கொடுக்குறத பார்க்கவே சந்தோஷமா இருக்கு. கூடிய சீக்கிரம் நான் ஆசைப்பட்ட மாதிரி தேனுக்கு குழந்தை பிறக்கப் போகுது.

அந்த குழந்தை நல்லபடியா பார்க்கணும். இதே மாதிரி என் பொண்ணு சிரிச்ச முகமா அவ புருஷன் கூட சந்தோஷமா வாழனும்.” என நினைத்து சந்தோஷப்பட்டாள்‌. விஜயா ஒரு ஓரமாக அங்கே நின்று கொண்டிருப்பதை கவனித்த ஜானகி, “சம்மந்தி அம்மா அங்க தனியா நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்க? தேனுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும்னு இங்க பக்கத்துல ஒரு கோயில்ல பூஜைக்கு சொல்லி இருக்கேன்.

அவளை கூட்டிட்டு போலாமான்னு பார்த்தேன். இன்னிக்கி பிரதோஷம்ல கோயில் கூட்டமா இருக்கும். நீங்க வரிங்களா? நம்ம ரெண்டு பேரும் போய்ட்டு வந்துடலாம்?” என்று கேட்க, “ம்ம்.. போலாம் சம்மந்தி. எனக்கு இங்க வேற என்ன வேலை இருக்கு?” என்ற விஜயா ஜானகியுடன் கிளம்பி கோவிலுக்கு சென்று விட்டாள்.

அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே வாசலில் பாதுகாப்பிற்காக நின்று கொண்டு இருந்த பாடிகார்டுகள் கையில் ஒரு பெரிய மரப்பெட்டியுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்கள். லிவ்விங் ஏரியாவில் அமர்ந்து மகேஷிடம் மகாலட்சுமியை பற்றி பேசிக் கொண்டிருந்த தேன்மொழி அவர்கள் வருவதை கவனித்து விட்டு எழுந்து நின்றாள்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 124
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi