மஞ்சம் 119

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
மயங்கி விழுந்த தேன்மொழியை ‌ ஆகாஷின் காரில் ஏற்றிக் கொண்ட கிளாரா உதயா மற்றும் லிங்கா, ஆதவனுடன் அருகிலுள்ள மருத்துவமனையை நோக்கி விரைந்தாள். மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் வந்த காரில் இவர்களுடைய காரை பின் தொடர்ந்து சென்றார்கள்.

அடுத்த 20 நிமிடத்தில் அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் தேன்மொழியை குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து அட்மிட் செய்துவிட்டு டாக்டர் வெளியில் வந்து அவளுக்கு என்ன ஆனது என்று சொல்வதற்காக காத்திருந்தார்கள். அதேசமயம் ஜூலியை தூக்கிக் கொண்டு ஒரு மருத்துவமனைக்கு ஆகாஷ் மற்றும் பிரிட்டோ உடன் சென்று இருந்த அர்ஜுன் அவளை அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்துவிட்டு வெளியில் கலவரமான முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.

மீண்டும் ஜூலி தனது வாழ்க்கையில் வந்த பிறகு அவளை வெறும் தொல்லையாகத் தான் நினைத்தான் அர்ஜுன். அந்த நிலையில் தன் உயிரை காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு தியாகத்தை செய்ய அவள் தயாராக இருப்பாள் என்று அவன் துணியும் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஜூலியின் இந்த செயல் அவன் மனதில் அவள் மீதான அபிப்பிராயத்தை தலைகீழாக மாற்றிவிட்டது.

பிரிட்டோ அர்ஜுனின் அருகில் நின்று கொண்டிருக்க, “சாரி டா, உன்னோட மேரேஜ் அன்னைக்காவது உன்ன டிஸ்டர்ப் பண்ணாம ஹேப்பியா வச்சுக்கணும்னு நினைத்தேன். கடைசில லாஸ்ட் மினிட்ல இப்படி ஒரு இன்சிடென்ட் நடந்துருச்சு.” என்று அவனிடம் சொன்னான் அர்ஜுன். அர்ஜுனின் தோள்களில் ஆதரவாக கை போட்ட ஆகாஷ் “அட அத விடுடா. செலிப்ரேஷன் பண்ணனும்னா நம்ம எப்ப வேணாலும் பண்ணிக்கலாம். ஏன் இவங்கள ரெண்டு மாசம் ஹனிமூன் கூட அனுப்பி வைக்கலாம். பட் இந்த இன்சிடென்ட் எப்படி நடந்துச்சுன்னு தான் இப்ப நம்ம ஃபோகஸ் பண்ணனும். எனக்கு என்னமோ இது நேச்சுரலா நடந்த மாதிரி தெரியல.

ஸ்டேஜ்ல எத்தனையோ பேர் பிரிட்டோவையும் கிளாராவையும் பாக்குறதுக்காக வந்துட்டு போயிட்டு இருந்தாங்க.‌ அது எப்படி அர்ஜூன் கரெக்டா நீ அந்த இடத்துக்கு வரும்போது மட்டும் அந்த சாண்டலியர் கீழே விழுகும்? இத யாரோ உன்ன டார்கெட் பண்ணி தான் வேணும்னு பண்ணி இருக்கணும். நம்மளும் ஜூலிக்கு இப்படியானதுனால உடனே இவளை தூக்கிட்டு ஹாஸ்பிடல் கிளம்பி வந்துட்டோம்.

நம்ம ரிட்டன் அங்க போறதுக்குள்ள இருக்கிற எவிடன்ஸ் எல்லாத்தையும் இத பிளான் பண்ணி பண்ணவன் கலச்சிடுவான். அதான் ஜூலிய ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியாச்சே.. நானும், பிரிட்டோவும் இதை பண்ணது யாருன்னு சர்ச்ல போய் இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு வந்துடுறோம். இவளுக்கு கால்ல தானே அடிபட்டு இருக்கு.. அதெல்லாம் பெருசா எதுவும் ஆகாது. நீ இவள பத்தி யோசிச்சு கவலைப்படாத.” என்றான்.

அர்ஜுனிற்க்கும் ஆகாஷ் சொல்வது தான் சரி என்று தோன்றியது. ஆனால் இந்த நேரத்தில் பிரிட்டோவை வேலை பார்க்க மீண்டும் அனுப்புவது அவனுக்கு உள்ளுக்குள் உறுத்தலாக இருந்தாலும், ஜூலியை அங்கே தனியாக விட்டுவிட்டு செல்லவும் அவனுக்கு மனம் வராததால் “ஓகே, நீங்க அங்க போய் பாருங்க. நான் இங்க ஜூலி கூட இருக்கேன். என் கூட ரெண்டு, மூணு பேர் மட்டும் இருந்தா போதும். நீங்க நம்ம ஆளுங்களை கூட்டிட்டு போங்க.” என்று சொல்லி அவர்கள் இருவரையும் ஹாஸ்பிடலில் இருந்து அனுப்பி வைத்து விட்டான் அர்ஜுன்.

அவர்களும் அர்ஜுனின் பாதுகாப்பிற்காக அவனுடன் ஹாஸ்பிடலில் இரண்டு பாடிகார்டுகளை விட்டுவிட்டு இந்த சம்பவத்தை பற்றி விசாரிப்பதற்காக உடனே சர்ச்சுக்கு சென்று விட்டார்கள். அடுத்த 10 நிமிடத்தில் அர்ஜுனிற்க்கு கால் செய்த ஜானகி “அர்ஜுன் நீ ஜூலியை கூட்டிகிட்டு ஹாஸ்பிடல் கிளம்பினதுக்கு அப்புறமா என்ன ஆச்சுன்னு தெரியல திடீர்னு தேன்மொழி மயக்கம் போட்டு விழுந்துட்டா. நாங்க அவளை பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம். இப்ப தான் டாக்டர் அவளை செக் பண்ணிட்டு வந்தாங்க.

அவ இன்னும் கொஞ்ச நேரம் மயக்கத்தில தான் இருப்பாளாம். அவளோட ஹஸ்பண்ட் எங்கன்னு கேக்குறாங்க. உன் கிட்ட ஏதோ பேசணுமாம் உன்ன இங்க வர சொல்றாங்க. ஜூலிய ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டீங்களா? அட்மிட் பண்ணியாச்சுன்னா, ஆகாஷை அவ கூட இருக்க சொல்லிட்டு நீ இங்க கிளம்பி வா.” என்றாள்.

“என்ன மா சொல்றீங்க அவளுக்கு என்ன ஆச்சு இப்போ... அவ நல்லா தானே இருந்தா! நான் ஆகாஷை பிரிட்டோ கூட சர்ச்ச்ல என்ன பிரச்சனைன்னு பாத்துட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வச்சிருக்கேன். இப்ப நீங்க என்ன கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வர சொன்னீங்கன்னா, ஜூலியை இங்க icu வார்டுல தனியா விட்டுட்டு என்னால எப்படி அங்க வர முடியும்?” என்று அர்ஜுன் கேட்க, “நீ என்ன தனியாவா போன? உன் கூட நான் ஆளுங்க வந்தாங்க தானே! நீ முதல்ல இங்க கிளம்பி வந்து தேன்மொழிக்கு என்னன்னு பாரு. நாங்க அவளைப் பத்தி கேட்டாலும் டாக்டர் ஹஸ்பண்ட் கிட்ட தான் சொல்லுவேன்னு சொல்லிட்டு இருக்காங்க. தேன்மொழிக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சுன்னா நாங்க அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவோம்.

அதுவரைக்கும் நீ இங்க வந்து தேன்மொழி கூட இரு. அவளுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு தானே.. நம்ம ஆளுங்க வெளிய இருந்து பார்த்து கிட்டும். நான் லிண்டாவை அங்க அனுப்பி வைக்கிறேன். அந்த ஹாஸ்பிடல் லொகேஷனை அவளுக்கு அனுப்பிடு.” என்றாள் ஜானகி.

“நீங்க என்னமா பேசிட்டு இருக்கீங்க? என்னால தான் அடிபட்டு இப்படி அவ இங்க ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராடிட்டு இருக்கா. தேன்மொழி கூட அங்க அத்தனை பேர் இருக்கீங்க. இங்க ஜூலி கூட நான் மட்டும் தான் இருக்கேன். எப்படி என்னால இவளை விட்டுட்டு வர முடியும்? நீங்க டாக்டர் கிட்ட ஃபோனை குடுங்க.

அவளுக்கு என்னென்னனு நான் கேட்கிறேன். எனக்கு தெரிஞ்சு பதட்டத்துல தான் அவ மயக்கம் போட்டு விழுந்திருப்பா. பெருசா வேற ஒன்னும் இருக்காது. நீங்க தேன்மொழியை டிஸ்டார்ஜ் பண்ணி டாக்டர் சொன்னதுக்கு அப்புறமா வீட்டு கூட்டிட்டு போங்க. இங்க ஜூலிக்கு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு நான் கிளம்பி வரும்போது லிண்டாவ வேணா இங்க வந்து இருந்து இவளை பார்த்து சொல்லுங்க.” என்று அர்ஜுன் சொல்ல,

“இவன் பிடிவாதம் பிடிச்சா யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டான்.” என்று நினைத்த ஜானகி “சரி இரு டா, நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வந்து உனக்கு கால் பண்றேன். நீயே உன் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சுன்னு டாக்டர் கிட்ட கேட்டுக்கோ.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்து விட்டாள்.

ஜூலிக்கு ட்ரீட்மென்ட் பார்த்துக் கொண்டிருக்கும் டாக்டரும் இன்னும் அவளுக்கு என்ன ஆனது என்று வெளியில் வந்து எதுவும் சொல்லவில்லை. அங்கே தேன்மொழிக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை. அதனால் சோகமாக வெயிட்டிங் சேரில் அமர்ந்து இருந்த அர்ஜூன் சில நிமிடங்களுக்கு முன்பு சர்ச்சில் நடந்துவற்றை ஞாபகப்படுத்தி பார்த்தான்.

“முதல்ல தேன்மொழி தான் என் பேரை சொல்லி கத்துனா. அப்ப ஜூலிக்கு முன்னாடியே அது என் மேல வந்து விழுக போறதை தேன்மொழி தான் பார்த்திருக்கா. அவ போட்ட சத்தத்தை வச்சு தான் பக்கத்துல இருந்த ஜூலி என்னை காப்பாத்தி இருக்கா. ஒருவேளை என் கிட்ட கோச்சுக்கிட்டு தேனு அவங்க அம்மாவ பாக்க போகாம இருந்திருந்தா, ஜூலி என்ன பாக்க வந்திருக்க மாட்டா. அப்ப இப்ப ஜூலிக்கு ஆனது தென்மொழிக்கு நடந்திருக்கும்.” என்று நினைக்கும் போதே அர்ஜுனிற்க்கு பயமாக இருந்தது.

அவனுக்கு கொஞ்சமும் பிடிக்காத ஜூலியை இந்த நிலையில் பார்க்கவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது. இதில் தேன்மொழிக்கு இப்படி நடந்திருந்தால், நான் என்ன ஆவேனோ என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அதனால் “என்னை மட்டும் இல்ல, தேன் மொழியையும் இப்ப ஜூலி தான் காப்பாத்தி இருக்கா. அதுக்காகவாது இனிமே நான் இவள நல்லா பாத்துக்கணும்.” என்று நினைத்தான் அர்ஜுன்.

அப்போது அவனுக்கு ஜானகியின் நம்பரில் இருந்து கால் வர, அதை அட்டென்ட் செய்தான் அர்ஜுன். “நான் இப்ப டாக்டரை பாக்க லிண்டாவை கூட்டிக்கிட்டு அவங்களோட கேபினுக்கு வந்து இருக்கேன். மத்தவங்க எல்லாரும் தேன்மொழி கூட இருக்காங்க. ஃபோனை நான் ஸ்பீக்கர்ல போடறேன் அர்ஜூன். நீயே டாக்டர் கிட்ட பேசு.” என்று சொல்லிவிட்டு ஜானகி ஃபோனை ஸ்பீக்கரில் போட்டாள்.

“hello doctor I am Arjun Pratap. தேன்மொழியோட ஹஸ்பண்ட். அவங்களுக்கு என்ன ஆச்சு? திடீர்னு அவங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு இப்ப தான் என் மதர் எனக்கு கால் பண்ணாங்க. ஆக்சுவலி நான் இப்ப எமர்ஜென்சி சுச்சுவேஷன்ல இருக்கேன். என் ஃப்ரெண்ட் ஒருதங்களுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு. அவங்கள ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு ஐசியூ வார்டுக்கு வெளியில் நின்னுட்டு இருக்கேன். இப்ப என்னால இவங்கள விட்டுட்டு அங்க கிளம்பி வர முடியாது.

ப்ளீஸ் எதுவா இருந்தாலும் நீங்க ஃபோன்லயே மறைக்காம சொல்லுங்க. எங்க ஃபேமில இருக்கிற எல்லாரும் அங்க தான் இருக்காங்க. அவங்க என் wife-ஐ டேக் கேர் பண்ணிப்பாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு நானும் நேர்ல வந்து ஹாஸ்பிடல்ல தேன்மொழியை பார்க்கிறேன்.” ‌ என்று அர்ஜுன் கேட்க,

“ஹலோ மிஸ்டர் அர்ஜுன்! தேன்மொழியோட கண்டிஷனைப் பத்தி சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லணும்னு நினைக்கிறேன். She is pregnant. உங்களோட பேபி இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சிருக்கு. முழுசா ரெண்டு மாசம் கூட இன்னும் ஆகல. ஐ திங்க் இன்னும் ‌ உங்க வைஃப்-க்கே இன்னும் அவங்க பிரக்னண்டா இருக்கிறது தெரிஞ்சிருக்காது.

அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. அதுவும் இல்லாம கொஞ்ச நாளாவே ஸ்ட்ரெஸ் அண்ட் டிப்ரஷன்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன். அவங்க இப்படியே இருந்தா, அது அவங்களுக்கும் நல்லதில்ல. உங்க குழந்தைக்கும் நல்லது இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பொண்ணோட சந்தோஷம் மோஸ்ட்லி அவளோட ஹஸ்பண்டை தான் depend பண்ணி இருக்கு. அதான் முதல்ல நான் உங்க கிட்ட டைரக்டா இத பத்தி கிளியரா பேசணும்னு சொன்னேன்.” என்றாள் டாக்டர்.

“இந்த நியூஸ்காக தான் நான் ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் டாக்டர். பட் இப்படி ஒரு சிச்சுவேஷன்ல இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.” என்று அதிர்ச்சி விலகாமல் அர்ஜுன் சொல்ல, சந்தோஷத்தில் உள்ளுக்குள் துள்ளி குதித்த ஜானகி “அவன் பாத்துக்கிறானோ இல்லையோ.. என் மருமகள நான் நல்லா பார்த்துக்குவேன் டாக்டர். இது என்னோட பல நாள் கனவு. தேன்மொழியை எப்படி பாத்துக்கணும்னு நீங்க சொல்லுங்க.” என்று ஆர்வமுடன் கேட்டாள்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 119
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi