மஞ்சம்-117

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ஜனனி தன் கணவன் சந்தோஷுடம் “இவங்கள பாத்ததுக்கு அப்புறமா எனக்கும் இந்த மாதிரி கிறிஸ்டியன் வெட்டிங் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு.” என்று கேட்க, அவளைப் பார்த்து குறும்பாக சிரித்த சந்தோஷ் “நான் உன்னை எதுக்காக லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கூட தெரியாம இன்னொரு தடவை என்னையே கல்யாணம் பண்ணிக்கணும்னு முட்டாள் தனமா ஆசைப்படுறியே ஜனனி.. உன்ன மாதிரி ஒரு இடியட்டை நான் பார்த்ததே இல்ல. இப்ப வரைக்கும் நான் உன் கூட இருக்கிறதுக்கும், உன்ன லவ் பண்ற மாதிரி நடிக்கிறதுக்கும் ஒரே ஒரு ரீசன் என்னோட குழந்தைங்க மட்டும் தான்.

நான் அப்பா, அம்மா இல்லாம யாரோட அன்பும் கிடைக்காம கஷ்டப்பட்டு வாழ்ந்த மாதிரி அவங்களும் இருந்திரக் கூடாதுன்னு தான் இப்ப வரைக்கும் டைரக்டா உன்னையும் உன் குடும்பத்தையும் எதுவும் பண்ணாம போனா போகட்டும்னு விட்டு வச்சிருக்கேன். பட் அதுக்காக நான் இப்படியே சைலன்ட்டா எப்பயும் இருப்பேன்னு அர்த்தம் இல்ல. வெளியில இருந்து உங்களுக்கு என்னென்ன கொடைச்சல் கொடுக்க முடியுமோ அது எல்லாத்தையும் கொடுப்பேன். உங்கள ஹாப்பியா இருக்கவே விட மாட்டேன்.” என்று தனக்குள் அவளிடம் சொல்லிக் கொண்டான்.

அவன் அமைதியாக இருந்ததால் “என்ன நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.. நீ சைலன்ட்டா இருக்க?” என்று ஜனனி கேட்க, “இல்ல பேபி.. உன் ஆசைய எப்படி நிறைவேற்றலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தேன். கிறிஸ்டியன் வெட்டிங் தானே.. தாராளமா பண்ணிக்கலாம்.” என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து புன்னகைத்தான் சந்தோஷ்.

“you may kiss the bride!” என்று அப்போது ஃபாதர் மைக்கில் பிரிட்டோவை பார்த்து சொல்ல, கிளாராவின் இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்தான் பிரிட்டோ. அவள் அவன் மீது மோதி நிற்க, அனைவரின் முன்னிலையிலும் தன் மனைவி கிளாராவின் இதழ்களில் தனது இதழ்களை பொருத்தினான் அவன்.

அதை பார்த்து சந்தோஷப்பட்ட ஜனனி கைத்தட்டி “congrats britto and Clara!” என்று உற்சாகமான குரலில் சொல்ல, அங்கே இருந்த மற்றவர்களும் கூட கைத்தட்டி ஆரவாரம் செய்து புதுமண தம்பதிகளை வாழ்த்த தொடங்கினார்கள். முதலில் தேன்மொழியுடன் ஜோடியாக மேடைக்கு சென்ற அர்ஜுன் “congratulations my dear brother and sister!” என்று சொல்லிவிட்டு பல டாக்குமென்ட்கள் அடங்கிய ஃபைலை அவர்களிடம் கொடுத்தான்.

“what is this chief?” என்று கோரசாக கிளாரா, பிரிட்டோ இருவரும் சொல்ல, “நீங்களே ஓப்பன் பண்ணி பாருங்க. இது தான் நாங்க உங்களுக்கு குடுக்குற மேரேஜ் கிஃப்ட்.‌” என்று தேன்மொழி உற்சாகமான குரலில் சொன்னாள். இவர்கள் இவ்வளவு பெரிய ஃபைலில் இத்தனை டாக்குமெண்ட்டுகளுடன் தங்களுக்கு என்ன கிஃப்ட் கொடுத்திருப்பார்கள்? என்று நினைத்து ஆச்சரியப்பட்ட பிரிட்டோ கிளாராவுடன் சேர்ந்து அதை திறந்து பார்த்தான்.‌

அதில் தெள்ளத்தெளிவாக அர்ஜுனின் மொத்த சொத்துக்களில் இருந்து கிளாரா பிரிட்டோ இருவருக்கும் ஒரு சதவிகிதம் சொத்துக்களை உயில் எழுதிக் கொடுத்திருந்தான் அர்ஜுன். அதுமட்டுமில்லாமல், அர்ஜுனின் சில கம்பெனிகளில் கிளாரா மற்றும் பிரிட்டோவின் பெயரில் அவன் கம்பெனிக்கு ஏற்ப குறிப்பிட்ட பர்சன்டேஜில் ஷேர்ஸை எழுதி வைத்திருந்தான். ஒரு பர்சன்டேஜ் ப்ராப்பர்ட்டீஸ், மற்றும் சில பங்குகள் என்று பொதுவாக நாம் கேட்கும் போது அது ஒருவேளை குறைவாக தெரியலாம்.

ஆனால் அர்ஜுனின் பல்லாயிரம் கோடி சொத்து மதிப்பில் ஒரு சதவிகிதம் என்பது குறைந்தது 100 கோடியாவது வரும். அவனுக்கு அசிஸ்டெண்டாக வேலை பார்த்திருந்ததால் பிரிட்டோவை விட அந்த டாக்குமெண்டின் மதிப்பை பற்றி வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தன் கையில் உள்ளவற்றை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருந்த பிரிட்டோ “என்ன chief பண்ணி வச்சிருக்கீங்க! ஆல்ரெடி நாங்க பாக்குற வேலைக்கு குடுக்கிறத விட அதிகமா நீங்க எங்களுக்கு நிறைய செஞ்சுட்டீங்க. இது ரொம்ப அதிகம். என்னால இத வாங்கிக்க முடியாது.” என்றான்.

அர்ஜுனிற்க்கு தங்கள் மீது இருக்கும் அன்பை கண்டு நெகிழ்ந்த கிளாரா, “நீங்க என்னையும் பிரிட்டோவையும் எப்பயும் உங்க ஃபேமிலில ஒருத்தர் மாதிரி தான் ட்ரீட் பண்ணி இருக்கீங்க. அதுக்கு ஈடா வேற எதுவுமே வர முடியாது chief. இப்படி இவ்ளோ பெரிய கிஃப்ட்-ஐ கொடுத்து எங்கள சங்கடப்படுத்தாதீங்க. பிரிட்டோ சொன்ன மாதிரி கண்டிப்பா எங்களால இதை வாங்கிக்க முடியாது.” என்றாள்.

“ஒருவேளை நீங்க இத வேண்டாம்னு சொல்லிட்டா, உங்களோட ஜாபை resign பண்ணிட்டு நீங்க பெர்மனெண்டா இந்த அர்ஜூருக்கு பாய் பாய் சொல்ல வேண்டியது இருக்கும். அப்புறம் உங்க இஷ்டம். இத பத்தி தெளிவா அந்த டாக்குமெண்ட்லயே போட்டு இருக்கு. ஃப்ரீ ஆகிட்டு நல்லா படிச்சு பாருங்க.” என்ற அர்ஜுன் “மத்தவங்க எல்லாரும் இவங்களுக்கு கிஃப்ட் கொடுக்க லைன்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீ வா ஹனி பேபி, நம்ம போகலாம்.” என்று சொல்லி தேன்மொழியின் கையைப் பிடித்து அழைத்து கொண்டு மேடையில் இருந்து கீழ இறங்கினான்.

அவன் தங்களை இப்படி ஒரு தர்ம சங்கடமான நிலையில் லாக் செய்து விடுவான் என்று எதிர்பார்த்து இருக்காத கிளாராவும், பிரிட்டோவும் கண்கள் கலங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தங்களின் மீது இத்தனை அன்பு காட்டும் இந்த குடும்பத்திற்காக எத்தனை வேண்டுமானாலும் செய்யலாம். தாராளமாக தங்கள் உயிரைக் கூட தூக்கிக் கொடுக்கலாம் என்று அவர்கள் இருவரின் மனதிலும் தோன்றியது.

அடுத்து பிரசாத் ஜானகி, ஆகாஷ் லிண்டா, சந்தோஷ் ஜனனி என அனைவரும் அவர்களுக்கு கிஃப்ட் கொடுத்துவிட்டு சென்றார்கள். ஆருத்ராவுடன் லாஸ்ட் ஆக மேடைக்குச் சென்ற சித்தார்த் ஒரு பாக்ஸை பிரிட்டோவிடம் கொடுத்தான். இந்த குழந்தைகள் கூட தங்களுக்காக கிஃப்ட் கொண்டு வந்திருக்கிறார்களா என்று நினைத்து ஆச்சரியமாக அவர்களைப் பார்த்த கிளாரா, “பார்றா.. நீங்களும் மறக்காம எங்களுக்கு கிஃப்ட் கொண்டு வந்து இருக்கீங்களா? இதுல என்ன இருக்கு?” என்று ஆர்வமுடன் கேட்டாள்.

“உங்களுக்கு ரொம்ப பிடிச்ச கிஃப்ட் தான் ஆன்ட்டி.” என்று ஆருத்ரா சொல்ல, “எனக்கு பிடிச்சதா? அப்படி இதுல என்ன இருக்கு? பாக்ஸ் கொஞ்சம் வெயிட்டா இருக்கே!” என்று கேட்டாள் கிளாரா. “உங்க ரெண்டு பேருக்கும் கேம் விளையாடுறது ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கேம் விளையாடும்போது தானே லவ் பண்ண ஆரம்பிச்சீங்க.. அதான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நாங்களே நம்மளோட கேமிங் டீமை வச்சு இந்த கேமை எல்லாம் டிசைன் பண்ணும். மம்மி தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணாங்க.

நாங்க விளையாடி பார்த்தோம். கேம் ரொம்ப சூப்பரா இருக்கு. பட் எங்களுக்கு விளையாட கொஞ்சம் கஷ்டமா இருக்கு. உங்களுக்கு ஈசியா தான் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.” என்றான் சித்தார்த். “வாவ்.. இன்ட்ரஸ்டிங். இப்படி ஒரு கிஃப்ட் எங்களுக்கு கிடைக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல. கண்டிப்பா இந்த கேமை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடிட்டு எப்படி இருக்குன்னு உன் கிட்ட சொல்றோம் சித்தார்த்.” என்று பிரிட்டோ சொல்ல, “ஆமாம், இத நம்ம எல்லாரும் சேர்ந்தே விளையாடலாம்.” என்றாள்.

அதைக் கேட்டவுடன் குழந்தைகள் இருவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அனைத்தையும் தேன்மொழியுடன் ஸ்டேஜுன் ஒரே ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன், “வர வர நீங்களும் எனக்கு தெரியாம நிறைய பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போலையே மேடம்!” என்று நக்கலாக கேட்க, உடனே திரும்பி அவனை முறைத்து பார்த்த தேன்மொழி “உங்க அளவுக்கு எல்லாம் என்னால பண்ண முடியாது சார். ஏதோ குழந்தைங்க சந்தோஷத்துக்காக பண்ணேன் அவ்ளோ தான். மத்தபடி எல்லாத்தையும் மறச்சு பண்ற புத்தி எல்லாம் எனக்கு வராது..” என்று குத்தலாக பதில் சொன்னாள். ‌

அவள் பேசிய வார்த்தை சுருக்கென்று இருந்ததால் அர்ஜுனின் முகம் வாடிவிட்டது. அதனால் பேசுவதையும் பேசிவிட்டு இப்போது வருத்தப்பட்ட தேன்மொழி அவன் அருகில் நிற்க முடியாமல் சென்று விஜயாவின் அருகில் நின்று கொண்டாள். “நம்ம குடும்பத்தையே பாதுகாக்க இந்த புள்ளைங்க ரெண்டும் இராப்பகலா உழைக்கிதுங்க. இவங்க கல்யாணத்துக்கு நானும் ஏதாவது கிஃப்ட் குடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா நான் என்ன சம்பாதிக்கிறனா ஒன்னா.. இந்த வயசான காலத்துல என்னால என்ன கொடுக்க முடியும்?” என்று விஜயா சோகமாக சொல்ல, “அட ஏன் மா இப்படி எல்லாம் நினைக்கிறீங்க? எல்லாரும் அவங்களால என்ன முடியுமோ அதை தான் குடுக்கிறாங்க. நீங்க உங்களால என்ன முடியுமோ அதை குடுங்க. நான் தான் அப்பப்ப உங்களுக்கு செலவுக்கு காசு கொடுக்கிறனே! அதுல உங்களால என்ன முடியுமோ வாங்கி கொடுங்க. அவங்களும் சந்தோஷமா வாங்கிப்பாங்க. கிளாரா, பிரிட்டோ ரெண்டு பேருக்குமே அப்பா அம்மா இல்ல.

அவங்க ஏதோ அனாதை ஆசிரமத்துல தான் வாழ்ந்திருக்காங்க. அப்புறமா எப்படியோ படிச்சு முடிச்சு ட்ரெய்னிங்காக அர்ஜுனோட அகாடமில ஜாயின் பண்ணி இருக்காங்க. அங்க தான் லவ் பண்ணி இப்ப இவ்வளவு தூரம் வந்திருக்காங்க. அவங்களுக்கு ஃபேமிலி சொல்லிக்க நம்ப மட்டும் தான் அம்மா இருக்கோம். சோ‌ நம்ம குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு நம்ம என்ன வேணாலும் கொடுக்கலாம். யாரும் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க.” என்றாள் தேன்மொழி.

அர்ஜுன் ஓரமாக நின்று தேன்மொழியை பற்றி யோசித்து கொண்டிருந்தான். அவனுக்கு தான் மீண்டும் மீண்டும் தேன்மொழியை காயப்படுத்திக் கொண்டே இருப்பதாக நினைக்கும்போது குற்ற உணர்ச்சியாக இருந்தது. அவனது வாடிய முகத்தையும், அவன் அனைவரையும் விட்டு விலகி நிற்பதையும் கவனித்த ஜூலி “இந்த ஜூலி இங்க இருக்கும்போது நீ லோன்லியா ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்ல அர்ஜுன்.” என்று அவன் அருகில் சென்று சொன்னாள்.

அவள் முகத்தை பார்க்கவே அவனுக்கு கடுப்பாக இருந்தது. “ச்ச்.. இப்ப உன்னை யார் இங்க வர சொன்னா? வயசு ஆக ஆக உனக்கு அறிவு மங்கிக்கிட்டே போகுதா என்ன? உன்னை யாருமே இன்வைட் பண்ணாதப்ப எப்படி அடுத்தவங்க விட்டு மேரேஜ்க்கு கூச்சமே இல்லாம வர நீ?” என்று அர்ஜுன் கோபமாக கேட்க, “நீ இப்படி எல்லாம் என்னை ஹர்ட் பண்ற மாதிரி பேசி என்ன இங்க இருந்து துரத்தி விட்டுடலாம்னு நினைக்கிறியா அர்ஜூன்? அவ்ளோ ஈஸியா எல்லாம் நான் இங்க இருந்து போக மாட்டேன். இந்த தடவை நான் உனக்காக தான் வந்து இருக்கேன். எனக்கு எந்த அளவுக்கு உன்னை பிடிக்கும்னு உனக்கு ப்ரூவ் பண்ணாம நான் இங்க இருந்து போக மாட்டேன். இந்த so called லோ கிளாஸ் பொண்ணை விட ஜூலி பெட்டர்ன்னு உனக்கு புரியனும். அதுக்குத் தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” என்றாள் ஜூலி.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-117
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi