மஞ்சம்-112

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
“you are such a Charismatic figure!” என்ற இளம் பெண் ஒருத்தி அனைவரின் முன்னிலையிலும் அர்ஜுனை கட்டி அனைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். “இப்ப எதுக்கு தேவையில்லாம இவ இங்க வந்து சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கா?” என்று நினைத்த அர்ஜுன் அவனை சுற்றி ஏராளமானவர்கள் இருப்பதால் அவளிடம் கோபப்பட முடியாததால் நாசுக்காக லேசாக சிரித்து அவளை தன்னை விட்டு விலக்கி நிறுத்தி “உன்னை இந்த டைம்ல நான் மீட் பண்ணுவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. It's a shock surprise.” என்றான்.

ஆதவன் மற்றும் உதயாவிடம் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்த தேன்மொழி நடக்கும் அனைத்தையும் கவனித்தாள். அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம் தெரிந்தது. உடனே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த உதயா “என்ன தேன்மொழி உன் ஹஸ்பண்ட் எல்லாரும் முன்னாடியும் ஒரு பொண்ணு கூட இப்படி எல்லாம் பிஹேவ் பண்ணிட்டு இருக்காரு! இவங்க எல்லாரும் பாரின் கல்ச்சரை பாலோ பண்றவங்களா இருந்தாலும் இது இந்தியா தானே! பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?

மீடியாவுல இருந்து கூட இந்த ஃபங்ஷனை கவர் பண்றதுக்கு நிறைய பேர் வந்திருக்காங்க. அவங்க கண்ணுல இது பட்டுச்சுன்னா என்னென்ன கதை கட்டி விடுவாங்களோ தெரியல! சும்மா friendly-ஆ formal-ஆ பேருக்கு கட்டிப்பிடிக்கிற வரைக்கும் ஓகே தான். ஆனா அந்த பொண்ணு கிஸ் பண்றது எல்லாம் ஓவரா இல்லையா? உன் ஹஸ்பண்டும் அவளை எதுவுமே சொல்லல!” என்று அவளை ஏற்றி விட்டான்.‌

அங்கே நின்று கொண்டிருந்த தேன்மொழி, ஆதவன் இருவரின் மனதிற்குள்ளும் அதே கேள்வி தான் ஓடிக் கொண்டிருந்தது. இருப்பினும் அவசரப்பட்டு தன் அக்கா ‌ மாமாவிடம் கோபப்பட்டு விடக் கூடாது என்று நினைத்த ஆதவன், “இது தப்பு தான். ஆனா அதுக்காக நம்ம மாமா மேல குறை சொல்ல முடியாதே அக்கா! அவர் பாட்டுக்கு பக்கத்துல இருக்குற இன்னொருத்தர் கூட பேசிட்டு தான் இருந்தாரு. திடீர்னு அங்க வந்த அந்த பொண்ணு தான் அவர் கிட்ட போய் இப்படி க்ளோசா நின்னு ‌என்னென்னமோ பண்ணிட்டு இருக்காங்க. பாவம் மாமாவும் எல்லாரும் இருக்கறதுனால எதுவும் பண்ண முடியாம சைலன்டா இருக்காருன்னு நினைக்கிறேன். மாமாவும் சரி, அவர் கூட பழகுறவங்களும் சரி எல்லாரும் பெரிய ஆளுங்க. கார்ப்பரேட் கல்சர்ல இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இதுக்காக எல்லாம் மாமா மேல நீ கோவப்பற்றாத அக்கா.” என்று அர்ஜுனின் மீது இருந்த நம்பிக்கையில் சொன்னான்.

எதுவாக இருந்தாலும் அர்ஜுனிடம் தனக்கு தீர்க்க வேண்டியது ஏராளமாக இருப்பதால் அனைத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த தேன்மொழி, “இதுக்காக எல்லாம் நான் எதுக்கு உங்க மாமா கூட சண்டை போட போறேன் ஆதி? மத்தவங்கள பத்தி எல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்ல. யார் எப்படி இருந்தாலும், என் ஹஸ்பண்ட்டை பத்தி எனக்கு தெரியும். அவர் நல்லவர். இந்த பொண்ணு அவர் கிட்ட போய் வழிஞ்சாலும், அவர் அவளை கண்டுக்க மாட்டாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல பூஜை ஸ்டார்ட் ஆக போகுது. நீங்க உங்களோட டேபிள்ல போய் உட்காருங்க. ஆன்ட்டி கூப்பிட்டாங்க நான் போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்.” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

ஆனால் அவளுடைய பார்வை அர்ஜுனையும் அந்த பெண்ணையும் கூர்மையாக பார்த்துக் கொண்டே இருந்தது. அதை கவனித்த உதயா “எங்க கிட்ட உன் ஹஸ்பேண்ட்டை விட்டுக் குடுக்க கூடாதுன்னு உன் வாய் மட்டும் தான் அவருக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசுது. பட் உன் பிஹேவியர் அப்படி இல்லையே தேனு! எந்த பொண்ணுக்கு தான் அவ புருஷன் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்தா பிடிக்கும்? இந்த பணக்காரங்க புத்தியே இது தான். அது உனக்கு என்னைக்கு புரிய போகுதோ தெரியல. அது புரியும் போது கண்டிப்பா இந்த அர்ஜுன் வேணும்னு நீ நினைக்க மாட்ட. அது மட்டும் என்னால sure-ஆ சொல்ல முடியும்.” என்று நினைத்து தனக்கு சிரித்துக் கொண்டாள்.

ஜானகியை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த தேன்மொழி பரபரப்பாக அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த பிரிட்டோவை “அண்ணா!” என்று அழைத்தாள். அவளது குரல் கேட்டு அந்த பக்கம் திரும்பிய பிரிட்டோ அவள் தன்னைத் தான் அப்படி அழைத்தாளா? என்று ஆச்சரியமாக பார்த்தான். “நான் உங்களை தான் கூப்பிட்டேன் அண்ணா. ஏன் அப்படி பாக்குறீங்க? நான் உங்களை அண்ணன்னு கூப்பிடக் கூடாதா?” என்று தேன்மொழி கேட்க, “இல்ல.. அப்படி இல்ல. என்னன்னு சொல்லுங்க. உங்களுக்கு ஏதாவது வேணுமா?” என்று அப்போதும் மரியாதையுடனே கேட்டான் பிரிட்டோ.

அர்ஜுனுடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணை கை காட்டி “அந்த பொண்ணு யாரு? அர்ஜுனுக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்க, “இவங்க எங்க இங்க வந்தாங்க!” என்பதைப் போல அந்த பெண்ணை ஆச்சரியமாக பார்த்தான் பரிட்டோ. அவனது பார்வையை வைத்து அந்த பெண்ணை பற்றி அவனுக்கு தெரியும் என்று புரிந்து கொண்ட தேன்மொழி “அர்ஜுன பத்தி என்ன விட அதிகமா உங்களுக்கு நல்லா தெரியும்னு எனக்கு தெரியும். சோ இந்த பொண்ணை பத்தி உங்களுக்கு தெரியாம இருக்க சான்ஸ் இல்ல. அவங்க யாருன்னு மறைக்காம சொல்லுங்க.” என்று பிரிட்டோவிடம் கேட்டாள்.

அர்ஜுன் மற்றும் தேன்மொழிக்கு நடுவில் எப்போதும் தன்னால் ஒரு பிரச்சினை வந்து விடக் கூடாது என்று தெளிவாக இருந்த பிரிட்டோ “அவங்க பேரு ஜூலி. அவங்களும் நம்ம கம்பெனியில ஷேர் ஹோல்டரா இருக்காங்க. அதனால தான் இன்னைக்கு பங்க்ஷனுக்கு அட்மின் டீம்ல இருந்து அவங்களை இன்வைட் பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். இவங்களும் ரஷ்யால தான் இருக்காங்க. எப்ப இந்தியா வந்தாங்கன்னு தெரியல. நானே ரொம்ப வருஷம் கழிச்சு அவங்கள இப்ப தான் பார்க்கிறேன்.” என்று அவள் கேட்ட கேள்விக்கு தேவையானவற்றை மட்டும் பதிலாக சொன்னான்.

பிரிட்டோ பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை தேன்மொழிக்கு இருந்ததால் “ஓகே அண்ணா, தேங்க்ஸ். நான் அந்த பொண்ண பத்தி கேட்டதா அவர் கிட்ட சொல்லாதீங்க. நான் சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.” என்று சொல்லிவிட்டு பூஜை நடக்கும் இடத்திற்கு சென்றாள் தேன்மொழி.

“இந்த ஜூலி ஜாலியா இருந்த எங்க சீஃப் லைஃப ஆல்ரெடி காலி பண்ணது பத்தாதுன்னு மறுபடியும் எதுக்கு திரும்ப வந்திருக்காங்களோ தெரியல! இவங்களால சீஃப்-க்கும் தேன்மொழி மேடம்க்கும் நடுவுல எந்த பிராப்ளமும் வராம இருந்தா சரி தான்.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட பிரிட்டோ தன்னுடைய வேலைகளை பார்ப்பதற்காக சென்று விட்டான்.

கிரகப்பிரவேச பூஜை நடக்கவிருப்பதால் ஹாலின் மையப்பகுதியில் ஒரு தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் ஐயர் யாகம் வளர்த்த தொடங்கி இருக்க, பிரசாத் இன்னும் இந்தியா வந்து சேர்ந்திருக்காததால் “அர்ஜுனை சீக்கிரம் போய் வேட்டி சட்டை போட்டுட்டு ரெடியாகி வர சொல்லு. நீங்க ரெண்டு பேரும் தான் ஜோடியா பூஜைல உட்காரனும்.” என்று ஜானகி தேன்மொழியை அழைத்துச் சொன்னாள்.

“ஆனா.. அவர் பிசியா இருக்காரே அத்தை அவர் போய் எப்படி கூப்பிடுறது? இந்த மாதிரி முக்கியமான பூஜையை எல்லாம் வீட்ல இருக்குற பெரியவங்க தானே பண்ணுவாங்க! பேசாம நீங்களும் மாமாவுமே இத பண்ணிடுங்க. இன்னும் அவர் வரலையா?” என்று தேன்மொழி கேட்க, “அட.. ரஷ்யால இப்ப கண்டிஷன் சுத்தமா சரி இல்ல. நேச்சுரல் டிசாஸ்டர் அடிக்கடி வருது. அதனால அவரை ரஷ்யா போக வேணாம்னு இந்தியா வர சொல்லிட்டேன். அவர் இங்க தான் வந்துட்டு இருக்காரு. ஆனா வர டைம் ஆகும். அவர் வரும்போது வரட்டும் மா.

இந்த வீட்டை என் பையன் உனக்காக வாங்கி இருக்கான். கல்யாணத்துக்கு அப்புறமா நீயும் அவனும் முதல் தடவையா இப்படி ஒரு பூஜைல கலந்துக்கறதுக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு. இதுல நீங்க உக்காந்து செய்றது தான் கரெக்ட்டா இருக்கும்.” என்றாள் ஜானகி. “இல்ல அத்தை.. நீங்க இருக்கும் போது நாங்க போய் எப்படி பூஜைல உட்கார முடியும்? அதெல்லாம் நல்லா இருக்காது.” என்று தேன்மொழி முதலில் இருந்து ஆரம்பிக்க, “அதெல்லாம் என் பையனையும் மருமகனையும் ஜோடியா பாக்குறதுக்கு நல்லா தான் இருக்கும். நானும் உங்க மாமாவும் எத்தனையோ பாத்துட்டோம். நீதான் இந்த வீட்டுக்கு புதுசா கல்யாணம் பண்ணி வந்திருக்க மா. உன்ன இந்த மாதிரி பூஜை எல்லாம் பண்ண வச்சு பார்த்து சந்தோஷப்படணும்னு இந்த அத்தை ஆசைப்படுறேன். எனக்காக பண்ண மாட்டியா நீ?” என்று கேட்டு அவளை லாக் செய்தாள் ஜானகி.

பூஜைக்கும் நேரம் ஆகிக் கொண்டே செல்வதால் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று நினைத்த தேன்மொழி “சரிங்க அத்தை, நான் போய் அவரை சீக்கிரம் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு அர்ஜூனை காண சென்றாள். இன்னும் அவனை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு ஜூலி அவனிடம் பேசிக் கொண்டு தான் இருந்தாள். அவர்கள் இருவரும் சிரித்து சிரித்து பேசுவதை பார்க்கவே தேன்மொழிக்கு பற்றி கொண்டு வந்தது.

இருப்பினும் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு அவர்கள் அருகில் சென்று “excuse me!” என்றாள் மரியாதை நிமித்தமாக. அவள் குரலைக் கேட்டவுடன் அர்ஜுன் திரும்பி பார்க்க, “நீங்களும் நானும் சேர்ந்து தான் பூஜை பண்ணனுமாம். அத்தை உங்கள வேட்டி சட்டை போட்டுக்கிட்டு ரெடியாகி வர சொன்னாங்க. எல்லாமே நம்ம ரூம்ல ரெடியா இருக்குனு உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க.” என்றாள்.

“ஜூலிய இங்க இருந்து பேக்கப் பண்ணி அனுப்புற வரைக்கும் அவள நம்ம ஹனி பேபி கிட்ட பேசவே விடக் கூடாது.” என்று நினைத்த அர்ஜுன், “ஓகே பேபி, நீ போ. நான் கிளம்பி வரேன்.” ‌ என்றான். அதற்கு எந்த பதிலும் பேசாமல் இப்படி வீட்டு கிரகப்பிரவேச பூஜைக்கு வரும்போது ஏதோ பார்ட்டிக்கு வருவதைப் போல ஸ்டைலாக தனது அங்கு வளைவுகளை காட்டிக் கொண்டு ஒரு கருப்பு நிற ஆடையில் வந்திருக்கிறாளே இவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது? என்று யோசித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள் தேன்மொழி.

“என்ன அர்ஜுன்.. நான் உன்னோட கரண்ட் வைஃப் கிட்ட நம்மள பத்தி எதுவும் சொல்லிட கூடாதுன்னு அவங்கள நிக்க விடாம உடனே அனுப்பி விட்டுட்ட போல!” என்று கிண்டலாக ஜூலி அவனை பார்த்து கேட்க, “சேச்சே.. சொல்றதுக்கு உனக்கும் எனக்கும் நடுவுல அப்படி என்ன இருக்கு? பங்ஷன் டைம்ல அவளுக்கு வர்க் நிறைய இருக்கும். குழந்தைகளை வேற பாத்துக்கணும். அதான் அவளை அனுப்பி வச்சேன்.” என்று பதிலுக்கு அவளிடம் சொன்னான் அர்ஜுன்.‌ “இப்ப இல்லாம இருக்கலாம் அர்ஜுன். பட் இதுக்கு முன்னாடி இருந்தது இல்லைன்னு ஆகிறாதுல்ல?” என்று தன்னுடைய தேன் ஒழுகும் குரலில் கேட்ட ஜூலி அவனுடைய சட்டை காலரை ஒரு நளினத்துடன் பிடித்தாள்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-112
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi