அர்ஜுனிடம் பேசிவிட்டு தனது ரூமில் தனியாக அமர்ந்து இருந்த தேன்மொழி அவர்களது அருகில் உள்ள அவர்கள் இருவரின் திருமண புகைப்படத்தை பார்த்தாள். திடீரென அவளுக்கு இப்படி ஒரு திருமணம் நடந்தது, அவள் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இந்த சிறுவயதில் இப்படி ஒரு வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் எனக்கு இப்போது நினைத்தாலும் அவளுக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.
அந்த ஃபோட்டோவின் அருகில் சென்று அதில் இருந்த அர்ஜுனின் உருவத்தை தொட்டுப் பார்த்த தேன்மொழி “உங்கள பாக்குறதுக்கு முன்னாடி லவ்னா என்னனு தெரியாது நான் சொல்லிட்டு இருந்தேன் அஅர்ஜுன். பட் இப்போ, எது லவ்ன்னு எனக்கு கரெக்டா சொல்லத் தெரியுமா என்னன்னு தெரியல. என்ன பொறுத்த வரைக்கும், இந்த லைஃப்ல என்னோட டோட்டல் ஹேப்பினஸ் நீங்களும் நம்ம ஃபேமிலியும் தான். உங்க கூட இருக்கும்போது தான் நான் சந்தோஷமா இருக்கேன். உங்களை சுத்தி நிறைய ஆபத்து வருது.
அது எல்லாத்தையும் நானே கண்ணால பார்க்கும்போது, திடீர்னு நீ என்ன விட்டுட்டு தூரமா போயிட்டா என்ன பண்றதுன்னு எனக்கு பயமா இருக்கு. நீ இல்லாத லைஃபை என்னால இமாஜின் கூட பண்ணி பாக்க முடியாத அர்ஜூன்.” என்று அவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள்.
அப்போது அவளது மொபைல் ஃபோனில் ஏதோ ஒரு whatsapp குரூப்பில் இருந்து தொடர்ந்து நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருந்தது. அதனால் தன் கண்கள் வரும் லேசாக துளிர்த்த கண்ணீரை துடைத்துவிட்டு சென்று தனது மொபைல் ஃபோனை எடுத்து பார்த்தாள் அவள். நேற்று உதயாவின் பிறந்த நாள் என்பதால் அவளுடைய காலேஜ் whatsapp குரூப்பில் நேற்று அவனுக்கு பர்த்டே விஷஸ் சொல்ல மறந்தவர்கள் எல்லாம் இன்று அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
அதை பார்த்த பிறகு தான் “நேத்து நான் உதயாவுக்கு குடுக்கிறதுக்கு வாங்கி வச்ச கிஃப்ட்டை அவன் கிட்ட குடுக்கவே இல்லையே.. அவனோட பர்த்டே பார்ட்டிக்கு அவன் இன்வைட் பண்ணி இருந்தான். அர்ஜுன் எங்க மேரேஜ் வீடியோவை பிளே பண்ணதுனால அத பாத்துட்டு அப்படியே உக்காந்துட்டு இருந்துட்டேன். சுத்தமா அவன் என்னை கூப்பிட்டதே எனக்கு மறந்து போச்சு. போச்சு அவன் என் மேல செம கோவத்துல இருக்க போறான்!” என்று நினைத்த தேன்மொழி உடனே அவனுக்கு கால் செய்தாள்.
ஆபீஸில் தனது சீட்டில் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்த உதயா தேன்மொழியின் நம்பரில் இருந்த திடீரென்று கால் வந்ததால் உடனே குஷியானான். பின் நேற்று நடந்தது அனைத்தையும் நினைத்துப் பார்க்கும்போது அவனுக்கு கடுப்பாக இருந்தது. தேன்மொழி இப்போது முழுவதாக வேறு ஒருத்தியாக மாறி இருப்பதாக நினைத்த உதயா “நேத்து என்ன கொஞ்சம் கூட கண்டுக்காம எல்லார் முன்னாடியும் அவ ஹஸ்பேண்ட் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்துட்டு இப்ப எதுக்கு இவ எனக்கு கால் பண்றா?” என்று யோசித்தவாறு கொஞ்சம் கோபத்துடனே அதை அட்டென்ட் செய்தான்.
அவன் தன் மனதிற்குள் அவளை திட்டியதாலோ என்னவோ அவனிடம் பேசுவதற்கு முன்பாகவே அவளுக்கு பொறை ஏறியது. உடனே இரும்பியபடி அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்த தேன்மொழி “ஹலோ உதயா! லைன்ல இருக்கியா?” என்று அப்போதும் லேசாக இரும்பி கொண்டே கேட்டாள்.
அவளை தான் திட்டியதால் தான் இப்போது அவளுக்கு இப்படி இருமல் வருகிறதோ என்று நினைத்த உதயாவிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்க, “ம்ம்.. லைன்ல தான் இருக்கேன். முதல்ல நீ தண்ணி குடி.” என்றான். அதனால் மீண்டும் தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு அவனிடம் பேசத் தொடங்கிய தேன்மொழி சோகமாக “சாரி உதயா.. நேத்து உன்ன வீட்டுக்கு இன்வைட் பண்ணிட்டு என்னால ப்ராப்பரா உன் கிட்ட பேசக்கூட முடியாம போயிடுச்சு. உன் பர்த்டேக்கு நான் கிஃப்ட் வாங்கி வச்சிருந்தேன் அத கூட கொடுக்க மறந்துட்டேன். சரி ஈவினிங் உன் பர்த்டே பார்ட்டிக்கு வீட்டுக்கு வரலாம்னு நினைச்சேன். எல்லாம் இந்த அர்ஜுனால தான். அவர் எங்க மேரேஜ் வீடியோவை போட்டதுனால அதை பார்த்துகிட்டு அந்த எக்சைட்மெண்ட்ல நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்.
நான் தான் ஆல்ரெடி உன் கிட்ட சொன்னேன்ல்ல வீடு ஷிஃப்ட் பண்றோம்ன்னு.. அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் மாறி மாறி அலைஞ்சுகிட்டே இருந்ததுல டைம் போனதே தெரியல. என் மேல தான் தப்பு. ஐ அம் சாரி உதயா.. இன்னிக்கு ஆபீஸ் முடிஞ்சு நீ இங்க நம்ம புது வீட்டுக்கு வரியா? இன்னும் நாங்க இங்க ப்ராப்பரா ஹவுஸ் வார்மிங் பண்ணல.
மேபி நாளைக்கு மார்னிங் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். நீ இல்லனா ஹவுஸ் வார்மிங்க்கு கூட வா.” என்றாள். “நீ சொன்னது கரெக்டு தான். எல்லாம் அந்த அர்ஜுனல தான். அவர் மட்டும் உன் லைஃப்ல வரலைனா எல்லாமே நல்லா இருந்திருக்கும் தேன்மொழி. இப்ப அவர் உன் கூட இருக்கிற இடத்துல நான் இருந்து இருப்பேன் உங்க அம்மா கூட நான் வந்து எங்க வீட்ல இருக்கவங்களோட உன்னை பொண்ணு கேட்டு இருந்தா கண்டிப்பா சரின்னு சொல்லியிருப்பாங்க. எங்க இருந்தோ திடீர்னு வந்து அந்த அர்ஜுன் தான் எல்லாத்தையும் கெடுத்துட்டாரு.” என்று நினைத்த உதயா “நான் தான் ஸ்டார்டிங்ல இருந்தே சொல்றேனே தேன்மொழி.. நீ முன்னாடி மாதிரி இல்ல. ஆஃப்டர் மேரேஜ் டோட்டலா சேஞ்ச் ஆகிட்ட. உங்களுக்கு வர வர உன் ஹஸ்பண்டை தவிர வேற யாரும் தெரியுறது இல்ல. இந்த மை போட்டு மயக்குறதுன்னு எல்லாம் சொல்லுவாங்களே.. அந்த மாதிரி அவர் ஏதோ பண்ணி உன்னை மயக்கிட்டார்னு நினைக்கிறேன். அதான் உன்ன சுத்தி இந்த உலகத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சுக்காத அளவுக்கு நீ அவர் பின்னாடியே சுத்திட்டு இருக்க. அவரைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்க.” என்று பொறாமையில் பொங்கினான்.
ஆனால் அவன் தன் மீது இருக்கும் நட்பின் காரணமாக தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று நினைத்துக் கொண்ட தேன்மொழி “ஒரு விதத்துல நீ சொல்றது எல்லாம் உண்மை தான் உதயா. நம்மள மாதிரி அவரோடது சாதாரண லைஃப் இல்ல. அவர் டெய்லி நிறைய சேலஞ்சர்ஸ் ஃபேஸ் பண்றாரு. பாதி என்கிட்ட சொன்னா, மீதிய என் கிட்ட சொல்ல மாட்டாரு.
ஒருத்தர் எந்த அளவுக்கு ஃபேமஸா இருக்காங்களோ, பணக்காரங்களா இருக்காங்களோ அந்த அளவுக்கு அவங்களை சுத்தி ப்ராப்ளம்ஸ் இருக்கும். சோ அவர் எப்பயுமே அதை எல்லாம் ஹேண்டில் பண்றதுலையே பிஸியா இருப்பாரு. அவர் என்ன பண்ணிட்டு இருக்காரு? எப்படி இருக்காருன்னு யோசிக்கிறதுலையே நான் பிஸியா இருக்கேன். அவர் வீட்டை விட்டு வெளியே போனார்னா மறுபடியும் திரும்ப வர வரைக்கும் எனக்கு அவரைத் தாண்டி வேற எதை பத்தியும் யோசிக்க வரமாட்டேங்குது.
அவரே என்ன பத்தி யோசிக்காத நீ மத்த வேலையை பாருன்னு தான் சொல்றாரு. ஆனா என்னால தான் அப்படி இருக்க முடியல. உன்ன வீட்டுக்கு வர சொல்லிட்டு நான் கண்டுக்காம இருந்தது தப்பு தான். ஐ அம் சாரி. நீ நாளைக்கு ஹவுஸ் வார்மிங் ஃபங்ஷனுக்கு வரியா?” என்று கேட்டாள்.
அவள் வாயை திறந்தால் எதற்கு எடுத்தாலும் அர்ஜுனை பற்றியே பேசிக் கொண்டே இருப்பதை கேட்கவே அவனுக்கு வெறுப்பாக இருந்தது. நேற்று அவர்களது வீட்டிற்கு சென்று இவர்கள் இருவரும் நடத்திய காதல் காட்சிகளை எல்லாம் பார்த்து அவன் வயிற்று எரிச்சலில் வீடு வந்து சேர்ந்தது போதாதா? மீண்டும் மீண்டும் அதை பார்த்து டென்ஷனாக வேண்டுமா? என்று யோசித்த உதயா “பரவால்ல தேன்மொழி. உனக்கு எது முக்கியமோ நீ அதுல ஃபோகஸ் பண்ணு. நான் எதுவும் தப்பா நினைக்கல. நீ எதுவும் யோசிக்காத. புது வீட்டுக்கு போய் இருக்கீங்க கங்கிராஜுலேஷன்ஸ்! நீ ஹாப்பியா இருந்தா எனக்கு அதுவே போதும். அங்க வந்து நான் என்ன பண்ண போறேன்? உங்க வீட்ல மேரேஜ் பங்க்ஷன் நடக்க போகுது. அந்த மேரேஜை கிராண்டா பண்ண போறாங்க. உன் ஃபேமிலில இருக்கிறவங்க எல்லாரும் ரஷ்யாவுல இருந்து வந்திருக்காங்கன்னு நியூஸ்ல கூட சொல்லிட்டு இருந்தாங்க. எல்லாரும் குடும்பமா இருக்கும்போது, என்ன மாதிரி தர்ட் பர்சனுக்கு அங்க என்ன வேலை?” என்று ஏற்கனவே நடந்ததை மனதில் வைத்து குத்தலாக கேட்டான்.
அவன் பேச்சில் மனம் உடைந்த தேன்மொழி கலங்கிய கண்களுடன் “சத்தியமா நான் உன்ன தேர்ட் பர்சனா எல்லாம் நினைக்கவே இல்ல உதயா. எங்க அம்மா ஆதவன் மாதிரி உன்னையும் அவங்க பையனா தான் பார்க்கிறாங்க. இப்ப வரைக்கும் எனக்கு இருக்கிற ஒரே பெஸ்ட் ஃபிரண்ட் நீதான். எனக்காக நீ நிறைய பண்ணி இருக்க. அது எதையுமே நான் மறைக்கல.
ஏதோ என்னையும் அறியாம நான் உன்னை நிறைய ஹர்ட் பண்ணிட்டேன். அதுக்காக எனக்கு கொஞ்சம் கூட உன் மேல பாசமே இல்லைன்ற மாதிரி எல்லாம் பேசாத. எனக்கு கஷ்டமா இருக்கு. இந்த வயசுல திடீர்னு எனக்கு மேரேஜ் ஆகும் அதுக்கப்புறம் இப்படி எல்லாம் நடக்கும் என்ன கனவா கண்டேன்? எனக்கு இருக்கிற எல்லா ரெஸ்பான்ஸ்ளிட்டீஸையும் ஒரே டைம்ல இன்னும் ஹாண்டில் பண்ற அளவுக்கு எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆகல. ஐ அம் சாரி. எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல.” என்று உடைந்த குரலில் அழுது கொண்டே சொன்னாள்.
அவள் தனக்காக அழுகிறாள் என்றவுடன் உள்ளுக்குள் உதயாவிற்கு குழுகுழுவென்று இருந்தது. இன்னும் தன் மீது அவளுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது குறிப்பாக அவள் தன் மீது பாசம் குறையவில்லை என்று சொன்னதை கேட்டவுடன் மனநிறைவாக உணர்ந்த உதயா கலங்கிய கண்களுடன் “ஏய் அழாத டி. நான் உன்னை மன்னிச்சிட்டேன் போதுமா? நீ அழுகிறது இப்ப எனக்கு கஷ்டமா இருக்கு. பண்றது எல்லாத்தையும் நீ பண்ணிட்டு எப்படி பார்த்தாலும் என்ன தாண்டி கஷ்டப்படுத்துற.” என்றான் உதயா.
உடனே தன் கண்ணீரை துடைத்து விட்டு லேசாக புன்னகைத்த தேன்மொழி “தேங்க்ஸ், உனக்கு என் மேல இந்த கோவம் போயிடுச்சா?” என்று லேசான புன்னகையுடன் கேட்க, அவளுடைய சிரிப்பு சத்தம் அவனுக்கும் கேட்டதால் சிரிக்கும்போது அவள் எவ்வளவு அழகாக இருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்து தானும் சந்தோஷப்பட்ட உதயா “போயிடுச்சு போயிடுச்சு! நீ ஃபீல் பண்ணாத.” என்றான்.
“அப்ப நாளைக்கு ஹவுஸ் வார்மிங் ஃபங்சனுக்கு நீ வருவியா? நான் உனக்கு இன்விடேஷன் சென்ட் பண்றேன்.” என்று தேன்மொழி உற்சாகமான குரலில் கேட்க, “ம்ம்.. வரேன். பட் ஒன் கண்டிஷன்!” என்றான். “கண்டிஷனா.. என்ன கண்டிஷன்?” என்று அவள் ஆச்சரியமாக கேட்க, “பெருசா ஒன்னும் இல்ல, இன்னைக்கு நம்ம எங்கேயாவது வெளிய போகலாம். நீ என்னை ஹர்ட் பண்ணதுக்கு இத காம்பன்சேஷனா வச்சுக்கோ. நீதான் என்னை எங்கையாவது கூட்டிட்டு போகணும். உன் கூட எங்க போனாலும் எனக்கு ஓகே தான். என்ன இந்த கண்டிஷனுக்கு ஓகேவா?” என்று உதயா கேட்க, இம்முறையாவது அவனை disappoint செய்யாமல் நடந்து கொள்ளலாம் என்று நினைத்த தேன்மொழி “ஓகே போலாம், இன்னைக்கு என்னோட ட்ரீட்.” என்றாள்.
- மீண்டும் வருவாள் 💕
(என்னை மறக்காமல் பிரதி
லிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-106
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.