நாயகன்-16

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 16: உனக்கு நான் இருக்கேன்

விஜய் பிரசிடெண்ட் ஜ பற்றி பேசிய பின்பு தான் அவர் தனது மகள் அபிநயாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் ஆசையில் இருக்கும் போது, அதை தான் ஏற்று நடித்தால் இதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? கண்டிப்பாக ஏதேனும் பிரச்சினை செய்வாரே..!! என்று நினைத்து பயந்தவள் “சார் பிரசிடெண்ட் ஓட பொண்ணு அபிநயாவ தான் நீங்க இந்த கேரக்டருக்கு செலக்ட் பண்ணி இருக்கீங்க. இப்போ இதுல நான் நடிச்சா நல்லா இருக்குமா?" என்று கேட்டாள் அமுதா.

கூலாக ஒரு சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்ட விஜய் “நீயே இவ்ளோ யோசிக்கும் போது இந்த மூவியோட ப்ரொடியூசர் நான். என் படம் ப்ராப்ளம் இல்லாம போகணும்னு நான் யோசிக்க மாட்டனா? எனக்கு அந்த ஆள கண்ட்ரோல் பண்றது எல்லாம் ஒரு விஷயம் இல்ல. பட் அத நான் உனக்காக செய்யப் போறேன் நீ மனசுல வச்சுக்கணும். நானே டைரக்டர் கூட நேர்ல வந்து உங்க வீட்ல வந்து பேசுறேன். So மேக்ஸிமம் அவங்க ஓகே சொல்ல தான் சான்ஸ் இருக்கு. இன் கேஸ் அவங்க அப்படி சொல்லலைன்னாலும், உன்னோட டிசிஷன் -ல நீ ஸ்ட்ராங்கா இருக்கணும். யார் என்ன சொன்னாலும் நீதான் இந்த மூவி ஓட செகண்ட் ஹீரோயின். ஓகேவா?" என்று கேட்க, அவனை மறுத்து பேச வாய் வராமல் சரி என்று தன் தலையை ஆட்டி வைத்தாள் அமுதா.

அதனால் அவளை பார்த்து புன்னகைத்த விஜய் “இப்படியே நான் சொல்றத எல்லாம் கேட்டு நீ கரெக்டா செய்ற வரைக்கும் உனக்கு யாராலயும் எதுவும் ஆகாம நான் பாத்துக்குவேன். நீ இப்ப கிளம்பு. நாளைக்கு பாக்கலாம்." என்று சொல்ல “ஓகே சார் தேங்க்யூ." என்ற அமுதா அந்த கேரவனின் கதவை திறக்கப் போனவள் பின் தயக்கத்துடன் டைரக்டரை திரும்பி பார்த்தாள். அதனால் ஸ்ரீகாந்த் “என்ன மா அட்வான்ஸ் அமௌன்ட் ஏதாவது வேணுமா?" என்று கேட்க, “ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். நீங்க என்கிட்ட காட்டினீங்க இல்ல அந்த வீடியோ, எனக்கு அந்த வீடியோ வேணும். என்னோட நம்பர் சொல்றேன் அதுக்கு வாட்ஸ் ஆப்புக்கு அனுப்புறிங்களா? எனக்கு அத பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு." என்றாள் அமுதா.

“ஓ அதுக்கு என்ன சென்ட் பண்றேன். உன் நம்பர் சொல்லு." ஸ்ரீகாந்த் சொல்ல, உற்சாகமான குரலில் தன் நம்பரை அவனிடம் சொன்னாள் அமுதா. அதை கேட்டு தன் மொபைலில் சேவ் செய்து வைத்துக் கொண்ட ஸ்ரீகாந்த் வீடியோவை அவளுக்கு அனுப்பி விட்டான். அமுதா ஆர்வமான முகத்துடன் அவனையே பார்க்க, “சென்ட் பண்ணிட்டேன் அமுதா." என்றான் ஸ்ரீகாந்த். அதனால் தேங்க்யூ சார் என்று விட்டு அந்த கேரவனின் கதவை திறந்து விண்ணோடு மேளச்சத்தம் என்ன? என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே தன் பாவாடை தாவணியின் முந்தானையை கையில் வைத்து சுற்றியபடி நடந்து சென்று கொண்டு இருந்தாள் அமுதா.

அவள் ஹீரோயின் ஆகப்போகும் ஆசையில் கனவு உலகத்தில் மிதந்து கொண்டு இருந்ததால், தன் முன்னே யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் கவனிக்காமல் சென்று கொண்டு இருந்த அமுதா அவளைத் தேடி அலைந்து கொண்டு இருந்த பாசமலரின் மீது போய் இடித்தாள். அதனால் தன்னை இடித்தது யார் என்று தெரியாமல் “எலே யாரலே அது? அறிவு கெட்ட தனமா என்ன வந்து இருக்கிறது?" என்று கேட்டுவிட்டு அமுதாவை பார்த்தவள், “ஏய் அமுதா நீ எங்க டி போய் தொலைஞ்ச? உன்னை எவ்வளவு நேரமா தேடுறது?" என்று கோபமாக கேட்டாள். 😡

அவளது குரலால் நிதானத்திற்கு வந்த அமுதா “நான் தான் சொன்னேன்ல விஜய் சார பாக்க போறேன்னு! அங்க தான் போனேன்." என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது, அவர்களது பேச்சு சத்தத்தை கேட்டு அங்கே வந்த வெற்றி அமுதாவை பார்த்துவிட்டு “சாயங்காலத்தில இருந்து நாங்க ரெண்டு பேரும் உன்னை தேடிட்டு இருக்கோம். இப்ப பொழுதே சாந்திருச்சு. இவ்ளோ நேரமா எங்க இருந்த நீ? உன் ஃபோனையும் இவகிட்ட கொடுத்துட்டு போயிருக்க! என்ன அமுதா இப்படி பொறுப்பு இல்லாம இருக்க! வீட்ல இருந்து உன்ன காணாம்ன்னு எத்தனை போன் பண்ணிட்டாங்க தெரியுமா? நானும் இவளும் தான் மாத்தி மாத்தி பேசி எல்லாரையும் சமாளிச்சுக்கிட்டு இருக்கோம்." என்று கோபமாக சொன்னான். 😡 🔥

அமுதா மிகவும் சந்தோஷமான மன நிலையில் இருந்ததால் அவர்கள் தன் மீது கோபப்படுவது எல்லாம் அவளுக்கு பெரியதாக தெரியவில்லை. அதனால் சிரித்த முகமாக “நீங்க ரெண்டு பேரும் அப்புறமா என்ன திட்டுங்க. நான் உங்ககிட்ட ஒன்னு காமிக்கணும். என் போன் எங்க?" என்று அமுதா கேட்க, தன் சட்டை பாக்கெட்டில் இருந்த அவளது போனை எடுத்து அவளிடம் இந்தா...!! என்று வெடுக்கென சொல்லிவிட்டு கொடுத்தான் வெற்றி.

அதை வாங்கி வேக வேகமாக டேட்டாவை ஆன் செய்து வாட்ஸ் ஆப்பிற்குள் சென்ற அமுதா அதில் ஸ்ரீகாந்த் தனக்கு அனுப்பிய வீடியோவை டவுன்லோட் செய்து மலருக்கும் வெற்றிக்கும் போட்டு காட்டினாள். அதை தங்கள் வாயை பிளந்து கொண்டு வெற்றியும் பாச மலரும் பார்க்க, “இதுல நான் எப்படி இருக்கேன்? பாக்க அப்படியே ஹீரோயின் மாதிரியே இருக்கேன்ல..!!" என்று அமுதா கேட்க, “ஹேய் ஆமா புள்ள. ஒரு படத்துல சாய் பல்லவி மழையில டான்ஸ் ஆடுவாங்களே..!! அதே மாதிரியே இருக்கு. உன்னை இந்த மாதிரி பாத்ததே இல்ல. நெசமாவே யாரோ ஹீரோயின் ஆடுற மாதிரி இருக்கு." என்று உற்சாகமான குரலில் சொன்னாள் மலர். 😍 😁 😁 😁

ஆனால் வெற்றி இன்னும் இமைக்க மறந்து அந்த வீடியோவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு அமுதாவின் அழகை பற்றி ஏற்கனவே தெரிந்ததுதான். அவனுக்குத் தெரிந்த பெண்களில் அமுதாவை விட சிறந்த அழகி என்று எவளும் இருந்ததில்லை. ஆனால் இப்படி அவள் ஹீரோயின் போல மழையில் ஆடுவதை முதல் முறையாக பார்த்த வெற்றி அந்த கணமே அவளுக்கு fan ஆகிவிட்டான். வெற்றி எதுவும் சொல்லாமல் அந்த வீடியோவையே பார்த்துக் கொண்டு இருந்ததால் அவன் தோள்களைப் பிடித்து உலுக்கிய அமுதா “என்ன மாமா நீ அதையே பாத்துட்டு இருக்க? நான் அதுல நல்லா இருக்கனான்னு கேட்டேன் எதுவுமே சொல்லல! " என்று அவன் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டாள்.

“நல்லா இருக்காவா? நீ அப்படியே வானத்தில இருந்து இறங்கி வந்த தேவதை கனக்கா ஜொலிக்கிற போ! இது மட்டும் நம்ம ஊர்க்காரனுங்க கண்ணுல பட்டுச்சின்னா எல்லாரும் ஷாக் ஆகி வாய் மேல விரலை வச்சு பாப்பானுங்க. நீ அவ்ளோ அழகா இருக்க டி அமுதா." என்ற வெற்றி அன்புடன் அவள் கன்னத்தைப் பிடித்துக் கொள்ள, மலரின் முகம் உடனே வாடிவிட்டது. 😔

ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத வெற்றி “நீ விஜய் சார பாக்க போறேன்னு தான போன! அப்புறம் இந்த வீடியோவை எங்க போய் எடுத்த? ஆமா நீ டான்ஸ் தானே ஆடிட்டு இருக்க! அப்ப இதை யார் எடுத்தது? இத பாத்தா ஏதோ கேமராவுல ரெக்கார்டு பண்ண மாதிரி இருக்கு..!!!" என்று கேட்க, “இது சிசிடிவி கேமராவுல ரெக்கார்ட் ஆனது." என்றாள் அமுதா.

“சரி நீ சொல்ற மாதிரி இது சிசிடிவி கேமராவுல ரெக்கார்ட் ஆகி இருந்தாலும் இந்த வீடியோவை உனக்கு யாரு கட் பண்ணி அனுப்பி விட்டது? அதுவும் ஏதோ தெரியாத நம்பர்ல இருந்து வந்து இருக்கு!" என்று குழப்பமாக பாசமலர் கேட்க, “எனக்கு இந்த படத்தை ஷூட் பண்ற டைரக்டர் ஸ்ரீகாந்த் சார் தான் இந்த வீடியோவை அனுப்பிச்சாரு. இந்த நம்பர் அவரோடது தான்." இன்று அமுதா செல்ல, விஜய்யை தேடி போய் இவளுக்கு ஏதோ பைத்தியம் பிடித்து விட்டது போல என்று நினைத்து வெற்றியும் மலரும் அவளை குறுகுறுவென பார்த்தார்கள்.

அதனால் தான் உதட்டை சுழித்த அமுதா “என்ன நான் சொல்றத நம்ப மாட்டீங்களா? உங்களுக்கு டவுட்னா நீங்க வேணா போய் அவர்கிட்டயே கேளுங்க. நான் அவரையும் விஜய் சாரையும் பார்த்து பேசிட்டு தான் வரேன். நான் விஜய் சார நேர்ல பக்கத்துல பார்த்த சாக்ல மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன்.

அவரே என்னை தூக்கிட்டு போய் அவருடைய காரவன்ல படுக்க வைத்துவிட்டு டாக்டர் எல்லாம் வர வச்சு என்ன செக் பண்ணி இருக்காரு தெரியுமா?" என்று கண்களில் பெருமை மின்ன கேட்டாள் அமுதா. அவள் சொல்வதை துளியும் நம்ப முடியாமல் வெற்றியும் பாசமலரும் தங்களை ஒருவர் ஒருவர் பார்த்துக் கொள்ள, “நான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன் என்ன நீங்க இப்படியே எதுவும் பேசாம அமைதியா நிக்கிறீங்க? உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க நான் வேணா உங்களையும் கூட்டிட்டு போய் அவர்கிட்ட பேச வைக்கிறேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..!!" என்றவள் மெல்லிய குரலில் அபிநயா இப்போது நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்தில் விஜயும் டைரக்டர் ஸ்ரீகாந்தம் தன்னை நடிக்க சொன்னதாக அவர்களிடம் சொன்னாள் அமுதா.

அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு இருந்த வெற்றிக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான். அவன் எப்போது சான்ஸ் கிடைக்கும் அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணத்தில் தான் சுற்றி கொண்டு இருக்கிறான். ஏதோ அவள் படிக்க ஆசைப்பட்டதால் நன்றாக படிக்கும் பெண்ணின் கனவை கல்யாணம் என்ற கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து கொடுக்க வேண்டாம் என்று நினைத்து அவன் அவளை படிக்க செல்ல அனுமதித்தான்.

ஆனால் இப்போது அவள் தான் சினிமாவில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்வதால், அவனது இதயமே ஒரு நொடி நின்று விடுவதைப் போல இருந்தது. ♥️ இதற்கு அவளது குடும்பத்தில் ஒப்புக் கொள்வார்களா மாட்டார்களா, உண்மையாகவே அமுதா நடிக்கப் போகிறாளா இல்லையா என்ற கேள்விகளை எல்லாம் தாண்டி இதனால் அமுதா தனக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? என்ற பயம் நான் வெற்றிக்குள் இருந்தது.

தனது தோழி போஸ்ட் கிராஜுவேஷன் படிக்கப் போகிறாள் என்று தெரிந்ததற்கே வானத்திற்கும் பூமிக்கும் குதித்த பாசமலர் இப்போது அவள் ஹீரோயின் ஆகப் போகிறாள் என்று நினைத்து சந்தோஷத்தில் அமுதாவை கட்டி அணைத்து அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து “ஏ சூப்பர் டி அமுதா. இப்படி ஒரு சான்ஸ் எல்லாம் யாருக்கும் கிடைக்காது. இந்த படத்துல நீதான் நடிக்கணும்னு உன் தலையில எழுதி இருக்கு. அதான் இன்னைக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம இங்க வந்து இருக்கோம். நடக்கிறது எல்லாமே நல்லதுக்கு தான்." என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.

ஆனால் ஏதோ சித்த பிரம்மை பிடித்தவனை போல அமுதாவையே பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் வெற்றி. அவனுக்கு இந்த சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவன் மனதில் இருந்த ஒரே எண்ணம் “ஏற்கனவே இவ நல்லா அழகா இருக்கா, படிச்சிருக்கா. இவளுக்கும் நமக்கும் பொருத்தமா இருக்காதுன்னு யோசிச்சு யோசிச்சு நான் டெய்லியும் செத்துகிட்டு இருக்கேன். இதுல இவ ஹீரோயினா வேற ஆயிட்டா, என்னால எப்படி இவள கல்யாணம் பண்ணிக்க முடியும்?" என்ப
து மட்டும் தான்.

- காதல் மலரும் 🌹
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.