தாபம் 95

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 95: திருமணத்திற்கு சம்மதித்த ரித்திகா (பார்ட் 1)

“என் வீட்டோட மூத்த மருமகளா வர்றது ஒரு பெரிய பொறுப்பு. அந்த பொறுப்ப உன்னால தான் சரியா செய்ய முடியும்ன்னு நான் நம்புறேன். ப்ளீஸ் இந்த கல்யாணம் வேணாம்ன்னு மட்டும் சொல்லிராத..!!!!" என்ற செண்பகம் சட்டென்று ராகவியின் கையை எடுத்து தன்னுடைய தலைக்கு மேல் வைத்துக் கொண்டவள், “இங்க இருக்கிற துர்கா அம்மா சாட்சியா கேட்கிறேன் என் மேல சத்தியம் பண்ணி சொல்லு...!!! நீ என்னோட பையன கல்யாணம் பண்ணிக்கிறியா..????" என்று அழுத்தமான குரலில் கேட்டாள். செண்பகம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ராகவியின் இதயத்தை நேரடியாக சென்று தாக்கியது.

அதனால் ஏதோ மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் போல், செண்பகத்திற்கு கட்டுப்பட்ட ராகவி; “நான் உங்க பையன கல்யாணம் பண்ணிக்கிறேன் மா. இது உங்க மேல சத்தியம்." என்று உறுதியாக சொன்னாள். ராகவியின் வாயிலில் இருந்து அந்த வார்த்தைகளை கேட்டவுடன் தான் செண்பகத்திற்கு நிம்மதியாக இருந்தது. 😊 அதனால் மனநிறைவோடு ராகவியை பார்த்தவள் கலங்கிய கண்களோடு, “தேங்க்ஸ் மா ராகவி." என்று தன் உள்ளத்தில் இருந்து சொன்னவள்; தன் தலையின் மீது இருந்த ராகவியின் கையை எடுத்தாள். 🥺

செண்பகம் தன்னுடைய கையை அவளுடைய தலையில் இருந்து விலகியதற்கு பின்பு தான் சுய நினைவிற்கு வந்த ராகவி, தான் அவளிடம் என்ன சொல்லிவிட்டோம் என்றுு உணர்ந்தாள். அவளுக்கு தன்னுடைய பெற்றோர்களை கேட்காமல், அவளே தானாக இப்படி செண்பகத்திற்கு வாக்கு கொடுத்து விட்டது நெருடலாக இருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் செண்பகம் கேட்டதற்கு அவள் சரி என்று சொல்லி விட்டாள்.

ஆனால், இப்பொழுதும் தான் செய்வது சரியா இல்லை தவறா, என்ற எண்ணம் அவளுடைய மனதில் ஓடி கொண்டே இருந்தது. ஆனால் இப்போது அவள் இதை எல்லாம் யோசித்து என்ன ஆகப் போகிறது..??? அவள் தான் ஏற்கனவே சென்பகத்திற்கு வாக்கு கொடுத்து விட்டாளே...!!! அதை நினைத்தவள் எது எப்படி இருந்தாலும், சித்தார்த்தத்திற்காக இதை செய்தே ஆக வேண்டும் என்று ஒரு மனதாகக முடிவெடுத்தாள்.

செண்பகம்: “அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டு இருந்த ராகவியை கவனித்தவள், “நீ எடுத்து இருக்கிறது சாதாரணரண முடிவில்ல மா. இத எப்டி போய் உன் வீட்ல சொல்றதுன்னு உனக்கு ஆயிரம் குழப்பம் இருக்கும். எத நெனச்சும் கவலைப்படாத நான் இருக்கேன்.

எந்த பிரச்சனை வந்தாலும், அது எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக என்ன மதிச்சு நீ இந்த கல்யாணத்துக்குு சம்மதிச்சு இருக்க. அதனால இனி நீயும், உன்னோட வாழ்க்கையும், என்னோட பொறுப்பு. உன்ன நான் எப்பயும் பத்திரமா பாத்துப்பேன். நீ என்ன அம்மான்னு மனசார கூப்பிட்டல, இப்ப நான் சொல்றேன் மா; நீ என்னோட வயித்துல பொறக்குலனாலும் நீயும் என்னோட பொண்ணு தான்." என்றவள் விஷ்வாவின் பயோடேட்டா அடங்கியபைலை ராகவியின் கையில் கொடுத்து,

“இதுல என் பையன் விஷ்வாவை பத்தின எல்லா டீடெயில்ஸ் -ம் இருக்கு. அதுக்கப்புறம் எனக்கு தெரிஞ்சு அவன் பேருல இருக்குற ப்ராப்பர்ட்டிஸ் ஓட டீடைல்ஸ் -ம் இருக்கு. இதுல இருக்கிறது எல்லாம் ரொம்ப கம்மி தான் மா. இதுல முக்கியமானத மட்டும் தான் மென்ஷன் பண்ண சொல்லி இருக்கேன். எங்களோட டோட்டல் ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் ஷேர்சோட டீடெயில்ஸ் எல்லாத்தையும் தனியா டைப் பண்ணி இந்த மாதிரி பைல் ஆ போடணும்னா அதுக்கே ரெண்டு நாள்க்கு மேல ஆகும். நீ என்னோட வீட்டுக்கு மூத்த மருமகளா வர போற. அதனால தான் உன் கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லனும்ன்னு இவ்ளோ நேரம் உன்ன உட்கார வைச்சு என் குடும்பததை பத்தி பேசிட்டு இருந்தேன்.

எப்போ என் பையன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீ சம்மதிச்சியோ, அப்பவே நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தி ஆயிட்ட. நான் இருக்கிறப்பவே போக போக கொஞ்சம் கொஞ்சமா உனக்கு எல்லாத்தையும் சொல்லிக் குடுத்துடறேன். எனக்கு அப்புறம் நீ தான் மா எல்லாமாவும் இருந்து நம்ம குடும்பத்தை நல்லா பாத்துக்கணும்." என்று ராகவியின் கையை பிடித்துக் கொண்டு உருக்கமாக பேசினாள். 🥺 🙏

செண்பகம் தன்னை ஏன் இவ்வளவு நம்புகிறாள் என்று ராகவிக்கு புரியவில்லை. ஆனால், அந்த நம்பிக்கையை தான் ஒருபோதும் கெடுத்து விட கூடாது என்று மட்டும் அவளுக்குு தோன்றியது. அவ்வளவு பெரிய குடும்பத்திற்கு மூத்த மருமகளாக போய் இத்தனை பொறுப்புகளையும் எடுத்து சரியாக செய்யும் அளவிற்கு அவளுக்கு தகுதியும், திறமையும், இருக்கிறதா என்று அவருக்கு தெரியவில்லை. இருந்தாலும், விஷ்வாவை பற்றிய பைல் இன் வடிவில் அனைத்து பொறுப்புகளும் அவளுடைய கைகளில் செண்பகத்தால் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அவள் இப்போது ஒரு வழி பாதையில் வந்து விட்டாள். இதற்கு மேல் அவளே நினைத்தாலும், இனி அவள் திரும்பிச் செல்ல வழி இல்லை.

ராகவியின் கையை பிடித்துக் கொண்டு செண்பகம் உருக்கமாக எதையோ பேசிக் கொண்டு இருப்பதை கவனித்த படியே அவர்களின் அருகே வந்தாள், ஷாலினி. ராகவியின் முக பாவங்களை வைத்தே அவர்கள் ஏதோ சீரியஸான விஷயத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் போல என்று நினைத்தவள், இப்போது தான் அங்கே செல்லலாமா, வேண்டாமா..?? என்று யோசித்து தயங்கிய படியே ராகவியின் அருகே வந்து நின்று, அவளை அழைத்தாள். ஏற்கனவே அதிக குழப்பத்திலும் அதிர்ச்சிகளும் இருந்த ராகவி, திடீரென்று யாரோ தன்னை அழைத்ததால் பயந்து விட்டாள். 😣

ஷாலினி: தன் குரலைக் கேட்டு இவள் ஏன் இப்படி பதட்டமடைகிறாள் என்று நினைத்து குழம்பியவள், “அக்கா நான் தான். ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க...???" என்றாள். 🙄

ரித்திகா: “ஒன்னும் இல்ல. நீ சடனா கூப்பிடவும், யாரோன்னு நெனச்சு ஷாக் ஆயிட்டேன்." என்று அவசரமான குரலில் சொல்லி சமாளித்தாள்.

ஷாலினி: ராகவி ஒன்றும் இல்லை என்று சொன்னாலும், அவளுக்கு இங்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அதனால் முதலில் ராகவியை தனியாக அழைத்துச் சென்று பேச வேண்டும் என்று நினைத்தவள், “நான் சாமி கும்பிட்டு வந்துட்டேன் அக்கா. நீங்க இவங்க கூட பேசி முடிச்சிட்டீங்கன்னா... நம்ம இன்னொரு தடவ கோயிலுக்குள்ள போய் சாமி கும்பிட்டு கிளம்பலாம்." என்றாள்.

அவளுக்கு ரித்திகா பதில் சொல்வதற்குள் அதை கேட்ட செண்பகம், “அவ்ளோ தான் மா. நாங்க பேச வேண்டியது எல்லாம் பேசிட்டோம். நீ ராகவிய கூட்டிட்டு போ." என்றவள், ராகவியை பார்த்து, “போ மா. போய் சாமி கும்பிடு. எல்லாமே நல்ல படியா நடக்கணும்னு சாமி கிட்ட வேண்டிக்கோ." என்று பாசமாக சொன்னாள். ☺️

பின் ராகவியை அழைத்து கொண்டு ஷாலினி மீண்டும் கோயிலுக்குள் செல்ல, ராகவி திருமணத்திற்கு சம்மதித்த மகிழ்ச்சியில் இருந்த செண்பகம், நிம்மதியாக தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்றாள். செண்பகம் தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற பைல் ஐ தன் மார்போடு சேர்த்து இறுக்கி பிடித்த படி அனைத்து கொண்டு சித்த பிரம்மை பிடித்தவள் போல், அமைதியாக, எதையோ யோசித்த படி நின்று கொண்டு இருந்தாள் ரித்திகா.

ஷாலினி: “என்ன அக்கா ஆச்சு உங்களுக்கு...??? நம்ப இங்க வரும்போது நல்லா தானே இருந்தீங்க.... இப்ப நீங்க ஆளே சரி இல்ல. யார் அவங்க..??? நெஜமாலுமே அவங்க சித்தார்த்தோட பாட்டி தானா..??? அப்படி அவங்க உங்க கிட்ட என்ன சொன்னாங்க..??? இவ்ளோ நேரமா ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருந்தீங்க...???" என்று ராகவியின் கையை பிடித்து உலுக்கிய படி கேட்டாள்.

அவளுக்கு என்னவென்று பதில் சொல்ல என்று நினைத்து குழம்பிய ராகவி, தன் கையில் இருந்த பைல் ஐ அவளிடம் நீட்டினாள். அப்போது தான் ராகவியின் கையில் ஒரு பைல் இருப்பதை கவனித்த ஷாலினி, வேகமாக அதை அவளிடம் இருந்து வாங்கி அதை பிரித்து, அதில் இருந்து அவற்றை பார்க்க தொடங்கினாள். முதல் பக்கத்தில் இருந்த விஷ்வாவின் புகைப்படத்தை பார்த்தவள், பின் அதை புறக்கணித்துவிட்டு, அடுத்த பக்கத்தை திருப்பி அதில் இருந்து அவற்றை வாசிக்க தொடங்கினாள். அதில் செண்பகம் சொன்னதை போல் விஷ்வாவை பற்றிய அனைத்து தகவல்களும் இருந்தது.

அதில் இருந்த விஷ்வாவின் பெயரையும், அதற்கு கீழே சேர்மன் ஆப் நாராயணன் குரூப்ஸ், என்று எழுதி இருந்ததை படித்த உடனேயே அது யாரைப் பற்றியது என்று புரிந்து கொண்ட ஷாலினி, அதிர்ச்சி அடைந்தாள். 😳 மேலும் அவளுடைய அதிர்ச்சியை அதிகப்படுத்தும் வண்ணம் அதில் விஷ்வாவின் பர்சனல் டீடைல்ஸ் இல்... மேரிட்டல் ஸ்டேட்டஸ்சில் விடோவர் என்றும், அவனுடைய இறந்து போன மனைவியின் பெயர் ஜான்வி என்றும், அவனுக்கும், அவளுக்கும் பிறந்த குழந்தையின் பெயர் சித்தார்த் என்றும், அதில் சித்தார்த் உடைய புகைப்படமும், அவனைப் பற்றிய விவரங்களும் கூட இணைக்கப்பட்டு இருந்தது.

அதை எல்லாம் பார்த்த ஷாலினிக்கு சித்தார்த் தான் தங்களுடைய பாஸ் இன் மகன் என்று தெளிவாக புரிந்தது. ஆனால் இப்போது விஷ்வா உடைய தகவல்களை ஏன் சித்தார்த்தின் பாட்டி ராகவியிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறாள் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், அதை நேரடியாக ராகவியிடமே கேட்டுவிட்டாள்.

ரித்திகா: “ஏன்னா..!!! அவங்க என்ன விஷ்வா சார் ஐ கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க." என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள்.

ஷாலினி: அதைக் கேட்டவளுக்கு கோபமும், அதிர்ச்சியும், ஒரு சேர பொங்கிக் கொண்டு வெளியே வந்தது. 😒 ”இதுல பாத்தீங்களா... அவரோட ஏஜ் 33...???" என்று ராகவியின் முன் தன் கையில் இருந்த பைல் ஐ கோபமாக ஆட்டிய படி கேட்டவள், “உங்களுக்கும், அவருக்கும், 9 இயர்ஸ் ஏஜ் டிஃபரன்ஸ். சரி அது கூட பரவால்லன்னு வச்சுக்கிட்டாலும், அவரு ஏற்கனவே கல்யாணம் ஆனவரு அக்கா. அஞ்சு வயசுல அவருக்கு ஒரு பையன் இருக்கான். எப்படி அவங்க மனசாட்சியே இல்லாம உங்கள அவருக்கு போய் பொண்ணு கேட்கலாம்..??? என்ன அவங்க பெரிய பணக்காரங்கன்னா... எத வேணாலும் அவங்களால செஞ்சிட முடியும்ன்னு நினைக்கிறார்களா...??? பணத்த வச்சி ஆசை காமிச்சு உங்கள விலைக்கு வாங்கலாம்ன்னு பாக்குறாங்களா...???? என்ன ஆனாலும் சரி கா நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காதீங்க." என்று கோபத்தில் மூச்சு வாங்க சொன்னாள். 😤

ரித்திகா: “நான் ஏற்கனவே அவங்க பையன கல்யாணம் பண்ணிக்கிறதா, அவங்களுக்கு சத்தியம் பண்ணி குடுத்துட்டேன்." என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னாள்.

ஷாலினி: செண்பகம் ராகவியை பொண்ணு கேட்டதை விட, இப்போது ராகவி அதற்கு ஒப்புக்கொண்டது தான் அவளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 🙄 அதனால் ராகவியை தவறாக நினைத்தவள், “அவங்க கேட்ட உடனே ஓகே சொல்லிட்டீங்களா...??? என்ன கா நீங்க இப்படி பண்ணிட்டீங்க..??? நீங்க இப்டி இருக்கீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அவங்க இந்த மாதிரி ஒரு பைல் ஐ காட்டி உங்களுக்கு பணத்தாசை வர வெச்ச உடனே, நீங்களும் பணத்துக்கு மயங்கி உடனே சரின்னு சொல்லிட்டீங்களா...??? சின்ன வயசு பொண்ணுங்க எல்லாம் பணத்துக்கு ஆசைப்பட்டு வயசான பணக்காரங்களை கல்யாணம் பண்ணிக்கிறத எல்லாம் நான் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா அது நிஜமாகவே நடக்கிறத இப்ப தான் பாக்கிறேன்." என்று கோபமாக சொன்னாள். 😡

ரித்திகா: அவளை பார்த்து விரக்தியில் புன்னகைத்தவள், “என்ன பத்தி நீ அவ்ளோ தான் புரிஞ்சு வச்சிருக்க இல்ல...???" என்றாள். 😁 😁

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 95
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.