அத்தியாயம் 91: ரித்திகாவை சந்தித்த செண்பகம் (பார்ட் 1)
சித்தார்த்தின் பள்ளியில்....
அந்த பள்ளியின் விசாலமான கிரவுண்டில் இருந்த வைஷாலி, அங்கு இருந்த மாணவர்களுக்கு புட் பால் விளையாட சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். வைஷாலி இங்கு வருவதற்கு முன் மகேஷ் மட்டும் தான் இந்தப் பள்ளியின் ஒரே ஒரு பீ.ட்.டி டீச்சராகராக இருந்தான். இப்போது வைஷாலி வந்துவிட்டதால், அவனுடைய வகுப்புகள் அனைத்தும் சரிசமமாக பிரிக்கப்பட்டு வைஷாலிக்கும், அவனுக்கும், பகிர்ந்து அளிக்கப்பட்டு விட்டது.
இந்த மாற்றத்தை அறிந்து கொண்ட மகேஷ், புதிதாக வந்து இருக்கும் அந்த பெண் பீ.ட்.டி டீச்சர் யார் என்று பார்ப்பதற்காக ஆர்வமாக கிரவுண்டுக்கு வந்தான். அவனுடைய மனதில்; ஆண்களைப் போல் பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபாட்டாக இருக்க மாட்டார்கள் என்றும், அப்படியே இருந்தாலும், அவற்றை அவர்கள் மாணவர்களுக்கு சரியாக கற்றுத்தர மாட்டார்கள் என்ற எண்ணமும் இருந்தது. இதில், அவனை விட வைஷாலிக்கு அதிக சம்பளம் போட பட்டு இருப்பது வேறு அவனுடைய வயிற்றெரிச்சலை அதிகப்படுத்துவதற்கு போதுமானதாகதாக இருந்தது.
இப்போது வந்து இருப்பவள் அப்படி என்ன தன்னை விட திறமைசாலியா என்ன..?? அவள் இந்த கிரவுண்டில் எண்ணத்தை தான் செய்து கிழித்து கொண்டு இருக்கிறாள் என்று பார்ப்போம், எப்படியும் அவள் மாணவர்களை விளையாட விட்டுவிட்டு ஓரமாக மரத்தடியில் நின்று வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருப்பாள், என்று நினைத்த படியே வந்த மகேஷ், ஒரு மாணவன் வேகமாக எட்டி உதைத்த ஃபுட் பால் அவனை நோக்கி வந்து கொண்டு இருப்பதை கவனிக்கவில்லை. ⚽
அந்த புஃட் பால் ⚽ பறந்து வந்து கொண்டு இருக்கும் வேகத்தில் அது மட்டும் மகேஷ் உடைய முகத்தில் பட்டு விட்டால், அவனுடைய முகம் டயருக்கு அடியில் சிக்கிய எலுமிச்சம் பழம் போல் சேதாரம் ஆவது நிச்சயம். வைஷாலியை பற்றியே யோசித்து கொண்டு வந்து கொண்டு இருந்த மகேஷ், தன்னை நோக்கி வந்த அந்த பாலை கவனிக்கவில்லை. ⚽ அவன் அந்த பால் தன்னை நோக்கி வருவதை கவனித்து சுதாரித்துக் கொள்வதற்குள் அதை கவனித்து விட்ட வைஷாலி, ஒற்றை காலில் நின்ற படியே தன்னுடைய இன்னொரு காலை 60 டிகிரி கோணத்தில் தூக்கி, அந்த பாலை ஒரு உதை உதைத்து தள்ளியவள், பின் 360 டிகிரி கோணத்தில் தன்னுடைய ஒற்றை காலில் நின்று ஒரு சுற்று சுற்றி ஸ்டைலாக மகேஷின் முன் என்றாள்.
அவள் வேகமாக சுத்திவிட்டு நின்றதால், அவளுடைய இறுக்கி பின்னப்பட்டிருந்த நீண்ட கூந்தல், அவளுடைய முகத்தில் வந்து சடார் என்று சாட்டை போல் அடித்து அவளுடைய தோளில் விழுந்தது. அதை தன் முதுகுக்கு பின்னே தூக்கி போட்ட வைஷாலி, வெகு நேரமாக வியர்க்க விருவிருக்க வெயிலில் விளையாடியதால், மூச்சு வாங்க அவன் முன்னே நின்று கொண்டு இருந்தாள். அவளுடைய முகம் மற்றும் கழுத்து வளைவுகளில் பூத்து இருந்த வியர்வை துளிகள், அவளுடைய கழுத்து வழியாக பயணம் செய்து அவளுடைய ஆடைக்குள் இறங்கிக் கொண்டு இருந்தது.
அவள் வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டு இருந்ததால் அளவளுடைய மார்பகங்கள் மேலேயும் கீழேயும் ஏரி இறங்கி கொண்டு இருந்தன. அவளை அப்படிப் பார்த்த மகேஷ், அவளிடம் பேச வார்த்தைகள் இன்றி வாயடைத்துப் போய் சிலையாய் சமைந்து நின்றான். 😮 😍 இந்த நொடி வைஷாலி அவனுடைய கண்களுக்கு ஒரு காவியமாக தெரிந்தாள். 😍 ❤️ பெண்களுக்கு அழகு சாதன பொருட்கள் மட்டும் தான் அழகு சேர்க்க முடியும் என்று யார் சொன்னார்கள்? அவளுடைய தேகத்தில் வழிந்தோடும் இந்த உப்பு நீர், தாமரையின் இதழ்கள் மேல் படிந்திருக்கும் மழை நீரை போல், வெயில் படுகையில் மின்னி அவளை இன்னும் பேரழகியாக காட்டியது. அவள் தன்னுடைய தொடர் முயற்சியால், தன்னுடைய துறையில் வைரம் போல் ஜொலித்துக் கொண்டு இருக்கும், அவனால் தொட முடியாத தூரத்தில் நின்று பிரகாசிக்கும் வானின் விண்மீன். 💫 🌟 ✨
இத்தனை நாள் வரை அவன் தன்னுடைய வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியிலும், அவனுடைய தொலைபேசியிலும் மட்டுமே பார்த்து ரசித்த அவனுடைய கனவு தேவதை, இப்போது அவனுடைய கைக்கு எட்டும் தூரத்தில் அவன் முன்னே நின்று கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள். இது கனவா இல்லை நிஜமா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை இது கனவாக மட்டும் இருந்தால், இந்த கனவிலேயே அவனுடைய ஆயுள் மொத்தத்தையும் தொலைத்து விட்டு, இதிலேயே வாழ்ந்து விட வேண்டும் என்று உடனடியாக கடவுளிடம் வேண்டி கொண்டான் மகேஷ். 🙏
தன் முன்னே சித்த பிரம்மை பிடித்தவன் போல் நின்று கொண்டு, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருப்பவனை பார்த்து குழம்பிய வைஷாலி, அவன் முன் தன்னுடைய ஒரு கையையை அசைத்தவள், “ஹலோ சார்..!!! என்ன ஆச்சு உங்களுக்கு..??? இன்னும் அந்த ஷாக் -ல இருந்து வெளில வரலையா நீங்க..??? அந்த பால் உங்க மேல படவே இல்ல." என்றாள் சாதாரணமான குரலில். வைஷாலியின் இனிமையான குரல், மகேஷின் காதுகளில் தேனிசைத் தென்றலாய் வந்து பாய்ந்தது. 😍 🎶 🎶
அந்த காரணத்தில் தன்னை தொலைத்தவன், மோன நிலைக்கு சென்று விட்டான். அவளுக்காக அவனுடைய இதயம், இந்த பட்டப் பகலில் அடிக்கும் வெயிலில்... பனி கட்டியாய் உருகி கரைந்தது. ❤️
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…
இன்று வசப்படவில்லையடி… 😅
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா… 😍
ஒரு உருண்டையும் உருலுதடி… ☺️
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் 😍
ஒரு நிமிஷமும் வருஷமடி… 🤩 ❤️
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்… 🤩
ஒரு கலக்கமும் தோன்றுதடி…
🥰 ❤️ 💫 🌟✨
அந்த பாலை அவள் தன்னுடைய காலால் உதைத்த விதைத்ததை பார்த்து வியந்த அங்கு இருந்த மாணவர்கள், “சூப்பர் மேம்" என்று கத்திய படியே உற்சாகமாக கைத்தட்டி அவளை பாராட்டினார்கள். 😍 👏 சில மாணவர்கள் விசில் அடிக்க கூட தொடங்கி இருந்தனர். எப்போதும் விளையாட்டு வீரர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கிடைக்க பெறும் பாராட்டு ஒரு போதை போன்றது. அதற்கு அடிமையாகாதவர் என்று யாரும் இல்லை. அந்தப் பாராட்டுக்கள் அவர்களை உற்சாகப்படுத்தி இன்னும் அவர்கள் மெம்மேலும் சிறந்த சாதனைகளை செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்துகிறது. அதனால் அந்த மாணவர்களை பார்த்து மகிழ்ந்த வைஷாலி, அழகாக புன்னகைத்தாள். 😁😁 😁
அந்த மாணவர்கள் எழுப்பிய சத்தத்தால் தன்னுடைய கனவு உலகில் இருந்து வெளி வந்த மகேஷ், தன் அருகே நின்று அந்த மாணவர்களை பார்த்து அழகாக புன்னகைத்து அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருந்த வைஷாலியை பார்த்தான். பின் அவளோடு பேசுவதற்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அழைத்தவன், “மேம் நீங்க வைஷாலி தானே?" என்று சிறு வெட்கம் கலந்த தயக்கத்துடனே கேட்டான்.
வைஷாலி அவனை கேஷுவலாக பார்த்தவள், “ஆமா..!!! நான் வைஷாலி தான். நீங்க யாரு..??? நானே இன்னைக்கு தான் இங்க ஜாயின் பண்ணேன். உங்களுக்கு எப்படி அதுக்குள்ள என்னோட பேர் தெரியும்?" என்று ஆச்சரியமாக கேட்டாள்.
மகேஷ்: ஐ அம் மகேஷ். நானும் இங்க பீ.ட்.டி டீச்சரா தான் வர்க் பண்றேன். புதுசா ஒரு பீ.ட்.டி டீச்சர் வந்து இருக்காங்கன்னு ஆபீஸ்ல சொன்னாங்க. அதான் அவங்க யாருன்னு பாத்துட்டு போகலாம்னு வந்தேன். ஆனா அது நீங்களா இருப்பீங்கன்னு.. சத்தியமா நான் நினைச்சு கூட பாக்கல.
வைஷாலி: சோ, உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியுமா...??
மகேஷ்: நானும் ஸ்போர்ட்ஸ் மேனா இருந்துக்கிட்டு உங்கள தெரியாம எப்படிங்க..??? கிரிக்கெட்ல ஆல்ரவுண்டர் இருக்க மாதிரி ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்லயே நீங்க ஆல்ரவுண்டர். உங்களுக்கு விளையாட தெரியாத கேம்ன்னு ஒன்னு ஏதாவது உலகத்துல இருக்குதா என்ன? இந்த சின்ன வயசுல ஒரு பொண்ணு எப்படி விளையாடி, எல்லா கேம்லயும் பெஸ்ட்டா இருக்க முடியுமான்னு உங்கள பாத்து நான் நிறைய தடவ இன்ஸ்பையர் ஆயிருக்கேன் இன்பாக்ட் நான் அவங்களோட பெரிய ஃபேன்.
நீங்க இந்நேரம் நேஷனல் லெவல், இன்டர்நேஷனல் லெவல்ன்னு அடுத்தடுத்து போகிறதுக்காக ப்ராக்டிஸ்ல இருப்பிங்கன்னு நினைச்சேன். ஆனா இங்க நான் ஒர்க் பண்ற ஸ்கூல்லையே டீச்சரா வருவீங்கன்னு... சத்தியமா நான் எதிர்பார்க்கலைங்க. ஐ அம் shocked.
வைஷாலி: sports is everything for me. நீங்க சொன்ன மாதிரி நான் எல்லா கேமும் விளையாடுவேன் தான். அதுல நான் பெஸ்ட்டா இருக்கனான்னு எனக்கு தெரியல. ஆனா ஒவ்வொரு நிமிஷமும் வேஸ்ட் ஆக ட்ரை பண்ணிட்டு இருக்கேன். எனிவேஸ் தேங்க்ஸ் பார் யுவர் அப்ரிசேஷன் மிஸ்டர் மகேஷ்.
மகேஷ்: “யப்பா..!!!! தன்னடக்கம், அழகு, அறிவு, திறமைன்னு எல்லாமே ஒரே பொண்ணு கிட்ட எப்படி டா இருக்க முடியும்...??? என்ன பொண்ணுடா இவ...!!!!" 😮 என்று தன் மனதிற்குள் நினைத்தவன், “நீங்க இப்பவே பெஸ்ட் தாங்க. விடாம ப்ராக்டிஸ் பண்ணிட்டே இருந்தீங்கன்னா... இன்னும் பெட்டர் ஆயிடுவீங்க." என்று தனக்குள் இருந்த பூரிப்பை மறித்து கொண்டு அவனால் முடிந்தவரை நார்மலாக அவளிடம் பேசினான்.
இவர்கள் இருவரும் இப்படி பேசிக் கொண்டு இருக்க அந்த மாணவர்கள் கூட்டத்தில் இருந்து வைஷாலியை பார்த்து பேசிய ஒரு மாணவன், “மேம் நாங்க எல்லாம் 12 த் ஸ்டாண்டர்ட் படிக்கிறோம். எங்களுக்கு எல்லாம் பீ.ட்.டி. பீரியட் கிடைக்கிறதே அதிசயம். இன்னும் இந்த பீரியட் முடியறதுக்கு 20 மினிட்ஸ் தான் பேலன்ஸ் இருக்கு. வாங்க விளையாடலாம்." என்றான். அவன் சொன்னதை கேட்ட வைஷாலி லேசாக புன்னகைத்தவள், “யா லெட்ஸ் கோ." என்றவள் கீழே கிடந்த புட்பாலை கைகள் எடுத்துக்கொண்டு, மகேஷ் ஐ ஒரு பார்வை பார்த்து தன் கண்ணாலேயே “பை" சொல்லிவிட்டு மீண்டும் அந்த மாணவர்களோடு இணைந்து விளையாட தொடங்கினாள்.
மகேஷோ, அங்கு இருந்து செல்ல மனமின்றி அங்கு மரத்தின் அடியே ஓரமாக போட பட்டு இருந்த சேரில் அமர்ந்தவன், அவள் மாணவர்களோடு இணைந்து விளையாடும் அழகே பார்த்து ரசிக்க தொடங்கினான். ஒரு நாள் இப்படி அவளோடு இணைந்து விளையாடும் வாய்ப்பு தனக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்ற, அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு கடவுளிடம் இமிடியேட்டாக ஒரு வேண்டுதலை வைத்தான். 🙏
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 91
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.