அத்தியாயம் 83: என் கதை முடியும் நேரம் இது (பார்ட் 1)
விஷ்ணுவிற்கு ராகவியின் மீது இருந்த அதீத நம்பிக்கையின் காரணமாக அவள் எப்படியும் அந்த தங்க நடராஜர் சிலையை திருடி இருக்க மாட்டாள் என்று அவன் நம்பினான். இப்போது மானசா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டதால், அந்த சிலையை யார் திருடியது என்று உடனே கண்டுபிடித்தால் தான் ராகவியை இந்த பழியில் இருந்து மீட்க முடியும் என்று நினைத்தான் விஷ்ணு. அதனால் கால் செய்து அந்த பள்ளியின் செக்யூரிட்டி டீம் இன் சார்ஜை பிரின்சிபாலின் அறைக்கு வரச் சொன்னான். விஷ்ணு என்ன கேட்கப் போகிறான் என்று ஏற்கனவே அறிந்து இருந்த அந்த செக்யூரிட்டி டீம் ஹெட், விஷ்ணு கேட்கவிருந்த அனைத்து தகவல்களையும் ஏற்கனவே கலெக்ட் செய்துவிட்டு அங்கே வந்தார்.
விஷ்ணு: “சி.சி. டிவி. ஃபுட்டேஜ் எல்லாத்தையும் செக் பண்ணிட்டீங்களா அதுல ஏதாவது கிடைச்சுதா..??" என்றான், அந்த செக்யூரிட்டி டீம் ஹெட்டிடம்.
யூரிட்டி டீம் ஹெட்: “நோ சார்..!! அவங்க கிளெரா கேமரால மாட்டாத அளவுக்கு எல்லாமே பிளான் பண்ணி பண்ணிருக்காங்க." என்று சொல்ல...
அதைக் கேட்ட ராகவியின் முகம் சுருங்கி போய்விட்டது. 😞 மானசாவோ, தன்னுடைய திறமையை நினைத்து தனக்குள் பெருமை பட்டு கொண்டு இருந்தாள். விஷ்ணுவோ இன்னும் நிதானமாக தான் இருந்தான். 😌 அவனுடைய முகத்தில் நம்பிக்கைக்கான சாயல் தெரிந்தது.
விஷ்ணு: “ஓகே பைன். அப்ப அந்த கேமரா ஃபுட்டேஜ் ஐ போய் செக் பண்ணுங்க. அதுல கண்டிப்பா ரெக்கார்ட் ஆகி இருக்கும்." என்று உறுதியான கண்களோடு அவரை பார்த்து சொன்னான்.
விஷ்ணு, எந்த கேமரா ஃபுட்டேஜை பற்றி இப்போது பேசி கொண்டு இருக்கிறான்..?? என்று புரிந்து கொள்ள முடியாத மானசா, குழப்பத்தில் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள். 🙄 அவளுக்குக தெரிந்த வரை அந்த பள்ளியில் இருக்கும் அனைத்து கேமராவையும் அவள் ஹேக் செய்து விட்டாள். அப்படி இருக்கும் போது, தனக்கு தெரியாமல் புதிதாக எங்கு இருந்து வேறொரு கேமரா வந்தது என்று யோசித்துக் குழம்பினாள். விஷ்ணு அந்த செக்யூரிட்டி டீம் இன் ஹெட்டின் வருகைக்காக காத்திருந்தான்.
பிரின்சிபல் அறையில் இருந்து வெளியே வந்த செக்யூரிட்டி டீம் இன் ஹெட், தங்களுடைய செக்யூரிட்டி ஆபீஸ் -க்கு சென்றார். தன்னை தவிர அங்கு வேலை பார்க்கும் மற்ற அனைவரையும் அங்கு இருந்து வெளியே அனுப்பி விட்டவர், அந்த ரூமில் இருந்த ஒரு செல்ஃபில் இருந்த பொருட்களை தள்ளி வைத்துவிட்டு, அங்கே இருந்த ஒரு பட்டனை அழுத்தினார். அவர் அந்த பட்டனை அழுத்தியதும், அந்த செல்ப் ஒரு பக்கமாக நகர்ந்து அங்கே இன்னொரு சீக்ரெட் அறை தோன்றியது.
அந்த அறைக்குள் வந்த டீம் ஹெட், அந்தப் பள்ளியில் யாருக்கும் தெரியாமல் விஷ்ணு செட் செய்து வைத்து இருந்த ஹிட்டன் கேமராவில் பதிவான ஃபுட்டேஜ் ஐ செக் செய்தார். சில நிமிடங்களிலேயே மானசா செய்த அனைத்து சதி வேலைகளுக்கான சான்று அவருக்கு கிடைத்தது. அந்த ஹிட்டன் கேமராவில்.. மானசா உள்ளே வந்தது முதல், வெளியே அந்த சிலையை திருடிக் கொண்டு சென்றது வரை, அனைத்தும் பதிவாகி இருந்தது.
இந்தப் பள்ளியை தன்னுடைய மகனுக்காக கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டது விஷ்வாவாக இருந்தாலும், இதனுடைய பில்டிங் பிளான் முதல் கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் வரை அனைத்தையும் அருகில் இருந்து கவனித்து நடத்தி முடித்தது விஷ்ணு தான். இந்த பள்ளி கட்டத்தொடங்கும் போது தான் விஷ்ணு தன்னுடைய இளங்கலை பட்டப்படிப்பை முடித்தான். அவன் பிசினஸை கவனிக்காமல் பொறுப்பின்றி சுற்றுவதால், அவனுக்கு ஒரு வேலையை கொடுத்தால் தான் அவனுக்கும் பொறுப்பு வரும் என்று நினைத்த விஷ்வா; வலுக்கட்டாயமாக இந்த பள்ளியை கட்டமைக்கும் பொறுப்பு முதல், நிர்வாகம் செய்யும் பொறுப்பு வரை அனைத்தையும் விஷ்ணுவிடமே ஒப்படைத்தான்.
தன்னுடைய அண்ணா தன்னை நம்பி தன்னைக்கு கொடுத்த முதல் பொறுப்பு இது தான் என்பதால், அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்த விஷ்ணு, அதை கண்ணும் கருத்துமாக செய்து முடித்தான். நாம் என்ன தான் பாதுகாப்பிற்காக செக்யூரிட்டி கேமராக்களை பொருத்தினாலும், அதன் கண்ணிலும் மண்ணை தூவி எப்படியாவது சிலர், பல நாச சம்பவங்களை தடயம் இன்றி செய்து விடுகிறார்கள். அதனால் விளையாட்டாக, சில ஹிட்டன் கேமராக்களை ஆங்காங்கே வைத்தால் என்ன..?? என்று நினைத்த விஷ்ணு, அந்த பள்ளியின் செக்யூரிட்டி டீம் இன் ஹெட்டின் உதவியோடு இதை செய்தான்.
அந்த பள்ளியின் முக்கியமான ஒவ்வொரு இடத்திடும் இரண்டு மூன்று ஹிட்டன் கேமராக்களை யாருக்கும் தெரியாமல் விஷ்ணு, அந்த பள்ளியின் கட்டுமான பணிகள் முடிந்த உடனே ஆட்களை வைத்து பிக்ஸ் செய்து விட்டான். விஷ்ணுவின்ன் இந்த செயல்கள் அனைத்தும்; அவனையும், அந்த செக்யூரிட்டி டீம் இன் ஹெட்டையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. விஷ்ணு இதை விளையாட்டு தனமாக தான் செய்தான். அதனால் இது பற்றி அவன் விஷ்வாவிடம் கூட தெரிவிக்கவில்லை.
இப்படி எல்லாம் நடக்கும் என்று விஷ்ணு அன்றே கணித்து இருந்ததால், இன்று மானசாவின் சதி செயல் அம்பலமாக இருக்கிறது. அங்கு இருந்த சிஸ்டமின் முன் அமர்ந்த டீம் இன் ஹெட் ஆபிசர், தனக்கு தேவையான காட்சிகளை மட்டும் கட் செய்து ஒரு பெண் டிரைவில் காப்பி செய்தார். பின் அதை எடுத்து கொண்டு தான் வந்த வளியே திரும்பி வந்தவர், பிரின்சிபாலின் அறைக்கு சென்று அதை விஷ்ணுவிடம் கொடுத்தார். அவர் தன் கையில் ஒரு பென்டிரைவோடு வந்து அதை விஷ்ணுவிடம் வேறு கொடுப்பதை கவனித்த மானசாவின் கை, கால்கள் எல்லாம் பயத்தில் நடுங்கின. 😖
விஷ்ணு அந்த பென் டிரைவை தன்னுடைய கையில் வாங்கியதும், அந்த டீம் இன் இன்சார்ஜ், மானசாவை ஒரு கேவலமான லுக் விட்டார். 🤨 அதை கவனித்த மானசாவிற்கு, “என் கதை முடியும் நேரம் இது... என்பதை சொல்லும் ராகம் இது...!!!" என்ற பாடல் அவளுடைய மனதில் ஓடியது. அவளுக்கு இந்த பயம் அவளுடைய முகத்தில் கூட அப்பட்டமாக தெரிந்து. 😖😣
விஷ்ணு தன் முன்னே இருந்த கம்ப்யூட்டரில் அந்த பென் டிரைவை பொருத்தி, அதில் இருந்த ஹிட்டன் கேமராவின் புட்டேஜ் ஐ பிளே செய்து பார்த்தான். அதை பார்த்துக் கொண்டு இருந்த விஷ்ணுவின் உதடுகள் தன்னை அறியாமல் மானசாவின் பெயரை முணுமுணுத்தது. அவன் அந்த கம்ப்யூட்டர் திரையை, கூர்மையான கண்களோடு முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான். 😒 🤨
அதை கவனித்த மானசா, அவ்வளவு தான் தன்னுடைய கதை முடிந்துவிட்டது, என்று முடிவே செய்து விட்டாள். அவளுக்கு இருந்த பயத்தில், அவளுடைய உடம்பெல்லாம் வியர்வையில் நனைந்து நடுங்கிக் கொண்டு இருந்தது. 😕 விஷ்ணு அந்த ஃபுட்டேஜை பார்க்கும் வரை யாரோ வெளி நபர் தான் வந்து இந்த காரியத்தை செய்துவிட்டு சென்று இருக்கிறார்கள் என்று தான் நினைத்து கொண்டு இருந்தான். இப்போதும் மானசா தான் அதை செய்து இருக்கிறாள் என்று அவனால் நம்ப முடியவில்லை.
மானசாவின் மீது அவனுக்கு கோபமும், வருத்தமும், ஒரு பக்கம் அவனுக்கு இருந்தாலும், இன்னொரு பக்கம், அவன் நம்பியது போலவே ராகவி இந்த குற்றச்செயலை செய்யவில்லை என்பதால், அவன் நிம்மதி அடைந்தான். பின் ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவன், தன் முன் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் இடம் பேச தொடங்கினான்.
விஷ்ணு: “அந்த சிலைய யார் திருடினதுன்னு கண்டுபிடிச்சாச்சு. நீங்களே அது யாருன்னு பாருங்க." என்றவன் தன் முன் இருந்த கம்ப்யூட்டர் ஸ்கிரீனை அந்த இன்ஸ்பெக்டரின் பக்கம் திருப்பினான்.
விரிந்த கண்களோடு ஆச்சரியமாக அந்த ஸ்கிரீனில் ஓடி கொண்டு இருந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு இருந்தார் அந்த இன்ஸ்பெக்டர். 😳 ராகவியின் முகத்திலும் அதே அதிர்ச்சி தெரிந்தாலும், அதை தாண்டி, அந்த சிலையை அவள் திருடிவிட்டு, அந்த பழியை தன் மீது போட பார்த்தாளே... என்று நினைத்த ராகவிக்கு மானசாவின் மீது கோபம் கோபமாக வந்தது. 😡 🔥
அதே கோபத்தில் வேகமாக அந்த சேரில் இருந்து எழுந்த ராகவி மானசாவின் அருகே சென்று, அவளுடைய கண்ணம் பழுக்கும் அளவிற்கு பளார் என்று பலமாக அறைந்தாள். அந்த வலியை பொறுக்க முடியாமல் , மானசா தன்னுடைய கன்னத்தில் கையை வைத்து கொண்டாள். அவளுடைய கண்கள் கோபத்தால் கலங்கியது. 🥺
மானசா என்ன தான் பயத்தில் இருந்தாலும், ராகவி தன்னை அடித்து விட்டதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் பெற்ற அடியை பதிலுக்கு இரண்டாக அவளுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தவள், தன்னுடைய கையை நீட்டிக்கொண்டு ராகவியை அடிக்கப்போனாள். அதை கவனித்த அங்கு இருந்த லேடி கான்ஸ்டபிள் மானசாவின் கையை பிடித்து அவளை தடுத்தவள், “ஏண்டி ஆள் வச்சு நீயே அந்த சிலைய திருடிட்டு.. அந்த அப்பாவி பொண்ணு மேல பழியை போட பாத்து இருக்கியா..???" என்று கேட்டவள், ராகவி மானசாவை அடித்த அதே கன்னத்திலேயே பளார் என்று நடித்தாள்.
ஏற்கனவே வலியில் இருந்த மானசாவின் கன்னத்தில் மீண்டும் கிடைத்த அடி இடியாக இறங்கியது. அவளுக்கு கண்களெல்லாம் இருட்டிக் கொண்டு வந்தது. ஒரு வேளை இது தான் தன் வினை தன்னை சுடும் என்பார்களே... அது போல...!!! மானசா ராகவிக்கு எந்த குழியை திட்டமிட்டு வெட்டி அதில் அவளை தள்ளி விட வேண்டும் என்று நினைத்தாளோ, அதே குழியில் இப்போது அவளே வாலண்டீராக வந்து விழுந்து விட்டாள்.
ஒரு வேளை இந்த பிரச்சனையில் மானசா, ராகவியை மாட்டி விட நினைத்து இருக்கவில்லை என்றால் கூட, தன் பள்ளியின் நற்பெயருக்காகவாவது மானசாவின் மீது கேஸ் கொடுக்காமல் அவளை இந்த பள்ளியை விட்டு துரத்திவிட்டு மட்டும் அப்படியே விட்டிருப்பான் விஷ்ணு. ஆனால் இப்போது அவள் எல்லை மீறி விட்டதால், அவளை அப்படியே விட அவனுக்கு மனம் வரவில்லை. சென்றமுறை ராகவியின் கைகளில் இருந்த ஹேண்ட் கஃப் இப்போது, மானசாவின் கைகளில் போலீசார்களால் மாட்டப்பட்டது. இவளுக்கெல்லாம் தண்டனை கிடைத்தால் தான் இவள் திருந்துவாள் என்று நினைத்த விஷ்ணு, போலீஸ் அவளை அரெஸ்ட் செய்து செல்லட்டும் என்று விட்டு விட்டான்.
அந்த இன்ஸ்பெக்டரும், ராகவியை அடித்த லேடி கான்ஸ்டபலும், அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மானசாவை இழுத்துக் கொண்டு அங்கு இருந்து சென்று விட்டனர். அவர்கள் அங்கு இருந்து சென்றவுடன், நன்றி உணர்வுடன் கலங்கிய கண்களோடு விஷ்ணுவை பார்த்த ராகவி, “தேங்க்ஸ் விஷ்ணு... 🙏 இல்ல விஷ்ணு சார்...!!!" என்று சறு தயக்கத்தோடு சொன்னாள். தன் தம்பியாக பார்த்து பழகிய விஷ்ணுவை இன்னும் அவளால் முதலாளியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அவனுக்கான மரியாதையை தந்தாக வேண்டிய இடத்தில் தான் இருப்பதால், அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 83
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.