தாபம் 82

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
போலீஸ்காரர்: “யார் நீங்க..??? எதுக்கு எங்க வேலையை எங்கள செய்ய விடாம தடுக்கிறீங்க..?? எங்களுக்கு இங்க இருந்து கம்ப்ளைன்ட் வந்து இருக்கு. அந்த கம்ப்ளைன்ட்க்கு நான் ஆக்சன் எடுக்கிறேன்." என்று பவ்யமாக பேசினார்.

விஷ்ணு: அந்த போலீஸ்காரர் தன்னிடம் பாவியமாக பேசியதால் திருப்தி அடைந்தவன் எழுந்து நின்று அவரை நேருக்கு நேராக பார்த்து, “ஐ அம் விஷ்ணு நாராயணன். சேர்மன் ஆப் ஜே. வி. ஸ்கூல்ஸ் அண்ட் ஒன் ஆப் தி டைரக்டர் ஆப் நாராயணன் குரூப்ஸ்." என்றவன், அந்த இன்ஸ்பெக்டர் இன் முன் கை குலுக்குவதற்காக தன்னுடைய கையை நீட்டினான்.

அந்த இன்ஸ்பெக்டரும் நாராயணன் குரூப்ஸ் ஐ சேர்ந்த ஹரி நாராயணனை மற்றவர்களைப் போல் தெரிந்து வைத்து இருந்தான். தன் முன்னே இருக்கும் இந்த விஷ்ணுவும் முகத்தை ஹரியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தவன், அவர்களுடைய உருவ ஒற்றுமையை புரிந்து கொண்டு இவனும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் தான் என்று உணர்ந்து கொண்ட இன்ஸ்பெக்டர், நடுங்கிய கைகளோடு, “சாரி சார்..!! நான் உங்கள பார்த்ததில்ல. அதனால எனக்கு நீங்க யாருன்னு அடையாளம் தெரியல. அதான் இப்படி பேசிட்டேன்." என்று சொன்னபடியே விஷ்ணுவுடன் கை குலுக்கினார்.

விஷ்ணு: “அதான் இப்ப தெரிஞ்சுச்சுல்ல.. இதுக்கு மேலயாவது நான் என்ன சொல்ல வரேன்னு கேக்கறீங்களா...??" என்று நக்கலாக கேட்டவன், பிரின்சிபாலின் அறைக்குள் சென்று பிரின்சிபல் சாரதா அமரும் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான்.

விஷ்ணு; பிரின்சிபலின் அறைக்குள் சென்றதால் அவன் பின்னேயே அந்த அறைக்குள் போலீஸ் இன்ஸ்பெக்டரும், அவருடன் வந்த கான்ஸ்டபில்களும், ராகவியையும் உள்ளே அழைத்து கொண்டு சென்றனர். இத்தனை நாள் தன்னுடன் சகஜமாக பேசி பழகிய தன்னுடைய தம்பி போல் இருந்த விஷ்ணு தான் தன்னுடைய முதலாளியா என்று நினைத்த ராகவியின் கண்களுக்கு இன்று விஷ்ணு வேறு ஒரு ஆளாக தெரிந்தான். இத்தனை நாள் விஷ்ணுவிடம் அப்பாவி தினத்தையும், நட்பாக அனைவரிடம் பேசும் குணத்தையும், அவனுடைய சிரித்த முகத்தையுமே பார்த்து பழகி இருந்த ராகவிக்கு இப்போது அவனிடம் தெரியும் ஆளுமையும், அதிகார தோரணியும், மிகவும் புதிதாக இருந்தது.

விஷ்ணு: தன் முன்னை கை கட்டி நின்று கொண்டு இருந்த இன்ஸ்பெக்டரை பார்த்தவன், “உக்காருங்க சார். ஏன் நிக்கிறீங்க...??" என்ரான்.

இன்ஸ்பெக்டர்: “தேங்க்யூ சார்." என்று சொல்லிவிட்டு அமர்ந்தவர், “நீங்க கோபப்பட்டத பாத்தா இந்த கம்ப்ளைன்ட் -ட பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறேன். உங்க ஸ்கூலோட அட்மின் மேடம் தான் எங்களுக்கு கால் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணுனாங்க. அதனால தான் சார் நாங்க உடனே கிளம்பி வந்தோம்." என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

விஷ்ணு: அவர் சொன்னதை கேட்டு மானசாவை முறைத்து பார்த்தவன், “என் கிட்ட இன்ஃபார்ம் பண்ணாம நீங்க எதுக்கு கம்ப்ளைன்ட் குடுத்தீங்க மிஸ். மானசா...??" என்றான். 😒 🤨

மானசா: அவன் தன்னிடம் பட்டென்று அப்படி கேட்டு விட்டதால் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில நொடிகள் யோசித்தவள், “நான் சஸ்பென்ஷன்ல இருக்கும் போது, ஆல்ரெடி நம்ம ஸ்கூல் சி. சி. டிவி. கேமராவ யாரோ அடிச்சு ஒடச்சிருக்காங்க. இப்ப திருப்பி இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தா, நம்ம ஸ்டூடன்ட்ஸ்க்கு பாதுகாப்பு வேணாமா சார் அதுனால தான் கம்ப்ளைன்ட் குடுத்தேன்." என்று தனக்கு தோன்றியதே ஒரு பதிலாக தயாரித்து அவனிடம் சொன்னாள்.

விஷ்ணு: அவளை கூர்மையான விழிகளுடன் நோக்கியவன், “நீங்க இங்க வெறும் அட்மின் ஆபீசர் மட்டும் தான். அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா...???" என்றான். 😒

மானசா: அவன் என்ன அர்த்தத்தில் இதை கேட்கிறான் என்று உடனே புரிந்து கொண்டவள், “இருக்கு சார்." என்று மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.

விஷ்ணு: அப்ப உங்களோட ரெஸ்பான்சிபிலிடிஸ் என்ன, லிமிட்ஸ் என்னன்னு, உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்ல்ல....??

மானசா: இந்த கேள்விக்கு அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதனால் தன்னுடைய தலையை குனிந்து கொண்டவள், “சாரி சார்." என்றாள்.

விஷ்ணு: நீங்க செஞ்சு வச்ச வேலையால எங்க ஸ்கூலோட ரெபிடேஷன் கெட்டுப் போச்சுன்னா உங்க சாரிய வச்சு அத என்னால சரி பண்ணிட முடியுமா...???

மானசா: இம்முறை சாரி சொல்வதற்கு கூட தைரியம் இன்றி, விஷ்ணுவை பார்த்த படியே அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்.

இதற்கு மேலும் மானசாவிடம் பேசிக் கொண்டு இருப்பது வேஸ்ட் என்று நினைத்து விஷ்ணு, அங்கு இருந்த இன்ஸ்பெக்டரை பார்த்து ராகவியை கை காட்டி, “முதல்ல அவங்க ஹேண்ட் கஃபா கழட்டி விடுங்க சார். இன்னும் அத யார் திருடுனதுன்னு கன்ஃபார்மா தெரியாதப்போ எப்படி நீங்க அவங்கள இப்டி அக்கியூஸ்ட் மாதிரி ட்ரீட் பண்ணலாம்..??" என்று கோபமாக 😒 கேட்க, தன் ஏதோ தேவை இல்லாத வேலையை செய்து விட்டோம் போல என்று நினைத்து பயந்த இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிலை அழைத்து ராகவியின் கையில் இருந்த ஹேண்ட கஃப் ஐ ரிமூவ் செய்யச் சொன்னார்.

தன் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டு விஷ்ணு எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து தன்னை காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை ராகவிக்கு இருந்தது. அதனால் அவள் நிம்மதியாக உணர்ந்தாள். ஓரமாக நின்று கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த ராகவியை கவனித்த விஷ்ணு அவளை அழைத்து, தன் முன்னே இன்ஸ்பெக்டர் அமர்ந்து இருந்த சாருக்கு அருகே இருந்த சேரில் அமர சொன்னான்.

விஷ்ணுவின் உண்மையான அடையாளம் பற்றி இப்போது ராகவி தெரிந்து கொண்டதால், அவன் முன் எப்படி தான் சகஜமாக அமருவது என்று நினைத்து தயங்கிய ராகவி, என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தாள். அந்த இன்ஸ்பெக்டரோ ஓர கண்ணால் ராகவியை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான். விஷ்ணு அங்கே வரும் வரை தான் யாரை அக்யூஸ்டாக பாவித்து அரெஸ்ட் செய்ய நினைத்தோமோ அவளையே இப்போது இவன் தனக்கு அருகில் சமமாக இவன் அமர வைக்கிறானே என்று நினைத்து அவருக்கு எரிச்சலாக இருந்தது. 😕 இருந்தாலும் அவர் விஷ்ணுவை பகிர்ந்து கொள்ள துணியவில்லை. அதனால் அமைதியாக அமர்ந்திருந்தார்.

விஷ்ணு: ராகவியின் தயக்கத்தை புரிந்து கொண்டவன், “அட நான் சொல்றேன்ல வந்து உட்காருங்க அக்கா." என்று அக்கறையாக சொன்னவனின் குறலில் ராகவயின் மீது அவனுக்கு இருந்த மரியாதை துளியும் குறையவில்லை. அவனுக்கு ராகவியின் மீது அதீத நம்பிக்கை இருந்தது.

விஷ்ணு இப்போதும் தன்னை சந்தேகப்படாமல் தன் மீது மரியாதை வைத்து தன்னை அக்கா என்று அன்பாக அழைத்ததால் ராகவி, மெய் சிலிர்த்து போனாள். அவளுடைய கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது. 😭

விஷ்ணு: “ப்ளீஸ்..!! அழாதீங்க அக்கா. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. உங்களுக்காகவாவது அந்த சிலையை யார் திருடுனதுன்னு நான் சீக்கிரம் கண்டு பிடிப்பேன்." என்று உறுதியான குரலில் சொன்னான்.

விஷ்ணுவின் குரலில் இருந்த உறுதி, ராகவியையும் தொற்றிக்கொள்ள... தான் எந்த தவறும் செய்யாத போது இப்போது நாம் ஏன் இப்படி வருத்தப்பட்டு விஷ்ணுவின் முன் சங்கடப்பட்டு நிற்க வேண்டும்..?? என்று நினைத்த ராகவி, தைரியமாக அந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் அமர்ந்து இருந்த சேரின் அருகே இருந்த சேரில் வந்து அமர்ந்தாள்.

விஷ்ணு ராகவியிடமும், அந்த இன்ஸ்பெக்டர் இடமும், நடந்தது அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான். எதன் அடிப்படையில் ராகவி தான் குற்றவாளி என்று அந்த இன்ஸ்பெக்டர் முடிவு செய்தார் என்று கேட்டு தெரிந்து கொண்ட விஷ்ணு, அவரை பார்த்து கோபமாக முறைக்க தொடங்கினான். 🤨

விஷ்ணு: “என்ன சார் இப்படி சென்ஸ் லெஸ்சா பிகேவ் பண்ணி இருக்கீங்க..??? ஒரு பொண்ணு கிட்ட எப்படி ப்ராப்பரா விசாரிக்கணும்னு உங்களுக்கு தெரியாதா..?? நீங்க அவங்கள இங்க இருந்து அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போனதுக்கு அப்புறமா அவங்க மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சு நீங்க அவங்கள வெளியில விட்டுட்டா கூட, இங்க இருந்து அவங்கள நீங்க அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறத எத்தன பேர் பாத்திருப்பாங்க.. அது அவங்களுக்கு அவமானமா இருக்காதா...??? தப்பு எல்லாத்தையும் நீங்க உங்க மேல வச்சுக்கிட்டு அவங்க உங்கள கேள்வி கேக்குறாங்கன்னு நீங்க அடிச்சு இருக்கீங்க...!!!

சரி இவ்ளோ பண்ணியும் கடைசில அத யார் எப்படி கரெக்டா திருடிட்டு போனாங்கன்னு கூட உங்களால கண்டுபிடிக்க முடியல...!!! இந்த அக்கா மேல கேஸ்ச போட்டு அப்படியே கேசை கிளோஸ் பண்ணிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்க அப்படி தானே..??? அவங்க ஒரு பேக் ஐ எடுத்துட்டு போனது எல்லாம் ஒரு ப்ரூப் ஆ...??? அது சி. சி.டிவி. கேமராவில ரெக்கார்டு இருக்குன்னு சொன்னீங்க இல்ல... அவங்க அந்த பேக்கை டான்ஸ் பிராக்டீஸ் ஹால்ல இருந்து எடுத்துட்டு வர்றதோ, இல்ல அந்த ஹால்ல இருக்கிற சி.சி. டிவி. கேமரால அவங்க அத திருடுறதோ ரெக்கார்டு ஆகி இருக்கா..???" என்று கோபமாக கேட்டான். 😡

இன்ஸ்பெக்டர்: “இல்ல சார். ஆனா எனக்கு இந்த பொண்ணு மேல தான் சந்தேகமா இருக்கு." என்று மெல்லிய குரலில் சொன்னார்.

“இதுக்கு மேல நீங்க எதுவும் பேச வேண்டாம். அத யார் திருடுனதுன்னு நானே கண்டு பிடிக்கிறேன்." என்று சொன்ன விஷ்ணு, அந்த பள்ளியின் செக்யூரிட்டி டீம் ஹெட்டை கால் செய்து அங்கே வருமாறு அழைத்தான். அப்போது சாரதாவும் சரியாக அந்த அறைக்குள் வந்து கொண்டு இருந்தாள். சாரதாவை கவனித்த விஷ்ணு, “மேம்.. நீங்க கொஞ்சம் வெளியில வெயிட் பண்ணுங்க. இங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு." என்றான். அதை கேட்ட சாரதா, இங்கு என்ன தான் நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்துடன் வெளியே சென்றுென்று விட்டாள். 🙄

மானசாவின் சதி செயலை கண்டுபிடித்து விஷ்ணு ராகவியை காப்பாற்றுவானா? ராகவி, விஷ்ணுவை பற்றி தனக்கு தெரிந்த அவனுடைய அடையாளம் பற்றிய உண்மைகளை ஷாலினியிடம் சொல்வாளா? ஷாலினிக்கு விஷ்ணுவின் உண்மையான அடையாளம் பற்றி தெரிந்தால் அவள் என்ன செய்வாள்? டாக்டர் அருணின் குழந்தையை கடத்தியது யார்?


- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 82
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.