டிராபிக்கில் சிக்கி வெகு நேரமாக போராடி இப்போது தான் பள்ளிக்கு வந்து சேர்ந்தான் விஷ்ணு. அவன் உள்ளே வந்த உடனேயே செக்யூரிட்டி ஆபீசர்கள் நடந்தவற்றை அவனிடம் இன்பார்ம் செய்தனர். தன்னை கேட்காமல் போலீசிடம் யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது என்று கோவமாக கேட்ட விஷ்ணு, மானசா செய்த அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு வேகமாக ஆபீஸ் ரூமிற்கு வந்தான்.
விஷ்ணு அங்கே வருவதற்குள் எப்படியாவது ரித்திகாவை இங்கு இருந்து போலீசார்களால் அரெஸ்ட் செய்து இந்த பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பி விட வேண்டும் என்று நினைத்த மானசா அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து, “எனக்கும் இந்த பொண்ணு மேல தான் சார் டவுட்டா இருக்கு. நீங்க இவள அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் நல்லா விசாரிங்க. அப்ப தான் இவ உண்மைய ஒத்துக்குவா." என்றவள், ரித்திகாவை கோபம் நிறைந்த கண்களோடு பார்த்தாள். 😡 🤬
மானசா சொன்னதை கேட்டு, ரித்திகாவின் கைகளில் விலங்குகளை மாட்டிய லேடி கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரை பார்த்து அவளின் பங்கிற்கு, “ஆமா சார்..!! இவள ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிச்சா தான் இவளோட திமிர் எல்லாம் அடங்கும்." என்றவள், ரித்திகாவை வலுக்கட்டாயமாக அந்த ஆபீஸ்ல ரூம் இன் கதவை விட்டு வெளியே இழுத்து செல்ல பார்த்தாள்.
அந்த காட்சியை பார்த்த மானசா, சிறகுகள் இன்றி வானில் பறந்து கொண்டு இருந்தாள். 💃 அவளுக்கு இருந்த பெரிய தடையை நீக்கிவிட்ட மகிழ்ச்சி அவளுடைய முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 😊 😁 அவளுடைய திட்டம் அனைத்தும் அவள் நினைத்தது போலவே சரியாக நடந்கொண்டு இருப்பதால்... தன்னை தானே மெச்சி கொண்ட மானசா, அவள் செய்த வீர, தீர செயல்களை நினைத்து பார்த்தாள்.
பிளாஷ் பேக்....
மாலை வேளையில் அனைத்து ஆசிரியர்களும் சென்ற பின், இறுதியாக பள்ளியில் இருந்து சென்றது மானசா தான். கௌத்தமும், மானசாவும், அந்தப் பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு விழாவிற்கு தேவையான ஆடைகளை தேர்வு செய்து அதில் ஒவ்வொரு சாம்பிள் பீஸ்களும் வாங்கி வந்து இருந்தனர்.
அவர்கள் சென்றதே மத்திய உணவு இடைவேளைக்கு பின்பு தான் என்பதால், அவர்கள் திரும்பி வருவதற்கு மணி மாலை 6: 00க்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் திரும்பி வரும்போது பள்ளியில் முக்கியமான சில செக்யூரிட்டி ஆபீஸ்சர்களையும், பாடிகார்டுகளையும், தவிர வேறு யாரும் இல்லை. அதை தனக்கு சதாகமாக பயன்படுத்தி கொண்ட மானசா, கௌத்தமிடம் இருந்து அனைத்து பைகளையும் பெற்று கொண்டவள், தானே அதை அனைத்தையும் ஆபீஸ் ரூமில் கொண்டு போய் வைப்பதாக சொல்லிவிட்டு அதை எடுத்து கொண்டு உள்ளே சென்றாள்.
ஏற்கனவே இத்தனை மணி நேரம் மானசாவுடன் தனியாக வெளியே சென்றுவிட்டு வந்து இருந்ததால் அவள் மீது கடுப்பாக இருந்த கௌத்தம், எப்படியோ இவளிடம் இருந்து தனக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்து, “என்னமோ பண்ணு." என்றவன், அந்த பைகளை அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பி விட்டான். கௌத்தமும் தனக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் அங்கு இருந்து சென்றுவிட்டது மானசாவிற்கு இன்னும் வசதியாக போய்விட்டது.
அந்த பைகளை ஒவ்வொன்றாக மெதுவாக எடுத்த படி உள்ளே சென்ற மானசா, தன்னுடைய மொபைல் போனில் யாருக்கோ மெசேஜ் செய்து கொண்டு இருந்தாள்.
அந்த மெசேஜில்...
நாம் இது வரை எதிர்பார்த்து காத்திருந்த தருணம் இப்போது வந்துவிட்டதாகவும், அவள் இங்கே இருந்து ஃபார்மாலிட்டிக்காக மெயின் கேட்டின் வழியாக வழக்கம் போல் வெளியே சென்ற பத்தாவது நிமிடத்தில்.. அவள் அவர்களை அந்த பள்ளியின் பின்புறத்தில் சந்திப்பதாக அதில் மெசேஜ் செய்து இருந்தவள், அதற்குள் அனைத்தையும் தயாராக வைத்திருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினாள்.
அவளோ, அவளை சேர்ந்தவர்களோ, சி. சி.டிவி. கேமராவில் மாட்டி கொள்ள கூடாது என்று நினைத்த மானசா, தன்னுடைய அறைக்கு வந்து அவளுடைய அட்மின் ஆபீசில் இருந்த கம்ப்யூட்டரின் மூலம் செக்யூரிட்டி ஆபீசில் இருந்த கம்ப்யூட்டரையும், பிரின்சிபல் ஆபீஸில் இருந்த கம்ப்யூட்டரையும் ஹேக் செய்தாள். அந்த அனைத்து கம்ப்யூட்டர்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதாலும், அவை அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தது என்பதாலும், அவளும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதாலும், மானசாவிற்கு அதை ஹேக் செய்வது கடினமாக இல்லை.
ஐந்தே நிமிடத்திற்குள் அனைத்து கம்ப்யூட்டர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மானசா; டிஜிட்டல் செக்யூரிட்டி சிஸ்டமையும், சி.சி.டிவி. கேமராவையும் ஹேக் செய்தாள். அந்தப் பள்ளி தொடங்கப்பட்ட நாள் முதல் அவள் அந்த பள்ளியில் இருப்பதால், எங்கெங்கே எந்த மாதிரியான பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும் என்று நன்கு தெரிந்து வைத்து இருந்த மானசா, முதலில் அந்த நடராஜன் சிலையை சுற்றி இருக்கும் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்தாள்.
பின் சி. சி. டிவி. கேமராவில் தன்னுடைய ஆட்களும், தானும், மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் சம்பவத்தை ரெக்கார்ட் செய்தவள், அதை லூப் மோடில் போட்டு விட்டாள். ஒரே மாதிரியான காட்சிகளே வெகு நேரம் ஓடி கொண்டு இருந்தால், அதை சர்வே லென்ஸ் டீமில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் கவனித்து சந்தேகப்பட கூடும் என்று நினைத்தவள், 15 நிமிடத்திற்கு மட்டும் அந்த காட்சிகள் லூப் மோடில் ஓடும் படி படிடைமர் செட் செய்து விட்டாள்.
தான் நினைத்தது போலவே அனைத்தையும் கேஷுவலாக செய்து முடித்த மானசா, 15 நிமிடத்திற்குள் அனைத்தையும் நாசுக்காக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தவள், வேகமாக தன்னுடைய ஹேண்ட் பேக்கை மட்டும் எடுத்து கொண்டு மெயின் கேட்டின் வழியாக அமைதியாக வெளியே சென்று விட்டாள். எப்போதும் தன்னுடைய வீட்டிற்கு செல்லும் பாதையில் தான் இப்போதும் செல்பவளை போல் பவல காட்டிய மானசா; பின் வேறொரு சந்துக்குள் பூந்து அந்த்த பள்ளியின் பின்புறமாக வந்து விட்டு, தன்னுடைய ஆட்களுக்கு சைகை செய்து அவர்களை அங்கே வரவழைத்து, அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு ஏணியை போட்டு அசால்டாக அவர்களை உள்ளே ஏறி குதிக்க சொன்னவள், தானும் உள்ளே குதித்தாள்.
மானசாவின் வழி காட்டுதலால் நேராக டான்ஸ் பிராக்டீஸ் ஹாலிற்கு அந்த அடியாட்கள் அவளுடன் வந்து சேர்ந்தனர். மானசா அங்கு இருந்த அனைத்து செக்யூரிட்டி சிஸ்டம்களையும் ஏற்கனவே தகர்த்து இருந்ததால், அவர்கள் சாதாரணமாக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.
அவர்கள் உள்ளே சென்ற பின், அந்த பெரிய சவுண்ட் ப்ரூப் ஹால் இன் கதவை சாத்தி விட்டனர். அந்த டான்ஸ் பிராக்டீஸ் ஹாலில் பொதுவாக பிராக்டிஸ் செய்யும் போது பெரிய ஸ்பீக்கர்களை வைத்து பாடல்கள் முழங்கப் படுவதால், அது அருகில் உள்ள்ள வகுப்பறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொந்தரவாக இருக்க கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக தான் அந்த அறை சவுண்ட் ஃப்ரூப் ஆக பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டது. அந்த அறையின் இந்த சிறப்பம்சம், அங்கு வந்த கயவர்களுக்கு அவர்களுடைய வேலையை இன்னும் சுலபமாக்கி விட்டது.
அந்த நடராஜர் சிலையை மூடி இருந்த இரண்டு கண்ணாடி பெட்டிகளையும் ஒரு இரும்பு கம்பியை கொண்டு எளிதாக அடித்து உடைத்தவர்கள், அதில் இருந்த தங்க நடராஜர் சிலையை எடுத்து கொண்டு தாங்கள் வந்த அடையாளமே தெரியாமல் கதவை திறந்து கொண்டு வெளியே சென்று அவர்கள் வந்த வழியிலேயே மீண்டும் சத்த்ம் இன்றி திரும்பி சென்று விட்டனர்.
மானசா கேட்டுக் கொண்டதால், பிரவீனின் ஆட்கள் தான் அவளுடன் வந்து இந்த சிலையை திருடுவதற்கு அவளுக்கு உதவினார்கள். அதனால் அவர்களே அந்த சிலையை தங்களுடன் எடுத்து சென்று அதை பிரவீன் இடம் ஒப்படைத்து விட்டனர். தான் நினைத்தது அனைத்தும் சிறிதும் பிசிறு தட்டாமல் அப்படியே நடந்து விட்ட மகிழ்ச்சியில் இருந்த மானசா, நிம்மதியாக அந்த நாளை கடத்தியவள், அடுத்த நாள் நடக்கவிருக்கும் சம்பவத்தை நேரில் காணும் மகிழ்ச்சியுடன் இன்று பள்ளிக்கு வந்திருந்தாள்.
நிகழ்காலம்....
தன்னுடைய மாஸ்டர் பிளான் ஐ நினைத்து மகிழ்ச்சியில் இருந்த மானசா, ராகவியை அந்த கான்ஸ்டபிள் வெளியே இழுத்துக்கொண்டு செல்வதை பார்த்து புன்னகைத்து கொண்டு இருந்தாள். 😁 😁 😁
அந்த கான்ஸ்டபிள் ராகவியை அழைத்து கொண்டு அந்த ஆபீஸ் ரூமின் கதவை விட்டு வெளியே செல்வதற்குள் சரியாக அங்கு வந்து சேர்ந்தான் விஷ்ணு. தன்னிடம் ஒரு வார்த்தை கூட இது பற்றி தெரிவிக்காமல் தனக்கு மிகவும் பிடித்த தன்னுடைய ரித்திகா அக்காவை இப்படி தன் கண் முன்னையே அரெஸ்ட் செய்து அழைத்து செல்வதை பார்த்து கோபப்பட்ட விஷ்ணு அந்த கான்ஸ்டெபிலை பார்த்து, “யார கேட்டு இவங்கள அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறீங்க...??" என்றான். அதிகார தோரணையில்... 😡
விஷ்ணு உள்ளே வந்ததை கவனித்த மானசா, அதிர்ச்சி அடைந்தாள். 😳 அவன் இங்கே வருவதை தாமதமாக்க தங்களால் முடிந்த வரை அவன் வீட்டில் இருந்து இந்த பள்ளிக்கு வரும் சாலையில் டிராபிக் ஐ உண்டு பண்ணுமாறு பிரவீனின் ஆட்களுக்கு அவள் அறிவுறுத்தி இருந்தாள். அதையும் மீறி இப்போது அவன் அங்கே விரைவிலேயே இங்கு வந்து விட்டதால், இன்று ஒரு வேலை விதி ரித்திகாவிக்கு சாதகமாக தான் இருக்கிறதோ என்று நினைத்து எரிச்சல் அடைந்தவள், எது எப்படி இருந்தாலும் இன்று தனக்கு இப்படி இங்கே ஒரு அவமானம் நடந்து வந்துவிட்டதே என்று நினைத்து ரித்திகாவியே இந்த வேலையை விட்டு தானாக சென்று விடுவாள் என்று நினைத்த மானசா, சற்று நிம்மதி அடைந்தாள். 😌
இப்போது தான் ரித்திகா தங்களை எதிர்த்து கேள்வி கேட்டாள், இப்போது எவனோ புதிதாக வந்த ஒருவனும் தங்களை எதிர்த்து கேள்வி கேட்கிறானே என்று நினைத்த அந்த லேடி கான்ஸ்டபிளும், இன்ஸ்பெக்டரும் எரிச்சல் அடைந்தனர். 😒
இன்ஸ்பெக்டர்: “யாரு தம்பி நீ இந்த பொண்ணுக்கு திடீர்னு வந்து சப்போர்ட் பண்ணிட்டு இருக்க..??? நீயும் இவ கூட கூட்டா..!!! ரெண்டு பேரும் சேந்து தான் அந்த சிலையை திருடுனீங்களா..??" என்று கோபமாக கேட்டார். 😡
அந்த போலீஸ்காரர் விஷ்ணுவிடமே இப்படி எல்லாம் பேசி கொண்டு இருப்பதை கவனித்த மானசா, விரைந்து அவர் அருகே வந்து அவரை தடுக்க முயற்சித்தாள்.
மானசா: “சார்..!!! கொஞ்சம் பொறுமையா பேசுங்க சார். அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேட்கலாமே..." என்றாள் அந்த இன்ஸ்பெக்டரிடம்.
போலீஸ்காரர்: “நீ சும்மா இரு மா. இவன் கிட்ட நான் பேசிக்கிறேன்." என்றவர் விஷ்ணுவை பார்த்து, “உண்மைய சொல்லு டா... உனக்கும் அந்த சிலை திருட்டுல சம்பந்தம் இருக்கு தானே...???" என்று மிரட்டும் தோரணையில் கேட்டார்.
விஷ்ணு: அவன் ஓட்டமும் நடையுமாக வந்ததால் அவனுக்கு இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தது. அதனால் அங்கு ஓரமாகக் கிடந்த ஒரு சேரை எடுத்து போட்டு அந்த போலீஸ்காரரின் முன்னே கேஷுவலாக அமர்ந்தவன், “என்னோட பொசஷன் -ன திருடறதுக்கு நான் ஏன் சார் பிளான் பண்ணனும்..??? எனக்கு வேணும்னா நானே எடுத்துப்பேன்." என்றான் சாதாரணமான குரலில்.
போலீஸ்காரர்: அவன் சொன்னதை வேறு விதமாக புரிந்து கொண்டவர், “அடுத்தவனோடத உன்னோடதுன்னு நெனச்சு நீ அத தைரியமா திருடினேன்னு என் கிட்ட சொல்றதே தப்பு. இதுல என் முன்னாடியே நீ சேர்ர போட்டு வேற உட்கார்ந்து இருக்கியா...??? எந்திரி டா முதல்ல ..!!!" என்றவர், விஷ்ணுவின் சட்டை காலரைப் பிடித்து அவனை மேலே தூக்கினோர்.
விஷ்ணு: அந்த இன்ஸ்பெக்டரின் செயலால் கடுப்பானவன், தன் மீது இருந்த அவருடைய கையை தட்டி விட்டு; தன்னுடைய சட்டையின் காலரை மீண்டும் சரி செய்து கொண்டு அந்த சாரில் இம்முறை கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன், “முதல்ல நான் யாருன்னு தெரிஞ்சுகிட்டு... நான் சொல்ல வர்தற கேட்டுட்டு... அப்புறம் ரியாக்ட் பண்ணுங்க." என்று ஆளுமை நிறைந்த குரலில் அதிகாரமாக சொன்னான். 😒
தன் முன்னே என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று புரியாமல் விஷ்ணுவையும், அந்த இன்ஸ்பெக்டரையும், கையில் விலங்குடன் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தாள் ரித்திகா. 🙄 விஷ்ணுவின் பேச்சில் இருந்த உறுதியை கவனித்த அந்த இன்ஸ்பெக்டர், கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கினார்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 81
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.