தாபம் 80

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
மானசாவின் வற்புறுத்தலால் போலீஸார்கள் அங்கே கைரேகை நிபுணர்களை வரவழைத்து, அந்த சிலை இருந்த இடத்தில் ஏதாவது கைரேகைகள் கிடைக்கிறதா என்று பார்க்க சொன்னாள். அந்த நடராஜர் சிலை ஒரு பெரிய கண்ணாடி பெட்டியால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டிக்கு மேல் அந்த நடராஜருக்கு மாடம் போல் செய்து வைத்திருந்தனர். அந்த கண்ணாடி பெட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் டிஜிட்டல் முறையில் நிறைய செக்யூரிட்டி சிஸ்டம் அமைக்க பட்டு இருந்தது. அது குழந்தைகள் அடிக்கடி வந்து செல்லும் இடம் என்பதால், வெளியே இருந்த கண்ணாடி பெட்டியை யார் வேண்டுமானாலும் தொட்டு பார்க்கலாம். அத தொட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

அந்த கண்ணாடி பெட்டிக்கு உள்ளே இன்னொரு கண்ணாடி பெட்டியும், அதில் லேசர் சாக்கும், ஏன் அந்த இரு கண்ணாடி பெட்டிகளையும் திறப்பதற்கு என தனியாக ஒரு பாஸ்வேர்ட் கூட செட் செய்யப்பட்டு இருந்தது. இவை அனைத்தையும் மீறி ஒருவர் எந்த செக்யூரிட்டி கேமராவிலும் மாட்டாமல் அந்த தங்க சிலையை எடுத்து கொண்டு வெளியே செல்வது சாத்தியமற்றது தான் என்றாலும், இப்போது அதை யாரோ ஒருவர் திருடிவிட்டதால் அந்த இடமே மிகவும் பரபரப்பாக இருந்தது.

போலீசார்களுடன் வந்த கைரேகை நிபுணர்கள் அவர்களுக்கு கிடைத்த கைரேகைகளை எடுத்து கொண்டு, அங்கே வேலை செய்பவர்களுடைய கைரேகையோடு அது ஒத்து போகிறதா.. என்று செக் செய்வதற்காக ராகவியையும், கௌத்தமையும் உள்ளே அழைத்து அவர்களுடைய கைரேகை மாதிரிகளை கலெக்ட் செய்து விட்டு அங்கு இருந்து சென்றனர். கௌத்தம் ஏற்கனவே ராகவியிடம் சொன்னது போலவே.. மானசா கூட்டி வந்து இருந்த போலீஸ்காரர்கள், அவர்களை மாறி மாறி தங்களுடைய கேள்வி கணக்களால் தாக்கிக் கொண்டு இருந்தனர்.

ராகவி தன்னுடைய வாழ் நாளில் இதற்கு முன் ஒரு முறை கூட ஓர் பேச்சுக்காக கூட எந்த போலீஸ்காரரிடமும் பேசியது இல்லை. ஆனால் இப்போது அவளை ஒரு குற்றவாளியாக நிற்க வைத்து அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டு இருப்பது அவளுக்கு மிகவும் வருத்தமாகவும், சங்கடமாகவும், இருந்தது. 💔 இன்னொரு பக்கம் தான் செய்யாத தவறுக்கு தன் மேல் பழி வந்துவிடுமோ என்று நினைத்து உள்ளுக்குள் நடுங்கி கொண்டு இருந்தாள் ராகவி. 😣 😖

இருந்தாலும் இது எல்லாம் இப்படி தான் இருக்கும் என்று ஏற்கனவே கௌத்தம் அவளிடம் சொல்லி இருந்ததாலும், கௌத்தம் அவள் அருகிலேயே நின்று கொண்டு இருந்ததாலும் தைரியமாக இருந்த ராகவி, தனக்கு தெரிந்த அனைத்தையும் அங்கு இருந்த போலீஸ்காரர்களிடம் விவரமாக சொல்லி கொண்டு இருந்தாள்.

போலீஸ்காரர்: அவர்கள் இருவரையும் பார்த்து, “முதல்ல இந்த சிலை காணாம போயிருச்சுன்றத யார் கண்டுபிடிச்சது...??

கௌத்தம்: எப்பயுமே நான் தான் சார் ஃபர்ஸ்ட் வருவேன். இன்னைக்கும் நான் தான் ஃபர்ஸ்ட் வந்தேன். நான் உள்ள வந்து பாக்கும் போது, அந்த சிலை இங்க இல்ல. வெளியில இருந்த கிளாஸ் உடைஞ்சு இருந்துச்சு. அதனால நான் செக்யூரிட்டிய கூப்பிட்டு சொன்னேன்.

போலீஸ்காரர்: சரி..!! இன்னைக்கு பர்ஸ்டா நீங்க வந்து இருக்கீங்க. நேத்து இங்க இருந்து லாஸ்ட்டா இந்த ரூம குளோஸ் பண்ணிட்டு யார் வெளிலல போனது..??

ராகவி: “நான் தான் சார் டோரை லாஸ்ட்டா லாக் பண்ணிட்டு வெளிய போனேன்." என்று நிதானமான குரலில் சொன்னாள்.

போலீஸ்காரர்: ராகவியை கூர்மையான கண்களோடு பார்த்தவன், “அப்ப நீங்க தான் டெய்லியும் லாஸ்ட்டா டோர லாக் பண்ணிட்டு கிளம்புவீங்களா..??" என்று கேட்டான்.

ராகவி: அந்த போலீஸ்காரரின் மிரட்டும் பார்வையே அவளை பயமுறுத்துவதற்கு போதுமானதாக இருந்தது. இருந்தாலும் ஒரு தைரியத்தை வர வழைத்து கொண்டு அந்த போலீஸ்காரரின் நேராக பார்த்தவள், “நோ சார். எப்பவும் கௌத்தம் தான் லாஸ்ட்டா கிளம்புவாரு. நேத்து லஞ்ச் பீரியட் முடிஞ்சதுக்கு அப்புறம், ஆனுவல் டேக்கு ஸ்டுடன்ஸ்க்கு டிரஸ் பர்சேஸ் பண்றதுக்காக மானசா மேடம் கௌத்தம் சார் -அ அவங்க கூட கூட்டிட்டு போய்ட்டாங்க. ஈவினிங் ஸ்கூல் முடிய வரைக்குமே அவங்க ரெண்டு பேரும் திரும்ப வரல. அதனால நான் தான் லாஸ்ட்டா விண்டோஸ் எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு மெயின் டோரையும் சும்மா சாத்திட்டு கிளம்புனேன்." எது நடந்தவற்றை சிறிதும் மாற்றமின்றி அப்படியே உண்மையாக சொன்னாள்.

போலீஸ்காரர்: ஏன் மெயின் டோருக்கு பூட்டு இல்லையா..?? அத ஏன் சும்மா சாத்திட்டு போனீங்க...??

ராகவி: சார்..!! இங்க நம்ம வீட்ல பூட்டற மாதிரி நார்மலான பூட்டு எல்லாம் கிடையாது. 🔒 இங்க இருக்கிறது டிஜிட்டல் லாக் சிஸ்டம். நான் இங்க வரும்போது எல்லாம் ஆல்ரெடி இந்த டோர் ஓபன்ல தான் இருக்கும். அதனால நான் இந்த டோரை ஓப்பன் பண்ணதும் இல்ல, க்ளோஸ் பண்ணதும் இல்ல. நேத்து நான் கிளம்பும்போது இந்த டோர நான் க்ளோஸ் பண்ண ட்ரை பண்ணேன். அதுல, ஒன்னு கீ கார்ட் செட் பண்ணனும், இல்லைனா நம்பர் என்ட்ரி பண்ணணும்ன்ற மாதிரி சிஸ்டம் இருந்துச்சு. அதவே நான் நேத்து தான் கவனிச்சேன். சோ அத எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியல. எப்படியும் எல்லா ரூம் ஐயும் செக் பண்ணிட்டு தான் செக்யூரிட்டி கிளம்புவாங்க. அதனால அவங்களே பாத்து லாக் பண்ணிக்குவாங்கன்னு நான் விட்டுட்டு கிளம்பிட்டேன்.

போலீஸ்காரர்: சோ நீங்க ப்ராப்பரா டோர லாக் பண்ணல...??

ராகவி: எஸ் சார் எனக்கு அத எப்படி பண்ணனும்னு தெரியல. அதனால நான் பண்ணல.

போலீஸ்காரர்: “ஓகே நீங்க போங்க." என்று சொன்னவன், மானசாவுடன் செக்யூரிட்டி ஆபீஸ் -க்கும், ஆபீஸ் ரூம் இருக்கும் சென்று அதில் இருந்த. சி. சி. டிவி. காட்சிகளில் ஏதாவது மாட்டுகிறதா என்று பார்ப்பதற்காக அதை செக் செய்து கொண்டு இருந்தனர்.

அந்த சி.சி. டிவி. காட்சியில் ராகவி, தன்னுடைய ஹேண்ட் பேக் மட்டுமல்லாமல் ஏதோ ஒரு பெரிய பையுடன் இந்த பள்ளியை விட்டு மாலை வெளியே செல்வது பதிவாகி இருந்தது. இது நாராயணன் குரூப்ஸ் -க்கு சொந்தமான பள்ளி என்பதால், இந்த பள்ளியில் இருந்த பொருளை திருடியது யார் என்று சீக்கிரமாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக இங்கு இருந்து எடுத்துச் சென்ற கைரேகை மாதிரிகளை உடனே சோதித்துப் பார்த்த கைரேகை நிபுணர்கள், அந்தப் பள்ளியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கால் செய்து அந்த உடைந்த கண்ணாடி துண்டுகளின் இருந்த கைரேகை ராகவியின் கைரேகையோடு பொருந்துவதாக சொன்னார்கள்.

ராகவி ஒரு பெரிய பையில் எதையோ தன்னுடன் வெளியே கொண்டு சென்றது மற்றும் அவளுடைய கைரேகை அந்த கண்ணாடிகளில் இருப்பது என இரண்டையும் ஒன்று சேர்த்து யோசித்து பார்த்த அந்த இன்ஸ்பெக்டர், இறுதியாக ராகவி தான் அதை திருடி இருக்கக்கூடும் என்ற ஒரு முடிவுக்கு வந்தார். அதனால் ராகவியை மட்டும் தங்களோடு ஆபீஸ் ரூமிற்கு அழைத்து சென்ற போலீசார்கள் அவளை சுற்றி அமர்ந்து கொண்டு கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அவள் தான் குற்றவாளி என்று அவளை ஒப்புக்கொள்ளும் படி மிரட்டிக் கொண்டு இருந்தனர்.

அதைக்கண்டு பயந்து போன ராகவி, கண்ணீரோடு தன்னுடைய நிலையை விளக்கி கொண்டு இருந்தாள். 😭

ராகவி: “சார்...!!! நேத்து நான் அந்த பேக்ல கரெக்ஷன் பண்றதுக்காக டெஸ்ட் பேப்பர்ர தான் வீட்டுக்கு எடுத்துட்டு போனேன். இப்பயும் அதே பேக்ல கரெக்ஷன் பண்ண பேப்பரை ரிட்டன் கொண்டு வந்து இருக்கேன். ஸ்டாப் ரூம்ல தான் இருக்கு. நீங்க வேணா செக் பண்ணி பாருங்க சார். சத்தியமா நான் அந்தசிலைய திருடல. என்ன நம்புங்க சார் ப்ளீஸ்...!!" என்று தன் முன் இருந்த போலீஸ்காரரிடம் தன்னுடைய இரு கையையும் கூப்பி வேண்டி கொண்டு கெஞ்சியவள், கதறி அழுதாள். 🙏 😭 😭 😭

ராகவியின் இந்த நிலையை பார்த்து அவள் மீது இரக்கம் வருவதற்கு பதிலாக அந்த போலீஸ்காரருக்கு அவள் மீது சந்தேகமும், அவள் நடிக்கிறாள் என்ற எண்ணமும், தான் வந்தது. அதனால் அவளை கோபமாக பார்த்தவன், “இங்க பாரு மா.. இப்டி சும்மா நடிச்சு என்னோட டைம்ம வேஸ்ட் பண்ணிட்டு இருக்காத. ஒழுங்கா உண்மைய ஒத்துக்கோ. அதான் உனக்கு நல்லது. தண்டனையாவது குறையும்." என்று காட்டமாக சொன்னான். 😡

ராகவி: “செய்யாத தப்ப ஒத்துக்கோ... ஒத்துக்கோன்னு.. சொன்னா நான் எப்படி ஒத்துக்க முடியும்...?? நான் இத செஞ்சிருப்பனா, இல்லையான்னு கூட நீங்க யோசிக்க மாட்டேங்கிறீங்க. இது நான் தான் செஞ்சுருப்பேன்னு முடிவு பண்ணிட்டு நீங்க என் கிட்ட விசாரிச்சிட்டு இருக்கீங்க. அப்புறம் எப்படி சார் உண்மையா அத யார் திருடுனதுன்னு உங்களால கண்டுபிடிக்க முடியும்...???" என்று கோபமாக கேட்டாள். 😡

போலீஸ்காரர்: “இங்க பாரு...!! நீ ஒரு டீச்சர்னா போலீஸ்காரன் என்கே அக்யூஸ்ட்ட எப்படி விசாரிக்கணும்னு கிளாஸ் எடுப்பியா...??? போனா போகுது இந்த ஸ்கூலோட பேர் கெட்டு போயிடுமேன்னு உன்ன இங்க இருந்து அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகாம இங்கயே வச்சு விசாரிச்சுட்டு இருக்கேன்ற திமிர்ல்ல பேசுறியா...???" என்று கோபமாக தன்னுடைய ஒரு ஆள் காட்டி விரலை அவள் முகத்தின் நேராக நீட்டி கோபமாக பேசியவன், 😒 அவன் அருகே இருந்த ஒரு லேடி கான்ஸ்டபிள்ளை பார்த்து தன்னுடைய கண்களால் சைகை செய்தான்.

அந்த இன்ஸ்பெக்டரின் சைகையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அங்கு இருந்த லேடி சாங்ஸ் கான்ஸ்டபிள், “என்ன டி விசாரிக்க வந்த அதிகாரி கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா..??" என்று கோபமாக கேட்டவள், ராகவியின் கன்னத்தில் ஒரு பலமான அடையை பரிசாக கொடுத்தாள். 😒 போலிஸ் அடி என்பதால் ரித்திகா பலமாக தாக்கப்பட்டாள். அவளுடைய உதட்டின் ஓரம் கிழிந்து அதில் இருந்து ரத்தம் வடிந்தது.

ராகவி பயம், சோகம், ஆற்றாமை என கலவையான உணர்ச்சிகளால் தவித்து கொண்டு இருந்தாள். அதனால் தன்னை அடித் கான்ஸ்டபில் முறைத்து பார்த்தவள், “என் கிட்ட கொஞ்சம் மரியாதையா நடந்துக்கோங்க மேடம். அந்த சிலைய நான் திருடிட்டனோன்னு என் மேல சந்தேகப்பட்டு மட்டும் தான் நீங்க என்ன விசாரிச்சுட்டு இருக்கீங்க அவ்ளோ தான். அத நான் தான் எடுத்து இருக்கேன்னு சொல்றதுக்கு உங்க கிட்ட சாலிடான ப்ரூப் இல்ல. சோ நீங்க என்ன அக்யூஸ்ட் மாதிரி ட்ரீட் பண்றதுக்கு உங்களுக்கு எந்த ரைட்ஸ் -ம் இல்ல." என்று சொன்ன அவளின் குரலில் கோபம் இருந்தாலும் அவளுடைய கண்களில் கோபத்தின் வெளிப்பாடாக கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. 😡 😭

ஏற்கனவே ராகவியின் மீது கோபத்தில் இருந்த போலீஸ்காரருக்கு இப்போது அவள் பேசியது இன்னும் அவரின் கோபத்தை தூண்டுவதைப் போல் இருந்தது. அதனால் அவளை வன்மத்துடன் பார்த்தவன், “உனக்கு எதிரா எவிடன்ஸ் கிடைச்சாலும், நீ அத பண்ணியிருக்க மாட்டன்னு எனக்கு ஒரு பக்கம் லேசா தோணுச்சு. ஆனா இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ...!! அத யார் திருடி இருந்தாலும் சரி. என்ன பொறுத்த வரைக்கும் அத நீ தான் எடுத்து இருக்க. நான் அப்டி தான் கோர்ட்ல கேஸ் பைல் பண்ணுவேன். உன்னால முடிஞ்சத பாத்துக்கோ." என்றான்.

மானசா அங்கு நடப்பதை அனைத்தையும் ஓரமாக நின்று கொண்டு பார்த்து மகிழ்ந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே அனைத்தும் நடந்து விட்டதால் ஏளனமாக ராகவியை பார்த்தவள், “ராகவி நீ இவ்ளோ லூசா இருப்பன்னு நான் நினைச்சு பாக்கவே இல்ல டி. நான் உனக்கு ஒரு பிராப்ளம் கிரியேட் பண்ணனும் நினைச்சா.. உன் வாய வச்சு நீயே இன்னும் உனக்கு நிறைய பிராப்ளம் கிரியேட் பண்ணிக்கிற.... இனி இந்த பிரச்சனையில இருந்து நீ எப்டி வெளியில வரன்னு நானும் பார்க்கிறேன்." என்று தனக்குள் நினைத்து தனக்குள் வில்லத்தனமாக சிரித்து கொண்டாள். 😁

டிராபிக்கில் சிக்கி வெகு நேரமாக போராடி இப்போது தான் பள்ளிக்கு வந்து சேர்ந்தான் விஷ்ணு. அவன் உள்ளே வந்த உடனேயே செக்யூரிட்டி ஆபீசர்கள் நடந்தவற்றை அவனிடம் இன்பார்ம் செய்தனர். தன்னை கேட்காமல் போலீசிடம் யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது என்று கோவமாக கேட்ட விஷ்ணு, மானசா செய்த அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு வேகமாக ஆபீஸ் ரூமிற்கு வந்தான்.

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 80
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.