தாபம் 79

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ராகவி: அவனுடைய தலை முடியை விளையாட்டாக தன்னுடைய ஒரு கையால் கலைத்து விட்டவள், “ஆமா சித்து. நம்ம ஸ்கூல்ல.. ஆனுவல் டே வர போகுதுல்ல.. அதுக்கு நீங்க எல்லாம் அழகா டான்ஸ் ஆடுறதுக்கு நம்ம இப்ப ப்ராக்டிஸ் பண்ணபோறோம்." என்று சொன்னாள்.

சித்தார்த்: “அப்ப நீயும் ஸ்டேஜ்ல என் கூட சேந்து ஆடுவியா ராகா...??" என்று அப்பாவி கேட்டான்.

ராகவி: இல்ல டா குட்டி பையா. நான் உனக்கு டான்ஸ் மட்டும் தான் சொல்லி தருவேன். நீ தான் ஸ்டேஜ் -ல உன் பார்ட்னர் கூட சேந்து டான்ஸ் ஆடணும்.

அப்போது அவர்கள் பேசியதை கேட்டு கொண்டு இருந்த பூஜா, “மேம் நம்ப இன்னைக்கே டான்ஸ் பிராக்டிஸ் ஸ்டார்ட் பண்ண போறமா..???" என்று ராகவியை பார்த்து கேட்டாள்.

ராகவி: ஆமா டா பூஜா. இன்னைல இருந்தே நம்ம பிராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணா தான் கரெக்ட்டா இருக்கும்.

சித்தார்த்: ராகவியின் கையை பிடித்து இழுத்தவன், “அப்போ என் கூட யாரு ஆடவா ராகா...??" என்று கேட்டான்.

“தெரியல சித். இனிமே தான் அத எல்லாம் டிசைட் பண்ணனும்." என்று ராகவி சொல்லிக் கொண்டு இருக்க... அவர்களுடைய பேச்சில் குறிப்பிட்ட பூஜா, “சித்தார்த் நீ ஏன் டான்ஸ் மேம் -அ பேர் சொல்லி கூப்பிட்டு கிட்டு இருக்க..?? அவங்க நம்மளோட டீச்சர். அப்புறம் அவங்களுக்கு கோவம் வந்துருச்சுன்னா உனக்கு பனிஷ்மென்ட் குடுத்துடுவாங்க." என்று சீரியஸாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டு சொன்னாள்.

சித்தார்த்: பூஜா சொன்னதை கேட்டு பாவமாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டவன் ராகவியை பார்த்து, “நீ என்னோட பிரண்ட் இல்லையா...??? இப்ப நீ எனக்கு பனிஷ்மென்ட் தரப் போறியா..??" என்று சோகமாக அவளிடம் கேட்டு விட்டு தன்னுடைய முகத்தை கீழே தொங்க போட்டுக் கொண்டான். 😣 😞

ராகவி: “இல்ல...!!! இல்ல...!!! நான் ஏன் என்னோட சித்து குட்டிக்கு பனிஷ்மென்ட் தரப் போறேன்...??? நீ எப்பவுமே என்னோட குட்டி பிரிண்ட் தான். ஓகே;வா..???" என்று அழகாக அவனைப் பார்த்து புன்னகைத்த படி கேட்டாள். 😁 😁 😁

சித்தார்த்: ராகவி தன்னை அவளுடைய குட்டி ஃபிரண்ட் என்று சொன்னதால் அதைக் கேட்டு மகிழ்ந்தவன், அவனும் ராகவியை பார்த்து புன்னகைத்தான். 😁

ராகவி: அவனுடைய கன்னத்தை தன் கையால் பிடித்து லேசாக ஆட்டியவள், “நீ எப்பவும் இப்படியே சிரிச்சுக்கிட்டே இரு. நீ சிரிச்சா பாக்குறதுக்கு எவ்ளோ க்யூட்டா இருப்ப தெரியுமா.. ?? இனிமே முகத்த அந்த மாதிரி உம்முன்னு வச்சுக்காத. பாக்கவே நல்லா இல்ல. நீ உன் முகத்த அப்படி வச்சுக்கிட்டு இருந்தா உன் பேஸ் எப்படி இருக்கு தெரியுமா...???" என்று கேட்டவள், அவன் கொடுத்த எக்ஸ்பிரஷன் போலவே தன்னுடைய முகத்தை மாற்றி கொண்டு அவனுக்கு செய்து காட்டினாள். அதை பார்த்த சித்தார்த்தும், பூஜாவும், அவளை பார்த்து சிரித்தனர். 😂 😂 😂

பூஜா: அவளும் தன் பங்கிற்கு, “நல்லா சொல்லுங்க மேம். எப்ப பாத்தாலும் இவன் மூஞ்சிய உர்ருன்னு தான் வச்சுக்கிட்டு இருக்கான்." என்று சொல்லிவிட்டு, சித்தார்த் எப்போதும் தன்னுடைய முகத்தை எவ்வாறு வைத்து கொண்டு இருப்பானோ 😒 அதேபோல் தானும் செய்து காட்டி ராகவியை பார்த்து சிரித்தாள். 😂 ராகவியும் பூஜாவோடு இணைந்து சிரித்தாள். 😂 😂/😂/😂

சித்தார்த்: “நீயும் இவ கூட சேந்துகிட்டு என்ன பாத்து சிரிக்கிறியா ராகா..??" என்று தன்னுடைய உதட்டைப் பிதுக்கி கொண்டு கேட்டான். 😣

ராகவி: எப்போது வேண்டுமானாலும் அழுது விடுவேன் என்ற நிலையில் இருந்த சித்தார்த்த பவமாக பார்த்தவள், “ஐயோ..!!! சித்தார்த் கோச்சுக்காத. நாங்க சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னோம்." என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தினாள்.

பின் அவளும், கௌத்தமும் அங்கு இருந்த குழந்தைகளை எல்லாம் வரிசை படுத்தி நிற்க வைத்தனர். ராகவி அவர்களின் முன்னே நின்று கொண்டு இருக்க, கௌத்தம் அவர்களின் பின்னே நின்று கொண்டு இருந்தான்.

ராகவி: அந்த குழந்தைகளைப் பார்த்து அழகாக புன்னகைத்தவள், “ஓகே ஸ்டூடண்ட்ஸ்...!!! இப்ப நம்ப உங்க எல்லாருக்கும் பேர் யார் யார்ன்னு டிசைட் பண்ணிடலாமா..??" என்று சத்தமாக கேட்க, அங்கு இருந்த குழந்தைகள் அனைவரும் கோரசாக “எஸ் மேம்." என்று கத்தினார்.

ராகவி: “ஒரு பாய், ஒரு கேர்ள்னு, தான் நம்ம பேர் செப்பரேட் பண்ணபோறோம். சோ பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் உங்களுக்கு புடிச்ச பேர் கூட நீங்களே போய் நில்லுங்க பாக்கலாம்...." என்று சொல்ல, ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் தங்களுக்கு பிடித்த தங்களுடைய தோழனோடும், தோழியோடும், சேர்ந்து நின்று கொண்டனர்.

சித்தார்த் இப்போது தான் யாரின் அருகே சென்று நிற்பது என்று தெரியாமல் குழப்பியவன், அப்படியே நின்று கொண்டு இருந்தான். 🥺 பூஜா தனியாக நின்று கொண்டு இருக்கும் சித்தார்த்தை பார்த்தாள். நான் பூஜாவோடு நான் தான் நிற்பேன் என்று இரண்டு மாணவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களை புறக்கணித்த பூஜா ராகவியை பார்த்து, “மேம்..!! நான் சித்தார்த் கூட பேரா இருக்கேன்." என்று சொல்ல, “ஓகே மா. அப்ப போய் நீ சித்தார்த்துக்கு பக்கத்துல நில்லு." என்று சொல்லிவிட்டாள் ராகவி.

அது வரை பூஜாவோடு தான் நிற்பேன் என்று சண்டை போட்டுக் கொண்டு இருந்த அந்த மாணவர்கள் ராகவி சொன்னதை கேட்டு, அப்ப அவ எனக்கு இல்லையா..??? என்பது போல் ராகவியை பார்த்தனர். ராகவியும் அவர்களைப் பார்த்தாள். அங்கே வேறு எந்தப் பெண் குழந்தைகளும் மீதம் இருக்காததால், சண்டை போட்ட அந்த இரண்டு ஆண் மாணவர்களயுமே பேராக நிற்க வைத்து விட்டாள் ராகவி. அதனால் அவர்களுடைய முகம் சோகத்தில் வாடி விட்டது. 😞

பூஜா சந்தோஷமாக சித்தார்த்தின் அருகே சென்று நின்றாள். ராகவியை பார்த்த சித்தார்த், “நான் இவ கூட ஆட மாட்டேன்." என்றான். அவனுடைய மனதில் சற்று நேரத்திற்கு முன் பூஜா அவனை பார்த்து சிரித்தது தான் அவனுக்கு நினைவில் இருந்தது. அதனால் அவள் மீது அவன் கோபமாகக இருந்தான். 😒

ராகவி: சித்தார்த்தின் அருகே வந்தவள், “ஏன் டா அப்படி சொல்ற..?? என்று கேட்டாள்.

சித்தார்த்: அவ அப்ப என்ன கிண்டல் பண்ணி சிரிச்சால்ல.. அதனால எனக்ககு இவ்வள பிடிக்கல. 😒

ராகவி: அது எல்லாம் சும்மா பிரெண்ட்ஸ் -குள்ள விளையாட்டா பண்றது. நீ ஏன் அத சீரியஸா எடுத்துக்குற..??? நீயே பூஜாவ பாரு டோரா மாதிரி எவ்ளோ க்யூட்டா இருக்கா... 😍 நீ அவ கூட சேந்து ஆடுனா சூப்பரா இருக்கும் இல்ல...???

பூஜா: “ஆமா..!! நான் குட்டி டோர மாறி அழகா இருப்பேன்." என்று லேசாக தன்னுடைய தலையை ஆட்டிய படி சொன்னாள். 👧

சித்தார்த்: ராகவி பூஜாவை டோரா என்று சொன்னதால் அவளை திரும்பி பார்த்தான். பூஜாவும் டோராவின் ஹேர் ஸ்டைல் தான் வைத்து இருந்தாள். 👧 அவள் இவனை பார்த்து அழகாக சிரித்து கொண்டு இருக்க, சித்தார்த்தின் கண்களுக்கு ராகவி சொன்னதை போல் அவள் கியூட்டான டோராவாக தான் தெரிந்தாள். 😍 👧 அதனால் அவளைப் பார்த்து சிரித்தவன், “ஆமா ராகா. இவ டோரா மாதிரி தான் இருக்கா. நான் இவ கூடவே ஆடுறேன்." என்று ராகவியிடம் சொன்னான்.

ரித்திகா “சூப்பர்...!!! அப்ப பூஜாவும், சித்தார்த்தும், தான் pair.” என்றாள்.

சித்தார்த் பூஜா பாப்பாவோடு டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டு விட்டதால், மகிழ்ச்சி அடைந்த ராகவி; மியூசிக் பிளேயரில் ஜாலியோ ஜிம்கானா பாடலை ப்ளே செய்ய, அவளும் கௌத்தமும் இணைந்து அந்த குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தனர். அங்கு இருந்த குழந்தைகளும் உற்சாகமாக நடனம் கற்று கொண்டு இருந்தனர்.

சில மணி நேரத்திற்கு பின்...

ராகவியின் வீட்டில்...

பள்ளியில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு வந்த ராகவி, கீர்த்தனா அவளிடம் கொடுத்து விட்டு சென்ற பேப்பர் பண்டல்களை தன்னுடன் கொண்டு வந்து இருந்தாள். அவளால் அந்த ஒரு பீரியடிற்குள் அத்தனை பேப்பர்களையும் திருத்த முடியாததால் வீட்டுக்கு கொண்டு போய் திருத்திக் கொள்ளலாம் என்று நினைத்து அதை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தாள். அவள் ஹாலில் அமர்ந்து பேப்பர் கரெக்ஷன் செய்து கொண்டு இருந்ததால், அவளுக்கு உதவ நினைத்த சுதாகர்; அதில் இருந்த பாதி பேப்பர்களை வாங்கி அவரும் திருத்தி கொடுத்தார்.

அவரும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி பின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர் என்பதல் அவருக்கு இந்த பேப்பரைகளை கரெக்ஷன் செய்வது எல்லாம் சாதாரணமாக இருந்தது. அதனால் தன் மகளுக்காக அதை செய்து கொடுத்தார். சுதாகரும் ராகவிக்கு உதவியதால் விரைவில் அனைத்து பேப்பர்களையும் கரெக்ஷன் செய்து முடித்துவிட்ட ராகவி, ஷாலினியை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி அவளுடைய வீட்டிற்கு சென்று விட்டாள்.

அடுத்த நாள் காலை...

சித்தார்த்தின் பள்ளியில்...

வழக்கம் போல் ஆபீஸில் சென்று கையெழுத்துப் போட்டுவிட்டு ராகவி தனக்கு டான்ஸ் கிளாஸ் இருந்ததால் டான்ஸ் பிராக்டீஸ் ஹாலுக்கு வந்து கொண்டு இருந்தாள். அவள் அங்கே வரும்போது, அந்த இடமே பரபரப்பாக இருந்தது. கௌத்தம் உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டு இருந்தான். சில போலீஸ் காலர்கள் அங்கே உள்ளேயும் வெளியேயும் போவதும், வருவதுமாக இருந்தனர். அவற்றை எல்லாம் பார்த்து குழம்பிய ராகவி, கௌத்தமின் அருகே சென்றாள்.

ராகவி: என்ன ஆச்சு..?? இங்க இவ்ளோ கூட்டமா இருக்கு...??? போலீஸ் வேறே வந்திருக்காங்க...!!! ஏதாச்சும் ப்ராப்ளமா..???

கௌத்தம்: ஆமா பிராப்ளம் தான். உள்ள ஒரு கோல்டு நடராஜர் ஸ்டாச்சு இருந்துச்சுல்ல... அத காணோம்.. யாரோ அத திருடிட்டாங்க. இன்னும் பிரின்சிபல் மேடமே ஸ்கூலுக்கு வரல. ஏ. பி. சார் தான் இருக்காரு. இந்த மானசா ஓவரா பண்ணிட்டு இருக்கா. இது காணாம போயிடுச்சுன்னு தெரிஞ்ச உடனே போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டா. இதனால ஸ்கூல் ரெபிடேஷன் என்னாகுன்னு கூட யோசிக்காம.. அந்த சிலைய திருடினவங்க யாருன்னு கண்டுபிடிச்சே தீருவேன்னு போலீஸ் கூடவே சுத்திகிட்டு இருக்கா. எனக்கு என்னமோ இவ பண்றது எல்லாத்தையும் பாத்தா இவ மேல தான் சந்தேகமா இருக்கு.

ராகவி: என்ன கௌத்தம் சொல்றீங்க..??? நம்ம ஸ்கூல்ல இருக்கிற டைப் செக்யூரிட்டிய மீறி ஒருத்தர் வெளியில இருந்து வந்து எப்டி சிலையை திருடிட்டு போக முடியும்..??

கௌத்தம்: “கரெக்ட் நீ யோசிக்கிற மாதிரி தான் எல்லாரும் யோசிப்பாங்க. சோ பர்ஸ்ட் சஸ்பெக்ட் லிஸ்ட்ல நீயும், நானும், தான் இருப்போம். நம்ம ஸ்கூலோட மேனேஜ்மென்ட் இந்த விஷயத்த பெருசா எடுத்துட்டு போகலைனா கூட மானசா இத சும்மா விட மாட்டா. இந்த விஷயத்துல அவளோட டார்கெட் நீயா... இல்ல நானான்னு.. தான் தெரியல. நம்ம ரெண்டு பேருமா கூட இருக்கலாம்." என்று கேஷுவலாக சொன்னான்.

ராகவி: “என்ன கௌத்தம் இவ்ளோ பெரிய விஷயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க..!!! இப்ப சந்தேக கேஸ்ல நம்மள அட்ரஸ் பண்ணிட்டா என்ன பண்றது..???" என்று சிறு பதட்டத்துடன் கேட்டாள். 😟

கௌத்தம்: அந்த சிலைய நீயும் திருடல.. நானும் திருடல.. அப்புறம் எதுக்கு நம்ம பயப்படணும்...??? ஃப்ரியா விடு பாத்துக்கலாம். எப்படியும் மாத்தி மாத்தி என்கொயர் பண்ணுவாங்க. சோ ரெடியா இரு. பயப்படாத. நீ இப்படி பதட்டமா இருந்தின்னா நீ தான் அத எடுத்து இருப்பேன்னு கன்ஃபார்மே பண்ணிருவாங்க.

ராகவி: நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க. என்னால அப்டிலாம் எல்லாத்தையும் கேஷுவலா எடுத்துக்க முடியாது. இவ்ளோ பெரிய விஷயம் நடந்தா எனக்கு பதட்டமா இருக்காதா...??? 😔 😕

கௌத்தம்: “நான் உண்மைய தான் சொல்கிறேன் ராகவி. நீ இப்ப பதட்டப்படுறதுனால ஒன்னும் ஆக போறதில்ல. மேக்சிமம் உன் மேல சந்தேகப்படுவாங்க அவ்ளோ தான். சோ ரிலாக்ஸ்ட் ஆ இரு. அவங்க கேட்கிற கேள்விக்கு உனக்கு தெரிஞ்ச பதில்ல சொல்லு. அதுக்கப்புறம் உண்மையாவே அது யார் எடுத்தாங்கன்னு கண்டுபிடிக்கிறது அவங்க வேலை. நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை." என்று நிதானமாக சொன்னான்.

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 79
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.