தாபம் 77

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
கௌத்தம்: நம்ம சேந்து பண்ணா நம்மளால எத வேணாலும் அச்சீவ் பண்ண முடியும் ராகவி. எனக்கு நம்பிக்கை இருக்கு. நம்ம பண்ணிடலாம். சரி வா..!! இன்னைக்கு அந்த வீடியோவ ரெக்காட் பண்ணிடலாம்.

ராகவி: நம்ம வீடியோ ஷூட் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவ பிராக்டிஸ் பண்ணிக்கலாமே கௌத்தம்..???

கௌத்தம்: “சரி..!!" என்றவன், அவர்கள் எடிட் செய்து வைத்து இருந்த அந்த மூன்று நிமிட பாடலை மியூசிக் ப்ளேயரில் பிளேளே செய்தான்.

அவர்கள் அந்த மூன்று நிமிடத்திற்குள் தங்களுடைய முழு நடன திறமையையும் வெளிக்காட்ட வேண்டி இருந்ததால், அந்த மூன்று நிமிடத்தை மூன்று பகுதிகளாக பிரித்தவர்கள்; ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு விதமான டேன்ஸ் ஸ்டைலை தேர்வு செய்தனர். முதல் ஒரு நிமிடத்தை கிளன்சிக் டான்ஸ் -க்கும், அடுத்த ஒரு நிமிடத்தை வெஸ்டர்ன் ஆடுவதற்கும், இறுதியாக ஃபொல்க் ஆடி நிறைவு செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ராகவி கேட்டு கொண்டதை போல் முதலில் கௌத்தம் அவளுடன் இணைந்து இரண்டு மூன்று முறை அந்த பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ப்ராக்டிஸ் செய்தான். பின் தான் வைத்து இருந்த டி.எஸ்.எல். ஆர் கேமராவை ஷாலினியிடம் கொடுத்த கௌத்தம், அதில் எப்படி வீடியோ எடுப்பது என்று அவளுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு பின் ராகவியோடு இணைந்து இறுதியாக ஆட தயாரானான். 🕺 💃

கௌத்தம் சொல்லிக் கொடுத்தது போல் சரியான ஆங்களில் கேமராவை பிடித்துக் கொண்ட ஷாலினி, அவர்களை ஆடத் தொடங்குமாறு தம்சப் 👍 சிம்பிள் காட்டி சைகை செய்தாள். பின் கௌத்தம் அங்கு இருந்த மியூசிக் ப்ளேயரை ஆன் செய்ய, ராகவியும், கௌத்தமும், ஆடத் தொடங்கினர். 🕺💃 இது கப்பிள் டான்ஸ் காம்பெடிஷன் என்பதால் கப்பிள் ஆக ஆடுவதற்கு ஏதுவாக இருக்கும் பாடல்களையே அவர்கள் தேர்வு செய்து இருந்தனர்.

முதலில்...

கண்ணாமூச்சி ஏனடா..??? 😍

கண்ணாமூச்சி ஏனடா...?? 😍

என் கண்ணா...!!! 🤩

கண்ணாமூச்சி ஏனடா..???

என் கண்ணா..!!! 😍

நான் கண்ணாடிப் பொருள் போலடா 🥰

என் மனம் உனக்கொரு

விளையாட்டு பொம்மையா..???

எனக்கென உணர்ச்சிகள்

தனியாக இல்லையா..??? 🥺

நெஞ்சின் அலை உறங்காது... 🌊

உன் இதழ் கொண்டு

வாய் மூட வா என் கண்ணா.. ஆஆஆ 🥰

என்ற பாடல் ஓடியது. அந்த பாடலுக்கு ராகவியும், கௌத்தமமும், பரத நாட்டியம் ஆடினர். ராகவி அனிந்து இருக்கும் ஆடை அந்த மூன்று பாடல்களுக்கும் தகுந்தாற்போல் இருந்தது. அவள் ஒரு கிராப் டாப்பும், லாங்க் ஸ்கர்ட்டும் அணிந்து இருந்தாள். தன்னுடைய நீண்ட சுருள் முடியை அப்படியே அவிழ்த்து விட்டு இருந்த ராகவி, இரண்டு ஹேர் பின்கள் மட்டுமே அதில் சொருகி இருந்தாள்.

அதனால் ராகவி, குட்டி ராதை ஆக எக்ஸ்பிரஷன்களோடு ஆடி கொண்டு இருக்க, அவளுடைய கூந்தலோ எந்த பிராக்டீஸும் இல்லாமல் அழகாக அவளுடைய அசைவுக்கேட்ப ஆடி கொண்டு இருந்தது. ராகவியோ, கௌத்தமை கண்ணன் ஆக நினைத்து கொஞ்சிய படி ஆடி கொண்டு இருக்க; கௌத்தமோ, அவளை சுற்றி சுற்றி கலியுக கண்ணனாக க்யூட் ஆக ஆடி கொண்டு இருந்தான். 🕺 💃

தன்னை மறந்து அவர்கள் ஆடுவதை பார்த்து கொண்டு இருந்த ஷாலினி, அதை அழகாக தன் கையில் இருந்த கேமராவில் படம் பிடித்துக் கொண்டு இருந்தாள். கௌத்தம் டி-ஷர்ட்டும் சாட்ஸும் போட்டுக் கொண்டு இந்த பாட்டிற்கு ராகவியை சுற்றி சுற்றி சிறு சிறு.. விளையாட்டுதனமான செய்கைகளை எல்லாம் செய்தபடியே படியே பரதநாட்டியம் ஆடி கொண்டு இருப்பது ஷாலினியின் கண்களுக்கு மிகவும் க்யூட் ஆக தெரிந்ததால், அவர்கள் இருவரும் சரியான ஜோடி என்று நினைத்தாள். 😍 🥰

இரண்டாவதாக....

Baby, I'm dancing in the dark 💃

With you between my arms 🤗

Barefoot on the grass 💕

Listening to our favourite 🔊 🎧 🎼 🎼

When you said you looked a mess...

I whispered underneath my breath.. 🥰

But you heard it 👂😍

Darling, you look perfect tonight... 😍 🥰 ❤️

என்ற ஆங்கில பாடலுக்கு சால்சா நடனம் ஆடினார்கள். அது ஒரு ரொமான்டிக் டூயட் பாடல் என்பதால் 🎶 ராகபியை நுரையால் செய்த சிலை போல் தன் 🕺கைகளில் ஏந்திய கௌத்தம், பொம்மலாட்ட பொம்மை போல் அவளை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப தன் கைகளில் தூக்கி அசைத்து, சுற்றி ஆடினான். 💃 அவனோடு இணைந்து அலகு பதுமையாக ஆடி கொண்டு இருந்தாள் ராகவி. அந்த பாடல் முடியும் போது.. கௌத்தமின் முன்னே வந்து நின்ற ராகவி அவனுடைய தோள்களில் தன்னுடைய இரு கைகளையும் மாலையாக போட்டு அவனை இருக்கமாக பற்றி கொண்டு அவனுடைய தோளில் சாய, ராகவியின் இரு கால்களையும் அப்படியே பிடித்த கௌத்தம், அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றி.. பின், அவள் இருந்த பொசிஷனை மாற்றியவன்; அசால்டாக்க அவளை தன் முன்னே இருந்து தனக்கு பின்னே தூக்கி போட்டவன் லாபகமாக அவளை மீண்டும் பிடித்து தன்னை சுற்றி விட்டு ஒரு சுற்று சுற்றி அவளை தன் முன்னே கொண்டு வந்து கீழே விட்டு விட்டு பிடிப்பது போல அப்படியே நின்று ஒரு போஸ் கொடுத்த படி அந்த பாடலுக்கு ஆடி முடித்தான். 🕺💃

தன் வாயை பிளந்து கொண்டு அவர்கள் ஆடுவதை பார்த்து கொண்டு இருந்த ஷாலினி, 😯 தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தவள், அனைத்தையும் சரியாக கேமராவில் ரெக்கார்ட் செய்தாள். 📷

மூன்றாவதாக....

யே டப்பாங்குத்து ஆடவா 🤼

ஆடவா டப்பங்த்து... 💃

யே என் ஆசை மைதிலியே....😍😘

எவன்டி உன்ன பேத்தான்..!! பேத்தான்..!!

பேத்தான்.. பேத்தான்.. பேத்தான்...???

போட்டு தாக்கு டன்டனக்கா 💃

வாடி போன்டாட்டி கலாசலா ❤️ 😘

யே லூசு பெண்ணே லூசு பெண்ணே

லூசு பெண்ணே..!!! 😍

யம்மாடி ஆத்தாடி ஆடலாமா... 💃 🥰

யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா....!!!!!!!!!!! 🤼

💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃

ஐ ஆம் அ குத்து டான்சர்....

ஹெ ஐ ஆம் அ குத்து டான்சர்....

💃 💃 💃 💃 💃 💃 💃 💃 💃

என்ற குத்து பாடலுக்கு ராகவியும், கௌத்தமமும், சேர்ந்து குத்து குத்துதோன்றுு குத்தி விட்டனர். 🕺💃 அவர்கள் இருவருமே அந்த பாடலோடு ஒன்றிப்போய் ஒவ்வொரு வரிகளையும் ரசித்து அதற்கான பாவங்களோடு பவராக ஆடினர். 🔥 அவர்கள் ஆடிய மூன்று பாடல்களுக்குமே கௌத்தம் தான் கோரியோகிராப் செய்து இருந்தான். அவர்கள் இருவரையும் வியப்பாக பார்த்துக் கொண்டு இருந்த ஷாலினி, அவர்கள் ஆடி முடித்தவுடன் சென்று ராகவியை கட்டி பிடித்து கொண்டு அவளோடு இணைந்து குதித்தவள், “அக்கா நீங்க செமையா ஆடுனீங்க தெரியுமா...!!! வேற லெவல் போங்க. நீங்க ப்ராக்டிஸ் பண்ணப்ப ஆடுனத விட இப்ப ஹெவி மூவ்மெண்ட்ஸ் எல்லாமே பக்காவா பண்ணீங்க. இவ்ளோ போர்ஸ்புல்லா கௌத்தம் அண்ணாவுக்கு ஈக்வலா நீங்க ஆடுவிங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல அக்கா." என்று உற்சாகமாக சொன்னாள். 😄

ராகவி: “நெஜமாவா..!!! அவ்ளோ நல்லா ஆடுனன்னா என்ன..???" என்று மூச்சு வாங்க சிரித்த படி அவளிடம் கேட்டாள். 😃

ஷாலினி: “ஆமா அக்கா. நீங்க சூப்பரா ஆடுனீங்க. நீங்களும், கௌத்தம் அண்ணாவும், சூப்பர் பேர். கண்டிப்பா நீங்க தான் அந்த காம்பெட்டிஷம்ல ஜெயிப்பீங்க. உங்கள பாக்கும் போது எனக்கே டான்ஸ் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு. ப்ளீஸ் அக்கா...!! நீங்க ஃப்ரீயா இருக்கும்போது எனக்கும் டேன்ஸ் ஆட சொல்லிதாங்க. நான் வேணா உங்களுக்கு பீஸ் கூட குடுத்துடறேன்." என்று மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு தனக்கு தோன்றியதை எல்லாம் பேசி கொண்டு இருந்தாள். 😍

ஷாலினி தன்னையும், ராகவியையும் சிறந்த ஜோடி என்று சொன்னதால் சந்தோஷ பட்ட கெளத்தம், ஷாலினி ரெக்கார்ட் செய்த வீடியோவை பிளே செய்து பார்த்து கொண்டு இருந்தான். 😍 அவனுக்கு அவர்களுடைய டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அதை பார்த்து திருப்தியாக புன்னகைத்தான். 😁 அப்போது அவனுடைய மனதில், “எப்பவும் நீயும், நானும், இப்படியே ஒண்ணா இருந்தா நல்லா இருக்கும் ராகவி." என்று நினைத்துக் கொண்டான். 🥰

ராகவி: அட லூசு..!! நான் உனக்கு சொல்லித்தரத்துக்கு போய் காசு கேப்பனா..??? நான் எவ்ரி சண்டே ஜான்வி ஆதரவற்றோர் இல்லத்துக்கு போய் அங்க இருக்கிற குழந்தைகளுக்கு ஃப்ரீயா டான்ஸ் சொல்லி தருவேன். நான் அங்க போகும்போது நீயும் வேணா என் கூட வா. உனக்கும் அப்போ சொல்லி தரேன் ஓகே வா...???

ஷாலினி: பர்றா..!!! ப்ரீயாவே சொல்லி தரீங்களா..?? நீங்க ரொம்ப கிரேட் கா. நமக்கு தெரிஞ்சத மத்தவங்களுக்கு ஃப்ரீயா சொல்லி தரத்துக்கு எல்லாம் ஒரு பெரிய மனசு வேணும். அந்த மனசு உங்களுக்கு இருக்கு. 😍

ராகவி: நீ சொல்ற அளவுக்கு எல்லாம் நான் பெருசா எதுவும் பண்ணிடல ஷாலு. நான் என்னோட சின்ன வயசுல ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பரதநாட்டியம் தான் கத்துக்கிட்டேன். அப்போ கொஞ்ச நாள் கழிச்சி எங்க அப்பா, அம்மா சொந்த வீடு கட்டறதுக்கு ஸ்டார்ட் பண்ணி இருந்தாங்க. அந்த டைம்ல என்னோட டான்ஸ் கிளாஸ்க்கு அவங்களால பீஸ் கட்ட முடியல. என்னோட டான்ஸ் டீச்சர் ருக்மணி அம்மாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்.

நான் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுனதுனால அதுக்கப்புறம் அவங்க என் கிட்ட பீஸ்சே வாங்காம எனக்கு ஃப்ரீயா சொல்லிக் கொடுத்தாங்க. என் கிட்ட மட்டும் இல்ல நல்லா ஆடுற பீஸ் கட்ட வசதி இல்லாத எல்லா பிள்ளைகளுக்குமே அவங்க ஃப்ரீயா தான் கிளாஸ் எடுப்பாங்க. இந்த மாதிரி நல்ல விஷயத்தை எல்லாம் நான் அவங்க கிட்ட தான் கத்துக்கிட்டேன். அவங்க தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அதுக்கப்புறம் நான் நிறைய டான்ஸ் ஸ்டைல் கத்துக்கணும்னு வேற வேற டீச்சர்ஸ் கிட்ட நிறைய கத்துக்கிட்டேன். ஆனா எப்பவுமே எனக்கு என் ருக்மணி அம்மா தான் ரொம்ப ஸ்பெஷல்.

ஷாலினி: “நீங்க அவங்கள அம்மான்னு சொல்லும்போதே.. அவங்கள உங்களுக்கு எவ்ளோ பிடிக்கும்னு தெரியுது அக்கா. நீங்களும் அவங்கள மாதிரி எப்பயுமே இப்டியே ரொம்ப ஸ்வீட்டாவே இருங்க." என்றவள், ராகவியின் இரு கன்னங்களையும் பிடித்துக் கொண்டு விளையாட்டாக கில்லினாள். 😍 😂

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை கவனித்த கௌத்தம் ஷாலினியை பார்த்து, “இந்த மாதிரி செய்றதுக்கு எல்லாம் நீ சொன்னா மாதிரி ஒரு நல்ல மனசு வேணும் மா. உன் அக்காவுக்கு இருக்கிற நல்ல மனசு எனக்குலாம் இல்ல பாரு... இத்தன நாளா டான்ஸ்ச என்னோட பேஷனையும் தாண்டி ஒரு நல்ல கரியரா தான் நான் பார்த்துட்டு இருந்தேன். இன்ஃபேக்ட் இத பிசினஸ் -ன்னு தான் நினைச்சேன். இத பெருசா எக்ஸ்பேன்ட் பண்ணி நிறைய சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

ஆனா இப்போ என்னோட அந்த எண்ணத்தவே ராகவி ஒரு செகண்ட்ல மாத்திட்டா. நானும் இனி மேல் பீஸ் கட்ட முடியாம இருக்கிற பிள்ளைங்களுக்கு ஃப்ரீயா சொல்லி தரேன்." என்று சொன்னவன், ரித்திகாவின் ரியாக்ஷன் இதற்கு என்னவாக இருக்கும் என்று தெரிந்
து கொள்ள அவளுடைய முகத்தை பார்த்தான்.

- நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 77
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.