அத்தியாயம் 65: ஆக்சன் மோடில் Varun (part 2)
சித்தார்த்தின் பள்ளியில்...
ஒரு வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஷாலினி, அடுத்து தான் எந்த வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய டைம் டேபிளை பார்த்து கன்ஃபார்ம் செய்துவிட்டு அந்த அறைக்கு சென்றாள். வகுப்பறைக்குள் வந்த ஷாலினி அங்கு யாரோ ஒரு ஆசிரியர் இருப்பதை கவனிக்து, “மே ஐ கம் இன் சார்..??" என்று கேட்ட படியே உள்ளே வந்தாள். அது வரை வேறு ஒரு புறமாக பார்த்த படி திரும்பி நின்று கொண்டு இருந்த விஷ்ணு; ஷாலினியின் குரலை கேட்டவுடன், வந்து இருப்பது யார் என்று உணர்ந்து கொண்டு அவளை காதலோடு திரும்பி பார்த்தான். 😍🥰
விஷ்ணுவை அங்கே பார்த்த ஷாலினிக்கு அவள் லாவண்யா உடன் அவனை பற்றி பேசியது ஞாபகம் வர, அவனிடம் இருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும் என்று நினைத்து, வேகமாக உள்ளே சென்றவள், லாஸ்ட் பென்சின் அருகே சென்று நின்று கொண்டாள். தன்னை பார்த்தவுடன் அவளுடைய முகத்தில் வந்து சென்ற மாறுதல்களை கவனித்துக் கொண்டு இருந்த விஷ்ணு, “ஒரு வேளை நம்ப பண்ண வேலையால தான் போலீஸ் ஸ்டேஷன் -க்கு போற அளவுக்கு பெரிய பிரச்சனை வந்துருச்சுன்னு இன்னும் நம்ம மேல கோவமா இருக்கா போல... அதனால தான் இப்படி மூஞ்சியை வச்சுட்டு இருக்கா." என்று நினைத்தவன், “பாக்கலாம் ஷாலு மா. எவ்ளோ நேரத்துக்கு நீ என் மேல கோவமா என் கூட பேசாம இருக்கன்னு.." என்று அவளை பார்த்து சிரித்த படியே தனக்குள் சொல்லிக் கொண்டான்.
விஷ்ணு எதையோ போர்டில் எழுதலாம் என்று நினைத்து அங்கு இருந்த போர்டே திரும்பி பார்க்க.. அது இன்னும் அலைக்கப்படாமல் கடந்த வகுப்பின் போது ஆசிரியர்கள் எழுதி விட்டு சென்றது அப்படியே இருந்தது. விஷ்ணு கையில் சாக் பீஸை வைத்து கொண்டு அந்த போர்டை பார்த்து கொண்டு இருப்பதை கவனித்த ஃபர்ஸ்ட் பென்சில் அமர்ந்து இருந்த ஒரு மாணவி எழுந்து, “சார் நான் வேணா போர்ட எரேஸ் பண்ணட்டுமா...??" இந்த புன்னகை முகத்துடன் கேட்டாள். 😁
டேபிளில் இருந்த டஸ்ட்டரை எடுத்து அந்த மாணவியின் கையில் கொடுக்க நினைத்த விஷ்ணு, அப்போது தான் அவர்களைப் பார்த்து முறைத்து கொண்டு இருந்த ஷாலினியை கவனித்தவன், தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டு, “ஸ்டுடென்ட்ஸ் இந்த மாதிரி வேலைய எல்லாம் பாக்க கூடாது. அதுக்கு தான் மேடம் மாதிரி இருக்கிற ஸ்டாப்ஸ் எல்லாம் இங்க ஹெல்ப்புக்கு இருக்காங்க. நீங்க வந்து போர்ட எரேஸ் பண்ணுங்க மேடம். ." என்று ஷாலினியை பார்த்து கொண்டே சொன்னான் விஷ்ணு.
விஷ்ணுவை முறைத்தபடியே அவன் அருகில் வந்த ஷாலினி, அவன் கையில் இருந்த டஸ்டரை வேகமாக பிடுங்கி அந்த போர்டை அலைக்க தொடங்கினாள். ஷாலினி விஷ்ணுவைவிடவே சிறிதளவு உயரம் அதிகமாக இருந்ததால், அந்த பெரிய போர்டை அலைப்பது அவளுக்கு சிரமம் ஆக இல்லை. விஷ்ணுவின் மீது இருந்த கோபத்தால் வேகமாக ஷாலினி அந்த போர்டை எரேஸ் செய்து கொண்டு இருக்க, அங்கே சீலிங் ஃபேன் ஓடி கொண்டு இருந்ததால் அங்கு இருந்து கிளம்பிய சாக்பீஸ் இன் துகள்கள் காற்றில் பறந்தன.
அதனால் விஷ்ணுவிற்கு தும்மல் வர, அதை கவனித்த பர்ஸ்ட் பெஞ்ச் மாணவி ஷாலினியை பார்த்து, “மேம் கொஞ்சம் மெதுவா ஏரேஸ் பண்ணுங்க. பாவம் சார் இரும்புறாரு பாருங்க." என்றாள், அக்கறையாக. அந்தப் பெண் பேசியதை கேட்டு கடுப்பான ஷாலினி, “இந்த சில்வண்டு எல்லாம் உன்னை வேலை வாங்குற நிலமைக்கு நீ வந்துட்டியே.. ஷாலினி..!!" என்று தன் மனதிற்குள் நினைத்தவள், “மெதுவா தானே மா... இப்ப துடைக்கிறேன் பாரு.." என்று தன்னுடைய பல்லை கடித்து கொண்டு சொன்ன ஷாலினி, போர்டுக்கு வலிக்குமா..?? இல்லை தன்னுடைய கைக்கு வலிக்குமா...?? என்பது போல் மெதுவாக துடைத்தாள்.
அவளுடைய அந்த செய்கைகளை பார்த்து சிரித்த விஷ்ணு, “இந்த பீரியட் முடியறதுக்குள்ள எரேஸ் பண்ணிடுவீங்களா மேடம்..??" என்று நக்கலாக கேட்டான். 😂 அவன் அப்படி கேட்கவும், ஷாலினியை பார்த்து இந்த வகுப்பில் இருந்து அனைத்து மாணவ, மாணவிகளும், வாய் விட்டு சிரித்தனர். 😂 😂 😂 அவர்கள் அனைவரும் தன்னைப் பார்த்து சிரிப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்த ஷாலினி, “கீப் கொயட் ஆல் ஆப் யூ." என்று உச்சசுருதியில் கத்தினாள். 😡 😤
அவளுடைய கனிர் குரலால் அந்த மாணவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டனர். ஷாலினி அந்த டஸ்டரை அங்கே இருந்த மேஜையில் வைத்துவிட்டு செல்ல போக, மீண்டும் அவளை அழைத்த அந்த மாணவி, “மேம் அதுல டஸ்ட் ரொம்ப அதிகமா இருக்கு. அத அப்படியே விண்டோ வழியா தட்டி கிளீன் பண்ணி வச்சிருறீங்களா ப்ளீஸ்... சாருக்கு தேவைப்படும்ல அதான்." என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😁
வேறு வழியில்லாமல் அந்த டஸ்டரை எடுத்துக் கொண்டு போர்டுக்கு அருகே இருந்த ஜென்னலின் வழியாக அதை தட்ட சொல்ற ஷாலினியை மீண்டும் தடுத்த அந்த மாணவி, “மேம் இங்க ஏன் தட்டறீங்க..?? இப்ப தானே சார் இந்த டஸ்ட்னால இரும்பினாரு..!! போய் அங்க லாஸ்ட்டா இருக்கிற விண்டோ வழியா தட்டுங்க." என்றாள். ஷாலினியின் பொறுமை எல்லாம் காற்றில் பறந்து கொண்டு இருந்தது. “என்னென்ன சொல்லுது பாரு இந்த குட்டி பிசாசு..!! எதுலையாச்சு ஒரு நாள் வகையா மாட்டவீல்ல.. அப்ப இருக்கு டி உனக்கு. இதே டஸ்டர்ர வச்சு அப்ப அப்டியே உன் மண்டைலையே 4 அடி அடிக்கிறேன் பாரு." என்று அவளைப் பார்த்து முறைத்த படியே தன் மனதிற்குள் சொல்லி கொண்டவள், அந்த மாணவி சொன்ன படியே செய்தாள்.
இப்படி எல்லாம் ஷாலினியை வெறுப்பேற்றிப் பார்ப்பது விஷ்ணுவிற்கு மிகவும் ஜாலியாக இருந்தது. அதனால் அந்த பீரியட் முடியும் வரை, “மேடம் இங்க வந்து இந்த புக்ல என்ன இருக்குன்னு படிச்சு சொல்லுங்க, மேடம் அந்த டிரஸ்ட்டரை எடுத்துட்டு வாங்களே, நான் ரெட் லேட் கொண்டு வரல உங்க கிட்ட இருக்கா..??, சாக் பீஸ் தீர்ந்திருச்சு. கீழ போய் ஆபீஸ்ல வாங்கிட்டு வாங்க.." என்று சொல்லி அவளை வேலை வாங்கி அவனால் முடிந்த வரை டிசைன் டிசைனாக அவளை வெளியேற்றி மகிழ்ந்தான்.
நாராயணன் பேலஸுல்...
ஆராதனாவோடு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான் ஹரி. அப்போது சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலிற்கு வந்த செண்பகம், அங்கே இருந்த ஆராதனாவை பார்த்து கடுப்பாகி சாப்பிடாமல் திரும்பி சென்று விட்டாள். அதை கவனித்த ஆராதனா, “நீங்க ஏன் ஆண்டி போறீங்க..?? நானே போறேன்." என்று சொல்லிவிட்டு அப்படியே டைனிங் டேபிளில் இருந்து எழுந்து உள்ளே சென்று விட்டாள். “நீங்க சாப்பிடுங்க அம்மா." என்று சொன்ன ஹரியும் எழுந்து ஆராதனாவின் பின்னே சென்று விட்டான்.
அவர்கள் இருவரையும் பார்த்து கோபப்பட்ட செண்பகம், “இந்த ஆராதனாவுக்கு எங்க எப்படி நடந்துக்கணும்னு நல்லா தெரிஞ்சிருக்கு. இருக்கிற எல்லா வில்லத்தனத்தையும் பண்ற குடும்பத்தில இவ பிறந்துட்டு.. இவ தான் நல்லவன்ற மாதிரியும், நான் தான் வில்லிங்குற மாதிரியும், என் பையன் முன்னாடி எப்படி சீன் போடுறா.. இவனும் அவ போறான்னு அவ பின்னாடியே எந்திரிச்சு போறான்.. வெட்கம் கெட்டவன். ச்சை..!!" என்று புலம்பிய படியே அந்த டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட தொடங்கினாள்.
சில மணி நேரத்திற்கு பின்...
சித்தார்த்தின் பள்ளியில்...
பள்ளி நேரம் முடிந்து அனைத்து மாணவர்களும் தங்களுடைய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். ஷாலினியை தானே வீட்டிற்கு பைக் இல் கூட்டி சென்று விடலாம் என்று நினைத்த விஷ்ணு, அவளை தேடிக் கொண்டு இருந்தான். எங்கே நாம் ஷாலினியை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால்.. விஷ்ணு காலையில் ஷாலினியை கூட்டிக் கொண்டு வந்ததை போல் இப்போதும் வீட்டில் டிராப் செய்கிறேன் என்று சொன்னால் என்ன செய்வது..?? என்று நினைத்து பயந்த லாவண்யா, தானே ஷாலினியிடம் சென்று, “அவங்க என்ன தான் கேச வாபஸ் வாங்கி இருந்தாலும், திருப்பி உன்ன பாத்தா ஏதாச்சு பிரச்சனை பண்ண சான்ஸ் இருக்கு. நானே உன்ன வீட்டுல கூட்டிட்டு போய் விட்டுறேன் வா." என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சீக்கிரமாக கிளம்பி விட்டாள்.
லாவண்யாவின் திட்டத்தை அறிந்திராத ஷாலினி, தன் மீது தன்னுடைய தோழி எவ்வளவு அக்கறையோடு இருக்கிறாள் என்று நினைத்து மகிழ்ந்து அவளுடன் சென்றாள். ஷாலினி, லாவண்யா உடன் கிளம்பிவிட்டதை செக்யூரிட்டி ஆபீஸில் கேட்டு தெரிந்து கொண்ட விஷ்ணு, வருத்தமாக அவனுடைய வீட்டிற்க்கு கிளம்பினான்.
இன்று சித்தார்த்தை அழைத்து செல்வதற்காக லக்ஷனா வருவாள் என்ற தகவல் சுகந்திக்கு செண்பகத்தால் தெரிய படுத்த பட்டு இருந்தது. அதனால் சித்தார்த்துடன் செக்யூரிட்டி ஆபீஸில் லக்ஷனாவின் வருகைக்காக காத்திருந்தாள் சுகந்தி. என்ன தான் லக்ஷனவோடு சித்தார்த்தை பழக வைக்க வேண்டும் என்று செண்பகம் நினைத்தாலும், அவள் சித்தார்த்தின் விஷயத்தில் கவன குறைவாக இருக்க விரும்பாததால் சுகந்தியுடன் இன்னும் இரண்டு பாடி கார்டுகளையும், சித்தார்த்தோடு இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தாள்.
சித்தார்த்: “நாம ஏன் இன்னும் வீட்டுக்கு போகாம இங்கயே இருக்கோம்..??" என்று சுகந்தியை பார்த்து கேட்டான்.
சுகந்தி: “இன்னைக்கு உங்க அப்பாவோட பிரண்டு ஒரு ஆன்ட்டி வந்து நம்மள வீட்டுக்கு கூட்டிட்டு போக போறாங்க. அவங்களுக்காக தான் நம்ம வெயிட் பண்ணிட்டு இருக்கோம் சித்து குட்டி. ஏன் உனக்கு பசிக்குதா..??" என்று பாசமாக அவனுடைய தலையை தடவிய படி கேட்டாள்.
சித்தார்த் இல்லை என்று தன் தலையை ஆட்டியவன், “எனக்கு இன்னைக்கு நிறைய ஹோம் ஒர்க் இருக்கு. வீட்டுக்கு போய் அத எல்லாம் சீக்கிரமா முடிச்சா தான் டோரிமோன் பாக்க முடியும். அதான் கேட்டேன். நான் ஹோம் ஒர்க் முடிக்காம டி.வி. பாத்தா பாட்டி திட்டுவாங்க." என்றான்.
இப்படியே சுகந்தியும், சித்தார்த்தும், பேசி கொண்டு இருக்க.. தன்னுடைய விலை உயர்ந்த காரில் அந்த பள்ளியின் வாசலில் வந்து இறங்கிய லக்சனா, தான் வந்து இருக்கும் தகவலை செக்யூரிட்டி ஆபீஸில் சொல்ல, சுகந்தியையும், இரண்டு பாடிகார்டுகளையும், சித்தார்த்துடன் அவளோடு அனுப்பி வைத்தார் செக்யூரிட்டி ஆபிசர். லக்ஷனா குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் இல் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் குட்டி குட்டியாக பிரின்ட் செய்ய பட்டு இருந்த ஒரு ஜம்ப் சூட் ஐ அணிந்து இருந்தாள். பிரவுன் கலரில் இருந்த அவளுடைய தலை முடியை போனி டெய்லில் போட்டு, ஒரு கருப்பு நிற சன் கிளாஸ் அணிந்து இருந்தாள். எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அவள் கியூட்டாக, அழகாகவே இருந்தாள். இவை அனைத்தும் அவளுடைய அம்மா மங்கையின் செலக்சன் தான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 65
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.